Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அவுஸ்திரேலியா நோக்கிப் பயணித்த 153 தமிழர்களும் இலங்கை கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டு இருக்கலாம்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
ஆஸி.சென்றவர்களில் தமிழகத்தில் காணாமல் போன அகதிகள்?!

dcp2576575757-300x168.jpgஅவுஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி படகில் பயணம் செய்த 153 இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை அகதிகளில் சுமார் 100 பேர், காணாமால் போயிருக்கிறார்கள் என்று தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் ஈழ ஏதிலியர் அமைப்பு கூறுகிறது.

தமிழக முகாம்களில் இருந்து 57 பேரும், முகாமுக்கு வெளியே கீழ்ப்புத்துபட்டு என்ற ஒரு கிராமத்தில் வசித்த 40 பேரும் ஜூன் மத்தியிலிருந்து காணாமல் போயிருப்பதாகவும், இவர்களும், இந்தப் படகில் போயிருக்கலாம் என்று சந்தேகங்கள் இருப்பதாகவும், தமது அமைப்பின் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாக, அந்த அமைப்பின் தலைவர் எஸ்.ஜி.சந்திரகாசன் பிபிசி தமிழோசையிடம் பேசுகையில் தெரிவித்தார்.

இது தவிர, இந்தப் படகில் மீதமுள்ளவர்கள் இலங்கையிலிருந்து நேரே வந்தவர்களாக இருக்கலாம் என்றும் சந்திரகாசன் தெரிவித்தார்.

இது ஒரு கணிப்பே தவிர, இது குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்க மேலும் பொறுத்திருக்கவேண்டும் என்றார் அவர்.

ஜூன் மாதம் 18ம் தேதி வாக்கில் இந்த முகாம்களில் இருந்தவர்களுக்கு செய்மதித் தொலைபேசி ( சேட்டலைட் போன்) மூலம் அழைப்பு வந்ததாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்ததை வைத்துப் பார்க்கும்போது, இந்த அழைப்பு கடலில் இருந்து வந்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுவதாக சந்திரகாசன் கூறினார்.

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் பாதுகாப்பாக வாழ்ந்து வரும் நிலையில், இது போன்ற உயிராபத்தைத் தோற்றுவிக்கும் படகுப் பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு தமது அமைப்பு அவர்களுக்கு வலியுறுத்திவருவதாகவும் அவர் கூறினார்.

ஐநா மன்ற அகதிகள் நிறுவன அறிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு அகதித் தஞ்சம் கோரப் படகில் பயணம் செய்த 153 இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து தனக்கு அதிகார பூர்வமாக தகவல் இல்லை என்று ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம் கூறுகிறது.

ஆயினும், தஞ்சம் கோரிகளை ஏற்றி வரும் படகு ஒன்று நடுக்கடலில் இடைமறிக்கப்படும் சந்தர்ப்பங்களில், அடிப்படை அகதிகள் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு ஏற்றவகையில், அவர்கள் தங்களுக்கு சர்வதேச பாதுகாப்பு தேவை என்று கோரினால், அந்தக் கோரிக்கைகள் ,அவர்களை நடுக்கடலில் இடைமறிக்கும் நாட்டின் நிலப்பரப்பில் பரிசீலிக்கப்படவேண்டும் என்பதுதான் ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனத்தின் நிலைப்பாடு என்று அந்த அறிக்கை ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம் கூறுகிறது.

தஞ்சம் கோருபவர்கள் பாதுகாப்பு குறித்த தேவைகளைப் பற்றி அவர்களிடம் முறையாகவும், தனித்தனியாகவும் கேட்கவேண்டும் , அத்துடன் அவர்கள் தங்களது பாதுகாப்புத் தேவைகளைப் பற்றி விளக்கக் கூடிய அளவில் அமைந்த ஒரு வழிமுறையிலும் அவர்கள் விசாரிக்கப்படவேண்டும் என்று அது கூறியது.

இது போன்ற பாதுகாப்புப் பிரச்சினைகள் எழுப்ப்ப்பட்டால், அவைகளை முறையாக பரிசீலித்து , அவர்கள் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படும் ஆபத்தையோ, அல்லது பாரிய மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகும் ஆபத்தையோ எதிர்கொள்கிறார்களா என்பதை நியாயமான வழிகளில் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அது கூறியது.

இந்த மாதிரி நட்த்தப்படும் வழிமுறையைத் தவிர, எந்த ஒரு குறைந்த வழிமுறையும், ஏற்கனவே பலவீனமான தனிநபர்களை பெரும் ஆபத்துக்குள் சிக்கவைக்கும் அபாயம் இருப்பதாக அது கூறியது.

எந்த ஒரு தனி நபரையும், அவர் துன்புறுத்தப்படக்கூடிய ஆபத்து இருக்கும் ஒரு நாட்டுக்கு, அவர் விருப்பத்துக்கு மாறாக திரும்ப அனுப்பக்கூடாது என்பதுதான் சர்வதேச சட்டம் என்படையும் ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

ஆஸ்திரேலிய அரசுக்கும், வேறு நாடுகளின் அரசுகளுக்கும், இது போன்ற நடுக்கடலில் இடமறிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசனை தேவைப்பட்டால், ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம் அதைத் தரத் தயாராக இருப்பதாகவும் அது கூறுகிறது.

அதே சமயத்தில் ஆஸ்திரேலிய அரசு நடுக்கடலில் உயிர்களைக் காப்பாற்ற எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் ஐ.நா அகதிகள் நிறுவனம் பாராட்டியிருக்கிறது.

மேலும், தஞ்சம் கோரிகள், அகதிகள் மற்றும் நாடற்றவர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான படகுப் பயணங்களுக்கு பலனளிக்கக்கூடிய மாற்றுவழிகளை உருவாக்குவது பற்றி மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அகதிகள் நிறுவனம் கூறியிருக்கிறது.ஆஸ்திரேலியாவுக்கு தஞ்சம் கோரி படகில் பயணம் செய்த 153 இலங்கைத் தமிழர்களின் நிலை குறித்து கவலைகள் அதிகரித்து வரும் நிலையில், இதே காலகட்டத்தில் தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை அகதிகளில் சுமார் 100 பேர், காணாமால் போயிருக்கிறார்கள் என்று தமிழ்நாட்டிலிருந்து இயங்கும் ஈழ ஏதிலியர் அமைப்பு கூறுகிறது.

தமிழக முகாம்களில் இருந்து 57 பேரும், முகாமுக்கு வெளியே கீழ்ப்புத்துபட்டு என்ற ஒரு கிராமத்தில் வசித்த 40 பேரும் ஜூன் மத்தியிலிருந்து காணாமல் போயிருப்பதாகவும், இவர்களும், இந்தப் படகில் போயிருக்கலாம் என்று சந்தேகங்கள் இருப்பதாகவும், தமது அமைப்பின் கணக்கெடுப்பில் தெரிய வந்துள்ளதாக, அந்த அமைப்பின் தலைவர் எஸ்.ஜி.சந்திரகாசன் பேசுகையில் தெரிவித்தார்.

இது தவிர, இந்தப் படகில் மீதமுள்ளவர்கள் இலங்கையிலிருந்து நேரே வந்தவர்களாக இருக்கலாம் என்றும் சந்திரகாசன் தெரிவித்தார்.

இது ஒரு கணிப்பே தவிர, இது குறித்த உறுதியான தகவல்கள் கிடைக்க மேலும் பொறுத்திருக்கவேண்டும் என்றார் அவர்.

