Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பத்திரிகைத் தர்மம் வேண்டி - வ.ஐ.ச.ஜெயபாலன்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

OPPEN LATTER TO S.BALASUBRAMANIYA ATHITHAN

அரசியல் பிழைத்தார்க்கு அறம் கூற்றாகும்
பாலசுபிரமணியன் ஆதித்தன் அவர்கட்க்கு
தினத்தந்தி நிறுவனம்.
‘மாலை மலர் 27-6-2014 இதழ் பக்கம் 5ல் ஆடுகளம் வில்லன் நடிகர் ஜெயபாலனுக்கு அடி உதை. சிங்கள படத்தை ஆதரித்ததால் தமிழ் அமைப்பினர் ஆவேசம்.’ என என்னை அவமானப்படுத்தும் பொய்ச் செய்தியை வெளியிட்டுள்ளார்கள். மேற்படி நிகழ்வில் எந்த வன்முறைச் சம்பவங்களும் இடம் பெறவில்லை. என்னை யாரும் அடிக்கவோ உதைக்கவோ இல்லை.

இயக்குனர் பிரசன்ன விதானகே வன்னியில் ஈழ போராளிகளின் அபிமானத்தைப் பெற்றிருந்தவர். அரசுக்கும் சிங்கள இராணுவத்துக்கும் எதிரானது என இலங்கையில் தடைசெய்ய பட்டிருந்த அவரது படம் சென்னையில் திரையிடப் பட்டது. போராட்டத்தின் ஆதரவாளரான இயக்குனரை எதிரியென தவறாகக் கருதிய சிலர் கேழ்வி கேட்டனர். அவர்களோடு எனக்கும் விவாதம் ஏற்பட்டது. இவை மட்டுமே அன்றைய நிகழ்வில் இடடம்பெற்றவை. 

யாரும் வன்முறையில் ஈடுபடவோ யாரும் யாரையும் அடிக்கவோ உதைக்கவோ இல்லை. பொலிசார் தலையிடவோ என்னை மீட்க்கவோ இல்லை. சென்ற வருடம் இலங்கை அரசு என்னை நாடுகடத்தியபோது மகிந்த ராசபக்சவின் அரசை எதிர்த்தால் சென்னையில்கூட நீ நடமாடமுடியாது என எச்சரித்திருந்தனர். என்னை அவமானப்படுத்தும் மேற்படி செய்தியின் பின்னணியில் இலங்கைத் தூதரகமே இருக்கிறது என தெரிகிறது. 

கோவலனை பாண்டிய மன்னனின் சேவகர்கள் கொன்றது போல என் கெளரவம் அனைத்தையும் சர்வதேச அரங்கில் உங்கள் மாலைமலர் பத்திரிகை ஆசிரியர் கொன்றொழித்துள்ளார். கண்ணகியின் சிலம்புப் பரல்கள்போல உண்மை என்பக்க முள்ளது. வடபளனி காவல் துறையினரையே நீங்கள் விசாரிக்கலாம்.

அன்று நான் திருவண்ணாமலையில் இருந்தேன். உடனடியாக மாலைமலர் ஆசிரியரைத் தொடர்பு கொண்டேன். அவர் தவற்றை ஏற்றுக்கொண்டு வருத்தம் தெரிவித்தார். மேற்படி அவதூற்று செய்திக்கு கொடுத்த முக்கியத்துவத்துடன் வருத்தமும் மறுப்பு செய்தியும் வெளியிட வேண்டுமென்று அமரர் ஆதிதனார் பெயரில் நீதி கேட்டேன். மறுநாளே மறுப்பு செய்தி வெளியிடுவதாக உறுதி கூறினார். எனினும் வருத்தமோ மறுப்போ வெளியிடப்படவில்லை.

பின்னர் மாலை மலரைத் தொடர்பு கொண்டபோது தொடர்ந்து அவமானப் படுத்தப்பட்டேன். தினத் தந்தியைத் தொடர்பு கொண்டபோது மாலைமலருக்கும் எங்களுக்கும் தொடர்பில்லை என்றார்கள். நிறுவனத் தலைவர் பலசுப்பிரமணியன் ஆதிதனாருக்கு தகவல்தரும்படி கேட்டபோதும் மறுத்துவிட்டார்கள். 

