Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

நரேந்திரமோடியின் வரவு ஈழத் தமிழருக்கு நன்மை தருமா..?

Featured Replies

நரேந்திரமோடியின் வரவு ஈழத் தமிழருக்கு நன்மை தருமா..?

காங்கிரஸ் ஆட்சியை இறக்கியதே தமிழருக்கு அவர் செய்த பெரு நன்மைதான்.

இந்தியாவின் அரசியலே ஈழத் தமிழ் மக்களின் கண்ணீருக்கு முக்கிய காரணம், இந்தியா அல்லாத வேறொரு நாடு அருகில் இருந்திருந்தால் இதுபோல வரலாற்றுத் தவறு நடந்திருக்காது.. இது ஓர் ஆய்வு.

இந்த அவல நிலையில் மோடி எத்தகைய மாற்றத்தை ஏற்படுத்துவார்…? இதுதான் இந்திய தேர்தலின் பின் புலம் பெயர் நாடுகளில் எழுந்துள்ள கேள்வி..

மோடி ஆட்சிக்கு வருவார் என்பதை முன்கூட்டியே அறிந்து காங்கிரஸ் அவசரமாக இரு காரியங்களைச் செய்து முடித்திருக்கிறது..

01. மோடி அடுத்த தேர்தலைச் சந்திக்கும்வரை ஐந்தாண்டு காலம் புலிகளுக்கு இந்தியாவில் தடை.

02. சிறீலங்கா அரசால் அறிமுகம் செய்யப்பட்ட 16 தமிழ் அமைப்புக்களுக்கும், 424 தமிழர்களுக்குமான தடையை இந்தியாவையும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளச் செய்தது.

செய்ய வேண்டிய எத்தனையோ விடயங்கள் இருக்க அவர்கள் செய்த முக்கிய விடயங்கள் இவை இரண்டும்தான்.

இந்த இரண்டு விடயங்களையும் மோடி ஆட்சி மாற்றினால்… காங்கிரஸ் நீதிமன்று செல்லும்.. வழக்கு முடிவடைய அடுத்த தேர்தல் வந்துவிடும்..

இந்த முடிவுகளை ஒரு பாதுகாப்பிற்காக காங்கிரஸ் இயற்றினாலும், முன்னதாகவே புலிகள் தலைவரையும், அவர் சார்ந்த கொள்கைகளையும் ஆதரிக்க மாட்டோமென்று பா.ஜ.க தெரிவித்துவிட்டது.

இருந்தாலும் பா.ஜ.கவை இந்த விடயத்தில் காங்கிரஸ் நம்பவில்லை என்பதுதான் இதற்கு முக்கிய காரணம்.

ஏற்கெனவே வாஜ்பாய் காலத்தில் ஐந்தாண்டு காலம் ஆட்சியில் இருந்த பா.ஜ.க ஈழத்தமிழர் விவகாரத்தில் காங்கிரசின் விருப்பத்திற்கு மாறாக எதையும் செய்து காட்டவில்லை.

இந்திய கொள்கை வகுப்பாளரின் திட்டங்களின் அடிப்படை அச்சாணியை மாற்ற பா.ஜ.கவினால் முடியவில்லை..

அப்படியிருக்க இப்பொழுது மட்டும் காங்கிரஸ் ஏன் அவசரப்பட்டது..

காரணம் அன்று பா.ஜ.கவிற்கு இல்லாத பெரும்பான்மை இப்போது பா.ஜ.கவிற்கு கிடைத்துவிடும் என்று காங்கிரசிற்கு தெரியும்.

வாஜ்பாய் – எல்.கே.அத்வானியின் பா.ஜ.க அல்ல இப்போது வந்திருப்பது இது மோடியின் பா.ஜ.க மிகவும் வித்தியாசமானது.

ஈழத் தமிழருக்காக இல்லாவிட்டாலும், காங்கிரசை பெரும் பொறிக்கிடங்கில் மாட்டிவிட அவர் ஈழத் தமிழர் விவகாரத்தை கையிலெடுக்க வாய்ப்புள்ளது.

