Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நான் வாழும் சுவிஸ்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிட்டத்தட்ட 190ற்கு அதிகமான நாடுகள் இந்த உலகத்தை பிரித்தாளுகின்றன. ஜரோப்பாவின் இதயப்பகுதியில் 8.5 மில்லியன் மக்களுடன் அமைந்திருப்பது தான் சுவிட்சர்லாந். 

 
Swiss-Made_1_.jpg
 
உத்தியோகபூர்வமான பெயர்: சுவிஸ் கூட்டமைப்பு
 
குறியீடு: CH+Auto.jpg Confoederatio Helvetica
 
வேறு பெயர்கள்: Schweiz, Suisse, Svizzera, Svizra
 
 
b9ijcrgj.png
சுவிசில் நான்கு மொழிகளும் நான்கு கலாச்சாரங்களும் உள்ளன. 
4இல் 3பேர் ஜேர்மன் மொழி (Orange நிறம்) பேசுகிறவர்கள். 
 
மேற்கு பகுதியினர் பிரெஞ் மொழி பேசுபவர்கள் (பச்சை நிறம்).
 
றேத்தோறோமான்ஸ் (Rätoromans) ஒரு குறுகிய நிலப்பரப்பில் 1வீதம் மக்களால் பேசப்படுகின்றது.(ஊதா நிறம்)
கொசுறு செய்தி: இவர்கள் FC Raetia என்று ஒரு உதைபந்தாட்ட அணியை அங்கிகரிக்கப்டாத நாடுகளின் உதைபந்தாட்ட போட்டியில் களமிறக்கியிருந்தார்கள். தமிழீழ அணியுடனும் விளையாடியுள்ளனர்
 
தென்பகுதி மற்றும் அல்ப்ஸ் மலைப்பகுதியை நெருங்கிய பகுதிகளில் இத்தாலி பேசப்படுகிறது. (நீல நிறம்)
 
 
மொழிவாரியாக நான்காக பிரிக்கப்பட்டாலும் அரசியல் ரீதியாக 26 மாநிலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது.
3869.jpeg?1296400986
 
ஒவ்வொரு மாநிலமும் இறையாண்மைய கொண்ட மாநிலம். ஒரு சில அதிகாரங்களை மத்திய அரசாங்கத்திடம் ஒப்படைத்துள்ளது. மத்திய அரசாங்கம் எனப்படுவது சுவிஸ் பாராளுமன்றமும் அதன் அமைப்புகளும். 
swissparliament_200.jpg
 
1291 ஆம் ஆண்டு மூன்று மாநிலங்கள் சேர்ந்து பாதுகாப்பு காரங்களிற்கான தங்களை ஒன்று சேர்கின்றன. 
 
இந்த மூன்று மாநிலங்களும் சேர்ந்து மேலும் இரண்டு மாநிலங்களை (Luzern மற்றும் Zurich) இணைத்துக்கொள்கின்றன. 
 
அதன் பின்னர் இன்னும் இரு மாநிலங்கள் (Zug மற்றும் Glarus).
 
அடுத்த முக்கியமான மைல் கல் 1353ஆம் ஆண்டு நடைபெறுகின்றது. பலமான ராணுவத்தை கொண்ட பேர்ண் மாநிலமும் இணைந்துகொள்கின்றது. இவர்கள் அனைவரும் சேர்ந்து மேலும் சில மாநிலங்களை கைப்பற்றுகின்றனர் ( Fribourg, Solothurn, Basel மற்றும்  Schaffhausen).
 
13வது மாநிலமாக 1513ஆம் ஆண்டு அப்பன்செல் (Appenzell) என்ற மாநிலம் இணைகின்றது. இவைகள் அனைத்தும் சேர்ந்து ஒரு நிர்வாகத்தை உருவாக்குகின்றன. இந்த நிர்வாகமே இந்த மாநிலங்களை இணைத்து வைத்துள்ளது. 
 
1798 ஆம் ஆண்டு சுவிஸ் பிரேஞ் ஆதிக்கத்தினுள் வருகின்றது.
 
பழைய 13 மாநிலங்களுடன் நேப்போலியன் இன்னும் சில மாநிலங்களை இணைக்கின்றார் ( Vaud, Ticino, Aargau, Thurgau, St.Gallen மற்றும் Graubünden).
 
நேப்போலியனின் வீழ்சிக்கு பின்னர்...
Napoleon-200x200.jpg
 
1815 ஆம் ஆண்டு மேலும் மூன்று மாநிலங்கள் இணைந்துகொள்கின்றன (Geneva, Valais மற்றும் Neuchatel). Jura மாநிலம் பேர்ண் மாநிலத்துடன் இணைக்கப்படுகின்றது. 
 