அவதூறு பரப்புவது உங்கள் தொழில் அல்ல என இப்பவும் நம்புகிறேன்.

நான் மானத்தை என் உயிரிலும் மேலாகக் கருதி வாழும் கவிஞன். என் சுயமரியாதையை உங்களவர்கள் கொன்றுள்ளனர். “மெய்யில் பொடியும், விரித்த கருங்குழலும் கையில் தனிச் சிலம்பும் கண்ணீரும்.” ஆக உங்களிடம் நியாயம் கேட்கிறேன்.” 

அவமானத்துடன் உயிர்வாழவேண்டிய அவசியம் எனக்கில்லை. நீங்களும் உங்கள் வம்சக் கொடியும் எல்லா நலன்களோடும் நீடு வாழ வாழ்த்துகிறேன்.

வ.ஐ.ச.ஜெயபாலன் கவிஞன்
 
 

 

  • கருத்துக்கள உறவுகள்

"நீங்களும் உங்கள் வம்சக்கொடியும் எல்லா நலன்களும் பெற்று வாழ்க என வாழ்த்துகிறேன்"

 

மேற்கூறிய வரிகளது தாற்பரியம் எனக்குப் புரிகிறது, கவிஞர் ஒரு படைப்பாளியினது வலியும் வேதனையும் கூரான ஈட்டிக்கு ஒப்பானது. நீங்கள் சொல்வது உண்மையாகவே இருக்கும்,

 

இப்போதெல்லாம் ஊடக ஜனநாயகம் என்பதுபோய் ஊடக வேசித்தனம் என்பதே முதன்மை பெற்றுவிட்டது.

 

இதுக்கெல்லாம் கவலைபடாதையுங்க.

  • கருத்துக்கள உறவுகள்

புலிகள் இருந்த போது போராட்டத்தை ஆதரித்தவர்கள் எல்லாம் இன்றும் அதனை ஆதரிக்கிறார்களா..??!

 

மேற்படி திரைப்படத்தில் சர்ச்சைக்குரிய விடயங்கள் உள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. நீக்கப்படக் கோரப்பட்டுள்ளது. அவை புகுத்தட்டப்பட்டதற்கான காரணங்களும் வினவப்பட்டுள்ளது.

 

முன்னாள் புலிகளே.. இன்னாள் காட்டிக்கொடுப்பாளர்களாக உள்ள நிலையில்...

 

எங்கும் மக்கள் விழிப்புணர்வோடு இருக்கவே வேண்டும். மக்களாக விழிப்புணர்வோடு இருக்காவிட்டால்.. ஏமாற்றுபவர்கள் ஏமாற்றிக் கொண்டே தான் இருப்பார்கள்.

 

வெளியிட்ட செய்தி தொடர்பில் நீதி கேட்கும் இந்த மடலில் கூட.. சிங்கள இயக்குனரை புலி ஆதரவாளர் என்று காட்டும்.. நிலை தான் முதன்மையாக உள்ளதே அன்றி.. தமிழர்களின் போராட்டத்தை பயங்கரவாத உச்சரிப்போடு.. திரையிட முனைந்த இந்த சிங்களவரின் தவறை சுட்டிக்காட்டும்.. நேர்மைத் தன்மை அறவே இல்லாதுள்ளமை.. வருத்தமளிக்கிறது. இதில் தர்மத்தை எப்படி மற்றவர்களிடம்.. எதிர்பார்க்க முடியும்.

 

அந்த வகையில் மக்களின் எண்ணங்களை பிரதிபலித்த தமிழ் உணர்வாளர்களுக்கு நன்றி.

