Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அன்புள்ள விமர்சகர்களுக்கு வணக்கம்.

Featured Replies

அண்மையில் TTN தொலைக்காட்சி பற்றி மிகவும் காரசாரமாக சில விடயங்கள் இங்கு விவாதிக்கப்பட்டிருந்தது. அங்கு சில தனி நபர்களின் பெயர்கள் பாவிக்கப்பட்டிருந்ததால் அக்கருத்துக்கள் நீக்கப்பட்டுவிட்டது. எனினும் வைக்கப்பட்ட விமர்சனங்கள் தொடர்பாக நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல் இங்கு தரப்படுபின்றது:

அன்புள்ள விமர்சகர்களுக்கு வணக்கம்.

இங்கே இந்த கருத்துக்களத்தில் பல புனை பெயர்களில் பலர் கருத்துக்களை முன்வைத்திருக்கிறார்கள். ரிரிஎன் நிறுவனத்தை பற்றியும் அதில் வரும் செய்திகளைப் பற்றியும் பலர் பல கருத்துக்களை செல்லி இருக்கிறார்கள்.இந்தக் கருத்துக்கள் யாவும் ரிரிஎன் நிறுவனத்தை வளப்படுத்துவதற்கான

கருத்துக்களாக எனக்குப் படவில்லை. ஏனென்றால் உண்மையான கருத்தை ஆக்கபூர்வமான கருத்தை முன்வைப்பவர்கள் புனைபெயர்களுக்குள்

ஒழிந்து கொண்டு எழுதவேண்டிய அவசிமில்லை.

நேர்மையாக தன்னை இனங்காட்டி எழுதுபவன் தான் உண்மையான விமர்சகன்.தன்னுடைய கருத்து சரி என்ற நம்புவனுக்கு முகமூடி தேவையில்லை.

ரிரிஎன் தொலைக்காட்சி தொடர்பாக முன்வைக்கப்பட்டுள்ள கருத்துக்கள் ஏதோ ஒரு உள்நோக்கத்தோடு வைக்கப்பட்ட கருத்துக்களாகவே எனக்குப் படுகிறது.

ஒரு ஊடகத்தின் மூலமாக ஒரு இனத்தின் விடுதலைப் போராட்டத்தை சிதைத்த வரலாறு இந்தப் பாரிஸ் நகரத்திலே நடந்திருக்கிறது.

1974ம் ஆண்டு பாரிஸ் நகரத்திலே வொய்ஸ் ஒவ் பலஸ்த்தீனம் என்ற வானொலி ஹசன் அலி என்பவரால் ஆரம்பிக்கப்பட்டது. இந்த வானொலியின் நோக்கம் இஸ்லாம் என்பதை முதன்மைப்படுத்தாத பலஸ்தீன தேசியத்தை வளர்த்தெடுப்பதாகும்.எழுச்சி

  • கருத்துக்கள உறவுகள்

உங்கள் விளக்கம் அழகு.

  • கருத்துக்கள உறவுகள்

திரு.சிவநேசமூர்த்தியின் விளக்கத்திற்கு நன்றிகள். அது உண்மையும் கூட.

நான் ttn நிகழ்சிகளை பார்த்தது இல்லை அதனை பற்றி விமர்சிப்பது சரியுமல்ல அதனை பற்றி விமர்சிக்க எனக்கு தகுதியும் இல்லை.இதில் சிவநேசமூர்த்தி அவர்களின் அருமையான விளக்கங்களுடன் கூடியமடல்லிலிருந்தும் மற்றும் இலங்கை அரசு போடநினைக்கும் முட்டுக்கட்டைகளிலிரிந்தும் பாதுகாப்பு அமச்சகத்தின் இணயத்தில் இருந்த ஒரு கட்டுரையிலும் இருந்து (அவர்கள் படும் வயிற்றெரிச்சல்)ttn ஒரு உன்னதமான சேவையை செய்கின்றது என்பது திண்ணம்.

மேற்கோள்:

1980ம் ஆன்டு ஜனவரி மாதம் 12 ம் திகதி பெய்ரூத் நகரத்தில் வைத்து இஸ்லாத்தின் விரோதி என்ற பெயரில் டிஎவ்எல்பி (பலஸ்த்தீன விடுதலைக்கான ஜனநாயக முன்னணி)என்ற இயக்கத்தினரால் ஹசன் அலி சுட்டுக் கொல்லப்படுகிறார்.மொசாட்டின் நோக்கம் நிறைவேறியது. பலஸ்த்தீனியர்களை வைத்து அவர்களது கருத்தியல் தளத்துக்குள் புகுந்து அதை திசை திருப்பி இஸ்ரேலியர்கள் தங்களது நோக்கத்தை நிறைவேற்றிவிட்டார்கள். தங்களாலேயே தாங்கள் கெட்ட பலஸ்த்தீன மக்கள் இன்றுவரை தங்கள் விடுதலையை பெற முடியவில்லை.

இது நிம்மதி....

அதே போல எதுவும் நடக்ககூடாது என்று - கேள்விபடாமலே - முன்னெச்சரிக்கையா இருக்க எம்மில் நிறைய பேர் - சிலருக்கு எதிராய் சண்டை போட வேண்டி இருந்ததே என்றதில் ...!!

உங்களால் அழிய விரும்பல்ல - அதுதான் !

தேசியம் தேசியம்...... கிடங்குக்க கிடக்கிறியள்..... வெளில வாங்கோ என்று - மகுடி ஊதினவர்களுக்கு இது ஒரு பதிலாய் ஆகலாமோ?

தேசியம் பற்றி - உளப்பூர்வமாய் பேசுபவர்கள்.....நிறைய இங்க - !

