Jump to content

தமிழ்க்கவி சோபாசக்தி நேர்காணல் முரண்களும் புலியெதிர்ப்பும் (தீபச்செல்வன்)


Recommended Posts

தீபச்செல்வன்  அவர்கள் தமிழ்கவி அவர்கள் சோபா சக்திக்கு வழங்கிய நேர்காணலுக்கு எழுதிய கருத்து அல்லது எதிர்வினை. இது தீபனின் முகநூலில் இருந்து இங்கு பதிவிடுகிறேன்.

 

தமிழ்க்கவி அம்மாவை சிறிய வயதில் வரிச்சீருடையுடன் தெருக்களிலும் கூடட்டங்களிலும் சிவப்பு எம்.ரி.நையின்டி மோட்டார் சைக்கிளில் கம்பீரமாக சொல்லுவதைப் பார்த்திருக்கிறேன். நான் தமிழீழத் தேசியத் தொலைக்காட்சியில் பணியாற்றிய காலங்களில் அன்றைய அரசியல்துறைப் பொறுப்பாளர் தமிழ்ச்செல்வன் தலைமையில் மாதாந்தம் நடக்கும் கூட்டங்களில் அடிக்கடி குறுக்கிட்டு பேசிக் கொண்டிருப்பார். அவர் அங்கு பேசிய விடயங்கள் பல இன்னமும்எனக்கு நினைவிருக்கின்றன. விபத்தில் இறந்தவர்களின் படங்களை விபத்து விழிப்புணர்வு படமாக போடக்கூடாது. அது அவர்களின் குடும்பத்தினரின் மனதைப் பாதிக்கும் என்றார் ஒருநாள். 

இயக்கத்தை வளர்ப்பது பற்றிய ஆலோசனைகளை நெடுகச் சொல்வார். விதவிதமான சாப்பாடுகள் செய்வது, பழைய கதைகள் என்று தமிழ்க்கவி அம்மா என்ன பேசினாலும் அதை முழுவதுமாக சிரித்தபடி கேட்டுக் கொண்டிருப்பார் தமிழ்ச்செல்வன். “நான் அமைப்பில் விரும்பித்தான் சேர்ந்தேன். மறுபடியும் கழற்றிக்கொள்ள முடியாமல் நன்கு மாட்டிக்கொண்டேன்.” என்று இன்றைக்குச் சொல்பவர் அன்று விரும்பி முழுக்க முழுக்க உடன்பட்டு இயக்கத்துடன் வாழ்ந்தவராகவே பேசுவதைப் பார்த்திருக்கிறன். தமிழ்க்கவி அம்மா பேசுவதில் பெரும்பாலானவை இயக்கம்மீதான பாராட்டுக்கள். இயக்கத்தை விட்டு கழற முடியாது தவித்தவர் போல அன்றைக்குத் தெரியவில்லை. 

ஷோபாசக்தியுடனான உரையாடலில் சில இடங்களில் இயக்கம் குறித்து அவதூறுகளை இட்டுக்கட்டி முரண்படுவதாக காட்டிக்கொள்ளும் தமிழ்க்கவி அம்மா அன்றைக்கு எப்படி? எதற்காக? ஒன்றியிருந்தார்? 

முள்ளிவாய்க்காலுக்குப் பின்னர் ஒருநாள் சுடரொளியில் தமிழ்க்கவி அம்மா எழுதிய கதை ஒன்றைப் படித்தேன். தன்னுடைய நிலையை, போராட்டத்தை, நியாயத்தை, இயக்கத்தைப் பற்றிய தன் அபிப்பராயங்களை அந்தக் கதையில் எழுதியிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது. அரசின் தடுப்புமுகாங்களுக்குள் இருந்து கொண்டே இப்படி எழுதியிருக்கிறாரே என்று நினைத்தேன். பம்பமடுமுகாம் தடுப்பிலிருந்து விடுதலை பெற்ற ஒரு போராளியை வவுனியாவில் சந்தித்போது தமிழ்கவி அம்மா எங்கே என்று கேடடேன். அவரின் அந்த சிறுகதை பற்றியும் சொன்னேன். 

