Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

மனதை கவர்ந்த face book பதிவுகள்

Featured Replies

கடைசியாக.. (அம்மா..ச்வசிநேகர் க்கு பிறகு) குசா. மற்றும் நுனாவிலான் போட்ட எதுவும் தெரியவில்லை....எனது கணனியில் பிழையா?

  • Replies 171
  • Views 15.3k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

கடைசியாக.. (அம்மா..ச்வசிநேகர் க்கு பிறகு) குசா. மற்றும் நுனாவிலான் போட்ட எதுவும் தெரியவில்லை....எனது கணனியில் பிழையா?

 

எதை நீங்கள் பாக்க விரும்புறியளோ  அந்த இடத்திலை மவுசை இழுத்து வைச்சு இடப்பக்கத்தை அமத்த வேலை செய்யும்....

நன்றி கு.சா. நுனாவிலான்... explorer இல் பார்க்கக்கூடியதாக உள்ளது....

  • கருத்துக்கள உறவுகள்

https://www.facebook.com/video/video.php?v=682817168408012


நோர்வேயில் ஒரு சின்ன காற்று  :)  :)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

மறக்க முடியாத தீபாவளி ....

1991 ஆம் வருஷம் தீபாவளி...

நான் திருவொற்றியூர் வெள்ளையென் செட்டியார் ஸ்கூல்ல 8ஆம் கிளாஸ் படிச்சிட்டு இருக்கேன்...

நம்பர் 1 ; ஜான் ஸ்ட்ரீட் ... டி.எஸ்.ஆர் நகரில் உள்ள ஒரு இலங்கை தமிழர் வீட்டில் தான் மாடியில் நாங்கள் வாடகைக்கு குடியிருந்தோம் ...

என் தந்தை திரு . பரமசிவம் அவர்கள் அந்த காலத்து பி.யு.சி . 80 களில் சென்னையில் கெமிக்கல் தொழிலில் கொடிகட்டி பறந்து பிறகு தொழில் நஷ்டத்தால் எல்லாவற்றையும் இழந்து நடுதெருவுக்கு வந்தோம் ...

மனஉறுதி கொண்ட என்தந்தை அவர் உறவினர்கள் செல்வாக்கோடு மிக உயர்ந்த நிலையில் இருந்தும் தன்மானம் சுயமரியாதை காரணமாக யாரிடமும் கையேந்தவில்லை ... மாறாக குடும்பத்தை காத்து பிள்ளைகளுக்கு நல்ல கல்வி வழங்கவேண்டும் ; அழியாத சொத்து கல்வி மட்டும்தான் என்று உறுதியுடன் இருந்தார் ...

கொத்தவால்சாவடியில் மூட்டை தூக்கும் வேலைக்கு சென்றார் ... லாரியில் இருந்து வரும் காய்கறிகளை இறக்குவதும்... அங்கு வந்து காய்கறி வாங்கி செல்லும் சிறுவியாபாரிகளின் மூட்டைகளை சுமந்து சென்னை பாரிசின் நெருக்கடியான சாலை போக்குவரத்தை கடந்து பல்லவன் பேருந்தில் வாடிக்கையாளர்களின் மூட்டையை ஏற்றி விடும் பணிகளையும் செய்தார் ... மதியத்திற்கு மேல் வாடகை தள்ளுவண்டியில் மாம்பலம் , வாழைபழம் போன்ற வியாபாரம் செய்வார் ...

அன்று அன்றைக்கு வரும் வருமானம் அன்றைக்கே போதுமானதாக இருக்கும் ... என்தங்கை "காமாட்சி" இராயபுரம் கல்மண்டபத்தில் உள்ள "நார்த் வீக் கான்வெட்"டில் அப்போது படித்து கொண்டிருந்தாள் ... அவர் உழைப்பில் முக்கால் பங்கு படிப்பிற்கே போய்விடும் ... மீதி கால்பங்கில்தான் கால்வாயிற்று கஞ்சிக்கு ...

