Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மோடியும் மகிந்தவும் ஒரே தறியில் நெய்யப்பட்ட துணிகள்:

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
மோடியும் மகிந்தவும் ஒரே தறியில் நெய்யப்பட்ட துணிகள்: 
[sunday, 2014-05-18 07:43:13]
mahintha-modi-180514-150-news.jpg
இலங்கை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் இந்தியாவின் புதிய அரசாங்கத்தை அமைக்கப்போகும் நரேந்திர மோடியும் 'ஒரே கொள்கைத் தறியில் நெய்யப்பட்ட துணித் துண்டுகளே என்று இலங்கையின் அரசியல் விமர்சகரும் முன்னாள் இராஜதந்திரியுமான தயான் ஜயதிலக்க கூறுகின்றார். இருவரும் அரசியல் சித்தாந்த ரீதியிலும் தனிப்பட்ட ரீதியிலும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துப்போகக்கூடியவர்கள் என்றும் தயான் ஜயதிலக்க தெரிவித்தார்.
 
  
நரேந்திர மோடியே வெற்றிபெறுவார் என்பதை இலங்கை ஜனாதிபதி ஏற்கனவே நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்ததாகவும் அவர் கூறினார்.
 
'தமிழ்நாட்டிடம் தங்கியிராமல் அரசாங்கம் அமைக்குமளவுக்கு மோடி வெற்றிபெறுவார் என்று ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நம்பியிருந்தார்' என்று கூறினார் ஜயதிலக்க.
 
இலங்கையை ஆளும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதாக் கட்சிக்கும் இடையே பெரிய அளவில் நடைமுறை சித்தாந்தங்களில் வேறுபாடுகள் இருக்காது என்றும் முன்னாள் இராஜதந்திரி தயான் ஜயதிலக்க கூறினார்.
 
'ஒத்த எண்ணம் கொண்ட, தேசியவாத, வெகுஜன மக்களை வசப்படுத்தும் கொள்கை கொண்ட ஒருவர் முக்கிய அண்டை நாடான இந்தியாவின் பிரதமராவதை ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ வரவேற்கிறார்� என்றும் விபரித்தார் அவர்.
 
ராஜபக்ஷ ஆட்சியின் சித்தாத்தங்களை மதச்சார்பற்ற காங்கிரஸ் அரசாங்கத்தை விட, பாஜக ஆட்சியாளர்கள் புரிந்துகொள்வார்கள் என்கின்ற நம்பிக்கை மகிந்த ராஜபக்ஷவின் வட்டாரங்களிடம் காணப்படுகிவதாகவும் தயான் சுட்டிக்காட்டினார்.
 
எனினும் மகிந்த ராஜபக்ஷ எந்த பாத்திரத்தை வகிக்கப் போகிறார் என்பதைப் பொறுத்தே நரேந்திர மோடியுடனான உறவு அமையும் என்றும் கூறினார் தயான் ஜயதிலக்க,
 
�பௌத்தத்தை இலங்கைக்கு அனுப்பிய அசோகச் சக்கரவர்த்தியின் மென்மையான சக்தியை இணங்கி உள்வாங்கிக் கொண்ட இலங்கை மன்னன் தேவநம்பிய திஸ்ஸனின் பாத்திரமா அல்லது பாஜகவினர் நம்புகின்ற இராமாயணம் கூறுகின்ற இராவணனின் பாத்திரமா என்ற இரண்டு தெரிவுகளும் மகிந்தவிடமே உள்ளன� என்றார் தயான்.
 
இலங்கைத் தமிழர்களின் தீர்வு விடயத்திலோ அல்லது பாகிஸ்தானுடனான இலங்கையின் பாதுகாப்பு உறவுகள் குறித்து இந்தியாவுக்கு இருக்கின்ற கலக்கங்கள் குறித்தோ ராஜபக்ஷ தயக்கம் காட்டினால், அதற்கான விலையை அவரே கொடுக்க நேரிடும் என்றும் முன்னாள் இராஜதந்திரி தயான் சுட்டிக்காட்டினார்.
 
