Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தியாக தீபம் திலீபன் அவர்களுக்கு எம் வீரவணக்கம்

Featured Replies

தியாக தீபம் திலீபன் அண்ணாவிற்கு வீரவணக்கங்கள்.

லக்கியின் பதிவுக்கு நன்றிகள்.

திலீபனுடன் முதலாம் நாள் 15-09-1987காலை 9.30 மணி! பாடசாலை பிள்ளைகள் வரிசையாக வந்து திலீபனைச் சந்தித்து விடைபெறுகிறார்கள். எல்லோருடனும் அவர் அன்பாகப் பேசுகிறார்.

காலை 9.45 மணி !

"வோக்கிடோக்கி"யில் தலைவருடன் சில நிமிடங்கள் பேசுகிறார். பேசிவிட்டு அந்த மண்ணிற "வானை" நோக்கி நடக்கிறார்.... எல்லோரும் பின் தொடர்கிறோம்…. ஆம்; அவரின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது.

மிக மிடுக்காக நடந்து முன் ஆசனத்தில் ஏறுகிறார். அவரின் பக்கத்தில் சொர்ணம், அன்ரன் மாஸ்ரர், முரளி, பின் ஆசனத்தில் காசி ஆனந்தன், ராஐன், நான், மற்றும் சிலர்….! வான் நல்லூர் கந்தசாமி கோயிலை நோக்கி ஓடுகிறது…. பாதையின் இரு பக்கத்திலும் மாணவர்கள், பொதுமக்கள் ஆகியோர் கையசைத்து வழியனுப்புகிறார்கள்.

வான் நின்றதும், பிரதித் தலைவர் மாத்தையா எதிர்வந்து நின்று, திலீபனைக் கட்டி அணைத்து வரவேற்று, உண்ணாவிரத மேடைக்கு அழைத்துச் செல்கிறார். நாங்களும் பின்னால் போய்க் கொண்டிக்கிறோம்…. எதிர்பாராத விதமாக அந்த நிகழ்ச்சி நடக்கிறது. வயதான ஒர் அம்மா… தள்ளாடிய சிவந்த நிற மேனி, பழுத்த தலை, ஆனால் ஒளி தவழும் கண்களில் கண்ணீர் மல்க, திலீபனை மறித்து, தன் கையில் சுமந்துவந்த அர்ச்சனைச் சரையிலிருந்து நடுங்கும் விரல்களால் திருநீற்றை எடுத்து திலீபனின் நெற்றியில் பூசுகிறார்….

சுற்றியிருந்த "கமெரா"க்கள் எல்லாம் அந்தக் காட்சியைக் "கிளிக்" செய்கின்றன. வீரத்திலகமிடுகிறார். அந்தத் தாய்… தாயற்ற திலீபன் அந்தத் தாயின் பாச உணர்வில் மூழ்கிப்போய் விடுகிறார்…

காலை 9.45 மணி !

உண்ணாவிரத மேடையிலே உள்ள நாற்காலியில் திலீபனை அமர வைக்கிறார், தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதித் தலைவர் மாத்தையா அவர்கள்… எனக்கு அப்போது ஒரு நிகழ்ச்சி ஞாபகத்துக்கு வந்தது. நெல்லியடி இராணுவ முகாம் தாக்குதலுக்கு முன்பாக கப்டன் மில்லரிடம் திட்டத்தை ஒப்படைத்து, வழியனுப்பி வைக்கிறார் மாத்தையா… அன்று மில்லர் வீரத்துக்குக் காவியம் ஒன்றையே படைத்துவிட்டு வீரமரணம் அடைந்தான். இன்று திலீபன்…?

திலீபனின் அருகே நான், ராஐன், பிரசாத், சிறீ ஆகியோர் அமர்ந்திருக்கிறோம். திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பமாகிவிட்டது. அங்கு பக்கத்திலிருந்த மேடையில் பிரசாத் தலைமையில் கூட்டம் நடைபெற்றது. திரு. நடேசன், காசி ஆனந்தன் ஆகியோர் திலீபனின் உண்ணாவிரதம் எதற்காக ஆரம்பிக்கப்படுகிறது என்பது பற்றி விளக்கமளித்தார்கள்… தமிழ் மக்களினதும் தமிழர் தாயகத்தினதும் உரிமைகளைப் பேணும் நோக்கமாக, இந்தியா மக்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில், தமிழீழ விடுதலைப் புலிகளால் முன்வைக்கப்பட்ட ஐந்து கோரிக்கைகளும் பின்வருவன:

1. பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் இன்னும் தடுப்புக் காவலில் அல்லது சிறைகளில் உள்ளோர் விடுவிக்கப்பட வேண்டும்.

2. புனர்வாழ்வு என்ற பெயரில் தமிழர் தாயகத்தில் நடாத்தப்படும் சிங்களக் குடியேற்றம், உடனடியாக நிறுத்தப்படல் வேண்டும்.

3. இடைக்கால அரசு நிறுவப்படும் வரை "புனர்வாழ்வு" என்று அழைக்கப்படும் சகல வேலைகளும் நிறுத்தப்பட வேண்டும்.

4. வடக்கு – கிழக்கு மாகாணங்களில் பொலிஸ் நிலையங்கள் திறக்கப்படுவது உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.

5. இந்தியா அமைதிப்படையின் மேற்பார்வையில், ஊர்க்காவல் படை என அழைக்கப்படுவோருக்கு வழங்கப்பெற்ற ஆயுதங்கள் திரும்பப் பெறப்பட்டு, தமிழ்க் கிராமங்கள், பள்ளிக்கூடங்கள் ஆகியவற்றில் குடிகொண்டுள்ள இராணுவ, பொலிஸ் நிலையங்கள் மூடப்பட வேண்டும்.

பிரசாத் அவர்களால் மேற்படி ஐந்து கோரிக்கைகளும் வாசிக்கப்பட்டன. இதே கோரிக்கைகளை 13-09-1987 அன்று இந்தியா உயர் ஸ்தானிகரின் கையில் நேரடியாகக் கிடைக்கக்கூடியதாக அனுப்பி 24 மணித்தியால அவகாசமும் கொடுத்திருந்தார்கள்… ஆனால், 15-09-1987 வரை எந்தப் பதிலும் தூதுவரிடமிருந்து கிடைக்காத காரணத்தினால் சாகும்வரை உண்ணாவிரதமும், மறியல் போராட்டமும் நடாத்துவதேன தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரதேசப் பொறுப்பாளர்களின் கூட்டத்தில் 13-09-1987 அன்று தீர்மானிக்கப்பட்ட- -து… அதன்படிதான் திலீபனின் தியாகப் பயணம் ஆரம்பித்தது…

பிற்பகல் 2.00 மணி !

