Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

மூன்று ஆலயங்களில் ஒரே நேரத்தில் திருட்டு; சுதுமலையில் சம்பவம்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
e58d319205a9e20020a69754dfb501ec.jpg

சுதுமலை முருகமூர்த்தி ஆலயம், சிவன் கோயில்களில் , பிட்டி வைரவர் ஆலயம் ஆகியன உடைக்கப்பட்டு பெறுமதியாக பொருட்கள் களவாடப்பட்டுள்ளதாக ஆலய நிர்வாகத்தினால் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த திருட்டுச் சம்பவம் தொடர்பில் ஆலய பூசகர் தெரிவிக்கையில்,

முருக மூர்த்தி ஆலயம் மற்றும் அயலில் உள்ள சிவன் ஆலயம் ஆகியன நேற்று மாலை 6 மணி பூஜை முடிந்தவுடன் பூட்டி விட்டு சென்று விட்டோம்.

இன்று காலை 5 மணிக்கு ஆலயத்திற்கு வந்த அடியார்கள் கோயில் உடைத்திருக்கும்  தகவலை எம்மிடம் தெரிவித்தனர். உடனடியாக நாங்கள்  வந்து பார்த்த போது மூலஸ்தான கதவுகளை உடைத்துக் கொண்டு உள்சென்றிருக்கிறார்கள் .

முருகமூர்த்தி ஆலயத்தில் மூலஸ்த்தான சாமியில் உள்ள மருந்துகள் எல்லாம் உடைக்கப்பட்டு சாமியை தூக்குவதற்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டிருந்தது . ஆனால் சாமி களவாடப்படவில்லை. எனினும் கோயிலுக்குரிய நகைகள் கிரீடம் , முடி என ஒரு இலட்சம் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.

மேலும் சிவன் கோயிலில் உள்ள அம்மனின் 4 பவுண் தாலி களவாடப்பட்டுள்ளது. அதுபோல முன்னுக்கு உள்ள பிட்டி வைரவர் கோயிலில் சாமியை உடைத்து அதற்குள் இருக்கும் இயந்திர தகடு களவாடப்பட்டுள்ளது.

இந்த களவு இரவு 12.30 மணிக்கு பின்னர் தான் நடைபெற்றுள்ளது . ஏனெனில் 11 மணி வரை நிகழ்வு ஒன்று ஆலயத்தில் இடம்பெற்றது. இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

மேலும் மானிப்பாய் பொலிஸார் தற்போது விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் மேப்ப நாய்கள் மூலமும் தேடுதல் நடாத்தியுள்ளனர்.

2%28104%29.jpg

- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=222443352220684466#sthash.xCtpZVpM.dpuf

Edited by nunavilan

  • கருத்துக்கள உறவுகள்

-----

முருகமூர்த்தி ஆலயத்தில் மூலஸ்த்தான சாமியில் உள்ள மருந்துகள் எல்லாம் உடைக்கப்பட்டு சாமியை தூக்குவதற்கான முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டிருந்தது . ஆனால் சாமி களவாடப்படவில்லை. எனினும் கோயிலுக்குரிய நகைகள் கிரீடம் , முடி என ஒரு இலட்சம் பெறுமதியான பொருட்கள் களவாடப்பட்டுள்ளன.

நகைகள் திருடினதை புரியக் கூடியதாக உள்ளது.

ஆனால்.... சாமியை ஏன் திருட முயற்சித்தார்கள்?

சிலவேளை... திருடர், வீட்டில் வைத்து கும்பிட யோசித்தார்களோ.....

  • கருத்துக்கள உறவுகள்

எதற்கும் கோயில்  ஐயர்மாரின் வீட்டில் முதல் சோதனை செய்ய வேண்டும் :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

நகைகள் திருடினதை புரியக் கூடியதாக உள்ளது.

ஆனால்.... சாமியை ஏன் திருட முயற்சித்தார்கள்?

சிலவேளை... திருடர், வீட்டில் வைத்து கும்பிட யோசித்தார்களோ.....

வேறு  சாமி  வரப்போகுது  என்று அர்த்தம்

அப்போ

திருடர் எவரென்று புரிந்திருக்குமே....

  • கருத்துக்கள உறவுகள்

வேறு  சாமி  வரப்போகுது  என்று அர்த்தம்

அப்போ

திருடர் எவரென்று புரிந்திருக்குமே....

விசுகு, பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றேன், உண்மையோ... பொய்யோ.... தெரியாது.

அதாவது..... திருடின விக்கிரகத்தை கொண்டு... புதிய கோவில் அமைத்தால்.... அந்தக் கோவில் ஆகா... ஓகோ... என்று வருமானம் அள்ளிக் கொட்டுமாம்.    :D

அப்படியா?

ஆரம்பிக்கத்தான் இருக்கு.... :D

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

விசுகு, பலர் சொல்லக் கேள்விப் பட்டிருக்கின்றேன், உண்மையோ... பொய்யோ.... தெரியாது.

அதாவது..... திருடின விக்கிரகத்தை கொண்டு... புதிய கோவில் அமைத்தால்.... அந்தக் கோவில் ஆகா... ஓகோ... என்று வருமானம் அள்ளிக் கொட்டுமாம்.    :D

வெளிநாடுகளிலையும் புதுப்புது கோயில்கள் முளைக்குது....ஒருவேளை அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் ஏதும் இருக்குமோ?? :unsure:

  • கருத்துக்கள உறவுகள்

வெளிநாடுகளிலையும் புதுப்புது கோயில்கள் முளைக்குது....ஒருவேளை அதுக்கும் இதுக்கும் சம்பந்தம் ஏதும் இருக்குமோ?? :unsure:

இவ்வளவு "ரிஸ்க்" எடுத்து அங்கிருந்து விக்கிரகங்களை கொண்டு வருவார்கள் என்று நினைக்கவில்லை.

இங்குள்ள கோவில்களுக்கு விக்கிரகங்களை தமிழ் நாட்டில் இருந்து தான் இறக்குமதி செய்கின்றவர்கள்.

ஒரு மீற்றர் உயரமுள்ள கருங்கல்லு விக்கிரகம், பொதி செலவுடன் 1000 € அளவில் வரும்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வைரவர் கோயில் இயந்திர தகட்டை வைச்சு என்னையா செய்யப்போறாங்கள்?  :D

  • கருத்துக்கள உறவுகள்

வைரவர் கோயில் இயந்திர தகட்டை வைச்சு என்னையா செய்யப்போறாங்கள்?  :D

செய்வினை, சூனியம் செய்ய பிரயோசனப் படும், அண்ணே..... :lol:  :icon_idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.