Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கிளிநொச்சியில் பாற்பொருட்கள் உற்பத்தி நிலையம் திறந்து வைப்பு

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிளிநொச்சி அறிவியல் நகரில் பாற்பொருட்கள் உற்பத்தி நிலையம் திறந்து வைக்கப்பட்டுள்ளது. நேற்று செவ்வாய்க்கிழமை (29.04.2014) வடமாகாண விவசாய, கமநலசேவைகள், கால்நடை அபிவிருத்தி, நீர்ப்பாசனம் மற்றும் சுற்றாடல் அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இதனைத் திறந்து வைத்துள்ளார்.

 

35.jpg

கிளிநொச்சி மாவட்டக் கால்நடை உற்பத்தியாளர்கள் பாலைச் சேமிப்பதிலும், பாலைப் பதப்படுத்தி அதிலிருந்து யோகட், நெய், வெண்ணெய் மற்றும் கட்டிப்பால் போன்றவற்றைத் தயாரிப்பதிலும் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர். இவற்றைக் கருத்திற்கொண்டு ஐ.ஓ.எம் எனப்படும் இடம்பெயர்வுக்கான சர்வதேச அமைப்பு அவுஸ்ரேலிய அரசின் நிதியுதவியுடன் சகல வசதிகளுடனும் கூடியதாக இந்தப் பால் உற்பத்தி நிலையத்தை அமைத்துக் கொடுத்துள்ளது.

72.jpg

 

கரைச்சிப் பிரதேச கால்நடை வளர்ப்போர் கூட்டுறவுச் சங்கத் தலைவர் ச.சந்திரசேகரத்தின் தலைமையில் நடைபெற்ற இக்கட்டிடத்தின் திறப்பு விழாவில் பிரதம விருந்தினராக வடமாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன், சிறப்பு விருந்தினராக நாடாளுமன்ற உறுப்பினர் சி.சிறீதரன், கௌரவ விருந்தினர்களாக வடமாகாணசபை உறுப்பினர் சு.பசுபதிப்பிள்ளை, மாகாண கால்நடை உற்பத்திச் சுகாதாரத் திணைக்களப் பணிப்பாளர் சி.வசிகரன், ஐ.ஓ.எம் நிறுவனத்தின் கிளிநொச்சி மாவட்ட அலுவலகப் பொறுப்பதிகாரி வ.வரதாபரன் ஆகியோரும் கலந்து கொண்டிருந்தார்கள்.

 

82.jpg

 

http://www.e-jaffna.com/archives/24389

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி. இதனை இன்னும் வளர்க்க வேண்டும். மேலும்.. உள்ளூர் புரதப் பற்றாக்குறையை நீக்கக் கூடிய வகைக்கு உற்பத்திகளை தரங்களில் அடக்கி.. ஊட்டச் சத்து போதாத இடங்களுக்கு மலிவு மானிய விலையில்.. உற்பத்திகளை வழங்குவதோடு.. ஏற்றுமதி தரத்திற்கு உற்பத்தி செய்பவற்றின் மூலம் ஆதாயமும் தேடிக் கொள்ளலாம். உள்ளூர் தேவைகளை பூர்த்தி செய்த பின் தான் ஏற்றுமதி இருக்க வேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல முயற்சி

 

பொ.ஐங்கரநேசன்  அவர்கள் மிகவும் நல்லவிடயங்களை

தூரநோக்கோடு

அதேநேரம் அவசரமாக  செய்கின்றார்

அவரது முயற்சிகளுக்கு ஆண்டவன் துணையிருக்கணும்

முல்லைத்தீவு மன்னார் பகுதிகளிலையும்   தொடர்ச்சியாக  திறந்து வைத்தால் மக்களுக்கு நன்மையாக இருக்கும்... 

ஐங்கரநேசன் அண்ணர் அலுவலில் கண்ணாய் இருக்கிறார். நன்றி.

  • கருத்துக்கள உறவுகள்

ஐங்கரநேசன் அண்ணர் அலுவலில் கண்ணாய் இருக்கிறார். நன்றி.

 

எங்கட ஆசிரியர். அவர் எப்பவுமே முன்னோடியாக அறிவியல் ரீதியாக சிந்திக்கும் ஒருவர் தான். அதில் சந்தேகமேயில்லை.

 

போர்காலப் பொருண்மியத்தில் இவர் ஆற்றிய பங்குகளையும் குறிப்பிடலாம். ஆனால்.. அது இன்றைய சூழலில் சில வேண்டாத விளைவுகளுக்கு காரணமாகலாம்.

 

நிச்சயம்.. எமது தேச மக்கள் எமது வழங்களை நம்பி இருப்பதும்.. தமது உழைப்பில் தமது வளத்தை காத்து வாழ்வதும்.. நாம் தனித்துவமானவர்கள் என்பதை சொல்ல எப்பவும் அவசியம். :icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

யாழ். இந்துக் கல்லூரியில் படித்த 80 வீதமான ஆட்கள். நல்ல... புத்திசாலிகள்.
 

அதில்... ஐங்கரநேசனும் ஒருவர்.

 

ஆனால், அந்தக் கல்லூரியின் பெயரை... கெடுக்க வேண்டும்,

என்ற நோக்கத்தில் சிலர் கனடாப் பக்கம், புலம் பெயர்ந்துள்ளார்கள்.

எங்கட ஆசிரியர். அவர் எப்பவுமே முன்னோடியாக அறிவியல் ரீதியாக சிந்திக்கும் ஒருவர் தான். அதில் சந்தேகமேயில்லை.

போர்காலப் பொருண்மியத்தில் இவர் ஆற்றிய பங்குகளையும் குறிப்பிடலாம். ஆனால்.. அது இன்றைய சூழலில் சில வேண்டாத விளைவுகளுக்கு காரணமாகலாம்.

நிச்சயம்.. எமது தேச மக்கள் எமது வழங்களை நம்பி இருப்பதும்.. தமது உழைப்பில் தமது வளத்தை காத்து வாழ்வதும்.. நாம் தனித்துவமானவர்கள் என்பதை சொல்ல எப்பவும் அவசியம். :icon_idea:

உண்மை.

இந்த கோடை கனடிய தமிழ் விவசாயிகள் ஒன்று சேர்ந்து ஐங்கரநேசன் அண்ணரின் திட்டங்களுக்கு உதவும் யோசனை இருக்கிறது.

இயற்கை விவசாயம், இயற்கை விதை விநியோகம் போன்ற திட்டங்களை ஊக்குவிக்கவேண்டும்.

  • கருத்துக்கள உறவுகள்

இந்த புண்ணியவாளனை  ( பொ.ஐங்கரநேசன்) சந்திக்கும் வாய்ப்பு எனக்கு கடந்த மாச் மாதம் கிடைத்தது.அது பற்றி விரைவில் விளக்கமாக எழுதுகிறேன்.

இவர் போராட்ட காலங்களில் என்ன செய்தவர்....அரசியலில் இருந்தாரா?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.