Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழின் நவராத்திரி கொண்டாட்டம் - பகுதி I + II

Featured Replies

நவராத்திரி கொண்டாட்டம்

அது ஒரு கனாக்காலம்

யாழ்.கொம்..... 2 வருடங்களுக்கு முன்னர்.... "அது ஒரு கனாக்காலம்"...

முன்னர் அதிகம் கருத்து எழுதியவர்கள் சிலரை இப்பொழுது காணவே கிடைப்பதில்லை...

புதிதாக பலர்...எம்மில் பலருக்கு இன்னும் அறிமுகம் இல்லாமலே..

பல மாதங்களுக்கு முன்னர் டக்கு மாமாவின் பொங்கலில் பார்த்தது...அதன் பின்னர் பெரிய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய்ய இடைவெளி நம்ம்மிடையே...

இந்த நவராத்திரி இணைக்கும் பாலமாக இருக்கட்டுமே!

ஆயத்தம்

உடனே மோகன் அண்ணாவை தொடர்பு கொண்டேன்:

பொங்கலில் கிடைத்தை அனுபவமோ, இல்லை களத்தில் நாம் குடுக்கும் (அன்பு) தொல்லையோ... நவராத்திரி கொண்டாட்டத்தை பற்றி சொன்னதுமே, பக்கத்து நாட்டுக்கு ஓடிட்டார்..

நான் விடுவனோ? அடுத்த விமானத்தை பிடிச்சு பின்னாலயே போய் ஆள பிடிச்சா....

என்னத்த சொல்ல? அன்பா சொன்னார், மிரட்டி பார்த்தார், வெருட்டி பார்த்தார், கெஞ்சி பார்த்தார்...எனக்கு தான் சொல்லு கேட்கிற பழக்கமே இல்லையே...

"சரி எனக்கு கொலை மிரட்டல் வராத அளவுக்கு ஏதாவது செய்யுங்க" எப்படி சொல்லிட்டார்...

செமி வில்லன்

அப்படியே சந்தோசத்தில போனை என்ட அன்பு சகோதரனுக்கு போட்டன்...(தலையில தான்)... வேற யார் எங்கட பிரகாஸ்ராஜ் தான்...

பெடி பயங்கர கடுப்பில இருக்குது என்ன? விசாரித்து பார்த்ததில் அப்ப தான் அம்மாட அர்ச்சனை முடிந்திருக்குதாம்.. (நான் வாங்காத அர்ச்சனையா? )

"கடுப்ப விடுங்க, விடுப்ப கேளுங்க" என்று தூயவனுக்கு நவராத்திரி கொண்டாட்டத்தை பற்றி சொல்லி முடிக்கக்கிடயில விடிந்து போட்டுது..

சனம் இருக்கிற நிலையில உமக்கு என்ன கொண்டாட்டம் தேவை என்று செமி வில்லன் வேற என் மனதை மாற்ற பார்க்க (மோகன் அண்ணா தான் காரணம்....போனில சொல்லி இருப்பார் போல)

"முடியவே முடியாது....இப்ப எல்லாரையும் பார்க்காட்டி, சனத்துக்கு ஒருத்தரை ஒருதர் மறந்தே போய்விடுங்கள் " என்று சொல்லி..ஒரு மாதிரி சரி என்று சொல்ல வைக்க ஒரு யாகமெ செய்தாக வேண்டி இருந்தது..

ஆயுத பூசை

எப்ப செய்யலாம் என்பதில் ஒரு பெரிய பிரச்சனை ?

"சரஸ்வதி பூசையை விட்டுட்டு வா என்றால் சனம் அடிக்க வரும்" என மோகன் அண்ண சொன்னார்..

"யார் அது? அப்படி துணிவு" என இராவணன் அண்ணா சொன்னாலும்...

சரி "ஆயுத பூசை" அன்று கொண்டாட்டம் என முடிவு செய்தாயிற்று.

