Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தொடரும் படைநகர்வு..?!

Featured Replies

இன்றுள்ள நிலைமை அப்படியில்லை. இது இயலாமையால் பின்வாங்கவில்லை. தமது இராணுவப்பலத்தால் இராணுவம் முன்னேறி நிலங்களைப் பிடிக்கவில்லை. ஆனால் இன்றும் முன்புபோல பெரிய பிரதேசத்தை விட்டுவெளிறினால் அதை எப்படி எடுத்துக்கொள்வது?

புலிகள் தாங்கள் போர் நிறுத்ததில் இருந்து பின்வாங்கவில்லை எண்று சொல்லும் வரை நிலமைகள் அப்படித்தான் இருக்கும்... ஒரு நாள் பின்வாங்கிவிட்டோம் எண்று சொல்லுவார்கள்...! அப்போ நிலமை மாறும்...!

அந்த நாள் நாளையாக கூட இருக்கலாம்... சர்வதேசத்தை பொறுத்த வரை போர்நிறுத்ததை இண்றும் மதிப்பவர்களாக காட்டிக் கொள்வது எதிர்கால தமிழீழத்துக்கு நல்லது...! அதாவது அவர்கள்ளை மதிப்பு காட்ட வேண்டிய தேவை இண்றும் இருக்கின்றது... சர்வதேசத்தை எடுத்தெறிந்து நடவடிக்கை எடுப்பது எதிர்காலத்தில் எதிர்வினையான விளைவுகளையும் மக்களுக்கு எந்த நன்மையும் எட்டாத நிலையையும் கொண்டு வந்து சேர்க்கும்....!

சம்பூரை கைப்பற்றியதன் மூலம் போர் நிறுத்ததில் இருந்து விலகியதாக சிறீலங்கா அரசின் மீது குற்றம் போய் சேர்ந்து இருக்கிறது... புலிகள் காட்டமாக கேட்ட கேள்வியின் வினையாய் நோர்வே பிரதிநிதி வந்து போய் இருக்கிறார்... இதுக்கு சர்வதேசமும் நடுநிலையாளர்களுக் சொல்லும் பதிலில் தான் இருக்கிறது போர் நிற்த்ததின் தலைவிதி...!

புலிகளை பற்றி உங்களுக்கு நன்கு தெரியும்( என்பது எனது கணிப்பு) எண்ற வகையில்... நான் ஒண்றை உங்களிடம் கேக்க விரும்புகிறேன்...! கிழக்கில் இண்றும் புலிகள் வண்டி பிடிச்சு.... கம்பால அடிச்சாத்தான் சாப்பாடு கிடைக்கும் எண்ற நிலையில்த்தான் இருக்கிறார்களா..??? சிலர் உணர்ச்சி மிகுதியில் சொல்பவற்றை விமர்சிக்க புறப்பட்டால் விமர்சிக்க படாத்து எண்று எதுவும் இல்லாமல் போய் விடும்...!

ஊரில் அண்டை புளுகர்கள் ஆகசப்புளுகர்கள் எண்று எல்லாம் பார்த்து இருப்பீங்கள் இங்கு புலம் பெயர் நாட்டிலும் பார்த்து இருப்பீங்கள்... அவர்களை எல்லாம் சொல்லி திருத்த முடியாது... அவர்களின் சுபாவம் அப்படி...!

  • Replies 53
  • Views 10.2k
  • Created
  • Last Reply

நான் எழுதியது என்னவென்றால், 'யாழ்ப்பாண இடப்பெயர்வு, பின் முல்லைத்தீவு அடி, ஜெயசிக்குறுவில் இராணுவத்தின் வெற்றி, பிறகு புலிகளின் நிலமீட்பு' என்பவற்றை உதாரணம் காட்டி தற்போதைய பிரச்சினைக்குக் கருத்துச் சொல்லிக்கொண்டிருந்தது பற்றியது..

இது எல்லாம் அடிப்படையான விடயங்களை பற்றியது....!

இராணுவத்தின் படைநிலை நிலையங்கள் பற்றி கொஞ்சம் விளங்கிக்கொண்டால் இதில் சந்தேகம் வராது...! 53ம் படையணி 55ம் வடையணி என்பவற்றை தவிர்த்து பார்த்தால் இராணுவத்திம் முன்னேறித்தாக்கும் படைப்பிரிவின் தட்டுப்பாடு புரியும்... இவர்கள் இருக்கும் பகுதிகளில் சண்டை உக்கிரமாக நடைபெறுவதில் சந்தேகமும் இல்லை...! படை வலுவும் கனரக சூட்டு வலுவும் இவர்கள் இருக்கும் பகுதிகளில் மிகையாக பயன் படுவதும் ஒண்றும் புதிய விடயமும் இல்லை...! இவர்களின் பாதுகாப்பில் இருந்த ஆனையிறவுதான் புலிகளால் கைப்பற்ற பட்டது...! உது பழைய தகவல்.. உங்கள் எல்லாருக்கும் தெரிந்தது...!

நீங்கள் சிந்திக்காத விடயம் ஒண்று இருக்கின்றது...! அதுதான் பின்கள நடவடிக்கைகளும் வளங்கல்களும்...! இதை ஆள நோக்கினால் புரியும் ஆனையிறவை போல் இல்லாது சம்பூர் தரை வளி வளங்கல்கள் செய்ய முடியாத ஒரு பிரதேசம் காயப்பட்ட போராளிகளை பராமரிக்க போதுமான வசதிகளை செய்து கொண்டாலும்... இப்போதைய கேள்வி என்ன எண்றால் காயப்படும் மக்களை பராமரிக்க வசதிகள் அந்த பிரதேசத்தில் போதுமா...?? என்பதுதான்...! இப்படியான குறுகிய வளம் கொண்ட பிரதேசத்தை தக்க வைக்க வேண்டிய கேந்திர முக்கியத்துவம் இருந்தாலும் இளப்புக்களோடு பார்க்கும் போது அது முக்கியம் இல்லாமல் போய்விடும்...!

ஆனாலும் மாற்றீடான திட்டத்தோடு மீண்டும் உட்புகும் போது சிதறடிக்கப்படும் இராணுவ பலம் மக்களை குறிவைப்பதை தடுத்து நிறுத்தும்...!