திலீபன் கம்பீரமாக வீற்றிருக்கிறார். உண்ணாவிரதம் ஆரம்பிக்கப்பட்டு இரண்டு மணித்தி- -யாலங்கள் முடிந்துவிட்டன. இரண்டாவது மேடையிலே நடைபெற்றக் கொண்டிருந்த உண்- -ணாவிரத விளக்கக் கூட்டம் முடிவடைந்துவிட்டது.

"படிப்பதற்குப் புத்தகங்கள் வேண்டும்" என்று என் காதுக்குள் குசுகுசுக்கிறார் திலீபன்: நான் ராஐனிடம் சொல்கிறேன்.

பதினைந்து நிமிடங்களில் பல அரிய நூல்கள் மேடைக்கு வருகின்றன. விடுதலைப் போராட்டங்கள் பற்றி அறிவதில் திலீபனுக்கு மிகுந்த ஆர்வம் எப்போதுமே உண்டு. பிடல் காஸ்ட்ரோ, சேகுவேரா, ஹோசிமின், யாசீர் அரபாத் போன்றவர்களின் வாழ்க்கையைப் பற்றிய நூல்களை நேரம் கிடைக்கும்போது படிப்பார்.

பலஸ்தீன மக்களின் வாழ்க்கையைப் பற்றிப் படிப்பதென்றால் அவருக்குப் பலாச்சுளைமா- -திரிப் பிடிக்கும்.

"பலஸ்தீனக் கவிதைகள்" என்ற நூலை அவரிடம் கொடுத்தேன். அதை மிகவும் ஆர்வத்துடன் படிக்கத் தொடங்கினார். முhலை 5.00 மணிக்கு பக்கத்து மேடையிலே நிகழ்ச்சிகள் ஆரம்பமாயிற்று.

பாடசாலை மாணவிகள் போட்டி போட்டுக்கொண்டு கவிதைகளை வாசிக்கத் தொடங்கினர். சுசீலா என்ற மாணவி மிகவும் உணர்ச்சிவசப்பட்டு தன் கவிதையை வாசித்துக் கொண்டிருந்தார். அப்போது ஒரு கட்டத்தில் அவர் அழுதேவிட்டார்.

"அண்ணா திலீபா !

இளம் வயதில்

உண்ணாமல்

தமிழினத்துக்காக……

நீ தவமிருக்கும்

கோலத்தைக்

காணும் தாய்க்குலத்தின்

கண்களில் வடிவது……

செந்நீர் !.......

சுசீலாவின் விம்மல், திலீபனின் கவனத்தைத் திருப்புகிறது.

கவிதை தொகுப்பை முடித்துவிட்டு (பலஸ்தீனக் கவிதைகள்), கவிதை மழையில் நனையத் தொடங்கினார்.

அவர் விழிகளில் முட்டிய நீர்த்தேக்கத்தை ஒரு கணம் என் கண்கள் காணத் தவறவில்லை.

ஏத்தனை இளகிய மனம் அவருக்கு? இந்த இளம் குருத்து இன்னும் எத்தனை நாட்களுக்கு ஒரு சொட்டு நீர் கூட அருந்தாமல் வாடி வதங்கப் போகிறது?

அகிம்சைப் போராட்டத்துக்கே ஆணிவேராகத் திகழ்ந்த அண்ணல் காந்தியடிகள் கூட, தனது உண்ணாவிரதப் போராட்டங்களை நீராகாரம் அருந்தித்தானே நடத்தினார்!

ஏன்?

ஐரிஷ் போராட்ட வீரன் "பொபி சாண்ட்ஸ்" என்ன செய்தான்?

சிறைக்குள், நீராகரம் அருந்தித்தான் உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து உயிர்நீத்தான்.

இந்தியாவின் ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த திரு. பொட்டி ராமுலு என்பவரும் அதே முறையில்தான் உண்ணாவிரதம் இருந்து, இறுதியில் தியாக மரணம் அடைந்தார்.

1956 ஓகஸ்ட் 27 இல், சென்னை மாகாணத்துக்கு தமிழ்நாடு என்று பெயர் சூட்டக் கோரி உண்ணாவிரதத்தை ஆரம்பித்த 63 வயதான விருதுநகர் சங்கரலிங்க நாடார் 78 ஆவது நாள், அவரது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்படாமல் உயிர்துறந்தார் ( 13 ஆண்டுகளின் பின் பேரறிஞர் அண்ணாவால், 1969 இல் சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்ற பெயர் சூட்டப்பட்டது).

பகத்சிங்கின் தோழரான வங்காளத்தைச் சேர்ந்த ஐதீந்திர நாத்தாஸ் என்ற இளைஞன் 13.07.1929 இல் லாகூர் சிறையில், சிறைக்கொடுமைகளை எதிர்த்து உண்ணாவிரதமிருந்து 13.09.1929 அன்று, 63 ஆம் நாள் வீரமரணமடைந்தார் (அதன் பின் சிறைச்சாலை விதிகள் தளர்த்தப்பட்டன).

ஆனால் நம் திலீபன்?

உலகத்திலேயே நான் அறிந்தவரையில் இரண்டாவதாக, ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் உண்ணாவிரதத்தை ஆரம்பித்தவர் என்ற பெருமதிப்பைப் பெறுகிறார்.

அப்படியானால் அந்த முதல் நபர் யார்?

அவர் வேறு யாருமல்ல: தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன்தான்!

1986 ஆம் ஆண்டு நொவெம்பர் மாதம் இந்தியாவில் அவர் இருந்த போது, தகவல் தொடர்புச் சாதனங்களை இந்திய அரசு கைப்பற்றியதைக் கண்டித்து, ஒரு சொட்டு நீர்கூட அருந்தாமல் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்து, உலகில் புதிய அத்தியாயம் ஒன்றை ஆரம்பித்துவைத்த பெருமை அவரையே சாரும்.

இரண்டாம் நாளே இந்திய அரசு பணிந்ததால் அந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் வெற்றி பெற்றார்.

அதுபோல், அவரால் உருவாக்கப்பட்ட திலீபன் இன்று குதித்து விட்டார். அவரது கோரிக்கைகளை இந்திய அரசு நிறைவேற்றுமானால் அவர் உண்ணாவிரதத்தைக் கைவிடத் தயார்.