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

பாதுகாப்பாக வாழ்ந்துகொண்டு கள நிலமைகள் தெரியாமல்  உணற்சி மூன்னிலைப்படும் கூச்சல்போடுகிறவர்கள் போராட்டத்தை பலகீனப்படுத்துகிறார்கள். தமிழர் போராட்டத்தை பயங்கரவாத உச்சரிப்போடு கொச்சைப் படுத்துவதாகசொல்லுவது படத்தைப் புரிந்துகொள்ளாத  அபத்தமான கூற்றாகும். தமிழ் பெண் தன் கணவன் இராணுவத்தி இருந்தவன் என்கிற சேதியை அறிந்து இலங்கை இராணூவத்தை பாலியல் வன்முறை கொலைகளுக்காக குற்றம் சாட்டுகிறாள். ஏன் இரானுவத் தொடர்பை மறைத்து என்னை திருமனம் செய்தாய் என திட்டுகிறாள். அந்தச்சமயம் இராணுவத்தான் நான் உன் சகோதரன் பயங்கரவாதியா என எப்போதாவது கேட்டிருக்கிறேனா என பதிலுக்கு கோபப்படுகிறான். ஒரு இராணுவப் பாத்திரம் வேறு எப்படிப் பேசும். சந்தனக்காடு தொடரில் கன்னட காவல் துறையினர் வீரப்பனை தமிழர்களைப் பற்றி இதைவிட மோசமாகவல்லவா பேசுகின்றனர். அதற்க்காக இயக்குனர் தமிழரைக் கொச்சைப் படுத்திவிட்டார் என்று கூச்சலிட முடியுமா?

 

                                                                                                     கலை இலக்கியம் பற்றி அறிவுள்ள எவருக்கும் பிரசன்ன விதானகேயின் படம் தமிழருக்கு எதிரானது அல்ல என்பது புரியும்.  அவர்கள் போரின்போதும் போரின்பின்னும் நிலவும் களநிலை பற்றிக் கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். களநிலமை தொர்டர்பில் நேரடி அனுபவமுள்ள தோழர்கள் ஜதீந்திராவும் கவிஞர் தீபச் செல்வனும் எழுதிய பதிவுகளை யாழில் பிரசுரித்துள்ளேன். தயவு செய்து வாசியுங்கள்.

 

புலத்தில் சிலர் போரின்போதும் போரின்பின்னும் கள நிலவரங்களைப்பற்றி எந்த பிரக்ஞையும் இல்லாது விடுதலையை ஒரு கூச்சல்போல போடுகிறார்கள். அவர்கள் நமக்கு வேண்டிய சக்திகள். அவர்கள் அனுபவமுள்ளவர்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். எமக்கு ஆதரவான சிங்களத் தோழர்கள் மிகுந்த ஆபத்துக்களின் மத்தியில் போரின்போதும் பின்னும் இனக்கொலை ஆவணங்களை திரட்டி உலகிற்க்குத் தந்துள்ளனர். இத்துடன் கற்றுக்கொள்வதற்க்காக யதீந்திரா மற்றும் தீப செல்னவனின் பதிவுகளின் இணைப்பை தருகிறேன்.

http://www.yarl.com/forum3/index.php?showtopic=142010&utm_source=yarl_front&utm_medium=yarl_rss&utm_campaign=yarl_new_topics

 

 

  • கருத்துக்கள உறவுகள்

அதெல்லாம் சரி.. இந்தப் படத்தை சென்னையில் வைத்து போட்டுக்காட்ட வேண்டிய அவசியம்தான் என்ன? :unsure: அங்கே போதுமான அளவில் நல்ல படங்கள் வராததால் இந்த முயற்சியா? :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

இந்தப் படம் பற்றி.. அந்த அரங்கில் அதனை பார்வை இட்டவர்கள் எழுப்பிய கேள்விகளின் அடிப்படையிலும் வரும் விமர்சனங்களின் அடிப்படையிலும் பார்க்கும் போது.. மேற்படி படத்தில் சர்ச்சைக்குரிய விடயங்கள் நாசூக்காக புகுத்தப்பட்டு.. பருமட்டாக... தமிழ் மக்களும் சிங்கள மக்களும் அந்நியோன்னியமாக திருமணம் பந்தம் வரை சென்று வாழ முடிகிறது.. என்ற ஒரு தோற்றப்பாட்டை காட்டும்.. நோக்கத்தோடும்.. பாலியல் வன்புணர்வை ஆயுதமாக பாவித்து தமிழ் மக்களை இனப்படுகொலை செய்த சிங்களப் படைகளை.. சாதாரண அணுகுமுறையின் கீழ் மன்னிக்கக் கேட்பது போலவும்... தான்.. இந்தப் படம்  உள்ளது. அதாவது நடந்தது நடந்து விட்டது.. எனி நெகிழ்ந்து போங்கள் என்பது தான் சொல்லப்படுகிறது.

