Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உ.பி. பலாத்காரம்: விஸ்வரூப மத்திய அரசு... விழி பிதுங்கும் அகிலேஷ் யாதவ்!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உத்தரபிரதேசத்தில் தலித் சகோதரிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அகிலேஷ் அரசுக்கு பெரும் தலைவலியாக உருவெடுத்துள்ளது. மத்திய அரசு ஒருபுறம் உ.பி. அரசிடம் அறிக்கை கோரியதோடு, சிபிஐ விசாரணைக்கும் கோடிட்டு காட்டியுள்ள  நிலையில், மாநிலத்தில் போராட்டங்களும் வெடித்துள்ளன.

உத்தரபிரதேச மாநிலம் படாயூன் மாவட்டத்தில் உள்ள காத்ரா கிராமத்தை சேர்ந்த 14 மற்றும் 15 வயதுடைய தலித் சமூகத்தை சேர்ந்த ஒன்றுவிட்ட சகோதரிகள், கடந்த செவ்வாய் அன்று காணாமல் போனார்கள். இது குறித்து பெற்றோர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளனர். புகாரை ஏற்றுக் கொள்ள காவல்துறையினர் மறுத்துள்ளனர்.

UP%20village.jpg

இந்நிலையில் சிறுமிகள் இருவரும் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு கிராமத்தில் உள்ள மரத்தில் தூக்கிலிடப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளனர். சிறுமிகள் இருவரும் தூக்கில் தொங்கிய நிலையில் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டனர்.

காவல்துறையினரின் அக்கறையின்மையினாலே இந்த கொடூர செயல் நடத்துள்ளது என்று பொதுமக்கள் குற்றம்சாட்டி போராட்டம் நடத்தியதை அடுத்து காவல்துறையினர் 7 பேர் வழக்கு பதிவு செய்தனர்.

2 காவலர்கள் பணி நீக்கம்

மேலும், அலட்சியமாக செயல்பட்ட காவலர்கள் சார்வேஷ் யாதவ் மற்றும் ராக்‌ஷாபால் யாதவ் ஆகிய இரண்டு பேரும் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

3 வது குற்றவாளி கைது

இந்நிலையில் குற்றவாளிகள் 7 பேரில் சர்வேஸ் மற்றும் பப்பு ஆகிய 2 பேரையும் காவல்துறையினர் நேற்று கைது செய்தனர். இந்நிலையில், அவதேஷ் யாதவ் என்ற 3வது குற்றவாளி இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வழக்கை வாபஸ் பெறுமாறு தாக்குதல்

இதனிடையே, புகாரை வாபஸ் வாங்குமாறு குற்றவாளிகளில் ஒருவரின் தந்தை, அச்சிறுமிகளின் தாயாரை வீடு புகுந்து தாக்கியதில் அவர் படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது தொடர்பாக யாரும் கைது செய்யப்படவில்லை.  இது கடும் விமர்சனங்களுக்கு உள்ளானது.

இதனால் உத்தரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துவிட்டதாகவும், உத்தரபிரதேசத்தில் ஜனாதிபதிrajnath%20singh%20%282%29.jpg ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என்றும் பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி வலியுறுத்தினார்.

விளக்கம் கேட்ட மத்திய அரசு

இந்நிலையில், சிறுமிகள் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்ட விவகாரத்தில் மத்திய உள்துறை அமைச்சகம் தலையிட்டுள்ளது. இது தொடர்பாக உத்தரபிரதேச அரசிடம் பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், நடந்த சம்பவம் குறித்து  அறிக்கை அளிக்கும் படி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து  உ.பி. அரசும் மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு அறிக்கை அளித்துள்ளது. அதில், இந்த சம்பவம் தொடர்பாக பெண்களுக்கு எதிரான வன்கொடுமை பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் 4 பேரை பிடிக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும், 2 காவலர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ்வழக்கு விரைவு நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பிரேத பரிசோதனை அறிக்கை

இதனிடையை பிரேத பரிசோதனை அறிக்கையில் சகோதரிகள் இருவரும் பலாத்காரம் செய்யப்பட்டு கொல்லப்பட்டது உறுதியாகி உள்ளதாக உத்தரபிரதேச அரசு தெரிவித்துள்ளது.

