Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

சிரிக்க.... சில, சிறு கதைகள். (இணையத்தில்... படித்தது.)

Featured Replies

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 
 
large_1353140118.jpg



ஒரு வெள்ளிக்கிழமை, இளைஞன் நகைக்கடைக்குள்ள ஒரு பொண்ணை கூட்டிட்டு வந்தான்.அங்கிருந்த ஆளை கூப்பிட்டு "என் காதலிக்கு ஒரு வைர நகை எடுக்கணும்" அப்டின்னான், அந்தப் பொண்ணை பார்த்துக்கிட்டே.

கடைக்காரரும் ஒரு நகையை காட்டி 50000 ரூபா ஆகும்னாரு.அவன் சலிச்சுக்கிட்டே,"இல்ல பாஸ் என் காதலிக்கு தர்ற நகை...யுனிக்...அப்டியே அவ்ளோ அழகா இருக்கணும்"

கடைக்காரர் ரொம்ப இம்ப்ரஸ் ஆகி ஒரு லட்ச ரூபா நகை ஒண்ணு காமிச்சார், அந்தப்பொண்ணுக்கு கண் கொள்ளல, அவன் "ஓகே ஓகே இதை பேக் பண்ணுங்க நான் செக் தர்றேன்" அப்டின்னான்.

"ஸாரி சார் செக் ஏத்துக்கறதில்ல"

"ஓகே இப்ப செக் வாங்கிக்கங்க திங்கக்கிழம பேங்க்ல பணம் இருக்கான்னு கேட்டுட்டு சொல்லுங்க அப்புறம் வாங்கிக்கிறேன்" என்று சொல்லிவிட்டு கிளம்பி விட்டார்கள்.

திங்கட்கிழமை கடைக்காரர் கோபமாக போனில் பேசினார்,"யேய் பேங்க்ல உன் அக்கவுண்ட்ல ஒரு பைசா இல்ல எதுக்குடா வந்து ஆர்டர் பண்ணின?"

"மன்னிச்சுக்கங்க சார் ஆனா இந்த வீக் எண்ட் எப்டி போச்சு தெரியுமா?"
 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

love-letter.jpg



நல்லா மூச்சு முட்ட குடிச்சதால.... ஹேங் அவுட் ஆன புருஷன் லேட்டா எழுந்து ரூம விட்டு வெளிய வந்து பாத்தான்.

 

டைனிங் டேபிள்ல லெட்டர்,”அன்பே ஹாட் பேக்கில் சப்பாத்தி இருக்கிறது நீங்கள் களைப்பாக இருப்பீர்கள் என்று உங்கள் பாஸ்க்கு போன் பண்ணி லீவ் சொல்லிவிட்டேன் மாலை சந்திப்போம்”.அவனுக்கு ஒண்ணும் புரியல ,

 

குழந்தைங்க கிட்ட,”என்னடா நடந்தது நைட்”னான்.

 

அது,” நீங்க ரொம்ப குடிச்சிட்டு... "கிளாஸ்" எல்லாம் உடைச்சிட்டு, வாந்தி எடுத்தீங்க”

 

“ஆனா எல்லாம் நீட்டா இருக்கு சரி மேல சொல்லு”

 

“அப்புறம் அம்மா உங்கள படுக்க வைக்க ஷர்ட்,பேன்ட்லாம் கழட்டுனாங்க, நீங்க ‘கையை எடு கேடு கெட்டவளே எனக்கு கல்யாணம் ஆயிடிச்சி’ன்னீங்க”

 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

  மனைவியின் சந்தேக புத்தி.

TFTRichBedroom.JPG

     ஒரு மனைவிக்கு தன் கணவன் தன்னை நீண்டகாலமாக ஏமாற்றுவதாக சந்தேகம் கொண்டிருந்தாள். வீட்டு வேலைக்காரியுடன் தொடர்பு இருப்பதாக உறுதி நம்பினாள். இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்க ஒரு திட்டம் தீட்டினாள்.

   திடீரென்று ஒருநாள் மதியம் வீட்டு வேலைக்காரியை அரைநாள் விடுமுறை கொடுத்து அனுப்பினாள். இதை கணவரிடம் சொல்லவில்லை. அன்று வேலை முடிந்து வந்த கணவர், “குட்டி, எனக்கு இன்று வயிறு சரியில்லை” என்று சொல்லி குளியலறைக்குச் சென்றார். இரவில் அவர்கள் படுக்கைக்கு சென்ற போதும், கணவர் பழையபடி மீண்டும் குளியலறைக்குச் சென்றுவிட்டார்..