இந்த நிலையில் இருந்த எங்களுக்கு உறுதுணையாய் இருந்து உதவி செய்தவர்கள் நாங்கள் குடியுருந்த வீட்டு உரிமையாளர்களான இலங்கை தமிழரான அமிர்தம் அம்மாவும் , ஜான்சன் ஐயாவும் ... 1980 களில் கொழும்பில் நடந்த கலவரத்தில் சென்னைக்கு வந்து குறுகிய காலத்தில் உழைத்து முன்னேறியவர்கள் அவர்கள் ; எங்கள் குடும்ப நிலையை கண்டு மிக குறைந்த வீட்டு வாடகையே வாங்கினர் ; அதுமட்டுமின்றி 3 மாதம் நாலு மாதம் வாடகை பாக்கி எப்போதும் இருக்கும்... அப்போதும் எங்களிடம் "வாடகை என்னாச்சி" என்று ஒரு போதும் கேட்டதில்லை ...

இந்த நிலையில் என் தந்தை திடீரென்று சிறு விபத்துக்கு உள்ளாகிவிட்டார் ... உயிர் பிழைத்தது பெரிய புண்ணியம் ... 3 மாதமாக வேலைக்கு போகவில்லை ... 6 மாத வாடகை பாக்கி வேறு ...

இந்த நேரத்தில் தீபாவளி பண்டிகை வந்துவிட்டது ... தீபாவளி நாள் அன்று ஊரே பட்டாசு பலகாரம் வேட்டு என கொண்டாட நாங்கள் மட்டும் எங்களுக்கும் அதற்கும் சம்பந்தமே இல்லாதது போல் வீட்டில் உறங்கிக்கொண்டு இருந்தோம் ...

காலை ஒரு 6 மணி இருக்கும்...

மாடியில் உள்ள எங்கள் வீட்டு கதவை தட்டும் சத்தம் கேட்டது ... என் அம்மா கதவை திறந்து பார்த்தார் .. வாசலில் அமிர்தம் அம்மா நின்றார்கள் .. எங்களுக்கு ஆச்சரியம் ... தீபாவளி நல்வாழ்த்துக்கள் "காமாட்சி அம்மா" என்று அமிர்தம் அம்மாள் 500 ரூபாய் நோட்டை என் அம்மாவில் கையில் திணித்தார் ... என் அம்மா வாங்கவே இல்லை ... அமிர்தம் அம்மாள் வற்புறுத்தி "உங்க பிள்ளைகளுக்காக வாங்குங்க " ... இத கடனாவே நினைச்சுகோங்க .. உங்களால எப்ப முடியுதோ தாங்க @ என்று அமிர்தம் அம்மா சொன்னார்கள் ...

ஏற்கனவே 6மாதம் வாடகை பாக்கி வெச்சிருந்தும் ஒரு ஏழை குடும்பத்துக்கு இறங்கி வந்து உதவி செய்த அமிர்தம் ஆண்டியும் ஜான்சன் அங்கிளும் கடவுளுக்கு ஒப்பானவர்கள் ... அந்த 500 ருபாய் கடனை மாத தவணை முறையில் ஒரு வருடமாக அடைத்தோம் ...

இத்தனைக்கும் அவர்கள் கிருத்தவர்கள் .... நாங்கள் இந்துக்கள் ... அப்படியிருந்தும் மனிதநேயத்தோடு உதவினார்கள் ..

அதனால்தான் ஒவ்வொரு தீபாவளி வரும்போதும் அமிர்தம் ஆண்டியும் ஜான்சன் அங்கிளும் எனக்கு மறக்க முடியாதவர்கள் ஆகி போனார்கள்...

மனிதநேயமே உலகின் சிறந்த மதம் .

அனைவருக்கும் தீபாவளி நல்வாழ்த்துக்கள் !

Thanks to admk bala

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

Swathi Swamy

போராட்டம் தொடங்கும் போதே எந்த தடை வந்தாலும் இடறக் கூடாது தடம் பிரளக் கூடாது எடுத்த இலக்கிலிருந்து பின் வாங்கக் கூடாது என்று உறுதி மொழியுடன் தொடங்கினால் இடையில் உயிரே போனாலும் ஒரு போராளி தன் போராட்டத்தின் திசையை மாற்ற மாட்டான். ஏதாவது காரணத்துக்காக தங்கள் போராட்டத்தை நெகோஷியேஷன் , பேச்சுவார்த்தை ,சமரசம் என்ற குழிக்குள் நுழைத்தால் கடைசியில் அந்த போராளி தான் கோமாளி!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

544942_385836684874587_26959042657732665

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

https://www.facebook.com/video/video.php?v=760282450657495&set=vb.540681395950936&type=3&theater

 

கடுகென்றாலும் காரம் பெரிது :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன்... இவ்வளவு மீனும், கரைக்கு வந்தது.
இனிமேல்.... கடற்கரைக்குப் போகும் போது, ஒரு உரச் சாக்கும் கொண்டு போவது நல்லது. :)

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இன்றைய உண்மைகள்...!!!