ஆனால் Jura மாநிலத்தை சேர்ந்த அனைவரும் பேர்ண் மாநிலத்துடன் இணைவதை விரும்பவில்லை. 
 
எனவே 1978ஆம் ஆண்டு பொதுவாக்கெடுப்பின் மூலம் Jura மாநிலத்தின் வடபகுதி 165ஆண்டுகளிற்கு பின்னர் தனி மாநிலமாக உருவாகியது. இதுவே இதுவே இறுதியாக இணைந்துகொண்ட மாநிலம். 
200px-Chjuraflag.gif
 
26மாநிலங்கள் எப்படி ஒன்றிணைந்து இரு நாடாக வாழமுடியும்? இந்த அதிசயத்திற்கு சில நூற்றாண்டுகளிற்கு முன்னர் அடித்தளமிடப்பட்டது. 
 
இடதுசாரிகள், வலதுசாரிகள், பழமைவாதிகள் என்று பலரும் பல விதமாக அடித்துக்கொண்டார்கள். இதனால் மாநிலங்களிற்குள் ஒரு சிறிய போரும் வந்துபோனது. ஒவ்வொரு மாநிலமும் தனித்துவமான சட்டங்களை கொண்டுள்ளதால் இந்த சண்டை வந்தது. 
2012-03-15-wahlen-tomicek.jpg
 
எனவே 1848ஆம் ஆண்டு புதிய அரசில் யாப்பு ஒன்று தயாரிக்கப்பட்டது. இதுவே சுவிஸ் நாட்டின் பிறப்பாகும்!
38543_200.jpg
 
யாப்பின் முக்கியமான பகுதிகள்:
 
- அனைத்து மக்களுக்கும் சம உரிமை
 
- சுவிஸ் நாட்டிற்குள் எங்கு வேண்டுமானாலும் குடியேறும் உரிமை
 
- கருத்துரிமை
 
- அமைப்புகள் தொடங்குவதற்கான உரிமை
 
- மதத்தை தெரிவுசெய்வதற்கான உரிமை
 
- பத்திரிகைச் சுதந்திரம்
 
தற்பொழுது உள்ள சுவிஸ் ஆட்சி முறை என்பது இரு ஆட்சிமுறைகளை கலந்து உருவாக்கியது. யாப்பில் மாற்றங்கள் செய்யவேண்டுமாயின் பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை இருந்தால் மட்டும் போதாது. மக்களின் வாக்கெடுப்பிலும் பெரும்பாண்மை வேண்டும். 
 
ஆனாலும் மாநிலங்களிக்கு மட்டும் தனி அதிகாரங்களும் உள்ளன. இந்த அதிகாரங்களால் ஒவ்வொரு மாநிலத்திலும் சற்று வித்தியாசமான நடைமுறைகள் காணப்படும்.
 
கல்வி (பாட அமைப்பு தொடங்கி, பாடசாலை விடுமுறைகள் வரை ஒவ்வொரு மாநிலத்திலும் சற்றி வேறுபடுகின்றது)
 
சுகாதாரம் / மருத்துவம் (வேறுபட்ட மருத்துவசெலவுகள், காப்புறுதிநிறுவனங்களின் தொகை ...)
 
காவல்துறை / சட்டம்
(இதில் பெரிதாக வித்தியாசம் இருப்பதாக தெரியவில்லை. ஒரு மாநிலத்தின் காவல்துறை இன்னொரு மாநிலத்திற்குள் நுழைவதென்றால் அந்த மாநிலத்தின் அனுமதி பெற வேண்டும் வழக்குகளை அந்தந்த மாநிலங்களே விசாரித்துக்கொள்ளலாம். திருப்தியளிக்காவிடின் மேல்கோர்ட்டிற்கு செல்லலாம்). 
 
அரசாங்கத்தின் அதிகாரங்கள்:
 
1848ஆம் ஆண்டு நடைமுறையிலிருந்த பல நாணயங்களும் ஒன்றாக்கி உருவாகியதே சுவிஸ் பிராங்.
revenus.jpg
 
- வரி வசூலிப்பது )
 
- தபால் விநியோகம்
 
- வெளிவிவகாரத்துறை
 
- இராணுவ கட்டமைப்பு
 
யாப்பின் மாற்றங்கள் மூலமாக மேலும் பல அதிகாரங்களை அரசாங்கம் பெற முடியும் (ஆனால் அதற்கு மக்கள் மற்றும் பாராளுமன்ற பெரும்பாண்மை தேவை).
 
