Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய அணுகுமுறையின் அடிப்படைகளில் மாற்றம்தேவை

Featured Replies

த.தே.கூ.வினர் என்னை சந்திக்க முயற்சிக்கவில்லை: தமிழக முதல்வர் கருணாநி

தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலில் முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாரும் என்னை சந்திக்கவும் இல்லை. அதுபற்றி முயற்சிக்கவும் இல்லை.

அந்தத் தரப்பில் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுவதற்கு பெயர்தான் சால்ஜாப். என்னை யாரும் சந்திக்க தொடர்பு கொள்ளவில்லை.

அவர்கள் முயற்சித்தால் சந்திப்பீர்களா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.

இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிறது. இந்த நிலையில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பற கேள்வி கேள்வியாகவே இருக்கிறது. மத்திய அரசிடமிருந்து இதற்கு பதில் இல்லை என்றார் கருணாநிதி.http://www.eelampage.com/?cn=28983

இந்தியாதான் எம்மை அழைத்தது- சந்திப்பு முயற்சிகள் கருணாநிதிக்கு தெரியாமல் போயிருக்கலாம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் விளக்கம்

இந்திய அரசாங்கம்தான் எம்மை அழைத்தது என்றும் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகள் அவருக்குத் தெரியப்படுத்தப்படாமல் இருந்திருக்கலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

எமது "புதினம்" சிறப்பு செய்தியாளருக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை மாலை அளித்த பிரத்தியேக நேர்காணகல்:

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லை. முயற்சித்ததாக கூறுவது சால்ஜாப் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் பலமுறை முயற்சித்தும் கருணாநிதிதான் அனுமதி மறுத்தார் என்று கூறப்படுகிறது. கருணாநிதியை சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? அது பற்றிய விவரங்களை தெரிவிக்க இயலுமா?

பதில்: தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக பேச வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது. அந்த முடிவுக்கு இணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்- முதிர்ச்சி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சி சார்பில் கலைஞர் அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி அதனூடாக நாங்கள் கலைஞரைச் சந்திப்பதற்கான நாளையும் நேரத்தையும் கேட்டிருந்தனர்.

அதற்கு கலைஞரிடமிருந்து மிக நீண்ட நாட்களாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அதன் பின்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயலகத்தினூடாகவும் சந்திப்பதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக நான் அறிகிறேன். அதனூடாகவும் சந்திக்க வாய்ப்புத் தரவில்லை.

உண்மையாக நாங்கள் எண்ணியிருந்தோம்...கலைஞர் அவர்கள் மிகவும் பல்வேறு பணிகளுடன் இருப்பார் என்று கருதினோம். தி.மு.க அரசு அமைக்கப்பட்டு மிக குறுகிய காலம்தான் ஆகிறது. பல்வேறுபட்ட பணிகளைக் கவனிக்க வேண்டிய முதல்வருக்கு எங்களைச் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்குவதில் சிரமம் இருக்கும் என்று எண்ணியிருந்தோம். ஆகவே தனக்கு நேரம் கிடைக்க போது எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குவார் என்றும் எதிர்பார்த்திருந்தோம்.

எம்மைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கோ கலைஞர் அவர்களுடன் எதுவித விரோதமும் இல்லை. கலைஞரைச் சந்தித்து எங்கள் பிரச்சனைகளைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினோம். அதற்கு எங்களால் ஆன முயற்சிகளைச் செய்தோம். அந்த முயற்சிகள் உடனடியாக கைகூடி வரவில்லை. வேலைப் பளு காரணமாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்.

நாங்கள் எடுத்த முயற்சிகள் சில சமயம் கலைஞரின் காதுகளுக்கு எட்டாமல் போயிருக்கலாம். அப்படியான நிலைமை ஏற்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் கவலையடைகிறோம். நாங்கள் இதுவரை சந்திக்க கோரவில்லை என்பதை விடுத்து இதற்குப் பின்பாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து பேசுதவற்கு கலைஞர் முயற்சிப்பாரேயாக இருந்தால் அல்லது சந்திப்பதற்கான நாளை ஒதுக்குவாராக இருந்தால் இலங்கைத் தமிழ் மக்களினது பிரச்சனைகள் தொடர்பாக அவருடன் ஆலோசிப்பதற்கு அது ஆரோக்கியமான சூழலாக இருக்கும்.

http://www.eelampage.com/?cn=28985

:?: :?: :?: :twisted: :twisted:

  • Replies 80
  • Views 9.2k
  • Created
  • Last Reply

ஈழவன் இதில் கலக்கம் அடைய ஒன்றும் இல்லை,அவர்கள் சந்திக்காமல் விட்டா விடட்டும்.அது அவர்கள் விருப்பம்.

