Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தமிழகமெங்கும் தலைவிரித்தாடும் வன்முறை! - ஜெயலலிதா சிறைத்தண்டனையின் எதிரொலி

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

தமிழகமெங்கும் தலைவிரித்தாடும் வன்முறை! - ஜெயலலிதா சிறைத்தண்டனையின் எதிரொலி . photo.png

[saturday 2014-09-27 19:00]
tamilnadu-riots-300-news.jpg

சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்த தகவல் இன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் வெளியானதையடுத்து தமிழகம் முழுவதும் வன்முறை வெடித்துள்ளது. அதிமுகவினர் பஸ் மறியல், கடையடைப்பு, கல்வீச்சு, கொடும்பாவி எரிப்பு, திமுக அலுவலங்கள், வீடுகள் மீது தாக்குதல் என வன்முறைகள் இடம்பெற்று வருகின்றனர். சென்னையில் ஜெயலலிதாவின் போயஸ் தோட்டப் பகுதியில் திமுக தலைவர் கருணாநிதி, சுப்பிரமணியம் சாமி உள்ளிட்டோரின் கொடும்பாவிகள் எரிக்கப்பட்டன. சென்னையின் பல பகுதிகளில் பஸ்கள் மீது கல்வீச்சுத் தாக்குதலும் நடந்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

  

பல்வேறு இடங்களிலும் கருணாநிதியின் உருவபொம்மைகள் எரிக்கப்பட்டன. கடைகளை அடைக்குமாறு தமிழகமெங்கும், அதிமுகவினர் வன்முறைகளில் ஈடுபட்டதால், அனைத்துக் கடைகளும் அடைக்கப்பட்டுள்ளன. அத்துடன், பரவலாக, 2 பஸ்கள் தாக்கி சேதப்படுத்தப்பட்டன. காஞ்சிபுரத்தில் ஒரு பஸ் தீவைத்து எரிக்கப்பட்டது. இதையடுடுத்து பெரும்பாலான இடங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. மதுரை, கோவை, திருச்சி உள்பட தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் வன்முறைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. சாலைகளில் போக்குவரத்து குறைந்து பரபரப்பான சூழல் நிலவுகிறது.

தமிழகம் முழுக்க திமுக பிரமுகர்களின் வீடுகள் மீது அதிமுகவினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். சென்னையில் திமுக தலைவர் கருணாநிதியின் கோபாலபுரம் வீடு, அறிவாலயம், மு.க.ஸ்டாலின் வீடுகளில் கல்வீச்சு நடந்துள்ளது. தென் சென்னை திமுக மாவட்ட செயலாளர் ஜெ. அன்பழகன் வீடு மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்தடுன் சுப்பிரமணியன் சுவாமி வீடுகள் மிதும் தாக்குதல்கள் நடந்துள்ளன. வன்முறை வெடிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் போலீஸார் உரிய முறையில் உஷார் நிலையில் வைக்கப்படவில்லை. இதனால் தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

tamilnadu-riots-270914-seithy%20%281%29.

 

tamilnadu-riots-270914-seithy%20%282%29.

 

tamilnadu-riots-270914-seithy%20%283%29.

 

tamilnadu-riots-270914-seithy%20%284%29.

 

tamilnadu-riots-270914-seithy%20%285%29.

http://www.seithy.com/breifNews.php?newsID=117627&category=TamilNews&language=tamil

  • கருத்துக்கள உறவுகள்

புரியவில்லை அவர்களுக்கு. இதை வைத்து ஆளுனர் ஆட்சியை மத்திய அரசு ஏற்படுத்தி விடும் என்பது...

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தமிழ்நாட்டில் உண்மையான அரசியல் அழிந்து நீண்ட காலமாகி விட்டது. அங்கு பொழுதுபோக்கு சூனியங்கள் தாராளமாக இருக்கும் போது மக்கள் ஆட்சி.ஆளுனர் ஆட்சி,இராணுவ ஆட்சி எல்லாம் அவர்களுக்கு ஒன்றுதான்..