'மோடியின் பாஜக ஆட்சி, மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசாங்கத்தைப் போலவோ வாஜ்பாய் தலைமையிலான பழைய பாஜக அரசாங்கத்தைப் போலவோ பொறுமையைக் கடைப்பிடிக்கும் என்று எதிர்பார்க்க முடியாது� என்றும் கூறினார் இலங்கையின் இறுதிப் போர்க்காலத்தில் ஜெனீவா மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் பிரதிநிதியாக செயற்பட்ட முன்னாள் இராஜதந்திரி தயான் ஜயதிலக்க.
 
-BBC-
  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் சிறந்த சிஙகள அரசின் இராச தந்திரம் இது. மோடியோடு தமக்கு நெருக்கம் என்ற செய்தியைப் பரப்புவதன் மூலம், தனக்கு எதிராக எந்த நடவடிக்கையும், வராது இருக்க நடிக்கின்றது. தவிர, இப்படியான செய்தி பரப்பப்படும்போது, தமிழன ஆதரவாளர்கள் மோடியை நாடமாட்டார்கள் என்ற நிலையை உருவாக்குகின்றது. இப்படிச் சிங்கள அரசும் பரப்பும் செய்திகளால் தன்பாட்டியே ஒரு வித வெறுப்பு மோடி மீது வர வைப்பதோடு, தமிழக அரசு மோடியோடு இணைந்து செயற்பட்டால் அது ராசபக்சாவோடு கூட்டணி என்ற மாதிரியான செய்தியை உருவாக்கும் என்பதால் தமிழர்கள் தனித்துவிடப்படும் நிலையை உருவாக்கி விடும். என இப்படியான நயவஞ்சகத்தைப் புரிந்து கொண்டு, எம் முழுமையான எதிரி சிங்கள அரச பயங்கரவாதம் என்பதில் தெளிவுவேண்டும். அதற்கு எதிராக காய்நகர்த்தல்களே எமக்கு அவசியமும் ஆகும்..

மோடி வந்ததில் இருந்து நிறைய பேருக்கு மூத்தா போகுது !!!

ம்.

தூயவனின் கருத்து சரியானதே.

 

மேலும் இராஜபக்‌ஷவும் மோடியும் நண்பர்களாக மாறினாலும், தமிழர்கள் அதை காரணமாக கொண்டு தம் முயற்சிகளை கைவிடாது இன்னும் ஆக்கபூர்வமாக முன்னெடுப்போமாக.

  • கருத்துக்கள உறவுகள்

மோடியே பதவி ஏற்கவில்லை....அதற்குள் இவர்களின் அறிக்கைகள்..ஏதோ இந்தியாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பது போல...இதற்குள் மகிந்தா சீனாக்காரனின் கையை இறுகப் பற்றினார் என்று படமும் செய்தியும்...பொழைக்கத்தெரிந்தவனப்பா சிங்களவன்...

  • கருத்துக்கள உறவுகள்

பௌத்தத்தை இலங்கைக்கு அனுப்பிய அசோகச் சக்கரவர்த்தியின் மென்மையான சக்தியை இணங்கி உள்வாங்கிக் கொண்ட இலங்கை மன்னன் தேவநம்பிய திஸ்ஸனின் பாத்திரமா அல்லது பாஜகவினர் நம்புகின்ற இராமாயணம் கூறுகின்ற இராவணனின் பாத்திரமா என்ற இரண்டு தெரிவுகளும் மகிந்தவிடமே உள்ளன� என்றார் தயான்
உவர் என்ன சொல்லுகிறார்? இந்துமதத்தை மகிந்தா கடப்பிடிக்கவேண்டும் என்று சொல்ல வாரார் போல இருக்கு....
  • கருத்துக்கள உறவுகள்
நரேந்திர மோடி அவர்கள்பற்றி கூக்குளில் தேடினேன் கிடைத்ததில் சிலவற்றை இங்கு பதிகிறேன். மோடியும் மகிந்தவும் ஒரே தறியில் நெய்யப்பட்ட துணிகள்தானா??? 
 
