Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

கூட்டமைப்பை பதிவு செய்யப்போவதில்லை – லண்டனில் மாவை!

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்
கூட்டமைப்பை பதிவு செய்யப்போவதில்லை – லண்டனில் மாவை!

 

 

Mavai-Senathirajah3-300x233.jpg“தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஒரு தனிக்கட்சியாக பதிவு செய்யப்படமாட்டாது. அது கட்சிகளின் கூட்டமைப்பாகவே தொடர்ந்தும் செயற்படும்” இவ்வாறு லண்டன் வந்துள்ள தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா விருந்துபசார நிகழ்வொன்றின் போது தெரிவித்தார் என லண்டன் செய்திகள் தெரிவித்தன.

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் புதிய தலைவர் மாவை சேனாதிராஜா நேற்று முன்தினம் லண்டன் சென்றார். அங்கு நடைபெற்ற இராப்போசன விருந்துபசார நிகழ்விலேயே மாவை சேனாதிராஜா இதனைத் தெரிவித்தார என லண்டன் செய்தகள் தெரிவித்தன.

‘ரெலோ’ இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்பட்டால் தங்கள் இயக்கத்தை கலைக்கப் போகிறார்கள் எனக் கூறியிருக்கிறார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பதிவு செய்யப்படுமா?’ எனக் கேட்டதற்கே மாவை சேனாதிராஜா மேற்கண்டவாறு பதிலளித்தார்.

“அப்படியானால் இதனை வெளிப்படையாக மக்கள் முன் சொல்லத் தயாரா?” என்று கேட்டபோது “இதைத் தெரிந்துதான் மக்கள் எங்களுக்கு வாக்களித்து உள்ளனர். ஒரு கட்சியாக செயற்படுவதற்கும், கூட்டமைப்பாக செயற்படுவதற்கும் உள்ள வேறுபாட்டை விளங்கிக்கொள்ள முடியாதவர்கள்தான் உங்களைப் போன்று இந்தக் கேள்விகளை எழுப்புகின்றனர்” என்றும் மாவை சேனாதிராஜா தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,

“தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூட்டமைப்பாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதனை தனிக் கட்சியாக பதிவு செய்வது நடைமுறைச் சாத்தியமற்றது” என்றும் “தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைத் தனிக் கட்சியாகப் பதிவு செய்வோம் என்ற வாக்குறுதியை நானோ எனது கட்சித் தலைவர்களோ ஒருபோதும் வழங்கியதில்லை” என்றும் மாவை சேனாதிராஜா அங்கு தெரிவித்தார்.

இது பற்றி அவர் மேலும் தெரிவிக்கையில், “அவரவர் விடுகின்ற அறிக்கைகளுக்கு நாங்கள் பொறுப்பல்ல” என்றும் தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கி ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்ற நம்பிக்கையில் தமிழ் மக்கள் வாக்களித்துள்ள நிலையில் மாவை சேனாதிராஜா அது தொடர்ந்தும் தமிழரசுக்கட்சி, ரெலோ, புளொட், ஈ.பி.ஆர்.எல்.எவ். (சுரேஸ் அணி), தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகவே தனித்து இயங்கும் என்று தெரிவித்துள்ளார்.

http://tamilleader.com/?p=42237

  • கருத்துக்கள உறவுகள்

சிறீலங்கா சுதந்திரக் கட்சி.. பொதுமக்கள் ஐக்கிய முன்னணி என்று தேர்தலில் கூட்டமைப்பாக நிற்க முடியுதுன்னா.. தமிழ் தேசியக் கூட்டமைப்புன்னு நிற்கிறதில.. மாவை ஐயாக்கு என்ன பிரச்சனை..??!!!

 

எல்லாருக்கும்.. பதவி ஆசை உள்ளுக்கு விசாலமாத்தான் இருக்குது.. அது மக்களுக்கு நல்லாவே தெரியும். அதை ஒதுக்கி வைக்கல்லைன்னா.. ஒதுக்கப்படுவீங்க.. மாவை ஐயா..! அதையும் கவனத்தில கொள்ளுங்க...!!!