'குற்றத்துக்கு துணைபோன போலீஸ்'

 இதனிடையே கொல்லப்பட்ட சகோதரிகளில் ஒருவரது தந்தை அளித்துள்ள பேட்டியில், " சிறுமிகள் இருவரும் உறவினர் ஒருவரது வீட்டிற்கு செல்வதாக கூறி, வீட்டிலிருந்து புறப்பட்டு சென்றனர். ஆனால் அவர்கள் அங்கு போய் சேரவில்லை; அவர்களை உள்ளூரை சேர்ந்த சிலர் கடத்தி சென்றுள்ளதாக அச்சிறுமிகளின் சகோதரன் வந்து சொன்னான்.

இதனையடுத்து கடத்தி சென்றதாக தெரியவந்தவரது வீட்டிற்கு சென்று இதுகுறித்து நாங்கள் கேட்டபோது, கடத்தியது உண்மைதான் என்றும், அவர்களை தாங்கள்தான் தங்களது பிடியில் வைத்திருப்பதாகவும், ஆனால் விடுவிக்க முடியாது என்றும் திமிராகவும் சொன்னார்கள். அப்போது அவர்களுடன் தற்போது பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள காவலர்களில் ஒருவரும் உடன் இருந்தார்.

நாங்கள் உள்ளூர் காவல்நிலையத்தில் புகார் கொடுத்த உடனேயே போலீஸார் துரிதமாக செயல்பட்டிருந்தால், அவர்களை காப்பாற்றி இருக்கலாம். ஆனால் அவர்கள் எங்களை வீட்டிற்கு அனுப்புவதிலேயே குறியாக இருந்தனர்" என குற்றம் சாட்டி உள்ளார்.

மேலும் ஒரு பலாத்காரம்

இதனிடையே மேற்கூறிய சம்பவம் ஏற்படுத்தியுள்ள தாக்கம் நீங்குவதற்குள், உ.பி.யில் மேலும் ஒரு பாலியல் பலாத்கார சம்பவம் அரங்கேறி உள்ளது தெரியவந்துள்ளது.  ஆளும் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் முலாயம் சிங் யாதவின் தொகுதி அசாம்கார். இங்குள்ள சராய்மீர் பகுதியில் 17 வயது சிறுமியை, 4 பேர் கொண்ட கும்பலால் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். குற்றவாளிகள் 3 பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளா.

தலித் சகோதரிகள் பலாத்காரம் செய்யப்பட்ட படாயூன் பகுதியும் சமாஜ்வாதி கட்சி வலுவாக உள்ள தொகுதியாகும். அண்மையில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சமாஜ்வாதி வென்ற 5 தொகுதிகளில் படாயூனும் ஒன்று.

rape%20protest%281%29.jpg

வெடித்தது போராட்டம்

இவ்வாறு முலாயம் சிங் குடும்பத்தினர் செல்வாக்காக உள்ள பகுதிகளில் தொடர்ந்து நிகழ்ந்து வரும் பாலியல் பலாத்கார சம்பவங்கள் மற்ற சமூகத்தினர் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இதனிடையே மாநிலம் முழுவதும் பலாத்கார சம்பவத்தை கண்டித்து பரவலாக போராட்டங்கள் வெடித்துள்ளன.

mulayamsingh%2825%29.jpgபலாத்கார தடுப்பு சட்டத்தை எதிர்த்தவர் முலாயம்

சில மாதங்களுக்கு முன்னர் பாலியல் பலாத்காரத்திற்கு எதிராக புதிய சட்டம் கொண்டுவரப்பட்டபோது முலாயம் சிங் யாதவ் அதற்கு எதிர்ப்பு தெரிவித்திருந்தார்." பையன்கள் என்றால் தவறு செய்யத்தான் செய்வார்கள். அதற்காக அவர்களை தூக்கில் போட வேண்டும் என்பது எப்படி சரியாகும்?. இச்சட்டம் தவறாக பயன்படுத்தப்பட வாய்ப்புள்ளது" என கூறியிருந்தார். அவரது இந்த கருத்துக்கு அப்போது கடும் எதிர்ப்பு கிளம்பியிருந்தது.

