Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழ் மக்களுக்கான தீர்வை கூட்டமைப்பினரே கூறவேண்டும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ் மக்களுக்கான தீர்வை கூட்டமைப்பினரே கூறவேண்டும்

 

 
தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினை என்ன என்பதனையும் அதற்கான தீர்வு எதுவென்பதையும் முதலில் இல்ஙகை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா கூறவேண்டும். பிரச்சினை என்னவென்று அவர்கள் கூறாவிடின் நாம் எவ்வாறு பதில் கூற முடியும் என்று அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான கெஹெலிய ரம்புக்வெல கேள்வியெழுப்பினார்.
14-011_3.jpg
 
இலங்கையில் சமாதானமும் பாதுகாப்பும் அரசியல் ஸ்திரமும் காணப்படுகின்றமையினாலேயே இந்தியா சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் எமக்கு உதவி செய்கின்றன. இலங்கை சீனாவிடம் மட்டுமல்ல ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடமும் உதவிகளைப் பெறுகின்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
 
ஊடகத்துறை அமைச்சில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
 
அமைச்சர் அங்கு மேலும் கூறியதாவது
 
சீனா,இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய அனைத்து நாடுகளிடமும் நாங்கள் உதவிகளையும் கடன்களையும் பெறுகின்றோம். அதாவது அணிசேரா வெளியுறவுக் கொள்கையைக்கொண்ட இலங்கையானது அனைத்து நாடுகளுடனும் சிறந்த உறவைப் பேணுகின்றது.
 
இந்தியாவுடன் சம்பூர் மின்னுற்பத்தி குறித்த உடன்படிக்கையை செய்துள்ளோம். இது தற்போதைய நிலைமையில் ஒரு முக்கிய உடன்படிக்கையாகும். அதேபோன்று சீனாவுடன் 27 உடன்படிக்கைகள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன் ஜப்பானுடன் ஒளிபரப்பு குறித்த உடன்படிக்கையை செய்துள்ளோம்.
 
அந்தவகையில் இலங்கைக்கு ஸ்திரமான பொருளாதார மற்றும் சிறந்த எதிர்காலம் இருப்பதை அறிந்துகொண்டே உலகின் மிகப்பெரிய நாடுகள் எமக்கு உதவி செய்கின்றன. வங்குரோத்து நிலையில் உள்ள நாடுகளுக்கு எந்த நாடும் கடன் கொடுக்காது. கடனை திருப்பிச் செலுத்த முடியாவிடின் யாரும் கடன் தரமாட்டார்கள். ஆனால் இலங்கையின் தற்போதைய நிலைமை குறித்து இந்த நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன.
 
குறிப்பாக இல்ஙகையில் சமாதானமும் பாதுகாப்பும் அரசியல் ஸ்திரமும் காணப்படுகின்றமையினாலேயே இந்தியா சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் எமக்கு உதவி செய்கின்றன என்பதனை அனைவரும் புரிந்துகொள்ளவேண்டும்.
 
இலங்கை சீனாவிடம் மட்டும் உதவிகளைப் பெறுவதாக யாரும் கருதக்கூடாது. இலங்கை ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடமும் உதவிகளைப் பெறுகின்றது. ஆனால் இலங்கை சிறந்த நிலையான மற்றும் சமாதானமான பாதுகாப்பான நாடாக இருக்கின்றமையினால்தான் இவ்வாறு உதவிகள் கிடைக்கின்றன. எமது நாட்டின் மீது உலகின் பெரிய நாடுகள் நம்பிக்கை வைத்துள்ளன.
 
கேள்வி: இலங்கை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவராக மாவை சேனாதிராஜா தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
 
பதில்: எமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றோம்
 
கேள்வி: புதிய தலைவராக தெரிவு செய்யப்பட்டுள்ள அவர் எதிர்வரும் ஜனவரி மாதத்துக்குள் தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிடின் அறவழிப் போராட்டத்தில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளாரே?
 
பதில்: தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினை என்ன என்பதனையும் அதற்கான தீர்வு எதுவென்பதையும் முதலில் இல்ஙகை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா கூறவேண்டும். பிரச்சினை என்னவென்று அவர்கள் கூறாவிடின் நாம் எவ்வாறு பதில் கூற முடியும். அவரின் அந்த அறிக்கையை நான் பார்த்தேன். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் ஏதோ சாத் வீக போராட்டம் என்று கூறியிருந்தார். முதலில் பிரச்சினை என்னவென்று கூறுங்கள். பின்னர் நாங்கள் பதிலளிக்கின்றோம்.
 