இல்லையென்றால் இறுதிமூச்சு வரை அதைத் தொடரத் தயாராக இருந்தார்.

திலீபன் மிகவும் மன உறுதி படைத்தவர். ஓல்லியான உடலாயினும் திடமான இதயம் அவரிடம் இருந்தது.

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருக்கும் வரை எதையும் சாதிக்கலாம் என்ற தலைவர் பிரபாகரனின் அசையாத கொள்கையிலே பற்று வைத்திருப்பவர், திலீபன்.

அவரது கோரிக்கைகள் நிறைவேறுமா? …….

காலம்தான் பதில் சொல்லவேண்டும்.

இந்த உண்ணாவிரதம் அரசின் தலையீட்டினால் வெற்றி பெறுமானால் அந்த வெற்றி திலீபனையே சாரும். அதுபோல் இந்திய அரசு நடவடிக்கை எடுக்காமல் இறுதிவரை உண்ணாவிரதம் இருந்தே திலீபன் இறக்க நேரிட்டல்….? அதில் கிடைக்கும் தோல்வியும் திலீபனுக்கு ஓர் மாபெரும் வெற்றிதான்.

உலகில், புதிய அத்தியாயம் ஒன்றின் "சிருஷ்டி கர்த்தா" என்ற பெருமை அவனையே சாரும். ஆனால், அதற்காக எங்கள் குல விளக்கை நாமே அணைக்க வேண்டுமா?

"இறைவா ! திலீபனைக் காப்பாற்றிவிடு!"

கூடியிருந்த மக்கள் நல்லூர்க் கந்தனிடம் அடிக்கடி இப்படி வேண்டிக்கொள்கிறார்கள்- இதை நான் அவதானிக்கிறேன்.

பழந்தமிழ் மன்னனாகிய சங்கிலியன் அரசாண்ட நல்லூர் அரசதானியிலே…. அதுவும் தமிழ்க் கடவுளாகிய குமரனின் சன்னிதியில்… ஒரு இளம்புலி உண்ணாமல் துவண்டு கிடக்கிறது………

ஒரு நல்ல முடிவு கிடைக்கவேண்டும். இல்லையேல் உலகில் நீதி செத்துவிடும். எனக்குள் இப்படி எண்ணிக் கொள்கிறேன்.

அப்போது ஒர் இளைஞன் மேடையில் முழங்கிக் கொண்டிருக்கிறான்.

" திலீபன் அண்ணாவின் கோரிக்கைகள் மட்டுமல்ல@ தமிழ் மக்களின் கோரிக்கைகளும் இதுதான். இதை நிறைவேற்ற வேண்டியது இந்திய அரசின் கடமையாகும்…… அவர் தமிழீழம் தாருங்கள் என்பதற்காக உண்ணாவிரதம் இருக்கவில்லை. இந்திய - இலங்கை ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டுள்ள ஐந்தே ஐந்து கோரிக்கைகளை நிறைவேற்றும்படிவற்புறுத்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சாத்வீகத்தில் நம்பிக்கை கொண்ட தியாகி திலீபனின் நம்பிக்கை வெல்லும்.

திலிபனுக்கு அஞ்சல் ஒன்று

நன்றி

ஒருபேப்பர்.கொம்

http://www.orupaper.com/issue55/pages_K___7.pdf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தகவலுக்கு மிக்க நன்றி.

thilaeepan_2006_09_21.jpg

அண்ணன் திலீபனின் ஒளிப்படக்காட்சி

தகவலுக்கு நன்றி

தியாக தீபம் திலீபன் மாமாவை இந்நாளில் நினைவு கூருகின்றேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ் மக்களின்

உணர்வுகள்...

எல்லாம்..

தியாக தீபம் திலீபன்..

அவர்களுக்காக..

உருகும்..

நிலையில்..

அவரை..

துடித்து மடியவைத்த

சிங்களம்..

தோற்றது..

வீரன் வீழ்ந்ததாக நினைத்தார்கள்..

திலீபணண்ணா எல்லார் இதயத்திலும் வாழ்கிறார்..

அவருக்கு

எம்..

வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறவுகள்

தியாகதீபம் தீலிபனின் நினைவுகளோடு வெளிவந்த பாடல்கள்!

http://eelapadalhal.blogspot.com/2006/09/9.html

நன்றி: வன்னியன்!

  • கருத்துக்கள உறவுகள்

தியாகி திலீபனின் நினைவுதினம் இன்று

ஈழத்தமிழரின் உரிமைகளுக்கான போராட்டத்தின் ஓர் அம்சமாக காந்தீய வழியில் நீராகாரம் கூட உட்கொள் ளாமல் உண்ணாநோன்பிருந்து உயிர்த்தியாகம் செய்த விடுதலைப் புலிகளின் முன்னாள் யாழ். அரசியல்துறைப் பொறுப்பாளர் லெப்டினன்ட் கேணல் தியாகி திலீபனின் 19ஆவது ஆண்டு நினைவுதினம் இன்றாகும்.

இந்திய வல்லாதிக்கத்துக்கு எதிராக ஐந்து அம்சக் கோரிக்கையை முன்வைத்து 1987ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் 15ஆம் திகதி நல்லூர் கந்தசுவாமி ஆலய வீதியில் திலீபன் தனது உண்ணா நோன்பை ஆரம்பித்தார். திலீபனின் அஹிம்சைப் போராட்டத்தின் முடிவில் செப்ரெம்பர் 26ஆம் திகதி திலீபன் தன் கொள்கையிலிருந்து விலகாமல் தன்னுயிர் நீத்துக் காவியமான 19ஆவது நினைவுதினம் இன்றாகும்.

இதனையொட்டி தமிழர் தாயகப் பகுதிகள் எங்கும் தியாகி திலீபனை நினைவு கூரும் முகமாக பல்வேறு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன. விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் பகுதிகளில் அடையாள உண்ணாவிரதங் கள், சிறப்புரைகள், கலை நிகழ்ச்சிகள் என்பன இடம்பெறவிருக்கின்றன.

விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசங்களில் தியாகி திலீபனின் நினைவு தினத்தை முன்னிட்டு தத்தமது பகுதிகளில் கடந்த 15ஆம் திகதி முதல் பொதுமக்கள் நினைவுப்பந்தல்கள் அமைத்து திலீபன் திருவுருவப்படம் வைத்து எழுச்சி கீதமிசைத்து அஞ்சலி செலுத்திவந்தனர். நினைவுதினத்தை ஒட்டி சிரமதானம் போன்ற சமூலநலச் சேவைகளும், இளைய தலைமுறையினரிடையே அறிவுசார் போட்டிகளும் மற்றும் விளையாட்டுப் போட்டிகளும் அந்தப் பிரதேசங்களில் நடத்தப்பட்டிருந்தன.

