Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகத்தில் வாக்குப் பதிவு ஆரம்பம்: உடனுக்குடன்......

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

voting_polls_elections_generic_240.jpg chennai_map_240.jpg

தமிழகத்தில் நாடாளுமன்றத் தேர்தல் வாக்குப் பதிவு: உடனுக்குடன் இங்கே....

 

-நான் யாரையும் ஆதரிக்கவில்லை- அனைவரும் வாக்களியுங்கள்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் பேட்டி

 

-ஐஜேகே வேட்பாளர் பாரிவேந்தர் வாக்கினை பதிவு செய்தார்

 

-புதுச்சேரியில் வாக்களித்தார் அமைச்சர் நாராயணசாமி

 

-தென் சென்னை தொகுதியில் இல.கணேசன் வாக்குப்பதிவு செய்ய வந்தார்

 

-ஆழ்வார்பேட்டையில் வாக்களித்தார் கமல்ஹாஸன்

 

-கெளதமியுடன் சென்று வாக்களித்தார் கமல்ஹாசன்

 

-திருவான்மியூர் வாக்கு்ச சாவடியில் ஷாலினியுடன் சென்று ஓட்டுப் போட்டார் அஜீத்

-வாக்குப்பதிவு எந்திரம் கோளாறு

 

-தமிழக வாக்குச்சாவடிகள் சிலவற்றில் வாக்குப் பதிவு தாமதமாக தொடக்கம்

 

-வாக்களிக்க முதல் ஆளாக வந்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

 

-கோபாலபுரம் வாக்குச்சாவடியில் வாக்குப்பதிவு எந்திரம் பழுது

 

நன்றி தற்ஸ்தமிழ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதி வாக்களிக்கும் கோபாலபுரம் வாக்குச்சாவடியில் எந்திரம் பழுது.

 

சென்னை: மத்திய சென்னையில் உள்ள கோபாலபுரத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது.

 

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. கோடை காலம் என்பதால் மக்கள் வெயில் அதிகம் வரும் முன்பு வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.

 

24-karunanidhi43545-600-jpg.jpg

 

இந்நிலையில் மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட கோபாலபுரத்தில் இருக்கும் சாரதா பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. வாக்குப்பதிவு துவங்கும் முன்பே பழுது கண்டறியப்பட்டது. இதனால் வாக்குப்பதிவை காலை 7 மணிக்கு துவங்க முடியவில்லை.

 

எந்திரத்தின் பழுது சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு 40 நிமிடங்கள் தாமதமாக துவங்கியது. இந்த பள்ளியில் தான் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

தி.மு.க.வின் முழுவியழம்.... ? :D 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்வார்பேட்டையில் கௌதமியுடன் சென்று வாக்களித்தார் கமல் ஹாஸன்.

 

 

24-kamal-voting-600.jpg

 


24-kushboo34-600-jpg.jpg

 

கணவர் சுந்தர்.சியோடு வரிசையில் நின்று வாக்களித்த நடிகை குஷ்பு...


24-rajini-voting-600.jpg

 

ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் முதல் ஆளாக வாக்களித்த ரஜினிகாந்த்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24-hansika-tamanna0-kajal34-600-jpg.jpg

 

இவ‌ர்க‌ள்... த‌மிழ்நாட்டில், வாக்க‌ளிக்க‌ முடியாது.
ஏனென்றால்... எல்லோரும், அந்நிய‌ மாநில‌த்தில் இருந்து, தமிழ் சினிமாவுக்கு... இற‌க்கும‌தி செய்ய‌ப் ப‌ட்ட‌வ‌ர்க‌ள்.

 

சும்மா... ப‌கிடிக்கு: (இவ‌ர்க‌ள், இன்னும் ப‌தினெட்டு வ‌ய‌தை.... நெருங்காத‌வ‌ர்க‌ள். ) :D

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24-actor-vijay-f-600.jpg

 

பத்து மணிக்கு வாக்களிக்க வருகிறார் விஜய்..
இடம்: அடையாறு மாநகராட்சி பள்ளி.
 