   மனைவி உடனடியாக வேலைக்காரியின் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். உடனே விளக்குகளையும் அணைத்து விட்டாள். அவர் அமைதியாக சத்தமில்லாமல் பூனைபோல் வந்து எதுவும் பேசாமல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.
.
   உடனே மனைவி கோபத்துடன் “நான் இங்கே இருப்பேன் என்று நீங்கள்  எதிர்பார்க்கவில்லைதானே?” என்று கத்திவிட்டு விளக்கைப் போட்டாள்.
 
   “இல்லை மேடம்” என்றான் தோட்டக்காரன்!

 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பையன் பக்கத்தில இருந்த கடைக்கு போய்,

5 ரூபாய்க்கு கடலை மிட்டாய் கேட்டான்.
கடைக்காரர் அலமாரியின் மிக உயரத்தில் இருந்த மிட்டாய் பாட்டிலை மிக சிரமப்பட்டு அலமாரி மீது ஏறி எடுத்து, அவனுக்கு மிட்டாயினை கொடுத்துவிட்டு மீண்டும் உரிய இடத்தில் வைத்துவிட்டார்.

10 நிமிடம் கழித்து மீண்டும் அதே பையன், மீண்டும் 5 ரூபாய்க்கு கடலை மிட்டாய்.
கடைக்காரர் அதே சிரமத்துடன் கொடுத்துவிட்டு பாட்டில வைத்து விட்டார்.

மீண்டும் 5 நிமிடத்தில் அவன், மறுபடியும் 5 ரூபாய்க்கு. கடைக்காறருக்கு முடியல........
எடுத்துக் கொடுத்துவிட்டு.. பையன் திரும்ப வருவான் வந்தா கொடுக்க லேசு என்று மிட்டாய் பாட்டிலை கீழே வைதுக்கொண்டார்.

அவர் எதிர்பார்த்த படி பையன் ஐந்து நிமிசத்தில் ஆஜர். கடைக்காரர், பையனிடம், என்ன 5 ரூபாக்கு கடலை மிட்டாயா? என்றார். பையன் இல்லை என்று தலையாட்டினான்.

அப்பாடா கடலை மிட்டாய் மேட்டர் ஓவர், என்ற நிம்மதியுடன், மிட்டாய் பாட்டிலை கஸ்டப்பட்டு ஏறி வைத்து விட்டு, பையனிடம் திரும்பி, என்ன வேணும் என்றார், அவன் சொன்னான், 10 ரூபாய்க்கு கடலை மிட்டாய்..

 

  • கருத்துக்கள உறவுகள்

 

  மனைவியின் சந்தேக புத்தி.

TFTRichBedroom.JPG

     ஒரு மனைவிக்கு தன் கணவன் தன்னை நீண்டகாலமாக ஏமாற்றுவதாக சந்தேகம் கொண்டிருந்தாள். வீட்டு வேலைக்காரியுடன் தொடர்பு இருப்பதாக உறுதி நம்பினாள். இருவரையும் கையும் களவுமாகப் பிடிக்க ஒரு திட்டம் தீட்டினாள்.

   திடீரென்று ஒருநாள் மதியம் வீட்டு வேலைக்காரியை அரைநாள் விடுமுறை கொடுத்து அனுப்பினாள். இதை கணவரிடம் சொல்லவில்லை. அன்று வேலை முடிந்து வந்த கணவர், “குட்டி, எனக்கு இன்று வயிறு சரியில்லை” என்று சொல்லி குளியலறைக்குச் சென்றார். இரவில் அவர்கள் படுக்கைக்கு சென்ற போதும், கணவர் பழையபடி மீண்டும் குளியலறைக்குச் சென்றுவிட்டார்..

   மனைவி உடனடியாக வேலைக்காரியின் படுக்கைக்குச் சென்று படுத்துக் கொண்டாள். உடனே விளக்குகளையும் அணைத்து விட்டாள். அவர் அமைதியாக சத்தமில்லாமல் பூனைபோல் வந்து எதுவும் பேசாமல் கட்டிப் பிடித்து முத்தம் கொடுக்க ஆரம்பித்தார்.