சுதந்திர தமிழீழம் என்ற ஒன்று வருகையில் - அதற்கு சார்பாய் இருந்தோம் என்றதற்காய் - எம்மில் யாரும் விசேடமாக - இனம் கண்டு கொள்ள பட போவதில்லை!

ஏனெனில் - கோடியில் ஒருவராய் இருந்தோம் - உணர்வால்!

எந்த பிரதிபலனும் எதிர்பார்க்காத- உணர்வு !

அதற்கெதிராய் பேச நினைக்கிறவர்கள்.... மட்டுமே

அடுத்த நாளிலயே - அதன் பலனை அனுபவிக்கலாம்.......

அல்லது- பயனை பெற்றுவிட்டே - அதற்கெதிராய் பேச தொடங்கி இருக்கலாம் - வேறு என்ன சொல்ல?

இணைப்புக்கு - நன்றி!! 8)

அய்யா சிவநேசமூர்த்தி

பண்பான முறையில் இதுவரை தமிழ் ஒளி இணையத்தாரை தொடர்பு கொண்டு கொடுக்கப்பட்ட விமர்சனங்கள் குறைகளிற்கு இதுவரை தமிழ் ஒளி இணையத்தாரால் கொடுக்கப்பட்ட மறுமொழிகளை வெளியிட முடியுமா? தொலைக்காட்சி நேரத்தை வீணடிக்க சொல்லவில்லை. அவர்களுடைய இணையத்தில் "நேயர்களின் பொதுவான குறைபாடுகள் விமர்சனங்கள் அதற்கான பதில்கள்" என்று ஒரு பிரிவை சேர்த்துக் கொள்ளலாம்.

இதுவரை செய்யப்பட்ட நேயர்களின் உணர்வாளர்களின் பின்னூட்டங்களில் எவற்றை குறைகள் என்று ஏற்றுள்ளார்கள் அவற்றை நிவர்த்தி செய்ய என்ன கால அட்டவணை வைத்திருக்கிறார்கள்? பகிரங்கமாக வெளியிட முடியுமா? இல்லை இது எல்லாம் தேசியவிடுதலைப்போராட்டத்தின

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில் சிவநேசமூர்த்திக்கு நன்றிகள்!!!

வணக்கம் ஐயா!!

தங்கள் கருத்திலிருந்து ....

* த.தோ.இ இன் பிழைகளைச் சுட்டிக் காட்டுபவர்களெல்லாம் துரோகிகள்!, இல்லை துரோகிகள் இவ்வாறூதான் வருவார்கள்!!!

* இதைப் பற்றியென்ன, எதை எழுதுபவர்களும் புனை பெயரில் எழுதக் கூடாது!!!

*....

ஐயா!

முதலில் "முழந்தாலுக்கும், மொட்டைத் தலைக்கும் முடிச்சுப் போடாதீர்கள்!!! நீங்கள் பெரும் ஊடகவியலாளர் என்பதை இங்கு கூற வந்திருக்கிறீர்கள். இன்னும் உலகிலுள்ள பல ஊடகவியலாளர்களே புனை பெயர்களில்தான் எழுதுகிறார்கள் என்று அறீயாத ஊடகவியலாளர் நீங்கள்!! ஆனால் பலர் புனை பெயர்களின் பின் செய்யும் தியாகங்கள் அறியாத அற்புத ஊடகவியலாளர் நீங்கள்!!! ஒன்றை தெளிவு படுத்துகிறேன், நான் ஒரு ஊடகவியலாளன் அல்ல!!!

இன்றுவரை எத்தனை த.தொ.இ இன் நலன் விரும்பிகள் தங்கள் கருத்துக்களை, அறிவுரைகளை, விமர்சனங்களை கதைத்திருக்கிறார்கள்/அனுப்பியிருக்கிறார்கள் தெரியுமா??? ஆதாரங்கள் வேண்டுமா??? பதில் எமாற்றமே!!! லண்டனிலுள்ள த.தொ.இ ஐச் சார்ந்த சிலரிடம் கேட்டால் வேதனையுடன் பிரான்ஸ்ஸில் இருக்கும் நிர்வாகம் கேட்கும் நிலையில் இல்லை என்கிறார்கள்!!! ஏன்????

இங்கு பலவற்றை, நீங்கள் கூறிய தேசிய கட்டமைப்பை பலப்படுத்தாது என்ற வையில் கூற விரும்பவில்லை, ஆனால் நிச்சயமாக த.தொ.இ இன் போக்கு தம்மைத் தாமே அழிப்பதற்கு ஒப்பானது!!! வேறு யாருமே அழிக்கத் தேவையில்லை!!!!

நாங்கள் புலத்தில் செய்யும் பல பிழைகளை "தமிழ்த் தேசியத்திற்காக" என்று போட்டு தப்பி விடப் பார்க்கிறோம்!!! "தமிழ் தேசியம்" என்ற பெயரில் நடைபெறும் கூத்துக்களை சுட்டிக் காட்டுவது தவறா??? ஒன்றை உணருங்கள், புலத்தில் நாம் விட்ட தவறுகளே, இன்று நாம் விலை கொடுக்கிறோம்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

"ஐயோ, த.தொ......இ......." கருத்துத் தலைப்பு முற்றாக நீக்கப்பட்டுள்ளது. எமது தொலைக்காட்சியினை வளர்த்தெடுக்க வேண்டிய கடமை எம் அனைவருக்கும் உண்டு. உங்கள் ஆலோசனைகளை நீங்கள் நேரடியாக http://www.tvttn.com/ தளம் சென்று அனுப்பி வையுங்கள்.