  • கருத்துக்கள உறவுகள்

நல்லவன் எழுதியது....

இப்போதுள்ள நிலையிலிருந்து தொடர்ந்து போராட்டத்தை முன்னேடுப்பது பற்றியல்லாவா நாங்கள் கற்பனை கண்டுகொண்டிருக்கிறோம். சரிஇ பேச்சுக்காகஇ குறைந்தபட்சம் வெருகல் வரை இராணுவம் முன்னேறி நிலங்களைப் பிடித்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். கிட்டத்தட்ட யாழ்ப்பாணத்தை இழந்ததுபோல ஓர் இழப்பு. அந்தநிலையிலிருந்து நாங்கள் மீண்டு போராட்டம் நடத்தும்போது மீண்டுமொரு முறை இதேபோல் யுத்தநிறுத்த ஒப்பந்தம் வந்து சமாதானப் பூச்சாண்டி நடத்த வேண்டிய தேவை வராதா?[/color]

நல்லவன் நீங்கள் எல்லாவற்றையும் பற்றி சிந்திக்கிறீர்கள் ஆனால் எமது எதிரியின் கபட எண்ணங்களை பற்றி சிந்திக்க மறந்து விடுகிறீர்கள் அதுதானே முக்கியமானது. புலிகள் எல்லாவற்றையும் பற்றியல்லவா சிந்திக்க வேண்டியுள்ளது. இலங்கை இராணுவத்தடன் மட்டுமா போரடவேண்டியுள்ளது???? உலக சர்வாதிகாரிகளுக்கும் பதில் அடி கொடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் அல்லவா. அதுதான் இப்போது அமைதி ஒன்றே சிறந்தது. சமாதான பேச்சென்றார்கள்......... நாம் கண்காணிக்கிறோம் என்று வந்தார்கள்........ புலிகள் சிறு பிள்ளைகளை பிடிக்கிறார்கள் நாம் ஆதாரம் வைத்திருக்கிறோம் என்றதோடு நிற்காமல் சிறுவர்களுக்காக அழுதார்கள்........ இப்போ அவர்கள் முன்னாலேயே இனவெறி பிடித்த இராணுவத்தால் சிறுவர்கள் சிதைக்க படுகிறார்கள். இவர்கள் கீறிவைத்த ஒப்பந்த கோடுகள் எல்லாம் தாண்டி ஆக்கிரமிப்பு ஆமி தான் நினைத்ததை செய்ய தொடங்கி விட்டான். இப்போது இவர்கள் வாய்திறந்து என்ன சொல்ல போகிறார்கள்??????? எம்மால் முடியாது நாம் போகிறோம் நீங்கள் என்னவாவது செய்யுங்கள் என்று ஒரே ஓரு வார்த்தை சொன்னாலே போதும். கிட்டதட்ட தமிழ் ஈழம் கிடைத்தது போலதான் அது. முன்பு போன்று இன்னொரு பேச்சுவார்த்தைக்கு நாம் இழுக்க்க பட்டு எமது போராட்டம் மீண்டும் நசுக்கபட கூடாதெனில் நாம் போரை தொடங்கும் போது அதற்கான ஏற்பாடுகளை செய்து கொண்டுதான் தொடங்க வேண்டும் அல்லவா???? யாழ்பாண இடப்பெயர்வு வன்னிமண் பறிகொடுத்த துயரம் இவையெல்லாம் அனுபவங்கள். இனி ஒரு நாள் இதுபோல நடக்க கூடாது அதானால்தான் அதைபற்றி அலசுகிறார்கள் ........... அத்ற்காக அப்படி நடக்க போகிறது என அஞ்சவேண்டியதில்லை.

உங்களுக்கு புலிகளின் பொறுமை புரிந்திருக்குமென நினைக்கிறேன்.

இப்போது எமது கை ஒங்கினால் சிங்களவன் உடனே சமாதான புறாவை பறக்க விடுவான். உலகம் புலிகளை பயங்கரவாதிகள் என மீண்டும் மீண்டும் முழங்கும் மெல்ல மெல்ல எமது போராட்டம் சிதையும் இதை விட எது நடக்குமென எதிர்பார்க்கின்றீர்கள்????

  • கருத்துக்கள உறவுகள்

மக்கள் நாயகம் குருவி எழுதியது.....

அப்பாவி மக்களின் துன்பங்களை இலகுவாக அவர்கள் எடுத்துக் கொள்வதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை..! மக்களின் இழப்புக்களைக் குறைக்க புலிகள் கொமிற் பண்ண வேணும்..இல்ல புலிகளை மக்கள் ஒமிற் பண்ணிடுவினம்..எத்தினை தரம் மக்களும்..துன்பங்களைச் சுமந்திட்டு இடம்பெயருறது...பாவம் அந்த மக்கள்..நிர்கதியாகி...பலிக்கடா

அதுமட்டுமில்ல...

மக்கள் அழிவுகளைக் காட்டி புகலிடமெங்கும் போராடிச்சினம்..இப்ப தமிழீழத்தின்ர பகுதியை எதிரி மக்கள இடம்பெயர வைச்சு..தரைமட்டமாக்கி..கைப்பற

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

//கிழக்கில் இண்றும் புலிகள் வண்டி பிடிச்சு.... கம்பால அடிச்சாத்தான் சாப்பாடு கிடைக்கும் எண்ற நிலையில்த்தான் இருக்கிறார்களா..??? //

இல்லை. இல்லவே இல்லை.

ஆனால் பின்னோக்கிப் போவதென்பது 'கம்பாலடித்து' சாப்பிடுவது அன்று.

வன்னியில் கஞ்சி குடிச்சுக்கொணடிருந்த காலத்திலிருந்து அதற்கு முன்பு யாழ்ப்பாணத்தில் கோழி இறைச்சி, பிரியாணி, கன்டோஸ், ஐஸ்கிறீம் சாப்பிட்ட காலத்துக்கு இயக்கம் போனாலும் அது பின்னடைவு தான். பொதுமக்களின் பார்வையிலிருந்து் பார்த்தால், இயக்கம் கம்பாலடித்துச் சாப்பிட்டகாலத்தில் மக்கள் இப்படி நூற்றுக்கணக்கில் கொல்லப்படவும் இல்லை, ஆயிரக்கணக்கில் இடம்பெயரவுமில்லை.