கேள்வி: நீங்கள் கூறுவதை நாங்கள் அறிக்கையிட்டவுடன் கூட்டமைப்பு அதற்கு பதிலளிக்கும்?
 
பதில்: அவர்கள் அதற்கு பதிலளித்தால் நானும் பதிலளிக்கின்றேன். இதுதான் எமது பிரச்சினை என்று கூறுங்கள்.
 
கேள்வி: சாத்வீக போராட்ட அறிவிப்பை எவ்வாறு பார்க்கின்றீர்கள்? 
 
பதில்: அது இரண்டாவது விடயம். முதலில் இந்த விடயத்தை பார்க்கவேண்டியுள்ளது.

தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினை என்ன என்பதனையும் அதற்கான தீர்வு எதுவென்பதையும் முதலில் இல்ஙகை தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா கூறவேண்டும். பிரச்சினை என்னவென்று அவர்கள் கூறாவிடின் நாம் எவ்வாறு பதில் கூற முடியும். அவரின் அந்த அறிக்கையை நான் பார்த்தேன். தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கிடைக்காவிடின் ஏதோ சாத் வீக போராட்டம் என்று கூறியிருந்தார். முதலில் பிரச்சினை என்னவென்று கூறுங்கள். பின்னர் நாங்கள் பதிலளிக்கின்றோம்.

 

10599294_811451722238266_844429860704937

  • கருத்துக்கள உறவுகள்

Eelam-map-Tiger.jpeg இது தான்.... :) 

 

 

rammpppkkk%20copy.jpg

 

"அஹிம்சைப் போராட்டத்திற்கு முன்னர் தமிழ் மக்களுக்கு உள்ள பிரச்சினை என்ன என்பதனையும் அதற்கான தீர்வு எதுவென்பதையும் முதலில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா எம்.பி. கூறவேண்டும். பிரச்சினை என்னவென்று அவர்கள் கூறாவிடின் நாம் எவ்வாறு பதில் கூற முடியும்?" - இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான கெஹலிய ரம்புக்வெல கேள்வி எழுப்பியுள்ளார்.
 
"இலங்கையில் சமாதானமும் பாதுகாப்பும் அரசியல் ஸ்திரமும் காணப்படுகின்றமையினாலேயே இந்தியா, சீனா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் எமக்கு உதவி செய்கின்றன. இலங்கை சீனாவிடம் மட்டுமல்ல ஜப்பான் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளிடமும் உதவிகளைப் பெறுகின்றது" என்றும் அவர் குறிப்பிட்டார். ஊடகத்துறை அமைச்சில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்ட அமைச்சரிடம் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். -
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்
இந்தியா உதவிசெய்வது: சிங்களவர்களுக்கு உதவிசெய்தால்! அவர்களை எப்பொழும் தனது காலடியிலே வைத்திருக்க முடியும் என்ற நம்பிக்கையில்!!
 
சீனா உதவிசெய்வது: இலங்கையில் கால்பதித்து இந்தியாவை வீழ்த்தினால்! தான் ஆசியாவில் வல்லரசாக வளரந்துவிடலாம் என்ற நம்பிக்கையில்!!
 
யப்பான் போன்ற நாடுகள் உதவிசெய்வது: இலங்கை மக்கள் மேலைநாடுகளுக்குச் சார்பான அரசை உருவாக்கும் வல்லமையும் கொண்டவர்கள் என்ற நம்பிக்கையில்!!
 
ரம்புக்வெலவின் பேச்சு: தன் கண்களை மூடிக்கொண்டால்! உலகமே இருண்டுவிட்டது என்ற  நம்பிக்கையில்!!!!!!!!!!!!!
 

 

  • கருத்துக்கள உறவுகள்

இப்போது இருக்கும் பிரச்சனை ரம்புக்குவேல போன்றவர்களின்  இப்படியான கொசுக்கடிகள் தான்
இதற்கு ஏதாவது மருந்து கண்டுபிடிக்க வேண்டும் :D

  • கருத்துக்கள உறவுகள்

தமிழ்மக்களுக்கு சிங்கள மக்களும் தமிழ்மாற்றுக்கருத்தாளர்களும் பிரச்சனை :D

  • கருத்துக்கள உறவுகள்

அவருக்கு நன்றாக தெரிகிறது

இதற்கு மேல் தமிழனால் குனிய  முடியாது என்று..... :(

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.