ஜூன் மாதம் 18ம் தேதி வாக்கில் இந்த முகாம்களில் இருந்தவர்களுக்கு செய்மதித் தொலைபேசி ( சேட்டலைட் போன்) மூலம் அழைப்பு வந்ததாக அவர்களின் குடும்பத்தினர் தெரிவித்ததை வைத்துப் பார்க்கும்போது, இந்த அழைப்பு கடலில் இருந்து வந்திருக்கலாம் என்று எண்ணத்தோன்றுவதாக சந்திரகாசன் கூறினார்.

இந்தியாவில் வாழும் இலங்கைத் தமிழ் அகதிகள் பாதுகாப்பாக வாழ்ந்து வரும் நிலையில், இது போன்ற உயிராபத்தைத் தோற்றுவிக்கும் படகுப் பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு தமது அமைப்பு அவர்களுக்கு வலியுறுத்திவருவதாகவும் அவர் கூறினார்.

ஐநா மன்ற அகதிகள் நிறுவன அறிக்கை

ஆஸ்திரேலியாவுக்கு அகதித் தஞ்சம் கோரப் படகில் பயணம் செய்த 153 இலங்கைத் தமிழர்கள் பிரச்சினை குறித்து தனக்கு அதிகார பூர்வமாக தகவல் இல்லை என்று ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம் கூறுகிறது.

ஆயினும், தஞ்சம் கோரிகளை ஏற்றி வரும் படகு ஒன்று நடுக்கடலில் இடைமறிக்கப்படும் சந்தர்ப்பங்களில், அடிப்படை அகதிகள் பாதுகாப்புக் கொள்கைகளுக்கு ஏற்றவகையில், அவர்கள் தங்களுக்கு சர்வதேச பாதுகாப்பு தேவை என்று கோரினால், அந்தக் கோரிக்கைகள் ,அவர்களை நடுக்கடலில் இடைமறிக்கும் நாட்டின் நிலப்பரப்பில் பரிசீலிக்கப்படவேண்டும் என்பதுதான் ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனத்தின் நிலைப்பாடு என்று அந்த அறிக்கை ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம் கூறுகிறது.

தஞ்சம் கோருபவர்கள் பாதுகாப்பு குறித்த தேவைகளைப் பற்றி அவர்களிடம் முறையாகவும், தனித்தனியாகவும் கேட்கவேண்டும் , அத்துடன் அவர்கள் தங்களது பாதுகாப்புத் தேவைகளைப் பற்றி விளக்கக் கூடிய அளவில் அமைந்த ஒரு வழிமுறையிலும் அவர்கள் விசாரிக்கப்படவேண்டும் என்று அது கூறியது.

இது போன்ற பாதுகாப்புப் பிரச்சினைகள் எழுப்பப்பட்டால், அவைகளை முறையாக பரிசீலித்து , அவர்கள் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்படும் ஆபத்தையோ, அல்லது பாரிய மனித உரிமை மீறல்களுக்கு உள்ளாகும் ஆபத்தையோ எதிர்கொள்கிறார்களா என்பதை நியாயமான வழிகளில் உறுதிப்படுத்திக்கொள்ளவேண்டும் என்றும் அது கூறியது.

இந்த மாதிரி நட்த்தப்படும் வழிமுறையைத் தவிர, எந்த ஒரு குறைந்த வழிமுறையும், ஏற்கனவே பலவீனமான தனிநபர்களை பெரும் ஆபத்துக்குள் சிக்கவைக்கும் அபாயம் இருப்பதாக அது கூறியது.

எந்த ஒரு தனி நபரையும், அவர் துன்புறுத்தப்படக்கூடிய ஆபத்து இருக்கும் ஒரு நாட்டுக்கு, அவர் விருப்பத்துக்கு மாறாக திரும்ப அனுப்பக்கூடாது என்பதுதான் சர்வதேச சட்டம் என்படையும் ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம் சுட்டிக்காட்டுகிறது.

ஆஸ்திரேலிய அரசுக்கும், வேறு நாடுகளின் அரசுகளுக்கும், இது போன்ற நடுக்கடலில் இடமறிக்கப்பட்டவர்களுக்கு சர்வதேச பாதுகாப்பு வழங்குவது குறித்து ஆலோசனை தேவைப்பட்டால், ஐ.நா மன்ற அகதிகள் நிறுவனம் அதைத் தரத் தயாராக இருப்பதாகவும் அது கூறுகிறது.

அதே சமயத்தில் ஆஸ்திரேலிய அரசு நடுக்கடலில் உயிர்களைக் காப்பாற்ற எடுத்த நடவடிக்கைகள் பற்றியும் ஐ.நா அகதிகள் நிறுவனம் பாராட்டியிருக்கிறது.

http://tamilleader.com/?p=36841

மேலும், தஞ்சம் கோரிகள், அகதிகள் மற்றும் நாடற்றவர்கள் மேற்கொள்ளும் ஆபத்தான படகுப் பயணங்களுக்கு பலனளிக்கக்கூடிய மாற்றுவழிகளை உருவாக்குவது பற்றி மேலும் முயற்சிகள் மேற்கொள்ளப்படவேண்டும் என்று அகதிகள் நிறுவனம் கூறியிருக்கிறது.

  • Replies 247
  • Views 12.1k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்
மக்கள் ஒற்றுமையாக வாழும் ஒரு நாடாக இலங்கையாம் – ஆஸி.பிரதமர் கண்டுபிடித்தார்!

Abbot-Aust-PM-440-x-215-300x146.jpgகடலில் படகுகளை திருப்பியனுப்பும் அவுஸ்திரேலியாவின் நடவடிக்கை ஒரு ரகசியம் அல்லவென அவுஸ்திரேலிய பிரதமர் டொனி அபொட் குறிப்பிட்டுள்ளார். 153 புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த படகொன்றை இலங்கை கடற்படையினரிடம் அவுஸ்திரேலியா கையளித்ததாக வெளியாகியுள்ள தகவல் தொடர்பில் அவுஸ்திரேலிய வானொலியொன்றுக்கு வழங்கிய செவ்வியில் டொனி அபொட் இந்த விடயத்தினை கூறியுள்ளார்.

படகுகளை திரும்பியனுப்புவது அவுஸ்திரேலியாவின் கொள்கைகளில் ஒன்று எனவும், அதற்கான உரிமை அவுஸ்திரேலியாவிற்கு இருப்பதாகவும், மக்கள் ஒற்றுமையாக வாழும் ஒரு நாடாக இலங்கை திகழ்கின்றது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

153 இலங்கை புகலிடக் கோரிக்கையாளர்களுடன் பயணித்த படகு தொடர்பில் தேசிய லிபரல் கூட்டணி அரசாங்கம் மௌனம் காப்பது தொடர்பில் 3AW வானொலி செவ்வியில் வினவியபோதே, டொனி அபொட் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

புகலிடக் கோரிக்கையாளர்கள் இலங்கை கடற்படையினரிடம் ஒப்படைக்கப்பட்டிருந்தால் அந்த நடவடிக்கை அகதிகள் தொடர்பான பிரகடனத்தின் விதிமுறைகளை அவுஸ்திரேலியா மீறும் செயலாக அமையுமென மனித உரிமைகள் தொடர்பான சட்டத்தரணி ஜூலியன் பேர்ன்சைட், சிட்னி மோர்னிங் ஹெரால்ட் செய்திச் சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் தமிழ் புகலிடக் கோரிக்கையாளர்களை ஒப்படைப்பது, ஐ.நாவின் அகதிகள் தொடர்பான பிரகடனத்தை கடுமையாக மீறும் செயலாக அமையும் என சர்வதேச சட்டங்கள் தொடர்பான நிபுணர் டொனால்ட் ரொத்வெல் டெலிகிராப் ஊடகத்திற்கு தெரிவித்துள்ளார்.

