Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இந்திய துணைதூதர் அவமதிப்பு! சீற்றத்தில் தூதரக அதிகாரிகள்!!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

இந்திய துணைதூதர் அவமதிப்பு! சீற்றத்தில் தூதரக அதிகாரிகள்!!

 

யாழ்ப்பாணம், கிளிநொச்சி ஆகிய இடங்களில் இன்று நடைபெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்ளவென ஜனாதிபதியின் சகோதரரும் இலங்கையின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பஸில் ராஜபக்ஸ வருகை தந்த நிகழ்வில் இந்திய துணைதூதர் அவமதிக்கப்பட்டமை தூதரக அதிகாரிகளிடையே கடும் சீற்றத்தை தோற்றுவித்துள்ளது. முதலில் யாழ்.வரும் பஸில் யாழ். துரையப்பா விளையாட்டு அரங்கை புனரமைக்க அடிக்கல் நடுகின்றார். இதற்கான நிதியினை இந்திய அரசே வழங்கியுள்ளது.

அத்துடன் இந்திய அரசின் நிதியின் பங்களிப்புடன் மீள் நிர்மாணம் செய்யப்பட்ட அச்சுவேலி கைத்தொழில் பேட்டையை இன்று புதன்கிழமை முற்பகல் 11.30 மணியளவில்; டக்ளஸ் தேவானந்தாவுடன் இணைந்து பஸில் திறந்துவைக்கவுள்ளார். அதை தொடர்ந்து பிற்பகல் 2 மணியளவில் பூநகரி ஆதார வைத்தியசாலையும் அவர் திறந்து வைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையினில் யாழ்.துரையப்பா விளையாட்டரங்கிற்கு உலங்கு வானூர்தி மூலம் வருகை தரவிருந்த பஸிலை வரவேற்க சென்றிருந்த இந்திய துணைதூதர் மூர்த்தி வருகை தந்திருந்த நிலையில் அவர் நுழைவாயிலில் வழிமறிக்கப்பட்டு சோதனைக்குள்ளாக்கப்பட்டிருந்தார். சாதாரண பொதுமக்களை போன்று தாமதிக்க வைக்கப்பட்டே அவர் உட்செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார். தூதரக அதிகாரிகள் இதனால் கடும் சீற்றமடைந்திருந்தனர். எனினும் அவரது சாரதி எந்தவித சோதனையுமின்றி உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்திய அரசினது நிதி உதவியின் கீழாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்ட நடவடிக்கைகளினில் இலங்கைக்கான பிரதிநிதியாக செயற்படும் மூர்த்தி அவமதிக்கப்பட்டமையே அதிகாரிகளிடையெ சீற்றத்தினை தோற்றுவித்துள்ளது.

-பதிவு-

  • கருத்துக்கள உறவுகள்

நாராயணனையே நடுவீதியில் நடக்க வைத்தவர்கள்
மூர்த்தி என்றால் என்ன கொம்பா வைத்திருக்கின்றார். :D

  • கருத்துக்கள உறவுகள்

ஏதோ இவ்வளவு நாளும் மரியாதை கொடுத்த மாதிரி. எப்ப ராஜீவை துப்பாக்கி பிடியால அடிச்சாங்களோ.. அப்ப இருந்து அவங்கள் இவையை மதிக்கிறதில்ல. இவையா தான் அவங்கட இறையாண்மையில்.. எங்கட இறையாண்மை என்று பிசத்திக் கொண்டு திரியினம். இவைட வீக் பாயிண்ட் சிங்களவனுக்கு நல்லாத் தெரியுமே. ஒருக்கா பாகிஸ்தானுக்கும் சீனாக்கும் பறந்திட்டாலே.. ஹிந்திய அசோகச்சக்கரம் தானே பம்மிக்கும்..! :lol::D

Edited by nedukkalapoovan

  • கருத்துக்கள உறவுகள்

.

இந்திய அரசினது நிதி உதவியின் கீழாக முன்னெடுக்கப்படும் அபிவிருத்தி திட்ட நடவடிக்கைகளினில் இலங்கைக்கான பிரதிநிதியாக செயற்படும் மூர்த்தி அவமதிக்கப்பட்டமையே அதிகாரிகளிடையெ சீற்றத்தினை தோற்றுவித்துள்ளது.

-பதிவு-

 

உங்கன்ட பிரதமரை துப்பாக்கிபிடியால் அடிச்ச பொழுது வராத சீற்றம் இனி வந்தென்ன வராட்டித்தான் என்ன?

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.