Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஹாங்காங்கிற்கும் சீனாவிற்கும் என்ன தான் பிரச்சினை?

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

உலகத்தில் பல சிக்கலான அரசியல் மற்றும் பூகோள பிரச்சினைகள் உள்ளன. அதில் ஒன்று தான் சீனா-ஹாங்காங்கின் "ஒரு நாடு இரு கொள்கை" பிரச்சினை.


கடந்த வாரம் பங்குச்சந்தையில் இந்த பிரச்சினை அப்படியே மெதுவாக உரசி சென்றது. ஆனால் அவ்வளவு தாக்கம் ஏற்படுத்த வில்லை. அதற்கு மேலும் பெரிதாகாது என்ற ஒரு அதீத நம்பிக்கையும் காரணமாக அமைந்தது. ஆனாலும் இது ஒரு நம்பிக்கை தான். இன்னும் பிரச்சினை தீர்ந்த பாடில்லை.

மீண்டும் இந்த பிரச்சினை  வந்தால் பங்குச்சந்தையில் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அறிவதற்கு இந்த பிரச்சினையின் பின்புலத்தை அறிவதும் அவசியமாகிறது. அதனை இந்த கட்டுரையில் பகிர்கிறோம்.



102053401-456514700.530x298.jpg?v=141225


1842ல் பிரிட்டனின் காலனி பிடிக்கும் கொள்கையின் காரணமாக ஹாங்காங் சீனாவிடமிருந்து பிரிட்டிஷ் கைக்கு சென்றது. அந்த சமயத்தில் சீனா ஒன்றும் தற்போது உள்ளது போல் வலுவாக இல்லை. இதனால் பிரிட்டிஷ் அரசு எளிதாக ஹாங்காங்கை 155 வருடத்திற்கு குத்தகையாக பெற்றது.

ஹாங்காங்கின் அமைவிடமும் மற்ற இடங்களுடன் ஏற்படுத்தப்பட்ட கடல் வணிகத்தொடர்புகளும் பிரிட்டன் இவ்வளவு ஆசையை ஹாங்காங் மீது வைப்பதற்கு காரணமாக அமைந்தது. இதனால் ஹாங்காங் முழுமையாக வர்த்தகத் தொடர்புகளுக்காகவே இரண்டு நூற்றாண்டுகளாக பயன்படுத்தப்பட்டு வந்தது.

வர்த்தகத்தை அதிகரிக்கும் பொருட்டு மிகக் குறைவான வரி, நிறுவனங்கள் துவங்க எந்த லைசென்சும் பெற வேண்டாம் என்று பல சலுகைகள் அள்ளித்தரப்பட்டன. இதனால் ஹாங்காங் ஆசியாவில் இருக்கும் ஒரு ஐரோப்பிய நாடு போன்றே வளர்ச்சி அடைந்தது.

இந்த 155 வருட குத்தகை 1997ல் முடிவு பெற்றது.  அப்பொழுது ஹாங்காங்கை என்ன செய்ய வேண்டும் என்ற ஒரு பெரிய குழப்பம் ஏற்பட்டது. மீண்டும் சீனாவிற்கு கொடுக்க வேண்டும் என்பது தான் ஒப்பந்தம்.

ஆனால் சீனா பின்பற்றுவதோ கம்யூனிச கொள்கையின் படி உள்ள முழுமையான மூடிய பொருளாதாரம். இங்கு வீடு கூட ஒரு தனி மனிதனால் எளிதில் வாங்க முடியாது.

ஆனால் ஹாங்காங்கில் பின்பற்றப்படுவது முழுமையான சுதந்திர திறந்த பொருளாதாரம். அரசே தனியாரால் நடத்தப்படுவது போல் உள்ள அமைப்பு. இப்படி இரு வேறு துருவங்கள் சேர்ந்து வேலை செய்வது என்பது கற்பனையில் கூட நடக்காது.