  • கருத்துக்கள உறவுகள்

காமராஜர் போல ஜே ஆட்சி நடத்தியிருந்தால் யாராவது அவருக்காக இன்று ரோட்டில் படுப்பார்களா?? :rolleyes::D

  • கருத்துக்கள உறவுகள்

குற்றம் செய்தவர் தண்டனை அனுபவிக்க வேண்டும் .அதிமுகவினர் வன்முறையில் ஈடுபட்டால் ஜெயாவை விடுதலை செய்யமாட்டார்கள்.மாறாக சட்டம்ஒழுங்கு சரியில்லாத நிலமை என்று ஆளுனர் ஆட்சி நடக்கலாம்.ஆட்சியையே கலைக்கலாம்.தற்போதைய நிலையில் தேர்தல்

வந்தால் அது அதிமுக விற்கு பெருமளவு சாதகமாக இருக்காது.ஆகவே தகுதியான தலைவரை தெரிவு செய்து எஞ்சிய பதவிக்காலத்தை தக்க வைப்பதே புத்திசாலித்தனமானது.

  • கருத்துக்கள உறவுகள்

பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டார் ஜெயலலிதா!

 

பெங்களூர்: சொத்துக் குவிப்பு வழக்கில் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்ட முதல்வர் ஜெயலலிதா பெங்களூர் பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

 

முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கு கடந்த 18 ஆண்டுகளாக நடந்தது. இந்த வழக்கை விசாரித்து வந்த பெங்களூர் பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்தது. முதலில் ஜெயலலிதா, சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர் குற்றவாளி என்று நீதிபதி ஜான் மைக்கேல் டி குன்ஹா அறிவித்தார்.

 

அதன் பிறகு மாலை 5 மணியளவில் தண்டனை அறிவிக்கப்பட்டது. ஜெயலலிதாவுக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் அவருக்கு ரூ.100 கோடி அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

 

27-parappana-agrahara-jaya-600.jpg

 

குற்றவாளி என்று அறிவிக்கப்பட்ட உடனேயே பெங்களூர் போலீசார் ஜெயலலிதாவை தங்கள் பொறுப்பில் எடுத்தனர். இந்நிலையில் சிறை தண்டனை அறிவிக்கப்பட்டதும் அவர் பரப்பன அக்ரஹாராவில் அமைந்துள்ள பெங்களூர் மத்திய சிறைச்சாலையில் அடைக்க ஏற்பாடு செய்யப்பட்டது. முன்னதாக சிறைச்சாலை வளாகத்திலுள்ள மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டன. அதேபோல, சசிகலா, சுதாகரன், இளவரசி ஆகியோருக்கும் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. அதன்பிறகு சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

ஜெயலலிதாவை சிறையில் அடைத்தது குறித்து அறிந்த அதிமுகவினர் கண்ணீர் விட்டு அழுதனர்.

சிறப்பு நீதிமன்றம் அமைந்துள்ளது பெங்களூரில் என்பதால் நீதிமன்ற எல்லைக்கு உட்பட்ட சிறையில் ஜெயலலிதா உள்ளிட்ட மூவரும் அடைக்கப்பட்டுள்ளனர். எனவேதான் சென்னை சிறைக்கு அழைத்து வரவில்லை என்று சட்ட வல்லுநர்கள் தெரிவித்தனர்.

 

கர்நாடக உயர் நீதிமன்றத்தை அணுகி ஜாமீன் பெறும் வரை இந்த சிறையில் தான் ஜெயலலிதா உள்பட 4 பேரும் அடைக்கப்பட்டிருப்பர். அது எத்தனை காலம் ஆனாலும்...

 

தற்ஸ் தமிழ்.

