Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நாவாந்துறை காமல் பள்ளி வாசல் நேற்று நள்ளிரவு தாக்கப்பட்டுள்ளது.

Featured Replies

question10_CI.jpg

தொடரும் முஸ்லீம்களது வழிபாட்டு இடங்கள் மீதான தாக்குதல்கள் வடக்கிற்கும் நகர்ந்துள்ளது.அவ்வகையில் யாழ்.நகரின் புறநகரப்பகுதியான நாவாந்துறையிலுள்ள காமல் பள்ளி வாசல் நேற்று நள்ளிரவு தாக்கப்பட்டுள்ளது. தாக்குதலால் பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள் உடைந்து துண்டுகள் சிதறிய நிலையில் காணப்பட்டது. சம்பவத்தையடுத்து அவ்விடத்திற்கு வருகை தந்திருந்த பொலிஸார், இராணுவத்தினர் விசாரணைகளை மேற்கொண்டிருந்தனர்.

அண்மைக்காலமாக முஸ்லீம் மக்கள் மீளக்குடியமர்ந்து வரும் பகுதியாகையால் இப்பள்ளி வாசலும் புனரமைப்பட்டிருந்தது. இப்பள்ளிவாசல் அமைந்துள்ள வீதி இராணுவத்தினரின் துவிச்சக்கரவண்டி ரோந்து அணிகள் அடிக்கடி செல்லும் பகுதியென அப்பகுதி மக்கள் குறிப்பிடுகின்றனர். நேற்றைய தினம் யாழ்.பல்கலைக்கழகத்திலுள்ள முஸ்லீம் மாணவர்களது வழிபாட்டு இடம் மீது கழிவு ஓயில் வீசி தாக்குதல் நடத்தப்பட்டிருந்த நிலையினில் தொடர்ச்சியாக காமல் பள்ளி வாசலும் தாக்கப்பட்டுள்ளமை முஸ்லீம்களிடையே அச்சத்தையும் சீற்றத்தையும் தோற்றுவித்துள்ளது.

 

http://globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/108407/language/ta-IN/article.aspx

  • கருத்துக்கள உறவுகள்

கழிவு எண்ணை வீசுவது, கிறீஸ் பூதங்களை அனுப்புவது இராணுவத்தின் வேலை. இப்ப ரோந்து போகும்போது கலலெறிகிறார்கள்.

இந்த அநியாயங்களை எத்தனை நாளுக்குத்தான் பார்த்துக்கொண்டு இருப்பீர்கள்? :huh: புனித குரானையே பிக்கு எரித்த காட்சியை நாங்கள் கண்டோம். நீங்கள் காணவில்லையா? :o அதைக் கண்டால் அரபியாவில் உள்ள உங்கள் சகோதரர்கள் உங்களை என்ன நினைப்பார்கள்?! ஏன் சிங்களத்தின்மீது இன்னும் ஜிகாத் அறிவிக்கவில்லை?? :blink::D

  • கருத்துக்கள உறவுகள்

பொது பல சேனா..... யாழ்ப்பாணத்திலும், தனது கிளையை திறந்து விட்டதா? :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏன் சிங்களத்தின்மீது இன்னும் ஜிகாத் அறிவிக்கவில்லை?? :blink::D

 

அவர்கள் அப்பாவித் தமிழர்கள் மீதுதான் ஜிகாத் விதித்துத் தங்கள் கைவரிசையைக் காட்டுவார்கள். சிங்களத்தின்மீது காட்டமுடியுமா?  காட்டினால் வாங்கிக் கட்டவேண்டியதுதான்.  பிரச்சனையை எப்படியாவது திசை திருப்பி சிங்களப் பேரினவாதிகளிடம் நல்ல பிள்ளைகளாகப் பார்க்கிறார்கள்.  காரைதீவிலெல்லாம் போய்த் தமிழர்களைத் தாக்கியிருக்கிறார்கள். தற்போது யாழ்ப்பாணத்திலும ஆரம்பிக்க வழியமைக்கிறார்கள்.தமிழர்களே அவதானமாயிருங்கள். யாருடனும் கூட்டு வைக்க முயலாதீர்கள்.  நீங்களுண்டு உங்கள் பாடுண்டு என்று சாவகாசமாக இருங்கள்.

 

  • கருத்துக்கள உறவுகள்

தமிழரகளும் முஸ்லிம்களை தாக்குகிறார்கள் என்று வெளிநாட்டு ஊடகங்களுக்கு செய்தியை திசை திருப்ப சிங்கள இராணுவம் பயன்படுத்தப்பட்டுள்ளது. தமிழர்கள் சிங்களவர்களின் வழமையான குள்ள வேலையை அம்பலப்படுத்த வேண்டும்.

ஒண்டுமே அம்பலம் ஏறாது பாஸ். பார்த்துக்கொண்டே இருங்க இனி எந்த இஸ்லாமியனும் எப்படா இவங்க தாக்குதலை நிறுத்துவாங்க என்றுதான் ஏங்கிக் கொண்டிருப்பான். திருப்பித் தாக்கும் தைரியம் இவர்களிடமில்லை.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.