இதனால் பிரிட்டனும் சீனாவும் ஒரு வித்தியாசமான ஒப்பந்தத்தை செய்து கொண்டன. அதன் படி "ஒரு நாடு, இரு கொள்கை" என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

பாதுகாப்பு மற்றும் வெளியுறவு துறைகளை மட்டும் சீனா பார்த்துக் கொள்ளும். மற்ற எந்த உள்நாட்டு பிரச்சினைகளில் சீனா தலையிடாது என்பது தான் அந்த ஒப்பந்தத்தின் சாராம்சம். இதனால் ஹாங்காங் முன்பிருந்த சுதந்திர வர்த்தகத்தை பயன்படுத்தவும் வாய்ப்பு ஏற்பட்டது.

இன்னும் ஹாங்காங் நாணயம் கூட அவர்களது டாலரிலே உள்ளது. அவர்களது முழு வருமானத்தில் சீனாவிற்கு எந்த பங்கும் கிடையாது என்றதொரு தன்னாட்சியான சூழ்நிலை ஹாங்காங்கிற்கு கிடைத்தது.

ஆனால் இந்த ஒப்பந்தம் ஹாங்காங்கின் அரசியல் சூழலுக்கு ஒரு சரியான தீர்வு கொடுக்காதது தான் ஒரு பிரச்சினையாக மாறிப் போனது.

அதாவது அவர்கள் நாட்டில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதம மந்திரியோ, ஜனாதிபதியோ கிடையாது. ஹாங்காங்கின் தலைவர் நிறுவனத்தில் உள்ளது போல் CEO(Chief Executive Officer) என்றே அழைக்கப்படுகிறார். தொழிலதிபர்கள் அதீக்கத்தில் இவர் தேர்ந்தெடுக்கப்படுவதால் இப்படி பெயர் கொடுக்கப்பட்டுள்ளது.

இவர் தேர்தெடுக்கப்படும் முறை கொஞ்சம் வித்தியாசமானது. நம்ம ஊர் எம்பிக்கள் போல் 60 உறுப்பினர்கள் கொண்ட சபை தான் இந்த சிஎஒவைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

ஆனால் இந்த உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு மட்டும் தான் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவர். மீதி இரண்டு பங்கும் தொழிலதிபர்கள் போன்றவர்களைக் கொண்டு நிரப்பப்படும். இதனால் மக்களால் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் பெரும்பான்மையாக இல்லாததால் மக்களால் எந்த அதிகாரமும் செலுத்த முடியாது.

சீனா இந்த நியமன உறுப்பினர்களை தமக்கு சாதகமாகனவர்களைக் கொண்டு நிரப்பி அதிகாரத்தை கைப்பற்றி விடுகிறது. இது தான் தற்போதைய போராட்டத்திற்கு மூலக்காரணமாக உள்ளது.

2017ல் வரும் தேர்தலில் ஹாங்காங் மக்கள் தங்களுக்கு அதிக அதிகாரம் கொடுக்க வேண்டும் என்று நடத்திய போராட்டம் தான் கடந்த வாரம் சீனாவிற்கு பெரிய பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் முழுமையாக நிர்வாக ஸ்தம்பித்தது.



WO-AT902_HKPROT_G_20140929181231.jpg

ஹாங்காங்கில் ஏற்படும் பிரச்சினை உலக அளவில் அதிக தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்பு உள்ளது. ஏனென்றால் உலகின் முக்கிய வங்கிகள் பல ஹாங்காங்கை தலைமையாக வைத்தே செயல்படுகின்றன.

இது போக சீனாவில் வெளிநாட்டு முதலீடுகளுக்கு பல கட்டுப்பாடுகள் உள்ளதால் அவர்களது பெரும்பாலான வெளிநாட்டு முதலீடுகள் ஹாங்காங் வழியாகவே வருகின்றன. இது தடைபடும் பட்சத்தில் சீனாவின் பொருளாதரத்தில் பெரிய தேக்கத்தை ஏற்படுத்தும். சீனாவின் பொருளாதாரம் பாதிக்கப்பட்டால் அது உலக அளவில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும்.

இந்த கட்டாயங்கள் காரணமாக தற்போது சீனா கொஞ்சம் இறங்கி வந்துள்ளது.