முன்னாள் போராளிக்கு தமிழ்கவி அம்மாவின் பெயரைக் கேட்டவுடன் முகம் மாறியது. அவர் இராணுவத்தினருடன் நல்ல மாதிரி. சிங்களமும் தெரியும்தானே. அவரால் எங்களில் சிலருக்கு பிரச்சினைகள் ஏற்பட்டன என்றார். வெற்றிச்செல்வி அக்காவைச் சந்தித்போதும்கூட இதை அவர் எனக்குச் சொல்லியிருக்கிறார். ஏதும் நிர்பந்தம் காரணமாக அவர் அவ்வாறு இயங்கினாரா என்றும் அவர்களிடம் கேட்டேன்?

தமிழ்நாடு வந்தபோது அவரது தொலைபேசி எண் வாங்கி பேசினேன். மண் ஈழத் திரைப்பட நாயகன் தேவர் அண்ணாவின் வீட்டில் வைத்து சந்தித்தோம். அன்றைக்கு தமிழ்கவி அம்மாவுடன் நிறைய விடயங்களைப் பேசிக் கொண்டிருந்தோம். இன்றைய ஷோபாசக்தியின் உரையாடலில் பேசிய விதத்திற்கும் அன்று தேவர் அண்ணாவின் வீட்டில் பேசியதற்கும் இடையில் பெரிய வேறுபாடு இருந்தது. தலைவர் இருக்கிறார். அவரை ஒன்றும் செய்ய இயலாது. அவர் வருவார் என்றெல்லாம் சொல்லிக் கொண்டிருந்தார். 

புலி எதிர்ப்பு அரசியல் குறித்து பேசினோம். எங்கள் பல்லை குத்தி நாங்கள் மணக்ககூடாது என்றார். இயக்கம் பற்றிய குற்றச்சாட்டுக்கள் பலவற்றை நிராகரித்தார். இறுதி யுத்த நாட்களில் நடந்த பல கதைகளை சம்பவங்களை சொல்லிக் கொண்டிருந்தார். இன்றைக்கு வேறொரு தமிழ்கவி அம்மாவைப் பார்க்கிறோம். இயக்கமாக இருந்து எழுதுகிறேன் என்று சொல்லிக் கொண்டு புலிகளுக்கு வெளியில் நின்று பேசுகிறார். அன்றைக்கு புலிகளின் குரலிலும் தேசியத் தொலைக்காட்சிகளிலும் பார்த்த தமிழ்கவி அம்மாவை தேவர் அண்ணாவின் வீட்டில் நான் சந்தித்தேன். 

அன்றைக்கு தமிழ்க்கவி அம்மா மீண்டும் புலிகளின் குரலில் பணியாற்றவும் இந்தியாவுக்கு நிரந்தரமாக வரவும் விரும்பினார். புலிகளின் குரலில் மீண்டும் வேலை கிடைத்திருந்தால் தொடர்ந்தும் அந்தத் தமிழ்கவி அம்மாவைப் பார்த்திருக்க முடியும். இந்த நேர்காணலில் பதில்கள் வேறு மாதிரி அமைந்திருக்கும். இப்படித்தான் கர்ணனும் தடுப்பை விட்டு வெளியில் வந்தபோது என்னை ஷோபாசக்தி எடுத்த நேர்காணலை பாராட்டி பேஸ்புக்கில் கடிதம் எழுதினார். வெளியில் வந்து சில மாதங்கள் ஆக மெல்ல மெல்ல சிலரால் புலி எதிர்ப்பாளராக மாற்றப்பட்டார். அவ்வாறுதான் தமிழ்கவி அம்மாவும் மாற்றப்பட்டிருக்கிறார். முள்ளிவாய்க்காலை கடந்து முள்வேலி முகாமை கடந்தும் வந்தவர்கள் ஷோபாசக்தி போன்றவர்களை கடந்து வர முடியாமல் போகிறது. 