மோகன்,

முதலில் நன்றிகள், நான் எழுதிய கருத்துக்களை நீக்கியதற்கு!! இங்கு ஒருவரும் தமிழ்த் தேசியக் கட்டமைப்புகளை குலைக்கவும் முயலவில்லை! யாழில், தமிழ்த் தொலைக்காட்சி இணையம் என்ற தலைபின் கீழ் ..... "... ஆலோசனைகள், கருத்துக்கள், கலந்துரையாடல், ..." என்ற பக்கமே இருக்கும் போது, அதில் நீங்கள், நான் எழுதிய கருத்தை நீக்கிவிட்டு ..." ஆலோசனைகளை நேரடியாக தெரிவியுங்கள் "... என்று கூறியிருக்கிறீர்கள்.!!!!!!!?????? குழப்பமமாக இருக்கிறது!!!!!! :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock: :shock:

அண்மையில் TTN தொலைக்காட்சி பற்றி மிகவும் காரசாரமாக சில விடயங்கள் இங்கு விவாதிக்கப்பட்டிருந்தது. அங்கு சில தனி நபர்களின் பெயர்கள் பாவிக்கப்பட்டிருந்ததால் அக்கருத்துக்கள் நீக்கப்பட்டுவிட்டது. எனினும் வைக்கப்பட்ட விமர்சனங்கள் தொடர்பாக நிர்வாகத்திற்கு கிடைக்கப்பெற்ற மின்னஞ்சல் இங்கு தரப்படுபின்றது:

வணக்கம் மோகன் அண்ணா :lol:

நீக்கப்பட்ட தலைப்பில் நான் அவதானித்த வரையில் யாருடைய பெயரும் குறிப்பிட்டதாக எனக்கு தட்டுபடவில்லை. :roll:

தமிழ் தொலைக்காட்சி இணையம் பற்றி ஏதும் இங்கு சொல்ல தேவையில்லை என்றால்

அடுத்ததாக கூற விருப்புவது தமிழ் தொலைக்காட்சி இணையத்தை பற்றி ஆலோசனை, அறிவிப்புக்கள்........ என சொல்லி தனியான பகுதியே தேவையில்லை. அதையும் எடுத்து விடலாம். ஏன் எனில் அவ்வறிவுப்புக்களை அறிய தான் அவர்களது இணையம் உள்ளதே. :lol:

ஒன்றே ஒன்று சொல்ல முடியும்

என்னால் சொல்லப்பட்டவை

ஒளிபரப்பில் ஏற்படும் ஒழுங்கீனம்: செய்தியின் போது தவறான விபர படங்கள் வருவது/ சில நேரம் படங்களே வராமல் இருப்பது. இது நாளாந்தம் அவதானிக்கப்படும் தவறுகள். இதை சொன்னால்......அவர்கள் உளவாளிகள் ... :lol:

அடுத்தது

செய்தி வாசிப்பவர் செய்தி வாசித்த தாளை ஒரே இடத்தில் வைக்காமல் மேசை முழுமையும் பரப்புவது. இதை கை தேர்ந்த பத்திரிகையாளனாக இருந்து தான் சொல்ல வேண்டுமென்றில்லை. சாதாரண பார்வையாளனுக்கே இது பார்க்க சகிக்காது.

இதுவும் உளவாளி தான் சொல்லுவான் :lol:

தங்கள் தவறுதளை சீர்தூக்கி பார்க்கமுடியாதவர்கள் குறைகளை சுட்டிகாட்டுபவர்களை தடுக்க தூக்கும் நவீன ஆயுதம் நீ உளவாளி ...... :lol:

நன்றி இத்துடன் நிறுத்தி கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிரபல ஊடகவியலாளர் சிவநேசமூர்த்தி அவர்களே!!

தாயகதிலிருந்து வெளிவரும் ஈழநாதம், அல்லது ஏனய சஞ்சிகைகளாகட்டும், அங்கு எழுதுபவர்களில் பலர் புனை பெயர்களில்தான் எழுதுகிறார்கள்!!!! உம்முடைய அதி மேதாவித்தனத்தை அங்கு போய்ச் சொல்லுமன்!!!

நாளை சில சமயம் நீர் கூறலாம், புனை பெயரில் எழுதலாம் வேறொருவரின் பெயரில் எழுதாதே என்று!!!! ஐயா!! அடியேன், இப்பெயர் தாங்கிய வரலாறு யாழ்களத்தில் பலர் அறிவார்கள்!!! "பூனைக்கு யார் மணி கட்டுவது"? என்று பலர் முழிசிக் கொண்டு பின் நிற்கையில், துணிந்து யாழில் தொடங்கி செயலில் காட்டியவர்கள்!!! எம்மை நோக்கி துரோகிகள் என்று விரலை நீட்டுவதை நிறுத்துங்கள்!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐயா சிவநேசமூர்த்தி அவர்களே!!!!

நாங்கள், புலத்தில் உண்மையான தமிழ்த் தேசிய துரோகிகளை விட எழுத்தில்/பேச்சில் துரோகிகளாக ஆக்கியவர்களே கூட!!!! எமது தனிப் பகைகளுக்காகக் கூட துரோகிகளாக்கப்பட்டவர்கள் எத்தனை பேரென்று உங்களுக்குத் தெரியுமா????...

உண்மையைச் சொல்ல வேண்டுமானால் துரோகிகள் புலத்தில் செய்த தமிழ்த் தேசிய விரோத செயற்பாடுகளை விட, நாமெல்லாம் செய்தது பன்மடங்கு!!!!!!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

1980ம் ஆன்டு ஜனவரி மாதம் 12 ம் திகதி பெய்ரூத் நகரத்தில் வைத்து இஸ்லாத்தின் விரோதி என்ற பெயரில் டிஎவ்எல்பி (பலஸ்த்தீன விடுதலைக்கான ஜனநாயக முன்னணி)என்ற இயக்கத்தினரால் ஹசன் அலி சுட்டுக் கொல்லப்படுகிறார்.மொசாட்டின் நோக்கம் நிறைவேறியது. பலஸ்த்தீனியர்களை வைத்து அவர்களது கருத்தியல் தளத்துக்குள் புகுந்து அதை திசை திருப்பி இஸ்ரேலியர்கள் தங்களது நோக்கத்தை நிறைவேற்றிவிட்டார்கள். தங்களாலேயே தாங்கள் கெட்ட பலஸ்த்தீன மக்கள் இன்றுவரை தங்கள் விடுதலையை பெற முடியவில்லை.