ஐ.நா அகதிகளுக்கான முகவர் நிலையத்தின் கொள்கைகளுக்கு அமைய, அகதி அந்தஸ்து உறுதிப்படுத்தப்படாமல், தன்னை அகதி எனத் தெரிவிக்கும் ஒருவர் புகலிடக் கோரிக்கையாளராக கருதப்படுகின்றார்.

உரிய நடைமுறைகளுக்கு அமைய, அகதி என அங்கீகரிக்கப்படாத மற்றும் சர்வதேச பாதுகாப்பு அவசியமற்ற ஒருவர் தனது சொந்த நாட்டிற்கு மீள அனுப்பிவைக்கப்படலாம்.

இந்த விடயம் தொடர்பில், அவுஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பப்புவா நியூகினியாவின் ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலய பிராந்திய அலுவலகத்துடன் நியூஸ்பெஸ்ட் தொடர்புகொண்டது.

அவுஸ்திரேலியாவின் பாதுகாப்பை கோரி பயணித்தவர்களுடன் தொடர்புபட்டவர்கள் வழங்கும் தகவல்கள் மற்றும் ஊடகங்களில் வெளியான செய்திகள் தொடர்பில் கவனம் செலுத்தியுள்ளதாக ஐ.நா அகதிகளுக்கான உயர்ஸ்தானிகராலயம் குறிப்பிட்டுள்ளது.

இந்தப் படகு இந்தியாவின் பாண்டிச்சேரியில் இருந்து பயணத்தினை ஆரம்பித்திருந்ததாக உத்தியோகபூர்வமற்ற தகவல்கள் குறிப்பிடுகின்றன.

http://tamilleader.com/?p=36858

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே மீங்க என்னத்த சொல்லுங்க ஆக்கள எல்லாம் வீடியோ லிங்க் மூலம் நடுக்கடலில் கஸ்டம்ஸ் ஷிப் ல வைச்சு விசாரிச்சாச்சு..... சும்மா துல்லிட்டு இருக்காம முடிஞ்சா UN ல போய் முறையிட்டு பாருங்க......சும்மா இன்பதமிழ் ஒலிய கேட்டிடு ஆஸ்திரேலியா ஊடகங்கள் கண்டனம் என்று காமடி பண்ண கூடா முடிஞ்சா telegraph போன்ற பத்திரிகைகளை படித்து பாருங்க... எதிர்கினமா இல்லையா என்று :D

பூனை கண்ணை மூடிக்கொண்டு பாலைக் குடித்தால் உலகம் இருண்டுவிட்டதென்று நினைக்குமாம். அதுபோலத்தான் நீங்களும். இது இன்பத்தமிழ் வானொலியில்லை, அவுஸ்த்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம், ஆங்கிலத்தில், ABC - Australian Boradcasting Corperation என்று அழைப்பார்கள். இவர்களுக்கு வானொலியும், தொலைக்காட்சிச் சேவையும் இருக்கிறது. இப்போது Channel 24 என்கிற 24 மணிநேர செய்திச் சேவையும் தொடங்கியிருக்கிறார்கள். செய்திச் சேவையின் முக்கிய செய்திகளில் இன்றும்கூட அவுஸ்த்திரேலிய கடற்படையால திருப்பியனுப்பப்பட்ட 153 அகதிகள் நிலை பற்றி எதுவும் தெரியவில்லை, அரசாங்கம் மூச்சுக் கூட விடவில்லை என்றுதான் கூறுகிறார்கள். நீங்கள் அதிக நேரம் நாட்டு நடப்புக்கள் பற்றி அறிந்துகொள்வதில் செலவிடுவதால், இந்த சின்ன செய்தி நிறுவனம் பற்றித் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். நேரம் கிடைக்கும்போது ஆறுதலாகப் பாருங்கள்:

http://www.abc.net.au/news/2014-07-04/leach-operational-silence-breeds-more-questions/5570788

இங்க கொஞ்ச பேர் குத்தி முறிரத பாத்தா சர்வதேச ஆள் கடத்தல் காரர் மூலம் சட்டவிரோதமா தங்கள் உறவினர்களையும் கப்பலில் அனுப்பி எங்கே தங்கள் காசு போய் விடுமோ என்ற பயத்தில் இருப்பதாக தெரிகிறது....

திருப்பியனுப்பப்படும் தமிழர்களை நிறுத்தவேண்டும் என்று ஐ. நா அறிவித்திருக்கிறது. இதுகூட நீங்கள் இதுவரை கேட்டறியாத சின்னம் சிறு அவுஸ்த்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் இன்றைய செய்திதான். உங்கள் பிரச்சாரப் பணிகளுக்கிடையே நேரம் கிடைத்தால் இதையும் படித்துப் பாருங்கள்,

http://www.abc.net.au/am/content/2014/s4038226.htm

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே மீங்க என்னத்த சொல்லுங்க ஆக்கள எல்லாம் வீடியோ லிங்க் மூலம் நடுக்கடலில் கஸ்டம்ஸ் ஷிப் ல வைச்சு விசாரிச்சாச்சு..... சும்மா துல்லிட்டு இருக்காம முடிஞ்சா UN ல போய் முறையிட்டு பாருங்க......சும்மா இன்பதமிழ் ஒலிய கேட்டிடு ஆஸ்திரேலியா ஊடகங்கள் கண்டனம் என்று காமடி பண்ண கூடா முடிஞ்சா telegraph போன்ற பத்திரிகைகளை படித்து பாருங்க... எதிர்கினமா இல்லையா என்று :D

உங்களை ஏதோ விஷயம் தெரிந்த ஆள் என்று இதுவரை நினைத்து வந்தேன், இன்றுடன் அந்த நினைப்பை மாற்றிக் கொள்கிறேன். நான் இன்பத்தமிழ் ஒலி கேட்கிறேனா ?,

இதோ நீங்கள் கேட்டதற்காக அவுஸ்த்திரேலிய பிரதான செய்திச் சேவைகளில் வந்த உங்கள் அரசாங்கத்தின் நடுக்கடல் நாடகம் பற்றிய செய்திகளும் விமர்சனங்களும்,

முதலில் சிட்னி மோர்னிங் ஹெரல்ட் : http://www.smh.com.au/federal-politics/political-news/commission-slams-transfer-at-sea-as-clear-rights-breach-20140703-3bbi1.html

தி ஒஸ்ட்ரேலியன் : http://www.theaustralian.com.au/national-affairs/policy/ocean-transfers-of-asylumseekers-expected-today/story-fn9hm1gu-1226975765268?nk=270567ec3fc18ec902c8e1505fcf1cf4#

ஒஸ்ட்ரேலியன் புரோட்காஸ்ட்டிங் கோப்பொரேஷன் : http://www.abc.net.au/news/2014-07-03/families-worried-about-tamils-on-reported-asylum-boat/5568192

ரொயிட்டர் அவுஸ்த்திரேலியச் செய்திகள் : http://uk.reuters.com/article/2014/07/04/uk-sri-lanka-australia-idUKKBN0F904220140704

