Jump to content

வெள்ளை சாதம் சாப்பிடுவதை தவிர்த்தால் கிடைக்கும் நன்மைகள்!!!


Recommended Posts

  • கருத்துக்கள உறவுகள்

இரத்த சர்க்கரை அளவு சீரகா இருக்கும்.   சாதத்தை சாப்பிடாமல் இருந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்பாட்டுடன் வைத்துக் கொள்ள முடியும். மேலம் அளவுக்கு அதிகமாக சாதத்தை உட்கொள்ளும் போது, இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவானது அதிகரித்து பெரும் பிரச்சனையை ஏற்படுத்திவிடும்.

 

மலச்சிக்கல் தினமும் அளவுக்கு அதிகமாக சாதத்தை சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனையை சந்திக்கக்கூடும். ஏனெனில் வெள்ளை சாதத்தில் நார்ச்சத்துக்களானது மிகவும் குறைவாக இருப்பதால், அவை முறையற்ற குடலியக்கத்தை ஏற்படுத்தும்.

 

நீரிழிவு வெள்ளை சாதத்தை தினமும் அதிகம் சாப்பிடுவதால் டைப் 2 நீரிழிவு வருவதற்கான வாய்ப்பு அதிகம் உள்ளது. எனவே சாதம் சாப்பிட ஆசைப்பட்டால், கைக்குத்தல் அரிசியால் செய்த சாதத்தை சாப்பிடுங்கள்.

 

ஊட்டச்சத்துக்கள் கைக்குத்தல் அரிசியுடன் ஒப்பிடுகையில் வெள்ளை சாதத்தில் ஊட்டச்சத்துக்களானது மிகவும் குறைவாக உள்ளதால், இதனை அதிகம் எடுத்துக் கொள்வதால் எவ்வித சத்துக்களும் உடலுக்கு கிடைக்கப் போவதில்லை.

 

கார்போஹைட்ரேட் உடல் எடையை குறைக்க வேண்டுமானால், குறைந்தது ஒரு மாதத்திற்கு வெள்ளை சாதத்தை எடுத்துக் கொள்ளாமல் இருப்பது நல்லது. ஏனெனில் வெள்ளை சாதத்தில் அளவுக்கு அதிகமாக கார்போஹைட்ரேட் உள்ளதால், உடலின் எடையானது இன்னும் அதிகரிக்கத் தான் செய்யும்

 

அதிக அளவு ஸ்டார்ச் நிபுணர்களின் கருத்துப்படி, மனித உடலுக்கு அதிகப்படியான ஸ்ரார்ச் இருப்பது நல்லதல்ல. ஏனெனில் இவை இரத்த சர்க்கரையின் அளவை அளவுக்கு அதிகமாக்கிவிடும்.

அலர்ஜி நிறைய மக்களுக்கு வெள்ளை சாதமானது அலர்ஜியை ஏற்படுத்தும். எனவே வெள்ளை சாதத்தை சாப்பிடாமல், கைக்குத்தல் அரிசி சாதத்தை சாப்பிடுங்கள்.

 

தொப்பையை ஏற்படுத்தும் கைக்குத்தல் அரிசியுடன் ஒப்பிடும் போது, வெள்ளை சாதத்தை சாப்பிடாமல் இருந்தால், தொப்பை வருவதைத் தடுக்கலாம். ஏனெனில் இதில் ஸ்டார்ச் மற்றும் கார்போஹைட்ரேட் அதிகம் இருப்பதால், அவை பசி உணர்வை அடிக்கடி ஏற்படுத்தும்.

 

 

நன்றி  தட்ஸ் தமிழ்

Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்
இணைப்பிற்கு நன்றி நிலாமதி....
 
வெள்ளை அரிசியுடன் சம்பந்தப்பட்ட உணவு வகைகளை தவிர்ப்பது உடல் நலத்திற்கு நலம்.
Link to comment
Share on other sites

  • கருத்துக்கள உறவுகள்

வெள்ளைச் சாதம் கொஞ்சமாக சாப்பிட்டால் என்ன?...குத்தரிசி போன்றன செமிபாடு அடைய நேரம் எடுக்கும் ஆனால் பசுமதி சாதம் போன்றன விரைவாக செமிபாடு அடைந்திடும் என்று நினைக்கிறேன்.வெள்ளை மாவில் செய்த எதுவும் சாப்பிடக் கூடாது என்டால் என்னத்தை சாப்பிடுவது?...பாண்,நூடில்ஸ்,புட்டு,பீசா,பாஸ்டா எல்லாம் சோத்தை விட கொழுப்பு கூடின சாப்பாடு அல்லவா?...எப்ப பார்த்தாலும் சிகப்பரிசி சாதம்,பிறவுண் பிரட் சாப்பிட்டால் வாழ்க்கை வெறுக்காது:lol:

Link to comment
Share on other sites

கோதுமை வகைகளை அறவே நிப்பாட்டிவிட்டு அரிசி வகைகளைப் பாவித்தாலே உடம்பு குறையும். :D

Link to comment
Share on other sites

Archived

This topic is now archived and is closed to further replies.



×
×
  • Create New...

Important Information

By using this site, you agree to our Terms of Use.