நாம் எமது இலக்கில் உறுதியாக இருப்போம்.எமது போராட்ட முன்னணிச் சக்திகளான புலிகள் இருக்கும் வரை நாம் கலங்க வேண்டியது இல்லை.இந்திய அரசு தற்போது ஒரு புதிய கொள்கையை ஏற்படுத்த உள்ளதைப் போல் தெரிகிறதுஅது எவ்வாற இருக்கப் போகிறது என்பதைப் பொறுத்து இருந் தான் பார்க்க வேண்டும்.பழைய அனுபவங்களை அவர்கள் சீர்தூக்கிப்பார்ப்பார்கள் என்பது நிச்சயம்.விட்ட தவறுகளை மீண்டும் விட மாட்டார்கள்.புலிகளையோ தமிழர்களின் போராட்டத்தையோ புறந்தள்ளக் கூடிய கள நிலவரம் இப்போது இலங்கையில் இல்லை.அதனை மத்திய அரசு கவனத்தில் எடுக்கும்.மேலும் எங்களுக்காக அல்லாமல் தனது சுய பாதுகாப்பிற்காகா இந்தியா ஒரு நிலை பாட்டை எடுக்க வேண்டிய கடப்பாட்டில் இருக்கிறது.பாக்கிஸ்தானின் அதிகரித்த தலை ஈடு முக்கிய காரணம்.ஆகவே பொறுதிருப்போம் ,ஆத்திரப்படாமல்.

கருநாநிதி முந்தியும் அப்படி தான் எம் ஜி ஆர் புலிகளை சந்தித்து விட்டார் என்று தெரிந்ததும் தானும் எல்லா போராட்ட குழுக்கலையும் கூப்பிட்டு வீரதிலகம் இட்டவர்

அதே மாதிரி தான் இன்றும் சந்திப்பை தடுத்தும் தானும் சத்திக்காம விட்டவர் இனி என்னா ஆனந்த சங்கரிக்கு இந்தியாவில் குழந்தைகளை அன்புடன் கொஞ்சி விளையாடலாம் :P

வடிவேலுவின் புலம்பல்:

இந்த விடயத்தில் நாங்கள் (ஈழத்தமிழர்கள்) ஏன் இப்படி இருக்கின்றோம் என்று விளங்கவில்லை. ஒரு சாதாரண யாழின பறோட்டாக்கு மீனா வந்து தான் விளம்பரம் பண்ணுமா? ஏன் அதை ஒரு சாதாரண பெண் பண்ணினா நாங்க என்ற பறோட்ட சாப்பிடுறத நிறுத்தவா போறம்? இவ்வளத்திற்கும் மேல மீனா ஒரு நன்றிக்கடனா என்டாலும் எங்களுக்கு ஏதாவது செய்யுறாவா?

ஆயிரத்திலை ஒரு வார்த்தை. ஆனால் வடிவேலு என்று பெயரையும் வடிவேலுவின் படத்தையும் நீரே பாவித்துக் கொண்டே இதை எழுதுவது தான் தமாசுங்க. :P :P

ஊருக்கத் தானே உபதேசமுங்க. செய்யுங்க செய்யுங்க :roll: :roll:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வடிவேலுவின் புலம்பல்:

இந்த விடயத்தில் நாங்கள் (ஈழத்தமிழர்கள்) ஏன் இப்படி இருக்கின்றோம் என்று விளங்கவில்லை. ஒரு சாதாரண யாழின பறோட்டாக்கு மீனா வந்து தான் விளம்பரம் பண்ணுமா? ஏன் அதை ஒரு சாதாரண பெண் பண்ணினா நாங்க என்ற பறோட்ட சாப்பிடுறத நிறுத்தவா போறம்? இவ்வளத்திற்கும் மேல மீனா ஒரு நன்றிக்கடனா என்டாலும் எங்களுக்கு ஏதாவது செய்யுறாவா?

ஆயிரத்திலை ஒரு வார்த்தை. ஆனால் வடிவேலு என்று பெயரையும் வடிவேலுவின் படத்தையும் நீரே பாவித்துக் கொண்டே இதை எழுதுவது தான் தமாசுங்க. :P :P

ஊருக்கத் தானே உபதேசமுங்க. செய்யுங்க செய்யுங்க

size=18]இடையிடையே வந்து றொம்பவும் தமாசு பண்ணுறீகங்ளே குசும்பு. ஆயிரம் வடிவேலுகள்தான் வந்தாலும் உங்கட தமாச மிஞ்சமுடியுமா?

நக்கலே பிழைப்பான் உங்கட வாழ்வே ஒரு தமாசுதானுங்க

வடிவேலுவின் புலம்பல்:

இந்த விடயத்தில் நாங்கள் (ஈழத்தமிழர்கள்) ஏன் இப்படி இருக்கின்றோம் என்று விளங்கவில்லை. ஒரு சாதாரண யாழின பறோட்டாக்கு மீனா வந்து தான் விளம்பரம் பண்ணுமா? ஏன் அதை ஒரு சாதாரண பெண் பண்ணினா நாங்க என்ற பறோட்ட சாப்பிடுறத நிறுத்தவா போறம்? இவ்வளத்திற்கும் மேல மீனா ஒரு நன்றிக்கடனா என்டாலும் எங்களுக்கு ஏதாவது செய்யுறாவா?