தி கார்டியன் அவுஸ்த்திரேலியச் செய்திகள் : http://www.theguardian.com/world/2014/jul/03/un-profound-concern-at-australias-handling-of-tamil-asylum-seekers

எது telegraph உங்களைப் பொறுத்தவரை ஒரு செய்திச் சேவையா?? அட கடவுளே, அந்த மஞ்சள்ப் பத்திரிக்கையை நடத்துவது யாரென்றாவது தெரியுமா?? அது தெரிந்தால் ஏன் இங்கே வந்து முறியப் போகிறீர்கள் ?? இந்தப் பத்திரிக்கையை நடத்துவது ருப்பெர்ட் மெர்டோக் என்பதும் அவன் தொடர்ச்சியாக லிபரல் அரசாங்கத்தின் பணக்கார முதலாளிகளின் ஊதுகுழல் என்பதும் நீங்கள் தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பது எண்ணம். கடந்த தேர்தல்களின் போது இவனது பத்திரிக்கை எவ்வளவு கீழ்த்தரமாக லேபர கட்சியையும் அதன் தலமைத்துவத்தையும் விமர்சித்து வெளிப்படையாக பத்திரிக்கா தர்மத்தையும் மீறி லிபரலுக்கு ஓட்டுப் போடுங்கள் என்று கேட்டது உங்களுக்குத் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆக, இந்த மஞ்சள் பத்திரிக்கையப் படித்துக்கொண்டு வந்துதான் இங்கே அரசியல் பேசுகிறீர்கள், பேஷ் பேஷ், ரொம்ப நன்னாயிருக்கு.

நீங்கள் பாடமாக்கிவிட்டு இங்கே வந்து அவுஸ்த்திரேலிய விசுவாசம் கக்கும் உங்களின் telegraph பத்திரிக்கையின் இங்கிலாந்து பதிப்பக உரிமையை உச்ச நீதிமன்றம் ரத்துச் செய்து உங்களின் பத்திரிக்கையும் மூடப்பட்டது தெரியுமா?? அரசியல்வாதிகள், பிரபலங்கள், பொதுமக்களின் தொலைபேசி உரையாடல்களை ஒட்டுக் கேட்டு மாட்டிக்கொண்டவர்தான் நீங்கள் துதிபாடும் ருப்பேர்ட் மேர்டோர்க். ஆகவே அவுஸ்த்ரேலியச் செய்திச் சேவைகள் பற்றி எனக்குப் பாடமெடுப்பதை நிறுத்துங்கள்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே மீங்க என்னத்த சொல்லுங்க ஆக்கள எல்லாம் வீடியோ லிங்க் மூலம் நடுக்கடலில் கஸ்டம்ஸ் ஷிப் ல வைச்சு விசாரிச்சாச்சு..... சும்மா துல்லிட்டு இருக்காம முடிஞ்சா UN ல போய் முறையிட்டு பாருங்க......சும்மா இன்பதமிழ் ஒலிய கேட்டிடு ஆஸ்திரேலியா ஊடகங்கள் கண்டனம் என்று காமடி பண்ண கூடா முடிஞ்சா telegraph போன்ற பத்திரிகைகளை படித்து பாருங்க... எதிர்கினமா இல்லையா என்று :D

நீங்கள் கேட்டதற்காக,

இங்கே தெ ஏஜ் என்றொரு ஆங்கிலப் பத்திரிக்கை வருகிறது. அப்படியொன்று வருவதை நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். ஏனென்றால் அவுஸ்த்திரேலிய ஊடகங்கள் பற்றிய உங்கள் அறிவு அப்படி.

இந்தப் பத்திரிக்கையில் வந்த உங்கள் அரசாங்கத்தின்நாடகம் பற்றிய செய்தி,

http://www.theage.com.au/comment/silence-on-missing-asylum-seeker-boat-a-disgrace-to-the-nation-20140702-zstko.html

இங்கே எஸ். பி. எஸ் என்று இன்னொரு செய்தி நிறுவனம் இருக்கிறது. இதுவும் நீங்கள் அறிந்திருக்க வாய்ப்பில்லை என்று நினைக்கிறேன். இவர்கள் தொலைக்காட்சிச் சேவையும், வானொலியும் வைத்திருக்கிறார்கள். இதிலும் உங்கள் அரசாங்கத்தின் மகிமை பற்றிச் சொல்லப்படுகிறது. முடிந்தால் கேட்டுப் பாருங்கள்,

http://www.sbs.com.au/news/article/2014/07/02/reported-forced-return-tamil-asylum-seekers-shocks-tamil-congress

http://www.sbs.com.au/news/article/2014/07/01/reports-tamils-handed-over-sri-lanka

இன்னும் ஏதாவது அவுஸ்த்திரேலியச் செய்தி நிறுவனத்தின் இந்தக் கப்பல் நாடகம் பற்றிய செய்தி வேண்டுமென்றால் கேளுங்கள்:, இணைத்து விடுகிறேன்.

Edited by ragunathan

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே மீங்க என்னத்த சொல்லுங்க ஆக்கள எல்லாம் வீடியோ லிங்க் மூலம் நடுக்கடலில் கஸ்டம்ஸ் ஷிப் ல வைச்சு விசாரிச்சாச்சு..... சும்மா துல்லிட்டு இருக்காம முடிஞ்சா UN ல போய் முறையிட்டு பாருங்க......சும்மா இன்பதமிழ் ஒலிய கேட்டிடு ஆஸ்திரேலியா ஊடகங்கள் கண்டனம் என்று காமடி பண்ண கூடா முடிஞ்சா telegraph போன்ற பத்திரிகைகளை படித்து பாருங்க... எதிர்கினமா இல்லையா என்று :D

உங்களின் telegraph மஞ்சள்ப் பத்திரிக்கையில் எழுதுவோர் ருப்பேர்ட் மெர்டோக்கின் ஏவல் நாய்கள். ஆகவே வெள்ளையினவாதியான அவனின் மஞ்சள் பத்திரிக்கை கருத்துக்களை இங்கே கொண்டுவந்து அரசியல் செய்ய வேண்டாம்.

உங்களின் மஞ்சள்ப் பத்திரிக்கை கடந்த தேர்தலில் எவ்வள்வு கீழ்த்தரமாக நடந்துகொண்டது என்பதற்கு ஆதாரமாக  அது முன்பக்கத்தில் போட்ட படமும் செய்தியும் இங்கே இருக்கிறது. எப்படியாவது லேபர் கட்சியை விழுத்தி இனவாதிகளின் கட்சியான லிபரலைக் கொண்டு வந்து தனது வியாபார நலன்களை காத்துக்கொண்ட ஒரு பெருச்சாளி நிச்சயம் தான் கொண்டுவந்த அரசாங்கத்திற்கெதிராக எழுதப்போவதில்லை. இந்த அறிவு கூடவா உங்களுக்கில்லை ? முடிந்தால் வாசித்துப் பாருங்கள்,

http://www.abc.net.au/news/2013-08-12/chen-media-influence-in-election-campaigns/4879730

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா ஹா செம காமடி ஆஸ்திரேலியன் பத்திரிகையை நடாத்துவதும் telegraph குழுமம் தான் எனக்கு நீங்க பாடம் படிப்பிக்கிறீங்க ஹையோ முடியல்ல மற்றது SMH பத்திரிகையின் விற்பனையே வெறும் 50000 தான் ஆனா telegraph 1.25 மில்லியன் readers per day சோ இதில யாரு போடுற செய்திகள் மக்களிடம் கூட போய் சேரும்? இது கூட தெரியாமல் நீங்கள் எல்லாம் எனக்கு பாடம் எடுக்க வந்துகிட்டு நானும் நினைச்சன் எதோ நீங்க பெரிய ஆள் என்று பட் ஆஸ்திரேலியா பற்றிய அறிவே சுத்தமா இல்லையே நீங்க எல்லாம் தமிழ்நெட் படிசிசிட்டு அந்த செய்திய காவிட்டு திரிய தான் லாயக்கு....