#####################
 

இந்தத்  தலைப்பை... இரண்டு மணித்தியாலத்தில், 3059 ஆட்கள் பார்த்துள்ளார்கள். :)  :rolleyes:

Edited by தமிழ் சிறி

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்
தமிழ்நாடு முழுவதும் அ.தி.மு.க தொண்டர்கள் கொந்தளிப்பு; தொண்டர்கள் தீக்குளிக்க முயற்சி
வாசிக்கப்பட்டது

 
பதிவு செய்த நாள்:
சனி, செப்டம்பர் 27,2014, 3:22 PM IST
201409271700551976_Throughout-Tamil-Nadu

சென்னை,

முதல்-அமைச்சர் ஜெயலலிதா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூர் தனிக்கோர்ட்டில் நேற்று தீர்ப்பு வழங்கியது. தீர்ப்பு விவரங்களை தந்தி டிவி உள்பட   பல்வேறு சானல்கள் ஓளிபரப்பின. .இதற்கிடையில் முதல்-அமைச்சர் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாக தகவல் பரவியது. உடனடியாக மாநிலம் முழுவதும் மின்சார விநியோகம் தடை செய்யப்பட்டது இதனால் பொதுமக்களால் டி.வி. சேனல் நிகழ்ச்சிகளை தொடர்ந்து பார்க்க முடியாத நிலை ஏற்பட்டது. போலீசார் பாதுகாப்பு ஏற்பாடுகளை சரியாக செய்திருந்தால் மின்சார தடையை தடுத்திருக்கலாம் என்று பொதுமக்கள் புகார் தெரிவித்துள்ளனர்.

பெங்களூர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தீர்ப்பு எதிரொலியால் மாநிலம் முழுவதும் அ.தி.மு.க தொண்டர்கள் கொந்தளிப்பு அடைந்து உள்ளனர்.இதனால் தமிழ்நாடு முழுவதும் தொண்டர்கள் ஆங்காங்கே சாலைமறியல் மற்றும் உருவ பொம்மை போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

சென்னை மாநகரில் அசம்பாவிதங்கள் ஏற்படாமல் தடுப்பதற்காக பகல் 1.30 மணியிலிருந்து 2.30 மணி வரை போக்குவரத்து நிறுத்தப்பட்டது. இதனால் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன. பொதுமக்கள் அளித்த புகார்களை தொடர்ந்து, பகல் 2.45 மணிக்கு மேல் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் குறைந்த எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்பட்டன.
இதனால் பொதுமக்கள் அதிகம் வந்து செல்லும் பகுதிகளான சென்டிரல், எழும்பூர், மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, அண்ணாசாலைகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் பஸ்சுக்காக பலர் காத்துக்கிடந்தனர்.

.ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு எதிரொலி; தேனி மாவட்டம் கம்பத்தில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல்&திண்டுக்கல், ஒட்டன்சத்திரம், பழனி, வேடசந்தூரில் கடையடைப்பு, அ.தி.மு.க.வினர் மறியல்பதற்றம். திண்டுக்கல்லில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவபொம்மை எரிப்பு.

விருத்தாசலத்தில் தி.மு.க. தலைவர் கருணாநிதி, பாரதீய ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி உருவபொம்மைகள் எரிப்பு. பஸ்களை மறித்து அ.தி.மு.க.வினர் போராட்டம்.

நெல்லை தூத்துக்குடி

ஜெயலலிதா குற்றவாளி என கோர்ட்டு அறிவித்ததை தொடர்ந்து நெல்லை , தூத்துக்குடி மாவட்டங்களில் அ.தி.மு.க.வினர் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.நெல்லையில் அ.தி.மு.க.வினர் மறியல் போராட்டம் நடத்தினர். இதேபோல் மாவட்டம் முழுவதும் போராட்டம் நடைபெற்றது.

