Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மாற்றமொன்றை எதிர்பார்த்த எமக்கு ஏமாற்றமே கிடைத்தது - சுமந்­திரன்

Featured Replies

கடந்த காலத்தில் இருந்து இன்று வரையில் பெரும்­பான்மை வாதமே இந்த நாட்டின் அர­சியல் முறை­மை­யினை தீர்­மா­னித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. ஒரு தரப்பின் கருத்­துக்­களை வைத்து அர­சி­ய­ல­மைப்­பினை உரு­வாக்­கு­வதே தேசிய இணக்­கப்­பாட்­டுக்கு முட்­டுக்­கட்­டை­யாக அமைந்­துள்­ளது என தெரி­விக்கும் தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் எம்.ஏ. சுமந்­திரன் மாற்றம் ஒன்­றினை எதிர்­பார்த்த எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் ஏமாற்­றமே எமக்கு கிடைத்­தது எனவும் சுட்டிக் காட்­டினார்.
sumanthiran1_0.jpg
 
1978 ஆம் ஆண்டு யாப்பு மீளாய்வு நிய­மங்கள் தொகுப்­பாய்வு எதிர்­கால நோக்­கங்கள் மற்றும் யதார்த்­தங்கள் தொடர்­பான நூல் தொடர்­பி­லான கலந்­து­ரை­யாடல் நிகழ்வு நேற்று கொழும்பில் லக் ஷ்மன் கதிர்­காமர் நிலை­யத்தில் இடம் பெற்­றது. இதன் போதே அவர் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார்.
 
அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,
 
இலங்­கையின் சுதந்­தி­ரத்­திற்கு பின்னர் இங்கு உரு­வாக்­கப்­பட்ட அர­சியல் அமைப்­பு­களும் ஆட்­சி­யா­ளர்­களும் ஒரு பக்க சாத­கத்­தினை மட்­டுமே கவ­னத்திற் கொண்டு செயற்­பட்­டுள்­ளனர். சோல்­பரி அமைப்பில் சிறு­பான்மை மக்­க­ளுக்கு ஓர­ளவு சாத­க­மான தன்­மைகள் இருந்த போதிலும் பிற்­கா­லத்தில் ஒரு மொழிக் கொள்கை , தேர்தல் முறை­மை­களில் மாற்றம் என்ற கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­பட்டு மீண்டும் பேரி­ன­வாத ஆதிக்கம் ஆரம்­ப­மா­கி­யது.
 
அதன்­பின்னர் 1970 ஆம் ஆண்டு ஒரு அர­சியல் முறைமை கொண்டு வரப்­பட்­டது. இதில் சிறு­பான்மை மக்­க­ளுக்­கான உரி­மைகள் குறிப்­பி­டப்­பட்­டது. எனினும் முப்­பது ஆண்­டு­க­ளாக நடை­மு­றையில் இருக்கும் இவ் அர­சியல் அமைப்­பிலும் குறிப்­பி­டப்­பட்ட பல விட­யங்கள் நடை­மு­றைப்­ப­டுத்­த­ப்ப­ட­வில்லை. பல­வற்­றினை தவிர்த்து தமக்கு தேவை­யான விட­யங்­களை மட்­டுமே செயற்­ப­டுத்­தினர். மாற்றம் ஒன்று ஏற்­படும் என எதிர்­பார்த்த எமக்கு எல்லா சந்­தர்ப்­பங்­க­ளிலும் ஏமாற்றம் மட்­டுமே கிடைத்­தது.
 
இத்­தனை கால­மாக ஆட்­சி­ய­மைத்த அர­சாங்­கத்தின் தேசிய இணக்­கப்­பாடு தொடர்பில் எவ்­வா­றான முறையில் கையாண்­டுள்­ளது என்­பதே எனது கேள்வி?
 
இது­வ­ரை­யி­லான காலப்­ப­கு­தியில் பெரும்­பான்­மை­வாதச் சட்டம் சிறு­பான்­மை­யி­ன­ருக்கு ஒரு சந்­தர்ப்­பத்­திலும் இடம் கொடுக்­க­வில்லை என்­பதே உண்மை. ஒரு சமூ­கத்தின் சுதந்­திரம் தொடர்பில் மட்­டுமே சுட்டிக் காட்­டு­கின்­றனர்.
 