முடிந்தவரை புலி எதிர்பாளர்களை உருவாக்குவதுதான் ஷோபாசக்தி போன்றவர்களின் கடமை. புலிகள் இயக்கத்திற்கு எதிரான அவதூறுகளை எழுதுவதும் மற்றவர்களை சொல்லத் தூண்டுவதும்தான் அவர்களது தொழில். அதற்காக அவர்கள் தீயாக வேலை செய்து கொண்டிருக்கிறார்கள். என்னிடம் கேட்ட சில கேள்விகளும் தமிழ்கவி அம்மாவிடம் கேட்ட சில கேள்விகளும் ஷோபாசக்தியின் குரூரத்தின் வெளிப்பாடுகளே. சில கேள்விகள் ஷோபாசக்திக்கு புலிகள் தொடர்பாக எந்த அறிவு இருந்திருக்கிறது என்ன பார்வை இருந்திருக்கிறது என்பதை எல்லாம் தெளிவாகக் காட்டுகிறது. 

புலிகளையும் ஈழத்தையும் காலத்தையும் அறியாத - உணராத ஒருவர் வேறு எப்படிக் கேட்பார்? தமிழ்கவி அம்மாவின் ஊழிக்காலத்தில் புலிகள் பற்றி சொல்லப்பட்டவை குறித்து என்னிடம் “சொல்லு சொல்லு” என்று சீண்டிக்கொண்டிருந்தார் ஷோபாசக்தி. தமிழ்கவி அம்மாவையும் துரோகி என்று சொல்ல வேண்டும் என்றே அவர் எதிர்பார்த்தார். அதன்மூலம் தமிழ்கவி அம்மா புலிகளை எதிர்க்கும் தீவிர புலி எதிர்பப்பாளராக மாறுவார் என்பதும் அவர் கணக்கு. 

ஒரு காலை இழந்ததாலும், இரண்டு பிள்ளைகளை இழந்ததாலும், நான்கூட என் சகோதரனை களப்பலி கொடுத்ததினாலும், இன்றைய இலங்கை அரசாங்கத்தின் அமைச்சராக உள்ள கருணா அம்மான் போராளியாக பல போராட்டத்தில் முக்கிய பங்கு வகித்தாலும் இன்று பொய்களை சொல்ல - அவதூறுகளைச் சொல்ல முடியாது. 

தமிழ்க்கவி அம்மா இயக்கத்தில் இணைந்திருந்தபோதும் நேரடியாக அரசியல் செயற்பாடுகளிலோ போர் நடவடிக்கைகளிலோ ஈடுபட்டவர் இல்லை. கலைத்துறைச் செயற்பாட்டிலேயே ஈடுபட்டார். அன்றைக்கு சீருடை அணியாமல் தமிழ்க்கவி அம்மா செய்த வேலைகளைச் செய்த பல எழுத்தாளர்கள், கலைஞர்கள், செயற்பாட்டாளர்கள் இன்னமும் ஈழ மண்ணில் வசித்துக் கொண்டிருக்கிறார்கள். தமிழ்க்கவி அம்மா இயக்கத்தில் தன்னை முன்னிலைப்படுத்தி சற்று அதிகமாகவே பேசுவார். அதைப் போல சில விடயங்களை உண்மைக்கு புறம்பாக சொல்லியிருக்கிறார். 

தமிழ்கவி அம்மா ஏதும் நிர்பந்தங்கள் காரணமாக நாட்டு சூழ்நிலை காரணமாக இவ்வாறெல்லாம் எழுதுகிறார் பேசுகிறார் என்றே நான் நினைத்தேன். யுத்தம் முடிந்து சில மாதங்களில் என் வாயிலிருந்து புலி எதிர்ப்பை எதிர்பார்த்த ஷோபாசக்தி இப்போது சூழ்நிலைக் கைதியாக வாழும் தமிழ்கவி அம்மாவையும் இவ்வாறு பேச வைத்திருப்பது பெரும் அரசியல் நோக்கம் கொண்டது. இதன் மூலம் ஷோபாசக்திக்கு ஒரு புலியெதிர்ப்பாளரும் இந்த வார சர்ச்சைக்கான விடயமும் கிடைக்கும். 

