Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

அமைச்சராவதைவிட என் சகோதரி பாலியல் தொழிலை நடத்தினால் அது சரி

Featured Replies

அமைச்சராவதைவிட என் சகோதரி பாலியல் தொழிலை நடத்தினால் அது சரிதான்: ஜே.வி.பி. தலைவர் சோமவன்ச அமரசிங்க

[ஞாயிற்றுக்கிழமை, 1 ஒக்ரொபர் 2006, 07:36 ஈழம்] [கொழும்பு நிருபர்]

சிறிலங்காவின் பொதுமக்

கள் பணத்தை கொள்ளையடிக்கும் காடைத்தனமான அமைச்சராவதை விட என் சகோதரி பாலியல் தொழிலை நடத்தியிருந்தால் அது சரியானதுதான் என்று ஜே.வி.பி.யின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்துள்ளார்.

சோமவன்ச அமரசிங்கவின் சகோதரியின் வீட்டில் பாலியல் தொழில் நடப்பதாக சோதனையிடப்பட்டு 6 பேர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் மூவர் ஆண் பாலியல் தொழிலாளர்கள் என்றும் கூறப்படுகிறது.

இந்த நிலையில் சிறிலங்கா சுதந்திரக் கட்சிக்கும் ஜே.வி.பி.க்கும் இடையேயான வார்த்தை யுத்தத்திலும் "பாலியல் தொழி;ல்" "அந்தத் தொழிலுக்கான தரகர்கள்" போன்ற சொற்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இவை தொடர்பில் கொழும்பு ஆங்கில ஊடகத்துக்கு சோமவன்ச அமரசிங்க அளித்த நேர்காணல் விவரம்:

ஊடக செய்திகளின் அடிப்படையில் அரசியல் முடிவுகளை எடுக்கும் பாரம்பரியம் கொண்டது அல்ல ஜே.வி.பி. ஐக்கிய தேசியக் கட்சியோ அல்லது வேறு எந்த ஒரு ஜனநாயக் கட்சியோ ஜே.வி.பி.க்கு கடிதம் எழுதுவதை நாம் ஆட்சேபிக்க முடியாது. இந்த நாட்டின் மூன்றாவது பெரிய அரசியல் கட்சி ஜே.வி.பி.

சிறிலங்கா சுதந்திரக் கட்சியிடமிருந்து உத்தியோகப்பூர்வ அழைப்பு எமக்கு வந்தது. நாம் பேச்சுக்கள் நடத்துகிறோம். அதேபோல் ஐக்கிய தேசியக் கட்சியும் உத்தியோகப்பூர்வ அழைத்தை விடுத்தால் அது குறித்து விவாதித்தோம். நாங்கள் ஜனநாயகப்பூர்வமான கட்சி. எங்களுக்கு பிரச்சனைகள் தொடர்பில் விருப்புகளும் வெறுப்புகளுமுண்டு.

சிறிலங்கா அரசியல் யாப்பில் திருத்தத்தைக் கொண்டு வந்ததன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சியையும் சிறிலங்கா சுதந்திரக் கட்சியையும் ஜே.வி.பி.தான் ஒருங்கிணைத்தது என்பதை மறந்துவிடக்கூடாது. நாங்கள் பொறுப்புள்ள அரசியல் கட்சி என்பதால் ஜனநாயகத்தை வலுப்படுத்தியிருக்கிறோம்.

ஆகையால் ஐக்கிய தேசியக் கட்சியானது முதலில் எமக்குக் கடிதத்தை அனுப்பட்டும். அது குறித்து எமது மத்திய குழுவில் விவாதிப்போம்.

தற்போது சுதந்திரக் கட்சியினருடன் பேச்சுக்கள் நடத்துகிறோம். அதில் ஏற்றத் தாழ்வுகள் இருக்கத்தான் செய்யும். அதன் இறுதிமுடிவு என்ன என்பதுதான் நாட்டுக்கு நல்லது. எத்தகைய ஒப்பந்தம் ஏற்படுத்தப்படும் என்பதை இப்போதே சொல்ல முடியாது.

இந்த நாடு இப்போது ஒரு புதிய சகாப்தத்துக்குள் நுழைந்துள்ளது. ஆகையால் எமது 20 அம்ச திட்டத்தைச் செயற்படுத்த வேண்டும் என்கிறோம்.

நாட்டினது அரசியல் சூழ்நிலை வேகமாக மாறிக் கொண்டே இருப்பதால் புதிய செயற்திட்டமானது அவசியமாகிறது.

சுதந்திரக் கட்சியானது ஊசலாட்டத்தில் உள்ளது. முரண்பாடானவர்கள். இந்த நாட்டுக்கு வலுவான ஒரு உறுதியான தலைமை தேவையாக உள்ளது. அதை முயற்சிக்க வேண்டிய நேரம் இது.