.

   உடனே மனைவி கோபத்துடன் “நான் இங்கே இருப்பேன் என்று நீங்கள்  எதிர்பார்க்கவில்லைதானே?” என்று கத்திவிட்டு விளக்கைப் போட்டாள்.

 

   “இல்லை மேடம்” என்றான் தோட்டக்காரன்!

 

 

கவனிக்கவும் மிஸ்டர் சிறி ,  கதை இன்னும் முடியவில்லை...  அப்பறம்...! :blink:

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவனிக்கவும் மிஸ்டர் சிறி ,  கதை இன்னும் முடியவில்லை...  அப்பறம்...! :blink:

 

 

நான் வாசித்த இடத்தில்... இவ்வளவும் தான் இருந்தது, சுவி.

மிச்சக்கதை உங்களுக்கு தெரியும் என்றால்... பதிந்து விடுங்களேன். :D

இந்த ஒ.ப.கதை புரிந்தால் நீங்கள் வயிறு குலுங்கச் சிரிக்கலாம்!!

 

பணி முடிந்து வீடு திரும்பியதும், கைலிக்கு மாறி, கைகால் அலம்பி தொ.க.முன் அமர்ந்தான் மனோகரன்.

“பைனான்ஸ்காரங்க ஃபோன் பண்ணினாங்க. தவணைத் தேதி முடிஞ்சி ரெண்டு வாரம் ஆச்சாம். இன்னிக்கிக் கண்டிப்பா பணம் கட்டணும்னு சொன்னாங்க” என்றாள் அவன் மனைவி பூர்ணிமா.

“இன்னிக்கே கட்டலேன்னா தலையை வாங்கிடுவானோ? வட்டிக்கு வட்டி போடுவான். வேறென்ன? நாலு நாள் போகட்டும். உன் வேலையைப் பாரு”என்று கடுப்படித்தான் மனோகரன்.

சமையலறைக்குள் நுழைந்து, தேனீர்க் கோப்பைகளுடன் திரும்பிய பூர்ணிமா, “தமண்ணா மளிகையிலிருந்து பையன் வந்திருந்தான். ’ரெண்டாயிரம் ரூபா பாக்கி இருக்கு. இன்றே பணத்துடன் வரவும்’னு செட்டியார் சீட்டு அனுப்பியிருந்தார்” என்றாள்.

“இன்னும் யாரெல்லாம் கடன்காரங்க வந்தாங்க?” தேனீரை உறிஞ்சிக்கொண்டே கேட்டான் மனோகரன்.

“டைலர் ரவி வந்தான்......”

குறுக்கிட்டான் மனோகரன். “அவனும் இன்னிக்கே பாக்கிப்பணம் தரணும்னு சொன்னானோ?”

“ரொம்ப அவசரமா பணம் தேவைப்படுதாம்.”

“தைக்கத் துணி கொடுத்தா, ஒரு வாரத்தில் தர்றேன்னு சொல்லிட்டு ஒரு மாசம் கழிச்சிக் கொடுப்பான். கூலியை மட்டும் கறாராக் கேட்டு வாங்கிடுவான். மறுபடியும் வந்தான்னா நாலு நாள் போகட்டும்னு சொல்லிடு.”

“அப்புறம்....வந்து....”

“சொல்லு.”

“நெளிநெளியா தலைமுடியோட கவர்ச்சியா டிரஸ் பண்ணிட்டு ஒரு லேடி வந்தா. முப்பது வயசு மதிக்கலாம். பேரு குமுதாவாம். மேட்டுத்தெருவுல குடியிருக்காளாம். 'உன் புருஷன் ஆயிரம் ரூபா எனக்குப் பாக்கி வெச்சிருக்கான். ஒரு மாசம் ஆச்சு. நேர்ப்படும் போதெல்லாம் இதா தர்றேன்...அதா தர்றேன்னு சாக்குப் போக்குச் சொல்லி இழுத்தடிச்சிட்டே இருக்கான். இன்னிக்கு ராத்திரிக்குள்ள பணம் வரலேன்னா நாளைக்கு வந்து அவன் மானம் மரியாதை எல்லார்த்தையும் கப்பலேத்திடுவேன்; தெருப்பூரா சிரிப்பா சிரிக்க வெச்சுடுவேன். அவன் கிட்டே சொல்லி வை’னு சொல்லிட்டுப் போனா. ஆளப் பார்த்தா ‘எதுக்கும்’ துணிஞ்சவள்னு தெரியுது.”