1. பக்கத்துக்கு வீட்டில் இருப்பவரிடம் முகம் கொடுத்து பேசுவதில்லை. பக்கத்து கிரகத்தில் மனிதன் வாழ வாய்ப்பு இருக்கா என்ற ஆராய்ச்சி நடக்கிறது.

2. கையில் விலை உயர்ந்த பெரிய கடிகாரம். அதில் மணி பார்ப்பதற்கு கூட நேரம் இருப்பதில்லை.

3. ஊருக்கு வெளியில் பெரிய பங்களா. வீட்டில் இருப்பது 2 பேர்.

4. மருத்துவ துறையில் மாபெரும் வளர்ச்சி. நோயாளிகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகம்.

5. பட்டப் படிப்புகள் நிறைய. பொது அறிவும் உலக அறிவும் மிகக் குறைவு.

6. கை நிறைய சம்பளம். வாய் நிறையச் சிரிப்பில்லை. மனசு நிறைய நிம்மதி இல்லை.

7. புத்திசாலித் தனமான அறிவாளித் தனமான விவாதங்கள் அதிகம். உணர்வுப் பூர்வமான உரையாடல்களும், சின்ன சின்ன பாராட்டுகளும் குறைவு.

8. சாராயம் நிறைந்து கிடக்கு. குடிதண்ணீர் குறைவாய் தான் இருக்கு.

9. முகம் தெரிந்த நண்பர்களை விட முகநூல் நண்பர்களே அதிகம்.

10. மனிதர்கள் எல்லா இடங்களிலும் நிறைந்து இருக்கின்றனர். மனிதம் ஆங்காங்கே சில இடங்களில் மட்டும் ஒட்டிக் கொண்டிருக்கிறது.

 

Fb

  • 3 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

தத்துவம் சொல்லி நாளாச்சி…

தண்ணீர் மேல

படகு போனா உல்லாசம்.

ஆனா,

படகு மேல தண்ணீர்

போனா கைலாசம்.

நெக்ஸ்டு

Back

வீலு எவ்வளவு ஸ்பீடா போனாலும்,

Front வீல ஓவர்டேக் பண்ண

முடியாது.

அப்புறம்

டெய்லி ஒரு பீர் சாப்பிட்டா தூக்கம்

வரும்.

10 பீர் சாப்பிட்டா,,,,,,,,,

தூக்க ஆள் வரும்.

ரைட்டு…

பாயாசம் 10 நாள் கழிச்சி பாய்சன்

ஆயிடும்

ஆனா,

பாய்சன் 10 நாள் கழிச்சி பாயாசம்

ஆகுமா?

அடுத்து

என்னதான் MBBS படிச்சி டாக்டர்

ஆனாலும் கம்ப்யுட்டர்ல

இருக்கற

வைரசுக்கு மாத்திரை குடுக்க

முடயுமா? ,,, யோசிப்பா, யோசி,

last ஆ ஒன்னு சொல்லிக்கறேன்.

பரிட்சைல பெயில் ஆனா திரும்ப

படிச்சி பாஸ் பண்ணலாம்.

ஆனா,

பாஸ் ஆயிட்டா. திரும்ப

படிச்சி பெயில் ஆக முடியாது. ‘

நல்லா தெரிஞ்சிக்கிட்டீங்களா?

rajani_vadivel.jpg

  • கருத்துக்கள உறவுகள்

என்னை உறிஞ்சினால்...

உன்னை உறிஞ்சுவேன்!

அன்று காலையில் சூரியன் உதயம்

நன்றாக தான் இருந்தது!

அழகாய் உதித்த சூரியனும் எதும் சொல்லவில்லை!

