Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கனடாவில் சிறீலங்கா அரசாங்கத்தின் பண முதலீட்டில் நடைபெற்ற கனடிய தமிழ் இளையோருக்கான "ஆட்டம்" நிகழ்வு!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கனடாவில் சிறீலங்கா அரசாங்கத்தின் பண முதலீட்டில் நடைபெற்ற கனடிய தமிழ் இளையோருக்கான "ஆட்டம்" நிகழ்வு!!

சிறீலங்கா அரசாங்கம் பாரிய பண முதலீட்டின் மூலம் கனடிய மண்ணில் தமிழீழ விடுதலை சாந்த நிகழ்வுகளை குழப்பும் முகமாகவும் மற்றும் தமிழ் இளையோரின்  எழுச்சியை சிதைக்கும் முகமாகவும்  சிறீலங்கா அரசாங்கம் தமிழ் மக்களைக் கருவறுக்கின்ற செயற்பாட்டை தீவிரப்படுத்தியிருக்கின்றது - இதன் ஓர் அங்கமாகவே  சில தமிழர்கள்  சிறீலங்கா  சென்று  பின்னர் கனடிய மண்ணில்  சிறீலங்கா  அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு  ஏற்றவாறு செயல்பட்டு வருகின்றனர்.

canada_addam_20141.jpg

கடந்த 2009 ஆண்டு நடந்த போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்ட  பின்னர் சிறீலங்கா அரசாங்கம் புலம்பெயர் தமிழ் மக்களின் தமிழீழ விடுதலை சாந்த  செயற்பாடுகளில்  பாரிய குழப்பங்களை விளைவிக்க பாரிய பண விரயம் செய்து வருகிறது.

canada_addam_20142.jpg

1. தமிழ் ஊடகங்களை தமது நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவாறு கையாள்வது மற்றும் புதிதாக ஊடகங்களை உருவாக்குவது.
2. தமிழ் இளையோரின் எழுச்சியை குலைப்பது அல்லது இளையோரை மாற்று வழியில் செல்லவைப்பது.
3. விடுதலை சாந்த நிகழ்சிகளை குழப்புவது அல்லது அதேமாதிரியான நிகழ்வுகளை ஒழுங்கு செய்து மக்களை குழப்புவது. 

canada_addam_20143.jpg

இந்நிலையில் கடந்த சனிக்கிழமை பல்கலைகழக மாணவர்களை உள்வாங்கியவாறு பாரிய நிதி முதலீட்டில் " ஆடம் " என்ற நிகழ்வு நடைபெற்று இருந்தது. இன் நிகழ்வை கடந்த காலங்களில் சிறீலங்கா  ஜனாதிபதியை சென்று சந்தித்த திரும்பிய வர்த்தகர்களின் அனுசரணையோடு இந் நிடபெற்றது.

canada_addam_20144.jpg

 
தமிழ் இளையோரை தமது பக்கம் ஈர்க்கும் முகமாக 40  தங்க மோதிரம் தலா  ஒரு பவுன் அடிப்படையில் வழங்கியிருந்ததாக தெருவிக்கபடுகிறது.
 
canada_addam_20146.jpg
கனடாவில் நடைபெற்ற இந்த விழாவை அங்குள்ள தமிழ் அமைப்பு ஒன்று பின் நின்று நடத்தியதாகவும், அந்த அமைப்பில் உள்ளவர்கள்களும் அரசாங்கத்திற்கு  நெருக்கமாகவும் மற்றும் கடந்த மே 18 நிகழ்வை துக்கநாள்  என்ற பெயரில் மக்களை குழப்பும் நிகழ்வை ஒழுங்கு செய்து இருந்தமை இங்கு குறிப்பிடதக்கது.   இன் நிகவுகளுக்கு உந்து சக்தியாக கனடிய மக்களின் பணத்தில் உருவாக்கபட்டு  பின்னர் தனிநபர் சொத்து உடமையாகப்பட்டுள்ள  பல்காலாச்சார வானொலி   இந் நிகழ்வுகளுக்கு  முழு ஆதரவை வழங்கி வருகின்றது என்பதாக  பல  தமிழர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.

canada_addam_20147.jpg

canada_addam_20148.jpg

 

நன்றி - பதிவு

ஓ பதிவு இணையத்தளமா ,?
 