  • கருத்துக்கள உறவுகள்

இன்று உலக மீடியாவில் பாதிக்கு மேல் மேர்டோக்கின் கைகளில் தான்

  • கருத்துக்கள உறவுகள்

அண்ணே மீங்க என்னத்த சொல்லுங்க ஆக்கள எல்லாம் வீடியோ லிங்க் மூலம் நடுக்கடலில் கஸ்டம்ஸ் ஷிப் ல வைச்சு விசாரிச்சாச்சு..... சும்மா துல்லிட்டு இருக்காம முடிஞ்சா UN ல போய் முறையிட்டு பாருங்க......சும்மா இன்பதமிழ் ஒலிய கேட்டிடு ஆஸ்திரேலியா ஊடகங்கள் கண்டனம் என்று காமடி பண்ண கூடா முடிஞ்சா telegraph போன்ற பத்திரிகைகளை படித்து பாருங்க... எதிர்கினமா இல்லையா என்று :D

உங்களுக்கு அவுஸ்த்திரேலிய அரசியலில் எவ்வள்விற்கு அறிவிருக்கிறதென்று எனக்குத் தெரியவில்லை, என்றாலும் விளங்கப்படுத்த முயல்கிறேன்,

2013 இல் கெவின் ரட் பிரதமராக இருந்தபோது நஷனல் புரோட் பான்ட் ( National Broad Band) என்னும் அதிவேக இன்ரர் நெட்டை அனைத்து அவுஸ்த்திரேலியர்களுக்கும் கொடுப்பதென்கிற ஒரு திட்டத்தைக் கொண்டுவந்திருந்தார். இந்தத் திட்டத்தின்மூலம் இதுவரை அவுஸ்த்திரேலியர்கள் அனுபவித்திராத இலவச Multimedia எனப்படும் சினிமாக்கள், விளையட்டு நிகழ்ச்சிகள், பிறநாட்டு விஞ்ஞான , அறிவியல் நிகழ்ச்சிகள் மற்றும் ஏனைய களியாட்ட நிகழ்வுகளை இலவசமாகப் பார்க்கும் வாய்ப்பு ஏற்படுத்தப்பட இருந்தது.

அதுவரை அவுஸ்த்திரேலியாவில் Foxtel எனப்படும் தனியார் ஒளிபரப்பு நிறுவனமே இந்தவகையான நிகழ்ச்சிகளின் ஏக போக வழங்குனராக இருந்தது மட்டுமல்லாமல் அதிக மாதாந்த சந்தாவையும் அறவிட்டு வந்தது. இந்த Foxtel நிறுவனத்தின் உரிமையாளர் நீங்கள் துதிபாடும் டெலிகிராப் மஞ்சள் பத்திரிக்கையின் உரிமையாளரான அதே ருப்பேர்ட் மேர்டோர்க் தான் என்பது உங்களுக்குத் தெரிந்திருக்காது என்பது எனது கணிப்பு.

ஆகவே தனது Foxtel எனும் ஏகபோக சாம்ராஜ்ஜியத்திற்கு கெவின் ரட்டின் National Broad Band போட்டியாக வந்தால், தனது கொள்ளை லாபம் படுத்துவிடும் என்று அஞ்சிய உங்களின் ருப்பெர்ட் மேர்டோர்க், எப்படியாவது இந்தத் திட்டம் நிறுத்தப்பட வேண்டும் என்று முடிவெடுத்தான். அதற்காக அப்போது எதிர்கட்சியாகவிருந்த லிபரலின் தலமைத்துவத்தை தனது நோக்கத்திற்காகப் பாராளுமன்றத்தில் இந்தத் திட்டத்தை எதிர்க்கும்படி வலியுறுத்தினான். விளைவு, டோனி அபோட் தொடர்ச்சியாக இந்தத் திட்டத்தை விமர்சித்தும், தடுக்கப்பட வேண்டும் என்று கூறி வந்தான்.

இறுதியாக 2013 இல் பொதுத் தேர்தலில், லிபரல் கட்சியைக் கொண்டுவருவதன் மூலம் தனது Foxteல் சாம்ராஜியத்தைத் தொடர்ந்து கொள்ளை இலாபத்துடன் இயங்க வைக்க முடியும் என்று முடிவெடுத்து மிகவும் கீழ்த்தரமாக (ஒரு மஞ்சள் பத்திரிக்கைக்குரிய) லேபர் கட்சிக்கும், National Broad Band இற்கும் எதிராகப் பிரச்சாரத்தை கட்டவிழ்த்து விட்டான். விளைவு லேபர் வீழ்த்தப்பட்டு லிபரல் எனும் பணக்காரர்களின் தலையாட்டு பொம்மை ஆட்சிக்கு வந்தது. அதுதான் நீங்கள் இப்போது துதிபாடும் அரசு.

ஆக டெலிகிராப் ஒரு தரமான பத்திரிக்கை என்றும், அதில் சொல்லப்படுவது வேதவாக்கு என்று நம்பும் உங்கள் அரசியல் அறிவே அறிவு என்கிற முடிவிற்கு நான் வரவேண்டியிருக்கிறது!!!!!

http://www.abc.net.au/news/2013-08-12/chen-media-influence-in-election-campaigns/4879730

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே எந்த பத்திரிக்கை என்ன எழுதினாலும் எங்களுடைய மதிப்புக்குரிய பிரதமரும் ஆஸ்திரேலியா மக்களாக் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்க பட்ட அரசும் இந்த அகதிகளின் வருகையை நிறுத்த உறுதியோடு இருக்கின்றது அதுவும் குறிப்பா அப்பாவி மக்களின் உயிரை பணையம் வைத்து கள்ள ஆள் கடத்தல் தொழிலை மேற்கொள்ளுபவர்களின் நடவடிக்கைகளை முறியடிக்க எமது காவல் துறை இரவு பகலாக முயன்று கொண்டு இருக்கின்றது நிஜ அகதிகளாக இருப்பின் கள்ள வழியில் வராமல் நல்ல வழியில் வரட்டும்

  • கருத்துக்கள உறவுகள்

153 பேரையும்.. சிறீலங்காவிடம் கையளிப்பது பெரிய விசயம் அல்ல. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

அகதிகளை அவுஸி ஏற்றுக் கொள்ள விருப்பம் இல்லை என்றால்.. ஐநாவிடம் கையளிக்கலாம். இவர்களில் உண்மையான அகதிகளுக்கு ஐநாவே நாடுகளோடு தொடர்பு கொண்டு அகதி அந்தஸ்த்தை பெற்றுக் கொடுக்கும்.

அதை விடுத்து.. தமிழின இனப்படுகொலை சிறீலங்கா அரசோடு அவுஸி அரசு சேர்ந்து மனித உரிமைகள் விடயங்களை அப்பட்டமாக மீறி நடப்பது நல்லதல்ல...!

153 இல் உண்மையான அகதிகள் இருந்து.. அவர்கள் சிறீலங்கா அரசால்.. ரகசிய முறையில் கொல்லப்பட்டால்.. அல்லது துன்புறுத்தப்பட்டால்.. அதற்கு யார் பொறுப்பு.