ஆயிரத்திலை ஒரு வார்த்தை. ஆனால் வடிவேலு என்று பெயரையும் வடிவேலுவின் படத்தையும் நீரே பாவித்துக் கொண்டே இதை எழுதுவது தான் தமாசுங்க.

ஊருக்கத் தானே உபதேசமுங்க. செய்யுங்க செய்யுங்க

வசம்பு நீர் ஒரு கொசுப்பு உணர்வுபூர்வமாக ஒருவிடயத்தை கதைக்கும் போது உம்முடைய குசும்பை மூட்டை கட்டி வைத்துவிட்டுவாரும்.முடியாவி

இந்தியாதான் எம்மை அழைத்தது- சந்திப்பு முயற்சிகள் கருணாநிதிக்கு தெரியாமல் போயிருக்கலாம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் விளக்கம்

இந்திய அரசாங்கம்தான் எம்மை அழைத்தது என்றும் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகள் அவருக்குத் தெரியப்படுத்தப்படாமல் இருந்திருக்கலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

எமது "புதினம்" சிறப்பு செய்தியாளருக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை மாலை அளித்த பிரத்தியேக நேர்காணகல்:

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லை. முயற்சித்ததாக கூறுவது சால்ஜாப் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் பலமுறை முயற்சித்தும் கருணாநிதிதான் அனுமதி மறுத்தார் என்று கூறப்படுகிறது. கருணாநிதியை சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? அது பற்றிய விவரங்களை தெரிவிக்க இயலுமா?

பதில்: தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக பேச வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது. அந்த முடிவுக்கு இணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்- முதிர்ச்சி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சி சார்பில் கலைஞர் அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி அதனூடாக நாங்கள் கலைஞரைச் சந்திப்பதற்கான நாளையும் நேரத்தையும் கேட்டிருந்தனர்.

அதற்கு கலைஞரிடமிருந்து மிக நீண்ட நாட்களாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அதன் பின்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயலகத்தினூடாகவும் சந்திப்பதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக நான் அறிகிறேன். அதனூடாகவும் சந்திக்க வாய்ப்புத் தரவில்லை.

உண்மையாக நாங்கள் எண்ணியிருந்தோம்...கலைஞர் அவர்கள் மிகவும் பல்வேறு பணிகளுடன் இருப்பார் என்று கருதினோம். தி.மு.க அரசு அமைக்கப்பட்டு மிக குறுகிய காலம்தான் ஆகிறது. பல்வேறுபட்ட பணிகளைக் கவனிக்க வேண்டிய முதல்வருக்கு எங்களைச் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்குவதில் சிரமம் இருக்கும் என்று எண்ணியிருந்தோம். ஆகவே தனக்கு நேரம் கிடைக்க போது எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குவார் என்றும் எதிர்பார்த்திருந்தோம்.

எம்மைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கோ கலைஞர் அவர்களுடன் எதுவித விரோதமும் இல்லை. கலைஞரைச் சந்தித்து எங்கள் பிரச்சனைகளைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினோம். அதற்கு எங்களால் ஆன முயற்சிகளைச் செய்தோம். அந்த முயற்சிகள் உடனடியாக கைகூடி வரவில்லை. வேலைப் பளு காரணமாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்.

நாங்கள் எடுத்த முயற்சிகள் சில சமயம் கலைஞரின் காதுகளுக்கு எட்டாமல் போயிருக்கலாம். அப்படியான நிலைமை ஏற்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் கவலையடைகிறோம். நாங்கள் இதுவரை சந்திக்க கோரவில்லை என்பதை விடுத்து இதற்குப் பின்பாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து பேசுதவற்கு கலைஞர் முயற்சிப்பாரேயாக இருந்தால் அல்லது சந்திப்பதற்கான நாளை ஒதுக்குவாராக இருந்தால் இலங்கைத் தமிழ் மக்களினது பிரச்சனைகள் தொடர்பாக அவருடன் ஆலோசிப்பதற்கு அது ஆரோக்கியமான சூழலாக இருக்கும்.