இப்ப இயக்கம் இராணுவப் பலத்தில் பின்னடைந்ததாக நான் சொல்லவேயில்லை. மாறாக இடங்களை இழப்பது பின்னடைவே. துறைமுகத்தை முடக்க வேண்டுமென்றால் இப்போது இழக்கப்பட்ட பகுதி கட்டாயம் எங்களிடம் இருக்க வேண்டும். இப்பகுதி இல்லாத காலத்திலும் துறைமுகத்தைத் தாக்கினோம் என்று எழிலன் சொல்வது இங்குப் பொருந்தாது. அப்படித் தாக்குவதற்குக் கொடுக்கப்பட்ட விலை என்ன? அவை வெற்றியளிக்கும் நிகழ்தகவு என்ன?

ஆனால் வெறும் எறிகணைகளுக்கான விலையுடன் எந்நேரமும் தாக்கிக் கொண்டிருக்கும் சாத்தியம் ஆட்லறித் தாக்குதல் மட்டும்தான்.

சரி, புலிகள் இராஜதந்திரமாகப் பின்வாங்கினார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு அது பிரச்சினையே இல்லை. ஆனால் அதைவைத்து அரசியல் செய்வதைவிட்டு சும்மர் உதார் விட்டுக்கொண்டிருப்பது பிரச்சினை. அதுபற்றி அடுத்த கருத்தை எழுதுகிறேன்.

இங்கு நான் எழுதிய முந்திய கருத்துக்கள் புலிகளை விமர்சித்து அல்ல. இங்கு கருத்தெழுதிய மற்றவர்களை விமர்சித்து. பழைய இழப்புக்களையும் அதைத்தொடர்ந்த வெற்றிகளையும் உதாரணப்படு்த்திக் கொண்டிருந்தது தான் எரிச்சல் தந்தது.

ஏதோ நடக்கட்டும். அனால் இன்னொருமுறை மக்கள் பெருந்தொகையில் கொல்லப்படும்போது,

"உப்பிடித்தான் 83 இலயும் 3000 சனத்தைக் கொண்டவங்கள். ஆனா அதுக்குப்பிறகு தமிழர்கள் வீறு கொண்டு எழுந்து கொழும்பை அடிபணிய வைத்தார்கள். அப்படித்தான் இனி சிங்கள தேசம் அடிபணியும் நிலை விரைவில் வரும்"

என்று கருத்து எழுதாமல் இருந்தாக் காணும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தயவு செய்து உந்த 53ஆம் டிவிசன், 55 ஆம் டிவிசன் கதைகளை என்னட்ட விடாதையுங்கோ. உதைவிட கனக்கக் கதை எனக்கும் விடத் தெரியும். ஜெயசிக்குறுக் காலத்தில படையணிகள் மட்டுமில்லை, தளபதிகள் முதற்கொண்டு கதைவிடுவன். இப்ப உதுகளுக்கும் நான் சொன்ன பிரச்சினைக்கும் என்ன சம்பந்தம்?

. அங்கால "குறுக்கால" ஆரும் வந்து குட்ட முதல் இதோட முடிப்பம் எண்டு பாக்கிறன். :lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா நல்லவா!

உமது கவலைகள் எல்லாம் ஒட்டுப்படை ஊடகப்பாணியில் இருக்கிறதே.புலிகளின் போர்த்தந்திரம் உம்மிடம் வந்துதான் வகுப்பெடுக்க வெண்டும்போல் உள்ளதே. அவந்தான் சொத்தை வெற்றியை வைத்து பீற்றிதிரியுறான் என்றால் நீரும் வேறு வக்காளத்தா? புலிகளின் பலத்தை சம்பூரில் வைத்து திரைநீக்கம் செய்வதர்க்கு அவசியம் ஒன்றும் கிடையாது, அது கையகப்படுத்தும் நேரம் வரும்பொது ரத்தம் விலை கேட்க்காமலே அது எம்மிடம் மீளும், தவிர மக்களின் தர்க்காலிக சந்தோசப்படுத்தல்களுக்காக அல்ல போர் அது ரத்தம் விலைகொள்வது, அதன் இலக்கு நீண்ட உள்நோக்கம் கொண்டதே.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உலகபோரியல் வரலாற்றுக்கு புதிய அத்தியாயம் புலிகள். ஆள்வலிமையும், ஆயுதவலிமையுமே தீர்மானித்துக் கொண்டுவந்த வெற்றியின் திசையினை இருவளத்திலும் கீழ்நிலையில் உள்ள புலிகள் தம்பக்கம் வைத்திருப்பது போரியல்வரலாறு கண்ட அதிசயங்களுள் ஒன்றாகும். இந்த அற்புதங்களை சம்பாதித்துக் கொடுத்தது, சிறந்த தலைமயின் தோல்விகளுக்கு விலைபோகமுடியாத சிறந்த திட்டமிடல்களேயாகும். அத்தகைய அற்புதபுகளாரம் பெற்ற தமிழன் போர்வாளின் கூர்முனையாகத்திகளும் போரறிவு: வசம்பு, நல்லவன் போன்றோரிடம் கடன்படும் நிலை வந்ததே எனநினைத்து வருந்துகிறேன் ஐயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவன்,

உங்கள் கருத்தை வாசித்தேன்.

உங்களைப் போன்றவர்கள் வகுப்பெடுத்தால்தானே எங்களுக்கு நாட்டு, உலக நடப்புக்கள் தெரியும?

அதை முன்னமே செய்திருந்தால் நாங்கள் உப்பிடி புலம்பியிருக்க மாட்டோமெல்லோ?

தேவாதி தேவ, ராஜாதி ராஜ கோசங்களைப் போடுறதுக்கு எங்களுக்கும் சொல்லித் தாங்கோவன்.

  • தொடங்கியவர்

மக்கள் நாயகம் குருவி எழுதியது.....