சு.ப.: விஜயை.... காண விரும்புவர்கள், காலை ஐந்து மணிக்கு... அங்கு வரவும்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24-voters54-600.jpg

 

தமிழகம் - 9 மணி நிலவரப்படி 15 முதல் 18 சதவீத வாக்குப் பதிவு.

 

சென்னை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும், ஆலந்தூர் சட்டசபைத் தொகுதி இடைத் தேர்தலிலும் இன்று காலை முதல் நடந்து வரும் வாக்குப்பதிவில் இதுவரை சராசரியாக ஒவ்வொரு தொகுதியிலும் 15 முதல் 18 சதவீத அளவிலான வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

திருச்சி 16, தஞ்சை 15, வேலூர் 12, திருவண்ணாமலை 17, தென்காசி 16, காஞ்சிபுரம் 12, நாகை 15, புதுவை 16, கோவை 15, பொள்ளாச்சி 16, கடலூர் 18 சதவீம் என வாக்குகள் பதிவாகியுள்ளன.

 

கடும் வெயில் காரணமாக காலையிலேயே வாக்காளர்கள் வாக்குச் சாவடிகளில் குவிந்து விட்டதால் காலையிலேயே வாக்குப்பதிவு விறுவிறுப்பாகி விட்டது. மக்கள் தொடர்ந்து வி்றுவிறுப்பாக வாக்களித்து வருகின்றனர்.

 

தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும், புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கும்,

 

தமிழகத்தில் உள்ள 39 லோக்சபா தொகுதிகளுக்கும், புதுச்சேரி லோக்சபா தொகுதிக்கும், ஆலந்தூர் சட்டசபைத் தொகுதிக்கு இடைத் தேர்தலும் இன்று நடைபெறுகிறது. நாடு முழுவதும் மொத்தம் 117 தொகுதிகளில் இன்று தேர்தல் நடைபெறுகிறது.

 

இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்கியது.

 

பொதுமக்கள் ஆர்வம்

 

மக்களிடையே வாக்களிக்க பெரும் ஆர்வம் காணப்பட்டது. பல வாக்குச் சாவடிகளில் காலை 7 மணிக்கு முன்பே வாக்காளர்கள் திரண்டு விட்டனர். பகலில் வெயில் அதிகம் என்பதால் காலையிலேயே வந்து வாக்களிக்க மக்களிடையே ஆர்வம் காணப்பட்டது.

 

அனைத்து வாக்குச் சாவடிகளிலும் பலத்த பாதுகாப்புடன் வாக்களிப்பு நடந்து வருகிறது. மக்கள் நீண்ட கியூ

வரிசையில் பல இடங்களில் காத்திருந்து வாக்குகளைச் செலுத்தினர்.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

election-tn-600.jpg_24042014.jpg

 

என்னப்பா.... தமிழக வாக்குப் பதிவில், தாய்க்குலம் தான் முன் நிற்கிறது?
தத்தைக்குலம், சரக்கடித்து விட்டு... குப்புறப் படுத்து விட்டார்களா?

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24-jayalalithaa-voting-600-jpg.jpg

 

 

வாக்களித்துக் கொண்டிருக்கும்..... தமிழக முதல்வர் ஜெயலலிதா.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24-karunanid1hi3431-600.jpg

 

 

சக்கர நாற்காலியில்... சென்று வாக்களித்த,
முன்னாள் முதல்வர் கருணாநிதி.
அவரின், சக்கர நாற்காலியை... தள்ளிக் கொண்டு போகின்றவர்,

மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன்.

 

"பயங்கர திருடன்" என்று, அவரின் கண்களே... காட்டிக் கொடுக்குது. :D  :lol:

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
24-voters-tn-600-jpg.jpg

 

தமிழகம் முழுவதும் வியர்க்க விறுவிறுக்க மக்கள் வாக்களிப்பு... 60% நெருங்குகிறது!

  • கருத்துக்கள உறவுகள்

திமுகவுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக உள்ளது: கருணாநிதி

511xNxnewPic_7860_jpg_1859629g.jpg.pages

நடிகர்கள் சிவகுமார்,சூர்யா,கார்த்தி வாக்களித்தனர்...