ஐயா சிவநேசமூர்த்தி!!!

தாங்கள் ஊடகவியலாளர் என்கிறீர்கள், ஆனால் இங்கு உங்களால் எழுதப்பட்ட பல தரவுகள் பிழையாவவைகளாகவே இருக்கிறது!!! ..... "ஹசன் அலி" யாரால் சுட்டுக் கொல்லப்பட்டதென்பதே உங்களுக்குத் தெரியவில்லை????!!!! :wink:

ஏனப்பா எய்தவன் இருக்க அம்பை நோகிறியள். மோகன் நீக்கியது உந்த துரோகிகள் உளவாளி என்று நரிவெருட்டிற கூட்டம் கொடுத்த முறைப்பாடுகள் அழுத்தங்களாக இருக்கும். நீங்களும் உப்பிடி பாஞ்சா அந்தாள் ஏன் வம்பை எண்டு இந்த பகுதியே வேண்டாம் எண்டு தூக்கிப்போடும். பிறகு சிறீலங்கா புலநாய்வுத்துறை பாவம். :lol:

இப்ப எங்களுக்கு தேவை ததொஇ இன் நடத்தையில் மாற்றம். நாங்கள் கேட்டு பதில்களோ மாற்றங்களோ வரவில்லை. சிவநேசமூர்த்தியிடம் கேக்கிறம். அவர் இந்த கேள்விகள் ஆக்கபூர்வமானவை என்றால் தனது சொந்தப் பெயரில் ததொஇ தொடர்பு கொண்டு பதில் பெற்றுத்தரும் அதிசயத்தை நடத்தட்டும். அவை ஆக்கபூர்வமற்றவை என்றால் அது ஏன் என்பது பற்றியாவது விளக்கத்தை சிவநேசமூர்த்தி தருவார் என்று நம்புவோம்.

சிவனேசமூர்த்தி அவர்களின் கருத்தில் இருந்து முற்றிலும் மாறுபடவேண்டிய தேவை இங்கு இருப்பதை மறுக்க முடியாது...! முகமூடி என்பதும் அது இல்லை என்பதும் இங்கு அவசியம் இல்லாதது....!

சொந்த பெயரில் எழுதும் பத்த்ரிகை எழுத்தாளர்கள் கூட தங்களின் சொந்த முகவரியை போட்டு எழுதுவதில்லை, அப்படி போட்டு எழுதாமல் பெயரை மட்டும் போடுவதால் நன்மை என்னத்தை கண்டோம்...??? அப்படி பெயர்போட்டு எழுதியவர்களில் எங்களால் பலர் அடயாளம் தெரியாமலே எழுத்தாளர்களாய் இருக்கிறார்கள்...! சிறந்த கருத்தாளனாக வர முகவரி தேவை இல்லை... அது அவரை பிரபல்யப்படுத்த மட்டும்தான் உதவும்....! பிரபல ஊடகவியலாளர் தாரகி அவரகளின் கருத்துக்களால் உந்தப்பட்டு எழுந்த மக்களிடம் அவரின் படத்தை போட்டுக்காட்டி அவரை அடையாளப்படுத்தி மகிழ்ந்தன ஊடகங்கள்....! அப்படியும் "தாரகி" எண்ற புனைபெயரில்த்தான் மாமனிதர் சிவராம் எழுதினார்...!

இங்கு இருப்பவர்களை காருத்தாளராய் மட்டும் பார்ப்பீர்களானால் நல்லது... முகமூடிகளாய் வேண்டாம்...! அப்படி பார்க்க வேண்டும் எண்றால் களத்தை பார்வையிடாமல் இருப்பது நலம்...! முகமூடிகளின் இடம் எண்று ஒதுக்கி வைப்பது நல்லது...!

ஊடகத்துறையில் இருக்கின்ற எம்மவர்களில் பெரும்பாலானவர்களுக்கு விமர்சனத்தை தாங்கிக் கொள்ளும் பக்குவம் என்பது கொஞ்சம் கூட இல்லை.

அது மட்டும் அல்ல. விமர்சிப்பவர்களை துரோகிகளாகக் காட்டி தப்பிக்கவும் முனைகிறார்கள்.

இப்படியான சிந்தனைகள் இருக்கும் மட்டும் வளர்ச்சி என்பது இருக்கப் போவதில்லை.

தெரிந்த செய்திகளைத்தானே சொல்லப் போகிறார்கள் என்பதால்

நான் ரிரிஎன் செய்தியைப் பொதுவாகப் பார்ப்பதில்லை.

ஆனால் இங்கே செய்திகளின் போது தவறான படங்களைப் காட்டுகிறார்கள் என்கின்ற விமர்சனம் வந்ததால் நேற்று செய்தியைப் பார்த்தேன்.

என்ன ஆச்சரியம். இங்கே விமர்சகர்கள் சொன்னது போன்றே நடந்தது. முதலில் பொத்துவில் பிரச்சனை பற்றி சொன்னார்கள். ஆனால் அது பற்றிய காட்சி வரவில்லை. பின்பு குடும்பிமலையில் நடந்த கூட்டம் பற்றிச் சொன்னார்கள். அப்பொழுது தீடிரென்று பொத்துவில் சம்பந்தமான காட்சி வந்தது.

