Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூழ்கிக் கொண்டிருக்கும் அகதிப்படகு பற்றி தமிழ்ப்பெண் தகவல்– உறுதிப்படுத்த மறுக்கும் அவுஸ்திரேலியா

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கிறிஸ்மஸ் தீவில் இருந்து சுமார் 300 கிலோ மீற்றர் தொலைவில் புகலிடக் கோரிக்கையாளர்கள் அடங்கிய படகொன்று தத்தளிப்பதாக தகவல் வெளியான போதிலும், மத்திய அரசாங்கம் ஊர்ஜிதம் செய்ய மறுத்திருக்கிறது.
asylum-seekersஇந்தப் படகிலுள்ளதாகக் கூறப்படும் 153 பேரில் இருவரிடம் பேசியதாக Fairfax ஊடக நிறுவனம் அறிவித்துள்ளது.
 
இவர்களில் ஒருவர் தமிழ்ப் பெண்ணாக இனங்காணப்பட்டுள்ளார். தாம் வந்த படகு ஜூன் 13ஆம் திகதி தென்னிந்தியாவில் இருந்து புறப்பட்டதாக அவர் கூறினார்.
 
இது பற்றி குடிவரவு அமைச்சர் ஸ்கொட் மொரிசனின் பேச்சாளர் கருத்து வெளியிடுகையில், கடலில் உயிர்ப் பாதுகாப்பிற்கு தீவிர அச்சுறுத்தலாக அமையக்கூடிய எல்லைப் பாதுகாப்பு நடவடிக்கைகளையே அரசாங்கம் ஊர்ஜிதம் செய்யுமெனத் தெரிவித்தார்.
 
நீர்க்கசிவு ஏற்பட்டுள்ள படகு பற்றி அரசாங்கத்திடம் தகவல் எதுவுமில்லையென அவர் கூறினார்.
 
  • கருத்துக்கள உறவுகள்

கிறிஸ்மஸ் தீவு அருகே படகில் தத்தளிக்கும் 153 தமிழ் அகதிகள் – அவுஸ்ரேலிய அரசாங்கம் நெருக்கடியில்

[ சனிக்கிழமை, 28 யூன் 2014, 01:45 GMT ] [ கார்வண்ணன் ]

இந்தியாவில் இருந்து 153 இலங்கைத் தமிழ் அகதிகளை ஏற்றிக் கொண்டு சென்ற பாரிய படகு ஒன்று, அவுஸ்ரேலியாவின் கிறிஸ்மஸ் தீவுக்கு அருகே சென்றுள்ளதால், அவுஸ்ரேலியாவின் ரொனி அபோட் அரசாங்கம் நெருக்கடியில் சிக்கியுள்ளது.

இந்த அகதிகள் படகு கிறிஸ்மஸ் தீவில் இருந்து 300 கி.மீ தொலைவில் தரித்து நிற்பதாக, அவுஸ்ரேலிய ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

படகில் இருக்கும் இரண்டு தமிழ் அகதிகள் தம்முடன் செய்மதித் தொலைபேசியின் உதவியுடன் பேசியதாக அவுஸ்ரேலியாவின் குடிவரவுச் சட்டவாளர் தெரிவித்துள்ளார்.

படகில் இருந்து பேசிய சூரியா என்ற 18 வயதுடைய பெண், இந்தப் படகில், தம்முடன் 37 சிறுவர்களும், 32 பெண்களும் இரண்டு வாரங்களாக கடலில் பயணத்தை மேற்கொண்டுள்ளதாக கூறியுள்ளார்.

தாம் அகதிகள் என்றும் தமக்கு உதவிகள் தேவைப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த 13ம் நாள் புதுச்சேரியில் இருந்து புறப்பட்ட தமது படகிற்கு பணம் எதையும் செலுத்தவில்லை என்றும், அவர் கூறியுள்ளார்.

படகின் இயந்திரத்தில் பழுது இல்லையென்றும், எண்ணெய் குழாவில் ஏற்பட்டுள்ள கசிவினால், படகு மெதுவாகவே பயணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அவுஸ்ரேலியாவிடம் தாம் நேற்று முன்தினம் உதவி கோரிய போதும், இன்னமும் அது கிடைக்கவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

படகில் இருந்து தொலைபேசியில் தமிழில் பேசிய இன்னொரு ஆண், தம்மிடம் எதுவும் இல்லையென்றும் அதனால் தாம் கிறிஸ்மஸ் திவுக்கு வரவேண்டியுள்ளதாகவும் கூறியுள்ளார்.