தமிழ்க்கவி அம்மா தனது புதிய நாவலை ஊழிக்காலத்தை வெளியிட்ட பதிப்பகத்திற்குக் கொடுத்திருக்கிறார். அந்தப் பதிப்பகம் அந்த நாவலை வெளியிட மறுத்துள்ளது. தடுப்பில் இருந்தபோது இராணுவம் பாலும் தேனும் கொடுத்தது என்ற ரேஞ்சில் அந்த நாவல் எழுத்தப்பட்டிருந்ததாம். அந்த நாவலை வெளியட்டு இராணுவத்தால் இறுதியுத்த களத்தில் துப்பாக்கிகளால் பிடரிகளில் சுட்டுக்கொல்லப்பட்ட போராளிகளுக்கு நான் துரோகம் இழைக்கவில்லை என்று அந்த பதிப்பாளர் நாவலை வெளியிட மறுத்திருக்கிறார். தடுப்புமுகாம் பற்றிய அம்மாவின் வெளிவராத அந்த நாவல் குறித்து அறிந்தபோது பம்பைமடுவிலிருந்து வெளியில் வந்த போராளிகள் தமிழ்க்கவி அம்மா பற்றி சொல்லியது நினைவுக்கு வந்தது. 

ஊழிக்காலத்தை வெளியிடுவதாக சொல்லி வாங்கிய இன்னொரு பதிப்பகம் வெளியிட மறுத்தபோது எனது நாவலை மகிந்த ராஜபக்ச வெளியிடுவார் என்று தமிழ்க்கவி அம்மா சொன்னராம் என்பதை நான் அப்போது நம்பவில்லை. ஆனந்தவிகடன் பேட்டி வந்த அன்று இரவு அவருடன் தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தபோது எனக்கு பொறுப்பதாக இருந்த இராணுவ அதிகாரியே இந்த நாவலை இஞ்ச வெளியிடுவம் என்று கேட்டவர் என்று சொன்னார். பிரச்சினை வராதா என்று நான் கேட்டபோது இராணுவத்திற்கு சொன்ன கதையைத்தான் நாவலாக எழுதியதாகவும் சொன்னார். 

முதன் முதலில் தமிழகத்திற்கு வந்தபோது ஆனந்தவிடகனுக்கு கொடுத்த பேட்டியும் (எங்களுடைய அடுத்த சந்ததி இன்னும் வேகமாகப் போராடும்! http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=14894) ஊழிக்காலம் நாவலுக்குப் பிறகு இந்த வருடம் ஆனந்த விகடனுக்கு கொடுத்த பேட்டியும் (“இப்படித்தானே வாழமுடியும்?” http://www.vikatan.com/new/article.php?module=magazine&aid=91472) தமிழ்க்கவி அம்மாவின் மாற்றத்தை தெளிவாக காட்டுகிறது. 

தமிழ்க்கவி அம்மாவின் இந்தச் சடுதி மாற்றங்களும் தக்கெணப் பிழைத்தல்களும் எதற்கானவை? அன்றைக்குப் பேசியவை உண்மையா? இன்றைக்குப் பேசுபவை உண்மையா? இந்த புனைவுகளின் நோக்கம் என்ன? தமிழ்க்கவி அம்மா அனுபவித்தவை, எதிர்கொண்டவை, இழந்தவை கொஞ்சமல்ல. பெரும்பாலான ஈழச்சனங்களும் அதை சந்திருக்கின்றன. அவர் இந்த நேர்காணலில் ஷோபாசக்தியின் அரசியலுக்கு பலியாக்கப்பட்டிருப்பதும் சாதாரணமான விடயமல்ல. அதைப்போல புலிகள் இல்லை. உதவிகள் இல்லை. வருவாய் இல்லை. பணம் இல்லை என்பதற்காக மாற்றிப் பேசுவர்களும் மிக மிக ஆபத்தானவர்கள். அவர்களின் நிலைப்பாடுகள் அதிகாரத்துடனும் லாபங்களுடனும் சம்பந்தப்பட்டது. 