அழைப்பிதழ்

அடுத்து என்ன செய்ய வேண்டும்... "அழைப்பிதழ் " தானே..

பின்ன என்ன யாரொ ஒரு புண்ணியவான் யாழில " அழையாதோர் வாசல் மிதியாதே" என சொல்லி சனத்தை உசுப்பேற்றி விட்டுட்டார்..

சரி வசியண்ணா தான் "கிராபிக் கிங்" ஆயிற்றே...உடனே வசியண்ணாவை தொடர்பு கொண்டால்.. வசியண்ணா வேலையில் படு மும்மரம்..

இருந்தாலும் நான் வேற வசியண்ணா என்று அன்பா (நிஜமாங்க) கூப்பிட்டதால்... சரி அழைப்பிதல் வடிவமைத்து தருகிறேன் என்றார்..

ஆனால் ஒரு பிரச்சனை "எனக்கு யாராவது எழுதி தர வேண்டும் " என்றார்...

தமிழ் மகன்

உடனே நினைவுக்கு வந்தது "கந்தப்பு".....தொடர்பில் ஆச்சி தான்... விசயத்தை சொன்னவுடன் ஆளுக்கு படு சந்தோசம்..

"இங்சருங்கோ போனில தூயா" என்றபடி போன் கை மாற..கந்தப்பு, வழமைபோல் படு பவ்வியமாக " நான் மட்டுமா தமிழை காதலிக்கின்றேன்..யாழில் அனைவரும் தேசியம் மீதும், தமிழ் மீதும் பற்றுள்ளவர்கள் தான் என சொல்ல...

"இப்ப அதை விடுங்கோ..வசியண்ணாக்கு எழுத உதவி செய்யுங்க , இல்லாட்டி உடாங் சம்பல் தான்" என்றதும் ஆள் கணணி முன்..

ஆயுதம் - 10க்கு மட்டும்

அப்ப பார்த்து அண்ணாச்சியிடம் (இராவணன்) இருந்து ஒரு போன்... முக்கியமாக அழைப்பிதழில் சேர்க்க வேண்டிய செய்தி..

"ஆயுத பூசை என்பதற்காக உங்கள் ஆயுதங்களுடன் வர வேண்டாம்.இரவணன் மட்டும் ஆயுதத்துடன் வருவார்."

அழைப்பிதழ் ஆயுத்தம்...

பொறாமை பிடித்த தூயா பபா

இனிமேல் திரும்ப தூயவனை பிடிக்க வேண்டும்... பின்ன நான் மட்டும் வேலை செய்ய...ஆள் மட்டும் நித்திரை கொள்வதா...

யாருக்கு அழைப்பு?

எல்லாருக்கும் சொன்னால் தான் பம்மபலா இருக்கும்..இது நான்..

ஆனால் தூயவனுக்கு வேற கவலை..வேறு வேறு நேரத்தில் இருந்து யாழுக்கு வரும் போதே நாங்கள் செய்யும் அட்டூளியத்திற்கு ஒரு அளவே இல்லை...இதில ஒரு இடத்தில எல்லாரையும் கூப்பிடும் போது..

கவலையும் நிஜாயமாக தான் பட்டது..'

ஆனால் அண்ணாச்சி "நான் பார்த்துக்கொள்கிறேன்" என்று சொன்னதால்..அடுத்து இடம் நேரம் பார்த்தாக வேண்டிய நிலை..

இடம் பார்க்க போகலாமா?

யூனி அது இது என்று சுற்றும் "உலக நாயகன்" தான் சரி என நினைத்து புத்தனை தொலை பேசியில் பிடித்தால்...... காவி யீனில சில இளசுகளோட...

சத்தம் காதை கிளிக்கிறத பார்க்க அங்க தான் ஜமுனாவும் இருக்கிறாப்போல..