தினமும் 10 பலாத்காரம்: போலீஸ் ஐ.ஜி. ஒப்புதல்

இதனிடையே உ.பி. மாநிலத்தில் தினமும் சராசரியாக 10 பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்யப்படுவதாக மாநில போலீஸ் ஐ.ஜி. ஆஷிஸ் குப்தா கூறியுள்ளது, அரசின் கையாலாகாததனத்தை வெளிப்படுத்துவதாக உள்ளது என்று எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்நிலையில்  ஐ.ஜி.யின் இந்த பேட்டியால் முதலமைச்சர் அகிலேஷ் கடும் கோபமடைந்துள்ளார்.

 'ரேப் க்ரைசிஸ் செல்':  மத்திய அரசு அதிரடி

இந்நிலையில் உ.பி. பாலியல் பலாத்கார சம்பவத்தில் போலீஸாரின் மெத்தன போக்கு குறித்து எழுந்துள்ள menaka%281%29.jpgகண்டனங்களை தொடர்ந்து, இதுபோன்ற சம்பவங்களில் துரிதமாக நடவடிக்கை எடுப்பதற்காக " ரேப் க்ரைசிஸ் செல்' ( Rape crisis cell) என்ற தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நலத்துறை அமைச்சர் மேனகா காந்தி தெரிவித்துள்ளார்.

சிபிஐ விசாரணை

மேலும் பாதிக்கப்பட்ட பெண்கள் குடும்பத்தினர்,  குற்றவாளிகள் முலாயம் சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காவல்துறை விசாரணை நியாயமாக நடைபெறாது என அச்சம் தெரிவித்துள்ளனர். இதனால் கொல்லப்பட்ட சகோதரிகளின் குடும்பத்தினர் கேட்டுக்கொண்டால் சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைக்கப்படும் என்றும் மேனகா தெரிவித்துள்ளார்.

சட்டம் ஒழுங்கு குறித்த கேள்வியால் அகிலேஷ் ஆவேசம்

இந்நிலையில் ஐ.ஜி.யின் மேற்கூறிய பேட்டி,  மத்திய அரசு தலையிடும் அளவுக்கு சென்ற, மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு  நிலை போன்றவற்றால், முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் விழி பிதுங்கிபோய் உள்ளார்.

இப்பிரச்னை தொடர்பாக இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதலமைச்சர் அகிலேஷ் யாதவிடம், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமை குறித்து நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது," நீங்கள் பாதுகாப்பாக இருக்கிறீர்கள்தானே...? பாதுகாப்பாக உணருகிறீர்களா?" என ஆவேசமுடன் பதிலளித்தார்.

நாடாளுமன்ற தேர்தலில் உ.பி.யில் பெற்ற அபார வெற்றியை தொடர்ந்து, அடுத்த சட்டசபை தேர்தலில் ஆட்சியை பிடித்துவிட வேண்டும் என பா.ஜனதா காய்நகர்த்தி வரும் நிலையில், அகிலேஷின் இந்த பக்குவமில்லாத அணுகுமுறையும், மாநிலத்தின் சட்டம் ஒழுங்கும் இதே ரீதியில் சென்றால்,  அடுத்த சட்டசபை தேர்தல் வரைக்குமாவது சமாஜ்வாதி அரசு ஆட்சியில் இருக்குமா என்பது கேள்விக்குறியாகிவிடும்.

http://news.vikatan.com/article.php?module=news&aid=28477

மகா பாரதத்தையும் இராமாயணத்தையும் பார்த்து வளர்ந்ததன் விளையுதான் இது. பெண்களையும் சக மனிதர்களாகவும் சாதியத்தையும் விட்டெறிந்தால் சில வன்கொடுமைகளை குறைக்க முடியும். ஆனாலும் இந்தியாவின் கலாச்சாரத்தில் வேறுன்றி நிக்கும் இதுகளை அவ்வளவு இலகுவாக மாற்ற முடியாது.