தூத்துக்குடி மாவட்டத்தில் பல இடங்களில் அ.தி.மு.க.வினர் போராட்டம் நடத்தினர். விளாத்திகுளத்தில் அ.தி.மு.க.வினர் முன்னாள் எம்.எல்.ஏ. சின்னப்பன் தலைமையில் சாலைமறியல் போராட்டம் நடத்தினார்கள். விளாத்திகுளம் பஸ் நிலையம் முன் தனியார் பஸ் மீது மர்ம நபர்கள் கல் வீசி தாக்கியதில் பஸ்சின் கண்ணாடி உடைந்தது.

ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு எதிரொலி: ஈரோட்டில் தி.மு.க. தலைவர் கருணாநிதி உருவபொம்மை எரிப்பு, ஆர்ப்பாட்டம்-சாலை மறியல்.

மதுரை கோரிப்பானையத்தில் அதிமுகவினர் கல்வீச்சு;  மோட்டார் சைக்கிள்கள், கார்கள், கடைகள் நொறுக்கப்பட்டன. கருணாநிதி உருவ பொம்மை எரிப்பு; பஸ்கள் நிறுத்தப்பட்டன.

ஜெயலலிதா மீதான சொத்து குவிப்பு வழக்கில் தீர்ப்பு. திருச்சியில் அ.தி.மு.க.வினர் திருச்சி மேலப்புலிவார்டு ரோட்டில் உள்ள மனோகரன் எம்.எல்.ஏ. அலுவலகம் முன்பு இருந்து ஊர்வலமாக சென்று அந்த பகுதியில் இருந்த கடைகளை அடைக்க சொல்லி போராட்டம் நடத்தினார்கள். இதனைத்தொடர்ந்து மேலப்புலிவார்டு ரோடு, மதுரை ரோடு உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன.

மேலப்புலிவார்டு ரோட்டில் சென்ற ஒரு சரக்கு ஆட்டோவின் மீது அ.தி.மு.க.வினர் கல்வீசி தாக்கியதில் அதன் கண்ணாடிகள் உடைந்தன. இதேபோல் ஸ்ரீரங்கத்திலும் அ.தி.மு.க.வினர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த பகுதியில் இருந்த கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. திருச்சி நகரில் பெரும்பாலான பஸ்கள் ஓடவில்லை. திருச்சி நகர் முழுவதும் பதற்றம் நிலவுகிறது.

அரியலூரில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. பஸ்கள் குறைந்த அளவில் இயக்கப்பட்டன. இதேபோல் கரூரிலும் கடைகள் அடைக்கப்பட்டன. 

சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வெளியானவுடன் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் பதற்றம் நிலவியது. புதுக்கோட்டை, இலுப்பூர், அன்னவாசல், விராலிமலை, அறந்தாங்கி, வடகாடு உள்பட பல இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டன. பஸ்களும் நிறுத்தப்பட்டன. அறந்தாங்கியில் மறியல் போராட்டத்தினால் போக்குவரத்து பாதித்தது. சாலையில் இருந்த தடுப்பு பலகைகளை அடித்து நொறுக்கினர்.  புதுக்கோட்டை பஸ் நிலையத்தில் பஸ்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. ஆனால் ஏராளமான பயணிகள் தங்கள் இடங்களுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். விராலிமலையில் தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவபொம்மையை எரித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சொத்து குவிப்பு வழக்கில் முதல்&அமைச்சர் ஜெயலலிதா குற்றவாளி என நீதிபதி ஜான்மைக்கேல் டி.குன்ஹா நேற்று மாலை அறிவித்தார். இதை தொடர்ந்து சிவகாசியில் இருந்து வெளியூர் செல்லும் தனியார் மற்றும் அரசு பஸ்கள் நிறுத்தப்பட்டன. பஸ் நிலையம் மற்றும் ரதவீதிகளில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டன.