விடயத்தை கூற காவிக்கு படு சந்தோசம்... "உடனே வாறேன்" என கூறி தொடர்பை துண்டிக்கவும்...திரும்ப போன் அலறுகிண்றது..

இணைப்பில் பிரகாஸ்ராஜ் "எதுக்கும் சாத்திரியிடம் ஒரு வார்த்தை கேட்கலாம், பிறகு பில்லி சூனியம் வச்சிட்டா, தூயா உங்களுக்கு இருப்பதே ஒரு செமி.வில்லன் சகோதரன் தான்"

சென்டிமென்ட் டச்...சரி என்று அப்படியே சாத்திரிக்கு போனை போட்டால் சாத்திரி நாடு நாடா சுத்துறார்..

சாத்திரம் பார்க்க என்று தப்ப நினைக்க வேண்டாம்... ஏற்கனவே சாத்திரம் பார்த்த சனத்திட்ட இருந்து தப்பிக்க தான்..

"அப்படியே இங்கு வந்திடுங்க...வேலை இருக்கு" என நாங்கள் சொல்ல, "உயிருக்கு உத்தரவாதம் வேண்டும்" என சாத்திரி புலம்ப (என்னை விட நல்லா புலம்புறார் என்றால் பாருங்கோவன்)

"பயம் வேண்டாம் இன்றே அண்ணாச்சி வருகின்றார்" என கூற சாத்திரி அடுத்த விமானத்தில் இங்கே (விமானம் சின்னப்புவோடது தான்...அது தான் அத்தனை வேகம்)

சரி நீங்களும் புத்தனோட போய் ஒரு இடம் பார்த்து வாங்கோ என கூற..

தலை சுற்றியபடி நான்

அடுத்த அரை மணித்தியாலத்தில் இடம் சொன்னார்கள்..

"ஓபரா கவுஸ்"

எனக்கு தலை சுத்தி விழாத குறை தான்.... பின்ன என்ன யேசுதாஸின்ட நிகழ்ச்சிக்கே கிட்டத்தட்ட 8 மாதங்களுக்கு முன்னர் புக் செய்தார்கள்...

பிறகு தான் யோசிச்சு பார்த்தன் சுண்டல் தான் இதில ஆள் பயங்கர கில்லாடி...

பெடிக்கு அப்படி ஒரு மரியாதை என்ன... நேற்று வேற யேசுதாஸ் நிகழ்ச்சி பார்க்க போய் ஒரு இமேஜ் உருவாக்கிட்டு தான் வந்திருப்பான்..

சுண்டலை போனில் பிடித்தால்... ஆளுக்கு கொஞ்சம் இது தான்.... பெரிய்ய ஆள் என்று நினைப்பு...

"கோவிலுக்கு வரும் போது ஆள வச்சு அடிப்பன்" என்று சொல்லித்தான்... ஒரு மாதிரி இடத்தையும் பிடித்தாயிற்று...

அழைப்பு - அனுப்பு

ஒருவருக்கு எத்தனை பாவனை பெயர்கள்....இதில என்ன பகிடி என்றால் ஒருவருக்கே 5, 6 அழைப்பிதழ்கள்..பின்ன இத்தனை பாவனை பெயரில் வந்தால்..எனக்களுக்கு எப்படி தெரியும்..

ஒரு மாதிரி எல்லாரையும் பிடிச்சு அனுப்பு, சொல்லி...... ஓய்ந்து போனேன்...

இதில சிலரின்ட பிடிவாதம் இருக்கே சொல்லி முடியாது..

முதலில் சி*5,

"கலோ யார் தூயா பெடியனோ? போத்தல் உண்டெனில் தான் வருவேன்"

அடுத்து போனில் டக்கு,

"பொங்கல் நடாத்தி நான் பட்ட பாடு இருக்கே, எதுக்கு பெடியா உனக்கு தேவையில்லத வேலை" (டக்கு களத்தில் நடமாட்டம் குறந்ததிற்கு காரணம் இது தானா?)