இந்த எண்ணங்களுக்கு ஆதாரமாக இப்போது இரண்டு பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன..

01. பா.ஜ.க அறுதிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்துள்ளது, அதன் ஆட்சியை ஆட்டுவதற்கு அடுத்த ஐந்து வருட காலத்திற்கு காங்கிரசால் முடியாது… நல்லாட்சி தந்தால் பத்தாண்டு காலமும் நீடிக்கலாம் பா.ஜ.க ஆட்சி..

02. தமிழகத்திலும் ஈழத் தமிழினத்திற்கு ஆதரவான கட்சிகளே வெற்றி பெற்றுள்ளன..

இப்படியொரு வாய்ப்பு 2009 தேர்தலில் ஏற்பட்டிருந்தால் தமிழர்கள் தப்பியிருப்பார்கள், இப்போது ஐந்தாண்டு கடந்து அந்தத் தாமரை மலர்ந்துள்ளது.

நரேந்திரமோடியும், ஜெயலலிதாவும் நட்புடையவர்கள், தமது அரசுடன் மோடி நட்பாக செயற்படுவார் என்று தமிழக முதல்வர் இன்று கருத்துரைத்துள்ளார்.

இதற்கு என்ன காரணம்…?

தமிழக முதல்வருக்கும் காங்கிரசிற்கும் கடந்த காலங்களில் நல்லுறவு நிலவவில்லை, காரணம் காங்கிரஸ் விரும்பாத பிரேரணைகளை எல்லாம் நிறைவேற்றியவர் ஜெயலலிதா.

01. சட்டசபையில் சிறீலங்கா அரசுக்கு எதிராக போர்க்குற்ற விசாரணை வேண்டுமென தீர்மானம் நிறைவேற்றி காங்கிரசை கதிகலங்க வைத்தவர்..

02. சர்வஜன வாக்கெடுப்பு நடத்தி ஈழத் தமிழ் மக்கள் பிரிந்துபோக ஆவன செய்ய வேண்டுமெனக் கோரியவர்.

03. பேரறிவாளன், முருகன், சாந்தனை விடுதலை செய்ய வேண்டுமென தீர்மானம் போட்டவர்..

ஈழத்தமிழருக்கு ஆதரவாக சட்டசபையில் தீர்மானம் போட்ட முதல்வர்களில் இவருக்கு இணையானவர் எவரும் இல்லை.

இவரோடு நரேந்திரமோடி இணைந்தால் என்னவாகும்.. நிலமையில் கண்டிப்பாக மாற்றம் ஏற்படத்தான் செய்யும்.

இருப்பினும் தந்திரசாலியான நரேந்திரமோடி இலங்கைப் பிரச்சனையில் யாதொரு கருத்துக்களையும் வெளிப்படையாக தெரிவிக்காமலே தேர்தல் பிரச்சாரத்தை நடத்தியவர்.

தமிழருவிமணியன், வை.கோபாலசாமி, ராமதாஸ் அவரோடு நட்பாக உள்ளனர், ஈழத்தமிழர் விவகாரத்தில் அதே கருத்தோடு அ.தி.மு.கவும் இருக்கிறது – திமுகவும் அதற்கு தடையாக இருக்காது.

தமிழகத்தில் காங்கிரஸ் குரல் ஏறத்தாழ அஸ்த்தமனமாகிவிட்டது..

இந்த நிலையில்… மோடிக்கு ஈழத்தமிழருக்கு உதவ சில வாய்ப்புக்கள் உள்ளன :

01. தமிழக அரசு நிறைவேற்றும் தீர்மானங்களை அந்த அரசை மதித்து அங்கீகரிக்க வழியுள்ளது, தமிழகத்தில் கட்சிகள் பிளவுபட்டு நிற்கின்றன என்று சாக்குப்போக்குக் கூற இனி இடமில்லை.