முள்ளிவாய்க்காலில்.. ஆயுதங்களை விட்டிட்டு.. வெள்ளைக்கொடியோடு போய் சரணடையச் சொன்னவர்கள் தான்... அதன் பின்னர் நடந்த அத்தனை அழிவுகளுக்கும் காரணம். அது எனியும் மீளக் கூடாது. அவுஸி அகங்காரத்தோடு செயற்படுவது அதன் பிராந்திய நலனுக்கு உகந்ததல்ல...!

  • கருத்துக்கள உறவுகள்

இன்று உலக மீடியாவில் பாதிக்கு மேல் மேர்டோக்கின் கைகளில் தான்

லண்டனில் மூட்டை கட்டிவிட்டார்கள். இனி இது மற்றைய நாடுகளிலும் தொடரும்.

மொக்கைத்தனமாகவும் , கேனைத்தனமாகவும் எழுதுவதை விட்டு வ்ட்டு வேறு வேலை இருந்தால்ப் போய்ப் பாருங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

foxtel தொலைக்காட்சியில் இருந்து தமிழகத்தின் விஜய் டிவி வரை மேர்டோக்கின் சாம்ராச்சியம் விரிந்து பறந்து இருக்கு இதை நீங்க சொல்லி நான் அறியும் அளவுக்கு நான் இல்லை ஐயா

ஹா ஹா லண்டன் இல் மூட்டை கட்டினாலும் வேறு வழியில் அவர்களுக்கு வர தெரியாது என்ற அறிவு கூட இல்லை இதுகள் வந்து எனக்கு உபதேசம் செய்துகள் மிடில

இன்டர்நெட் ல மட்டும் வாசிச்சு பொது அறிவ வளர்த்தா காணாது அண்ணே அதையும் தாண்டி நிறைய இருக்கு.... :D

United Kingdom

News UK

The Sun

The Times

Sunday Times

இந்தளவு பத்திரிகைகளும் இன்னும் அவரின் கைவசம் தான் இருக்கு UK ல இதுகூட தெரியாமல் எனக்கு பாடம் எடுக்க வந்திட்டார்....

Hahaha :D :d

http://en.m.wikipedia.org/wiki/List_of_assets_owned_by_News_Corp

http://en.m.wikipedia.org/wiki/List_of_assets_owned_by_News_Corp

இது கூட தெரியாத சின்னன் சிறுசுகள் எல்லாம் எதுக்கு எனக்கு பாடம் எடுக்க வரினம் என்று புரியல்ல போங்கப்பா போயி வேற வேல இருந்தா பாருங்க ...

உங்க பொது அறிவு. உலக அறிவு தெரிஞ்சிடிச்சு ....

:D

  • கருத்துக்கள உறவுகள்

இங்கே எந்த பத்திரிக்கை என்ன எழுதினாலும் எங்களுடைய மதிப்புக்குரிய பிரதமரும் ஆஸ்திரேலியா மக்களாக் ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்க பட்ட அரசும் இந்த அகதிகளின் வருகையை நிறுத்த உறுதியோடு இருக்கின்றது அதுவும் குறிப்பா அப்பாவி மக்களின் உயிரை பணையம் வைத்து கள்ள ஆள் கடத்தல் தொழிலை மேற்கொள்ளுபவர்களின் நடவடிக்கைகளை முறியடிக்க எமது காவல் துறை இரவு பகலாக முயன்று கொண்டு இருக்கின்றது நிஜ அகதிகளாக இருப்பின் கள்ள வழியில் வராமல் நல்ல வழியில் வரட்டும்

நிஜமான அகதிகள் நல் வழியில் எப்படி வாறது.. சுண்டல்.

1990 களின் பிற்பகுதியில்.. அவுஸில் ஒரு பல்கலைக்கழகத்தில் மருத்துவம் படிக்க அனுமதி கிடைத்தது.  கொழும்பில் உள்ள அவுஸி தூதரகத்தில்.. விண்ணப்பம் மற்றும் ஆங்கில புலமைச் சான்றிதழ் எல்லாம் கையளித்திருந்தேன். அந்த விண்ணப்பத்தில்.. நாங்கள் இப்போது இடம்பெயர்ந்து சொந்த ஊரை விட்டு கொழும்பில் தற்காலிகமாக வாழ்கிறோம் என்பதையும் குறிப்பிட்டிருந்தேன்..!

அவ்வளவு தான்.. 7000 ரூபா (அன்றைய பெறுமதியில்) கட்டி விண்ணப்பித்த விண்ணப்பம்.. நிராகரிக்கப்பட்டு வந்தது. அதில் நிராகரிப்புக்கு காரணம் சொல்லப்படவில்லை. பீட் பக் தருவீங்களா உங்கள் நிராகரிப்புக்கு என்று கேட்டேன். உள்ளே கூட்டிச் சென்று உங்கள் விண்ணப்பத்தில்.. நீங்கள் இடம்பெயர்ந்து வாழ்வதாக குறிப்பிட்டிருக்கிறீர்கள்.. அந்த வகையில்... நீங்கள் அவுஸி வந்து அகதி அந்தஸ்து பெற வாய்ப்புள்ளது அதனால் நிராகரிக்கிறம் என்று சொன்னார்கள்.

நான் சொன்னேன்.. நான் அகதி அந்தஸ்துக்காக இந்த விண்ணப்பம் செய்யவில்லை. ஏலவே பல்கலைக்கழகத்திற்கு பகுதியாக பணமும் செலுத்தி சுகாதார காப்புறுதிப் பணமும் கட்டி.. அனுமதி எடுத்து.. படிப்பதற்காவே அங்கு செல்ல விரும்புகிறேன். இன்றைய சூழலில் சிறீலங்காவில் அந்தப் படிப்பை படிக்க வாய்ப்பில்லை.. மேலும்.. நாங்கள் நிஜமாகவே வீடிழந்து.. சொத்திழந்து.. (சூரியக்கதிர் இராணுவ நடவடிக்கையின் போது.. யாழ் நகரில் இருந்த எங்கள் வீடும் டாங்கிகள் கொண்டு தரைமட்டம் ஆக்கப்பட்டிருந்தது.) இடம்பெயர்ந்து தான் வாழ்கிறோம். அந்த வகையில்.. உண்மையை சொல்லி இருக்கிறேன் என்று சொன்னேன்.

அதற்கு அந்த வெள்ளை அதிகாரி சொன்னார்.. அந்த உண்மை தான்.. பிரச்சனையே. நிராகரிப்புக்குக் காரணம் என்று.

இப்படி இருக்கிற அவுஸி தூதரகத்தினூடு.. நேர்மையாக.. எப்படி சுண்டல்.. ஓர் உண்மையான அகதி அனுமதி பெற்றுப் போவது..??!

பின்னர் இவர்களின் இந்த முடிவை பல்கலைக்கழகத்திற்கு அறிவித்தேன். அவர்கள் தாங்கள் இந்த முடிவுக்கு எதிராக அப்பீல் பண்ண அனுமதி கேட்டார்கள். நான் மறுத்துவிட்டு.. கட்டின காசை தா என்று வாங்கிக் கொண்டேன்.