இவற்றை விட சிலர் தனிமடலில் அன்பாக (அன்பாக தான்..நம்புங்க) சில வார்த்தைகள்...வசனங்கள்...

அடுத்த உள்ளூரில் இருக்கும் அரவிந்தனுக்கும், கனா பிரபா அண்ணாவிற்கும் சொல்லலாமே (ஏன் எனில் விழாவை தொகுத்து வழங்க ஒரு ஆள் தேவையே)

அரவிந்தனை பிடிப்பது பெரும் விடயமாக இல்லை...

கானா பிரபா அண்ணா ஆள் படு பிஸி தான்.. இருக்கவே இருக்கு சனிக்கிழமை இரவு "சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா" ( தெரியாதவர்களுக்கு - சனிக்கிழமைகளில் கானா பிரபா அண்ணா நடத்தும் நிகழ்ச்சி)

வானொலியை போட்டால், அன்று இரவு 5 மணிக்கு தொடங்கும் நிகழ்ச்சிக்கு , ஒருவர் அதிகாலை 1 மணிக்கு கனா பிரபா அண்ணாவிடம் "நுழைவு சீட்டு கிடைக்குமா?" என கேட்கின்றார்..

பொறுத்து பொறுத்து பார்த்தேன்...வானலைகளினூடாக தொடர்பு கொண்டால்...என் குரலை கேட்டட்துமே, போனை மாற்றி வானொலியில் கேட்காத போல செய்துவிட்டார்..

பின்ன 1 மணிக்கு எடுத்து நுழைவு சீட்டு கேட்பவர்களை என்ன செய்வது...நல்ல வேளை இன்ப தமிழ் ஒலியில் நான் அறிவிப்பாளர் ஆகவில்லை (இந்த ஆசை கோட இருக்கா என்று சிலர் நினைப்பீர்களே)

ஒரு மாதிரி எல்லாரும் வருவதாக உறுதி அளித்துவிட்டார்கள்..

உறுதி மொழிகள்

சிலருக்கு சில உறுதிமொழிகளை வழங்கியதன் பேரில வருவதாக சொன்னார்கள்.

சில உறுதிகள்:

1. போத்தல் வேண்டும் - சி*5

2. மனைவியை கூப்பிட வேண்டாம் - முகம்ஸ்

3. சேலை உடுக்க மாட்டேன் - ஜமுனா

4. நான் தான் பூஜை செய்வேன் - சாஸ்த்

5. 10 என் பக்கத்திலேயே வர கூடாது - டக்கு

6. பூஜைக்கு பின்னர் அசைவ சாப்பாடு வேண்டும் - தூயவன்

7. நிகழ்ச்சியில் நான் தான் தேவாரம் பாடுவேன் - நிலா

8. சிட்னியில ஒரு வழக்கு வேண்டும் - நித்தி

9. சிட்னியில் அரிவாள் விற்கும் பக்கம் போயாக வேண்டும் - 10

10. உடலை மூடி ஒரு கவசம் வேண்டும் - மோகன் அண்ணா

11. எள்ளு சம்பல் நான் தான் செய்வேன் - ரசிகை

12. முதல் பந்தியில் நான் தான் நிற்பேன் - நிதர்சன்

13. எனக்கு வெட்கம்..என்னை அதிகம் ஆட்கள் நிற்கும் இடத்திற்கு கூப்பிட வேண்டாம் - அருவி

14. சிட்னி முருகன் கோவில் எப்படி போவது என்று சொல்ல வேண்டும் - மதன் அண்ணா

15. எல்லாரும் தமிழில் தான் கதைக்க வேண்டும் - கந்தப்பு

16. பெண்கள் நிற்கும் பகுதிக்கு நான் தான் பொறுப்பு - சுண்டல்யப்பா கை வலிக்குது.... மிகுதி பின்னர் வரும்..

