Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இனப்பிரச்சினை தீர்வு குறித்து பேச சிறப்பு பிரதிநிதி ஒருவரை மோடி கொழும்புக்கு அனுப்பவுள்ளதாக தகவல்?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
இனப்பிரச்சினை தீர்வு குறித்து பேச சிறப்பு பிரதிநிதி ஒருவரை மோடி கொழும்புக்கு அனுப்பவுள்ளதாக தகவல்?
26 ஆகஸ்ட் 2014
 
india_CI.png

இனப்பிரச்சினை தீர்வு குறித்த விடயங்களை கையாள இந்திய பிரதமர் நரேந்திரமோடி சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்கவுள்ளதாக குளோபல் தமிழ்ச் செய்திகளிற்கு கிடைக்கும் உறுதிப்படுத்தப்படாத புதுடில்லித் தகவல்கள் கூறுகின்றன. தமிழ்த்தேசிய கூட்டமைப்புடனான சந்திப்பின் பின்னர் இதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றும் அந்த தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்தியப் பிரதமர் சார்பில் நியமிக்கப்படவுள்ள பிரதிநிதி விரைவில் கொழும்ப்புக்கு செல்வார் என்றும் 1987ஆம் ஆண்டு யூலை மாதம் 29 ஆம் திகதி செய்யப்பட்ட இலங்கை இந்திய உடன்படிக்கை மற்றும் அந்த உடன்படிக்கை மூலமான 13 ஆவது திருத்தச்சட்டம் ஆகியவற்றை முழுமையாக நடைமுறைப்படுத்தும் விடயத்தில் அந்த பிரதிநிதி ஈடுபடுவார் எனவும் கூறப்படுகின்றது.

அதேவேளை இனப்பிரச்சினை விடயத்தை கையாள இந்திய மத்திய அரசு சிறப்பு பிரதிநிதி ஒருவரை நியமிக்கும் வாய்ப்புள்ளதாக சந்திப்பில் கலந்துகொண்ட கூட்டமைப்பு உறுப்பினர் ஒருவர் கூறியதாக குளோபல் தமிழ்ச் செய்திகளின் கொழும்புச் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை இந்திய பிரதமர் நரேந்திரமோடியுடன் பேசபபட்ட விடயங்கள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் கட்சி அங்கத்தவர்களுக்கு விளக்கமளிக்கப்படவுள்ளது.

இரா. சம்பந்தன் விளக்கமளிப்பார் எனவும் இந்த சந்திப்பின்போது கூட்டமைப்பின் சார்பில் இனப்பிரச்சினை விடயங்களை இந்திய மத்திய அரசுடன் கையாள்வதற்கு ஏற்ற முறையில் சிறப்பு குழு ஒன்று தெரிவு செய்யப்படும் என்றும் கூட்டமைப்பு தகவல்கள் குறிப்பிட்டன.

http://www.globaltamilnews.net/GTMNEditorial/tabid/71/articleType/ArticleView/articleId/110960/language/ta-IN/article.aspx

இவர் எத்தனையாவது பிரதிநிதி. இன்னும் எத்தனை பிரதிநிதிகள் வர உள்ளார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பார்தசாரதி இலங்கைக்கான விசேட தூதுவராயிருந்தபோது எமக்கான பேரம் பேசும் வலு டெல்கியில் உச்சத்திலிருந்ததாய் சொல்வர். மீளவும் அப்படியொரு நிலைமையை கட்டி எழுப்புவது கூட்டமைப்பினதும் சிவி யினதும் முக்கிய கடைமை.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஐம்பது வருடங்களாக இந்திய பிரதிநிதிகளும் இந்திய தூதுவர்களும் ஈழத்தமிழர் பிரச்சனைகளுக்காக வந்து போய் விட்டார்கள்.ஈழத்தமிழனுக்கு இதன் பலன் சுடலைகளும் சுடுகாடுகளும் தான்......

ஐம்பது வருடங்களாக இந்திய பிரதிநிதிகளும் இந்திய தூதுவர்களும் ஈழத்தமிழர் பிரச்சனைகளுக்காக வந்து போய் விட்டார்கள்.ஈழத்தமிழனுக்கு இதன் பலன் சுடலைகளும் சுடுகாடுகளும் தான்......

சுடலைகளும் சுடுகாடுகளும் பலனாக கிடைக்க அவங்க மட்டுமா காரணம்? எங்கட ஏக பிரதிநிதிகளின்ட விவேகமற்ற தொலைநோக்கற்ற செயற்பாடுகள் காரணமில்லையா?  :huh:

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

சுடலைகளும் சுடுகாடுகளும் பலனாக கிடைக்க அவங்க மட்டுமா காரணம்? எங்கட ஏக பிரதிநிதிகளின்ட விவேகமற்ற தொலைநோக்கற்ற செயற்பாடுகள் காரணமில்லையா?  :huh:

13வதும் கூடிப்போச்சுதோ? :D

  • கருத்துக்கள உறவுகள்

சுடலைகளும் சுடுகாடுகளும் பலனாக கிடைக்க அவங்க மட்டுமா காரணம்? எங்கட ஏக பிரதிநிதிகளின்ட விவேகமற்ற தொலைநோக்கற்ற செயற்பாடுகள் காரணமில்லையா?  :huh:

உங்கட பிரதிநிதிகள் யார் என்று எழுதினால் .......
காரணங்கள் பற்றி பின்பு பார்க்கலாம். 
  • கருத்துக்கள உறவுகள்

சுடலைகளும் சுடுகாடுகளும் பலனாக கிடைக்க அவங்க மட்டுமா காரணம்? எங்கட ஏக பிரதிநிதிகளின்ட விவேகமற்ற தொலைநோக்கற்ற செயற்பாடுகள் காரணமில்லையா?  :huh:

அவ  ஒரு இயக்கம் மட்டுமே

4 பேர் தான் ஆட்கணக்கும்

மக்கள் செல்வாக்குமில்லை

உங்களுக்கு

பல இயக்கங்களும் இருந்து

பல லட்சம் மக்களின் ஆதரவும் இருந்து

பல நாடுகளின் ஆதரவும் இருந்து

முக்கியமாக இந்தியா உங்கட கைக்குள்ள இருந்தும்...

ஏன் அவர்களின் சொல்லுக்கேட்டனீர்கள்.....? :(  :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.