"தலையையும் வாலையும் காட்டிக் கொண்டுதான் வழலாம் - இப்பிடித்தானே வாழ முடியும்" என்று நீங்கள் சொன்னது நீங்கள் வாழும் நிலையைத்தான் சொல்லியிருக்கிறியள் என்று அப்போது தமிழ்க்கவி அம்மாவுக்குச் சொன்னேன். வேற என்ன தம்பி செய்யிறது? என்றார். ஷோபாசக்தி உரையாடலில் எந்தளவுக்கு தலையையும் வாலையையும் காட்டியிருக்கிறார் என்பது தமிழ்க்கவி அம்மாவுக்குத்தான் தெரியும். 

தீபச்செல்வன்

Link to comment
Share on other sites

இதையெல்லாம் கடந்து போகவேண்டியதுதான். தீபச்செல்வனுக்கு நன்றிகள்.

Link to comment
Share on other sites

//தமிழ் கவி அம்மா தெரியுமோ .....முன்னாள் புலி உறுப்பினர் மூன்று மாவீரரின் தாய் இப்போ சோபா சக்தி என்ற எட்டப்பனுடன் கூட்டணி அமைத்து கண்டதையும் உளறிட்டிருக்கிரா//

 

 

முகப்புத்தகத்தில் ஒரு நண்பர் பதிவிட்ட பதிவை இங்கே இணைக்கிறேன் .............இதுதான் என் இலக்கிய சிந்தனையும் ...........................உங்களுக்கு ஈப்படி எழுதுவதுதான் இலக்கியம் என்றால் .எனக்கு உங்களைப்பற்றி இப்படி சிந்திப்பதுதான் இலக்கியமாய் தெரியுது ............. :D

Link to comment
Share on other sites

சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன.
கடந்த கால தவறுகளில் இருந்து படிப்பினைகளை பெற்றுக் கொள்வது ஒன்று தான் நிகழ்கால மற்றும் எதிர்கால தவறுகளை தவிர்த்து முன்னேறிச் செல்வதற்கான ஒரே வழி என்பது உண்மை .கடந்த கால தவறுகளைப் பற்றிய விமர்சனம் சுயவிமர்சனம் மீளாய்வு என்பனவும் அவசியம் என்பதும் உண்மை.ஆனால் அந்த விமர்சனம் சுயவிமர்சனம் மற்றும் மீளாய்வு என்பவற்றை எங்கே எப்போது எந்தத் தளத்தில் முன்வைப்பது  என்பது மிக முக்கியமானது.
அதிலும்  இத்தகைய விமர்சனம் சுய விமர்சனம் மற்றும் மீளாய்வு என்பன எப்போதும் எதிரிக்கு   சாதகமாக அவனது நலன்களுக்கு துணை புரியும் ஆபத்தை கொண்டவை என்பது முக்கியமானது.எதிரி பலமுள்ளவனாகவும் அவனுக்கு எதிராக போராடும் தரப்பு பலவினமாக உள்ள நிலையில் பகிரங்கமாக வைக்கப்படும் விமர்சனங்கள் போராடும் தரப்பையும் ஒடுக்கமுறைக்குள்ளான சமூகத்தையும் பலவீனப்படுத்தி பிளவு படுத்தும்.பௌத்த சிங்கள பேரினவாதம் தமிழனத்தை கருவறுக்க விஸ்வரூபம் எடுத்திரும் இன்றைய நிலையில் இத்தகைய விமர்சனங்கள் எமது மக்களை அவ நம்பிக்கை கொண்டவர்களாக மாற்றி அடிமை வாழ்வை ஏற்கொள்ளும் நிலைக்கு தள்ளும் ஆபத்தை ஏற்படுத்தும்.
கொடிய ஒடுக்குமுறைக்குள்ளாகியுள்ள ஒரு  இனம் தன்னை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் எதிரியை எதிர்கொள்ளும் ஆற்றலுக்கூடாகத்தான் தனது தவறுகளை பகிரங்கமாக விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் செய்து மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும்.அதுவரை உள்ளக மட்டத்திலே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை ஒரே வரியில் சொல்வதானால் சகோதரி தமிழ்கவி மாவீரர்களான தனது பிள்ளைகளின் விதைகுழிகளில் மலத்தை அள்ளிக் கொட்;டியிருக்கிறார்;.
 