மகாபாரதத்தையும் இராமாயணத்தையும் படித்திருந்தால்..இப்படி செய்திருக்க மாட்டார்கள்...பெண்களை இழிவு படுத்த விரும்பியவர்களுக்கு அழிவே வந்தது...

மதம் பரப்ப வந்தவர்களாலேயே இவ்வளவு இழிவும்.....

  • கருத்துக்கள உறவுகள்

மகாபாரதத்தையும் இராமாயணத்தையும் படித்திருந்தால்..இப்படி செய்திருக்க மாட்டார்கள்...பெண்களை இழிவு படுத்த விரும்பியவர்களுக்கு அழிவே வந்தது...

மதம் பரப்ப வந்தவர்களாலேயே இவ்வளவு இழிவும்.....

நாந்தான், வருணாச்சிரம தர்மத்தையே, தலையில் தூக்கிப்பிடிக்கும் காவியங்கள் தான், மகாபாரதமும், இராமாயணமும்!

திரும்பவும் போய், துரோணாச்சாரியார் எதற்காக, ஏகலைவனின் கட்டைவிரலைக் குரு தட்சணையாகக் கேட்டார் என்று சிந்தித்துப் பாருங்கள்!

கர்ணன், எதற்காக அங்கதேச அரசனாகத் துரியோதனனால் ஆக்கப்பட்டான் என்று சிந்தியுங்கள்!

வாலி, எதற்காக அழிக்கப்பட்டான் என்று யோசியுங்கள்!

இராவணன் எதற்காகக் கொல்லப்பட்டான் என்றும் யோசியுங்கள்!

எல்லாவற்றிற்கும் மேலாக, முள்ளி வாய்க்காலையும் தொடர்பு படுத்திப் பாருங்கள்!

இவ்வளவு அநியாயத்துக்கும் காரணம், இராமாயணமும், மகாபாரதமும் தான் என்பது புரியும்!

அது அந்த காவியங்களையும் இந்து மதத்தையும் இழிவு படுத்தி மதம் பரப்ப வந்தவர்களால் தூக்கி பிடிக்கப்படும் விடயங்கள்...

அந்த விடயங்கள் பிழையான விடயங்கள் என்றே அந்த காப்பியங்களும் சொல்லுகின்றன....ஆகவே தான் மனிதர்கள் எது சரி எது பிழை என உணர்ந்து உணர்ச்சிகளுக்கு அடிபணியாமல்...எப்போதும் தர்ம வழி நிற்க சொல்லுபவை....

கர்ணன் எவ்வளவு சிறந்தவனாக/வீரனாக இருந்தாலும் அதர்மத்தின் வழி நின்றதால் அழிந்தான்..அதுவே இராவணனுக்கும்...சிவனின் அருள் பெற்றும் தீச்செயல் புரிந்ததால்...அழிந்தான்....

இராமனும் தனது மனைவியை காட்டுக்கு துரத்தி தன்னையே தாழ்த்தி கொண்டான்.....

எங்களது சமயம் சரி..அதனின் படிப்பினைகளும் சரியானவை.....ஆனால் அதை நாங்கள் புரிய முட்படுவதில்லை....யாரோ சொன்ன கதையை கேட்டு அதை நாங்களே தாழ்த்துகிறோம்(எங்களை அறிவுள்ளவர் என்று கட்டுவதற்காக...)

சிவனும்..விஷ்ணுவுமே...உண்மையான பக்தர்களுக்கு அடிபணிபவர்கள்..

உங்களை யார் கோயிலில் மணி ஆட்டும் அய்யனுக்கும்...தன்னை சாமி என்று சொல்லி நடிப்பவர்களையும் நம்ப சொன்னது...பிறகு மதத்தில் பிழை சொல்லாதீர்கள்...

ஜாதி வளர்ந்ததே ஒரு கூட்டம் மற்ற கூட்டத்தை அடக்கி ஆள...அதற்கும்...இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு?

கர்ணன் எங்கே அதர்மத்தின் வழி நின்றான்?

இராவணன் எங்கே தீச்செயல் புரிந்தான்?

ஜாதியை வளர்த்ததே, இந்து மதம் தானே?

நீங்கள், மேலுள்ள கேள்விகளுக்குப் பதில்களைச் சொல்லுங்கள்...!