மனோகரனின் முகம் முழுக்கக் ‘குப்’பென்று  பீதி பரவியது.

சட்டையை மாட்டிக்கொண்டு வெளியே கிளம்பினான்.

“அவகிட்ட எதுக்குக் கடன் வாங்கினீங்க?” வெள்ளந்தியாய்க் கேட்டாள் பூர்ணிமா.

“அவகிட்ட கடன் வாங்கல; சொன்னேன்” என்று தனக்கு மட்டும் கேட்கும்படியாய் முணுமுணுத்துக்கொண்டு வெளியேறினான் மனோகரன், குமுதாவிடம் மேலும் ஒரு வாரம் அவகாசம் கேட்க!

 

 

(இது எனது..சொந்த கதை இல்லை...http://kaamakkizaththan.blogspot.com/2014/05/blog-post_14.html என்னும் தளத்தில் படித்தது... )

Edited by naanthaan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கவனிக்கவும் மிஸ்டர் சிறி ,  கதை இன்னும் முடியவில்லை...  அப்பறம்...! :blink:

 

 

கதை, இப்படி முடிந்திருக்குமா... சுவி. :lol:

 

1) தோட்டக்காரனுக்கு பேசி விட்டு, வீட்டுக்காரம்மா எழுந்து சென்று விட....

டாய்லெட்டுக்கு சென்றிருந்த வீட்டுக்காரய்யா.... படுத்திருந்த தோட்டக்காரனுக்கு முத்தம் கொடுத்தார்.

 

2) தோட்டக்காரனுக்கு... ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.

இனி.... வேலைக்காரிக்கும், வீட்டுக்காரம்மாவுக்கும் முத்தம் கொடுக்க... லைன் கிளியர். :D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

-------

“அவகிட்ட எதுக்குக் கடன் வாங்கினீங்க?” வெள்ளந்தியாய்க் கேட்டாள் பூர்ணிமா.

“அவகிட்ட கடன் வாங்கல; சொன்னேன்” என்று தனக்கு மட்டும் கேட்கும்படியாய் முணுமுணுத்துக்கொண்டு வெளியேறினான் மனோகரன், குமுதாவிடம் மேலும் ஒரு வாரம் அவகாசம் கேட்க!

 

மனோகரன் போன வேகத்தைப் பார்க்க....

1000 ரூபாய் கடன் 2000 ரூபாய் ஆகும் போல இருக்கே...... :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

மனோகரன் போன வேகத்தைப் பார்க்க....

1000 ரூபாய் கடன் 2000 ரூபாய் ஆகும் போல இருக்கே...... :D  :lol:

 

 

அதெப்படி

உங்களுக்கு தெரிகிறது?

ஒருக்கா  போனால் ஆயிரம் என்று......? :D  :D  :lol:

  • கருத்துக்கள உறவுகள்

கதை, இப்படி முடிந்திருக்குமா... சுவி. :lol:

 

1) தோட்டக்காரனுக்கு பேசி விட்டு, வீட்டுக்காரம்மா எழுந்து சென்று விட....

டாய்லெட்டுக்கு சென்றிருந்த வீட்டுக்காரய்யா.... படுத்திருந்த தோட்டக்காரனுக்கு முத்தம் கொடுத்தார்.

 

2) தோட்டக்காரனுக்கு... ஒரு கல்லில் இரண்டு மாங்காய்.

இனி.... வேலைக்காரிக்கும், வீட்டுக்காரம்மாவுக்கும் முத்தம் கொடுக்க... லைன் கிளியர். :Dக்

 

 

கலாச்சாரம் கவுன்டுடும்  சிறி...! :)

 

தப்பான பார்வை வரலாம் , தப்பான விமர்சனம் வரலாம் ஆனால் தப்பை தப்பாச் செய்யக் கூடாது...! ( இப்படி இருந்தால் எப்படி.)

 

---  இல்லை மேடம் , நீங்கள் என்று நான் எதிர்பார்க்கவில்லை மேடம், நான் அவளுக்கு என்ன குறை வைத்தேன், அவள் ஏன் இப்படி..! ( கேவுகிறான் . அப்போ வாசலில் நிழலாடுகிறது , பார்த்தால் முதலாழி ) 

 

-- ஆ , நீயா , ஏன்டி உனக்கு நான் என்ன குறை வைத்தேன்..! :)

கப்ரன்: நாங்கள் இருவரும் ஒரே வழி தடத்தில் உள்ளோம்....உனது வழியை 15 பாகை வடக்கே திருப்பு....