 

தமிழ் தேசியக் கூட்டமைப்பை.. தனிக்கட்சியாக பதிய வேண்டும் என்றில்லை. கூட்டமைப்பாகவே பதிந்து.. அதற்கென்றான சின்னத்தில்.. பொதுமக்கள் ஐக்கிய முன்னணி போல போட்டி இடலாம் தானே. தமிழரசுக் கட்சின்னு ஏன் போய் தேர்தலில நின்று மக்களை குழப்பனும்..?????!

 

இந்த நியாயமான கேள்விக்கு.. ஐயாவின் பதில் என்ன..?????!

 

மக்களுக்கு விளக்கம் காணாதா.. இல்ல உங்களிடம்.. புலிகள் இல்லாமல்.. போதிய ஒற்றுமை வராதா..???! :icon_idea::rolleyes::)

 

  • கருத்துக்கள உறவுகள்

தல  ....வெறி வந்துட்டுதுபோல....

  • கருத்துக்கள உறவுகள்

1977ஆண்டு தேர்தலில் தமிழரசுக்கட்சி,தமிழ்க்காங்கிரஸ்,இலங்கைத்தொழிலாளர் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஒரு புதிய கட்சியாக தமிழர் விடுதலைக் கூட்டணி என்ற கட்சியைச் பதிவு செய்தனர்.உதயசூரியன் சின்னத்தையும் கட்சிக்கெனப்பதிவு செய்தனர்.தவிகூ

உருவாகிய பின்பு தமிழரசுக்கட்சியின் அதன் சின்னமோ தேவைப்படவில்லை.(தவிகூட்டணியில் தேர்தலில் நின்ற இராசதுரைக்கு எதிராக அமிர்தலிங்கத்தின் ஆதரவுடன் கவிஞர் காசி ஆனந்தன் வீட்டுக்கு சின்னத்தில் நின்று தோற்றது தனிக்கதை.அது இரட்டை அங்கத்தவர் தொகுதி என்பதால் அதில் பெரிது படுத்தப்படவில்லை)2002ஆம்ஆண்டு தமிழ்தேசியக்கூட்டமைப்பு உருவாக்கப்பட்டு நின்ற பொதுத்தேர்தலில் உதயசூரியன் சின்னத்திலேயே போட்டியிட்டனர்.அதற்கு அடுத்த தேர்தலில் ஆனந்த சங்கரி தனக்கு போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படாத கடுப்பில் வழக்குத்தொடுத்து உதயசூரியன் சின்னத்தை கூட்டமைப்பு பயன்படுத்த முடியாமல் கடைசிநேரத்தில் முடக்கினார்.அந்த இக்கட்டான சூழ்நிலையிலேயே தமிழரசுக்கட்சியின் வீட்டுச்சின்னத்தை பொதுச்சின்னமாகப்பயன்படுத்தினர்.அன்று ஆனந்தசங்கரி அவ்வாறு செய்திருக்காவிட்டால் உதயசூரியன் சின்னமே தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் பொதுச்சின்னமாக இருந்திருக்கும்.அதுவரை தமிழரசுக்கட்சியின் மாநாடுகளோ அல்லது பொதுக்குழுவோ செயற்குழு வோ கூடியதாக செய்திகள் இல்லை.பின்னர்அதே ஆனந்த சங்கரியை உள் வாங் குவதற்காக தவிகூட்டணியையும் ஒரு கட்சியாக கூட்டமைப்பு ஏற்றுக்கொண்டது.இந்தச்செய்திகளை தமிழ்மக்கள் மறந்து விடவில்லை.தமிழ்தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாகப பதிவு செய்யாமல் தமிழரசுக்கட்சியை முன்னிலைப்படுத்தினால் கூட்டமைப்பு பிளவுபட்டு தமிழர் பலம் சிதைக்கப்படுவது உறுதி.மாவை இதை உணர்ந்து செயற்பட்டால் அது தமிழ்மக்களுக்குச் செய்யும் மிகப்பெரும் சேவையாக அமையும்.

  • கருத்துக்கள உறவுகள்

நல்லது நடந்தால் சரி

உள்ளதும் இல்லாமல் போகச்செய்யாமல் விட்டால் சரி...

Edited by விசுகு

  • கருத்துக்கள உறவுகள்

ததலைவர் பதவி கிடைத்ததும்.....அடுத்து முதலமச்சர் பதவி...ஆசை...ஆசை...

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.