தரையில் எறும்புகள் வழக்கத்திற்கு மாறாக

வேகமாய் ஊர்ந்துள்ளன!

பறவைகள் கூட்டம் ஒன்று

பதட்டத்தில் கத்தியுள்ளது!

தெருநாய்கள் வேகமாய் குரைத்துள்ளன!

கடைசியாய் கடலும் நீரை உள்வாங்கி

நுரைத்து போயுள்ளது!

இவையெல்லாம் இயற்கையின் அதிசயம் என்று

விவரம் புரியாமல் பார்த்தான்!

கடலின் நடுவே

நின்று கொண்டிருக்கும் வள்ளுவருக்கும்!

அமர்ந்திருக்கும் விவேகானந்தருக்கும்!

படுத்திருக்கும் எம்ஜிஆர், அண்ணாவிற்கும்

கூட தெரிந்திருக்கலாம்!

இது அதிசயமில்லை ஆபத்து என்று!

கடலுக்கு நடுவே கற்கள் நகர்கிறதாம்!

இடத்தை நிரப்ப மனித சதைகள்

கேட்டது ஆழி!

ஆழிக்கு அருகில் ஆழ்துளை போட்டது

காரணம் இல்லையாம்!

நான் பல் துலக்கும் போது ஏற்பட்ட அதிர்வு தான்

காரணம் என்று பட்டாம்பூச்சி விளைவு கூறுகிறது

என்றனர் படித்த மேதைகள்!

யார் என்ன சொன்னாலும்

டிசம்பர் 26,2004 யாரும் சொல்லவில்லை

கடல் காவு வாங்கும் என்று!

பத்து வருடம் ஆகியும்!

இறந்த மனிதனின் குரலும்!

மனிதனை இழந்தவர் குரலுமாய்

கேட்கிறது பல லட்சம் கதறல்கள்!

நம்மை படைத்தாய் கூறப்படும் கடவுள் தொடங்கி

நாம் படைத்த செயற்கைகோள் வரை

எதுவும் சொல்லவில்லை!

ஆழிப்பேரலைகள் ஊரை வாரி செல்லும் என்று!

கடைசியாய் கடல் சொன்னது புரிந்தது!

நீ என்னை உறிஞ்சினால்

நான் உன்னை உறிஞ்சுவேன் என்றது!

ச.ஸ்ரீராம்

  • 4 weeks later...
  • கருத்துக்கள உறவுகள்

10544412_1064202226938538_31709473483326

தலைவர் மஹிந்த அவர்கள் ஒரு முறை இந்திய சென்ற போது அங்கு அப்துல் கலாம் அவர்களை சந்தித்து பேசினார். அப்போது மஹிந்த அவர்கள் அப்துல் கலாம் அவர்களை பார்த்து கேட்டார் எப்படி ஒரு சிறந்த அரசியல் தலைவரை அடையாளம் கண்டு கொள்வது என்று.

அதற்கு அப்துல் கலாம் அவர்கள் அதை அவரை சுற்றி உள்ள அறிவாளிகளில் தங்கியுள்ளது என்றார்.

அவர்கள் அறிவாளிகள் என்று அவர் எப்படி அடையாளம் கண்டு கொள்வர்? என்று கேட்டார் மஹிந்த அவர்கள்.

அதற்கு அப்துல் கலாம் அவர்கள், அதை அவர்களிடம் சிறந்த கேள்விகளை கேட்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம் என்றார் அப்துல் கலாம் அவர்கள்.

உடனே மன் மோகன் சிங்குக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி அவரிடம் கேட்டார்.

உங்கள் அம்மாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... உங்கள்அப்பாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... அனால் அது உங்கள் சகோதரரோ சகோதரியோ இல்லை....... அப்படியானால் அவர் உங்களுக்கு யார் என்று கேட்டார்?

அதற்கு மன் மோகன் சிங் உடனே அது நான் தான் என்று பதில் கூறினார்.

அதற்கு அப்துல் கலாம் அவர்கள் சரியாக சொன்னீர்கள் என்று வாழ்த்துக்கள் சொல்லி விடைகூறினார்.

அப்துல் கலாம் மஹிந்தவை பார்த்து புரிந்ததா என்று கேட்டார்.