நான் மாநில அரசை மதித்து நடக்கிறேன் அங்கு போய் கேள் என்று காங்கிரசுக்கு அவர் பதில் கூறலாம் -

02. காங்கிரசுடன் செய்த இரகசிய ஒப்பந்தங்களை வெளியிடுவேன் என்று மகிந்த அரசு மிரட்டினாலும் அதற்கு பணிய வேண்டிய தேவை மோடிக்கு இல்லை.

03. மேலும் கடும்போக்கு பௌத்த மதவாதியான மகிந்தவும், கடும்போக்கு இந்துத்துவா மோடியும் இணைய வாய்ப்பில்லை.

04. 1983 யூலையில் இருந்து இலங்கை தொடர்பாக நேரு குடும்பம் எடுத்த கொள்கைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்திருப்பதால் ஒரு மாற்று நிலைப்பாடு எடுத்தால் எப்படியிருக்குமென கூரிய மூளையுள்ள மோடி சிந்திக்கலாம்.

05. கண்ணுக்குத் தெரியாத அருவமாக தாய்லாந்து, சீனா, பர்மா என்று பௌத்த நாடுகள் ஓர் அணியாக உருவெடுப்பதை அவருடைய இந்துத்துவா கண்கள் கண்டிப்பாக அடையாளம் கண்டிருக்கும். சிறீலங்காவில் உடைக்கப்படும் இந்துக் கோயில்களும் அங்கு தலைவிரி கோலமாக ஆடும் மதவாதமும் அவருக்கு தெரியாத கூத்துக்கள் அல்ல.

இந்த ஐந்து காரணங்களும் மோடி ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க உதவும்.

இதை ஈழத் தமிழருக்கு முன்பே சரியாக எடைபோட்டவர் மகிந்த ராஜபக்ஷதான், அதுதான் போர்க்குற்ற விசாரணை மட்டும் இல்லை மற்ற அனைத்தையும் வழங்கத் தயார் என்று தனது ஏமாற்று வார்த்தைகளை மோடியை நோக்கி வீசியிருக்கிறார்.

ஆனால் மோடி அறிவு குன்றிய வட இந்திய அரசியல்வாதிகளைப் போன்றவர் அல்ல குஜராத்தில் இருந்து இந்திய அரசியலை சரியாக எடைபோட்டு, குறிவைத்து அடித்து வீழ்த்தியிருக்கிறார்.

இருப்பினும்; மோடி முன் இருக்கும் ஆயிரம் பிரச்சனைகளில் ஈழத்தமிழர் விவகாரம் ஒரு சிறிய பிரச்சனைதான்..

மேலும் காங்கிரசைப்போல ஈழத் தமிழரைப் பழி தீர்க்க வேண்டுமென்ற கோபம் அவருக்கு இல்லை.

எனவே இந்த விடயத்தில் அவர் நிதானமாக சிந்திக்க வாய்ப்புண்டு.

மிகவும் கெட்டித்தனமான நிர்வாகியான அவர் ஈழத் தமிழர் விவகாரத்தின் கருவூலத்தில் கை வைக்க முன்னர் புலம் பெயர் தமிழ் மக்களையும் இந்தியாவையும் பிளவுபடுத்த உருவாக்கப்பட்டுள்ள வியூகங்களை மாற்றினால் மற்றய விடயங்களில் பெரும் மாற்றம் ஏற்படும்.

அவர் அதைச் செய்வார் என்றே கருதப்படுகிறது.. இந்தியாவுடன் ஈழத் தமிழர் நட்பாக மாறக்கூடிய ஒரு சூழலை அழிக்க வேண்டிய வன்மம் எதுவும் அவர் மனதில் இல்லை.

இதையெல்லாம் சரியா உணராமல்…

மோடியும் ஒன்றுதான் காங்கிரசும் ஒன்றுதானென்று நம்மில் சிலர் விரக்தியில் பேசலாம்… எழுதலாம்..

ஆனால்.. கூர்ந்து சிந்தித்துப்பார்த்தால்..