இதை ஆரம்பித்த குற்றத்திற்காக அனைவருக்கும் பயணத்திற்கான செலவலை நானும் அண்ணாச்சியும் ஏற்று கொள்கிறோம். (அண்ணாச்சி எதற்கு? அப்ப தானே அளவோடு செலவு இருக்கும்)

ஒவ்வொரு நாட்டில் உள்ளவர்களும் கூடி வந்திறங்குவதாக முடிவாயிற்று..

அவர்களை வரவேற்க சுண்டலும் , புத்தனும் போனார்கள்...

நவராத்திரி கொண்டாட்டம் விரைவில்....

  • கருத்துக்கள உறவுகள்

அப்படியே சந்தோசத்தில போனை என்ட அன்பு சகோதரனுக்கு போட்டன்...(தலையில தான்)... வேற யார் எங்கட பிரகாஸ்ராஜ் தான்...

வில்லன், வில்லன் என்று சொல்லிக் கொண்டு தான் செய்வது தான் வில்லத்தனம்! :oops: :oops: :oops:

------------------

நன்றாக இருக்கின்றது தூயா! இதை விருந்தினரும் பார்க்க கூடிய வகையில் செய்தால் என்ன? ஏதும் பிரச்சனையாகுமா?

  • கருத்துக்கள உறவுகள்

வழமைபோல் படு பவ்வியமாக " நான் மட்டுமா தமிழை காதலிக்கின்றேன்..யாழில் அனைவரும் தேசியம் மீதும், தமிழ் மீதும் பற்றுள்ளவர்கள் தான் என சொல்ல...

செமக் கடி! :wink: :wink: :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

தமிழை காதலித்தவர் இப்ப ஜேசுதாஸின் மலையாள பாட்டுக்கு விசில் அடிக்க தயாராகி கொண்டு இருப்பார் அநேக சிட்னி யாழ் கள தமிழ் பற்றாளர்கள் எல்லாம் இப்ப அங்கு தான் இருப்பார்கள் பிள்ளை யமுனா நீர் எங்கே சுண்டல் நீர் எங்கே என்ன யமுனா இங்கேயும் காற்சட்டை பெணியனோடவா (கிழசுகளிட்ட பக்கம்

போயிடாதயும்)

  • தொடங்கியவர்

வில்லன், வில்லன் என்று சொல்லிக் கொண்டு தான் செய்வது தான் வில்லத்தனம்! :oops: :oops: :oops:

------------------

நன்றாக இருக்கின்றது தூயா! இதை விருந்தினரும் பார்க்க கூடிய வகையில் செய்தால் என்ன? ஏதும் பிரச்சனையாகுமா?

சரி சரி விடுங்க... ;) உங்களோட சேர்ந்து எனக்கும் இடையே இந்த வில்லத்தனம் வருகின்றது ;)

பிரச்சனை ஒன்றும் இல்லை...எங்கு போடலாம்?? :roll:

  • கருத்துக்கள உறவுகள்

நவராத்திரி கொண்டாட்டம்

அது ஒரு கனாக்காலம்

[]

யூனி அது இது என்று சுற்றும் "உலக நாயகன்" தான் சரி என நினைத்து புத்தனை தொலை பேசியில் பிடித்தால்...... காவி யீனில சில இளசுகளோட...

தூயா அங்கு இங்கு வந்து என்னை மனிசிட்ட மாட்டி விட்டுட்டீர் இது உடாங் சம்பலை விட பயங்கரம்

:):lol:

நீண்ட நாட்களின் பின் தூயாவின் கலகலப்பான கருத்து அதுவும் நவராத்ரி கொண்டாட்டம் நகைச்சுவைஅயோடு வாசித்ததில் சந்தோசம். :P

