Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வடக்கில் உள்ள அனைவரும் புலிகளே-அனைத்து புலிகளையும் கொன்று குவிக்க வேண்டும்-குணதாச

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
வடக்கில் உள்ள அனைவரும் புலிகளே. புனர்வாழ்வு வழங்கினாலும் புலித் தீவிரவாதிகளின் கொள்கையை அழிக்க முடியாது என்று குற்றம் சுமத்திய தேசப்பற்றுள்ள தேசிய இயக்கம் வடக்கில் உள்ள அனைத்து புலிகளையும் கொன்று குவிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது. 
Gunadasa-Amarasekara_2.jpg
வடக்கில் புலிகள் மீள உருவாகி வருவதாக அரசாங்க தரப்பில் தெரிவிக்கப்படும் குற்றச் சாட்டுக்கள் தொடர்பில் வினவிய போதே தேசப்பற்றுள்ள தேசிய இயக்கத்தின் தலைவர் குணதாச அமரசேகர மேற்கண்டவாறு தெரிவித்தார்.
 
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
 
விடுதலைப் புலி தீவிரவாதிகள் வடக்கில் முழுமையாக அழிக்கப்படவில்லை. குறைந்த அளவிலான  தீவிரவாதிகளே கொல்லப்பட்டனர். எனினும் இன்னும் வடக்கில் புலிகள் வாழ்கின்றனர். அவர்களை பாதுகாத்து போராட்டத்திற்கு தயார்படுத்தும் செயலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு செய்து வருகின்றது. சம்பந்தன் சுமந்திரன் போன்றோர் சர்வதேச ரீதியில் தீவிரவாதிகளுக்கான ஆதரவினைத் தேடுவதுடன் வடக்கில் எஞ்சியுள்ள விடுதலைப் புலிகள் தீவிரவாதிகளை வலுப்படுத்தும் செயற்பாட்டையும் செய்து வருகின்றனர். 
 
வடக்கில் வாழும் அனைவரும் விடுதலைப் புலிகளே. இராணுவத்தினரால் பிடிக்கப்பட்டு புனர்வாழ்வு வழங்கப்பட்டாலும் இவர்களின் கொள்கைகளையும் மன நிலையினையும் மாற்றியமைக்க முடியாது. தீவிரவாதிகள்  எப்போதும்  தீவிரவாதிகளாகவே வாழ்வார்கள். அதன் வெளிப்பாடே இன்று மீண்டும் தலைதூக்கியுள்ளது. 
 
சர்வதேச அமைப்புக்களுடன் கைகோர்த்து விடுதலைப் புலிகள் இன்று வடக்கை சீரழிக்க ஆரம்பித்து விட்டது. இதனை உடனடியாக கட்டுப்படுத்தி வடக்கு கிழக்கில் உருவாகி வரும் தீவிரவாதத்தை அழிக்க வேண்டும். 
 
மீண்டும் வடக்கில் இராணுவ பாதுகாப்பினை அதிகரித்து விடுதலைப் புலி தீவிரவாதிகளை கொன்று அழிக்க வேண்டும். இல்லையேல் ஒருபோதும் பயங்கரவாதத்தை அழிக்க முடியாது. 
 
சர்வதேச பொலிஸார் விடுதலைப்புலி தீவிரவாதிகளை தேடுகின்றனர் என்பது சாதாரண விடயமல்ல. எனவே இவ் விடயத்தில் சர்வதேசத்தின் ஒத்துழைப்புடன் வடக்கில் உள்ள தீவிரவாதிகளையும் அவர்களுக்கு துணை போகும் அனைத்து உறுப்பினர்களையும் கைது செய்து கடுமையான தண்டனையினை நிறைவேற்ற வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார். 
 
  • கருத்துக்கள உறவுகள்

இது பேச்சு

உண்மையைச்சொல்லும் இந்த நேர்மை பிடிச்சிருக்கு...

எம்மவருக்குத்தான்

புலி

புலி  அல்ல  என்ற  பேதம்.....

வடக்கில் உள்ள அனைவரும் புலிகளே என்றால் வடக்கு தமிழ்மக்கள் முழுவதும் புலிகளாம், அதனால் தமிழ்மக்களை முழுமையாக இராணுவம் மூலம் கொலைசெய்து அழிக்கவேண்டும் என்கிறார். இப்படியான செய்திகளை சும்மா வாசித்து, தமிழ்சினிமா பார்ப்பது போன்று இருக்காமல் உலகத்திற்கு எடுத்து சென்று எம்மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துங்கள்.. சிங்களம் இப்போது ஒரு மிரண்ட நாம்பன் மாடு.. சர்வதேச விசாரணை, இந்திய தேர்தல் என்று எல்லாம் மிரண்டு தன்னைக்காப்பாற்ற திசை திருப்ப தூக்கமின்றி பல நாடகங்கள்,பூச்சண்டிகள்,வெருட்டல்கள், சதிகளில் இதுவும் ஒன்று.. எனவே இதனை சரியாக கையாளவேண்டும்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

செய்யுங்கள்....பேச்சு பேச்சாய் இருக்கணும்....எல்லாம் வடலிக்கேசுகள்....

செய்யுங்கள்....பேச்சு பேச்சாய் இருக்கணும்....எல்லாம் வடலிக்கேசுகள்....

இது வடலிக்க தவறணை கேஸ். :)

பேசுவதற்கு வேற என்னதான் இருக்கு? கிழண்டிப்போனாலும் கொலைவெறி போகவில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.