அட என்னான்னு சொல்வேனுங்கோ

வடுமாங்கா ஊறுதுங்கோ

வடுமாங்கா ஊறட்டுங்கோ

தயிர்சாதம் ரெடி பண்ணுங்கோ

:lol::lol::lol::lol::lol::lol::lol:

என்ன லக்கி

அப்போ கருநாநிதி அவர்கலை வைத்து என்ன பொம்மை அரசை யார் நடதிறாங்க அப்ப அவ்ருக்கு நாட்டில நடக்கிறது இதிலிருந்து அவர் என்ன பொய்யர் எனத்தெரிகிறது அவர்கள் தொடர்பு கொல்லமுடியவில்லையாம் சுரேஸ் பிரேமச்சந்திரன் தொடர்பு கொண்டோம் என்கின்றார்

:oops: :oops:

இலங்கை தமிழ் எம்.பி.க்கள் என்னை சந்திக்கவும் இல்லை. சந்திக்க முயற்சிக்கவும் இல்லை. முயற்சி செய்ததாக சொல்வது சால்ஜாப்பு. இன்றளவும் அவர்கள் என்னை தொடர்புகொள்ள எந்த முயற்சியும் செய்யவில்லை

- டாக்டர் கலைஞர் (செப்டம்பர் 26ம் திகதியிட்ட செய்தித்தாள் பேட்டியில்)

ஒருவேளை இந்தியாவுக்கு இலங்கை தமிழ் எம்.பி.க்களை அழைத்து வந்த இடைத்தரகரின் ஆலோசனைபடி எம்.பி.க்கள் நடக்கிறார்களோ என்னவோ? :lol::lol::lol:

அந்த இடைத்தரகரின் காற்று இலங்கைத் தமிழ் எம்.பி.க்களுக்கு அடித்து விட்டதோ என்னவோ? :lol::lol::lol:

மாற்றி, மாற்றி கும்மி அடிக்கிறார்களே? :lol::lol::lol:

த.தே.கூ.வினர் என்னை சந்திக்க முயற்சிக்கவில்லை: தமிழக முதல்வர் கருணாநிதி

[செவ்வாய்க்கிழமை, 26 செப்ரெம்பர் 2006, 16:59 ஈழம்] [புதினம் நிருபர்]

தமிழகத்தில் உள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர்கள் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லை என்று தமிழக முதல்வர் கருணாநிதி தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று செவ்வாய்க்கிழமை ஊடகவியலாளர்களுக்கு அளித்த நேர்காணலில் முதல்வர் கருணாநிதி கூறியதாவது:

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் யாரும் என்னை சந்திக்கவும் இல்லை. அதுபற்றி முயற்சிக்கவும் இல்லை.

அந்தத் தரப்பில் முயற்சி மேற்கொண்டதாக கூறப்படுவதற்கு பெயர்தான் சால்ஜாப். என்னை யாரும் சந்திக்க தொடர்பு கொள்ளவில்லை.

அவர்கள் முயற்சித்தால் சந்திப்பீர்களா என்பது போன்ற கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது.

இலங்கையில் நாளுக்கு நாள் நிலைமை மோசமாகிறது. இந்த நிலையில் மத்திய அரசு என்ன செய்ய வேண்டும் என்பற கேள்வி கேள்வியாகவே இருக்கிறது. மத்திய அரசிடமிருந்து இதற்கு பதில் இல்லை என்றார் கருணாநிதி.

http://www.eelampage.com/?cn=28983

இந்தியாதான் எம்மை அழைத்தது- சந்திப்பு முயற்சிகள் கருணாநிதிக்கு தெரியாமல் போயிருக்கலாம்: சுரேஸ் பிரேமச்சந்திரன் விளக்கம் [

செவ்வாய்க்கிழமை, 26 செப்ரெம்பர் 2006, 19:07 ஈழம்] [புதினம் நிருபர்]

இந்திய அரசாங்கம்தான் எம்மை அழைத்தது என்றும் தமிழக முதல்வர் கருணாநிதியை சந்திக்க மேற்கொண்ட முயற்சிகள் அவருக்குத் தெரியப்படுத்தப்படாமல் இருந்திருக்கலாம் என்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஸ் பிரேமச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார்.

எமது "புதினம்" சிறப்பு செய்தியாளருக்கு சுரேஸ் பிரேமச்சந்திரன் இன்று செவ்வாய்க்கிழமை மாலை அளித்த பிரத்தியேக நேர்காணகல்:

கேள்வி: தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தன்னைச் சந்திக்க முயற்சிக்கவில்லை. முயற்சித்ததாக கூறுவது சால்ஜாப் என்று தமிழக முதல்வர் கருணாநிதி கூறியுள்ளார். ஆனால் பலமுறை முயற்சித்தும் கருணாநிதிதான் அனுமதி மறுத்தார் என்று கூறப்படுகிறது. கருணாநிதியை சந்திக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? அது பற்றிய விவரங்களை தெரிவிக்க இயலுமா?

பதில்: தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்களைச் சந்தித்து இலங்கைத் தமிழ் மக்கள் பிரச்சனைகள் தொடர்பாக பேச வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முடிவு செய்திருந்தது. அந்த முடிவுக்கு இணங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள்- முதிர்ச்சி பெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழரசுக் கட்சி சார்பில் கலைஞர் அவர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி அதனூடாக நாங்கள் கலைஞரைச் சந்திப்பதற்கான நாளையும் நேரத்தையும் கேட்டிருந்தனர்.