இதை ஏன் சொல்லுறமுன்னா.. படகில போவதை தவிர வேறு என்ன நல்ல வழியில்.. மக்கள் அகதி அந்தஸ்தை தேடி அங்க போக முடியும். உண்மையான அகதியாக இருந்தால் கூட..! :icon_idea::)

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

வருடம் ஒன்றுக்கு இலக்கிய நாடுகள் சபையினால் அங்கீரிக்கப்பட்ட பல 1000 கணக்கான அகதிகளை எமது அரசு உள் வாங்குதே அப்பிடி வர வேண்டியது தானே அதென்ன வரிசையில் எண்ணற்றோர் காத்திருக்க வசதிகள் இன்றி இவர்கள் மட்டும்பாஞ்சு வாறது?

அவுஸி.. வர.. ஐக்கிய நாடுகள் சபைக்குயில் எப்படி அகதி என்று பதிவது..??! அதற்கான சான்றுகளை எப்படி சமர்ப்பிக்கிறது..??! சான்றுகளை சமர்ப்பிக்க முடியாத ஆபத்தான சூழலில் வாழ்பவர்கள் எப்படி அதை சாதிப்பது..??! நாட்டை விட்டு உரிய முறையில்.. வெளியேற முடியாத சூழலில் உள்ள அகதிகள் எப்படி வெளியேறுவது.. ஐநா வந்து கூட்டிச் செல்லுமா..???!

அகதி அந்தஸ்தை பெற உள்நாட்டில் இருந்து விண்ணப்பிக்க முடியுமா.. வெளியேறித்தான் விண்ணப்பிக்க முடியும் என்ற நிலையில்.. உண்மையான அகதிகள் எப்படி அவுஸியை அடைவது..???!

ஒரு உண்மையான மாணவனுக்கே இடம்பெயர்ந்தவன் என்ற வகையில்.. விசா நிராகரிக்கும் போது..?????????

சொல்வது இலகு.. செய்வது கடினம். செய்வதை இவர்கள் இலகு படுத்தினால்.. மக்கள் ஏன் சட்டவிரோதத்தை விரும்பப் போகிறார்கள்..!!!!

  • கருத்துக்கள உறவுகள்

foxtel தொலைக்காட்சியில் இருந்து தமிழகத்தின் விஜய் டிவி வரை மேர்டோக்கின் சாம்ராச்சியம் விரிந்து பறந்து இருக்கு இதை நீங்க சொல்லி நான் அறியும் அளவுக்கு நான் இல்லை ஐயா

ஹா ஹா லண்டன் இல் மூட்டை கட்டினாலும் வேறு வழியில் அவர்களுக்கு வர தெரியாது என்ற அறிவு கூட இல்லை இதுகள் வந்து எனக்கு உபதேசம் செய்துகள் மிடில

இன்டர்நெட் ல மட்டும் வாசிச்சு பொது அறிவ வளர்த்தா காணாது அண்ணே அதையும் தாண்டி நிறைய இருக்கு.... :D

United Kingdom

News UK

The Sun

The Times

Sunday Times

இந்தளவு பத்திரிகைகளும் இன்னும் அவரின் கைவசம் தான் இருக்கு UK ல இதுகூட தெரியாமல் எனக்கு பாடம் எடுக்க வந்திட்டார்....

Hahaha :D :D

http://en.m.wikipedia.org/wiki/List_of_assets_owned_by_News_Corp

http://en.m.wikipedia.org/wiki/List_of_assets_owned_by_News_Corp

இது கூட தெரியாத சின்னன் சிறுசுகள் எல்லாம் எதுக்கு எனக்கு பாடம் எடுக்க வரினம் என்று புரியல்ல போங்கப்பா போயி வேற வேல இருந்தா பாருங்க ...

உங்க பொது அறிவு. உலக அறிவு தெரிஞ்சிடிச்சு ....

:D

சுத்த மடைத்தனமான கருத்து.

அவுஸ்த்திரேலியாவின் உங்களது ருப்பேர்ட் மேர்டோக் என்ன செய்துவருகிறான் என்று நான் சொல்ல, நீங்களோ அவனுக்கு உலகம் முழுவதும் பத்திரிக்கை இருக்கிறது என்க்றீர்கள். நான் எப்போது அப்படியில்லை என்று சொன்னேன்.

அதிகளவு பத்திரிக்கை வைத்திருந்தால் மட்டும் எழுதுவதெல்லாம் உண்மையென்று எப்படி முடிவெடுத்தீர்கள்.

கருத்தாடலின் தொடக்கமே அகதிகளை நடுக்கடலில் வைத்து இலங்கைக் கடற்படையிடம் ஒப்படைத்தது பற்றியது. நா அது தவறென்று சொன்னபோது, இன்பத்தமிழ் கேட்டுவிட்டு எழுதுகிறேன் , டெலிகிராப் படியுங்கள் என்றீர்கள். இல்லை, வேறு ஆங்கிலச் செய்திகளும் உள்ளன, டெலிகிராப் பக்கத்தனமானது, ஆகவே அதில் உள்ள செடய்திகளோ அல்லது கருத்துக்களோ நிச்சயம் லிபரல் கட்சி சார்பானது என்று நான் எழுத, உலகமெல்லாம் அவனுக்கு பத்திரிக்கை இருக்கிறதென்று எழுதுகிறீர்கள்.

தமிழ்நெட் இப்போது உங்களுக்கு பொய்ச் செய்தியாகிவிட்டது, அவுஸ்த்திரேலிய தமிழ்க் காங்கிரஸின் அகதிகள் தொடர்பான நிலைப்பாடு உங்களைப் பொறுத்தவரை தவறென்றாகிவிட்டது, ஐ. நா வின் அவசர வேண்டுகோள் பிழையென்று உங்களுக்குப் புரிகிறது, இலங்கையரசும் அவுஸ்த்திரேலிய அரசும் செய்வது சரியென்றாகிவிட்டது,  ருப்பேர்ட் மேர்டோக்கின் பத்திரிக்கை கூறும் அகதிகளை நாடு கடத்துவது சரியென்கிற வாதம் உங்களுக்கு வேத வாக்காகி விட்டது, இன்னும் என்னென்னவோ ??

தேசியம் தேசியம் என்று பேசியதெல்லாம் காற்றோடு போய்விட்டது ??

முழங்காலுக்கும், மொட்டந்தலைக்கும் முடிச்சுப் போடும் உங்களுடன் விவாதித்துப் பயனில்லை.

ஏதோ செய்து தொலையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

ஹா ஹா UK ல கடைய மூடியாச்சு என்று சொன்னது நீங்கள் தானைய்யா....இப்பிடி மாத்தப்படாது

தமிழ் தேசியத்துக்கும் கள்ள அகதிகளுக்கும் சம்மந்தமே இல்லை....

தமிழ் தேசியத்துக்கும் கள்ள அகதிகளுக்கும் சம்மந்தமே இல்லை....

  • கருத்துக்கள உறவுகள்

இந்த கள்ள அகதிகளை எமது அரசு சரி உங்களுக்கு உயிர் பாதுகாப்பு தானே வேணும் வாருங்கள் வேறு நாட்டில் குடியேற்றுகின்றோம் என்றால் திரும்ப இலங்கைக்கு ஓட்டம் எடுகின்றார்கள் எமது அரசு கொடுக்கும் 10000 டாலர்களை வாங்கி கொண்டு இதான் மிகப்பெரிய ட்விஸ்ட் :D

  • கருத்துக்கள உறவுகள்

எங்களுடைய கருத்து சட்டவிரோதக் குடியேற்றக்காரர்கள் பொருளாதார அகதிகள் குறித்தல்ல. நிஜமான அகதிகள் குறித்து. அந்த 153 பேரும்.. நிஜ அகதிகள் அல்ல.. என்ற ஒரு எடுகோளில் கருத்துச் சொல்ல முடியாது. நிஜ அகதிகளும் இருக்கலாம்.