 

மறு மொழி: இல்லை அய்யா...நீங்கள் உங்களது வழியை 20பாகை தெற்க்கே திருப்புங்கள்.....

 

கப்ரன்: ஏய்...என்னை யாரென்று நீ நினைத்தாய்...நான் சொல்லுவதை கேள்...உனது வழியை மாற்று...

 

மறு மொழி: மன்னிக்கவும் அய்யா...நீங்கள் தான் மாற்ற வேண்டும்....

 

கப்ரன்: நான் அமெரிக்க நேவி....உடனடியாக உனது பாதையை மாற்று.....

 

மறு மொழி: திரும்பவும் மன்னிக்கவும் அய்யா...நீங்கள் தான் உடனடியாக மாற்ற வேண்டும்....நேரம் குறைகிறது.....

 

கப்ரன்: மடையனே...நான் அமெரிக்காவின் மிகவும் சக்திவாய்ந்த விமானந்தாங்கி கப்பலின் தலைவன் ....என்னுடன் மூன்று நாசகாரி கப்பல்களும் வருகின்றன...நீ உனது பாதையை உடனே மாற்றாவிட்டால் இந்த நிமிடமே உன்னை பொசுக்கி விடுவேன்...உடனே மாற்று...

 

மறு மொழி: மன்னிக்கவும் அய்யா..தற்போதும் நீங்கள் தான் உங்களது பாதையை மாற்றவும்..... முடிவு உங்கள் கையில்.... இது கனடிய வெளிச்சவீடு...:)

 

 

 

  • 2 months later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

sad-drinking-man-300x198.jpg

 

மனைவி சண்டையும், ஒரு பியரும்!

 

(ஒரு டாஸ்மாக் பாரில்)

 
தம்பி!! ஒரு பீர்!”
 
“என்ன அண்ணே! இன்னைக்கி ரொம்ப சோகமா இருக்கீங்க?? மூஞ்சி டல்லா இருக்கு?”
 
“அதை விடுப்பா! பீரை எடுத்திட்டு வா!”
 
“பரவா இல்லை, சொல்லுங்கண்ணே!!”
 
“அது வந்து, ஒண்ணுமில்லை, எனக்கும் என் மனைவிக்கும் சண்டை வந்துடுச்சு, ஒரு மாசம் என்னோட பேசமட்டேன்னு சொல்லிட்டா”
 
“போங்கண்ணே! சந்தோசமான விசயத்திற்கு போய் இம்புட்டு கவலைப்படுறீங்களே?”
 
“அடேய்! இன்னைக்குத்தான் அந்த மாசத்தோட கடைசி நாள்!”

 

 

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

3men_003.png?w=420&h=253

 

நரகத்திற்கு வந்தது எப்படி! 

 

 
மூன்று ஆண்கள், அவர்கள் இறந்தது எப்படி என்று, நரகத்தில் விவாதித்துக்கொண்டிருந்தனர்.

முதல் மனிதன் "நான் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்ட்டேன்." என்றார்.

இரண்டாவது மனிதன் "நான் ஒரு விபத்தால் இறந்து விட்டேன்." என்றார்.

மூன்றாவது மனிதன் "பார்த்ததால் நான் இறந்து விட்டேன்.என்றார்.

முதல் இரண்டு ஆண்கள் "பார்த்ததால் எப்படி இறக்க முடியும்? புரியவில்லை.” என்றனர்.

மூன்றாவது மனிதன் "இல்லை, என் நண்பரின் மனைவியுடன் இருந்தபோது அவர் எங்களைப் பார்த்துவிட்டார். அதான்!!" என்றார்.

 

  • கருத்துக்கள உறவுகள்

"இவர் சொன்னது உண்மைதாங்க.."

நண்பரின் மனைவியும் நரகத்தில் இணைந்திருந்தாள்.. :o:D

  • கருத்துக்கள உறவுகள்

ஆப்ப நன்பர் காராக் கிரகத்திலா...! :lol::D

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

3men_003.png?w=420&h=253

 

நரகத்திற்கு வந்தது எப்படி! 