நான் பதில்களைக் கூறுகின்றேன்!

கர்ணன் எங்கே அதர்மத்தின் வழி நின்றான்?

இராவணன் எங்கே தீச்செயல் புரிந்தான்?

ஜாதியை வளர்த்ததே, இந்து மதம் தானே?

நீங்கள், மேலுள்ள கேள்விகளுக்குப் பதில்களைச் சொல்லுங்கள்...!

நான் பதில்களைக் கூறுகின்றேன்!

அவைக்கான பதில் உங்களுக்கே தெரியும்..நான் வீண்விவாதங்களுக்கு வரவில்லை (நீங்கள் ஆயிரம் குறிப்புகள் என்று இவற்றில் சொல்லியவையையே திரித்து ..அல்லது வேண்டுமென்றே விதண்டா வாதமாக எழுதியதையும் காட்டுவீர்கள்)

த்ரயோதனனுக்காக போரில் ஈடுபட்டான்...கர்ணன்

சீதையை தூக்கினான் இராவணன்.. இவையெல்லாம் சரியென்று நீங்கள் நிறுவலாம்...சாதரணமானவர்கள் அதில் சொல்லியிருக்கும் நல்ல கருத்துகளை எடுப்பார்கள்..எல்லாம் தெரிந்தவர்கள் அவற்றில் சொல்லியிருக்கும் "உண்மையை" எடுப்பார்கள் :)

Edited by naanthaan

ஒரு விவாதத்துக்காகத் தான் கேட்டேன்!

கோபிக்காதீர்கள்!

கர்ணனுக்கு வேறு ஒரு வழியுமிருக்கவில்லை!

அத்துடன், கிருஷ்ண பரமாத்வாவே, துரியோதனிடம் உனக்கு நான் வேணுமா, அல்லது எனது சேனை வேண்டுமா எனக்கேட்கிறான்! அப்போது துரியோதனன் கிருஷ்ணரின் சேனை தான் வேண்டுமென்று கேட்டுப் பெற்றுக்கொள்கிறான்!

அப்படியானால், கிருஷ்ணரின் சேனையும் கர்ணன் மாதிரி , ....?  :o

புங்கை நீங்கள் கேட்டது சரியே :)அவர்கள் அவர்களது அரசரால் அனுப்பப்பட்டார்கள்....ஆனால் துரயோதணன் கர்ணனிலேயே தங்கியிருந்தான்... ஆகவே அது கர்ணனின் முடிவு நல்லதோடு சேருவதா இல்லையா என்பது ... :)  ஆனால் கர்ணன் தனக்கு உதவியவன் துரோயதணன் என்று அவன் பக்கமே நின்றான்.....

  • கருத்துக்கள உறவுகள்

அது அந்த காவியங்களையும் இந்து மதத்தையும் இழிவு படுத்தி மதம் பரப்ப வந்தவர்களால் தூக்கி பிடிக்கப்படும் விடயங்கள்...

அந்த விடயங்கள் பிழையான விடயங்கள் என்றே அந்த காப்பியங்களும் சொல்லுகின்றன....ஆகவே தான் மனிதர்கள் எது சரி எது பிழை என உணர்ந்து உணர்ச்சிகளுக்கு அடிபணியாமல்...எப்போதும் தர்ம வழி நிற்க சொல்லுபவை....

கர்ணன் எவ்வளவு சிறந்தவனாக/வீரனாக இருந்தாலும் அதர்மத்தின் வழி நின்றதால் அழிந்தான்..அதுவே இராவணனுக்கும்...சிவனின் அருள் பெற்றும் தீச்செயல் புரிந்ததால்...அழிந்தான்....

இராமனும் தனது மனைவியை காட்டுக்கு துரத்தி தன்னையே தாழ்த்தி கொண்டான்.....

எங்களது சமயம் சரி..அதனின் படிப்பினைகளும் சரியானவை.....ஆனால் அதை நாங்கள் புரிய முட்படுவதில்லை....யாரோ சொன்ன கதையை கேட்டு அதை நாங்களே தாழ்த்துகிறோம்(எங்களை அறிவுள்ளவர் என்று கட்டுவதற்காக...)

