Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முறியடிப்புச்சமர்:- 50 படையினர் பலி! 5 போராளிகள் வீரச்சாவு.

Featured Replies

பனிச்சங்கேணி படைநகர்வு புலிகளால் முறியடிப்பு 50 படையினர் பலி! 5 போராளிகள் வீரச்சாவு.

திருமலையில் வாகரை நோக்கிய சிறீலங்காப் படைகள் தமது ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன. இன்று அதிகலை 4.30 மணியளவில் மாங்கேணி படைமுகாமிலிருந்து ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஆரம்பித்துள்ளன.

முப்படைகளின் சூட்டாதரவுடன் ஆரம்பிக்கப்பட்ட படை நடவடிக்கையை முறியடிக்கும் வகையில் போராளிகள் போராடிவருகின்றனர். தற்பொழுது மாங்கேணி முன்னரங்கப் பகுதியில் உக்கிர மோதல்கள் இடம்பெற்றவண்ணம் உள்ளன.

இதேவேளை அரச ஆக்கிரமிப்புப் படைகளால் ஆரம்பிக்கப்பட்ட படை நடைவடிக்கையை மூடி மறைக்கும் நோக்குடன் மாங்கேணி முன்னரங்கப் பகுதியில் விடுதலைப் புலிகளுக்கும் கருணா அணியினருக்கும் இடையே மோதல்கள் இடம்பெறுவதாக அரச தரப்பு அறிவித்துள்ளது.

மாங்கேணி படைமுகாமிலிருந்து நில ஆக்கிரமிப்பு நடவடிக்கையை ஆரம்பித்த சிறீலங்காப் படையினர் விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பகுதியான பனிச்சங்கேணி பகுதிக்குள் 1500 மீற்றர் தூரத்திற்கு உடுருவியிருக்கும் சிறீலங்காப் படையினருடன் எதிராக போராளிகள் களமாடி வருகின்றனர்.

ஆக்கிரமிப்பு யுத்தத்தில் சிறீலங்காப் படையினருக்கு பலத்த இழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இன்றைய மோதலில் கொல்லப்படும் படையினரின் சடலங்கள் உழவு இயந்திரங்களில் ஏற்றப்பட்டு வாளைச்சேனை நோக்கி கொண்டு செல்லப்படுவதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

சிறீலங்காவின் ஆக்கிரமிப்பு யுத்தத்தால் வாகரைக்கு இடம்பெயர்ந்து வாழ்ந்து வந்த மக்கள் மீண்டுமொரு இடம்பெயர்வுக்கு உள்ளாகியுள்ளனர். இவ்வாறு இடம்பெயரும் மக்கள் திருமலை வெருகல், ஈச்சிலப்பற்று போன்ற பகுதிகளுக்கு தொடர்ந்து இடம்பெயர்கின்றனர்.

வாகரையை ஆக்கிரமிக்க சிறீலங்காப் படையினர் மும்முனையில் முன்னேற்ற முயற்சியை மேற்கொண்டுள்ளதாக மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

மாங்கேணியிலிருந்து பனிச்சங்கேணி நோக்கிய படைநகர்வும், கஜுவத்தை இராணுவ முகாமிலிருந்து இன்னொரு நகர்வும், கரடிக்குளம் இராணுவ முகாமிலிருந்த வெலிக்கந்தை ஊடாக கட்டுமுறிப்பு நோக்கிய மற்றொரு நகர்வை படையினர் மேற்கொண்டுள்ளதாக மட்டக்களப்புத் தகவல்கள் தெரிவித்துள்ளதாக ஜெயானந்தமூர்த்தி தெரிவித்துள்ளார்.

ஆக்கிரமிப்பு படைகளின் மூர்க்கமான எறிகணைத் தாக்குதல்கள் வாகரைப் பகுதியில் பெருமளவில் விழுந்து வெடிக்கிறது. இதனால் மக்கள் அல்லோலகல்லோலப்பட்டு ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.

மூதூர் கிழக்கில் நடைபெற்ற படையினரின் வலிந்த தாக்குதலை அடுத்து வாகரைக்கு இடம்பெயர்ந்து 9 முகாம்களில் இடம்பெயர்ந்து தஞ்சம் புகுந்த மக்கள் தங்கியிருக்கும் முகாம்களை அண்டிய பகுதிகளில் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துள்ளன.

இதனால் இங்கு உயிர் தேசங்களும் பலர் காயமடைந்துள்ளதாகவும் அறியமுடிகிறது எனவும் ஜெயானந்தமூர்த்தி அவர்கள் மேலும் தெரிவித்துள்ளார்.