அப்பாவி மக்களின் துன்பங்களை இலகுவாக அவர்கள் எடுத்துக் கொள்வதைத்தான் புரிந்து கொள்ள முடியவில்லை..! மக்களின் இழப்புக்களைக் குறைக்க புலிகள் கொமிற் பண்ண வேணும்..இல்ல புலிகளை மக்கள் ஒமிற் பண்ணிடுவினம்..எத்தினை தரம் மக்களும்..துன்பங்களைச் சுமந்திட்டு இடம்பெயருறது...பாவம் அந்த மக்கள்..நிர்கதியாகி...பலிக்கடா

  • தொடங்கியவர்

செய்யிறவங்களயும் நாங்க வசைபாடுவம் மற்றவங்களுக்கும் அறிவுரை சொல்லுறமாதிரி நடிப்பம் ஆனா நாம மட்டும் ஒண்டும் செய்யமாட்டம்

சரி சுடரக்கா..நீங்கள் சொல்லுறது சரியென்றே வைச்சுக்குவமே..! நீங்கள் செய்ததுகளை ஒருக்கா பட்டியல் பண்ணி விடுங்கோவன்..! தேசியத்துக்கு உதவியா இருக்கும்..! அதுக்குத்தானே இவ்வளவு கஸ்டப்படுறியள்..! :wink: :idea:

அது இருக்கட்டும்..யாழில உள்ள உங்கள் சகோதரங்கள் கொழும்புக்கு வர முண்டி அடிக்கினமாம்..என்ன ஏற்பாடு செய்யப் போறியள்..இல்ல உங்க இருந்து கொண்டே...ஈழத்தைக் கொழும்புக்கும் விரிவுபடுத்தப் போறீங்களோ..?!

08_09_06_jaffna_01_435.jpg

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19510

  • கருத்துக்கள உறவுகள்

//கிழக்கில் இண்றும் புலிகள் வண்டி பிடிச்சு.... கம்பால அடிச்சாத்தான் சாப்பாடு கிடைக்கும் எண்ற நிலையில்த்தான் இருக்கிறார்களா..??? //

இல்லை. இல்லவே இல்லை.

ஆனால் பின்னோக்கிப் போவதென்பது 'கம்பாலடித்து' சாப்பிடுவது அன்று.

வன்னியில் கஞ்சி குடிச்சுக்கொணடிருந்த காலத்திலிருந்து அதற்கு முன்பு யாழ்ப்பாணத்தில் கோழி இறைச்சி, பிரியாணி, கன்டோஸ், ஐஸ்கிறீம் சாப்பிட்ட காலத்துக்கு இயக்கம் போனாலும் அது பின்னடைவு தான். பொதுமக்களின் பார்வையிலிருந்து் பார்த்தால், இயக்கம் கம்பாலடித்துச் சாப்பிட்டகாலத்தில் மக்கள் இப்படி நூற்றுக்கணக்கில் கொல்லப்படவும் இல்லை, ஆயிரக்கணக்கில் இடம்பெயரவுமில்லை.

இப்ப இயக்கம் இராணுவப் பலத்தில் பின்னடைந்ததாக நான் சொல்லவேயில்லை. மாறாக இடங்களை இழப்பது பின்னடைவே. துறைமுகத்தை முடக்க வேண்டுமென்றால் இப்போது இழக்கப்பட்ட பகுதி கட்டாயம் எங்களிடம் இருக்க வேண்டும். இப்பகுதி இல்லாத காலத்திலும் துறைமுகத்தைத் தாக்கினோம் என்று எழிலன் சொல்வது இங்குப் பொருந்தாது. அப்படித் தாக்குவதற்குக் கொடுக்கப்பட்ட விலை என்ன? அவை வெற்றியளிக்கும் நிகழ்தகவு என்ன?

ஆனால் வெறும் எறிகணைகளுக்கான விலையுடன் எந்நேரமும் தாக்கிக் கொண்டிருக்கும் சாத்தியம் ஆட்லறித் தாக்குதல் மட்டும்தான்.

சரி, புலிகள் இராஜதந்திரமாகப் பின்வாங்கினார்கள் என்பதை ஏற்றுக்கொள்கிறேன். எனக்கு அது பிரச்சினையே இல்லை. ஆனால் அதைவைத்து அரசியல் செய்வதைவிட்டு சும்மர் உதார் விட்டுக்கொண்டிருப்பது பிரச்சினை. அதுபற்றி அடுத்த கருத்தை எழுதுகிறேன்.

இங்கு நான் எழுதிய முந்திய கருத்துக்கள் புலிகளை விமர்சித்து அல்ல. இங்கு கருத்தெழுதிய மற்றவர்களை விமர்சித்து. பழைய இழப்புக்களையும் அதைத்தொடர்ந்த வெற்றிகளையும் உதாரணப்படு்த்திக் கொண்டிருந்தது தான் எரிச்சல் தந்தது.

ஏதோ நடக்கட்டும். அனால் இன்னொருமுறை மக்கள் பெருந்தொகையில் கொல்லப்படும்போது,

"உப்பிடித்தான் 83 இலயும் 3000 சனத்தைக் கொண்டவங்கள். ஆனா அதுக்குப்பிறகு தமிழர்கள் வீறு கொண்டு எழுந்து கொழும்பை அடிபணிய வைத்தார்கள். அப்படித்தான் இனி சிங்கள தேசம் அடிபணியும் நிலை விரைவில் வரும்"

என்று கருத்து எழுதாமல் இருந்தாக் காணும்.

சரியா சொன்னிங்க

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தேவன்,

உங்கள் கருத்தை வாசித்தேன்.

உங்களைப் போன்றவர்கள் வகுப்பெடுத்தால்தானே எங்களுக்கு நாட்டு, உலக நடப்புக்கள் தெரியும?

அதை முன்னமே செய்திருந்தால் நாங்கள் உப்பிடி புலம்பியிருக்க மாட்டோமெல்லோ?

தேவாதி தேவ, ராஜாதி ராஜ கோசங்களைப் போடுறதுக்கு எங்களுக்கும் சொல்லித் தாங்கோவன்.