மக்கள் மற்றும் பாராளுமன்ற பெரும்பாண்மையுடன் உருவாகிய புதிய அதிகாரங்கள்:
 
1957அணு மின்சாரத்திற்கான அதிகாரம் அரசாங்கத்திடம் செல்கின்றது
 
1958 ஆம் ஆண்டு தேசிய நேடுஞ்சாலைக்கான அதிகாரம் அரசாங்கத்திடம் செல்கின்றது. 
 
சுவிஸ் மக்களின் கடமை வெறுமனே பாராளுமன்ற உளுப்பினர்களை தேர்தெடுப்து மட்டுமல்ல. சட்ட்திருத்தங்கள் வாக்கெடுப்பிற்கு வரும்பொழுது அதற்கு எதிராக அவர்கள் வாக்களித்து அதனை இல்லாது செய்யலாம். 
 
சட்டமாற்றங்கள் பாராளுமன்றத்தில் கலந்துரையாடப்பட்டு பொதுமக்களிடம் வாக்கெடுப்பிற்கு வராதுவிட்டாலும் அதனை 50'000 மக்கள் கையொப்பம் இட்டு மக்களிடம் வாக்கெடுப்பிற்கு கொண்டுவரமுடியும். இப்படி வந்த வாக்கெடுப்புக்களில் பாதிக்கு மேல் மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்டது.
 
பாராளுமன்றத்தில் விவாதிக்காத ஒரு விடயத்தை யாப்பில் இணைப்பதற்கு 100'000 கையொப்பங்கள் தேவைப்படுகின்றன. நிற்க. இத்துடன் முடிந்துவிடவில்லை. இந்த 100'000 கையொப்பங்களை சேர்த்த பின்னர் அது மக்களின் பொதுவாக்கெடுப்பிற்கு விடப்படும். பெரும்பாண்மையான மக்கள் ஆம் என்று வாக்களிக்கும்பட்சத்தில் அது பாராளுமன்றத்திற்கு சென்று பின்னர் பாராளுமன்றம் அதற்குரிய சட்டத்திருத்தத்தை யாப்பில் கொண்டுவரும். 
இப்படி வந்தவைகளில் 10இல் ஒன்று தான் இதுவரை யாப்புவரை சென்றிருக்கின்றன. ஏனையமை மக்களின் வாக்கெடுப்பில் ஏற்றுக்கொள்ளப்படாமல் போய்விடும்.அல்லது பாராளுமன்றத்தில் பெரும்பாண்மை பேறாமல் போக வாய்ப்புண்டு. 
 
1971 ஆம் ஆண்டு பெண்களிற்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
Woman-power-8625.jpg?q=65&sharp=15&vib=1
 
இதுவே பெண்களும் ஆண்களும் சமமாக நடாத்தப்பட வேண்டும் என்ற வாசகத்தை யாப்பில் இணைப்பதற்கு 1981ஆம் ஆண்டு முக்கிய காரணமானது.
 
எனவே தான் உலகிலயே அசைக்க முடியாத ஒரு ஜனநாயகமாக சுவிஸ் நாடு திகழ்கின்றது. இங்கே மக்கள் தீர்பே மகேசன் தீர்ப்பு!
Swissness_klein-%C2%A9-Bestart-Photograp
 

Edited by ஊர்க்காவலன்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ் நல்ல நாடுதான். ஆனால் உலகில் உள்ள கறுப்பு பணத்தின் பெரும்பகுதியை தன்னகத்தே உள்வாங்கியிருக்கும் நாடு என்பதால் பலருக்கு கொஞ்சம் மன வருத்தம். :)

  • கருத்துக்கள உறவுகள்

swiss என்ன swiss வெறும் ஜுஜுபி எங்க ஆஸ்திரேலியா வ எந்த நாட்டாலையும் அடிச்சிக்கவே முடியா.... மீண்டும் இந்த வருடமும் வாழ மிகச்சிறந்த நாடா ஆஸ்திரேலியா முதலாவதா தெரிவாகி இருக்கு.... மற்றும் படி சும்மா நீங்க எல்லாம் பெருமை பட்டுக்க வேண்டியது தான்....

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் நல்ல நாடுதான். ஆனால் உலகில் உள்ள கறுப்பு பணத்தின் பெரும்பகுதியை தன்னகத்தே உள்வாங்கியிருக்கும் நாடு என்பதால் பலருக்கு கொஞ்சம் மன வருத்தம். :)

 

 சுவிஸ் வங்கியன் சட்டங்களே அதற்கு காரணம். இங்கே பணத்தை போடுபவர்க்கு முழுப்பாதுகாப்பு வழங்கப்டுகின்றது. அவரது தனிப்பட்ட தகவல்கள் எதுவும் வெளியில் செல்லாது. அந்த தைரியத்தில் தான் பல அரசியல்வாதிகள் தொடக்கம் பெரும் பணக்காரர்கள் வரை தங்களின் நாட்டில் வரியிலிருந்து தப்பிப்பதற்கு இங்கே பணத்தை போடுகிறார்கள். 