பல  தமிழர் அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.


இந்த அமைப்புகளையும் பட்டியல் போட்டிருக்கலாமே ?

Edited by Gari

  • கருத்துக்கள உறவுகள்

இதில் எவ்வளவு தூரம் செய்தி உண்மை எனத் தெரியாது. ஆனால் டேவிட் பூபாலபிள்ளையைக் கண்டால் பதிவுக்கு ஏன் குலைப்பான் எடுக்கின்றது என்று தான் தெரியவில்லை.. பொதுவாகத் தெரிகின்ற செய்தி என்னவெனில், பதிவு சார்ந்த அமைப்புக்கள் இளந்தளிர் என்று நிகழ்ச்சி நடத்துவது வழக்கம். மற்ற அமைப்புக்கள் விடுங்களா? போட்டிக்கு மற்ற அமைப்பினரும் இப்படி ஒரு நிகழ்ச்சியை நடத்த வந்த தொழில் போட்டி...இப்படிச் சின்னப்பிள்ளைத்தனமாக நடக்க வைக்கின்றது...

  • கருத்துக்கள உறவுகள்

முள்ளிவாய்கால் தொடக்கம் அளுத்கம வரை சர்வதேசம் அறிந்திருக்கும் சிறிலங்காவில் மனித உரிமை எப்படி கடைப்பிடிக்கப்படுகின்றது என்று.....சிறிலங்கா அரசு இனி எவ்வளவு பணத்தை செலவளிச்சாலும் நடந்தது நடந்தவைதான்.....

  • கருத்துக்கள உறவுகள்

முடியல....

 

மக்கள் இப்போதெல்லாம் எந்த இணையத்தில் என்ன செய்தி வருகிறது என்று கிண்டல் அடிப்பதிலேயே மகிழ்கிறார்கள் என்பதை இணையத்தளங்கள் புரிந்து கொள்ளுமா? முன்பைப்போல எல்லாவற்றுக்கும் மந்தைகளாக தலையாட்டும் நிலையில் சிலரைத்தவிர பலரும் இல்லை..... இளையோர்களை யாரும் திசை திருப்பவேண்டிய அவசியம் இல்லை. அடிப்படையில் தமிழர் தாயகம் என்ற கோட்பாட்டிலிருந்து அவர்கள் விலகியதாக எவரும் கருதமுடியாது. ஆக வழிகாட்டி மந்தைகளை புதிய தலைமுறைகள் நம்புவதில்லை என்ற உண்மையை இவர்கள் எப்போதுதான் அறிவார்களோ??? பக்கத்தில் நாலு தஞ்சாவூர் பொம்மைகளை வைத்திருந்தால் எந்த முட்டாளும் அறிவாளிதான்.

அவர்களுடைய பிழைப்பே  புதிய தலைமுறையை வைத்துத்தான் நடந்து கொண்டிருக்கிறது.  இதற்கு உதாரணங்களாகப் பல இளையோர்கள் இருக்கிறார்கள்.   அவர்களுடைய பெயர்களை நான் இங்கு குறிப்பிட விரும்பவில்லை.  ஆனால், முகப்புத்தகத்தில் அவர்கள் மிகவும் பிரபல்யம்.  தமிழ்மொழியைச் சரியாகப் பேசக்கூடத் தெரியாத பல இளையோர்கள் தமிழீழ விடுலையைப் பற்றி மற்றவர்களுக்குப் பாடம் எடுக்கிறார்கள்.   அவர்கள், ஏட்டுச்சுரைக்காயில் விற்பன்னர்கள் என்பதை ஏற்றுக் கொள்கிறேன்.   ஆனால், இவர்களுடைய ஏட்டுச் சுரைக்காய் எம்மை இன்னும் பலவீனமான இனமாகவே உலகுக்கு எடுத்துக் காட்டுகிறது.

 

மீண்டும் போட்டி தொடங்கிவிட்டது.  யார் கோல் அடிக்கிறார்கள் என்று பொறுத்திருந்து பார்ப்போம்.   :lol:  :lol:  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.