ஐயா நல்லவனே

நாங்கள் என்று விழிப்பது மக்களையா, புலிவிரோதப் புராணிகர்களயா? எட்டப்பவாதங்களால் விற்க்கப்படும் கருத்துக்களுக்கு மக்கள்நலன், சமூகநலன், மனிதாபிமானம் போன்ற சாயங்கள் பூசபட்டுத்தான் இருக்கவேண்டுமே தவிர

அடுத்தநாட்டு விடயங்களுக்குள் மூக்கை நுளைக்கும் நடவடிக்கைகளால் காரியம் சாதிக்கப்பட முடியாது. மக்கள்துன்பத்தின்மீது அம்முதலைகள் கொட்டும் கண்ணீருக்கு காரணம் வேறு ஐயா

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆரார் துரோகிகள், ஆரார் கருணாகுழுவில இருக்கினம், ஆரார் ஈபிடிபி குழு, ஆரார் சிங்களவனுக்குப் பிறந்தவங்கள் எண்டு துப்பறியிறதுக்கு யாழ்க்களத்தில ஒரு படை அமைச்சால் நல்லது. ஆளாளுக்குத் தனிப்படச் சொல்லிறதிலும் பார்க்க ஒரு குழு அமைச்சு அவை ஆராய்ந்து தாற முடிவுக்கு ஒரு வலு இருக்குமெல்லோ?

தேவன் போன்றவர்கள் இதை முன்னின்று வழிநடத்தலாம். நான் தலைவராக தேவனை வழிமொழிகிறேன்.

ஐ.நா மனித உரிமை கண்காணிப்பு குழு இலங்கையில் ஏற்படுத்தப்படவேண்டும் - பிலிப் ஓஸ்டன்

வெள்ளி 08-09-2006 14:33 மணி தமிழீழம் [மயூரன்]

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை கண்காணிப்புக் குழுவொன்று இலங்கையில் ஏற்படுத்தப்பட வேண்டும் என்று நான் எதிர்பார்க்கின்றேன் என நீதிக்கு புறம்பான வகையில் நடத்தப்படும் கொலைகளை கண்காணிக்கும் ஐ.நா.வின் சிறப்பு பிரதிநிதி பேராசிரியர் பிலிப் ஓஸ்டன் தெரிவித்தார். பி.பி.ஸி தமிழோசைக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையின் தற்போதைய நிலைமையில் முக்கிய பிரச்சினைகள் இருக்கின்றது என்று நான் உணர்கின்றேன். கடந்த காலங்க ளில் காணாமல் போன சம்பவங்கள் குறித்து மனித உரிமை ஆணைக்கு ழுவின் செயற்பாடுகள் கைவிடப்பட்டமை மிகவும் கவலையளிக்கின்றது. நிபுணத்துவமிக்க விசாரணைகள் தேவைப்படுகின்ற சந்தர்ப்பத்தில் மனித உரிமை மீறல் தொடர்பான விசாரணைகள் நிறுத்தப்பட்டமை மிகவும் ஆரோக்கியமான தல்ல.

தற்போதைய நிலைமையில் பல முக்கியமான கொலைகள் குறித்த விசாரணைகளில் அரசாங்கம் செயற்பாட்டு திறனுடன் செயற்படவில்லை என்று நான் கருதுகிறேன். சம்பவங்கள் தொடர்பான வலுவான புலன்விசாரணைகளை நடத்த பொலிஸார் தவறிவிட்டனர். இந்நிலைமை பல பிரச்சினைகளை தோற்றுவித்துள்ளது. கொலைகளுக்கு ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டும் நிலைமைகள் ஏற்பட்டுள்ளன.

இலங்கையில் சீரழிவு நிலைமைகள் தொடர்ந்து வருவதால் அது நாட்டின் ஒட்டுமொத்த சமூகத் திற்கே அச்சுறுத்தலாக இருக்கின்றது. இந்த விடயங்களில் செயற்றிறன் மிக்க புலன் விசாரணைகள் அவசியம். இலங்கையில் இந்த வருடத்தில் மாத்திரம் 1200 பேர் கொல்லப்பட்டுள்ளனர். புலிகள் குறைந்தபட்ச விடயமாக மனித உரிமை காரியாலயத்தை உருவாக்கியிருக்கிறார்கள். இது சிறந்த முயற்சி. ஆனால் அது ஒழுங்காக செயற்படுத்தப்படவேண்டும். புலிகள் கொலைகளை கண்டிக்க ஆரம்பிக்க வேண்டும். மறுப்புகூறினால் மட்டும் கூடாது.

பொதுமக்கள் கொல்லப்படுவது மனித நேயங்களுக்கு எதிரான குற்றமாகும். எவர் இதனைச்செய்தாலும் அது மனித நேயத்திற்கு எதிரான போர்குற்றமாக கருதப்படும்.

மோதல்களில் எவர் முன்னுரிமை பெற விரும்பினாலும் அவர்கள் மனித உரிமைகள் தொடர்பான நம்பகத் தன்மையை உருவாக்க வேண்டும். பிராந்தியத்தை தமது கட்டுப் பாட்டில் வைத்திருப்பது என்பது எந்தவித நன்மையையும் தரப்போ வதில்லை. உள்ளூர் சமூகத்தினர் உணர்வுகளை மதித்தாகவேண்டும். இருதரப்பும் மனித உரிமைகளை மதிக்கவேண்டும்.

புலிகள் குறித்த விடயத்தில் நம்பகத்தன்மையில் பிரச்சினைகள் இருப்பதாக தெரிகிறது. புலிகள் நம்பகத் தன்மையை தெளிவுபடுத்த வேண்டும். எனவே மனித உரிமைகளை முக்கியமானதென கருத ஆரம்பிப்பதையும் முக்கியமற்றதான கொலைகளை நிறுத்துவதும் விடுதலைப் புலிகளை சார்ந்ததாகும்.