மஹிந்த, ஆம் புரிந்தது நானும் இதை பயன் படுத்துவேன் என்று நாடு திருப்பினார்.

நாடு திருப்பிய பின் மஹிந்த அவர்கள் மேர்வின் சில்வாவை அழைத்து நான் கேட்கும் கேள்விக்கு விடை கூற முடியுமா? என்று கேட்டார்.

அதற்கு மேர்வின் சில்வா நிச்சசயமாக..... என்று பதில் கூறினார்.

தலைவர் மஹிந்த அவர்கள், உங்கள் அம்மாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... உங்கள்அப்பாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... அனால் அது உங்கள் சகோதரரோ சகோதரியோ இல்லை....... அப்படியானால் அவர் உங்களுக்கு யார் என்று கேட்டார்?

மேர்வின் சில்வா நீண்ட நேரம் யோசித்து விட்டு தனக்கு சிறிது நேரம் தரும்படி கேட்டார். மேர்வின் சில்வா அவர்கள் எல்லா அமைச்சர்களையும் அழைத்து விடை தெரியுமா என்று கேட்டார்? எல்லோரும் யோசித்தார்கள்.................

இறுதியாக மேர்வின் சில்வா அவர்கள் ரணிலுக்கு தொலைபேசி அழைப்பை ஏற்படுத்தி நான் கேட்கும் கேள்விக்கு விடை கூற முடியுமா? என்று கேட்டார்.

உங்கள் அம்மாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... உங்கள்அப்பாவிற்கு ஒரு பிள்ளை இருக்கிறது...... அனால் அது உங்கள் சகோதரரோ சகோதரியோ இல்லை....... அப்படியானால் அவர் உங்களுக்கு யார் என்று கேட்டார்?

அதற்கு ரணில் விக்கரமசிங்கே உடனே அது நான் தான் என்று பதில் கூறினார்.

மேர்வின் சில்வா அவர்கள் மீண்டும் மஹிந்தவிடம் வந்து எனக்கு அது யார் என்று தெரியும் என்று சொன்னார்.

மஹிந்த யார் என்று கேட்ட போது....

அது எங்களுடைய ரணில் விக்கரமசிங்கே என்று பதில் கூறினார்.

அதற்கு மஹிந்த அது தவறு............

அது ................. மன் மோகன் சிங்................. என்று கூறினார்............................

இது எப்படி இருக்குது?.......

"படித்ததில் பிடித்தது"

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

(படித்ததில் பிடித்தது)

//திருமண வாழ்க்கையை எந்த பிரச்சினையும் இல்லாமல் வாழ்ந்த ஜோடிகள் தங்களது 25வது திருமண நாளைக்கொண்டாடினார்கள். ஊரையேக் கூட்டி விருந்து வைத்து தங்களது திருமண நாளைக் கொண்டாடிய தம்பதியினரைப் பற்றி அறிந்த அந்த ஊர் செய்தியாளர் ஒருவர், அவர்களைப் பேட்டிக் கண்டு பத்திரிக்கையில் போட விரும்பினார்.

நேராக அந்த தம்பதிகளிடம் சென்று, 25ஆம் திருமண நாளை ஒற்றுமையாகக் கொண்டாடுவது என்பது பெரிய விஷயம். இது உங்களால் எப்படி முடிந்தது. உங்களது திருமண வாழ்வின் வெற்றி ரகசியம் என்ன என்று கேட்டார்.

இந்த கேள்வியை கேட்டதும், அந்த கணவருக்கு தனது பழைய தேனிலவு நிகழ்ச்சிகள் நினைவுக்கு வந்தது.

"நாங்கள் திருமணம் முடிந்ததும் தேனிலவுக்காக சிம்லா சென்றோம். அங்கு எங்களது பயணம் சிறப்பாக அமைந்தது. அப்பகுதியை சுற்றிப் பார்க்க நாங்கள் குதிரை ஏற்றம் செல்வது என்று தீர்மானித்தோம். அதற்காக இரண்டு குதிரைகளைத் தேர்ந்தெடுத்து, இருவரும் ஒவ்வொரு குதிரையில் ஏறிக் கொண்டோம்.