-உதயன்

உயிர்ப்பூவை ஆயுதமாக்கிய திலீபன்...

அண்ணாந்து பார்க்க வைத்த சங்கர்.... நினைவாக

-சி.நிதீபன்-

செப்ரெம்பர் 26 ஆம் நாள் தமிழின வரலாற்றில் நீங்காத இடம்பிடித்த நாள், தம்மினத்தின் தேசிய ஆன்மாவை உசுப்பிவிட்ட நிகழ்வு நடந்த நாள். அனுபவத்திரட்சியும் ஆளுமை வீச்சும் கொண்ட அற்புத மனிதர்களான கேணல் சங்கரும் திலீபனும் இம்மண்ணை விட்டு அகன்ற கரிநாள்.

அணு ஆயுத வல்லரசான இந்தியாவுடன் போரிட முன், அவர்களின் தேசியத் தந்தை காந்தி வழியை கடைபிடித்தவன்தான் இந்த பார்த்தீபன். ரூபாய் நோட்டில் காந்தியை வழிபடுபவர்கள் அவரின் அகிம்சைக் கோட்பாட்டினை இன்னமும் கடைபிடிப்பார்கள் என்று கற்பிதம் கொண்டது திலீபனின் எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆயுதச் சமரில் மட்டுமல்ல அகிம்சைப் போரிலும் தாம் சளைத்தவர்கள் அல்ல என்று உலகுக்கு உரத்தும் கூறியவர்கள்தான் புலிகள். பிராந்திய வல்லாதிக்க நலனைக் காக்க, சிறிலங்காவுக்கு இந்தியா அளித்த விட்டுக் கொடுப்புக்களின் அதியுச்ச நிகழ்வாகவே திலீபனின் மரணத்தைக் கருதலாம்.

உலக ஆயுதப் போராட்ட வரலாற்றில் எதிரியின் சிறைக்கு வெளியே மக்கள் முன்னிலையில் அகிம்சைப் போர் நிகழ்த்தி உயிர் துறந்த ஒரு வன்முறைப் போராளி திலீபனாகத்தான் இருக்க முடியும்.

சிறிலங்காவின் அழைப்பின் பேரில் இலங்கை வந்து புலிகளைச் சந்தித்த முன்னால் ஐரிஸ் போராளி மார்ட்டின் மக்கினசின் சக தோழன் 'பொபிசான்ட்ஸ்" எதிரியின் சிறையிலேயே உண்ணாவிரதமிருந்து மடிந்தான்.

போராட்ட சரித்திரத்தில் புதிய வரலாறு படைத்துக் கொண்டிருப்பவர்கள்தான் புலிகள். ஒரு மனிதனிடம் இழப்பதற்கு ஆயிரம் விடயங்கள் உண்டு.

சுற்றார், உற்றாரையும் இழக்கலாம். சேர்த்து வைத்த பொருள் மற்றும் பண்டங்களையும் இழக்கலாம். ஏன் தன்மானத்தையும் கூட சிலர் இழக்கலாம். ஆனால் தன்னுயிரை இழக்க எவரும் விரும்பமாட்டான். மரண பயம் மனிதனோடு இணைந்த ஒன்று.

இலட்சியத்திற்கான தனது உடலை வருத்தி இன்னுயிரை சிறுகச் சிறுக இழக்கும் ஒரு மனிதனை எந்தவிதமான மானுடவியல் வரையறைகளுக்கும் அப்பாற்பட்டதொரு உன்னத ஜீவனாகக் கொள்ளலாம்.

திலீபனின் இலட்சியத் தீ, அவனது உடலைச் சிறிது சிறிதாக அரித்து, உயிர்ப்பூவை வெளித்தள்ளும்போது அவனைச் சூழவிருந்த மக்கள் கூட்டம் எழுப்பிய ஓலங்கள், விம்மி வெடித்த நெஞ்சுக்கூடுகள், பிரபஞ்ச ஆத்மாவைக் கிழித்தெறிந்து ஏற்படுத்திய அதிர்வலைகள், மகாத்மா காந்தியையும் தலைகுனிய வைத்திருக்கும்.

தமிழீழப் போராட்ட வரலாற்றில் மிகவும் குறிப்பிடத்தக்க இன்னுமொரு மனிதர்தான் கேணல் சங்கர். தனது புலமைசார் பொறியியல் துறையினை போராட்டத்துக்கு அர்ப்பணித்த இலட்சிய மானிடன். இவரின் சகோதரனான கரன் என்பவரே பலாலி முகாமில் சிறை வைக்கப்பட்ட போது சயனைட் உட்கொண்டு சாவினைத் தழுவிக் கொண்ட பன்னிரு வேங்கேகைகளில் ஒருவர். அத்துலத் முதலியின் கபடத்தனத்தால் பலாலியிலிருந்து கொழும்புக்கு கொண்டு செல்லப்பட்டவிருந்தபோது தலைவனின் ஆணையை ஏற்று அண்ணன் கரனுக்கு சயனைட் குப்பி கொடுத்தவரும் இந்த சங்கர்தான்.

குடும்ப உறவினைவிட இலட்சியமே பெரிதெனப் போற்றிய வரலாற்று புருஷர் இவர். தலைவனின் கனவினை நிறைவேற்ற, தமிழனுக்கென்று ஒரு தனி விமானப் படை அமைத்திட கால்கோள் இட்டவரும் இவரே.

கிளைடரில் தொடக்கப் புள்ளி இட்டு இன்று கிபீருடன் மோதும் வல்லமை பெற்றுள்ளது இந்த வான்புலிப் படை. இதன் முழுப் பரிமாணமும் இறுதிப் போரிலேயே வெளிப்படும். இந்த ராஜகீரிகளின் வரவினை எதிரிகளும் பிராந்திய நலன்சார் கூட்டங்களும் திகைப்புடன் எதிர்பார்க்கின்றனர்.

தம்பியின் இலட்சியக் கனவுக்கு அண்ணன் சங்கர் அத்திவாரமிட்டு, ஆழ ஊடுருவும் புறமுதுகுக் கோழைகளால் வீழ்த்தப்பட, அண்ணனின் பணியைத் தொடர்ந்த தம்பி, அப்படையின் முழுப்பரிமாணத்தையும் நிறைவு பெறச் செய்துள்ளார்.