நிலைமை இப்படி இருக்கின்ற பொழுது விமர்சகர்கள் மீது பாய்வதில் அர்த்தம் இல்லை.

இல்லாத செய்தியை உருவாக்க முடியாது ஒரு ஊடகத்தில் வருவதுதான் மற்றதிலும் வரும் தவிர்க்க முடியாது என்ற வாதத்தை ஓரளவு ஏற்றுக் கொண்டாலும் இவர்கள் அந்த செய்திக்கு ஓரு தொலைக்காட்சி ஊடகம் என்றரீதியில் என்ன மேலதிக பங்களிப்பை வழங்குகிறார்கள் என்பது கவனத்தில் எடுக்கப்படுவதில்லை. இணைய ஊடகத்தில் ஒரு உறுதிப்படுத்த முடியாத செய்தி இருந்தால் அதே உறுதியற்ற முறையில் வரிக்கு வரி வாசிப்பார்கள் அதனால் மேலதிகமாக மக்களிற்கு எதுவும் கிடைப்பது இல்லை என்பதை சிந்திக்கிறார்களா? அந்த செய்தியில் உள்ள விபரங்களை தெளிவு படுத்தி இன்னார் இன்னாருடன் தொடர்பு கொண்டோம் அவர்கள் பதில் தந்தார்களா இல்லையா, உறுதிப்படுத்தினார்களா இல்லையா, விடையம் பற்றிய மேலதிக விபரங்களை தந்தார்களா என்ற எந்த ஒரு சுய முயற்சியும் இல்லை.

அடுத்ததாக இணையத்தில் ஒரு விடையம் பற்றி என்ன கண்ணோட்டத்தில் ஒரு செய்தி வந்திருக்கிறதே அதே கண்ணோட்டத்தில் தான் இவர்களும் வாசிப்பார்கள். ஆனால் BBC, CNN, AFP, AP, Reuters போன்ற சர்வதேச ஊடகங்கள் ஒரே விடையத்தை எவ்வாறு மாறுபட்ட கோணத்தில் சொல்லுகிறார்கள் என்றதை கவனித்துப்பாருங்கள். ஏன் என்றால் அந்த ஒவ்வொரு நிறுவனத்திலும் செய்திப்பிரிவில் பணிபுரிபவர்கள் ஒவ்வொரு செய்திக்கும் சுயமாக பங்களிக்க வேண்டும் தமக்கு ஒரு தனித்துவம் இருக்கிறது அந்த கோணத்திலிருந்து அந்த செய்தியை சொல்ல வேண்டும் என்று உண்மையாக உழைக்கிறார்கள்.

நேற்று இணையத்தில் வந்தது போல் ஏதோ படையணி மூதூரை மீட்க போவதாக அறிவித்தாக வாசித்தார்கள். இண்டைக்கு இணைத்தில் உள்ளது போல் அது தவறு திட்டமிட்ட சதி என்றும் வாசிக்கிறார்கள்.

அண்மையில் நடைபெற்ற முகமாலை மோதலின் போது' date=' இளந்திரன் திரும்பத் திரும்ப சொல்கிறார் ... "இது ஒரு தற்பாதுகாப்பு யுத்தம், மட்டுப்படுத்தப்பட்ட நடவடிக்கை, ..." ஆனால் தம்மை தேசிய கட்டடைப்பு ஊடகங்களாக கூறும் த.தொ.இயோ, அ.ஒ.கூ.தவோ .."புலிகளின் யாழ் நோக்கிய பாச்சல் தொடர்கிறது" .... என்று தொடர்ச்சியாக முழங்கிக் கொண்டிருந்தார்கள்!!! இன்று புலத்தில் மக்களிடையே இச்சண்டைகளின் பின் ஏற்பட்ட மன உழைச்சலுக்கு மிக முக்கிய காரணிகள் இவ்விரு ஊடகங்களும் தான்!!!!

முற்றிலும் ஏற்றுக்கொள்ள பட வேண்டிய கருத்து... காண்பவர்கள் எல்லாருக்கும் விளக்கம் கூறியே மனிசன் நொந்து போகும் அளவுக்கு இவர்களின் புலிகளின் கருத்துக்களை தாங்கி வந்த அழகு இருந்தது...!

ஒரு சமயம் இது புலிகளின் ஊடகமா என சந்தேகப்படும் அளவுக்கு செஞ்சோலை குண்டுவீச்சில் இளந்த உயிர்களுக்காய் மக்கள் புலம்பெயர் நாட்டில் பரிதவித்த போது உண்மை நிலைக்காய் TTNனை திருகினால் அங்கு நாடகங்கள் போய் கொண்டு இருந்தது... தாயகத்தில் அப்படியான ஒரு சம்பவம் நடந்த்தாக கிட்டத்தட்ட மாலைவரை எந்தவிதமான செய்தியையும் சொல்லவில்லை...! அதிக பட்ச்சமாக ஒரு எழுத்து ஓட்டத்தையாவது ஏற்பாடு செய்து இருக்கலாம்... ஆனால் அவர்கள் செய்ய வில்லை...!

தேசியத்தை வளர்கின்றோம் எண்று சொல்லும் TTN தன்னை நிலைப்படுத்தாமல் வளர்க்காமல் தாயக நலன்களை வளர்க்கின்றோம் எண்று சொல்வதில் உண்மை இருப்பதாக தெரியவில்லை...!

வணக்கம் .

ஜயா. பெரியவரே தாங்களால் கூறப்பட்ட

கருத்துகளில் எனக்கு முரன் பாடு இருக்கிறது .