அதற்கு கலைஞரிடமிருந்து மிக நீண்ட நாட்களாக எந்தப் பதிலும் கிடைக்கவில்லை. அதன் பின்பு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமைச் செயலகத்தினூடாகவும் சந்திப்பதற்கான ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டதாக நான் அறிகிறேன். அதனூடாகவும் சந்திக்க வாய்ப்புத் தரவில்லை.

உண்மையாக நாங்கள் எண்ணியிருந்தோம்...கலைஞர் அவர்கள் மிகவும் பல்வேறு பணிகளுடன் இருப்பார் என்று கருதினோம். தி.மு.க அரசு அமைக்கப்பட்டு மிக குறுகிய காலம்தான் ஆகிறது. பல்வேறுபட்ட பணிகளைக் கவனிக்க வேண்டிய முதல்வருக்கு எங்களைச் சந்திப்பதற்கான நேரம் ஒதுக்குவதில் சிரமம் இருக்கும் என்று எண்ணியிருந்தோம். ஆகவே தனக்கு நேரம் கிடைக்க போது எங்களைச் சந்திக்க நேரம் ஒதுக்குவார் என்றும் எதிர்பார்த்திருந்தோம்.

எம்மைப் பொறுத்த வரையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கோ தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்களுக்கோ கலைஞர் அவர்களுடன் எதுவித விரோதமும் இல்லை. கலைஞரைச் சந்தித்து எங்கள் பிரச்சனைகளைச் சொல்ல வேண்டும் என்று விரும்பினோம். அதற்கு எங்களால் ஆன முயற்சிகளைச் செய்தோம். அந்த முயற்சிகள் உடனடியாக கைகூடி வரவில்லை. வேலைப் பளு காரணமாக இருக்கும் என்று நாங்கள் கருதினோம்.

நாங்கள் எடுத்த முயற்சிகள் சில சமயம் கலைஞரின் காதுகளுக்கு எட்டாமல் போயிருக்கலாம். அப்படியான நிலைமை ஏற்பட்டிருந்தால் அதற்காக நாங்கள் கவலையடைகிறோம். நாங்கள் இதுவரை சந்திக்க கோரவில்லை என்பதை விடுத்து இதற்குப் பின்பாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரைச் சந்தித்து பேசுதவற்கு கலைஞர் முயற்சிப்பாரேயாக இருந்தால் அல்லது சந்திப்பதற்கான நாளை ஒதுக்குவாராக இருந்தால் இலங்கைத் தமிழ் மக்களினது பிரச்சனைகள் தொடர்பாக அவருடன் ஆலோசிப்பதற்கு அது ஆரோக்கியமான சூழலாக இருக்கும்.

http://www.eelampage.com/?cn=28985

நாங்கள் எடுத்த முயற்சிகள் சில சமயம்

சில சமயம்

இந்த சில சமயம் என்ற சொல் கலைஞரை ஒரு பொய் சொன்னாவர் என்று தப்பான அர்த்தம் யாரும் சொல்ல கூடாது என்றதுக்காக சொல்லி இருக்கலாம்

ஏன் என்றால் தமிழ்தேசிய கூட்டமைப்பு மீண்டும் கருனாநிதையை சத்திக்கா ஆவலாக இருக்கிறார்கள்

அது தான் உண்மை

கலைஞரைச் சந்திப்பதற்கு வாய்ப்பளிக்குமாறு

மீண்டும் கோருவோம் என்கிறார் சம்பந்தன்

கலைஞர் கருணாநிதியை சந்திப்பதற்கு மீண்டும் நாங்கள் வேண்டுகோள் விடுப்போம். அதில் எந்தத் தயக்கமும் இல்லை. அவரை நாங்கள் அவசரப்படுத்த விரும்பவில்லை.

இவ்வாறு தெரிவித்தார் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்றக் குழுவின் தலைவர் இரா.சம்பந்தன்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் தம்மைச் சந்திக்க முயற்சிக்கவில்லை என்று கலைஞர் கருணாநிதி சென்னையில் நேற்று செய்தியா ளர்களிடம் வெளியிட்டிருந்த கருத்துத் தொடர் பாக இரா.சம்பந்தன் பி.பி.ஸி. தமிழோசைக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:

தமிழக முதல்வரை நாங்கள் இன்னும் சந் திக்கவில்லை. அது உண்மை. ஆனால் அவ ரைச் சந்திப்பதற்கு எமது விருப்பத்தைத் தெரி வித்தோம். அந்தச் சந்திப்பு மீண்டும் இடம் பெறும் என நம்புகின்றேன். ஆனால், அவரை நாங்கள் அவசரப்படுத்த விரும்பவில்லை. அவருடைய பங்களிப்பு நிறையவே உள் ளது. தமிழர் பிரச்சினை தொடர்பாக அவர் புதுடில்லியில் பிரதமரோடு பேசியிருக்கிறார். சட்டசபையில் கண்டனத் தீர்மானம் நிறைவேற்றியுள்ளார்.

எங்கள் பிரச்சினையில் அவர் ஆர்வம் இல் லாமல் இருக்கிறார் என்ற முடிவுக்கு நாங்கள் வரவில்லை.