தாம் இந்தியாவில் இருந்து பயணத்தை துவங்கியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

படகு சேதமடைந்து, அதில் கசிவு ஏற்பட்டுள்ளதாகவும், சிறுகுழந்தைகளைத் தம்மால் பாதுகாக்க முடியாதுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்தோனேசிய மீன்பிடிப் படகுகள் தமக்கு அரிசி, மீன் என்பவற்றைத் தந்து உதவியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு டிசெம்பர் 19ம் நாளுக்குப் பின்னர், அகதிகள் படகு எதுவும் அவுஸ்ரேலியா வரவில்லை.

ஆறு மாதங்களுக்கு மேலாக அகதிகள் படகுகள் வருவதைத் தடுத்த அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்கு இந்தப் படகு கிறிஸ்மஸ் தீவை அடைந்துள்ளது பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

அவுஸ்ரேலிய அரசாங்கத்துக்கு இந்தப் படகு குறித்து தகவல் அளிக்கப்பட்ட போதும், அதனை மீட்பதில் மெத்தனம் காட்டுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

இதற்கிடையே, கிறிஸ்மஸ் தீவுக்கும், ஜாவாவுக்கும் இடையில் 50 பேர் பயணம் செய்த மற்றொரு அகதிகள் படகையும் அவுஸ்ரேலிய கடற்படை மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

http://www.puthinappalakai.com/view.php?20140628110774

xasylum-seekers-com_1972817h.jpg.pagespe
2001-ல் ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் தேடி கிருஸ்துமஸ் தீவு நோக்கி சென்ற அகதிகளின் படகு கவிழ்ந்த போது அவர்களை ஆஸ்திரேலிய கடற்படையினர் மீட்டனர்.|கோப்புப் படம்:ராய்ட்டர்ஸ்.

ஆஸ்திரேலியாவில் தஞ்சம் தேடிச் சென்ற 152 ஈழத் தமிழர்களை ஏற்றிச் சென்ற படகு, எண்ணெய் கசிவு காரணமாக கிறிஸ்துமஸ் தீவுகளில் இருந்து 250 கி.மீ. தொலைவில் நடுக்கடலில் சிக்கி உள்ளதாக ஆஸ்திரேலிய ஒலிபரப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 13-ம் தேதி, புதுச்சேரிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு படகில் 32 பெண்கள், 37 குழந்தைகள் உள்பட 152 புறப்பட்டுள்ளனர்.

படகில் எண்ணெய் கசிவு ஏற்பட்டதால், ஆஸ்திரேலிய கிறிஸ்துமஸ் தீவிலிருந்து சுமார் 250 கீ.மி தொலைவில் நடுக்கடலில் நின்றது.

இது தொடர்பாக ஏபிசி செய்தி நிறுவனத்திற்கு படகில் பயணித்த டியூக் என்பவர் கூறுகையில், "இந்த படகில் தற்போது சிக்கி உள்ளவர்கள் அனைவருமே இலங்கை தமிழர்கள் ஆவோம். இந்தியாவில் வாழ முடியாததால், புதுச்சேரியிலிருந்து ஆஸ்திரேலியாவுக்கு இந்த படகில் புறப்பட்டோம். ஆனால் தற்போது எண்ணெய் கசிவு ஏற்பட்டு கோளாறு ஆகி நடுக்கடலில் சிகியுள்ளோம்" என்றார்.

மேலும் அவர் கூறுகையில், கடலில் பலத்த காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது, பெரும் அலைகள் படகை தாக்குகின்றன. இங்கு சில மீன்பிடி படகுகள் இருப்பது போன்ற விளக்கு ஒலிகள் எங்களுக்கு தெரிகிறது, ஆனால் இதுவரை எங்களுக்கு எந்த உதவியும் கிடைக்கவில்லை. எங்களை காப்பாற்ற யாரேனும் உதவ வேண்டும்" என்றார்.

கடல் எல்லைப்பகுதியில் சிக்கும் படகுகளை மீட்க சட்ட விதிகளுக்கு உட்பட்டு நடவடிக்கைகள் அனைத்து மேற்கொள்ளப்படும் என்று ஆஸ்திரேலிய பிரதமர் டோனி அபாட் தெரிவித்துள்ளார்.

ஆஸ்திரேலியாவின் கான்பெராவில், தஞ்சம் புகுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், தஞ்சம் தேடி வருவோருக்கான கட்டுபாடுகளை ஆஸ்திரேலிய அரசு கடுமையானதாக மாற்றியுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் 19-க்குப் பின்னர் விசா இல்லாமல் சட்டவிரோதமாக படகுகளில் செல்பவர்கள் யாரும் ஆஸ்திரேவியாவிற்குள் அனுமதிக்கப்படுவதில்லை.

இவர்கள் நவுரு தீவிலோ அல்லது பப்புவா நியூ கினியாவில் உள்ள மனூஸ் தீவுகளிலோ அமைக்கப்பட்டுள்ள முகாம்களிலேயே தங்க வைக்கப்படுகின்றனர்.