ஒரு சாராரின் கருத்­துக்­களை வைத்து ஒரு இனத்­திற்கு சாத­க­மான வகையில் அர­சியல் அமைப்­பினை உறு­திப்­ப­டுத்த முடி­யாது. அவ்­வாறு அமைப்­பது ஜன­நா­ய­கமும் இல்லை. எனினும் இலங்­கையில் இன்றும் இதுவே இடம் பெற்றுக் கொண்­டி­ருக்­கின்­றது. கடந்த காலங்­களில் இருந்து இன்று வரை­யிலும் பெரும்­பான்மை வாதமே நாட்டில் அர­சியல் முறை­மை­யினை தீர்­மா­னித்துக் கொண்­டி­ருக்­கின்­றது. ஒரு சில கார­ணங்­களை மட்டும் பேசிக் கொண்­டி­ருப்­ப­தாயின் எல்லா மக்­க­ளுக்­கு­மான அர­சியல் அமைப்­பொன்­றினை எப்­போது உரு­வாக்கப் போகின்றோம். தீர்­மா­ன­மெ­டுக்கும் போது சமத்­துவம் ,மதம் , மொழி என்­ப­வற்­றி­னையும் கவ­னத்தில் கொள்­ளப்­பட வேண்டும். அதை நாம் செய்­யாத வரை­யிலும் மாற்றம் ஒன்­றினை நோக்கி பய­ணிக்­கவோ அல்­லது எதிர்ப்­பார்க்­கவோ முடி­யாது. இவை அடிப்­படை அம்­சங்கள் இதைத்தான் முக்­கி­ய­மாக நாம் கவ­னத்தில் கொள்ள வேண்டும்.
 
பௌத்த மதத்­திற்கு நாட்டில் கொடுக்கும் முக்­கி­யத்­து­வமும் அதற்­கான மதிப்­பி­னையும் ஏனைய மதங்­க­ளுக்கும் கொடுக்­கப்­பட வேண்டும்.
அதேபோல் நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மை­யினை முற்­றாக நீக்க வேண்டும் என்­பதில் நாமும் தெளி­வான முடிவில் உள்ளோம். இன்று அர­சாங்கம் கூறு­கின்ற­படி நிறை­வேற்று ஜனா­தி­பதி முறை­மைதான் பயங்­க­ர­வா­தத்­தினை அழித்­தது என்றால் அன்று பயங்­க­ர­வா­த­மொன்று உரு­வா­கவும் இந்­நி­றை­வேற்று ஜனா­தி­பதி முறைமை தானே இருந்­தது.
 
பெரும்­பான்மை மக்­களின் ஆட்­சி­யாக இருந்து பின்னர் ஆளும் கட்­சியின் அர­சியல் யாப்­பாக மாறி இன்று குடும்­பத்தின் அரசியல் யாப்­பாக இது மாறி­விட்­டது. எனவே இதை அழிக்க வேண்­டிய தேவை இன்று அனை­வ­ருக்கும் ஏற்­பட்­டுள்­ளது.
 
எனவே ஒரு சாராரின் கொள்­கைக்கு மாத்­திரம் முக்கியத்துவம் கொடுக்காது மாற்றீட்டு முறைமையினை செயற்படுத்தும் போது எல்லா கொள்கைகளையும் ஒன்றிணைத்து அவை தொடர்பில் கலந்தாலோசித்து கொள்கை அடிப்படையில் தீர்மானிக்கும் பொறிமுறையினை கையாண்டால் மட்டுமே தேசிய இணக்கப்பாடு நோக்கி சிந்திக்க முடியும். அதை கவனிக்காத வரையிலும் எந்த முயற்சிகளை மேற்கொண்டாலும் அவை தோல்வியடையும் எனத் தெரிவித்தார்.
 