காங்கிரஸ் ஆட்சியில் இல்லாமல் இருப்பதே ஈழத் தமிழரைப் பிடித்திருந்த இருளில் பாதி விலகிவிட்டதென்பதன் அடையாளம் என்பதை புரிதல் வேண்டும்..

காங்கிரசை ஆட்சியில் இருந்து இறக்கியிருப்பதைவிட வேறென்ன பெரிய நன்மையை அவர் செய்திருக்க முடியும்..

வரும் ஐந்தாண்டு காலம் ஈழத் தமிழருக்கு மேலும் பிரகாசமாக இருக்க வேண்டும், அது தானாக பிரகாசிக்காது ஈழத் தமிழர்கள் நம்பிக்கையுடன் சர்வதேச தரத்தில் செயற்பட்டால் சாத்தியமாகும்.

மற்றவர்கள் சொன்னார்கள் செய்ய முடியவில்லை ஆனால் மோடி சொல்லவில்லை ஈழத் தமிழருக்கான முதல் பெரு நன்மையை அவர்தான் செயல் முறையில் செய்திருக்கிறார்.

அலைகள்

  • கருத்துக்கள உறவுகள்

நரேந்திரமோடியின் வரவு ஈழத் தமிழருக்கு நன்மை தருமா..?

....

01. தமிழக அரசு நிறைவேற்றும் தீர்மானங்களை அந்த அரசை மதித்து அங்கீகரிக்க வழியுள்ளது, தமிழகத்தில் கட்சிகள் பிளவுபட்டு நிற்கின்றன என்று சாக்குப்போக்குக் கூற இனி இடமில்லை.

நான் மாநில அரசை மதித்து நடக்கிறேன் அங்கு போய் கேள் என்று காங்கிரசுக்கு அவர் பதில் கூறலாம் -

02. காங்கிரசுடன் செய்த இரகசிய ஒப்பந்தங்களை வெளியிடுவேன் என்று மகிந்த அரசு மிரட்டினாலும் அதற்கு பணிய வேண்டிய தேவை மோடிக்கு இல்லை.

03. மேலும் கடும்போக்கு பௌத்த மதவாதியான மகிந்தவும், கடும்போக்கு இந்துத்துவா மோடியும் இணைய வாய்ப்பில்லை.

04. 1983 யூலையில் இருந்து இலங்கை தொடர்பாக நேரு குடும்பம் எடுத்த கொள்கைகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்திருப்பதால் ஒரு மாற்று நிலைப்பாடு எடுத்தால் எப்படியிருக்குமென கூரிய மூளையுள்ள மோடி சிந்திக்கலாம்.

05. கண்ணுக்குத் தெரியாத அருவமாக தாய்லாந்து, சீனா, பர்மா என்று பௌத்த நாடுகள் ஓர் அணியாக உருவெடுப்பதை அவருடைய இந்துத்துவா கண்கள் கண்டிப்பாக அடையாளம் கண்டிருக்கும். சிறீலங்காவில் உடைக்கப்படும் இந்துக் கோயில்களும் அங்கு தலைவிரி கோலமாக ஆடும் மதவாதமும் அவருக்கு தெரியாத கூத்துக்கள் அல்ல.

இந்த ஐந்து காரணங்களும் மோடி ஈழத் தமிழ் மக்களுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுக்க உதவும்.

அலைகள்

01. தமிழக அரசு நிறைவேற்றும் தீர்மானங்களை அந்த அரசை மதித்து அங்கீகரிக்க வழியுள்ளது, தமிழகத்தில் கட்சிகள் பிளவுபட்டு நிற்கின்றன என்று சாக்குப்போக்குக் கூற இனி இடமில்லை.