அண்ணன் பாதை போட, தம்பி நகரத்தையே நிர்மாணம் செய்துள்ளார்.

போராடக் கற்றலும் கற்பதற்காக போராடுதலுமே இவர் வழிமுறiயாகும்.

ஆச்சரியக்குறிகள் முற்றுப் புள்ளியாக மாறும் காலத்திலேயே இவர்களின் இலட்சியம் நிறைவேறும். வாழ்விற்கான அர்த்தங்களைத் தேடியலைபவர்கள் இவர்களின் வாழ்க்கையைத் தம்முடன் உரசிப் பார்த்தாலே புத்தொளி பிறக்கும்.

இலட்சிய நோக்கினை நிறைவேற்றும் பாதையில் முன்பு பலர் உண்ணாநிலைப் போராட்டத்தைக் கடைப்பிடித்தாலும் அதை முழுமை பெறச் செய்ததுடன் அதாவது நீர் அருந்தாமல் தனது இன்னுயிரைத் துறந்தது வரலாற்றில் திலீபனாகத்தான் இருக்க முடியும்.

இந்திய வல்லரசுடன் மோதும் ஆத்ம பலத்தைக் கொடுத்ததும் இவனது இழப்பே. சோசலிசப் போராட்டத்தில் மட்டுமல்லாது தேசிய விடுதலைப் போரிலும் ஒட்டுமொத்த மக்கள் புரட்சிக்கான புதிய பரிமாண வடிவம் இணைந்துள்ளதென்பதை உரத்த குரலில் செய்தி சொன்னவனும் இவனே.

மலரும் தமிழீழத்தை வானத்திலிருது திலீபன் மட்டுமல்ல, சங்கரின் வான்பறவைகளும் தரிசிக்கத்தான் போகின்றன.

திலீபன் கண்ட மக்கள் புரட்சிக்கனவினை நிஜமாக்க தலைவனால் உருவாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் படையணியே வாழும் சான்றாகும்.

உலகப் போராட்ட வரலாறுகளில் பதிவு செய்யப்பட்ட அனைத்துக் கொடூரங்களும் எம்மண்ணில் மீளவும் நிறைவேற்றப்படுகின்றன. எல்சல்வடோர் நாட்டில் நிகழ்ந்த வீதிப் படுகொலைகள், சிறிலங்கா அரசால் தற்போதும் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளத

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய இந்துஸ்தான் பத்திரிகையில் வந்தசெய்தி

LTTE fighters fast in memory of Thileepan

Thousands of fighting cadres of the LTTE fasted on Monday in memory of the "martyrdom" of Lt Col Thileepan, who fasted unto death in September 1987, on a five-point charter of demands addressed to India, which had sent a Peace Keeping Force (IPKF) to implement the India-Sri Lanka Accord in July that year.

The mass fasting took place even as the LTTE set off a claymore mine in Poovarasankulam near Vavuniya in North Western Sri Lanka killing a Sri Lankan Airman, and the Sri Lankan Air Force sent a Kfir supersonic bomber to pound a LTTE-held village in Mannar in a retaliatory strike.

Young Thileepan, who was popular among the students of Jaffna and was responsible for bringing women into the LTTE, died on September 26 in Nallur in Jaffna, after a 12-day fast over demands, which the LTTE had placed before the then Indian High Commissioner JN Dixit.

The five demands were: Release all political prisoners held under Sri Lanka's anti-terrorism law; halt all new settlement of ethnic Sinhalas in the Tamil Homeland (the North Eastern districts); stop the opening of new Sri Lankan police stations in the North East; disarm Tamil groups armed by the Sri Lankan government; and remove the Sri Lankan army from schools in the North East.

"All are reasonable demands put to a Peace Keeping Force. Thileepan died, his demands unheeded," said a release from the LTTE's Peace Secretariat on Monday.

"Majority of the LTTE poralees (fighters) fast on this day of September 26 each year to remember Lt Col Thileepan," the release said.

Significantly, the LTTE Supremo, Velupillai Prabhakaran, reportedly prefers to observe his birthday, which falls in November, by fasting rather than rejoicing.

  • 5 months later...

தியாக தீபம் திலீபன்,இராசையா பாத்தீபன்

தோற்றம் - 27.11.1963

மறைவு - 26.09.1987

வீரச்சாவுக்குமுன் தியாகி திலீபன்

ஆற்றிய இறுதி உரையிலிருந்து…

“என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக்கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன்.

…… நான் நேசித்த தமிழீழ மண்ணில் வாழ்கின்ற ஒவ்வோர் மக்களும் இந்தப் பெரும் புரட்சிக்குத் தயாராக வேண்டும் எனது இறுதி ஆசை இதுதான்.

வெகு பெரும்பணியை உங்களிடம் விட்டுச் செல்கிறேன். நான் மிகவும் நேசித்த என் தோழர்கள் என் சகோதரிகள் எல்லாவற்றிலும் மேலாக என் தலைவன் திரு. பிரபாகரன் அவர்கள் உங்களுடன் இருக்கிறார். நீங்கள் பரிபூரணமாகக் கிளர்ந்தெழவேண்டும். மாபெரும் மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! இப் புரட்சி நாள் என்னுயிருக்கு மேலாக நேசிக்கும் என் மக்களுக்குக் கிடைக்கட்டும். எமது எதிர்கால சந்ததி வாழ ஒரு நாடு தேவை. அல்லாவிட்டால் நாளை எங்களைப் போல்தான் எமது எதிர்கால சந்ததியும் துன்பப்படும் வருத்தப்படும்”

