Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கோத்தாபய நாமல் ராஜபக்ஸக்களைத் தொடர்ந்து பசிலும் களமிறங்கினார் - சுண்டிக்குளத்தில் சிங்கள குடியேற்றம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

சுந்தரம் அருமைநாயகம் தலைமையிலான குழுவினர் பூரண ஒத்துழைப்பு:- குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:-

 

வடமராட்சி கிழக்கின் சுண்டிக்குளம் பகுதியில் பெருமெடுப்பிலான சிங்கள குடியேற்றம் மற்றும் சுற்றுலா விடுதிகளை அமைக்கும் முயற்சிகள் ஆரம்பமாகியுள்ளது. வடக்கில் கோத்தா மற்றும் நாமல் ராஜபக்ஸ தரப்புக்கள் தமது முதலீடுகளை விஸ்தரித்துவருகின்ற நிலையில் தற்போது ஓட்டப்பந்தயத்தில் பிந்தி ஓடி வந்து பஸில்ராஜபக்சவும் இணைந்துள்ளார்.


இதன் பிரகாரம் சுண்டிக்குளம் பகுதியில் சுமார் பத்து கிலோமீற்றர் நீளமுள்ள கடற்கரையினை உள்ளடக்கி இந்த குடியேற்றம் மற்றும் சுற்றுலா விடுதிகள் அமையவுள்ளன. இப்பகுதியில் மீள் குடியமர்வதற்கான அனுமதியை பூர்வீக குடிகளான தமிழ் மக்களிற்கு நிராகரித்துள்ள அரசு மறுபுறம் இங்கு சிங்கள குடிகளை குடியமர்த்த முழு அளவினில் முயற்சிகளை அரங்கேற்றிவருகின்றது.


அவ்வகையில் பஸில் ராஜபக்ஸவின் கீழுள்ள அனர்த்த முகாமைத்துவ அமைச்சு இரண்டு நாள் அவசர பயிற்சி பட்டறையினை இப்பகுதியில் நேற்றும் நேற்று முன்தினமுமாக நடத்திவருகின்றது. கொழும்பினில் அலுவலக பணிக்கு செல்வதாக சொல்லிவிட்டு கடந்த இரண்டு நாட்களும் அங்கு தங்கியிருந்த யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் குறித்த பயிற்சிபட்டறைகளை முடித்து இன்று மதியமே செயலகம் திரும்பியுள்ளதாக அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன.


அத்துடன் முதல் நாள் அமர்வில் திடீரென சிறப்பு விருந்தினராக சென்றிருந்த பஸில்ராஜபக்ச அமர்வுகளை பார்வையிட்டுள்ளார். இவ்வமர்வுகளில் வடமராட்சி கிழக்கு பிரதேச செயலர் உள்ளிட்ட அதிகாரிகள் குழுவொன்று பங்கெடுத்துள்ளது. அத்துடன் யாழ்.மாவட்ட செயலகத்தில் செயற்படும் அனர்த்த முகாமைத்துவ பிரிவு அதிகாரிகளும் பங்கெடுத்துள்ளனர். எனினும் ஊடகங்களிற்கு ரகசியம் காக்க கோரப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.


வடமராட்சி கிழக்கின் கட்டைக்காட்டினை அண்டிய கேவில் பகுதியே இறுதி எல்லையாக மக்கள் மீளக்குடியமர அனுமதிக்கப்பட்டுள்ள பகுதியாகும். அதற்கு அடுத்து முல்லைதீவினை அண்டிய சுண்டிக்குளம் கரையோடு இணைந்த ஆழ்கடல் மற்றும் களப்புகளை கொண்ட பிரதேசமாகும். வடமராட்சியினை சேர்ந்த மீனவர்கள் கடந்த காலங்களில் வாடிகளை அமைத்து தங்கியிருந்து தொழிலில் ஈடுபடும் முக்கிய பகுதியாகவும் சுண்டிக்குளமே இருந்திருந்தது. எனினும் தற்போது உள்ளுர் மீனவர்கள் அங்கு செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன் மீள்குடியமர்வு அனுமதியும் மறுக்கப்பட்டுள்ளது.


எனினும் அங்கு நிலைகொண்டுள்ள படையினரது முழுமையான பாதுகாப்புடன் நூற்றுக்கணக்கான சிங்கள மீனவர்கள் படைமுகாம்களில் தங்கியிருந்து தொழில் நடவடிக்கைகளில் ஈடுபட்டுவருகின்றனர். இந்நிலையினிலேயே குறித்த பிரதேசத்தில் சுற்றுலா விடுதி மற்றும் இறால்பண்ணைகளை அமைப்பதற்கான திட்டங்கள் வகுக்கப்பட்டுவருகின்றமை அம்பலமாகியுள்ளது. அனர்த்தங்களை எதிர்கொள்ளும் வகையிலான கட்டடங்களை அமைத்தல் மற்றும் அது தொடர்பிலான விழிப்புணர்வினை குடியேற்றவாசிகளிற்கு வழங்குதல் எனும் தொனிப்பொருளிலேயே இச்செயலமர்வு இடம்பெற்றுள்ளது.


ஏற்கனவே கடற்படையினர்  மற்றும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள சுண்டிக்குளத்தின் எல்லையாகவுள்ள கேவில் பகுதியினில் புதிய நட்சத்திரவிடுதி ஒன்று அண்மையில் திறந்து வைக்கப்பட்டுள்ளதுடன் அங்கு சிங்கள சுற்றுலா பயணிகள் படைஎடுத்தும் வருகின்றனர். இதற்கு மேலதிகமாக நெடுந்தீவில் நாமல் ராஜபக்ஸவினது ஏற்பாட்டில் நட்சத்திரவிடுதி அமைப்பு பணிகள் ஆரம்பமாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

குளோபல் தமிழ்ச் செய்திகளின் விசேட செய்தியாளர்:-

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/105377/language/ta-IN/article.aspx

 

.

Edited by Athavan CH

"கொழும்பினில் அலுவலக பணிக்கு செல்வதாக சொல்லிவிட்டு கடந்த இரண்டு நாட்களும் அங்கு தங்கியிருந்த யாழ்.அரச அதிபர் சுந்தரம் அருமைநாயகம் குறித்த பயிற்சிபட்டறைகளை முடித்து இன்று மதியமே செயலகம் திரும்பியுள்ளதாக அவரது அலுவலக வட்டாரங்கள் தெரிவித்தன."

அரச மாமா. நல்ல மாமா.

வெறும் பத்தாயிரம் ரூபாக்கு நிலத்தை விக்குது மெத்தபடித்த பேதை.

  • கருத்துக்கள உறவுகள்

போகிற போக்கில்... இன்னும், 5 வருடங்களில்... வடபகுதியில் 20% தமிழர்கள் இருந்தால்... அதிசயம். :huh:  

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஆசிய கண்டத்தின் புளோரிடா வடமாகாணம்.......சிங்களவனுக்கு நல்லவடிவாத்தெரியும். எங்கடையள் பழையகதையளை சொல்லிச்சொல்லி காலத்தை கடத்தட்டும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.