சிவனும்..விஷ்ணுவுமே...உண்மையான பக்தர்களுக்கு அடிபணிபவர்கள்..

உங்களை யார் கோயிலில் மணி ஆட்டும் அய்யனுக்கும்...தன்னை சாமி என்று சொல்லி நடிப்பவர்களையும் நம்ப சொன்னது...பிறகு மதத்தில் பிழை சொல்லாதீர்கள்...

ஜாதி வளர்ந்ததே ஒரு கூட்டம் மற்ற கூட்டத்தை அடக்கி ஆள...அதற்கும்...இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு?

நீங்கள் சொல்வது சரிதான் அவர்கள் கெட்டவர்கள் அழிந்துவிட்டார்கள்.
 
ஆனால் உங்களுடைய நல்லவர்களும் மண்டையை போட்டுவிட்டார்களே ?

வேறு யாருடைய நல்லவர்கலாவது இவ்வளவு காலம் இருகிறார்களா? உ+ம்: ஜீசஸ்???

அது அந்த காவியங்களையும் இந்து மதத்தையும் இழிவு படுத்தி மதம் பரப்ப வந்தவர்களால் தூக்கி பிடிக்கப்படும் விடயங்கள்...

அந்த விடயங்கள் பிழையான விடயங்கள் என்றே அந்த காப்பியங்களும் சொல்லுகின்றன....ஆகவே தான் மனிதர்கள் எது சரி எது பிழை என உணர்ந்து உணர்ச்சிகளுக்கு அடிபணியாமல்...எப்போதும் தர்ம வழி நிற்க சொல்லுபவை....

கர்ணன் எவ்வளவு சிறந்தவனாக/வீரனாக இருந்தாலும் அதர்மத்தின் வழி நின்றதால் அழிந்தான்..அதுவே இராவணனுக்கும்...சிவனின் அருள் பெற்றும் தீச்செயல் புரிந்ததால்...அழிந்தான்....

இராமனும் தனது மனைவியை காட்டுக்கு துரத்தி தன்னையே தாழ்த்தி கொண்டான்.....

எங்களது சமயம் சரி..அதனின் படிப்பினைகளும் சரியானவை.....ஆனால் அதை நாங்கள் புரிய முட்படுவதில்லை....யாரோ சொன்ன கதையை கேட்டு அதை நாங்களே தாழ்த்துகிறோம்(எங்களை அறிவுள்ளவர் என்று கட்டுவதற்காக...)

சிவனும்..விஷ்ணுவுமே...உண்மையான பக்தர்களுக்கு அடிபணிபவர்கள்..

உங்களை யார் கோயிலில் மணி ஆட்டும் அய்யனுக்கும்...தன்னை சாமி என்று சொல்லி நடிப்பவர்களையும் நம்ப சொன்னது...பிறகு மதத்தில் பிழை சொல்லாதீர்கள்...

ஜாதி வளர்ந்ததே ஒரு கூட்டம் மற்ற கூட்டத்தை அடக்கி ஆள...அதற்கும்...இந்து மதத்திற்கும் என்ன தொடர்பு?

உண்மைதான், முதலில் எங்களை அறிவோம் அதன் பின்னத் எங்களின் உண்மையான இறை அன்பையும் இறைவனையும் அறிவோம்.

சிவனென்றும் விச்னு என்றும் கடவுளில் வெறுபாடில்லை. உங்கள் பதிலில் இருந்தே தெரிகிறது நீங்கள் பாரபட்சமாணர் என்று. ஆகையால் உங்கள் நம்புக்கையை எதிர்த்து நான் உங்களுடன் இந்த விடயத்தில் கருத்து எளுதுவதை தவிர்க்க விரும்புகிரேன்.

நன்றி..எனக்கும் மதத்தின் பெயரால் அடிபட விருப்பம் இல்லை..ஆனால் தேமே என்று இருக்கும் எனது மதத்தை தங்களது வீரபராகிரமங்களை காட்டுவதற்காக நிந்திப்பதை பார்க்க பொறுக்கமுடியவில்லை...நன்றி..உங்களது புரிந்துணர்வுக்கு...