நான் மாநில அரசை மதித்து நடக்கிறேன் அங்கு போய் கேள் என்று காங்கிரசுக்கு அவர் பதில் கூறலாம் -

அரசை மதித்து தீர்மானங்களை அங்கீகரிப்பது அரசியலில் நடப்பதில்லை. அரசியல் தேவைகளின் அடிப்படையிலும் நாடுகளின் தேவைகளின் அடிப்படையிலுமே அரசாங்கங்கள் செயல் படுகின்றன. தேர்தல் முடிந்து விட்டது. அறுதிப்பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு இனி இலங்கை தமிழர் பிரச்சினை தேவை இல்லை.

03. மேலும் கடும்போக்கு பௌத்த மதவாதியான மகிந்தவும், கடும்போக்கு இந்துத்துவா மோடியும் இணைய வாய்ப்பில்லை.

....

05. கண்ணுக்குத் தெரியாத அருவமாக தாய்லாந்து, சீனா, பர்மா என்று பௌத்த நாடுகள் ஓர் அணியாக உருவெடுப்பதை அவருடைய இந்துத்துவா கண்கள் கண்டிப்பாக அடையாளம் கண்டிருக்கும். சிறீலங்காவில் உடைக்கப்படும் இந்துக் கோயில்களும் அங்கு தலைவிரி கோலமாக ஆடும் மதவாதமும் அவருக்கு தெரியாத கூத்துக்கள் அல்ல.

இலங்கையில் தான் தமிழருக்கும் பௌத்தருக்கும் பிளவு. இந்துக்களுக்கும் பௌத்தருக்கும் இந்தியாவில் பிளவு இல்லை. இந்தியாவில் இருப்பது முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையேயான பிளவாகும். மோடிக்கு பௌத்தம் ஒரு பிரச்சினையே இல்லை.

ஆனால் மறுவளமாக இந்தியாவில் தமிழ் நாட்டில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக தமிழ் தேசிய சக்திகள் தலை எடுப்பதை மோடி ஒருபோதும் விரும்ப மாட்டார். வட இந்தியாவின் மாவோ தீவிரவாதிகளின் வன்முறையும் தென் இந்தியாவின் தமிழ் தேசியவாதிகளின் வன்முறையும் ஈழத்தமிழருக்கு எதிரான தடையை தொடர மோடிக்கு காரணங்களாக அமையும்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கமும் அதற்கு எதிராக தமிழர் பக்கம் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் நிற்பதே மோடிக்கு இலங்கை பற்றிய கரிசனைக்கு காரணங்களாக அமைய கூடியவை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
 
///அரசை மதித்து தீர்மானங்களை அங்கீகரிப்பது அரசியலில் நடப்பதில்லை. அரசியல் தேவைகளின் அடிப்படையிலும் நாடுகளின் தேவைகளின் அடிப்படையிலுமே அரசாங்கங்கள் செயல் படுகின்றன. தேர்தல் முடிந்து விட்டது. அறுதிப்பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு இனி இலங்கை தமிழர் பிரச்சினை தேவை இல்லை.///
 
இலங்கைத் தமிழர் பிரச்னையை, இந்தியா கைவிட்டு தசாப்தங்களையும் கடந்து விட்டது.

அரசை மதித்து தீர்மானங்களை அங்கீகரிப்பது அரசியலில் நடப்பதில்லை. அரசியல் தேவைகளின் அடிப்படையிலும் நாடுகளின் தேவைகளின் அடிப்படையிலுமே அரசாங்கங்கள் செயல் படுகின்றன. தேர்தல் முடிந்து விட்டது. அறுதிப்பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு இனி இலங்கை தமிழர் பிரச்சினை தேவை இல்லை.

புலிகளை தடை செய்யதது அரசியல் தேவை அடிப்படையில் இல்லை  பயங்கரவாத நல்லெண்ண அடிப்படையில் ,   ஆனால் இலங்கை அரச பயங்கரவாதம் அரசியல் அடிப்படையில் அணுகப்படும்  

இதை தானே சொல்ல வாறியள்...??  :icon_mrgreen:  :icon_mrgreen:  :icon_mrgreen:

அரசை மதித்து தீர்மானங்களை அங்கீகரிப்பது அரசியலில் நடப்பதில்லை. அரசியல் தேவைகளின் அடிப்படையிலும் நாடுகளின் தேவைகளின் அடிப்படையிலுமே அரசாங்கங்கள் செயல் படுகின்றன. தேர்தல் முடிந்து விட்டது. அறுதிப்பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு இனி இலங்கை தமிழர் பிரச்சினை தேவை இல்லை.