 

இங்கு வெளிநாடுகளுக்கு  பல தசாப்தங்கள் முதல்.. அகதியாக வந்து செற்றிலானவர்கள் இன்னும் பழைய நட்பு வட்டங்களின் தொடர்புகளோடு இருந்து கொண்டு.. மற்றவர்களுக்கு போதிப்பது சரியாகத் தெரியவில்லை. 

 

போராட்ட உச்சக் காலம் வரை அதுவும் தென்பகுதியில் இருந்தும் கூட எமது போராட்ட விடயங்களை கொண்டு சென்றவர்களுக்கு களப் பிரஞ்ஞை பற்றி குறிப்பாக சிங்கள திரை உலகம் பற்றி.. கூடவே தெரிந்திருக்க வாய்ப்புள்ளது. :icon_idea:

Edited by nedukkalapoovan

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கேழ்விச் செவியன் ஊரைக் கெடுத்தான் என்பது பழமொழி. யாழில் விமர்சனம் எழுத ஒன்றுமே தெரிய வேண்டியதில்லை என்கிற பார்வை காலாவதியாகிவிட்ட தப்பான பார்வையாகும். குறைந்த பட்சம் விமர்சனம் எழுதமுன் படத்தைப் பார்க்கவேணும் என்கிற பொறுப்புணர்வு இல்லாதவர்கள்  சற்றே ஒதுங்கி இருக்கலாமே.                

 

முன்னர் ஊரான் மூட்டும் திருப்பணியில்

பின்னர் நெடுங் கவிஞர் பிரிக்கவே 

பூனைக்கண் மான்கண் புலிக்கண்ணன் ஆண்டபின்

தானே வடுக்காய் விடும். 

Edited by poet

  • கருத்துக்கள உறவுகள்

இனத்தைபற்றி சிந்திக்காமல் இலக்கியம் பற்றி சிந்திப்பவர்களில் ஒருவர்தான் நீங்கள்...உங்கடை இலக்கியம் இனத்தின் விடுதலைக்கு வித்திடுமா......என்ன பேசினாலும் சிங்களவன் சிங்களவன் தான்...இதுதெரியாமல் கொடிபிகடிக்க்க வேண்டாம்....இங்கு இப்போது இனத்துக்கு ஆதரவாகாக எழுதினால் உடன் தூக்கப்படுகிறது....தாக்கி எழுதினால் தூக்கிபிடிக்கப் படுகிறது..கிங்கு இந்த முதன்மை க்ருத்தி எழுதியவர் எம்மையும் தமிழக ஆதரவு உறவுகளையும் எவ்வளவு கேவலப்படுதுகிறார் என்பது தெரியவில்லைபோலும்....அவர் வாழைபழத்தில் ஊசி ஏத்துகிறார்...

  • கருத்துக்கள உறவுகள்

பத்திரிகை தர்மம் பற்றி எழுதவும் ஒரு தகுதி தகுதி வேண்டும்...அதை விட புலம்பெயந்தவரை விமர்சிப்பதற்கும் ஒரு தகுதி வேண்டும்....சிங்களவனுக்கு அடிமையாய் இருந்துதமிழ்நாட்டிலடைக்கலம் கோரிவிட்டு...அங்கு அழுதுவிழுந்து....நடித்து....இனரோசத்தையே மழுங்கடிக்க நினைப்பது ஒரு கோழத்தனம்தான்...இங்கு வந்து யாழில் நடிப்பது மகா துரோகத்தனம்

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

விவ்வாதப் பொருள் தெரியாவிட்டால் பார்வையாலராக இருக்கலாம். விவாதத்தில் கலந்துகொள்ள விரும்பினார் படத்தைப் பாருங்கள் விவாதப் பொருளைக் கற்ற்க்கொள்ளலாம். தமிழ் உணர்வாளர்களோடு எனக்கு எந்த பிரச்சினையுமில்லை. உகள் அறியாமைக்கு கற்றுகொள்வதன் மூலம் மட்டுமே தீர்வு கிடைக்கும். அறியாமைக்கு தனிப்பட்ட தாக்குதல்கள்மூலம் தீர்வு காணமுடியாது.  