ஒரு துறையில் தனக்கு கிடைக்கும் அதிகாரத்தை வைத்து, தன் குடும்பத்தினர், உறவினர்களை உள்ளே இழுக்கும் 'வாரிசு' கலாசாரத்தில், ஒரு மாநிலத்தின் முதல்வரான மோடி எவ்வளவு வித்தியாசப்படுகிறார்? தன் 95 வயது தாயை கூட தன் 'அரசு' வாழ்க்கையின் அருகே வைத்துக்கொள்ளாமல், தன் மூத்த சகோதரரின் வீட்டில் தங்க வைத்துள்ளார். 'என் தம்பி தான் முதல்வர்' என, அவரது சகோதரர்கள் அரசு வாகனங்களில் வலம் வருவதில்லை. 'நான் சொல்பவர்களுக்கு வாய்ப்பு கொடுங் கள்...' என, மோடியின் உறவினர்கள் யாரும் சிபாரிசுக்கு வந்து நிற்பதில்லை.அதை விட ஆச்சரியம், மோடியின் மூத்த சகோதரரர் சுகாதாரத் துறையிலும், இரண்டாவது சகோதரர் நகரின் எங்கோ ஓர் மூலையில் கடை வைத்திருக்கிறார். மூன்றாவது சகோதரர் அரசுப்பணியில் குமாஸ்தாவாக உள்ளார். அவர் பணியாற்றும் அலுவலகத்தில் இருப்பவர்களுக்கு இவர் தான் மோடியின் சகோதரர் என்பதே பல ஆண்டுகளுக்கு பிறகு தான் தெரிந்ததாம். இப்படி தன்னாலும், தன் குடும்பத்தினராலும் அரசு அதிகாரத்தில் துஷ்பிரயோகம் நடைபெறாத படி தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார் மோடி. அவரது தாய் இன்னும் ஆட்டோவில் தான் ஆமதாபாத்தில் வலம் வருகிறார்.
 
அபார நினைவாற்றல், யாரிடம் எந்த வேலையை தர வேண்டும் என்பதில் உறுதி, ஒரு பிரச்னையின் முழு பரிமாணத்தை தெரிந்து கொள்ளாமல் அதற்கு பதில் தேடமாட்டார், ஒரு பிரச்னையை நன்கு புரிந்து கொண்டாலே பாதி பிரச்னை தீர்ந்துவிடும் என்பதில் உறுதியாக இருப்பவர், தற்காலிக தீர்வை விரும்பாதவர், ஒரு முறை எடுக்கும் முடிவை நிறைவேற்றும் வரை பின் வாங்கமாட்டார், பொறுப்பை ஒருவரிடம் ஒப்படைத்ததும் ஒதுங்கிவிடாமல், அதை பின்தொடர்வார், பிறர் யோசனைகளை செவி கொடுத்து கேட்கும் குணம் கொண்டவர், தான் இட்ட பணிகளை உரிய நேரத்தில் நிறைவேற்றவில்லை என்றால் பொறுமை இழந்துவிடாதவர் என்பது எல்லாம் மோடியின் தனிப்பட்ட குணங்கள்.
 
தகவல் தொழில்நுட்பத்தை நாட்டின் வளர்ச்சிக்காக பயன்படுத்தும் மோடி, மக்களுக்காக 'நரேந்திர மோடி டாட் இன்' என்ற, இணையதளத்தை நடத்துகிறார். இதில் 'மக்கள்இதழியல்' என்ற பிரிவில் பொதுமக்கள் சமூக நிகழ்வுகளை எழுதலாம். அவை, புதிய சிந்தனை, பொது பிரச்னை, நாட்டு நலன் குறித்துஇருக்கலாம். விபரமாக எழுத விரும்பினால் போட்டோவுடன் கட்டுரையாகவும் பதியலாம்.
 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.