இலங்கையில் தான் தமிழருக்கும் பௌத்தருக்கும் பிளவு. இந்துக்களுக்கும் பௌத்தருக்கும் இந்தியாவில் பிளவு இல்லை. இந்தியாவில் இருப்பது முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையேயான பிளவாகும். மோடிக்கு பௌத்தம் ஒரு பிரச்சினையே இல்லை.

ஆனால் மறுவளமாக இந்தியாவில் தமிழ் நாட்டில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிராக தமிழ் தேசிய சக்திகள் தலை எடுப்பதை மோடி ஒருபோதும் விரும்ப மாட்டார். வட இந்தியாவின் மாவோ தீவிரவாதிகளின் வன்முறையும் தென் இந்தியாவின் தமிழ் தேசியவாதிகளின் வன்முறையும் ஈழத்தமிழருக்கு எதிரான தடையை தொடர மோடிக்கு காரணங்களாக அமையும்.

இலங்கையில் சீனாவின் ஆதிக்கமும் அதற்கு எதிராக தமிழர் பக்கம் ஐரோப்பிய ஒன்றியமும் அமெரிக்காவும் நிற்பதே மோடிக்கு இலங்கை பற்றிய கரிசனைக்கு காரணங்களாக அமைய கூடியவை.

மோடி=தமிழ் ஈழம், புலிகலையும் தமிழ் ஈழ விடுதலை போராட்டத்தை எதிர்த்தவர்கள் இந்தியா அல்ல, காங்கிரஸ்ஸை இயக்கிய ஒரு குழுவினர், அவர்களுக்கு இந்தியாவின் நலன்களை விட தமது இனத்தின் நலன்கள் தான் முக்கியம், சீனாவின் ஆதிக்கம் ஒன்றே காணும் இந்தியா தமிழருக்கு சார்பாக இயங்க, உகிரெயினில் அது தான் நடக்குது, அவர்கள் மேற்கு நோக்கி நகர ரஷியா உக்கிரைனை கிழமைக்கு ஒரு பிரதேசமாக பிரிக்குது !!! என்வே இந்தியாவுக்கு இலகுவான நகர்வு என்னவென்றால் தமிழ் ஈழத்தை அமைத்து அதை தனக்கு சாதகமாக பயன்படுத்துவது தான், அதாவது அமெரிக்காவுக்கு எப்படி பிலிபைன்ஸ் கிழக்கு ஆசியாவிலும், போலன்ட்,லித்துவெனியா போன்ற நாடுகள் கிழக்கு ஜரோப்பவிலும், எகிப்த்து முபாரக் காலத்தில் செயத மாதிரி. அதை விட RSS,VHP போன்ற அமைப்புக்கள் தமிழருக்கு ஆதரவான அமைப்புக்களே,எங்கட ஆக்களுக்கு ஒரு வியாதி இருக்கு இந்து என்ற ஒரு சொல் வந்தவுடனேயே அதை உடன்டியாக தமிழருக்க் எதிரான அமைப்பு என்று முத்திரை குத்துவீனம், அதே போல் திராவிடம் என்ற சொல் வந்தால் அதை தலையில் தூக்கி வைப்பீனம், போர் நடந்த போது நான் திருமாவளவன் எல்லம் நம்பிக்கையானவர் அல்ல என்ற வாதம் களத்தில் இருந்து நீக்கப்பட்டது ஆனால் அதே திருமாவளவனுடைய சுயரூபம் இப்போது தெரிந்து இருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