கருணா அல்லது ஏனைய குழுக்களின் பேரில் இலங்கையில் நடக்கும் அனைத்தையும் தடுக்கவேண்டிய அரசாங்கத்தின் சக்தி குறித்து மிகைப்படுத்திக் கூற நான் விரும்பவில்லை. கருணா குழுவை அரசாங்கம் கண்டனம் செய்திருப்பது மற்றும் அதன் நடவடிக்கைகளில் இராணுவத்திற்கு தொடர்புகள் இருக்கக் கூடாது என்று அரசாங்கம் அதிகார பூர்வமாக கூறியிருக்கின்றமை ஆகிய இரண்டும் யதார்த்தமாக வெளிப்படுத்தவேண்டும். கருணா அணியுடன் ஒத்துழைப்பதில்லை என்ற விதியை இராணுவம் கடைப் பிடிப்பதாக கூறப்படுவதில் எனக்கு திருப்தி இல்லை.

மோதல்களின் போது மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவது இருதரப்பினாலும் உறுதிப்படுத்தப் படல்வேண்டும். முதலில் மோதலை தீர்ப்போம். பின்பு மனித உரிமைகளை மேம்படுத்துவோம் என்று கூறப்படுவது தவறானதாகும்.

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=1&

மேல் உள்ள செய்தியுடன் நான் '' நாம் சமாதானத்தை அடைய கொடுக்கக் கூடிய விலை என்ன?'' என்ற தலைப்பின் கீழ் எழுதிய சில கருத்துகளை இணைத்து வாசிப்பது இங்கு மிக பொருத்தமாக இருக்கும்.

அமெரிக்க மற்றும் மேற்குலகத்துக்கு எதிராக தமிழர் போராட்டதை திசைதிருப்பும் முயற்சியில் சிங்கள இனவாத அரசுகள் காலம்காலமாக முயற்ச்சி செய்துவந்தன. புலிகளின் தலைமை தீர்க்கதரிசனமான அரசியல் இராணுவ காய் நகர்த்தல்களால் சிங்களத்தின் அந்த முயற்சிகளை முறியடித்துவந்தது.

தற்போது அமெரிக்கா மற்றும் மேற்குலகம் எதிர் நோக்கும் அல்ஹைடா பயங்கரவாதத்துக்கு சமாந்திரமாக புலிகளின் இராணுவ யுக்திகள் இருப்பதாக சிங்களத்தின் சர்வதேச பிரச்சாரம் மேற்குலகை கொஞ்சம் குழப்பியுள்ளது.

அமெரிக்க மனித உரிமைகள் அமைப்பினால் கனடாவில் நடாத்தப்பட்ட கூட்டங்களில் சிலர் தாம் தமிழ் தேசியத்துக்கு ஆதரவாளர்கள் எனக்கூறிக்கொண்டு புலிகளுக்கு தவறான இமேச்சை ஏற்படுத்திக் கொடுத்தனர். அதன் பின் அந்த நிறுவனத்தால் கொண்டுவரப்பட்ட அறிக்கை எமது போராட்டத்துக்கும் தலைமைக்கும் அபகீர்த்தி ஏற்படுத்திக்கொடுத்தது.

மனித உரிமைகளுக்கான ஐ நா மன்றத்தின் சிறப்பு பிரதிநிதி அல்ஸ்டன் எழுதிய அறிக்கையை குறித்து ஒரு சிறப்பு வெளியீட்டு கூட்டத்தை லண்டனில் சர்வதேச மன்னிப்பு சபை சில வாரங்களுக்கு முன் நடாத்தியது. அதிலும் தமிழ் தேசியத் தலைமைக்கு அவப்பெயர் ஏற்படுத்திக் கொடுத்தவர்கள் தம்மை தமிழ் தேசிய பக்தர்களாக காட்டிக்கொண்டனர். அல்ஸ்டன் பேச்சின் வரிகளுக்கு இடையிலான அர்த்ததைப் புரிந்து கொள்ளாது தமிழ் ஊடகங்களில் தமிழருக்கு பேசுவதுபோல் கோமாளித்தனம் செய்தனர்.

எமக்கு உடனடித்தேவை இப்போது தோன்றியுள்ள புதிய சர்வதேச அரசியலை உள்வாங்கி காய்நகர்த்த வல்ல இளம் தலைமைகளை புலத்தில் முன்னிலைபடுத்தி தமிழ் தேசியத்தையும் அதன் தலைமையையும் பலப்படுத்துவதாகும்.

அதன் வழி எமக்கு முன் உள்ள ஒரே பாதை சமாதனம் என்ற கோசம் தான்

நிதர்சனம் வெளியிட்ட ஒரு கட்டுரையும் இங்கு தொடர்ந்து வாசிக்கப்படுவது மேலும் அவசியமாகிறது.

லண்டனில் நடைபெற்ற மன்னிப்புசபையின் கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களின் குடும்பங்களுக்கு இலங்கையில் கொலைப்பயமுறுத்தல்! சர்வதேச மன்னிப்புசபை பதிலளிக்குமா?

வெள்ளிக்கிழமைஇ 8 செப்ரெம்பர் 2006 ஸ ஜ ஜோன்ஸன்

கடந்த ஆகஸ்ட் 5ம் திகதி சனிக்கிழமை லண்டனில் அமைந்திருக்கும் சர்வதேச மன்னிப்புச்சபையின் மண்டபத்தில் நடைபெற்ற "இலங்கையில் காணாமல் போவோர் மற்றும் நடக்கும் படுகொலைகள் விசாரணைகளின்றி போதல்" பற்றிய கலந்துரையாடல் நடைபெற்றது. இந்த நடைபெற்ற நிகழ்வு கலந்துரையாடல் போல் தென்பட்டாலும் இந்த கலந்துரையாடலை பின்னின்று ஒழுங்கு செய்த சிலரின் நோக்கம் தமிழ் தேசிய ஈழவிடுதலை போரிற்கும் மற்றும் அதன் போராட்ட சக்தியாக இருக்கின்ற புலிகளின் மீது பழி சுமத்தி தங்கள் சுயவிரோதத்தையும் காழ்ப்புணர்ச்சியையும் தீர்த்து கொள்வதேயாகும். இக்கலந்துரையாடலுக்கு சென்ற சில தமிழ்த் தேசிய ஆதரவாளர்களின் குடும்பங்கள் இலங்கையில் கொலை மிரட்டல் அச்சுறுத்தல்களுக்கு இலங்கை அரச புலனாய்வுத் துறையினாலும், ஒட்டுக்குழுக்களினாலும் உள்ளாக்கப்பட்டிருப்பதாக நம்பகரமாக அறிய முடிகிறது. பாதிக்கப்பட்டவர்கள், இக்கொலை அச்சுறுத்தல் சம்பந்தமாக சர்வதேச மன்னிப்புச் சபையின் கவனத்திற்கு கொண்டு வரவே அஞ்சும் நிலையே காணப்படுகிறதாம். அப்படி பாதிக்கப்பட்டவர்கள் கொடுக்கும் புகார்கள் மீண்டும் இலங்கை அரச புலனாய்வாலர்களுக்கும், ஒட்டுக்குழுக்களுக்கும் கிடைக்கப்பெற்று விரும்பத்தகாத கொடிய விபரீதங்கள் நடந்து விடுமென தன்னை அடையாளம் காட்ட விரும்பாத கந்துரையாடலில் பங்குபற்றிய ஒருவர் எமது நிருபரிடம் தெரிவித்தார்.