சிவகாசி நகர செயலாளர் அசன்பதுருதீன் தலைமையில் அ.தி.மு.க.வினர் நகராட்சி அலுவலகம் முன்பு திரண்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து ஊர்வலமாக பஸ் நிலையம் வந்தனர். அங்கு நீதிபதி ஜான்மைக்கேல் டி.குன்ஹாவின் உருவபொம்மையை எரித்தனர். இந்த நிகழ்ச்சியில் நகர மன்ற தலைவர் டாக்டர் கதிரவன், தொகுதி செயலாளர் சிவக்குமார், கவுன்சிலர்கள் திருமுருகன், பாலகுரு, சிவா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

சிவகாசியில் இருந்து வெளியூர் செல்லும் பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டதால் அருகில் உள்ள கிராமத்துக்கு செல்ல இருந்த பொதுமக்கள் பஸ் நிலையத்தில் தவித்தனர். இதே போல் வெளியூர்களில் இருந்து சிவகாசிக்கு பட்டாசு வாங்க வந்தவர்களும் தங்களது சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்தனர்.

ஜெயலலிதா குற்றவாளி என்று பெங்களூர் கோர்ட்டில் தீர்ப்பு  கூறியதை தொடர்ந்து திருப்பூர் மாவட்டம் முழுவதும் நேற்று மதியம் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. திருப்பூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட முக்கிய ரோடுகளில் உள்ள கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க.வினர் திருப்பூர் பழைய பஸ் நிலையம் முன் திடீர் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். போராட்டத்தின் போது தி.மு.க.தலைவர் கருணாநிதி மற்றும் சுப்பிரமணியசாமி ஆகியோரின் உருவ பொம்மையை எரித்தனர்.

இதேபோல் பல்லடம், அவினாசி, குன்னத்தூர், உடுமலை, மடத்துக்குளம், காங்கயம், தாராபுரம் உள்பட மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கடைகள் அடைக்கப்பட்டது. மாநகர ரோடுகள் வாகன போக்குவரத்து குறைந்து வெறிச்சோடி காணப்பட்டது.

பல்லடத்தில் அ.தி.மு.க.நகர செயலாளர் ரத்தினசாமி தீக்குளிக்க முயன்றார். அவரை போலீசார் தடுத்து நிறுத்தினார்கள். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.  
சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல் அமைச்சர் ஜெயலலிதா குற்றவாளி என கோர்ட்டு தீர்ப்பு வெளியானதை தொடர்ந்து தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. திருச்சியில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. அண்ணாசிலை பகுதியில் அ.தி.மு.க.வினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அ.தி.மு.க.வினர் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்துக்கு ஊர்வலமாக புறப்பட்டு சென்றனர். அவர்களை போலீசார் தடுத்தனர். திருச்சியில் ஆங்காங்கே பஸ்கள் நிறுத்தப்பட்டன.இதனால் திருச்சி ரெயில் நிலையத்துக்கு ஏராளமான அ.தி.மு.க.வினர் சென்றனர். அங்கு ரெயில் மறியல் செய்ய முயன்றனர்.இதன் காரணமாக திருச்சி மாநகரில் பல இடங்களில் பதற்றமான சூழ்நிலை நிலவியது.

ஜெயலலிதா குற்றவாளி என கோர்ட்டு அறிவித்ததை தொடர்ந்து தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் இருந்து அ.தி.மு.க.வினர் ஊர்வலமாக சென்றனர். தஞ்சை பள்ளியக்கரகாரத்தில் வைத்து தி.மு.க. தலைவர் கருணாநிதியின் உருவபொம்மையை எரித்தனர். மேலும் தஞ்சை ரெயில் நிலையம், பழைய பஸ் நிலையம் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் கடைகள் அடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, கும்பகோணம் ஆகிய பகுதிகளில் உள்ள கடைகளும் அடைக்கப்பட்டன.
நாகை மாவட்டம் வேதாரணியத்தில் அ.தி.மு.க.வினர், கருணாநிதியின் உருவபொம்மையை எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்பகுதியில் கடைகளும் அடைக்கப்பட்டன. நாகையில் அ.தி.மு.கவினர் காரைக்கால் செல்லும் ரெயிலை மறித்து மறியலில் ஈடுபடனர்.