 

 
மூன்று ஆண்கள், அவர்கள் இறந்தது எப்படி என்று, நரகத்தில் விவாதித்துக்கொண்டிருந்தனர்.

முதல் மனிதன் "நான் புற்றுநோய் காரணமாக இறந்துவிட்ட்டேன்." என்றார்.

இரண்டாவது மனிதன் "நான் ஒரு விபத்தால் இறந்து விட்டேன்." என்றார்.

மூன்றாவது மனிதன் "பார்த்ததால் நான் இறந்து விட்டேன்.என்றார்.

முதல் இரண்டு ஆண்கள் "பார்த்ததால் எப்படி இறக்க முடியும்? புரியவில்லை.” என்றனர்.

மூன்றாவது மனிதன் "இல்லை, என் நண்பரின் மனைவியுடன் இருந்தபோது அவர் எங்களைப் பார்த்துவிட்டார். அதான்!!" என்றார்.

 

 

"இவர் சொன்னது உண்மைதாங்க.."

நண்பரின் மனைவியும் நரகத்தில் இணைந்திருந்தாள்.. :o:D

 

ஆப்ப நன்பர் காராக் கிரகத்திலா...! :lol::D

 

இரட்டைக் கொலை செய்தால்.... கட்டாயம்  மறியல்jail.gif தானே.....

இவர் செய்த வேலையால்.... நண்பருக்கு,

பூலோகத்தில் நரக வேதனைenprison.gif அனுபவிக்க வேண்டி வந்திட்டுது. :D  :lol:

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் சிறி அண்ணா ஒரு நண்பருக்கு நடந்தது பேஸ் புக்கில்  என்ன வென்றால் அவர் அதிகம் நண்பர்களை சேர்ப்பதற்க்காக எல்லா நாட்டு நண்பர்களையும் சேர்த்து இருக்கார் அவர் அம்மா இறந்த செய்தியைபோட

 

அவருக்கு சுமார் ஆயிரம் லைக்ஸ் கிடைத்ததும்

 வெளீநாட்டு நண்பர்கள் அடித்த கொமன்ஸ்( தமிழ் தெரியாதவர்கள் )

அஞ்சலிபோஸ்டரை பார்த்து

 உங்கள் அம்மா அழகானவள்

உங்கட அம்மாவுக்கு என்ன பிரச்சினை கண் பிரச்சினையா

அடுத்தவன் கண்ணில் ஏன் கண்ணீர் அவருகிறது

 இப்படி நொறைய அனுப்பியிருந்தார்கள் அதிலிருந்து போஸ்புக்கில் இருந்து விலகிட்டான் பாருங்களன்

இதை சொல்லி சொல்லி நாங்கள் ஒவ்வொரு நாழும் சிரிப்பம்

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

அடப் பாவிகள்.... நொந்து போனவனை, மேலும் நோகப் பண்ணிவிட்டார்கள், முனிவர் ஜீ. :D

  • 1 month later...
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
 

"சா"வே வராத "குப்புமி"யைத் தெரியுமா...?!

 

ஒரு ஊரில் குப்புசாமி என்ற பெயரில் ஒருவர் வாழ்ந்து வந்தார். அவருக்கு சாகா வரம் பெற வேண்டும் என ஆசை.

உடனடியாக கடவுளிடம் வரம் வேண்டி தவமிருக்கத் தொடங்கினார். குப்புசாமியின் தவத்தால் மனம் மகிழ்ந்த கடவுள் அவர் முன்னே தோன்றினார்.

கடவுள்: பக்தா என்ன வரம் வேண்டும் கேள்?

குப்புசாமி: கடவுளே எனக்கு சாவே வரக்கூடாது.

கடவுள்: சரி பக்தா அப்படியே ஆகட்டும்.

குப்புசாமி ரொம்ப சந்தோசமாகி வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒருவர் குப்புசாமியிடம் பேச வந்தார்.

வழிப்போக்கர்: உங்க பேரு என்ன?

குப்புசாமி: குப்புமி... குப்புமி... குப்புமி...

பாவம், எவ்வளவோ முயற்சித்தும் கடைசிவரை குப்புசாமிக்கு "சா" வே வரலையாம்...

நீதி: கடவுள் நம்மை விட புத்திசாலி

 

Edited by தமிழ் சிறி

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.