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

நன்றி கெட்டதுகள் - இலக்கியவாதிகள், நேர்காணல், கருத்துக்கள், கவிதைகள், இன்னும் வாயில நுளையாத பெயரில ஏதேதோ எழுறாங்கள்....ம்..ம்.. இவற்றையும் கடந்து பயணிக்கவேண்டும்

Link to comment
Share on other sites

உண்மை நவம் அண்ணா .இந்த காலகட்டத்தில் இந்த விமர்சனம் திறந்த வெளியில் மூத்திரம் பெய்வது போல ஓர் உணர்வு .....ஆனாலும் தமிழ்க்கவி அம்மாவின் பொருளாதார,அரசியல் .பய  நிலையை இந்த மூத்திரம் பெய்யும் விசமிகள் பயன் படுத்துகிறார்களோ என்ற ஓர் ஐயம் எனக்கு உள்ளது 

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

 

சாத்தான்கள் வேதம் ஓதுகின்றன.
கடந்த கால தவறுகளில் இருந்து படிப்பினைகளை பெற்றுக் கொள்வது ஒன்று தான் நிகழ்கால மற்றும் எதிர்கால தவறுகளை தவிர்த்து முன்னேறிச் செல்வதற்கான ஒரே வழி என்பது உண்மை .கடந்த கால தவறுகளைப் பற்றிய விமர்சனம் சுயவிமர்சனம் மீளாய்வு என்பனவும் அவசியம் என்பதும் உண்மை.ஆனால் அந்த விமர்சனம் சுயவிமர்சனம் மற்றும் மீளாய்வு என்பவற்றை எங்கே எப்போது எந்தத் தளத்தில் முன்வைப்பது  என்பது மிக முக்கியமானது.
அதிலும்  இத்தகைய விமர்சனம் சுய விமர்சனம் மற்றும் மீளாய்வு என்பன எப்போதும் எதிரிக்கு   சாதகமாக அவனது நலன்களுக்கு துணை புரியும் ஆபத்தை கொண்டவை என்பது முக்கியமானது.எதிரி பலமுள்ளவனாகவும் அவனுக்கு எதிராக போராடும் தரப்பு பலவினமாக உள்ள நிலையில் பகிரங்கமாக வைக்கப்படும் விமர்சனங்கள் போராடும் தரப்பையும் ஒடுக்கமுறைக்குள்ளான சமூகத்தையும் பலவீனப்படுத்தி பிளவு படுத்தும்.பௌத்த சிங்கள பேரினவாதம் தமிழனத்தை கருவறுக்க விஸ்வரூபம் எடுத்திரும் இன்றைய நிலையில் இத்தகைய விமர்சனங்கள் எமது மக்களை அவ நம்பிக்கை கொண்டவர்களாக மாற்றி அடிமை வாழ்வை ஏற்கொள்ளும் நிலைக்கு தள்ளும் ஆபத்தை ஏற்படுத்தும்.
கொடிய ஒடுக்குமுறைக்குள்ளாகியுள்ள ஒரு  இனம் தன்னை ஒடுக்குமுறைக்குள்ளாக்கும் எதிரியை எதிர்கொள்ளும் ஆற்றலுக்கூடாகத்தான் தனது தவறுகளை பகிரங்கமாக விமர்சனம் மற்றும் சுயவிமர்சனம் செய்து மீளாய்வுக்கு உட்படுத்த வேண்டும்.அதுவரை உள்ளக மட்டத்திலே இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும்.
என்னைப் பொறுத்தவரை ஒரே வரியில் சொல்வதானால் சகோதரி தமிழ்கவி மாவீரர்களான தனது பிள்ளைகளின் விதைகுழிகளில் மலத்தை அள்ளிக் கொட்;டியிருக்கிறார்;.