நரேந்தரமோடி ஆதரவா, எதிரா என்பது எல்லாம் பிரச்சனை இல்லை. எப்படி யார் இருப்பினும் அவர்களை எமக்குச் சாதமாக எவ்வாறு மாற்றுவது என்பது குறித்தே நாம் ஆராய வேண்டும். சீனாவையும் எம் சார்பாக மாற்றக் கூடிய காரணிகளையும் நாம் சிந்திக்க வேண்டும். அது தான் எங்களுக்கு அவசியமானது. காங்கிரஸ் அரசு செய்தது பழிவாங்கும் அரசியல். அது இந்தியா குறித்தான பாதுகாப்பாக இருக்கவில்லை. விரைவில் 5 ஆண்டு காலத்துக்கு தடை விதித்தது பற்றியதான வழக்குப் பதியப்படும் என நினைக்கின்றேன். அத்தோடு நரேந்திர மோடி குறித்தான பெண் வழக்கினையும் காங்கிரஸ் முன்னெடுக்க முயன்றதால், பழிவாங்கும் அரசியல் குறித்து அவர் சார்ப்பானவர்களும் இதில் அக்கறை செலுத்தக்கூடும். செலுத்த வைக்க வேண்டும்....

உங்களுக்கு இவர்கள் ஆதரவு கிடைக்காது. அவர்களின் ஆதரவு கிடைக்காது. போராடுவது முட்டாள்தனம்.... என்று சொல்லிக் கொள்பவர்களின் பேச்சு எங்களுக்குப் பழகிப் போச்சு... எனவே உங்களின் சக்தியை வீணாக்காதீர்கள்...

2009ம் ஆண்டு கனடா வீதிகளில் இறங்கிப் போராடும்போது, கனடா அரசு மீது தமிழ்மக்களும், தமிழ்மக்கள் மீது அவர்களும் வெறுப்பில் இருந்தார்கள். தமிழீழக் கொடியைப் பிடித்ததற்காக ஒரு வித வெறுப்பினைச் சில கனேடியர்கள் உமிழ்ந்தனர். ஆனால் அந்த நிலையில் நிறைவான மாற்றம் ஏற்படவில்லையா? அந்த மாற்றத்தைச் சரியோ பிழையோ ஒவ்வொரு புலத்தமிழனின் போராட்டமும் தந்தது. இன்று சிங்கள அடிவருடிகள் சொல்வார்கள், அரசியலுக்காகத் தான் கனடா இப்படிச் செய்கின்றது என்று.... செய்யட்டும். அப்படி எங்களிடம் ஒரு பலம் இருக்கின்றது என்பதை இந்த 5 ஆண்டுகளில் புரிய வைத்த சிங்கள அடிவருடிகளுக்கு நன்றிகள்...

2009 ஆண்டு கனடா புலிக்கொடி கொண்டுவந்ததால் தமிழர்களை கண்டு கொள்ளவில்லை என்றது அனைவரும் அறிந்த உண்மை .

கொன்சவேட்டிவ் அரசு வந்தவுடன் புலிகளை தடை செய்ததும் உலகறிந்த விடயம் .

பின்னர் நாட்டில் புலிகள் அழிந்துவிட்டார்கள் என்பதால் இப்போ தமிழர்களுக்கு தீர்வை வைக்க சொல்லி சிறிலங்கா அரசை நெருக்குகின்றது .

இங்கு எவரும் அரசியல் செய்து அவர்கள் மனதை மாற்றவில்லை புலிகள் அழிந்ததால் அவர்கள் தங்கள் நிலையையை மாற்றிவிட்டார்கள் .

புலிகள் இப்பவும் இருந்தால் இன்றும் அவர்கள் நிலை மாறியிருக்கமாட்டாது .

இருபத்திஐந்து வருடங்களாக கனேடிய அரசுகளின் நிலையை மாற்றமுடியவில்லை புலிகள் அழிந்து இரு வருடங்களில் மாற்றி விட்டார்களாம் .இது செம கொமடி .