‘மக்கள் புரட்சி வெடிக்கட்டும்! சுதந்திரத் தமிழீழம் மலரட்டும்” - என்று அறைகூவி, தன் மக்களுக்காகத் தன்னையே அர்ப்பணித்த தியாகச் செம்மல் மாவீரன் திலீபனின் பதினாறாவது நினைவாண்டுத் தினம் நெருங்குகின்ற இவ்வேளையில், நெக்குருகி நினைவஞ்சலி செலுத்தி அவனது வரலாற்றை எண்ணிப் பார்க்க விழைகின்றோம்.நல்லூர்க் கந்தசுவாமி கோவில் வீதியில், ஓருயிர் தன்னைத் தானே சிலுவையி;ல் அறைந்து கொண்டது. சாவைச் சந்திப்பதிற்கு அந்த உயிர் தன்கையில் எடுத்த ஆயுதம், அகிம்சை என்று அழைக்கப்படுகின்ற கோட்பாட்டை! பல்லாயிரக்கணக்கான மக்கள் பரிதவித்துப் பார்த்திருக்க, தன் உடலையும், உயிரையும் துடிக்கத் துடிக்கத் தற்கொடையாக்கிய ஒரு மாவீரனின் தியாகம், எமது இனத்திற்கு ஊட்டிய விழிப்புணர்வை, அந்த விழிப்புணர்வின் தேவையை, நாம் இந்த வேளையில் இந்தக் காலகட்டத்தில் கருத்தில் கொள்வது பொருத்தமானது மட்டுமல்ல - அவசியமானதும் கூட! பதினாறு ஆண்டுகளுக்கு முன்பு இந்தியா, தமிழீழத்தவரின் தேசியப் பிரச்சனையில் வெளிப்படையாக நேரடியாகத் தலையிட்ட போது, எமது மக்கள் நெஞ்சங்களில், இந்தியா ஒரு நம்பிக்கைக்குரிய இரட்சகனாகவே தோன்றியது. ‘அகிம்சை என்னும் கோட்பாட்டின் அடிப்படையில் அல்லது அகிம்சை என்னும் தத்துவத்தின் அடிப்படையில் நவ இந்தியா தனது அரசியல் கட்டமைப்பை உருவாக்கியுள்ளது” என்ற பிரமையை, அல்லது மாயையை இந்தியா ஆட்சி பீடங்கள் தோற்றுவித்திருந்தன. அகிம்சை என்ற தத்துவத்தின் உயர்வான கொள்கைகளும் நீதிகளும், உண்மையாகவே பேணப்படுகின்றன என்று இந்தியப் பொது மக்கள் மட்டுமல்ல, தமிழீழப் பொதுமக்களும் மனமார நம்பினார்கள். அகிம்சைக் கோட்பாட்டின் மூலம், நீதியை வென்றெடுக்கலாம், நியாயத்தை நிலைநாட்டலாம் என்று, நம்மவர்களும் நம்பியிருந்த காலம் அது!அகிம்சை என்ற கோட்பாடு குறித்தோ அல்லது அகிம்சை என்ற தத்துவம் குறித்தோ இப்போது தர்க்கிப்பது அல்ல எமது நோக்கம்! அகிம்சை என்ற கோட்பாடு, ~சரியா-பிழையா| அல்லது ~சரிவருமா - சரிவராத| என்று விவாதிப்பதற்கும் நாம் இப்போது முன்வரவில்லை. நாம் சொல்ல விழைவது அல்லது வற்புறுத்திச் சொல்ல விழைவது என்னவென்றால், ‘அகிம்சைத் தத்துவத்தின் அடிப்படையில் தான் நவ இந்தியா செயல்பட்டு வருவதாக, இந்தியஅரசுகள் பறைசாற்றி? வந்தாலும் அவை உண்மையில், அகிம்சைத் தத்துவத்திற்கு எதிராகத்தான் செயல்பட்டு வருகின்றன - வந்திருக்கின்றன என்பதுதான்! அதாவது, மஹாத்மா காந்தியின் அகிம்சை வாதத் தத்துவத்தைத் தனது அடிப்படை அரசியல் கொள்கையாக வரித்திருப்பதாக, இந்தியா மேலோட்டமாக முழங்கி வந்தாலும், உண்மையில், இந்தியா தனது அகிம்சைத் தத்துவத்திற்கு எதிராகத்தான் செயல்பட்டு வந்திருக்கின்றது - வருகின்றது, என்பதை நாம் இங்கே வலியுறுத்திக் குறிப்பிட விரும்புகின்றோம்! நாம் இங்கே வெறும் வாயால் வலியுறுத்திக் கூறுவதை, தனது உடலால் உயிரால் வலியுறுத்திக் காட்டி நிரூபித்தவன்தான் எமது தியாகச் செம்மல் திலீபன்.‘சிங்கள அரசுகளுக்கு எதிராக உண்ணாவிரதம் போராட்டங்களை அகிம்சைப் போராட்டங்களை நடாத்தி, எமது உரிமைகளை வென்றெடுப்போம்| என்று - இன்று - யாராவது கருத்து வெளியிட்டால், அது நகைப்புக்கு இடமாகும் என்பதில் சந்தேகமில்லை. அதனை வரலாறு காட்டி நிற்கின்றது. அதனை நமது மக்களும் பட்டறிவினால் உணர்ந்துள்ளார்கள். ‘சிறிலங்கா அரசாங்களுக்கு எதிராக நடாத்தப்படும், அகிம்சைப் போராட்டம் வெற்றி பெறாது” என்பதை, அகிம்சைத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்டுள்ள எம்மவர்களும் ஒப்புக்கொள்வார்கள்!ஆனால் அகிம்சைப் போராட்ட விடயத்தில் இந்தியா மீது எமது மக்கள் கொண்டிருந்த நம்பிக்கையோ வித்தியாசமானது!‘அகிம்சைப் போராட்டங்களை - சாத்வீகப் போராட்டங்களை - உண்ணாவிரதப் போராட்டங்களை - இந்தியா மதிக்கும்! ஏனென்றால் இந்தியாவின் அடிப்படைத்தத்துவம் - ஆன்மீகத் தத்துவம் - உயர்வான தத்துவம் - யாவுமே அகிம்சைக் கோட்பாடுதான்! ஆகவே, சிங்கள இனவெறி அரசுகள் எமது அகிம்சைப் போராட்டங்களை அலட்சியம் செய்து, வன்முறையால் அடக்கியது போல், இந்தியா செய்யாது! அது எமது அகிம்சைப் போராட்;டங்களைச் செவி மடுக்கும்! போராட்ட நியாயங்களுக்குத் தலை வணங்கும்!” என்று எமது தமிழினம் சத்தியமகவே நம்பியது. அந்த நம்பிக்கையில், தனது எதிர்காலத்தைப் பணயம் வைக்கவும், எமது தமிழினம் தயாராக நின்றிருந்த வேளை, அந்த 1987!அந்த வேளையில்தான் எமது இனத்தின் விடுதலைக்கான பாதை, எந்தத் திசை நோக்கி எவ்வாறு இருக்க வேண்டும் என்பதைக் காட்டுவதற்காக தனியொருவனாக ஒரு புலி வீரன் புறப்பட்டான். அதற்காக அவன் அன்று எந்திய ஆயுதம் இந்தியாவின் அதே அகிம்சை ஆயுதம்!இன்றுகூட, இந்தியாவின் அழுத்தம் - இங்கிலாந்தின் அழுத்தம் அமெரிக்காவின் அழுத்தம்| என்று பிரச்சார அழுத்தங்கள் பரப்புரை அழுத்தங்கள் மேற்கொள்ளப்படுவதை நாம் காணக்கூடியதாக உள்ளது. ஆனால், தியாகி திலீபன் ஒரு செய்தியை, வெளிப்படையாகப் பிரகடனம் செய்தான்! அந்தப் பிரகடனத்தைச் செய்வதற்கு அதனை நிரூபணம் செய்வதற்கு அவன் தன்னையே தாரை வார்த்தான்!அவன் சொன்ன - செய்தி என்ன,‘இந்த இனம் - இந்தத் தமிழினம் அடங்காது! அது போராடும்! ஆயுதம் இல்லாவிட்டாலும் அது போராடும்! புல்லையும் எடுத்து அது போராடும்! அடக்கு முறைக்கு அது வளைந்து கொடுக்காது! பேரம் பேசாது - விட்டுக் கொடுக்காது! ஆயுதம் இல்லாவிட்டாலும் - உணவு இல்லாவிட்டாலும் இந்த இனம் தலை வணங்காது! அது தொடர்ந்து போராடும்! தன்னுடைய விடுதலைக்காக - நியாயத்திற்காக - நீதிக்காக - அது எந்த சக்தியையும் எதிர்த்துப் போராடும்!