 

 
இது எல்லாமா இப்போ முக்கியம் ?
நாமும் இருக்கிறோம் என்று பறை தட்டிக்கொண்டு அவர்களும் ...........
நாம் படித்தவர்கள் ..... இதையும் படித்தோம் என்று காவிக்கொண்டு இன்னொரு கூட்டமும் இருக்கும்வரை 
சமூகத்திற்கு இது தேவையா இல்லையா என்று எவன் சிந்திக்கிறான்.
 
இந்த சிலேடைக்கு .......... நல்ல பெயர் சூட்டி இருக்கிறார்கள்.
விட்ட பிழைகளை திருத்துகிறோமாம்.
 
சோபா "சத்தி"யும்  இவாவும் சேர்ந்துதான் இனி முப்படை நடத்த போகிறார்கள். அதுதான் புலிகள் விட்ட தவுறுகளை திருத்திவிட்டு. தங்களது வீடுகளில் இருந்து மட்டுமே போராளிகளை கொண்டு வந்து விடுதலை போராட்டம் செய்யபோகிறார்கள். 
 
நாய்க்கு ஏன் போர்த்தேங்காய் ? என்று கேட்கலாம் போல்தான் இருக்கு. அதை நாக்கு இருக்கிறவனை பார்த்து அல்லவா கேட்கவேண்டும்?
Link to comment
Share on other sites

நாங்களும் இறுதிவரை முள்ளிவாய்க்காலில் இருந்துதான் வந்தோம்.எனது வலது காலை விடுதலைக்கு கொடுத்திருக்கிறேன்.நேற்றுத்தான் இந்த நாவலை வாசித்தேன்.பல பொய்களை தமிழ்க்கவி அம்மா இட்டுக்கட்டி எழுதியிருக்கிறார்.ஏன் அம்மா இப்படி செய்கிறீர்கள்? உங்கள் பேட்டியிலும் பொய்களை   கூறுகிறீர்கள்.இறுதிக்காலத்தில் அங்கும் உங்களைக்கண்டேன்.உங்கள் குடும்பத்தோடேயே சுயநலமாய் திரிந்தீர்கள். 

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



  • Tell a friend

    Love கருத்துக்களம்? Tell a friend!
  • Topics

  • Posts

  • Our picks

    • "சோதிடமும் அசட்டுநம்பிக்கையும்"

      தமிழர்களுக்கு நான்கு என்ற எண்ணை நிறையவே பிடிக்கும். இதைப் பார்க்கையில் சங்க காலத்திலேயே எண் சோதிடம்- (Numerology) "பித்து" வந்துவிட்டதோ என்று தோன்றுகிறது. ஆனால் சங்க காலத்துக்குப் பின்னர் தான் நூல்களையும் பாக்களையும் தொகுக்கும் வேலைகள் துவங்கின. என்ன காரணமோ தெரியவில்லை நூல்களின் பெயர்களில் 4, 40, 400, 4000 என்று நுழைத்து விட்டார்கள். நான் மணிக் கடிகை முதல் நாலாயிர திவ்யப் பிரபந்தம் வரை சர்வமும் நாலு மயம்தான் !!

      “ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும் இரண்டும் சொல்லுக் குறுதி” என்று சொல்லுவார்கள். ஆல, வேல மரங்களை விளக்கத் தேவை இல்லை. “நாலும் இரண்டும்” என்பது வெண்பாவையும் குறள் வகைப் பாக்களையும் குறிக்கும். நம்பிக்கை தவறில்லை அது மூடநம்பிக்கை யாகமல் இருக்கும் வரை. அளவுக்கு அதிகமாக இதுபோல சிந்திக்கும் போது நம்பிக்கையே மூடநம்பிக்கைக்கு வழிவகுப்பதாக அமைகிறது!.
        • Like
      • 4 replies
    • இதை எழுத மிகவும் அயற்சியாய்த் தான் இருக்கிறது.