புனை பெயரில் வந்து எழுதுவது தவிர்கப் பட வேண்டும்

என கூறினீர்கள் .அப்படியானால் . மதியுகி . என்ற பெயரில்

ஆய்வு கட்டுலை எழுதிய ஆலோசகரை என்ன சொல்லப்

போகறீர்கள்...???

வியாசன் என்ற பெயரில் எழுதும் கவிஞரை என்னவென்று

சொல்லப் போகறீர்கள் ...???

இன்னும் பலருடைய பெயர்களை குறிப்பிடலாம்.

உங்கள் தவறுகளை ஏன் தாங்கள் கவனத்தில்

எடுக்கவில்லை...??

*******

செய்தியிலயே ஒழுங்குள் இல்லை.

இலங்கை செய்தி என்றால் அதை முதல் சொல்லுங்கள்.

வெளி நாட்டு செய்தியுடன் அதையும் புகுத்தி

குளப்பங்களை செய்கிறீர்கள் .

நீங்களே நிகழ்சிகளை மாற்றுவது பின்னர் மக்கள் ஏற்பார்கள்

என்று கதை விடுவது .

செய்தி படங்களை மாற்றி காட்டுவது .

என பெரும் தவறுகளையு தாங்களே விட்டு கொண்டு

கருத்து சொல்ல வருபவர்களை ஏன் திட்டு கிறீர்கள்...???

முதல் வெளி நாட்டு செய்தியை பிறிதாவும்

இலங்னை செய்தியை பிறிதாகவும்

சொல்லுங்கள் கூழ்பாடி வேலையாக செய்யாதீர்கள் .

ஒரு பிரச்சினை எழுந்தால் அது சம்பந்தமாக மக்கள்

கருத்தை அறியுங்கள் அவர்கள் உள குமுறலை கேளுங்கள் .

அதை விடுத்து சும்மா தேவையில்லாத நிகழ்வுகளை ஒலி பரப்பி

காலத்தை வீணடிக்காதீர்கள் .

நன்றி

- வன்னி மைந்தன் -

***** நீக்கப்பட்டுள்ளது - மோகன்

  • தொடங்கியவர்

சிவநேசமூர்த்தியிடம் இருந்து வந்த இன்னொரு மின்னஞ்சல்

அன்பு நண்பர்களுக்கு

ஆக்கபூர்வமான கருத்துச் சொன்ன கருத்துச் சொன்ன எவரையும்; எந்த இடத்திலும் நான் உளவாளிகள் என்று குறிப்பிடவில்லை. ஒரு ஊடகத்துக்கள் உளவுத்துறை எப்படிப் புகுந்து அதன் கருத்தியல் தளத்தை சீரழிக்கும் என்றுதான் வரலாற்றை உதாரணம் காட்டி குறிப்பிட்டேன்.

புனைபெயரில் எழுதுவதும் அல்லது தங்களை யார் என்று இனங்காட்டி கருத்தை சொல்லாமல் விடுவதும் உண்மையான அக்கறையுள்ளவர்கள் போல தவறான நபர்களும் உள்நுழைவதற்கு வழிவகுக்கும் என்பது என்னுடைய வாதம். ரிபிசி வானொலி பின்பற்றுகின்ற பாணியை யாழ் இணையம் பின் பற்றக் கூடாது என்பது தான் எனது தாழ்மையான வேண்டுகோள்.

ஒரு விமர்சனத்தை அதற்கு உரிய இடத்தில் முதலில் வைக்க வேண்டும்.அங்கே அது கவனிக்கப்பட வில்லை என்றால் அதற்கு மேலிடத்தில் அதை வைக்கலாம்.அங்கும் பதில் கிடைக்கவில்லை என்றால் அதி உயர் மட்டத்தக்கு வைக்கலாம். சாதாரண நீதித் துறையின் நடைமுறையில் நீதி மன்றம் மேல்முறையீட்டு நீதி மன்றம். உயர்நீதிமன்றம் என்று இருப்பதைப் போல! ரிரிஎன்னுக்கும்இது பொருந்தும்.

அன்புடன்

சிவநேசமூர்த்தி

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ம்ம்ம்ம்ம்.... "தாங்களும் செய்ய மாட்டுதுகள், செய்கிறதுகளையும் விடமாட்டுதுகள்" .... என்ற சத்தம் கேட்குதுதான்!!! .... கொஞ்ச உண்மை, உதிலையும் இருக்குத்தான்!!! .... ஆகவே தொடங்கினதுக்கு ஒரு முடிவுரை போடுவமன் .....

சில உண்மைகள் இருக்கின்றனத்தான், த.தொ.இயை முற்றிலுமாக தேசியத்திற்க்கான ஊடகமாக காட்ட முடியாத நிலை!!! சட்டப் பிரட்சனைகள்!! நிதிப் பிரட்சனைகள்!!! .... என்று பல இருக்கத்தான் செய்கிறது!!! அதைவிட எங்கே விழுங்களாமென்று ஒரு கூட்டமும் அலையுதுதான்!!!!!!

ஆனால் உந்தப் பிரட்சனைகளோடு, பல தீர்க்கக்கூடியவற்றையும் இணைப்பதை ஏற்க இயலாமல் இருக்கின்றது!!! நாங்கள் இங்கு சில பிரட்சனைகளை சுட்டிக் காட்டுகின்றோமென்றால், அதை ஓரளவேனும் தீர்க்கட்டுமென்றுதான்!!!

இன்று புலத்தில் இந்தியாவிலிருந்து வந்து எம்மை விழுங்க பல முதலைகள் அலைகின்றன!!!!!! அவைகள் வந்தது வேறு, வருடங்களாக இலவசம்!!! எங்கிருந்து உந்த இலவசத்துக்குப் பணம்???? ஏன் இலவசமாக வருடக்கணக்கில்???? அதில் எம்மவர்களும் பலி!!!! .... இந்த வேதனைகளும் தான் ததொஇ மீது எரிந்து விழ வைக்கிறது!!!