இதேவேளை இக்கலந்துரையாடலுக்கு லண்டனில் இருக்கும் இலங்கைத் தூதுவராலயத்தில் கடமையாற்றும் புலனாய்வுத்துறை அதிகாரியான ஆ.சு.முநுநுபுநுடு கலந்து கொண்டதாக தெரிகிறது. இந்த சிங்கள அரசின் புலனாய்வுத்துறை அதிகாரி, தற்போது லண்டனில் இயங்கும் ஒட்டுக்குழுக்களின் உறுப்பினர்கள், லண்டனில் வன்முறையில் ஈடுபடும் தமிழ் இளைஜர் கும்பல்களோடு நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி செயற்படுவதாகத் தெரிய வருகிறது.

குறிப்பாக "உண்டியலான்" ஜெயதேவன், "ஒசாமா குறுப்பின் லண்டன் பிரதிநிதி" பஷீர், ஈ.என்.டி.எல்.எப் ஒட்டுக்குழு உறுப்பினர்கள் போன்றோருடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்தி பிரித்தானியாவில் வாழும் தமிழ் மக்களிடையே குழப்பங்களை ஏற்படுத்தவும், தமிழ் மக்களிடையே பிரதேசவாத வன்முறைகளை தூண்டவும் அவற்றின் மூலம் லண்டனிலுள்ள தமிழ் தேசியத்திற்கெதிரான செயற்பாடுகளை தீவிரப்படுத்தவும் முனைவதாக தெரிய வருகிறது. லண்டனில் தமிழர்களால் நடாத்தப்படும் நிகழ்வுகளுக்கு இப் புலனாய்வுத்துறை அதிகாரி தவறாமல் பங்குபற்றுவதாகவும் அறிய முடிகிறது. சரளமாக தமிழில் உரையாடக்கூடிய இவர் "தான் தமிழர்" என்று பலரை ஏமாற்றி வருவதாகவும் அறிய முடிகிறது. இக்குறிப்பிட்ட கலந்துரையாடலில் கலந்து கொண்டவர்களின் விபரங்கள் அனைத்தும், கலந்துரையாடலை ஒழுங்கு செய்தவர்களால் இந்த சிறீலங்கா தூதரகத்தில் கடமையாற்றும் புலனாய்வுப் பிரிவு அதிகாரிக்கு கையளிக்கப்பட்டிருக்கப்பட்ட

ஆரார் துரோகிகள், ஆரார் கருணாகுழுவில இருக்கினம், ஆரார் ஈபிடிபி குழு, ஆரார் சிங்களவனுக்குப் பிறந்தவங்கள் எண்டு துப்பறியிறதுக்கு யாழ்க்களத்தில ஒரு படை அமைச்சால் நல்லது. ஆளாளுக்குத் தனிப்படச் சொல்லிறதிலும் பார்க்க ஒரு குழு அமைச்சு அவை ஆராய்ந்து தாற முடிவுக்கு ஒரு வலு இருக்குமெல்லோ?

தேவன் போன்றவர்கள் இதை முன்னின்று வழிநடத்தலாம். நான் தலைவராக தேவனை வழிமொழிகிறேன்.

நான் அதை ஆமோதிக்கின்றேன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஈழவன்,

நான் முன்மொழியிறன் எண்டு சொல்ல நீர் வழிமொழியிறன் எண்டு சொல்லியிருக்க வேணும் என்ன?

கொஞ்சம் பிசகிப் போச்சு.

பிறகென்ன அப்ப ஒரு கொமிற்றி அமைச்சாப் போச்சு.

தேவன்,

பதினெட்டுக் கருத்துக்கள் எழுதினதோட எப்பிடி உந்தப் பெரிய பொறுப்பை எடுக்கிறதெண்டு யோசிக்காதையுங்கோ, பத்தாயிரம் கருத்தெழுதின குருவிகள்கூட சிலவேளை உங்களை ஒத்துக் கொள்ளுவார்.

சீனியாரிட்டி இல்லை முக்கியம், உங்களைப் போல 'விசயம்' விளங்கின ஆக்கள் எங்களை வழிநடத்திறதுதான் முக்கியம்.

  • தொடங்கியவர்

நல்லவன்..இப்படியொரு உன்னதமான பணியை ஒப்படைச்சிருக்கிறீங்கள்..நிச

ஈழவன்,

நான் முன்மொழியிறன் எண்டு சொல்ல நீர் வழிமொழியிறன் எண்டு சொல்லியிருக்க வேணும் என்ன?

கொஞ்சம் பிசகிப் போச்சு.

பிறகென்ன அப்ப ஒரு கொமிற்றி அமைச்சாப் போச்சு.

தேவன்,

பதினெட்டுக் கருத்துக்கள் எழுதினதோட எப்பிடி உந்தப் பெரிய பொறுப்பை எடுக்கிறதெண்டு யோசிக்காதையுங்கோ, பத்தாயிரம் கருத்தெழுதின குருவிகள்கூட சிலவேளை உங்களை ஒத்துக் கொள்ளுவார்.

சீனியாரிட்டி இல்லை முக்கியம், உங்களைப் போல 'விசயம்' விளங்கின ஆக்கள் எங்களை வழிநடத்திறதுதான் முக்கியம்.