வாகரையை ஆக்கிரமிக்கும் நோக்குடன் பனிச்சங்கேணி நோக்கிய சிறீலங்காவின் ஆக்கிரமிப்பு நடவடிக்கை விடுதலைப் புலிகளால் முறியடிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலை 4.20 மணியளவில் துணைப்படைக் குழுக்களின் உதவியுடன் சிறீலங்காப் படையினர் முன்னேற்ற முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுக்கு ஆதரவாக மட்டக்களப்பு காகிதாலய படைமுகாமிலிருந்து எறிகணைச் சூட்டாதரவு வழங்கப்பட்டுள்ளன.

படையினரின் முன்னேற்ற நடவடிக்கையை வழிமறித்து படையினருக்கு எதிராக போராளிகள் எதிர்த் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இதன்போது சிறீலங்காத் தரப்பில் பலத்த உயிரிழப்புக்கள் ஏற்பட்டுள்ளன. சிறீலங்காப் படைத் தரப்பில் 50 பேர் வரையிலான படையினர் கொல்லப்பட்டதோடு பலர் காயங்களுக்கு உள்ளாகினர். இன்றைய மோதலில் சிறீலங்காப் படைத்தரப்பில் ஒருவர் சிறைப் பிடிக்கப்பட்டுள்ளார்.

இன்றைய மோதலில் விடுதலைப் புலிகள் தரப்பில் 5 போராளிகள் வீரச்சாவடைந்துள்ளனர். இன்றை மோதல் மிகவும் உக்கிரமாக நடைபெற்றுக் கொண்டிருந்த சமயம் நண்பகல் 1 மணியளவில் சிறீலங்காப் கடற்படையினரால் பாரிய தரையிறக்கம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதனையடுத்து கடலிலும் தரையிலும் சிறீலங்கா படையினருக்கு எதிராக கடற்புலிகள் உக்கிர தாக்குதல்களை நடத்தி படையினரின் முன்னேற்ற முயற்சியை முறியடித்துள்ளனர்.

விடுதலைப் புலிகளின் பதில் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத சிறீலங்காப் படையினர் விமானப் படையினரின் உதவியை நாடி நான்கு தடவைகைள் வான் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

இன்று மாலை 4 மணிவரை நீடித்த தாக்குதலில் படையினருக்கு பலத்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. போராளிகளின் பதில் தாக்குதலுக்கு ஈடுகொடுக்க முடியாத படையினர் உயிரிழந்தவர்களையும் காயமடைந்தவர்களையும் காவிக் கொண்டு தமது பழைய நிலைகளுக்கு தப்பியோடியுள்ளனர்.

  • தொடங்கியவர்

The Tiger forces repulsed a three-pronged Sri Lanka Army offensive on LTTE controlled Vaharai territory after a defensive fight that lasted for 11 hours, LTTE's Trincomalee District Political Head S. Elilan said. At least seven civilians were wounded in heavy SLA shelling towards civilian settlements. More than 30 SLA troopers were killed, and one wounded soldier was captured alive, Mr. Elilan said. The offensive was launched from Kajuwatte SLA camp, south of Vaharai towards Panichchankerni, from Sinhapura SLA camp 3 km inside the LTTE territory in Kattumurivu and Sri Lanka Navy attempted to land troops in Panichchankerni around 1:00 p.m., according to initial reports from Vaharai.

Mr. Elilan

Three dead bodies of SLA soldiers were also recovered. The Tigers had lost 5 cadres. Seven Tiger fighters were wounded. Sea Tigers defeated Sri Lanka Navy attempt to land troops in Panichchankerni, LTTE's Trincomalee District Political Head said.

One SLN boat sustained damages in the counter-attack, Elilan said.

"Two tractors full of SLA soldiers were killed in our counter-attack," he further said.

"Sri Lanka Air Force Kfir jets bombed our area in 4 sorties today. Heavy artillery shelling was launched from Valiachenai Paper Factory SLA camp."

Underage paramilitary cadres were also brought in by the Sri Lanka Army, according to LTTE officials in Vaharai.

The Tigers were engaged in defensive battle till 5:30 p.m. Friday, the sources added.

Thousands of civilians, most of them IDPs, had sought refuge in Vaharai area.

"This offensive demonstrated that Colombo was not sincere in proceeding with talks," Elilan said.

Medical sources in Polonnaruwa hospital said that at least 5 SLA soldiers and 5 paramiitary cadres were being treated there.

இலங்கை அரசின் இரட்டை வேடம்

தற்போது மீண்டும் ஒரு முறை நிருபனமாகி உள்ளது .

மீண்டும் மீண்டும் போர் நிறுத்த உடன்படிக்கையை மீறி

அவர்கள் செய்து வரும் படை நடவடிக்கை என்பது

எதை குறிக்கிறது.....???

தாங்கள் யுத்தத்தை தொடுக்கவில்லை

புலிகளெ தொடுத்ததர்கள் என கூறியபடி

பரந்து பட்ட இராணுவ ஆக்கரமிப்பை

அது மேற் கொள்கிறது .

இந்த நடவடிக்கை பாரிய யுத்த நிறுத்த மீறல் சம்பவமாகும்

இதை உலகு ஏன் கடிந்து கொள்ளவில்லை....???