தற்பொழுது அதுவே பிரச்சனையாக மாறிவிட்டது. பல நாடுகளின் அழுத்தம் காரணமாக இந்த இறுக்கத்தை கொஞ்சம் கைவிட்டுள்ளனர். புதிதாக இங்கு வங்கிக்கணக்கு வெளிநாட்டவர் ஒருவர் திறந்தால் அந்த நாட்டு அரசாங்கத்திற்கு தகவல் கொடுக்கப்படும் (இவரின் பெயரில் வங்கிக்கணக்கு உள்ளது என்று மட்டுமே). 

 

இதற்கு முன்னர் வங்கிக்கணக்கை வைத்திருந்து தங்களின் நாடுகளில் வரிமோசடி செய்தவர்களிற்காக பல கோடி பிராங்குகளை நஸ்டஈடாக வழங்கிவிட்டார்கள். 

 

swiss என்ன swiss வெறும் ஜுஜுபி எங்க ஆஸ்திரேலியா வ எந்த நாட்டாலையும் அடிச்சிக்கவே முடியா.... மீண்டும் இந்த வருடமும் வாழ மிகச்சிறந்த நாடா ஆஸ்திரேலியா முதலாவதா தெரிவாகி இருக்கு.... மற்றும் படி சும்மா நீங்க எல்லாம் பெருமை பட்டுக்க வேண்டியது தான்....

 

குளிக்கிறதுக்கு தண்ணிக்கே பஞ்சம் உங்கட நாட்டில... :D

சும்மா ஒருக்கா முதலாமிடம் வந்ததுக்கே இப்படியென்டா... முதலாமிடத்தை விட்டுத்தந்த எங்களுக்கு எவ்வளவு பெருமை :D

e2v32f3z.jpg

  • கருத்துக்கள உறவுகள்

இங்க பெண்கள் வாக்குரிமை பெறும்போது, இலங்கையில் ஒரு பெண் அதிபர்..........

Edited by மலையான்

சுவிற்சர்லாந்தில் ஒரு கிராமசபை அல்லது நகரசபைக்கு இருக்கும் சில  அதிகாரங்கள் பிரமிப்பூட்டுபவை. சுவிஸ் மத்திய அரச அமைச்சர்கள் ஜனாதிபதியால் கூட ஒரு கிராம/ நகர சபை எடுக்கும் முடிவுகளில் தேவையின்றி தலையீடு செய்ய் முடியாது. கிராம சபைகள், மாநில அரசு, மத்திய அரசு என்று மூன்று பிரிவுகளாக அதிகாரம் பகிர்ந்தளிக்கபட்டுள்ளது.  வரி வருமானங்களில் ஒரு பகுதி அந்த பிரதேச மக்களின் அபிவிருத்திக்கே செலவிடப்படும்.

சுவிஸ் என்ன மற்ற நாடுகள் மாதிரி ஆக்கிமிச்சோ அடிமைப் படுத்தியோ பணத்தை பறிக்கவில்லை கொள்ளை அடிப்பவர்கள் தாங்களா கொண்டுவந்து போடுகிறார்கள் இது யாருடைய பிழை

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுவிஸ் என்ன மற்ற நாடுகள் மாதிரி ஆக்கிமிச்சோ அடிமைப் படுத்தியோ பணத்தை பறிக்கவில்லை கொள்ளை அடிப்பவர்கள் தாங்களா கொண்டுவந்து போடுகிறார்கள் இது யாருடைய பிழை

 

தனியப் போனாலும் துணை போகக்கூடாது கண்டியளோ... :D

  • கருத்துக்கள உறவுகள்

சுவிஸ் என்ன மற்ற நாடுகள் மாதிரி ஆக்கிமிச்சோ அடிமைப் படுத்தியோ பணத்தை பறிக்கவில்லை கொள்ளை அடிப்பவர்கள் தாங்களா கொண்டுவந்து போடுகிறார்கள் இது யாருடைய பிழை

நாங்க இருக்கிற நாடு என்ன சொல்லுதெண்டா களவு எடுத்தை விட கள்ளச்சாமான் வாங்கிறது பெரிய குற்றம் என்டு சொல்லுது

குஜராத்தை மோடி கட்டி எழுப்பியதும் இதே மாதிரித்தான் .

உலகம் முழுக்க புலம் பெயர்ந்த குஜராத்திகளின் கருப்பு பணம் தான் குஜராத்தின் வளர்சி .

இந்தியாவையும் அப்படி கொண்டுவந்தால் எங்களுக்கு நல்லதுதான் :icon_mrgreen: .

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.