எனது குதிரை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருந்தது. ஆனால் என் மனைவி சென்ற குதிரை மிகவும் குறும்புத்தனமானதாக இருந்தது. திடீரென ஒரு துள்ளலில் என் மனைவியை அது கீழேத் தள்ளியது.

அவள் கீழே இருந்து எழுந்து சுதாரித்துக் கொண்டு அந்த குதிரையின் மீது மீண்டும் ஏறி அமர்ந்து கொண்டு, "இது தான் உனக்கு முதல் முறை" என்று அமைதியாகக் கூறினாள்.

சிறிது தூரம் சென்றதும் மீண்டும் அந்த குதிரை அவ்வாறே செய்தது. அப்போதும் என் மனைவி மிக அமைதியாக எழுந்து குதிரையின் மீது அமர்ந்து கொண்டு "இது தான் உனக்கு இரண்டாம் முறை" என்று கூறியவாறு பயணிக்கத் தொடங்கினாள்.

மூன்றாம் முறையும் குதிரை அவ்வாறு செய்ததும், அவள் வேகமாக அவளது கைத்துப்பாக்கியை எடுத்து அந்த குதிரையை சுட்டுக் கொன்றுவிட்டாள்!!!

இதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த எனக்கு மிகவும் கோபம் வந்துவிட்டது. நான் அவளை திட்டினேன். "ஏன் இப்படி செய்தாய்? நீ என்ன முட்டாளா? ஒரு விலங்கைக் கொன்று விட்டாயே? அறிவில்லையா?" என்று கேட்டேன்.

அவள் மிகவும் அமைதியாக என்னைப் பார்த்து கூறினாள்,

"இதுதான் உங்களுக்கு முதல் முறை"

அவ்வளவு தான்.

அதன் பிறகு எங்களது வாழ்க்கை மிகவும் அமைதியாக சென்று கொண்டிருக்கிறது!//

நன்றி: Teyron Terence

 

******************************************************************************************************************************************************************************************************************************

 

1510990_689685914481815_5929209916073084

 

சீனாவைச் சேர்ந்த இளைஞன் ஒருவனை இந்தியப் பெண் காதலித்து திருமணம் செய்து கொண்டாள். முதல் வருடத்தில் அவர்களுக்கு அழகான குழந்தை பிறந்தது.

மறு வருடம் யாரும் எதிர்பாராத நேரத்தில் அந்த சீன இளைஞன் இறந்து போனான்.

இந்தியப் பெண்ணிடம் துக்கம் விசாரிப்பதற்காக உறவினர்களும், அந்தப் பகுதி மக்களும் கூடி அவளுக்கு ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

இரண்டு வருடத்தில் இந்தியப் பெண்ணின் காதல் கணவன் இறந்து போனது அவர்களுக்கும் அதிர்ச்சியாகத் தான் இருந்தது.

அந்தப் பெண்ணோ எதையும் காதில் வாங்கிக் கொள்ளாமல் "எனக்குத் தெரியும்! எனக்குத் தெரியும்!" என திரும்பத் திரும்பச் சொல்லிக் கொண்டிருந்தாள்.

நீண்ட நேரமாக அவள் ஒரே வார்த்தையை திரும்பத் திரும்பச் சொல்லி புலம்பிக் கொண்டிருந்ததைக்கண்ட ஒரு இளைஞன் அவளிடம் சென்று கேட்டான்.

"சகோதரி! எனக்குத் தெரியும் என்கிற வார்த்தையை நீண்ட நேரமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாய். அர்த்தம் புரியாமல் கேட்பதற்குச் சங்கடமாக இருக்கிறது. இப்பொழுதாவது தெளிவாகச் சொல் உனக்கு என்ன தெரியும்?" அழுது கொண்டே சொன்னாள். "எனக்குத் தெரியும். சீன பொருட்கள் இரண்டு வருடத்தில் காலாவதியாகிவிடும்" என்று...

https://www.facebook.com/ThasbeehMediaNet

 

Edited by BLUE BIRD

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு மனுசன் நிம்மதியா தூங்க 3

அறை இருக்கு ..

1.கருவறை

2.கல்லறை

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

.

3.வகுப்பறை

நமக்கு தூக்கம் தாம்லே முக்கியம

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.