  • கருத்துக்கள உறவுகள்
கவிஞரே,
 
அங்கே தமிழகத்தில், தமிழருக்கு நியாயம் கிடைக்கவில்லை என்ற ஆதங்கம் நிறைந்த நிலையில்,  கற்பனையான, தமிழர், சிங்கள காதல் கதை சொல்லப் போய், சொல்பவர், தமிழ் அபிமானி, என்ற ஒரு காரணம் சொல்லி அந்த படம் ஓட வேண்டும் என்றால் எப்படி?
 
அப்படி ஓடினாலும் எத்தனை காட்சி ஓடி இருக்கும் அங்கே? தமிழில் உள்ள ஒரு பழமொழி போல, ஊசி செய்வோர் நிறைந்த தெருவிலே ஊசி விக்கப் போன கதைதானே இது.
 
நாம் விரும்புவதை, அடுத்தவர்களும் விரும்புவார்கள் என்று எதிர் பார்க்க முடியுமா?
 
இங்கே எனக்கு மிகச் சிறந்த சிங்கள நண்பர் இருக்கிறார். அவர் வீடு போவேன் குடும்பத்துடன், அவரும் வருவார் குடுபத்துடன். அதற்காக அவரை எனது (தமிழ்) நண்பர்கள் வரும்போது அழைப்பது கிடையாது. ஏனெனில் எனது பார்வை போல எனது நண்பர்கள் பார்வையும் இருக்காது.
 
அழைத்து, ஒரு நண்பர் கருத்தில் முரண்பட்டால், நீங்கள் அந்த பத்திரிகை ஆசிரியர்களுக்கு செய்வது போல செய்து இரு நட்புகளையும் இழப்பதில் தானே முடியும் .
 
அப்பத்திரிகை தமிழர்களுக்கு தரும் தார்மீக ஆதரவை ஈட்டி கொண்டு தாக்குவது போல இருக்கிறது அல்லவா, உங்கள் வாழ்த்து.
 
  • கருத்துக்கள உறவுகள்

படத்தை வெளியிட்டு விட்டு விமர்சனம் கேட்கினமாம்..???!

 

படம் ஒன்று சர்ச்சைக்கு உள்ளாகும் என்பதனால் தான்... இதனை தமிழகத்தில் முன் திரை இட்டார்கள். தமக்கு சாதகமானவர்களை வைச்சு படத்துக்கு ஒரு போலி அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்துவிடவே நினைத்திருக்கிறார்கள்.

 

ஆனால்.. தமிழ் மக்கள் ஆர்வலர்கள் மேற்கொண்ட திடீர் நடவடிக்கையால்.. படம் பற்றியும் இயக்குநரின் நிலைப்பாடு பற்றியும் மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை என்பதற்கும் அப்பால்.. சர்ச்சைக்குரிய விடயங்கள் படத்தில் உள்ளது என்பதும் நிரூபணமாகி உள்ள இந்த நிலையில்..

 

படம் பார்.. பாடம் படி.. என்று ஒன்னும் தெரியாதா பாப்பா.. கதை சொல்வதும்.. இயக்குநரை புலி ஆதரவாளர் என்ற போர்வைக்குள் வைக்க முனைவதும்... தீபச் செல்வன் போன்ற முள்ளிவாய்க்கால் பின் முளைத்த காளான்களை வைத்து ஆதரவு திரட்டுவதும்.. அவருக்கு ஏதோ.. புலி அங்கீகாரம் உள்ளது போன்ற ஒரு தோற்றப்பாட்டை காட்ட முனைவதும்.. இவர்களின் கயமை தனத்தை அப்பட்டமாக இனங்காட்டுகிறது.