அரச தலைவர் தேர்தலின் போது மக்கள் அளித்த வாக்குறுதியிலிருந்து சிறிலங்கா சுதந்திரக் கட்சி மாறிச் செல்லக் கூடாது.

மகிந்த சிந்தனையை செயற்படுத்துவது தொடர்பாக எமக்கும் பொறுப்பு உண்டு.

சுதந்திரக் கட்சியின் ஊசலாட்டமான போக்கை விமர்சிக்கும் வகையில்தான் பாலியல் தொழிலில் ஈடுபட்டுள்ள பெண்ணைப் போல என்று விமர்சித்தேன். என்னுடைய விமர்சனத்தை சிலர் தனிப்பட்ட வகையில் பார்க்கின்றனர். அதைப் பற்றி பேசுவதற்கு இது நேரமும் அல்ல.

இந்த நாட்டுக்காக முக்கியமான அரசியல் பேச்சுவார்த்தையெல்லாம் நடத்த வேண்டியதுள்ளது.

இன்னும் சிலர் நினைக்கின்றனர்.

என் சொந்த சகோதரி மீது பொய்யான குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருப்பதற்கும் நான் கூறியதற்கும் தொடர்பிருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஆம்...நான் பிறந்தது முதலே என்னை ஆதரிக்கின்ற எனது சொந்த சகோதரிதான் அவர்.

அவர் இக்கட்டான சூழ்நிலைக்கு முகம் கொடுத்திருப்பதையிட்டு வருத்தமடைகிறேன். ஏனெனில் இந்த நாட்டின் ஜனநாயக ரீதியான அரசியல் கட்சியின் தலைவர் நான். பிரிவினைவாதத்தையும் இந்த நாட்டை இன ரீதியாக பிரிப்பதையும் எதிர்க்கிறவன் நான்.

அவர் பாலியல் தொழிலில் ஈடுபட்டிருந்தார் என்ற குற்றச்சாட்டு நிரூபிக்கப்படும் வரை அவர் அப்பாவி.

ஒருவேளை அவர் மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டாலும்கூட அவர் என் சகோதரிதான். அவரை நான் சிறையில் சென்று பார்ப்பேன்.

1971 ஆம் ஆண்டு ஏப்ரல் 5 ஆம் நாளுக்குப் பின்னர் நான் சிறையிலிருந்த போது அவரும் இதைத்தான் செய்தார்.

ஆண்களோ பெண்களோ பாலியல் தொழிலில் ஈடுபடுவதை நான் கண்டனம் செய்ய மாட்டேன்.

ஒரு அமைச்சராகி காடைத்தனமாக பொதுமக்கள் பணத்தை கொள்ளையடிப்பதை விட அது மேலானது.

இலங்கையில் யுத்த நிறுத்தம் என்பது செத்துப் போய்விட்டது. தோல்வியடைந்து விட்டது. நோர்வேயால் இந்த நாட்டில் அமைதியைக் கொண்டு வர முடியாது.

விடுதலைப் புலிகளின் இராணுவ பலத்தை அதிகரித்து சட்டப்பூர்வமான சிறிலங்கா அரசாங்கத்தை சரணாகதி அடையச் செய்யும் வழியில்தான் அது முடியும். ஈழத்துக்கான சாதகமான சூழ்நிலையைத்தான் உருவாக்கும்.

அதன் பின்னர் அவர்களது நண்பர்களான விடுதலைப் புலிகளிடமிருந்து எண்ணெய் அகழ்வுக்கான உரிமம் பெறுவார்கள்.

யுத்த நிறுத்த ஒப்பந்தம் என்று அழைக்கப்படுவதோ அனுசரணையாளர்கள் என்பதோ எல்லாம் தோல்வியடைந்துவிட்டது.

இந்த நாட்டினது இறைமைக்கும் சுதந்திரத்துக்கும் எதிரான அன்னியர்களை வெளியேற்ற இதுவே நல்ல அருமையான வாய்ப்பு.

1980 ஆம் ஆண்டுகளிலிருந்து முன்னைய அரசாங்கங்கள் செய்து வரும் மோசமான தவறுகளை நாம் திருத்திக் கொள்ள வேண்டும்.

சிறிலங்கா அரசாங்கத்தில் இணையுமாறு மகிந்த ராஜபக்ச எமக்கு அழைப்பு விடுத்துள்ளார். அவரிடம் உத்தேச செயற்திட்டத்தைச் செயற்படுத்த வேண்டிய தேவையை விளக்கியுள்ளோம். அந்த உத்தேச செயற்திட்டத்தின் கீழான ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டுவிட்டால் நாம் எதுவித தயக்கமும் இல்லமால் அரசாங்கத்தில் இணைவோம்.