திலீபன் போராடினான்! சாவைச் சந்தித்தான்! ஒரு புதிய விழிப்புணர்வை அவன் எமக்கு ஊட்டினான்! ஆகிம்சைப் போராட்டத்தில் அவன் உண்ணாவிரதமிருந்தான்! போராட்டதிற்குப் பசித்தது! - அவனே உணவானான்! இலங்கை - இந்திய ஒப்பந்தம் முறையாகச் செயல்படுத்தப் படாது மட்டுமல்ல, எதிர் மறையான விடயங்கள் அமுலாக்கப்பட்டுக் கொண்டிருந்த காலகட்டம். சிறிலங்கா அரசிடம் சாத்வீக முறையில் நீதி கேட்டுப் போராட முடியாது என்பதை விடுதலைப்புலிகள் நன்கு உணர்ந்திருந்தார்கள். ‘தமிழீழ இடைக்கால நிர்வாகம் விடுதலைப்புலிகளிடம் கையளிக்கப்பட வேண்டும்@ தமிழீழப் பிரதேசத்தில், சிறிலங்கா அரசு பொலிஸ் நிலையங்களை அமைத்தல் நிறுத்தப்பட வேண்டும்;; புனர்வாழ்வு என்ற போர்வையில் மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் சிறையில் வாடுகின்ற தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும் ஊர்காவல் படையினரிடம் உள்ள ஆயுதங்கள் பறிக்கப்படுவதுடன், தமிழ்க் கிராமங்கள், பாடசாலைகள் ஆகியவற்றில் உள்ள இராணுவ முகாம்கள் மூடப்பட வேண்டும்” என்ற கோரிக்கைகளை முன் வைத்து, செப்டம்பர் மாதம் 15ம் திகதி 1987ம் ஆண்டு, திலீபன் சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை ஆரம்பித்தான்! நவ இந்தியாவிடம் நீதிகேட்டு அவன் தன் அகிம்சைப் போராட்டத்தைத் தொடங்கினான்!இந்த ஜந்து கோரிக்கைகள் புதிதானவை அல்ல! ஏற்கனவே இந்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையான விடயங்கள் தாம் அவை! இவற்றை நிறைவேற்றுவதற்காக உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்;கிய தியாதி திலீபனின் மன உறுதிபற்றிக் கட்டாயம் குறிப்பிட்டேயாக வேண்டும்.உறுதி என்றால் எப்படிப்பட்ட உறுதி! எடுத்த காரியத்திற்காக இறுதி மூச்சு உள்ளவரை, உறுதியோடு போராடுகின்ற, உளவலிமையுள்ள இலட்சிய உறுதி!‘சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முடிவு செய்த போது, ஒரு சொட்டுத் தண்ணீரையும் உட்கொள்ளாமல், உண்ணாவிரதத்தை மேற் கொள்ள வேண்டும்” என்று திலீபன் முடிவெடுத்தான். அந்த முடிவில் அவன் உறுதியாக இருந்தான். அவனுடைய அந்த இறுக்கமான முடிவுக்கு, தமிழீழத் தேசியத் தலைவர் சம்பந்தப்பட்ட நிகழ்வு ஒன்று காரணமாக அமைந்தது!1986ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் போது, தமிழ்நாட்டிலிருந்து தலைவர் பிரபாகரனின் தொலைத் தொடர்புச் சாதனங்களை, இந்தியா பறிமுதல் செய்தது. இதனால் தலைவர் கடும் சினம் கொண்டார். தொலைத் தொடர்;புச் சாதனங்களை இந்தியா அரசு திரும்பத் தரும்வரைக்கும், ஒரு சொட்டுத் தண்ணீரும் அருந்தாமல், சாகும் வரையிலான உண்ணாவிரதத்தைத் தலைவர் பிரபாகரன் உடனேயே ஆரம்பித்தார்.அப்போது நடைபெற்ற விடயங்களை எமது நேயர்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.உடனடியாகத் தலைவர் ஆரம்பித்த சாகும்வரையிலான உண்ணாவிரதப் போராட்டத்தை, ஒரு நாள் கழித்தாவது ஆரம்பிக்கும்படி, இயக்கப் பிரமுகர்களும், போராளிகளும் தலைவரைக் கெஞ்சினார்கள். அந்த ஒரு நாள் அவகாசத்தில், தமிழக மக்களுக்கும் தமிழக அரசியல்வாதிகளுக்கும், வெகு சன ஊடகங்களுக்கும் இந்த உண்ணாவிரதம் குறித்து அறிவித்த பின்னர், தலைவர் உண்ணாவிரதத்தை ஆரம்பிக்கலாமே - என்று கூட அவர்கள் வாதிட்டார்கள்! அந்த ஆலோசனையைத் திட்டமாக மறத்துவிட்ட தமிழீழத் தேசியத் தலைவர், அவர்களுக்குக் கூறிய பதில் இதுதான்!‘இல்லை, நீங்கள் சொல்வது ஓர் அரசியல் நாடகம்! எனக்கு அது தேவையில்லை. நான் இந்த நிமிடம், இந்த வினாடியிலிருந்து, ஓரு சொட்டுத் தண்ணீரும் அருந்தாமல், சாகும்வரை உண்ணாவிரதத்தை ஆரம்பித்து விட்டேன். இந்திய அரசு எமது தொலைத் தொடர்புச் சாதனங்களைத் திருப்பித் தரும் வரைக்கும், அல்லது எனது உயிர் போகும் வரைக்கும், எனது போராட்டம் தொடர்ந்து நடைபெறும்.ஆனால் 48 மணித்தியாலங்களுக்குள் இந்தியா அரசு பணிந்தது. தொலைத் தொடர்புச் சாதனங்கள், தலைவர் தங்கியிருந்த வீட்டிலேயே கொண்டு வந்து தரப்பட்டன. தலைவர் தனது உண்ணாவிரதத்தை முடித்தார்.இந்த இலட்சிய உறுதிதான் தியாகி திலீபனிடமும் படிந்திருந்தது. தனது தலைவன் முன்னோடியாக நின்று வழிகாட்டிப் போராடியதை, அவன் அடுத்த ஆண்டில் 1987இல் நடாத்தினான். ~ஒரு சொட்டு நீரும் அருந்தாமல், தனது உண்ணவிரதத்தை ஆரம்பிக்கப் போகின்றேன்| என்று திலீபன் அறிவித்தபோது தலைவர் பிரபாகரன் அவனிடம் ஒரு வேண்டுகோளை விடுத்தார். ‘தண்ணீரையாவது குடித்து, உண்ணாவிரதத்தைத் தொடரலாம்” என்று தலைவர் பிரபாகரன், திலீபனைக் கேட்டுக் கொண்டார்.அதற்குத் திலிபன், தலைவரிடம் ஒரு பதில் கேள்வி கேட்டான்! ‘அண்ணா, ஆனால் நீங்கள் அப்படிச் செய்ய வில்லையே? நீங்களும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட அருந்தாமல்தானே, சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டீர்கள்? என்னை மட்டும் ஏன் தண்ணீர் அருந்தச் சொல்கின்றீர்கள்?”.உயர்ந்தவர்களிடம் மட்டும் காணக்கூடிய இலட்சிய உறுதி அது!தியாகி திலீபனின் மரணமும் வித்தியாசமான ஒன்றுதான்! அவனுடைய உறுதியான இலட்சியத்தை இயக்கம் உணர்ந்திருந்தது - தமிழ் மக்களும் உணர்ந்திருந்தார்கள். இந்திய அரசு, திலீபனின் கோரிக்கைகளுக்கு இணங்காத பட்சத்தில், திலீபன் கட்டாயம் சாவைத் தழுவிக் கொள்வான் என்று எல்லோருக்குமே தெரிந்திருந்தது. அதனால்தான் அவன் உண்ணாவிரதமிருந்த போதே, அவன் மீது இரங்கற் பா பாடப்பட்டது. அவன் உயிரோடிருந்த போதே, அவன் எதிர்கொள்ளப் போகும் சாவுக்காக மக்கள் கலங்கி நின்றார்கள்.‘திலீபன் அழைப்பது சாவையா - இந்தச் சின்ன வயதில் அது தேவையா