  • கருத்துக்கள உறுப்பினர்கள்
புலிகள் இல்லாத காலத்திலும் ஈழத்தமிழனின் உரிமைகள் நிறைவேற்றப்பட்டால்.......? விடுதலைப்புலிகளின் போராட்டங்களும் வெற்றிகளும் நினைவு கூரப்படும்.
 
உரியவர்களும் அவர்கள் தான்.
  • கருத்துக்கள உறவுகள்

அரசை மதித்து தீர்மானங்களை அங்கீகரிப்பது அரசியலில் நடப்பதில்லை. அரசியல் தேவைகளின் அடிப்படையிலும் நாடுகளின் தேவைகளின் அடிப்படையிலுமே அரசாங்கங்கள் செயல் படுகின்றன. தேர்தல் முடிந்து விட்டது. அறுதிப்பெரும்பான்மை பெற்ற கட்சிகளுக்கு இனி இலங்கை தமிழர் பிரச்சினை தேவை இல்லை.

இது நான் சொன்னது.

புலிகளை தடை செய்யதது அரசியல் தேவை அடிப்படையில் இல்லை  பயங்கரவாத நல்லெண்ண அடிப்படையில் ,   ஆனால் இலங்கை அரச பயங்கரவாதம் அரசியல் அடிப்படையில் அணுகப்படும்  

இதை தானே சொல்ல வாறியள்...??

இது உங்கள் புரட்டு.

இது நான் சொன்னது.

இது உங்கள் புரட்டு.

உங்கட தமிழ் அறிவை கண்டு வியக்கிறதை தவிர வேறை ஒண்டும் என்னாலை செய்ய முடியவில்லை... !!  

  • கருத்துக்கள உறவுகள்

2009 ஆண்டு கனடா புலிக்கொடி கொண்டுவந்ததால் தமிழர்களை கண்டு கொள்ளவில்லை என்றது அனைவரும் அறிந்த உண்மை .

ருவாண்டா படுகொலை நடந்தபோதும் ................... புலிகொடியுடந்தான் போயிருப்பார்களோ?
கனடா கண்டுகொள்ளவில்லை.
 
கனடா  இராணுவ அதிகாரிமட்டும் தனது பதவியை (ஐநா இராணுவ )தூக்கி எறிந்துவிட்டு வீட்டுக்கு போனார். 

நரேந்திர மோடியின் வருகை ஈழத்தமிழர்களுக்கு நன்மைபயக்கும் எப்போது என்றால் இலங்கையின் ஊடுறுவல் இந்திய அதிகாரிகள் மட்டத்தில் இல்லாமல் ஒழித்தால்.. சுப்புரமணிய சுவாமி, சுவாமா போன்றவர்களும் மேலும் மலையாள மற்றும் இலங்கையுடன் கொண்டாடிய எல்லோரும் வைக்குமிடத்தில் வைக்கப்படவேண்டும். மற்றும் இலங்கையின் நேரடி, தூதுக்கள், கூட்டமைப்புக்கள், போலிகள் கவனமாக கையாளப்படவேண்டும். தமிழ்மக்கள் தமிழ் நாட்டு, ஈழத்தமிழ்மக்கள் எப்போதும் நெருங்கிய, உடன் நிலைமைகளை தெளிவுபடுத்தும் உறவை மத்திய அரசுடன் என்றும் வைத்திருத்தல் வேண்டும். எக்காரணம் கொண்டும்(சகுனிகளின் சூழ்ச்சிகளினால்) மத்தியுடன் பகையை வளர்க்க இடம் கொடுக்காமல் எம்மினத்திற்கு வழிவகைகளை இராஜதந்திரமாக செயல்படுத்துவதில்தான் எல்லாம் இருக்கு. இலங்கையின் சூழ்ச்சிகளுக்கு மிக தந்திரமாக செயல்படவேண்டும்.. கோபால்சாமி ஐயாவின் , தமிழகமுதல் அமைச்சரின் கைகளில் மிகுதி...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.