என்ன புத்தன் சொல்லவேண்டிய ஆட்களிட்ட சொல்லுறதோ

:P :P :P

தமிழை காதலித்தவர் இப்ப ஜேசுதாஸின் மலையாள பாட்டுக்கு விசில் அடிக்க தயாராகி கொண்டு இருப்பார் அநேக சிட்னி யாழ் கள தமிழ் பற்றாளர்கள் எல்லாம் இப்ப அங்கு தான் இருப்பார்கள் பிள்ளை யமுனா நீர் எங்கே சுண்டல் நீர் எங்கே என்ன யமுனா இங்கேயும் காற்சட்டை பெணியனோடவா (கிழசுகளிட்ட பக்கம்

போயிடாதயும்)

நான் இங்கே காற்சட்டயோட போகவில்லை அந்த கதையை நாளக்கு சொல்லுறன் நான் இப்ப தான் வந்தனான் உடுப்பு மாற்றாம யாழிற்கு ஓடி வந்தனான் அப்பா கத்தி கொண்டு இருக்கிறார் இதை பற்றி நாளைக்கு

:roll: :roll: :roll:

செமக் கடி! :wink: :wink: :):lol:

யாரை கடித்தவா எத்தனை ஊசி போட வேண்டும்

:D:lol:

:P தேவாரம் பாடுவதில் ஒண்ணுமில்லை. ஆனால் இசை ஏ ஆர் ரஹ்மானின் இசை போட யாரும் உறுதிமொழி சொல்ல இல்லையா? :roll: :roll: :arrow:

ஆகா எள்ளுச்சம்பலை நவராத்திரிக்கும் படைக்கிற எண்டு முடிவுபண்ணீட்டியளே. சரி நடக்கட்டும் நடக்கட்டும். மிகுதியை தொடருங்கோ :lol::lol:

  • கருத்துக்கள உறவுகள்

ஒய் ஓப்ரா ஹவுஸ் காரன்கு 30.000 டொலர்ஸ் கட்டனும்பா....ஜம்ஸ் ஆஸ்க் யுவர் டாடி.....

ஒய் ஓப்ரா ஹவுஸ் காரன்கு 30.000 டொலர்ஸ் கட்டனும்பா....ஜம்ஸ் ஆஸ்க் யுவர் டாடி.....

நீர் வந்து கேட்கிறது தானே

:evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

புத்தன அனுப்பிறன்...

புத்தன அனுப்பிறன்...

அந்த மனுசன் மெல்பனில இப்ப அங்கே எவன் எவன் என்ன பாடு படுறானோ

:wink: :wink:

  • கருத்துக்கள உறவுகள்

நல்ல காலம் நீங்கள் போகலியே போய் இருந்தால் மெல்பன் அவ்ளவு தான்

நல்ல காலம் நீங்கள் போகலியே போய் இருந்தால் மெல்பன் அவ்ளவு தான்[/quote

:evil: :evil: :evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

ம்ம்ம் அழகாதான் இருக்கு

ம்ம்ம் அழகாதான் இருக்கு

சீ போடா

:evil: :evil: :evil:

  • கருத்துக்கள உறவுகள்

சீ போடா

:evil: :evil: :evil:

:lol::D:lol: :oops: :oops:

  • கருத்துக்கள உறவுகள்

இப்ப இராவணன்ஸ் கத்தியோட வர போறார் நான் எஸ்கேப்...........

இப்ப இராவணன்ஸ் கத்தியோட வர போறார் நான் எஸ்கேப்...........

நீங்கள் தானே அதையும் தூக்க வேண்டும் நான் உங்களை சொல்லவில்லை

:cry: :cry: :cry:

:lol::D:lol: :oops: :oops:

:roll: :roll: :roll: பொண்ணுக போடா சொன்னால் சிரிப்பியளா? :shock: அதிசயம் ஆனால் உண்மை :P

தூயாவின் நகைச்சுவையான நவராத்திரிக் கொண்டாட்டம் நன்றாக இருக்கிறது. வாழ்த்துக்கள். தொடருங்கள்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.