உரடங்கை போட்டு பட்டினியால் மக்களை வதை;தபடி

ஒரு புறம் . குந்த இடமின்றி அகதியாகி அலைவது

மறு புறம் . மருந்தின்றி மரத்துவமனையில் இறப்புக்கள் .

இவ்வாறு எத்தனையோ சொல்லென்னா துயரங்களை

சுமந்த படி அலையும் அந்த மக்களின் நிலையை

ஏன் இந்த உலகமும் அனுசரணையாளர்களும்

கருத்தில் கொள்ளவில்லை....???

மூதுரை புலிகள் தம் வசப் படத்தியபோது

பறந்தடித்து கண்டனத்தையும் அதேவேளை

உடனடியாக மீள் தமது நிலைகளுக்கு திரும்ப

வேண்டும் என்ற சிறப்பு தூதர் ஏன் இப்போ

அந்த அழுத்தத்தை அரசுக்கு கொடுத்து

அந்த படைகளை மீள் தமது நிரவகளுக்கு

அனுப்ப வில்லை...???

இந்த நடவடிக்கைகள் எதனை குறிக்கின்றன...???

தனியே புலிகளை மட்டும் சாடிய படி . அரசு செய்யும் மீறல்களை

காணதது போல் இருப்பது ஏன்...???

இராணுவ ஆக்கிரமித்த பிரதேசங்களை கண்காணிப்பு குழ

சென்று பார்வையிட முடியாதென்றால் ஏன் அந்த அமைப்பு...???

தாம் பிடித்த பகுதிகளை விட்டு வெளியேற மாட்டோம்

என்கிறது அரச படை

அவ்வாறனால் புலிகல் அந்த பிரதேசங்களை தமது கையகப் படுத்துவதை

தவிர்க முடியாது...

அவர்கள் பலமுறை சொல்லியாயிற்று எனவே இதே ஒரு நிரலயை

புலிகள் பின்பற்றுவேயானள் அரசோ அன்றி அனுசரனையாளர்களோ என்ன செய்வார்கள்...???

அரசின் செயல்களை கட்டுப் படுத்த முடியாதவர்கள் புலிகல் அவ்வாறு நடந்தால்

எவ்வாறு தடுக்க முடியும்...??

எனவே இது ஒரு திட்டமிடப்பட்ட நடவடிக்கையாக புலிகள் மீது அரசு போரை

திணித்து வருகிறது.

இது ஆரம்ப கால புலிகளின் ஒர தலைபட்ச சமாதான அறிவிப்பை காட்டுகிறது.

கொழும்பு துறைவரை போள புலிகள் இந்த போர் நிறத்தத்தை கடை பிடித்த போது தான் அதை

விட்டு பின் வாங்கினார்கள்.

காரணம் போர் நிறுத்தத்தை செம்மையாக அமுல் படுத்தவே .

எனவே மீண்டும் இவ்வாறு படைகள் படையெடுப்பை தொடருமேயானால்

புலிகள் கை கட்டி நிற்க போவதில்லை அதற்கு தகுந்த பாடம் புகட்டுவார்கள்.

அந்த அதிர்வுகளின் அமைதஜ நிலையெ தற்போது புலிகள் காக்கும் பொறுமை

இனி வரும் பேச்சுகளும் செயல் முறைக்க வர போவதில்லை .

அரசு தம் வசப் படுத்திய நிலங்களை விட்டு வெளியேறாது

ஆகவே அவர்களை வெளியேற்றும் நிலக்கு புலிகள்

ஆழாகி உள்ளார்கள் அது ஆரம்பமாகும் என்றே அவர்களின்

நகர்வுகள் ஊடாக தெரிகிறது.

அது வரை காத்திருப்போம்.

- வன்னி மைந்தன் -

  • கருத்துக்கள உறவுகள்

தாய மண்ணின் மீது உறுதிப் பற்றுறுதி கொண்டு மக்களோடு வாழ்ந்து அம்மக்களுக்காய் வீழ்ந்த வேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

வேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

வேங்கைகளுக்கு வீரவணக்கங்கள்.

களத்தில் வீரச்சாவடைந்த எமது தமிழீழத் தாயின் மைந்தர்கள்

புதைக்கப்படுவதில்லை, விதைக்கப்படுகிறார்கள்.

எமது வீர வணக்கங்கள்.

20061006003.jpg

20061006002.jpg

20061006004.jpg

20061006005.jpg

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

20061006003.jpg

20061006002.jpg

20061006004.jpg

20061006005.jpg

இறந்தவர்கள் கருணா-அணியை சேர்ந்தவர்களாம்?

பனிச்சங்கேணி மோதலில் 8 படையினருக்கு காயம் - பிரசாத் சமரசிங்க.

->

சடலங்களை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கக்குழுவிடம் கையளிக்கும்போது தெரியும்தானே!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.