இல்லையெனில் மகிந்த சிந்தனையைச் செயற்படுத்தும் வரை அரசாங்கத்தை நாம் ஆதரிப்போம் என்றார் சோமவன்ச அமரசிங்க.

http://www.eelampage.com/?cn=29068

இவனை நினைத்து சிரிப்பதா அழுவதா ஆனால் ஒண்டு குடும்ப வியாபாரத்தை ஒத்துக்கொண்டுட்டான் அதில இவன் ஜெண்டில்மன் :):lol: :P :D

அப்ப உவையல் இந்த வேiலையை செய்யினம்...

நாளைக்கு வாக்கு போட்ட மக்களையும் உதில

விட்ட ஆச்சரியப் படுறதுக்கு என்ன இருக்கு....??ஃ

விபச்சபர ஜே.வி.பி...மக்கள் ஆட்சிக்கு வரலாமோ...??ஃ

வர விடலாமோ...??

அந்த காட்சி மக்கள் முன் இருக்கலாமோ...??

சிங்களவருக்கு மாணம் இல்லையோ....???

என் உவையல தாக்கமா இருக்கினம்...??

எல்லாம் அரசிலாக்கும்....??

சீ...தூ...தூ...

வன்னி மைந்தன்

து ஏ P - ( தழiவெ எiஉவழசல pசழளவவைரவநள)

சிறப்பான கொள்கையுடன் ஆரம்பித்து

பல ஆயிரம் தோழர்களை விதைத்து

இன்று இனவாதமெனும் புற்றுநோய்குள்ளாகி

விபச்சாரத்தைப் பற்றிப் பிரச்சாரம் செய்யும் நிலை

(சிவப்பு விளக்குக் கட்சி)

து ஏ P - ( தழiவெ எiஉவழசல pசழளவவைரவநள)

மேலே உள்ள ஆங்கில வார்த்தையை இணைப்பதற்கு உதவுவீர்களா தயவு செய்து

கனகாலத்துக்கு பிறகு சப்பிறதுக்கு நல்ல அவல் கிடைச்சிருக்கு போலை

J V P - (joint victory prostitutes)

Some more abbreviations for JVP,

Jeopardy Violent Party

Joker Via Politics

Junk Value Party

Jobless Victims Party

Jungle Vedas Party

  • கருத்துக்கள உறவுகள்

கட்சியின் நிறம் சிவப்பாக இருப்பதைப் பார்க்கின்ற போது, இப்போது தானே புரிகின்றது. சிவப்பு விளக்குகாரர்கள் என்று!

ஆனால் இவர்கள் 5 அடி பாய்ந்தால், மகிந்த 10 அடி பாய்ந்து இவர்களைக் கை விட்டுவிட்டார் என்று புரிகின்றது. 20 அம்சக் கோரிக்கைகள் என்ற திட்டம் நடந்தால் மட்டுமே, அரசில் இணைவு என்றவர்கள், இப்போது, மகிந்த சிந்தனையிருக்கும் வரை என்று இறங்கி வந்தது அவரகளின் மிகப் பெரிய பலவீனத்தைக் காட்டுகின்றது!

அட இது என்ன புதிதா? இவர்களின் அரசியலும் பழம் பெரும் தொழிலையொத்தது தான்.

ஈழத்திலிருந்து

ஐhனா

  • கருத்துக்கள உறவுகள்

கனகாலத்துக்கு பிறகு சப்பிறதுக்கு நல்ல அவல் கிடைச்சிருக்கு போலை

:P :P :P :P

  • கருத்துக்கள உறவுகள்

அமைச்சராவதைவிட என் சகோதரி பாலியல் தொழிலை நடத்தினால் அது சரி

இந்தத் தலைப்பைப் பார்க்க ஏதோ, டக்ளஸ் தேவானந்தாவை மனசில் வைத்துத் தான் சொன்னது போலக் கிடக்கு!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தத் தலைப்பைப் பார்க்க ஏதோ, டக்ளஸ் தேவானந்தாவை மனசில் வைத்துத் தான் சொன்னது போலக் கிடக்கு!

:):lol::D:lol::lol::lol::lol:

தூயவன் எழுதியது:

மேற்கோள்:

அமைச்சராவதைவிட என் சகோதரி பாலியல் தொழிலை நடத்தினால் அது சரி

இந்தத் தலைப்பைப் பார்க்க ஏதோஇ டக்ளஸ் தேவானந்தாவை மனசில் வைத்துத் தான் சொன்னது போலக் கிடக்கு!

பிரான்ஸில் இருந்து தனது தம்பியாரை டக்கி அங்கிள் கூப்பிட்டு சில வேளை இங்கு தான் தொழிலுக்கு விட்டிருக்கிறார் போல இருக்கு :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.