கடந்த 6 மாதகங்களாக ஆஸ்திரேலியா கடல் எல்லைக்குள் நுழைய முயன்ற படகுகள் பல இந்தோனேசியாவுக்கு கொண்டு செல்லப்பட்டிருக்கின்றன. ஆனால், இப்போது நடுக்கடலில் மாட்டியிருக்கும் படகு இந்தோனேசியாவில் இருந்து வராததால் அந்தப்படகு எங்கு கொண்டு செல்லப்படும் என்பது இன்னும் உறுதியாகவில்லை.

சமீப காலமாக, ஆஸ்திரேலியாவுக்கு இவ்வாறு பயணிக்கும் அகதிகள் நூற்றுக்கணக்கானோர் கடலில் சிக்கி உயிரிழக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

http://tamil.thehindu.com/world/%E0%AE%A8%E0%AE%9F%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%9F%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%AA%E0%AE%9F%E0%AE%95%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%88%E0%AE%B4%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6157686.ece?homepage=true

 

150 பேரோடு எங்கே என்ரே தெரியாத MH370யை உலகம் முழுக்க தேடுகிறார்கள்....இந்த வள்ளங்களை காப்பாற்ற ஒருவருக்கும் மனம் இல்லை....இவர்களை அவுத்திரேலிய அரசு தங்களால் நடத்தப்படும் ஒரு காம்புக்கு கொண்டு போக போகிறார்கள் போலுள்ளது...இவர்களை இந்தியாவுக்கும் திருப்பி அனுப்ப முடியாது ...

  • கருத்துக்கள உறவுகள்

அவுஸ்த்திரேலியாவில் தற்போது உள்ள அரசு ஒரு வெள்ளையின இனவாத அரசு. ஏனைய இனத்தவருக்கு எதிராக, குறிப்பாக அகதிகளாக வருபவர்களுக்கெதிராக கடும்போக்கைக் கடைப்பிடிக்கும் ஒரு அரசு.

 

கடந்த பொதுநலவாய நாடுகள் கூட்டத்தொடரிலும் கூட, பல நாடுகள் சிறிலங்காவின் மனிதவுரிமை மீறல்களைக் கண்டித்திருந்த வேளையிலும் கூட, சிங்களத்து ஆதரவு வழ்னகியது மட்டுமல்லாமல், சித்திரவதை என்பது ஏற்றுக்கொள்ளப்பட்ட ஒரு விசாரனை நடைமுறைதான் என்று வக்காலத்து வாங்கிய அரசு. அத்துடன் அகதிகள் வருவதைத் தடுக்கவென இலங்கையரசாங்கத்திற்கு இரு ரோந்துப்படகுகளை இலவசமாக வழங்கிய அரசு.

 

ஆகவே, அகதிகளை தடுக்க தன்னாலான அனைத்து முயற்சிகளையும் அது செதுவருகிறது, தொடர்ந்தும் செய்யும்.

 

ஆகவே இந்தப்படகுபற்றி செய்திகள் வந்தபோதும்கூட, அதனை வேண்டுமென்றே ஏற்றுக்கொள்ள மறுத்து வந்தது. ஆனால் ஊடகங்கள் போட்டுடைத்துவிட்டதால் வேறுவழியில்லாமல் ஒத்துக்கொண்டிருக்கிறது. ஆனால், அவர்களை திரும்பவும் இலங்கைக்கே அனுப்பவும் அது நிச்சயம் பின்னிற்கப்போவதில்லை.

Edited by ragunathan

ரகு இவர்களை இனவாத அரசு சொல்ல மாட்டேன் ஆனால் அவர்கள் கப்பல் கப்பல் களாக அகதிகள் வருவதை எந்த நாடும் விரும்பவில்லை...கனடாவும் அப்படியே...கனடா அவுஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு..படித்த பண்பான "நல்ல அடிமைகளே" தேவை...இங்குள்ள கீழ்நிலை வேலைகளை செய்யவும்...தங்கள் சொந்தக்காலில் நின்று வரி கட்டவும்... :)

 

கனடாவுக்கு போர்சுகல்,  UK, அயர்லாந்திலிருந்து மிக இலகுவாக வேலைக்கும் குடியேறவும்  வருகிறார்கள்..... (அதை பற்றி எந்த செய்தி நிறுவனமும், எதிர் கட்சிகளும், யாருமே மூச்சு விடுவதில்லை....மத்தியகிழக்கிலிருந்து வரும் முஸ்லீம்களுக்காக தான் பயப்படுகிறார்கள்..)