10172666_710292422342227_762825604692519

ஆனால் இது சென்ற வருடம் எடுத்த படம் என்று ஒரு கிசுகிசு அடிபடுகின்றது... :D 

 

  • கருத்துக்கள உறவுகள்

உடனடி செய்திகளுக்கு நன்றி பாஸ்..! :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகத்திலும் மிக விரைவில் அரசியல் மாற்றம் வரும் -வைகோ உறுதி!

10298884_307604502726916_387865291568749


நடிகர் வடிவேலு வாக்களித்தார்...

10157207_710372115667591_255209352088554


வாக்குச்சாவடியில் மோதல் ஒருவர் பலி

மதுரை அருகே திருப்பரங்குன்றத்தில் கட்சித் தொண்டர்களிடையே மோதல் ஏற்ப்பட்டது ஒருவர் பலியனர். நிலையூர் வாக்குச்சாவடியில் ஏஜண்டுகளிடையே ஏற்பட்ட மோதல் வன்முறையில் முடிந்தது திமுக இலக்கிய அணி ஒன்றியச்செயலாளர் பாண்டி (60) கீழே விழுந்ததில் பலியானார்.

dinakaran.com

  • கருத்துக்கள உறவுகள்

 

24-karunanid1hi3431-600.jpg

 

 

சக்கர நாற்காலியில்... சென்று வாக்களித்த,

முன்னாள் முதல்வர் கருணாநிதி.

அவரின், சக்கர நாற்காலியை... தள்ளிக் கொண்டு போகின்றவர்,

மத்திய சென்னை வேட்பாளர் தயாநிதி மாறன்.

 

"பயங்கர திருடன்" என்று, அவரின் கண்களே... காட்டிக் கொடுக்குது. :D  :lol:

 

 

 

உடனுக்கடன் செய்திகளுக்கு நன்றி

இவர்களின் படங்களை  முடிந்தவரை  தவிருங்கள்

காலையிலேயே மூட்  மாறிடுச்சு... :(  :(

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

 

கருணாநிதி வாக்களிக்கும் கோபாலபுரம் வாக்குச்சாவடியில் எந்திரம் பழுது.

 

சென்னை: மத்திய சென்னையில் உள்ள கோபாலபுரத்தில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் பழுதானதால் வாக்குப்பதிவு தாமதமாக துவங்கியது.

 

நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு தமிழகம் மற்றும் புதுவையில் உள்ள 40 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு துவங்கியது. கோடை காலம் என்பதால் மக்கள் வெயில் அதிகம் வரும் முன்பு வாக்களிக்க வாக்குச்சாவடிகளில் நீண்ட வரிசையில் நின்று வாக்களிக்கின்றனர்.

 

24-karunanidhi43545-600-jpg.jpg

 

இந்நிலையில் மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட கோபாலபுரத்தில் இருக்கும் சாரதா பள்ளியில் அமைக்கப்பட்ட வாக்குச்சாவடியில் இருக்கும் மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பழுது ஏற்பட்டது. வாக்குப்பதிவு துவங்கும் முன்பே பழுது கண்டறியப்பட்டது. இதனால் வாக்குப்பதிவை காலை 7 மணிக்கு துவங்க முடியவில்லை.

 

எந்திரத்தின் பழுது சரிசெய்யப்பட்டு வாக்குப்பதிவு 40 நிமிடங்கள் தாமதமாக துவங்கியது. இந்த பள்ளியில் தான் திமுக தலைவர் கருணாநிதி மற்றும் மு.க. ஸ்டாலின் ஆகியோர் வாக்களிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

நன்றி தற்ஸ்தமிழ்.

 

தி.மு.க.வின் முழுவியழம்.... ? :D 

 

 

திமுக கவிழப்போறது தெரியுது :o:lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

இது இந்தியப் பாராழுமன்றத் தேர்த்தலா? சினிமாத்திரையுலகத் தேர்த்தலா? :o :o

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.