உண்மைகளை, மற்றவர்கள் எழுதும் போது, இனிமேல் எச்சரிக்கை விடாதீர்கள்!

முன்பொருமுறை, மதம் பற்றி நான் கருத்தெழுதியபோது நீங்கள் குத்தி முறிஞ்சதும், பிறகு மன்னிப்புக் கேட்டதும் எனக்கு இன்னும் நினைவிருக்கின்றது!

இது கருத்துக்களம்!

கருத்துக்களை உங்களால் பொறுக்க முடியாவிட்டால், நீங்கள் இங்கு வந்து பதில் கருத்துக்கள் எழுதக்கூடாது! :D  

அது தவிர, இந்து மதம் என்றைக்குமே 'நிர்பந்தங்களைப்' பலவந்தமாக எதிர்த்து நின்றது கிடையாது!

அனைத்தும் 'உள்வாங்கி' நகர்ந்து செல்வதால் தான், அது இன்றைக்கும் உயிருடன் உள்ளது!

அதுவே இந்து மதத்தின், அழகும், தனித்துவமும் ஆகும்! :icon_idea:

இந்து மதத்தை எதிர்த்துப் போராடிய, கௌதம புத்தரைக் கூட, கிருஷ்ண பரமாத்வாவின் பத்தாவது அவதாரமாக ஏற்றுக்கொண்டு, தன் பாட்டில் நகர்ந்து செல்கின்றது!

நீங்கள் சொல்லுவது விளங்கவில்லை.....யாரவது எனது மதத்தை இழிவு படுத்தினால்/தூற்றினால்...நான் எனது அறிவுக்கெட்டியவரை அதை எதிர்ப்பேன்...எனக்கு சண்டை பிடிக்கவிருப்பம் இல்லை.. ஆனால்..வீண்பரப்புரைகளையும்...கட்டுகதைகளையும் பார்த்துகொண்டு இருக்க முடியாது....பௌத்த/சமண சமயங்கள் இந்துமதத்திலிருந்தே வந்தது :rolleyes:  ஆகவே அவைகளோடு விட்டுகொடுத்து வாழலாம்...அனால் இப்போது மத-ஆள்பிடிகளின் காலம்...இந்துமதத்தின் சாந்த தன்மையையே. வைத்து அப்பாவிமக்களை ஏமாற்றி தங்களின் மதவியாபாரத்தை நடத்துகிறார்கள்....ஆகவே தான் எதிர்க்க வேண்டிஇருகிறது... :lol:

(விருப்பம் இல்லாதவர்கள்/காசுக்கு/வெளிநாட்டு குடியுரிமைக்கு வெளியேறுவதில் பிரச்சனை இல்லை அது தனி ஒருவரின் முடிவு..ஆனால் வேறு அதோ அடிபடைபிரச்சனைகளை இந்துமதத்தின் மேல் ஏற்றி...அதை தங்களது ஆள் பிடி வேலைகளுக்கு உபயோகிக்கிறார்கள்)...உ+ம்: இந்துமதத்தை தாக்குவது ஜாதியை காட்டி தான்..ஆனால் மதம் மாறிய எவனும் தனக்கு கீழான ஜாதி என்று கருதப்படுபவர்களோடு எந்த சம்பந்தமும் செய்வதில்லை..அவர்களும் ஜாதியை தங்களது புகுந்த மதத்திலும் maintain பண்ணிகொண்டு...அதற்கு புது ஜாதி ஆள் சேர்க்கிறார்கள்..

Edited by naanthaan

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி,எல்லாம் கிருஸ்ணன் செய்த வேலைதானா அண்டைக்கே புத்தனை போட்டுதள்ளியிருந்தா நல்லா இருந்திருக்கும்

  • கருத்துக்கள உறவுகள்

அடப்பாவி,எல்லாம் கிருஸ்ணன் செய்த வேலைதானா அண்டைக்கே புத்தனை போட்டுதள்ளியிருந்தா நல்லா இருந்திருக்கும்

எங்கள் முருகன்

வள்ளி  தெய்வயானையுடன்  மெய் மலர்ந்து இருந்துவிட்டார் போலும்

ஏதோ

கோவணமாவது  மிஞ்சிச்சே. :D  

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.