கடலில் தவித்த 150 இலங்கையர்கள் கிறிஸ்மஸ் தீவுக்கு? பாலா விக்னேஸ்வரன்- ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸ்

 
140605093116_asylum_boat_australia_304x1

ஆஸி.க்கு வரும் படகுகளை அரசாங்கம் திருப்பி அனுப்பி வருகின்றது ( படம் 2012 ஜூன்)

ஆஸ்திரேலிய கடற்பரப்பில் இரண்டு நாட்களாக தத்தளித்துவந்த படகில் இருந்த இலங்கைத் தமிழர்கள் கிறிஸ்மஸ் தீவை அடைந்துவிட்டதாக ஊர்ஜிதமற்ற தகவல்கள் வந்துள்ள போதிலும், அதிகாரிகளிடமிருந்து உறுதியான தகவல்கள் வெளியாகாத நிலையில், படகில் இருந்தவர்களின் நிலை குறித்து ஆஸ்திரேலிய அகதிகளுக்கான செயற்பாட்டாளர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

அகதிகள் மீட்கப்பட்டதை அரசாங்க அதிகாரிகள் இன்னும் உறுதிப்படுத்தாத நிலையிலும், கடலில் குறிப்பிடத்தக்க அசம்பாவித சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.

கிறிஸ்மஸ் தீவிலிருந்து பலநூறு கிலோமீட்டர்கள் தொலைவில் தத்தளித்துக்கொண்டிருந்த இந்தப் படகில் 150க்கும் மேற்பட்ட இலங்கைத் தமிழர்கள் இருந்ததாக அகதிகளுக்கான தொண்டு நிறுவனம் ஒன்றின் (Refugee Action Coalition ) இணைப்பதிகாரியான இயன் ரிண்டுல் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

'கடந்த 2 நாட்களாக நாங்கள் அந்தப் படகில் இருந்தவர்களுடன் தொடர்பில் இருந்தோம். ஆனால் கடந்த 9 மணிநேரமாக அவர்களுடன் நாங்கள் பேசவில்லை. அவர்களின் நிலைமை தொடர்பில் எங்களுக்கு கவலைகள் இருக்கின்றன' என்று உள்ளூர் நேரப்படி இரவு 9.30 மணியளவில் இயன் ரிண்டுல் கூறினார்.

இந்த ஆண்டின் முதலாவது படகு
140217124812_manus_island_304x171_afp.jp

ஆஸிக்கு வெளியில் உள்ள மனுஸ் தீவு முகாம் ஒன்று

 

ஆஸ்திரேலியாவில் புதிய அரசாங்கம் பொறுப்பேற்ற பின்னர் கிறிஸ்மஸ் தீவை சென்றடைந்திருக்கின்ற முதலாவது படகு இது என்றும் அவர் கூறினார்.

இந்தோனேசியாவைக் கடந்து படகுகள் மூலம் தஞ்சம்கோரி வருபவர்களை இந்தோனேசியாவுக்கே ஆஸ்திரேலிய அரசாங்கம் திருப்பி அனுப்பிவருகின்றது.

ஆனால், இந்தியாவிலிருந்து புறப்பட்டிருக்கின்ற இந்தப் படகில் இருந்தவர்களை மனுஸ் தீவு அல்லது நவ்றூ தீவு முகாம்களுக்கு அதிகாரிகள் அனுப்பக்கூடும் என்று இயன் ரிண்டுல் நம்புகின்றார்.

இந்தப் படகில் 37 சிறார்களும் அதே அளவான பெண்களும் இருந்துள்ளனர்.

படகு மூலம் வருபவர்களை திருப்பி அனுப்பும் ஆஸ்திரேலியாவின் கொள்கையை சர்வதேச மனித உரிமை அமைப்புகள் விமர்சிக்கின்றன.

இலங்கையில் யுத்தம் முடிந்து 5 ஆண்டுகளாகின்ற போதிலும் அங்கு நிலவிவரும் அசாதாரண சூழ்நிலையில் இருந்து தப்பி பாதுகாப்புத் தேடுவோரே பெரும்பாலும் தமது உயிரைத் துச்சமாக மதித்து படகுப் பயணங்களில் ஆஸ்திரேலியா வருவதாக ஆஸ்திரேலிய தமிழ் காங்கிரஸை சேர்ந்த பாலா விக்னேஸ்வரன் பிபிசி தமிழோசையிடம் கூறினார்.

அதேநேரம், பொருளாதார அகதிகளாகவே இலங்கையர்கள் ஆஸ்திரேலியாவுக்கு படகுகளில் செல்வதாக இலங்கை அதிகாரிகள் கூறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

http://www.bbc.co.uk/tamil/sri_lanka/2014/06/140628_ba.shtml

  • கருத்துக்கள உறவுகள்

Main reason will be anti terrorism and boarder protection. They will be processed in The Manus facility and sent back to SL.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.