 

தாயகத்தில்.. எமது பெண்கள் கட்டமைக்கப்பட்ட பாலியல் வன்புணர்வு ஆயுதம் மூலம் பகிரங்கமாகவே கோத்தபாயவின் தூண்டலில்.. கொன்றொழிக்கப்பட்டதும்.. இராணுவ ஆக்கிரமிப்பில் எமது பெண்களை வற்புறுத்தி.. அவர்களுக்கு...பாதுகாப்பு பிரச்சனை என்ற ஒரு மாயை தோற்றத்தை உருவாக்கி.. அதன் மூலம்.. காதல் கத்தரிக்காய் என்ற வலைக்குள் தமிழ் பெண்களை விழ வைத்து.. சிங்கள இராணுவத்திற்கு திருமணம் செய்து வைப்பதும்.. அதனை அரசியல் மயப்படுத்துவதும் நடந்தேறி வரும் நிலையில்... இவற்றைப் பற்றி கிஞ்சிதமும் அக்கறை இன்றி கருத்துச் சொல்ல வக்கின்றி இருந்தவர்கள்..

 

இன்று.. ஒரு தமிழ் பெண்ணின் அவல வாழ்வை மையமாக வைத்து.. இனப்படுகொலை சிங்களச் சிப்பாய்க்கு.. மென் தண்டனை வழி.. தீர்வு தேடும் கதை அம்சமும்.. தமிழர்களின் போராட்ட சக்திகளான விடுதலைப்புலிகள்.. பயங்கரவாதிகள் என்று சித்தரிக்க முனையும் படம்.. மற்றும் அதன் வெளியீடு நோக்கி நகர்த்தப்படும் நகர்வுகள் குறித்து மக்களுக்கு பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

 

இவற்றை மக்கள் வெளிப்படுத்துவதையும்.. கேள்வி கேட்டு சம்பந்தப்பட்டவர்களின் கயமையை வெளிக்கொணர முயல்வதையும் முறியடிக்க.. சிலர் இப்போது புதிய புதிய தந்திரோபாயங்களை பாவிப்பதோடு.. கேள்வி கேட்கும் மக்களை மட்டம் தட்டும் செயலிலும் இறங்கி உள்ளனர். இதற்காக எல்லாம் மக்கள் தங்கள் சந்தேகங்களை கேள்விக்கு இடமின்றி கைவிடவோ... அவற்றிற்கு சரியான தெளிவான பதில் கிடைக்காமல்.. மேற்படி இயக்குநரின் படத்தை வரவேற்கவோ ஆதரவளிக்கவோ மாட்டார்கள்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

படத்தை வெளியிட்டு விட்டு விமர்சனம் கேட்கினமாம்..???!

 

படம் ஒன்று சர்ச்சைக்கு உள்ளாகும் என்பதனால் தான்... இதனை தமிழகத்தில் முன் திரை இட்டார்கள். தமக்கு சாதகமானவர்களை வைச்சு படத்துக்கு ஒரு போலி அங்கீகாரத்தை பெற்றுக் கொடுத்துவிடவே நினைத்திருக்கிறார்கள்.

 

ஆனால்.. தமிழ் மக்கள் ஆர்வலர்கள் மேற்கொண்ட திடீர் நடவடிக்கையால்.. படம் பற்றியும் இயக்குநனரின் நிலைப்பாடு பற்றியும் மக்கள் எழுப்பிய கேள்விகளுக்கு சரியான பதில் அளிக்கப்படவில்லை என்பதற்கும் அப்பால்.. சர்ச்சைக்குரிய விடயங்கள் படத்தில் உள்ளது என்பதும் நிரூபணமாகி உள்ள இந்த நிலையில்..

 

படம் பார்.. பாடம் படி.. என்று ஒன்னும் தெரியாதா பாப்பா.. கதை சொல்வதும்.. இயக்குநனரை புலி ஆதரவாளர் என்ற போர்வைக்குள் வைக்க முனைவதும்... தீபச் செல்வன் போன்ற முள்ளிவாய்க்கால் பின் முளைத்த காளான்களை வைத்து ஆதரவு திரட்டுவதும்.. அவருக்கு ஏதோ.. புலி அங்கீகாரம் உள்ளது போன்ற ஒரு தோற்றப்பாட்டை காட்ட முனைவதும்.. இவர்களின் கயமை தனத்தை அப்பட்டமாக இனங்காட்டுகிறது.

