Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

திலீபனின் சடலத்தை தேடி வேட்டை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
திலீபனின் சடலத்தை தேடி வேட்டை
வியாழக்கிழமை, 03 ஜூலை 2014 02:49
1a(755).jpg
இந்திய அமைதி காக்கும் படையை நாட்டிலிருந்து (இலங்கையிலிருந்து) விலகிக்கொள்ளவேண்டும் என்று கோரி இன்றைக்கு 27 வருடங்களுக்கு முன்னர் உண்ணாவிரதமிருந்து மரணமடைந்த தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களில் ஒருவரான ராசையா பார்த்தீபன் என்றழைக்கப்படும் திலீபனின் சடலம் பழுதடையாத வகையில் மருந்துகள் போடப்பட்டு முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாக பாதுகாப்பு பிரிவு அறிவித்துள்ளது.
 
பாதுகாப்பாக புதைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் கிடைத்ததையடுத்து புதைக்கப்பட்ட இடத்தை தேடி கொழும்பு பயங்கரவாத விசாரணை பிரிவின் பொலிஸ் குழு மற்றும் இராணுவக்குழு அப்பிரதேசத்திற்கு சென்று சோதனை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
 
தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பை மீளக்கட்டியெழுப்புகின்ற முயற்சிகின்றார் என்ற சந்தேககத்தின் பேரில் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபரை விசாரணைக்கு உட்படுத்திய போதே திலீபனின் சடலம் மறைத்துவைக்கப்பட்டுள்ள விடயம் அம்பலமானது என்று சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார். 
 
தொடர் உண்ணாவிரதத்தின் பின்னர் மரணமடைந்த புலிகள் அமைப்பில் லெப்டினன் கேர்ணல் பதவிநிலை வகித்த திலீபனின் சடலம் பழுதடையாத வகையில் மருந்து போடப்பட்டு முள்ளிவாய்க்காலில் பாதுகாப்பாக புதைக்கப்பட்டுள்ளது.
 
இவ்வாறு புதைக்கப்பட்டுள்ள தீலிபனின் சடலமானது வெளியில் எடுத்துசென்று  பார்க்ககூடிய வகையில் இருப்பதாகவும் முல்லைத்தீவு மாவட்டம் தமிழீழ விடுதலைப்புலிகளின் நிர்வாகத்தில் இருந்த காலத்தில், திலீபன் உயிரிழந்த தினத்தை அனுஷ்டிக்கும் போது, அவருடைய சடலத்தை பார்ப்பதற்கு அப்பிரதேச மக்களுக்கு சந்தப்பம் வழங்கப்பட்டுள்ளதாகவும் கைதுசெய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ள சந்தேகநபர் தெரிவித்துள்ளார். 
 
திலீபனின் புதைக்குழி இன்னும் பாதுகாப்பாக இருப்பதாக பாதுகாப்பு தரப்பினர் சந்தேகம் கொள்கின்றனர். கைது செய்யப்பட்டுள்ள முன்னாள் புலி உறுப்பினர்களில் முக்கியமானவர் வெளியிட்டுள்ள தகவல்களின் அடிப்படையிலேயே இந்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்படுகின்றது. 
 
இந்திய அமைதி காக்கும் படை, 1987இல் இலங்கை இந்தியா கைச்சாத்திட்ட ஒப்பந்தப்படி இலங்கையில் அமைதியை ஏற்படுத்த இந்தியாவினால் அனுப்பபட்ட இராணுவமாகும். இந்திய அமைதி காக்கும் படை இலங்கையில் 1987 இன் பிற்பகுதியில் தமது பணிகளை ஆரம்பித்தது. அது இலங்கையில் வந்த காலப்பகுதியில் திலீபன், யாழ்ப்பாணம் நல்லூரில் ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதமிருந்து 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் 26 ஆம் திகதி உயிர்துறந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.http://tamil.dailymirror.lk/pirasitta-seithi/116510-2014-07-02-13-11-33.html
  • கருத்துக்கள உறவுகள்

புலி இல்லாட்டி உவங்களுக்கு பிழைப்பு இல்லைப்போல கிடக்கு.....

இராணுவம் இப்படிக் கதை கட்டிவிட்டு வேறெதையோ தோண்டப் போகிறது. 

  • கருத்துக்கள உறவுகள்

இராணுவம் இப்படிக் கதை கட்டிவிட்டு வேறெதையோ தோண்டப் போகிறது. 

 

முதலமைச்சர் சொன்னமாதிரி கருங்கல் தோண்டப்போகிறாங்கள் போல...http://www.yarl.com/forum3/index.php?showtopic=142025

  • கருத்துக்கள உறவுகள்

புலி இறந்தாலும் சிங்களவனுக்கு தலை வலி தான்.....

#திலீபனின் சடலத்தை தேடி வேட்டை

இறந்த புலிகளை உயிர்பிப்பது .....அரசாங்கத்தின் இருப்பிற்கு முக்கியம் .....

  • கருத்துக்கள உறவுகள்

திலீபன் அண்ணாவின் உடலம்.. உத்தியோகபூர்வமாக.. யாழ் பல்கலைக்கழக மருத்துவ பீடத்திடம் அவரின் விருப்புக்கு அமைய கையளிக்கப்பட்டு அங்கு மாணவர்களின் போதனைக்கு பயன்படுத்தப்பட்டு வந்தது. 1994 இல் பாடசாலை மாணவனாக மருத்துவபீட கண்காட்சியில்.. திலீபன் அண்ணாவின் உடலில் இருந்து மனித தசை இழைய வகைகளை படித்துக் கொள்ள முடிந்தது. அவரது ஒரு பாதி.. உடல்..தசை இழையங்கள் தெரிய வைக்கப்பட்டிருந்த அதேவேளை மறுபகுதி.. எந்தச் சேதமும் இன்றி வைக்கப்பட்டிருந்தது.

 

இப்ப என்ன புதிசா.. கதை விடினம். யாழ் பல்கலைக்கழகம்.. உத்தியோகபூர்வமாகத்தானே அவ்வுடலத்தைப் பெற்றிருந்தது..! :icon_idea:


மருத்துவ பீடத்தில் உள்ள உடலங்களுக்கு போராளி.. எதிரி என்ற பாகுபாடு கிடையாது. அவையாவும்.. மனித உடல மாதிரிகள். அவ்வளவே..! இதனை சிங்கள பெளத்த பேரினவாத பயங்கரவாத இராணும்.. புரிந்து கொள்வது அவசியம். அல்லது புரிய வைக்க வேண்டியவர்கள்.. புரிய வையுங்கள். அந்த மொக்கு ஜென்மங்களுக்கு.!! :icon_idea:

போர் குற்ற முக்கியமான தடையங்களை அழிப்பதற்கான முயற்சி ...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.