Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

மாகாண சபைத் தேர்தல் முடிவுகள்

அம்பாந்தோட்டை மாவட்டம் பெலியத்த தேர்தல் தொகுதி முடிவுகள்

 
 
Submitted by ceditor on Sun, 03/30/2014 - 00:47
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 32,393
 
ஐக்கிய தேசிய கட்சி - 9,657
 
மக்கள் விடுதலை முன்னணி - 5,521
 
ஜனநாயக கட்சி - 2,173
 

அம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதி முடிவுகள்
 
Submitted by ceditor on Sun, 03/30/2014 - 02:03
அம்பாந்தோட்டை மாவட்டம் திஸ்ஸமஹாராம தேர்தல் தொகுதி முடிவுகள்
 
ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு - 54731 வாக்குகள்
ஐக்கிய தேசிய கட்சி - 35294 வாக்குகள்
மக்கள் விடுதலை முன்னணி - 13665 வாக்குகள்
ஜனநாயக கட்சி - 1551 வாக்குகள்
 
  • கருத்துக்கள உறவுகள்

மீண்டும் ஒரு படு தோல்வியை நோக்கி ஐக்கிய தேசிய கட்சி?

  • கருத்துக்கள உறவுகள்

எந்தவொரு சந்தர்ப்பத்திலும் பெரும்பாலான சிங்கள மக்கள் மகிந்தவையும் அய்க்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பினையும் நிராகரிக்கப்போவதில்லை. இன்னும் எத்தனை தேர்தல்கள் வந்தாலும் மகிந்த வெல்லப்போவது உறுதி.

 

புலிகள் தந்த வரம் அது!!!

அவர்  அப்ப அமெரிக்கா வால தான் வீட்ட அனுப்ப படுவார் போல கிடக்கு.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தென் மாகாணத்தின் இரண்டு முக்கிய மாவட்டங்களில் ஆளும் கட்சி அமோக வெற்றி- இணைப்பு 6
30 மார்ச் 2014 தென் மாகாணத்தின் இரண்டு முக்கிய மாவட்டங்களில் ஆளும் கட்சி அமோக வெற்றியீட்டியுள்ளது. ஹம்பாந்தோட்டை மற்றும் மாத்தறை ஆகிய இரண்டு மாவட்டங்களில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது. மாத்தறை மாவட்ட முடிவுகள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 231102 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி 96297 வாக்குகள்
ஜே.வி.பி 39158 வாக்குகள்
ஜனநாயகக் கட்சி 20501 வாக்குகள்

இதன்படி, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்ப பத்து ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி நான்கு ஆசனங்களையும், ஜே.வி.பி இரண்டு ஆசனங்களையும், ஜனநாயகக் கட்சி ஒரு ஆசனத்தையும் பெற்றுக் கொண்டுள்ளது. இதேவேளை, ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு வெற்றியீட்டியுள்ளது.

ஹம்பாந்தோட்டை மாவட்ட வாக்கு விபரங்கள்
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 174687 வாக்குகள்
ஐக்கிய தேசியக் கட்சி    79829 வாக்குகள்
ஜே.வி.பி  39345 வாக்குகள்

இதன்படி, ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு எட்டு ஆசனங்களையும், ஐக்கிய தேசியக் கட்சி நான்கு ஆசனங்களையும், ஜே.வி.பி இரண்டு ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.

 

 

 

 

ஹம்பாந்தோட்டை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள்

மேல் மற்றும் தென் மாகாண சபைத் தேர்தலில்  முதலாவது தபால் மூல தேர்தல் முடிவு வெளியாகியுள்ளது. 

அதன்படி, ஹம்பாந்தோட்டை மாவட்ட தபால் மூல வாக்களிப்பு முடிவுகள் வருமாறு, 

ஐ.ம.சு.மு - 7527
ஐ.தே.க - 1761
ஜே.வி.பி - 1440
ஜ.க - 943


http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/104927/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

தேர்தலை திட்டமிட்டுத்தான் நடத்தியுள்ளார்கள்..! :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

தெற்கில் யார் வந்தாலும் எங்களுக்கு நன்மை இல்லை. வேண்டுமானால் இன்னும் 20 வருடங்கள் ஆண்டு போட்டு போகட்டும். அதற்கிடையில் நாம் அடைய வேண்டியதை அடைந்து விட வேண்டும்

  • கருத்துக்கள உறவுகள்

தீர்மானம் நிறைவேறிய நிலையில், இலங்கை மக்கள் ராஜபக்சவுக்குத்தான் இன்னும் ஆதரவு என்பதை ஜனநாயக வழியில் வெளிப்படுத்தியுள்ளன இந்தத் தேர்தல் முடிவுகள். இது மேற்குலகின் வியூகங்களுக்கு விடப்பட்ட ஒரு குத்து.. :huh::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
சொந்த மாவட்டத்தில் மகிந்தவின் வாக்கு வங்கி கணிசமாக வீழ்ச்சி
மார் 30, 2014
 
தென்மாகாணசபைக்கு நேற்று நடந்த தேர்தலில் சிறிலங்கா அதிபரின் சொந்த மாவட்டமான, அம்பாந்தோட்டையில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றி பெற்றுள்ள போதிலும், அதன் வாக்கு வங்கி கணிசமாக வீழ்ச்சியடைந்துள்ளது.
 
2009ம் ஆண்டு நடத்தப்பட்ட மாகாணசபைத் தேர்தலில், அம்பாந்தாட்டை மாவட்டத்தில் இருந்து 12 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இம்முறை 14 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
 
கடந்த தேர்தலில் 192,961 (66.95%) வாக்குகளைப் பெற்று 8 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணிக்கு, இந்த முறையும் 8 ஆசனங்கள் கிடைத்துள்ளன. ஆனால், 174,687 (57.42%) வாக்குகளையே ஆளும்கட்சியால் இம்முறை பெற முடிந்துள்ளது.
 