தீர்க்கக்கூடிய சாதாரண தொழில்நுட்பப் பிரட்சனைகள், தரமான நிகழ்ச்சிகள், நம்பகத்தன்மையானதும், தரமானதுமான செய்திகள் .... இப்படியானவற்றிற்கும் தீர்வு காண இயலாதா???? ... நிச்சயம் முடியும்!!!!

இங்கு மற்றவற்றை அடக்க இயலாது, ஒரே வழி நாமும் தரத்தில் போட்டி போடுவது தான்!!! எங்களிடம் திறமை இல்லையா??? எமக்கென்று கலை/கலாச்சாரப் பின்னனி இல்லையா??? நினைத்தால் முடியாதது ஒன்றுமில்லை!!!!! சாதிக்கலாம்!!

இதில் மேன்மறையீடு . கீழ் முறையீடு

என்றெதற்கு இந்த வீண் வாதம் ...???

எங்கள் தேசிய தொலை காட்சி என்பது தனக்கென

ஒரு வடிவத்தை கொள்ளவேண்டும் .

ஆரம்ப காலங்களில் இருந்த அதனுடய செயற் பாடுகள் பிற்காலத்தில்

திசை மாறிப் போனதும் .

அறிவிப்பாளர்களில் எழந்த முரன்பாடுகளும்

அதனால் அதுவடைந்த பின்தங்கலும்

என தொடர்ந்த நிலையால் .என் ரி.hP.

வந்தே நிமிர்தியது .

செய்திகளின் போதும் . ஏனைய பிற நகழ்வுகளின் போதும்

அது சார்ந்த நிகழ்வுகளில் கவனமெடுத்து

அதை சிறப்பாய் செய்தல் நன்றே .

அதை விடுத்து தகாத முறையில் சில அறிவிப்பாளர்கள்

நடந்து கொள்ளு முறையானது கவலைக்குரியதே .

இதை முதலில் கவனத்தில் எடுங்கள் .

எங்கள் தொலை காட்சியை நாங்கள் இழிவு படுத்தும்

நோக்கம் எமக்கல்ல .ஆனால் அதில் இருக்கும் குறை நிறைகளை சுட்டி காட்டுகிறோம்

அதை கவனத்தில் எடுத்து உடனடி தீர்வை காணுங்கள் .

இல்லையாயின் மக்கள் உங்களை விட்டு செல்வது தவிர்க முடியத ஓன்றே

குறிப்பிட்டு சொன்னால் என்னில் இரண்டு சந்தா உண்டு

இப்படி எத்தனை பேர் உள்ளார்கள்.

இதுக்கெல்லாம் தாங்கள் காட்டும் உதரணம்...??

நகைப்புக்கிடமானதே...

இணையத்தில் வரும் செய்திகளை அப்படியே போடாது

உங்களுக்கென ஒரு பாணியை வகுத்து அதன் அடிப்படையில்

செயற் படத்து மாறு எத்தனை பேர் வேண்டுதல் விட்டுள்ளார்கள்...

இது சம்பந்தமாக தங்கள் நிலையத்துடன் பல தடவை

தொடர்பு கொண்ட போதும் எதுவித பலனும் இல்லை...

இதில் எமெக்கேன் இத்தனை அக்கறை அது எங்கள்

தொலை காட்சி என்ற எண்ணமே அதனால் தான்

எங்கள் கருத்தை அழுத்தம் திருத்தமாய் சொல்கிறோம்..

இனியாவது கவனத்தில் எடுத்து புது பொலிவுடன்

செயற் படுத்துங்கள் ....

பி .கு.. தங்கள் தொலை காட்சியல் செய்யப்பட்ட சில

விளம்பர தாரர்களின் தில்லு முல்லு நடவடிக்கைகள்

ஜீரணிக்க முடியாமல் உள்ளது ...

அது சம்பந்தமாக சில ஆதரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளது

இனி வருங்காலங்களில் அதையும் வெளி கொணர்வோம்...

இதற்கெல்லாம் யார் காரணம்...??

உங்கள் தொலை காட்சியை பார்த்து தானே அவர்களை

நாடினோம் இன்று நாம் போனது மோசம்...

ஏன்...???

உங்கள் பதில் என்ன...??

மௌhம்...தெரியாது...

நன்றி

- வன்னி மைந்தன் -

யோ உண்டியல் உமக்கு உந்த தொழில்நுட்பங்கள் பற்றி என்ன தெரியும் எண்டு கதைக்கிறீர் (குறை நினைக்காதையும் உப்படித்தான் தமிழ் ஒளி இணைத்தவர் மறுமொழு சொல்லுவார்கள் நீர் நேர பிடிச்சு வைச்சு கேள்வி கேட்டீர் எண்டா).

அய்யா சிவநேசமூர்த்தி சொல்லிற மாதிரி ஒவ்வொரு படிநிலையா உங்கட முறைப்பாட்டை மேல்நோக்கி சொல்லிக் கொண்டு இருங்கோ பதில் கிடைக்கும் மட்டும். இனி மிஞ்சி இருக்கிறது கடவுள் தான். கடவுளிட்டை கேட்டுப்பாரும் மறுமொழி கிடைக்காட்டி நேர்த்திக்கடன் வைய்யும். 300 தேங்கா உடைப்பன் எண்டு. மொட்டை அடிப்பன் எண்டு, காவடி எடுப்பன் எண்டு. அப்படியே உம்மட லஞ்சத்தை அதிமேன் முறையீட்டு மன்றத்திற்கு கூட்டிக் கொண்டிரும். அதை தமிழ் ஒளி இணையும் கந்த கடம்பா கதிர்வேலா எண்டு தங்கடை கோயில் திருவிழா நேர்முகவருணனையில காட்டுவினம். எல்லாம் சுகம் வரும்

சிவநேசமூர்த்தியிடம் இருந்து வந்த இன்னொரு மின்னஞ்சல்

அன்பு நண்பர்களுக்கு

ஆக்கபூர்வமான கருத்துச் சொன்ன கருத்துச் சொன்ன எவரையும்; எந்த இடத்திலும் நான் உளவாளிகள் என்று குறிப்பிடவில்லை. ஒரு ஊடகத்துக்கள் உளவுத்துறை எப்படிப் புகுந்து அதன் கருத்தியல் தளத்தை சீரழிக்கும் என்றுதான் வரலாற்றை உதாரணம் காட்டி குறிப்பிட்டேன்.