அதுதான் பார்த்தனான் ஏதோ பிசகிவிட்டது என எல்லாருக்கும் விளங்கினால் சரி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சமதானம் எழுதியது

'' தாயக தமிழரின் இன்றைய இக்கட்டான நிலையை தெளிவாக உள்வாங்கி பொருத்தமான கருத்துகளை முன் வைப்பதே இப்போது எம்முன் உள்ள அவசர பணியாகும்.

மக்களின் இடப்பெயர்வு மற்றும் அழிவு குறித்து கருத்து சொல்வது அசிங்கமான விடயமாக்கப்பட்டால் மெளனம் அரசியல் மொழியாகும் ஆபத்து நிலை தோன்றும். இது தொடர்ந்தும் தமிழ் மக்களை அழிவுக்கு இட்டுச் செல்லும்.

வன்னியில் புலிகள் மக்களை ஆயுத மயப்படுத்தியதின் நோக்கம் செயற்கையாக உருவாகி இருந்த ஒரு அரசியல் மெளனத்தை உடைத்தெறிவதற்கே. அவ்வாறான செயல்பாடுகள் அரசுக்கு எதிரான சமாதான போராட்டதில் அரசை சர்வதேசத்துக்கு அம்பலபடுத்தும் ஒரு போர் உத்தி ஆகும்.''

உண்மயான மக்கள்பணிக்கு புலிகளின்மேல் சேறுபூசாமல் செயற்படமுடியாதா?

சம்பூரில் புலிகளின் விலகலுக்கு ரி பி சி பாணியின் புலம்பல்கள் நன்மை தருமா தேசியத்துக்கு,

தவிர யெயதேவன் போன்றோரின் கருத்துக்கள் களத்துக்கு வந்தால் அதை உணர்வர்க்கு ஒன்றும் கொம்பு முளைத்த அறிவு தேவையில்லையே.

நல்லவன்..இப்படியொரு உன்னதமான பணியை ஒப்படைச்சிருக்கிறீங்கள்..நிச

சரி சுடரக்கா..நீங்கள் சொல்லுறது சரியென்றே வைச்சுக்குவமே..! நீங்கள் செய்ததுகளை ஒருக்கா பட்டியல் பண்ணி விடுங்கோவன்..! தேசியத்துக்கு உதவியா இருக்கும்..! அதுக்குத்தானே இவ்வளவு கஸ்டப்படுறியள்..! :wink: :idea:

அது இருக்கட்டும்..யாழில உள்ள உங்கள் சகோதரங்கள் கொழும்புக்கு வர முண்டி அடிக்கினமாம்..என்ன ஏற்பாடு செய்யப் போறியள்..இல்ல உங்க இருந்து கொண்டே...ஈழத்தைக் கொழும்புக்கும் விரிவுபடுத்தப் போறீங்களோ..?!

http://www.tamilnet.com/art.html?catid=13&artid=19510

நாங்க ஒண்டும் செய்ததா சொல்லலயே. :roll:

உங்கள மாதிரியும் வேசம் போடலயேயுங்கோ குருவி. மற்றவங்க செய்யிறது ஒண்டும் உங்களுக்குப் பிடிக்காதே. ஆனா எதிலாவது உங்களத் முன்னிறுத்தினா உங்களுக்கு மிச்சம் சந்தோசமே. நாம ஏற்பாடு செய்யிறது இருக்கட்டும், நீங்க இந்த லண்டனில இருந்து என்ன செய்யிறியள் அங்க போய் சண்டை பிடிச்சுஎல்லாத்தையும் மீட்கலாமே :roll:

நல்லவன்..இப்படியொரு உன்னதமான பணியை ஒப்படைச்சிருக்கிறீங்கள்..நிச

அப்பவும் உப்பிடித்தான் கனபேர் சொன்னவை, பிறகு வாயடைச்சவை என்று சொல்லிக்கொண்டிருப்பதைப் பார்த்தால் இப்பவும் போராட்டம் அந்தக்கால நிலையிலதான் இருக்கோ எண்ட ஐயம் எனக்கு வருது. திரும்பவும் யாழ்ப்பாணம் மாதிரி ஒரு இழப்பும் பிறகு முல்லைத்தீவு மாதிரி ஒரு அடியும் ஜெயசிக்குறு மாதிரி அவனின்ர ஒரு முன்னேற்றமும் பிறகு ஓயாத அலைகள் தாக்குதலும் பிறகு இன்னொரு சமாதானப் பேச்சுவார்த்தையும் அதுவும் அஞ்சு வருசம் இழுபட்டு திரும்பவும் இதேமாதிரி ஒரு நிலையிலவந்து நாங்கள் கருத்துச் சண்டை பிடிக்கிற நிலையும் இனிமேல் வந்து.......

போராட்டம் நெருக்கடிகளைச் சந்திப்பது போல் தோன்றும் போது பழைய வெற்றிகளை நினைவு படுத்துவது மக்களுக்கு தெம்பூட்டும் என்பது உண்மை தான். ஆனால் அதை இன்றைய சாதக பாதக அம்சங்களுடன் பொருத்தி பார்க்க வேண்டும்.

தமிழ் தரப்பிற்கு பாதகமாக:

1) அமெரிக்காவின் / மேற்குலகின் சர்வதேச 'பயங்கர' வாதத்திற்கெதிரான தீவிர செயற்பாடுகள்

2) அரசிற்கு பாகிஸ்தானின் நேரடி இராணுவ உதவிகள்

3) புலிகளுக்குள் ஏற்பட்ட உள்முரண்பாடு

சாதகமாக:

1) இந்திய ஆதரவை பெற கூடிய சாத்தியங்கள்

2) இலங்கை அரசில் அங்கம் வகிக்கும் சக்திகள் காட்டும் போர் வெறி. அதனால் எமக்கு வரக் கூடிய சர்வதேச ஆதரவு.

3) புலிகள் பெற்றிருக்கும் இராணுவ / அரசியல் அனுபவங்கள் மற்றும் வெற்றிகள்

இதை விட முஸ்லீம் சமூகத்துடனான எமது தற்போதய உறவுகளும் காத்திரமான பங்கு வகிக்க கூடியவை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.