கலைஞருடனான சந்திப்பு இடம்பெறும் என்ற நம்பிக்கை எமக்குண்டு. அவரிடம் எமது வேண்டுகோள் சமர்ப்பிக்கப்பட்டதாகவே அறிகிறேன். அப்படி வேண்டுகோள் வரவில்லை என்று அவர் கூறினால் மீண்டும் அந்த வேண்டுகோளை விடுப்பதற்கு எந்த வித தயக்கமும் தாமதமும் அவசியம் அல்ல.

தமிழக அரசியல் பற்றி நாங்கள் தீர்மா னிக்க முடியாது. ஆனால் அவர்கள் அனை வரது ஒத்துழைப்பையும் பெற்று எமது கரு மத்தை முன்னெடுப்பதற்கு நாங்கள் சாதுரியமாகச் செயற்படவேண்டும்.

எங்ளுடைய முதல் முயற்சியிலேயே பிரத மரைச் சந்திக்க முடியாமற் போனதையிட்டு நாங்கள் அதிகம் மனவருத்தப்பட வேண்டிய அவசியம் இல்லை. நாங்கள் டில்லியில் உயர் மட்டத்தில் சில முக்கியமானவர்களைச் சந்தித் திருக்கிறோம் என்று தெரிவித்தார் சம்பந் தன். (ஐ12)

http://www.uthayan.com/Pages/news/today/03.htm

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

கருணாநிதியை சந்திப்பதற்கான வேண்டுகோளைமீண்டும் விடுத்து சந்திப்போமென்கிறார் சம்பந்தன்

தமிழக முதலமைச்சர் கருணா நிதியை சந்தித்து பேச நாம் விருப்பம் தெரிவித்து வேண்டுகோள் விடுத்திருந்தோம். ஆனால், நாம் வேண்டுகோள் எதனையும் விடுக்கவில்லையென கருணாநிதி தற்போது கூறியிருப்பதால் அவரை நாம் சந்தித்து பேச வேண்டுமென்ற விருப்பத்தையும் வேண்டுகோளையும் மீண்டும் விடுக்கவுள்ளதாக தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்றக் குழுத் தலைவர் இரா.சம்பந்தன் தெரிவித்தார்.

`பி.பி.ஸி.' செய்தி சேவைக்கு வழங்கிய பேட்டியிலேயே இவ்வாறு தெரிவித்த சம்பந்தன் மேலும் கூறியதாவது;

மக்களால் தெரிவு செய்யப்பட்ட பிரதிநிதிகள் என்ற அடிப்படையில் வட, கிழக்கு மக்களுடைய சார்பில் நாம் இந்தியாவுக்கு கூற வேண்டிய விடயங்களை மிகத் தெளிவாக கூறிவருகிறோம்.

அதேவேளை, இந்தியா எவருடன் பேச வேண்டும், எவருடன் பேசக் கூடாதென்ற விடயத்தில் நாங்கள் கருத்து சொல்வது முடியாத விடயம். பலருடைய கருத்தை இந்தியா அறிய விரும்பலாம். அது இந்தியாவின் முடிவு.

நாம் விடுதலைப் புலிகளுக்கு நெருக்கமானவர்கள் என்பதால் ஓர் அளவுக்கு மேல் இந்திய அரசியல் மட்டத்தில் பேசுவது என்பது அதாவது, பிரதமர் மட்டத்தில் பேசுவது என்பது இந்தியாவுக்கு அரசியல் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் சிக்கல்களை ஏற்படுத்துமென இந்தியா நினைத்திருக்கலாமென சிலர் கூறுவதில் உண்மையல்ல. காரணம் என்னவென்றால், யுத்த நிறுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டு சமாதான பேச்சு ஆரம்பிக்கப்பட்ட பின்னர், நாங்களும் விடுதலைப் புலிகளும் இதனை முன்னெடுப்பதற்காக அரசியல் ரீதியாக ஒருமித்து செயற்படுகின்றோம்.

சர்வதேச சமூகத்தைப் போல் இந்தியாவும் இலங்கை அரசாங்கமும் விடுதலைப் புலிகளுடன் பேசி இனப் பிரச்சினைக்கு ஒரு தீர்வு காண வேண்டுமென வலியுறுத்தி வருகின்றது.

அரசியல் தீர்வைக் காண்பதற்கு விடுதலைப் புலிகளுடன் பேச வேண்டிய அவசியத்தை சர்வதேச சமூகம் முழுமையாக, இந்தியா உட்பட வலியுறுத்தி வருகின்றது. ஆனபடியால் அவ்வாறானதொரு வேறுபட்ட கருத்துக்கு இடமிருக்க முடியாது.