 
  • கருத்துக்கள உறவுகள்

நாங்கள் சாதாரண குடி மக்கள்...!

 

ஆனால் சுமந்திரர்கள், சம்பந்தர்கள், சேனாதிகள் எல்லாரும் எமது 'கண்ணீர்' துடைக்கவெனப் புறப்பட்டவர்கள்!

 

இவர்களுக்கு ஆதியும் புரியும்... அந்தமும் தெரியும்!

 

/இப்போது மட்டும் எதற்காக இந்த 'ஆதங்கம்' எனப் புரியவில்லை!

 

 

வானத்தை அண்ணார்ந்து பாருங்கள் !

 

வண்ண நிலவு தெரியும் என்றீர்கள்,,,,,!

 

நிரந்தரம் தானா என்று கேட்டோம்!

 

அமாவாசையைப் பற்றி நீங்கள் சொல்லவேயில்லை!

 

சரி.. மறந்து விட்டீர்கள் என்று நினைத்தோம்..!

 

இப்போது சொல்கிறீர்கள் நிலவே இல்லையென்று..!

 

அதையும் மறைத்து விட்டீர்கள் என்பதும் புரிகின்றது..!

 

இன்னும் எங்களுக்கு; 'நிலவு' காட்டுகின்றீர்கள்? :o

 

நம்பித் தானே ஆக வேண்டும்!

 

ஏனெனில் எங்களுக்கு வேறு வழிகள் இல்லை! :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அரசியல் செய்த அரசியல்வாதிகள் எல்லோருமே அவரவரது இறுதிக்காலத்தில்தான் தங்கள் செய்த தவறுகளை எண்ணி வருந்திப் புலம்புவது வழமை. :(

சுமந்திரன் இப்போதே புலம்பத் தொடங்கிவிட்டாரே... :o

  • கருத்துக்கள உறவுகள்

இலங்கையில் அரசியல் செய்த அரசியல்வாதிகள் எல்லோருமே அவரவரது இறுதிக்காலத்தில்தான் தங்கள் செய்த தவறுகளை எண்ணி வருந்திப் புலம்புவது வழமை. :(

சுமந்திரன் இப்போதே புலம்பத் தொடங்கிவிட்டாரே... :o

 

சீ

இந்தப்பழம் புளிக்கும்.... :(

இப்பவாவது சொன்னாரே....

  • கருத்துக்கள உறவுகள்

சுமந்திரனுக்கு..... சுடலை ஞானம் பிறந்து விட்டது.
போர் முடிந்த கையுடன்.... விவேகமாக பணியாற்றியிருந்தால், இந்தப் புலம்பல் தேவை இருந்திராது.
துடிப்புடன் செயல் பட்டவர்களையும் முடக்கி,

சர்வதேசத்துக்கும் தவறான தகவல்களை பரப்பிவிட்டு.... இனி என்ன புலம்பல் வேண்டிக் கிடக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

எல்லாம் சரி இனியென்ன பிளான்???? அதை பக்கெண்டு சொல்லுங்கோ?

  • கருத்துக்கள உறவுகள்

எல்லாம் சரி இனியென்ன பிளான்???? அதை பக்கெண்டு சொல்லுங்கோ?

 

 

வைச்சுக்கிட்டா

வஞ்சகம் செய்கிறாரு...... :(

  • கருத்துக்கள உறவுகள்

இது அரசியலில் ஒரு அங்கம் என நினைக்கிறேன். இலங்கைஅரசுடன் நல்லுறவை, நல்லிணக்கத்தை ஏற்படுத்தி நிலையான ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்பது மேற்கு மற்றும் இந்தியாவின் நிலைப்பாடு. அதற்கு புலிகள் தடையாக இருந்தார்கள் என்பது அவர்களது அரசியல்.

போர் முடிந்து ஐந்து வருடங்கள் ஆகியும் ஏதும் நடந்துவிடவில்லை என்பதை இப்போது அறிவிக்கிறார்கள். இது தமிழ் மக்களுக்கான செய்தி இல்லை என நினைக்கிறேன். :huh::rolleyes:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.