இதன்படி, சுமார் 18 ஆயிரம் வாக்குகளை ஆளும்கட்சி இம்முறை இழந்துள்ளது. அதேவேளை, ஐதேக, ஜேவிபி, ஆகிய கட்சிகளுக்கு செல்வாக்கு அதிகரித்துள்ளது. கடந்த தேர்தலில், 62,391 (21.65%) வாக்குகளுடன் 3 ஆசனங்களைக் கைப்பற்றிய ஐதேகவுக்கு, இம்முறை, 4 ஆசனங்கள் கிடைத்துள்ளதுடன், 79,829 (26.24%) வாக்குகைளையும் அந்தக் கட்சி பெற்றுள்ளது.
 
இதன்படி, ஐதேகவுக்கு சுமார் 17,500 வாக்குகள் அதிகமாக கிடைத்துள்ளது. கடந்த 2009ம் ஆண்டு தேர்தலில் 31,734 (11.01%) வாக்குகளுடன் 1 ஆசனத்தைப் பெற்ற ஜேவிபிக்கு இம்முறை 2 ஆசனங்கள் கிடைத்துள்ளன. அத்துடன், ஜேவிபிக்கு கிடைத்த வாக்குகளும் 39,345 (12.93%) ஆக அதிகரித்துள்ளது. அதேவேளை, சிறிலங்கா அதிபரின் சொந்த மாவட்டமான அம்பாந்தோட்டையில், சரத் பொன்சேகாவின் ஜனநாயக கட்சியால் பிரகாசிக்க முடியவில்லை. முதல்முறையாக தென்மாகாணசபைத் தேர்தலைச் சந்தித்த அவரது கட்சிக்கு 9,547 (3.14%) வாக்குகள் தான் கிடைத்துள்ளன, எந்தவொரு ஆசனமும் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 
ஜெனிவா தீர்மானத்தை முன்னிறுத்தி அரசதரப்பு பரப்புரைகளை முன்னெடுத்த போதும், சிறிலங்கா அதிபரின் சொந்த மாவட்டத்திலேயே ஆளும்கட்சியின் வாக்கு வங்கிக்கு இந்தச் சரிவு ஏற்பட்டுள்ளது. 
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
மேல், தென் மாகாணசபைகளை மீளக் கைப்பற்றியது ஆளும்கட்சி! – கொழும்பில் மனோ கணேசனுக்கு 2 ஆசனங்கள். 
[sunday, 2014-03-30 18:48:25]
 
நேற்று நடந்த தென் மற்றும் மேல் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியுள்ளது. நேற்றைய தினம் நடைபெற்ற மேல் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மொத்தமாக மூன்று மாவட்டங்களிலும் 56 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.ஐக்கிய தேசியக்கட்சி 28 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஜனநாயகக் கட்சி 9 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளதுடன், ஜே.வி.பி. 6 ஆசனங்களையம், மனோ கணேசனின் ஜனநாயக மக்கள் முன்னணி 2 ஆசனங்களையும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 2 ஆசனங்களையும், அகில இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் 1 ஆசனத்தையும் பெற்றுக்கொண்டுள்ளது.
 
  
கம்பஹா மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 582,668 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 23 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 249,220 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 10 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.ஜனநாயகக் கட்சி 88,557 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 4 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஜே.வி.பி. 56,405 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 2 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 17,296 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
 
களுத்துறை மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 337,924 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 13 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 144,924 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 06 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஜனநாயகக் கட்சி 43,685 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 2 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஜே.வி.பி. 25,366 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
 
கொழும்பு மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 443083 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 18 ஆசனங்களைக் கைப்பற்றியுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி 285538 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 12 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது. ஜே.வி.பி. 74,437 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 3 ஆசனங்களை பெற்றுக்கொண்டுள்ளது. ஜனநாயகக் கட்சி 71,525 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 3 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது. ஜனநாயக மக்கள் முன்னணி 44,156 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 2 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது.ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 20,163 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 1 ஆசனத்தைப்; பெற்றுக்கொண்டுள்ளது.அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் 15,491 வாக்குகளைப் பெற்றுக் கொண்டு 1 ஆசனத்தைப் பெற்றுக்கொண்டுள்ளது.
 
அதேவேளை, தென் மாகாணசபைத் தேர்தலிலும் ஆளும் கட்சி வெற்றியீட்டியுள்ளது.நேற்றைய தினம் நடைபெற்ற தென் மாகாணசபைத் தேர்தலில் அனைத்து மாவட்டங்களிலும் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெற்றியீட்டியுள்ளது.தென் மாகாணசபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி போனஸ் ஆசனங்களுடன் 33 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.ஐக்கிய தேசியக் கட்சி 14 ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளது.ஜே.வி.பி ஐந்து ஆசனங்களையும், ஜனநாயகக் கட்சி மூன்று ஆசனங்களையும் பெற்றுக் கொண்டுள்ளது.
 
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மாத்தறை மாவட்டத்தில் 293619 வாக்குகளுடன், 13 ஆசனங்களையும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 174687 வாக்குகளுடன், 8 ஆசனங்களையும், காலி மாவட்டத்தில் 231102 வாக்குகளுடன், 13 ஆசனங்களையும் பெற்றுக்கொண்டுள்ளது.http://seithy.com/breifNews.php?newsID=106768&category=TamilNews&language=tamil

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.