Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் மோதலில் தமிழக ராணுவ அதிகாரி மரணம்

Featured Replies

காஷ்மீரில் தீவிரவாதிகளுடன் நடந்த மோதலில் கொல்லப்பட்ட முகுந்த் வரதராஜனின் குடும்பத்தினருக்கு பத்து லட்ச ரூபாய் வழங்கப்படும் என தமிழக முதலமைச்சர் அறிவித்துள்ளார். அவரது உடல் இன்று இரவு சென்னைக்குக் கொண்டுவரப்படுகிறது.

140427110846_tamil_nadu_soldier_mukunth_

இளம் வயது முதலே இராணுவத்தில் பணியாற்றுவதை லட்சியமாக கொண்டிருந்தவராம் முகுந்த் வரதராஜன்.

தெற்கு காஷ்மீரின் சோஃபியான் பகுதியில் இந்திய ராணுவத்திற்கும் தீவிரவாதிகளுக்கும் இடையில் வெள்ளிக்கிழமையன்று இரவில் நடந்த மோதலில் 44வது ராஷ்ட்ரிய ரைஃபிள்ஸ் பிரிவைச் சேர்ந்த மேஜர் முகுந்த் வரதராஜன் கொல்லப்பட்டார்.

இவருடன் வேறு ஒரு வீர்ரும் கொல்லப்பட்டார். இந்தத் தாக்குதலில் 3 தீவிரவாதிகளும் கொல்லப்பட்டனர்.

140427110742_tamil_nadu_soldier_mukunth_

அன்று காலையில் இடிக்கப்பட்ட கட்டடத்தின் இடிபாடுகளில் ராணுவம் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டிருந்தபோது, அந்த இடிபாடுகளில் ஒளிந்திருந்த ஒரு தீவிரவாதி சரமாரியாகச் சுட்டதில் முகுந்த் வரதராஜன் கடுமையாகக் காயமடைந்தார். ஸ்ரீநகரின் பதாமி பாகிலிருக்கும் மருத்துவமனைக்கு கொண்டுசெல்லும் வழியில் அவர் உயிர் பிரிந்தது.

சென்னைக்கு அருகில் உள்ள சேலையூர் பகுதியைச் சேர்ந்த முகுந்த் வரதராஜன், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தவர்.

சென்னை ஆஃபீஸர்ஸ் டிரெய்னிங் அகாதெமியில் 2004ஆம் ஆண்டில் தனது ராணுவப் பயிற்சியைப் பெற்றவர்.

3ஆம் வகுப்புப் படிக்கும்போதிருந்தே ராணுவத்தில் சேர வேண்டும் என்ற விருப்பம் கொண்டிருந்த முகுந்த், இதழியலில் பட்டம் பெற்றவர்.

http://www.bbc.co.uk/tamil/india/2014/04/140427_kashmirtn.shtml

காஷ்மீரில் உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜ் குடும்பத்துக்கு ரூ.10 லட்சம் நிதி: ஜெயலலிதா உத்தரவு

xmajor_1865065h.jpg.pagespeed.ic.Pn2fTNj

மேஜர் முகுந்த் வரதராஜ் தனது மனைவி மற்றும் குழந்தையுடன். | கோப்புப் படம்

காஷ்மீரில் நடந்த தீவிரவாதத் தாக்குதலில் உயிர்நீத்த மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் வழங்க, தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பு:

'ஜம்மு - காஷ்மீர் மாநிலம், சோபியான் பகுதியில் 25.4.2014 அன்று தீவிரவாதிகள் நடத்திய திடீர் தாக்குதலில், 44-வது ராஷ்டிரிய துப்பாக்கிகள் படைப் பிரிவில் பணியாற்றி வந்த சென்னை, தாம்பரத்தைச் சேர்ந்த ராணுவ வீரர் மேஜர் முகுந்த் வரதராஜன் உயிரிழந்தார் என்ற செய்தியை அறிந்து நான் ஆற்றொணாத் துயரமும், மிகுந்த மன வேதனையும் அடைந்தேன்.

தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜனை இழந்து வாடும் அவரது குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

தீவிரவாதத் தாக்குதலில் உயிரிழந்த மேஜர் முகுந்த் வரதராஜன் குடும்பத்திற்கு பத்து லட்சம் ரூபாய் வழங்கவும் நான் உத்தரவிட்டுள்ளேன்' என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

http://tamil.thehindu.com/tamilnadu/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%80%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%80%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%9C%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%B0%E0%AF%8210-%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%AF%E0%AE%B2%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%B5%E0%AF%81/article5953065.ece?homepage=true

Edited by Athavan CH

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

அஞ்சலிகள்

  • கருத்துக்கள உறவுகள்

ஆழ்ந்த இரங்கல்கள்..!

இசை, எதற்காக இரங்கல் தெரிவித்தீர்கள் என்று அறிந்துகொள்ளலாமா??? 

தமிழர் என்பதனாலா??

இவர் பணியாற்றிய இடம் இந்தியாவின் ஒரு பகுதியென்று இந்தியா சொல்வதாலா???

இவரும், இவர்போன்ற லட்சக்கணக்கான இந்திய ஆக்கிரமிப்பு ராணூவம் நிலைகொண்டிருப்பது இந்தியாவால் அடாத்தாக ஆக்கிரமிக்கப்பட்ட காஷ்மீர் எனும் ஒரு தனி நாட்டில். இவர்களின் ஆக்க்ரமிப்பிற்கெதிராகப் போராடிவரும் மக்களைத்தான் தீவிரவாதிகள் என்கிற போர்வையில் இவர்கள் கொன்றுவருகிறார்கள்.

இந்திய ஆதிக்கவாதம் கட்டளையிட்டதறகு இணங்க காஷ்மீரில் இனக்கொலை செய்யச் சென்றிருக்கும், இவரும் இவரது கூட்டமும், ஈழத்திற்குச் சென்று இனவழிப்பு நடத்துங்கள் என்றாலும் உடனேயே வந்து செய்வார்கள். 1987 இலும் 2009 இலும் நாம் இதைப் பார்த்தோம்.

தமிழர் என்பதற்காக இரங்குகிறோம் என்றால், கருணா, டக்கிளஸ், ஆனந்தசங்கரி,........... என்று இன்னும் பல தமிழர்கள் இருக்கிறார்கள். அவர்கள் மறைவுக்கும் இரங்கவேண்டியிருக்கும்.  

இந்தியா தனது நாடு என்பதை நம்பி அவர் இராணுவத்தில் இணைந்துள்ளார். அவர் இணைந்தகாலம் நானும் நீங்களும்கூட இந்தியாவை மதித்து நடந்த காலம். அப்படி இருக்கும்போது அவரை மட்டும் எப்படி குற்றம் சொல்வது?

அதுபோல, கருணா, டக்ளஸ் போன்றவர்களுக்கு இரக்கம் கிடையாது. ஆனால் அவர்களை தெரியாத்தனமாக நம்பி மாண்டவர்களுக்காக நிச்சயம் மனவிரக்கம் இருக்கும்.

சலாப்பல்... :D
  • கருத்துக்கள உறவுகள்

சலாப்பல்... :D

அடப்பாவிகளா.. எதையாவது சொல்லி ஒப்பேற்ற விடமாட்டிங்களா?? :D

இந்திய அட்டூழிய இராணுவம் ஈழத்தில் நின்றபோது பல உயிர்களை காப்பாற்றி விட்டவர்கள் தமிழ் இராணுவ வீரர்கள்.. அடுத்த நாள் சுற்றி வளைப்பு உள்ளது என்றால் முன்கூட்டியே சொல்லிவிட்டுப் போனவர்களும் உள்ளார்கள். இதனால் பல போராளிகள் இடம் மாறி தப்பித்துக்கொண்ட நிகழ்வுகளும் உண்டு. சாட்சி அருகில் உண்டு. :D

ஆக, தமிழர்களை அவர்கள் இந்திய இராணுவத்தில் இருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக வெறுக்க முடியுமா?