      ஜீவா போன்றவர்களுக்கு இந்து மதத்தை காப்பாற்ற வேண்டிய தேவை என்ன என்பதை நான் கேட்கவில்லை ஆனால் சமுத்ரா போன்றவர்களுடைய தேவையில் இருந்து மாறுபட்டதாக அது இருக்கும் என்று புரிந்துகொள்கிறேன். அது என்னுடைய புரிதல். எல்லோரும் எதோ ஒரு புரிதலின் அடிப்படையிலேயே அடுத்த அடியை எடுத்து வைக்கிறோம்.
        • Like
      • 4 replies
    • மனவலி யாத்திரை.....!

      (19.03.03 இக்கதை எழுதப்பட்டது.2001 பொங்கலின் மறுநாள் நிகழ்ந்த ஒரு சம்பவத்தின் நினைவாக பதிவிடப்பட்டது இன்று 7வருடங்கள் கழித்து பதிவிடுகிறேன்)

      அந்த 2001 பொங்கலின் மறுநாள் அவனது குரல்வழி வந்த அந்தச் செய்தி. என் உயிர் நாடிகளை இப்போதும் வலிக்கச் செய்கிறது. அது அவனுக்கும் அவனது அவர்களுக்கும் புதிதில்லைத்தான். அது அவர்களின் இலட்சியத்துக்கு இன்னும் வலுச்சேர்க்கும். ஆனால் என்னால் அழாமல் , அதைப்பற்றி எண்ணாமல் , இனிவரும் வருடங்களில் எந்தப் பொங்கலையும் கொண்டாட முடியாதபடி எனக்குள் அவனது குரலும் அவன் தந்த செய்திகளும் ஒலித்துக் கொண்டேயிருக்கும்.
      • 1 reply
    • பாலியல் சுதந்திரமின்றி பெண்விடுதலை சாத்தியமில்லை - செல்வன்


      Friday, 16 February 2007

      காதலர் தினத்தை வழக்கமான தமது அரசியல் நிலைபாடுகளை பொறுத்து அணுகும் செயலை பல்வேறு தரப்பினரும் உற்சாகமாக செய்து வருகின்றனர்.கிரீட்டிங் கார்டுகளையும், சாக்லடுகளையும் விற்க அமெரிக்க கம்பனிகள் சதி செய்வதாக கூறி காம்ரேடுகள் இதை எதிர்த்து வருகின்றனர்.அமெரிக்க கலாச்சாரத்தை திணிக்க முயற்சி நடப்பதாக கூறி சிவசேனாவினரும் இதை முழுமூச்சில் எதிர்க்கின்றனர். தமிழ்நாட்டில் பாமக ராமதாஸ் இதை கண்டித்து அறிக்கை விட்டுள்ளார். பாகிஸ்தானிலும், அரபுநாடுகளிலும் இதை எதிர்த்து பத்வாக்கள் பிறப்பிக்கப்பட்டு அதை மீறி இளைஞர்கள் இதை கொண்டாடியதாக செய்திகள் வந்துள்ளன.
      • 20 replies
    • எனக்குப் பிடித்த ஒரு சித்தர் பாடல் (எந்தச் சித்தர் என்று மறந்து விட்டேன். கட்டாயம் தேவை என்றால் சொல்லுங்கள் எனது ஓலைச் சுவடிகளை புரட்டிப்பார்த்து பின்னர் அறியத் தருகிறேன்)

      நட்ட கல்லைத் தெய்வம் என்று நாலுபுட்பம் சாத்தியே
      சுற்றி வந்து முணுமுணென்று கூறுமந்த்ரம் ஏனடா
      நட்ட கல்லும் பேசுமோ நாதன் உள்ளிருக்கையில்
      சுட்ட சட்டி தட்டுவம் கறிச்சுவை அறியுமோ?


      பொருள்:
      சூளையில் வைத்துச் சுட்டுச் செய்த மண் பாத்திரத்தில் வைக்கும் கறியின் சுவை எப்படியானது என்று அந்தப் பாத்திரத்துக்கு விளங்குமா? அது போல, எம்முள்ளே எருக்கும் இறைவனை நீ அறியாமல் ஒரு கல்லினுள் கடவுள் இருப்பதாக நம்பி வெறும் கல்லை அராதித்து வழிபடுகிறாய்.
      • 7 replies
×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.