மேலும்.. நிஜ அகதிகளுக்கு அவுஸி வர என்ன மார்க்கம்.. என்பது தெளிவுபடுத்தப்படனும்.

நான் அறிந்த வகையில்.. யூ கே இல் வாழும் பல இலட்சம் தமிழர்களில் அநேகர் அகதிகளாக வந்தோர். அதில்... வெகு சிலரே யூ கே கொழும்பு தூதரகத்தில் அகதி தஞ்சம் பெற்று யூ கே வந்துள்ளனர்.  இதுவரை ஒருவரை மட்டுமே அப்படி வந்ததில் சந்திக்க முடிந்திருக்குது. மற்றவர்கள் எல்லாம்.. களவாக வந்தவர்கள். குடும்ப இணைவு என்று வந்தவர்கள் தான் அதிகம்..!

அவுஸிக்கு மட்டுமல்ல.. ஐநா அகதி பிராமணங்களின் அடிப்படையில் கூட ஒருவரை அகதி என்று குறிப்பிட அவர் சொந்த நாட்டுக்குள் இருந்து கொண்டு அப்படிக் கோர முடியாது எனும் நிலையில்.. ஆபத்தான சூழலில் வாழும் தாயக அகதிகள் எப்படி.. அவுஸியை அடைவது. அதற்கான மார்க்கத்தைச் சொல்லிட்டு தான்.. நாம் மக்களை படகில் போகாத என்று வலியுறுத்த முடியும்.

தமிழர்களை சிறீலங்காவிடம் கையளிப்பதை நாங்க எப்போதும் வரவேற்கவில்லை. அங்கு என்ன நிகழும் என்பது தெரிந்ததே..! கனடா சென்று பின் கனடிய அதிகாரிகளால்.. இவ்வாறு கையளிக்கப்பட்ட ஒரு பெண்மணி சிறையில் வைத்தே கொல்லப்பட்ட சம்பவங்களையும் அறிந்தவர்கள் என்ற வகையில்............ சிலவற்றை ஆழ்ந்து சிந்திக்கனும்..! :icon_idea:

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

அதற்காக தானே நடுகடலில் வைத்து விசாரிகின்றார்கள் அவர்களுக்கு திருப்த்தியா இருந்தால் ஏற்றுக்கொள்ளுவார்கள் ஆனால் ஆஸ்திரேலியா கேட்க்கும் கேள்வி உங்களுக்கு உயிர் பாதுகாப்பு தான் வேண்டும் என்றால் நீங்கள் புறப்பட்ட இடத்திலையே நின்று இருக்கலாமே ... அதாவது இந்தியாவிலே....

  • கருத்துக்கள உறவுகள்

இந்தியாவில் இருந்து யுகே வந்த அகதிகளுக்கு யுகே தஞ்சம் வழங்குகிறது. அதற்கு அவர்கள் சொன்ன காரணம்.. குறிப்பாக இந்திய பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகள் தரும் தொல்லைகள் மற்றும் அகதிகளுக்கு காட்டப்படும் பாகுபாடுகள்.

இதை ஏன் அவுஸி கருத்தில் எடுக்குதில்ல. யூகேயும்.. அவுஸியும் ஒரே ஐநா பிரமாணத்துக்கு அமையத் தானே அகதி அந்தஸ்து வழங்கி வருகினம்..???!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

மற்றது அகதிகள் என்றால் என்ன ஏதுமற்றவர்கள் இவர்கள் agency க்கு காசு குடுகின்றார்கள் பத்தாயிரம் டாலர்கள் வரை அதை விட சட்டலைட் போன் அது இது என்று சோ இவர்கள் பொருளாதார அகதிகளே.....

இப்பிடியான பொய்கள சொன்னதால தான் நடுக்கடல்ல வைச்சே அனுப்பிறான் :D

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையான அகதிகளும் எல்லைகளை தாண்ட பணம் கொடுத்து வர  வேண்டி உள்ளது என்பதை ஐநா உட்பட எல்லோரும் அறிவார்கள். அந்த வகையில்.. அகதிகளாக வருபவர்களிடம்.. உனக்கு எப்படி பணம் கிடைச்சுது எப்படி வந்தே என்று அதிகம் விசாரிப்பது குறைவு..! ஏஜென்சி கொண்டு வந்துவிட்டிட்டு ஓடிட்டான்.. என்று தான் சொல்லி முடிக்கிறார்கள். அவை ஏற்றுக் கொள்ளவும் படுகிறது.

சிறீலங்காவில் இருந்து நேரடியாக அவுஸிக்கு அகதியாக (உண்மை அகதிகள்) வர அவுஸி அதிகாரிகள் என்ன நடவடிக்கைகளை எடுத்திருக்கினம்.. ஐநா ஊடாக என்றாலும்.. ???! இதற்கு பதில் சொல்லிட்டு.. படகில வராத எண்டுவம். சிறீலங்காவில் நிலைமை முன்னேறிட்டுது என்று காட்ட அவுஸி ஐநா மனித உரிமை சபையில்.. இனப்படுகொலையையே மறைக்க நினைக்கும் போது.. உண்மையான அகதிகளை அது வரவேற்கும் என்பதை எப்படி நம்புறது..??!

ஒரு இனப்படுகொலை அரசுக்கு.. ஐநா விசாரணையில் உள்ள அரசுக்கு.. அவுஸி எப்படி போர்ப்படகுகளை கையளிக்க முடியும்.. ஒத்துழைப்புக்களை வழங்க முடியும்..??????!

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் தற்பொழுது உள்ள நிலவரப்படி தமிழர்கள் அகதிகளாக வரவேண்டிய அவசியம் இப்பொழுது இல்லை இதுவே எமது அரசின் கருத்து அப்பிடி உயிர் பாதுகாப்பு வேண்டும் என்றால் இவளவு ஆபத்தான கடல் பயணங்களை தாண்டி ஆஸ்திரேலியா வரவேண்டியதும் இல்லை.....அருகில இந்தியாக்கு போகலாம்.....

சும்மா தமிழ் இணையதளங்களில் வரும் செய்திகளை மட்டும் வைத்து நாங்கள் இலங்கை நிலவரங்களை பேசி விட முடியாது.....

மற்றது ஈழத்தமிழர்களை தொடர்ந்தும் அகதிகளாக பார்க்க சர்வதேசம் விரும்பவில்லை காரணம் அங்கே தமிழர்கள் இருந்தால் தான் சர்வதேசத்தால் ஒரு தீர்வை பெற்றுக்கொடுக்க முடியும்......

அதுமட்டுமல்லாமல் இந்த படகு இல்லை இனி எந்த படகு வந்தாலும் இது தான் கதி

இந்த படகோடு இந்தோனேசிய பக்கம் இருந்து 50 பேரோட வந்த இன்னும் ஒரு padakai இழுத்துக்கொண்டு போய் இந்தோனேசியா பக்கமே விட்டாச்சு....

சோ யார் என்ன சொன்னாலும் இது தான் எமது அரசின் முடிவு

So better luck next time boat people

ஒட்டு மொத்த ஈழத்தமிழர்களையும் அகதிகள் ஆக்குவதில் தான் தமிழ் தேசியம் இருக்கும் என்றால் அந்த தமிழ் தேசியம் தேவையே இல்லை

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.