எமது முதல் விஜயத்தின் போது நாங்கள் பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்காததையிட்டு அதிகம் மனவருத்தமடையத் தேவையில்லை. நீண்ட காலத்திற்கு பின்னர், நாங்கள் டில்லிக்கு சென்று, சந்திக்க வேண்டிய மிக முக்கியமான நபர்களை சந்தித்திருக்கின்றோம். அது ஒரு நன்மையான விடயமென நாம் கருதுகின்றோம்.

தமிழக முதல்வர் கருணாநிதியை நாம் சந்திக்கவில்லை. நாம் சந்திப்பதற்கான விருப்பத்தை தெரிவித்திருந்தோம். ஆனால் கருணாநிதி தற்போது நாம் வேண்டுகோள் விடுக்கவில்லையெனக் கூறியிருப்பதால், அந்த வேண்டுகோளை மறுபடியும் செய்வதில் எவ்விதமான தாமதமும் இருக்க வேண்டிய அவசியமில்லை, கஷ்டமுமில்லை.

தமிழ் நாட்டில் அரசியல் கட்சிகளுக்கிடையே பிரச்சினைகள் இருப்பதால் எமது பிரச்சினைகள் சிக்கலாவதாக கூறப்படுகிறது. அரசியல் கட்சிகளிடையே பிரச்சினைகள் இருக்கத் தான் செய்யும். இதனை நாம் தீர்த்து வைக்க முடியாது. ஆனால், நாம் எல்லோருடைய ஒத்துழைப்பையும் பெற்று எமது பிரச்சினைகளை தீர்க்க நாம் சாதூரியமாக செயற்பட வேண்டும் என்றார்.

-தினக்குரல்

தமிழக முதலமைச்சர் கருணா நிதியை சந்தித்து பேச நாம் விருப்பம் தெரிவித்து வேண்டுகோள் விடுத்திருந்தோம்.

யாரிடம் வேண்டுகோள் விடுத்தார்கள்? எப்படி தொடர்பு கொண்டார்கள் என்பதை தமிழ் எம்.பி.க்களால் விளக்க முடியுமா? :lol::lol::lol:

அப்படி விளக்க முடிந்தால் தமிழக அரசு சார்பில் தவறிழைத்தவர்கள் யார் என்று அறிந்துகொள்ள முடியும். எனக்கென்னவோ இலங்கை தமிழ் எம்.பி.க்கள் கலைஞரை சந்திக்க "யாரோ" விரும்பவில்லை எனத் தெரிகிறது.....

ஈழவன் எழுதியது:

வசம்பு நீர் ஒரு கொசுப்பு உணர்வுபூர்வமாக ஒருவிடயத்தை கதைக்கும் போது உம்முடைய குசும்பை மூட்டை கட்டி வைத்துவிட்டுவாரும்.முடியாவி

ஈழவன் எழுதியது:

வசம்பு நீர் ஒரு கொசுப்பு உணர்வுபூர்வமாக ஒருவிடயத்தை கதைக்கும் போது உம்முடைய குசும்பை மூட்டை கட்டி வைத்துவிட்டுவாரும்.முடியாவி

ஈழவன் எழுதியது:

நான் எழுதியதை வாசித்தீரா நான் ஒன்ரும் தப்பாக எழுதவில்லையே அவர் கூட்டமைப்பு பாராலமன்றத்தவரை புறக்கணித்தார் என்ற ஆதங்கத்தில் எழுதினேன் அன்றி உம்மை போல தப்பான கண்ணோட்டத்தில் பார்த்து எழுதவில்லை என்பதை மனதில் வைத்துக்கொல்ளும்

மொட்டைத்தலைக்கும் முழந்தாளுக்கும் முடிச்சுப் போடுவது போல் சம்பந்தமில்லாமல் அவ்விடயத்தை அதில் காட்டிய விதமே உமது கபட எண்ணத்தைப் புரிய வைக்கின்றது.

உம்மைத்தவிர வேறு ஒருவரும் அதை தவறான கண்ணோட்டத்தில் பார்க்கவில்லை :evil: :evil:

அவரு வாய்விட்டு சொல்லிட்டாரு. மத்தவங்க சொல்லல.... அவ்வளவுதான் வித்தியாசம்.... :lol::lol::lol:

ஈழவன்... உங்கள் கருத்துகளில் இனியாவது கொஞ்சம் முதிர்ச்சியை எதிர்பார்க்கிறேன்.

எந்த ஒரு விவகாரத்திலும் "அவசரப்படுதல்" என்பது வேலைக்கு உதவாது.

கண்ணால் காண்பதும் பொய்

காதால் கேட்பதும் பொய்

தீர விசாரிப்பதே மெய்

கலைஞருக்கு அவப்பேயரை கொண்டுவந்த விடயம்.. கலைஞர் தீர விசாரித்து அறிவார் என்பதில் சந்தேகம் இல்லை....!

கட்ச்சிக்குள் இல்லாமல் வெளியில் இருக்கும் சிலர்கூட கலைஞரை சந்திப்பதை தடுத்து அவப்பேர் வாங்கிக்கொடுக்கும் நடவடிக்கையில் இறங்கி இருக்கலாம்...!