திலீபனின் உயிரை அளிப்பாரா - அவன்செத்தபின் மாற்றார் பிழைப்பாரா” என்று குமுறினார் உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள்.‘ விண்ணிருந்து பார்ப்பேன் விடுதலையை என்ற மகன்

கண்ணெதிரே இந்தக் கட்டிலிலே முடிகின்றான்

பத்தோடு ஒன்றா - இவன் பாடையிலே போவதற்கு

சொத்தல்லோ - எங்கள் சுகமல்லோதாலாட்டுப் பாட்டில் தமிழ் தந்த தாய்க்குலமே

போராட்ட வீரன் போய்முடியப் போகின்றான் -

போய் முடியப் போகின்றான்…

போய் முடியப் போகின்றான்..என்று புதுவை இரத்தினதுரை அவர்களும் கதறிப்பாடியதை, கால வெள்ளம் அழித்திடுமா என்ன?இப்போது மீண்டும் ஒரு சமாதானத்திற்கான காலம்! இப்போதும் ஒரு குழப்பம்! இந்திய அரசு, தமிழர்களுக்கு ஏதும் பெற்றுத்தரும் - என்று நம்மவர்கள் கொண்டிருந்த எண்ணம் பிழையானது” என்பதை நிரூபிக்க, ஓர் உயிர் சாவைச் சந்தித்தது. அச்சாவு மக்களுக்கு ஒரு விழிப்புணர்வை ஊட்டியது. இப்போது - சிறிலங்கா அரசு ஏதேனும் தரும் என்ற எண்ணம் முளைவிட்டுள்ளது. இப்படிப்பட்ட சிந்தனைக்குரிய பதிலை, முன்னோடி உதாரணமாகத் தியாகி திலீபன் தந்துள்ளான் - மீண்டும் ஓர் உதாரணம் எமக்கு வேண்டாம்!

புலிக்குப் பசித்தால் அது புல்லைச் சாப்பிடாதுதான்! ஆனால் அது புல்லையும் ஓர் ஆயுதமாகப் பாவிக்கும்! பேரினவாதம் எமக்கு எதையும் தந்துவிடாது என்பதைத் தியாகி திலீபனின் தியாகித்தினூடே நாம் கண்டு கொண்டுள்ளோம்! என் அன்புத் தமிழ்மக்களே, விழிப்பாக இருங்கள் - விழிப்பாக இருங்கள்” என்று சொன்ன திலீபன், அந்த விழிப்புணர்ச்சி எமக்கு ஏற்பட வேண்டும் என்பதற்காக, தன்விழி மூடி வீரச் சாவடைந்தான். அவன் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இக்காலகட்டத்தில், நாமும் விழிப்பாக இருந்து, எமது தேசியத் தலைமையைப் பலப்படுத்துவதே நாம் அவனுக்குச் செய்யக்கூடிய உண்மையான அஞ்சலியாகும்! தியாகி திலீபனுக்கு எனது சிரம் தாழ்த்திய அக வணக்கம்!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வானவில் வெட்டி ஒட்டும் போது அதை எங்கிருந்து வெட்டினீர்கள் என்று குறிப்பிட்டீர்கள் என்றால் நன்றாக இருக்கும். யாழ்கள விதிகளில் அதுவும் ஒன்று.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.