 

தாயகத்தில்.. எமது பெண்கள் கட்டமைக்கப்பட்ட பாலியல் வன்புணர்வு ஆயுதம் மூலம் பகிரங்கமாகவே கோத்தபாயவின் தூண்டலில்.. கொன்றொழிக்கப்பட்டதும்.. இராணுவ ஆக்கிரமிப்பில் எமது பெண்களை வற்புறுத்தி.. அவர்களுக்கு...பாதுகாப்பு பிரச்சனை என்ற ஒரு மாயை தோற்றத்தை உருவாக்கி.. அதன் மூலம்.. காதல் கத்தரிக்காய் என்ற வலைக்குள் தமிழ் பெண்களை விழ வைத்து.. சிங்கள இராணுவத்திற்கு திருமணம் செய்து வைப்பதும்.. அதனை அரசியல் மயப்படுத்துவதும் நடந்தேறி வரும் நிலையில்... இவற்றைப் பற்றி கிஞ்சிதமும் அக்கறை இன்றி கருத்துச் சொல்ல வக்கின்றி இருந்தவர்கள்..

 

இன்று.. ஒரு தமிழ் பெண்ணின் அவல வாழ்வை மையமாக வைத்து.. இனப்படுகொலை சிங்களச் சிப்பாய்க்கு.. மென் தண்டனை வழி.. தீர்வு தேடும் கதை அம்சமும்.. தமிழர்களின் போராட்ட சக்திகளாக விடுதலைப்புலிகள்.. பயங்கரவாதிகள் என்று சித்தரிக்க முனையும் படம்.. மற்றும் அதன் வெளியீடு நோக்கி நகர்த்தப்படும் நகர்வுகள் குறித்து மக்களுக்கு பலத்த சந்தேகங்கள் ஏற்பட்டுள்ளன.

 

இவற்றை மக்கள் வெளிப்படுத்துவதையும்.. கேள்வி கேட்டு சம்பந்தப்பட்டவர்களின் கயமையை வெளிக்கொணர முயல்வதையும் முறியடிக்க.. சிலர் இப்போது புதிய புதிய தந்திரோபாயங்களை பாவிப்பதோடு.. கேள்வி கேட்கும் மக்களை மட்டம் தட்டும் செயலிலும் இறங்கி உள்ளனர். இதற்காக எல்லாம் மக்கள் தங்கள் சந்தேகங்களை கேள்விக்கு இடமின்றி கைவிடவோ... அவற்றிற்கு சரியான தெளிவான பதில் கிடைக்காமல்.. மேற்படி இயக்குநரின் படத்தை வரவேற்கவோ ஆதரவளிக்கவோ மாட்டார்கள்..! :icon_idea:

 

  • கருத்துக்கள உறவுகள்

மிகத் திறமான கருத்து...நெடுக்கர்....இதனை நான் முற்று முழுதாக ஆதரிக்கிறேன்.....நடித்து சிங்களவனுக்கு ஆதரவு தேடுவோரை இனம் கண்டால் சரி...இவரெல்லாம் தமிழ்நாட்டைவிட இலங்கையில் பயமின்றி வாழக்கூடிய சூழ்னிலையாழன்....வேசம் போட்டு மற்றவரை

 

சிங்களவன் சிங்களத்தில் படம் எடுக்கலாமே Singala மக்களுக்கு போராட்டத்தை விளங்கப் படுத்தலாம்

சிங்களவன் சிங்களத்தில் படம் எடுக்கலாமே Singala மக்களுக்கு போராட்டத்தை விளங்கப் படுத்தலாம்

இந்தியனுக்கு விளங்கட்டும் என்று கிந்தியில் எடுத்தவர் . :icon_mrgreen:

என்னைப் பொறுத்தவரை  சிங்கள இனம் எங்களை மதிப்பதில்லை.  சொந்த மக்களையே கொன்று  குவித்த  இராணுவத்தில் சிங்களவரே   இனமாக இருக்கின்றனர்.

 

எந்த சிங்கள கலைஞனோ  இதுவரை இராணுவ அடக்கு முறைக்கு எதிராக குரல் கொடுத்ததில்லை.

சரி அவர்களுக்கு என்ன தான் பிரச்சனை என்று  கூட  ஒரு கலைஞன் கூட  கேட்க வந்ததில்லை..

எல்லாம்  அரசியல் வாதிகள் எனபது பொய்.

 

இவர் படம் எடுத்து சென்னையில விடுறாராம்.  எல்லாத்துக்கும் சென்னைத்தமிழன் தான் கிடைத்தான்

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.