புனைபெயரில் எழுதுவதும் அல்லது தங்களை யார் என்று இனங்காட்டி கருத்தை சொல்லாமல் விடுவதும் உண்மையான அக்கறையுள்ளவர்கள் போல தவறான நபர்களும் உள்நுழைவதற்கு வழிவகுக்கும் என்பது என்னுடைய வாதம். ரிபிசி வானொலி பின்பற்றுகின்ற பாணியை யாழ் இணையம் பின் பற்றக் கூடாது என்பது தான் எனது தாழ்மையான வேண்டுகோள்.

ஒரு விமர்சனத்தை அதற்கு உரிய இடத்தில் முதலில் வைக்க வேண்டும்.அங்கே அது கவனிக்கப்பட வில்லை என்றால் அதற்கு மேலிடத்தில் அதை வைக்கலாம்.அங்கும் பதில் கிடைக்கவில்லை என்றால் அதி உயர் மட்டத்தக்கு வைக்கலாம். சாதாரண நீதித் துறையின் நடைமுறையில் நீதி மன்றம் மேல்முறையீட்டு நீதி மன்றம். உயர்நீதிமன்றம் என்று இருப்பதைப் போல! ரிரிஎன்னுக்கும்இது பொருந்தும்.

அன்புடன்

சிவநேசமூர்த்தி

இதுக்கு ஒரே வழி முடிந்தால் செயற்படுத்துங்கள்....

உங்கள் ரீரீன் இனைய்த்தில் ஒரு பகுதி ஆரம்பிச்சு அதில ரீரீன் நேயர்கள் மட்டும் பார்க்கவும் வாசிக்கவும், கருத்து எழுதவும் மாதிரி ஒரு பகுதி( பதிவு செய்பவர்கள் தங்கள் ரீரீன் கார்ட் நம்பர் இருந்தால் மட்டும் பதிவு செய்ய கூடிய மாதிரி) ஆர்ம்பிங்கள் அல்லது

யாழ்கள நிர்வாகத்துடன் கதைத்து கூட அதை செய்யலாம் ஆனா ரீரீன் கார்ட்டில் உள்ள நம்பர் இல்லாம அவர் அந்த பகுதிக்குள்ளே போக முடியாது வாசிக்கவோ இல்லை எழுதவோ முடியாத மாதிரி

இப் பகுதிய்ல் எழுதுவதை ரீரீன் நிர்வாகம் வாசிக்க கூடியாதாக இருக்கும் உங்கள் பதில்களையும் வைக்கலாம்

:?: :?: :?: :?:

சில வேலை இது சாத்தியபபடாது என்று தோன்றினால் ??????? யாழ்களத்தில் ரீரீன் பற்றி பேச வேண்டாம் என்று திரு. மோகன் அண்ணா அறிவிக்கவேண்டியாது தான் :roll:

இது எமது போராட்டத்துக்கு பெரும் பங்களிப்பை செய்யும் ஒரு தொலைக்காட்சி யின் வளர்ச்சியில் அக்கறையில் சொல்கிறேன்

மற்றும் படி மேல் கோர்ட் கீழ்கோர்ட் போக்க கூடிய வசதி இல்லை :idea:

ரிபிசி வானொலி பின்பற்றுகின்ற பாணியை யாழ் இணையம் பின் பற்றக் கூடாது

இப்படி ஒரு பதில் உங்களிடம் இருந்து வரும் என்று நான் எதிர்பார்க்கவில்லை ஏன் என்றால் ரிபிசி யின் கேவலமான செற்பாடுகளை சில பினம் தின்னிகளும் பணம் தின்னிகளும்

செய்த தூரோகங்களை மறைக்கவும் தான் ஆதரிப்பார்கள்.....

ரிபிசியில் 50 பெயரில் வருவார்கள் ஆனா 10 பேருக்கு ஒரே குரல் இருக்கும் அப்போ அங்கு வரும் மொத்த நேயர்களின் தொடகை சொல்ல தேவை இல்லை :P

ரிபிசி வானொலி பின்பற்றுகின்ற பாணியை யாழ் இணையம் பின் பற்றக் கூடாது என்பது தான் எனது தாழ்மையான வேண்டுகோள்.

இதையேதான் நானும் வேண்டுகிண்றேன்...TTN னும் TBC போல நடந்து கொள்ளக்கூடாது என்பதுதான் இப்போதைய வேண்டுகோள்...!

உண்மையிலேயே மனம் நொந்து சொல்கின்றேன்... TTN சினிமாவையும் வரும் நாடகங்களுக்கும் குடுக்கும் முக்கியத்துவமும், விளம்பரப்படுத்தலும் தாயக வலத்துக்கோ, நிலவரம், அம்பலம், ஏன் படலைக்கு படலைகோ தருவதில்லை...! இதைத்தான் நீங்கள் தாயகத்துக்கான சேவை என்கிறீகள் எண்றால் அதுக்காக உங்களுக்கு நண்றி உரித்தாகட்டும்...!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.