கோவையில் சாலை மறியல், ஆர்ப்பாட்டம்- கருணாநிதி கொடும்பாவி எரிப்பு,கடைகள் அடைப்பு,பஸ்கள் மீது கல்விச்சு. நீலகிரியில் இருந்து கர்நாடகா செல்லும் பஸ்கள் நிறுத்தம்.

தேனி மாவட்டத்தில் அ.தி.மு.க.வினர் 2 பேரும், வத்தலக்குண்டுவில் ஒருவரும் தீக்குளிக்க முயற்சி செய்து உள்ளனர்.

http://www.seithy.com/adslink.php?src=aHR0cDovL3d3dy5kYWlseXRoYW50aGkuY29t

 

  • கருத்துக்கள உறவுகள்

tamilnadu-riots-270914-seithy%20%281%29.

tamilnadu-riots-270914-seithy%20%282%29.

tamilnadu-riots-270914-seithy%20%283%29.

தமிழகம் ஒளிர்கிறது!
  • கருத்துக்கள உறவுகள்
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சென்னையில் தீக்குளித்த அ.தி.மு.க. தொண்டர் சாவு: ஒருவர் காயம்

 

பூந்தமல்லி, செப்.28-

சென்னை வளசரவாக்கம் அடுத்த ஏ.பி.என். பிரதாப் நகர் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 58). இவரது மனைவி லட்சுமி. இவர்களுக்கு அமுதா, அன்பரசன், தேவி என 3 குழந்தைகள் உள்ளனர். அ.தி.மு.க தொண்டரான வெங்கடேசன் எலக்ட்ரீசியனாக வேலை செய்து வருகிறார். ஜெயலலிதா வழக்கில் அளிக்கப்படும் தீர்ப்பை அறிவதற்காக நேற்று மாலை அவர் வீட்டில் டெலிவிஷனில் பார்த்துக் கொண்டிருந்தார்.

அப்போது சொத்து குவிப்பு வழக்கில் ஜெயலலிதா குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டதாக வெளியான செய்தியை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனே வீட்டில் இருந்த பெட்ரோல் கேனை எடுத்துக் கொண்டு, வெளியே ஓடி வந்த அவர் ‘அம்மா வாழ்க’ என்று கூறியபடி உடலில் பெட் ரோலை ஊற்றி தீ வைத்துக் கொண்டார்.

இதில் அவரது உடலில் தீப்பிடித்து எரிந்தது. இதனால் வேதனையில் அவர் அலறினார். இதைக் கண்டதும் அக்கம், பக்கத்தினர் அவரை மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் சிகிச்சை பலன் அளிக்காமல் இரவில் அவர் இறந்தார்.

இதுகுறித்து கே.கே. நகர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்று தீர்ப்பு வெளியானதை டெலிவிஷனில் பார்த்த விருகம்பாக்கம் தசரதபுரம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. தொண்டர் பாஸ்கர் (30) என்பவர் உடலில் மண்எண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். அவரை அருகில் இருந்த அ.தி.மு.க. வினர் மற்றும் போலீசார் அவரது உடலில் தண்ணீர் ஊற்றி அவரை காப்பாற்றினார்கள்.

 

http://www.seithy.com/adslink.php?src=aHR0cDovL3d3dy5tYWFsYWltYWxhci5jb20=

எங்கள் சிரிப்பை அடக்கி வடிவேலு அவர்களுக்கு அறிவிக்கபடா ஐந்து ஆண்டு தண்டனை தந்த தாயே இன்று அறிவிச்சு பத்து ஆண்டு தண்டனை தந்தான் மேல உள்ளவன்..