ஈழதமிழருக்கு எதிராய் அடாவடியாய் நடக்கும் இலங்கை காவலர்களுக்கு எதிராய் சட்டசபையில் தீர்மானம் போட்ட கலைஞர், ஈழமக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களை சந்திக்காமல் விட காரணங்கள் மிகக்குறைவு...!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஒரு விடுதலைப்போராளியின் இயக்கப்பெயர்: சந்திரிகா!!! விசாரித்து பார்க்கவும்!

இதை எதற்கு சொல்கிறனே; என்றால் நாம் என்ன செய்கின்றோம் என்பது தான் முக்கியம். அதை எந்தப் பெயரில் செய்கின்றோம் என்னபதல்ல.

வடிவேலு ஒரு சிறந்த நகைச்சுவை நடிகர்! ஒரு நடிகன் என்ற முறையில் அவரை எனக்கு பிடிக்கும். ஒரு மனிதன் என்ற முறையில் அல்ல.நான் மீனாவையோ அல்லது தமிழர்களின் பொருட்களுக்கு விளம்பரம் செய்யும் நடிக நடிகர்களையோ குறை சொல்லவில்லையே. அது அவர்களின் தொழில். நான் எம்மவர்களை தான் குறை சொன்னேன்.

மற்றும் நான் வடிவேல் என்று பெயர் வைத்தால் அது இந்திய நடிகர் என்று நீங்கள் நினைத்ததுக்கு நான் இங்கே போட்டிருக்கும் போட்டோ ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் எனது தாத்தாவின் பெயர் வடிவேல். இது தான் முக்கிய காரணம் நான் இந்த பெயரை தெரிவு செய்வதற்கு.

எதிர்வரும் காலங்களில் இப்படியான முட்டள்களிற்கு நான் பதில் எழுத மாட்டேன் என்பதை இத் தருணத்தில் தெரிவித்துக்கொள்கிறேன்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

லஞ்சம் கொடுத்திருந்தால் இலகுவாக சந்தித்திருக்கலாம் போல் உள்ளதே! என்ன நான் சொல்லுறது? :lol:

அதுதான் ஏற்கனவே சில பேருக்கு படியளந்துக் கொண்டிருக்கிறீர்களே? அதை வெச்சிதானே அவங்க கட்சியையும், பொழைப்பையும் ஓட்டுறாங்க? :lol::lol::lol:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அதுதான் ஏற்கனவே சில பேருக்கு படியளந்துக் கொண்டிருக்கிறீர்களே? அதை வெச்சிதானே அவங்க கட்சியையும், பொழைப்பையும் ஓட்டுறாங்க? :lol::lol::lol:

அவங்க யாரென்றும் சொல்லிவிடுமன். இப்படி குத்திக்காட்டுவதை விட நேராக பேசா தெரியாதவர்களா நீங்கள்?

எங்கட நாட்டில கடமையை மீறதுக்க தான் லஞ்சம். ஆனா உங்க கடமைய செய்யவே லஞ்சம்! :lol:

அதுதான் ஏற்கனவே சில பேருக்கு படியளந்துக் கொண்டிருக்கிறீர்களே? அதை வெச்சிதானே அவங்க கட்சியையும், பொழைப்பையும் ஓட்டுறாங்க? :lol::lol::lol:

இனி சந்திப்பதற்கு திகதி கேட்டால் சந்திப்பீர்களா? என பிபிசி கேட்டதுக்கு இதுமாதிரியான கேள்விகளுக்கு பதில் கூறமுடியாது என்றால், என்ன அர்த்தம். சந்திக்க விரும்புவர்களை சந்திக்கமுடியுமா? முடியாதா? என்று சொல்லமுடியாத அளவுக்கு உலகத்தமிழ்தலைவருக்கு அதிகாரம் இல்லையா என்ன ஒரு கேனத்தனமான பதில். இதற்கு பேர்தா சால்ஜாப்பு. :P :P :P

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

பிருந்தன், தூங்கிறவங்களை எழுப்பலாம்! ஆனா தான் எழும்ப மாட்டன் என்டு தூங்காம நடிக்கிறவனை எழுப்ப முடியாதே.

அவங்க யாரென்றும் சொல்லிவிடுமன்.

கூலி கொடுப்பவர்களுக்கு தெரியாதா யாருக்கு கொடுக்கிறோம் என்று. ஆனால் கூலிக்கு சற்று அதிகமாகவே ஒருத்தர் இங்கே மாரடித்து வருகிறார்.... :lol::lol::lol:

எங்கட நாட்டில கடமையை மீறதுக்க தான் லஞ்சம். ஆனா உங்க கடமைய செய்யவே லஞ்சம்! :lol:

உங்கட நாடு, எங்கட நாடு, அவங்கட நாடு எல்லா நாட்டுலேயும் லஞ்சம் ஒரே மாதிரி தான்..... :lol::lol::lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.