Edited by இசைக்கலைஞன்

  • கருத்துக்கள உறவுகள்

வேற வேலை இல்லாமல் இதில போய் வீணாகச் செத்திருக்கார்

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவிகளா.. எதையாவது சொல்லி ஒப்பேற்ற விடமாட்டிங்களா?? :D

இந்திய அட்டூழிய இராணுவம் ஈழத்தில் நின்றபோது பல உயிர்களை காப்பாற்றி விட்டவர்கள் தமிழ் இராணுவ வீரர்கள்.. அடுத்த நாள் சுற்றி வளைப்பு உள்ளது என்றால் முன்கூட்டியே சொல்லிவிட்டுப் போனவர்களும் உள்ளார்கள். இதனால் பல போராளிகள் இடம் மாறி தப்பித்துக்கொண்ட நிகழ்வுகளும் உண்டு. சாட்சி அருகில் உண்டு. :D

ஆக, தமிழர்களை அவர்கள் இந்திய இராணுவத்தில் இருக்கிறார்கள் என்கிற ஒரே காரணத்திற்காக வெறுக்க முடியுமா?

தமிழர்களை அவர்கள் இந்திய ராணூவத்தில் இருப்பதனால் வெறுக்கமுடியுமா என்கிற கேள்வியை, தமிழர்கள் இலங்கை ராணுவத்திலும், ஒட்டுக்குழுக்களிலும் இருப்பதால்  வெறுக்கமுடியுமா என்கிற கேள்வியுடன் ஒப்பிட்டுப் பார்க்கிறேன். என்னால் வெறுக்காமல் இருக்கமுடியவில்லை இசை. 

ஆனாலும், தமிழ இந்திய ராணுவ வீரர்களின் உதவிகுறித்து நானும் கேள்விப் பட்டிருக்கிறேன். தானாடாவிட்டாலும் தன் தசையாடும் என்று கூறுவார்களே, அதுமாதிரி.  ஆனால், சில காலத்தின்பின்னர், தமிழ் ராணூவ வீரர்கள் மாற்றப்பட்டு வேறு இனத்தவர்கள் அனுப்பப்பட்டதும் நினவிலிருக்கிறது. 

சரி விடுங்கள், பாவம், இந்தியத் தேசியவாதத்தால் உந்தப்பட்டு போனவராக இருக்கலாம். அவரது குடும்பத்திற்கு எனது அஞ்சலியும் சேரட்டும்.  :(

  • தொடங்கியவர்

WR_20140428140121.jpeg

  • கருத்துக்கள உறவுகள்

அங்கு என்னவெல்லாம் அட்டகாசம் செய்தாரோ??

இவரது மரணம் வெளியில் வந்துள்ளது

ஆனால் அப்பாவிகள் எத்தனைபேர்  சுடப்பட்டார்களோ  வதைக்கப்பட்டார்களோ???

இந்திய வஞ்சனையையும் அதன் காட்டுமிராண்டித்தனங்களையும் அறியாதவரா நாம்??

தமிழராய் இருந்ததனால் 

இவர்  நல்லவர் என்ற  முடிவுக்கு வரமுடியாது :(

  • தொடங்கியவர்

ELARGE_20140428120839132946.jpeg

  • தொடங்கியவர்

14_1867162g.jpg

4_1867116g.jpg

15_1867161g.jpg

20_1867156g.jpg

t_1867173g.jpg

இப்படி கூட ஒரு அஞ்சலி இல்லாமல் பலர் போய்சேர்ந்து இருக்கின்றார்கள் .

ஆழ்ந்த அஞ்சலிகள் .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.