 

 

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

நெல்லை மாவட்டத்தில் 1000–க்கும் மேற்பட்ட அ.தி.மு.க.வினர் கைது

 

நெல்லை, செப் .28–

சொத்து குவிப்பு வழக்கில் தமிழக முதல்–அமைச்சர் ஜெயலலிதாவுக்கு தண்டனை வழங்கப்பட்டதை தொடர்ந்து நெல்லை மாவட்டத்தில் அதிமுகவினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். மாவட்டம் முழுவதும் பல இடங்களில் தொண்டர்கள் திரண்டு சுப்பிரமணியசாமி, தி.மு.க. தலைவர் கருணாநிதி ஆகியோரது உருவ பொம்மையை எரித்தனர். கடைகள் அடைக்கப்பட்டன. மாவட்டம் முழுவதும் பஸ்கள் நிறுத்தப்பட்டன.

 

நெல்லை சந்திப்பில் அ.தி.மு.க.வினர் மறியல் மற்றும் கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டார்கள். 10–க்கும் மேற்பட்ட தொண்டர்கள் திரண்டு அங்கு நின்ற ரெயிலை மறித்தனர். இதேபோல பாளை குலவணிகர்புரத்தில் அதிமுகவினர் ரெயில் மறியலுக்கு முயன்றனர். இதில் 22 பேரை போலீசார் கைது செய்தனர். சந்திப்பு பஸ் நிலையம் அருகே அ.தி.மு.க. தொண்டர் கங்கை முருகன் என்பவர் உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.

போலீசார் உடனே அவரை கைது செய்தனர். நெல்லை டவுண் பகுதியில் அ.தி.மு.க.வினர் திரண்டு கடைகளை அடைக்க செய்தனர். அப்போது கருணாநிதி உருவ பொம்மை எரிக்கப்பட்டது. இதில் டவுண் ஜாமியாபள்ளிவாசல் தெருவை சேர்ந்த தொண்டர் பீர்முகமது என்பவர் திடீர் என்று உடலில் மண் எண்ணை ஊற்றி தீக்குளிக்க முயன்றார். உடனே தொண்டர்கள் அவரை காப்பாற்றினர்.

 

நெல்லை மாநகர பகுதியில் மட்டும் சந்திப்பு, பாளை, தச்சநல்லூர், மேலப்பாளையம் ஆகிய பகுதிகளில் அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் மற்றும் சாலைமறியலில் ஈடுபட்டார்கள்.

பணகுடி, ராதாபுரம், திசையன்விளை பகுதியில் அ.தி.மு.க.வினர் திரண்டு தி.மு.க. கொடி கம்பங்களை சேதப்படுத்தினர். ஏர்வாடி பஜார் பகுதியில் அதிமுகவை சேர்ந்தவர்கள் சுப்பிரமணியசாமி மற்றும் கருணாநிதி கொடும்பாவியை எரித்து கிளர்ச்சியில் ஈடுபட்டனர். உடனே போலீசார் விரைந்து சென்று அவர்களில் 59 பேரை கைது செய்தனர். அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். திருக்குறுங்குடி பஸ் நிலையம் அருகே மறியலில் ஈடுபட்ட 19 பேர் கைது செய்யப்பட்டார்கள்.

பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர். தென்காசி, குற்றாலம் பகுதியில் மறியலில் ஈடுபட்ட 123 பேரை போலீசார் கைது செய்தனர். பாவூர் சத்திரத்தில் 80 பேரும், ஆலங்குளத்தில் 35 பேரும் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டனர்.

 

இதே போல அ.தி.மு.க.வினர் சிங்கையில் 80 பேரும், சிவந்திபுரத்தில் 65 பேரும், அம்பையில் 37 பேரும், கல்லிடைக்குறிச்சியில் 35 பேரும் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டனர். மாவட்டம் முழுவதும் சுமார் 1000–க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டார்கள்.

சுரண்டை பஸ் நிலையம் அருகே அதிமுகவினர் மறியல் மற்றும் கொடும்பாவி எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நின்ற போலீஸ் இன்ஸ்பெக்டரின் ஜீப் அடித்து நொறுக்கப்பட்டது.

 

மாலைமலர்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.