Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

முதலமைச்சரைத் தீர்மானிக்க முன்னாள் போராளிகளால் முடியும்! சிவாஜிலிங்கம் சீற்றம்!!

Featured Replies

வடமாகாணசபையில் தமிழரசுக்கட்சி சாராத 13 உறுப்பினர்கள் உள்ளனர். முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறுவது போன்று அவர்கள் அனைவரும் முன்னாள் போராட்ட அமைப்பினை சேர்ந்தவர்கள். அவர்கள் ஒன்று கூடி முதலமைச்சர் விடயத்தில் தேவையற்ற முடிவுகள் எடுப்பதை தவிர்க்க பொறுப்பற்ற விதத்தில் கருத்துக்களை முன்வைப்பதை அவர் கைவிட வேண்டுமென எச்சரித்துள்ளார் கே.சிவாஜிலிங்கம்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று அவர் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டில் மேலும் தெரிவிக்கையினில்:

வடமாகாணசபைத் தேர்தல் காலத்தில் பிரபாகரனை மாவீரனென்றும் அவரது சொந்த மண்ணான வல்வெட்டித்துறையில் வைத்து அதனை கூறுவதில் பெருமைப்படுவதாகவும் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கூறியிருந்தார்.

அதே போன்று கூட்டமைப்பிலுள்ள கட்சிகள் இணைத்து கோரினால் மட்டுமே அரசியலிற்கு வருவதாகவும் தெரிவித்தே முதலமைச்சர் கதிரைக்கும் வந்துள்ளார்.

அவர் கூட்டமைப்பிலுள்ள பிற கட்சிகள் பற்றி பொறுப்பற்று கருத்து கூறுவதை முதலில் கைவிடவேண்டும். அவர்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கெடுத்தவர்கள். கடந்த காலத்தில் திம்பு பேச்சுவார்த்தையாயினும் சரி பல்வேறு காலகட்டங்களிலுமாயினும் சரி போராட்ட அமைப்புக்களை கூட்டணியாயினும் சரி தமிழரசுக்கட்சியாயினும் சரி அரவணைத்தே சென்றிருந்தன.

கடந்த கால வரலாறுகளை மறந்து இவ்வாறு கருத்துக்களை முதலமைச்சர் விக்கினேஸ்வரன் முன்வைப்பது இதுவே கடைசி சந்தர்ப்பமாக இருக்கட்டும். வடமாகாணசபையில் தமிழரசுக்கட்சி சாராத 13 உறுப்பினர்கள் உள்ளனர்.

தமிழரசுக்கட்சியிலுள்ள மீதி 17 பேரில் பலர் நடுநிலையாக செயற்படுவார்கள். எனவே இவர்;கள் அனைவராலும் முதலமைச்சர் தொடர்பில்; தீர்மானிக்க முடியும். இதனை அவர் புரிந்து கொள்ளவேண்டும்.
தலைவர் பிரபாகரனே தமிழரசுக்கட்சிக்கு புத்துயிர் ஊட்ட ஆலோசனை வழங்கியிருந்தார். அவ்வாறாயின் புலிகளால் தோற்றுவிக்கப்பட்ட கூட்டமைப்பு வேண்டாமெனும் தமிழரசு பிரபலங்கள் தமிழரசுக்கட்சியையும் வேண்டாமென்பார்களாவென அவர் கேள்வி எழுப்பினார்.http://www.pathivu.com/news/34395/57//d,article_full.aspx

  • கருத்துக்கள உறவுகள்

------. மாவையின் முட்டாள்தனம் இந்த ----- கூட்டமைப்புக்குள் மீண்டும் கொண்டுவந்த்ஹது.

Edited by நிழலி
அவமதிக்கும் சொற்கள் நீக்கப்பட்டன. கள விதிகளை பின்பற்றவும்

  • கருத்துக்கள உறவுகள்

பாட்டுக்கு கதம்பமாலை அளித்தால் அது என்ன செய்யும்? :o:D

  • கருத்துக்கள உறவுகள்

முதலமைச்சரும் பொறுப்பான விதத்தில் கதைப்பது நல்லது தான். ஒரு கட்சி என்ற ஆன பிற்பாடு, அதற்குள் இப்படிக் குழப்பங்கள் ஏற்படுத்துவது சரியன்று. அவ்வாறே பதிலுக்குச் சிவாஜிலிங்கம் கொதிப்பதும் சரியல்ல. அதை அவருக்கு முதலில் தனிப்பட்டவிதத்தில் அறிவித்திருக்கலாம்....

  • கருத்துக்கள உறவுகள்

விக்கி ஐயாக்கு தேவையில்லாத வாய் உளறல் கூடிப்போச்சுது.

 

மன்னார் ஆயரும்.. விக்கி ஐயாவுக்கு மக்கள் மீது அக்கறை இல்லை என்று குற்றம்சாட்டி இருக்கிறார். அவருக்கு மக்கள் மீது மட்டுமல்ல.. தமிழ் கூட்டமைப்பை ஒற்றுமையாக வைச்சிருப்பதிலும் அக்கறை இல்லப் போலவே செயற்படுகிறார். இது அபந்தமானது.

 

தமிழர்களை இனப்படுகொலை செய்த சிங்கள அரசுகளின் நீதிமன்றங்களில்.. நீதிபதியாக இருந்த போது வராத குற்ற உணர்வு.. எப்போதோ ஒரு கணத்தில் ஆவாது.. சிங்களவர்களின் அநீதிக்கு எதிராக போராடிய போராளி அமைப்புக்கள் மீது.. ஐயா வார்த்தைகளை அள்ளி வீசுவது அநாவசியமானது. இன்றைய சூழ்நிலைக்கு அது அவசியமும் இல்லை.

 

சிங்கள அரசியல்வாதிகள்.. ஜே வி பி மீது இவ்வாறான குற்றங்கள் வைப்பதில்லை. அதேபோல்.. ஜே வி பியை கொல்லுறம் என்று ஆயிரக்கணக்கான சிங்கள் இளைஞர்களைக் கொன்ற சிறீலங்கா சுதந்திரக் கட்சி மீதும் சரி.. ஐக்கிய தேசியக் கட்சி மீதும் சரி.. விக்கி ஐயா இவ்வாறான ஒரு குற்றச்சாட்டை முன்வைத்து.. சிங்களவர்களிடம்.. இரத்தக்கறை படியாத கட்சி அரசியலை ஸ்தாபிக்க சொல்வாரா..??????!

 

சும்மா கனவு காணப்படாது. யதார்த்தத்தை விளங்கிக் கொண்டு ஐயா கதைப்பது நல்லம். தமிழரசுக் கட்சி என்றாப் போல.. அது இரத்தக்கறை காணாத கட்சி கிடையாது. அதுவும் சண்டித்தன  அரசியல் செய்த கட்சி தான். இந்த உலகில் தூய ஜனநாயகம் என்ற ஒன்றில்லை.. எங்கும்..!!! :icon_idea::rolleyes:

Edited by nedukkalapoovan

சிவாஜிலிங்கம் ஐயாக்கு உழைப்பு கம்மி போல சும்மா உள்ளவர்களை கிண்டி விடுறார் அப்படி வாழ்த்தே பழகிய ஆக்கள் வேறு என்ன செய்வது .. :unsure:

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.