சீனாவை பொறுத்தவரை ஹாங்காங் கம்யூனிச நாடாக வேண்டும் என்று அவர்களும் விரும்பவில்லை. ஏனென்றால், அவர்களுக்கும் வெளிநாட்டு முதலீடுகள் வருவதற்கு ஹாங்காங் போன்றதொரு வாய்க்கால் வழி தேவைப்படுகிறது. அதனால் இப்பொழுது உள்ளது போலே இருந்தால் போதும் என்று நினைக்கிறார்கள். ஆனால் அதிகாரத்தை மட்டும் தாங்கள் வைத்துக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

இதனால் மீண்டும் ஒரு டுபாக்கூர் திட்டத்தோடு வந்து உள்ளார்கள். அதன் படி, அணைத்து உறுப்பினர்களையும் மக்களே தேர்ந்தெடுக்கலாம். ஆனால் சீனா சொல்லும் வேட்பாளர்களில் ஒருவரைத் தான் தேர்ந்தெடுக்க வேண்டும் என்று ஒரு ட்விஸ்ட் வைத்து உள்ளார்கள்.

நல்லவர்களை விட்டு விட்டு அயோக்கியர்களில் சிறந்த நல்லவரை தேர்ந்தெடுங்கள் என்பது போல் உள்ள இந்த விதி கேலிக்குரியதாக மாறி உள்ளது. இதனால் மீண்டும் இழுபறி நீடிக்கிறது.

இந்த பிரச்சினையில் தீர்வு கிடைக்காமல் போனால் அது உலக அளவில் பொருளாதாரத்தை பாதிக்கும் காரணிகளுள் ஒன்றாகவும் மாற வாய்ப்பு உள்ளது. இதனால் பங்கு முதலீட்டில் உள்ளவர்களும் கவனம் செலுத்துவது தேவையாக உள்ளது.

English Summary:
Hongkong political issue makes tension in world economy.

http://www.revmuthal.com

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

நன்றி பெருமாள்.

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனின், காலனியாதிக்கத்தில்... இருந்த எந்த ஒரு நாடும் உருப்பட்டதாக தெரியவில்லை.
அவர்கள் நாட்டை விட்டு, வெளியேறும் போது...

அந்த நாட்டுக்கு ஒரு தீராத தலைவலியை உண்டு பண்ணிவிட்டுத்தான் போவார்கள்.
இதில்... ஹாங்காங்கும், விதி விலக்கல்ல.
இணைப்பிற்கு நன்றி பெருமாள்.

Edited by தமிழ் சிறி

  • கருத்துக்கள உறவுகள்

பிரிட்டனின், காலனியாதிக்கத்தில்... இருந்த எந்த ஒரு நாடும் உருப்பட்டதாக தெரியவில்லை.

அவர்கள் நாட்டை விட்டு, வெளியேறும் போது...

அந்த நாட்டுக்கு ஒரு தீராத தலைவலியை உண்டு பண்ணிவிட்டுத்தான் போவார்கள்.

இதில்... ஹாங்காங்கும், விதி விலக்கல்ல.

இணைப்பிற்கு நன்றி பெருமாள்.

 

இல்லை சிறியர்.
 
பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருந்த நாடுகளில், மிகச் சிறப்பாக கவனிக்கப் பட்டு வளர்க்கப் பட்ட நாடு தான் ஹாங்காங். அங்கே ஒரே மொழி, சீனர் மட்டுமே  என்பதால் உள்ளக பிரச்சனைகள் இல்லை.
 
சீனாவிடம் இருந்து அந்த நேரம் விலைக்கு வாங்காமல், குத்தகைக்கு எடுத்ததுக்கு பின்னர் வருத்தப் பட்டது பிரிட்டன். 50 வருடங்களுக்கு கம்முனிசம் வராது என்ற உறுதியுடன் தான் சீனா, பொறுப்பெடுத்தது.  
 
எனினும் தங்க முட்டை இடும் கொங்கொங் வாத்தினை  கொல்ல சீனர்கள் முட்டாள்கள் அல்ல என உறுதியாக சொல்ல முடியும்.
 
ஏற்கனேவே குறிப் பிட்டிருகிறேன்.
 
கொங்கொங்கினை, ஆசியாவில் சீனாவிடம் இழந்த மேற்கு ஒரு பொருளாதார தளம் தேடலில் இருக்கிறது. 
 
இந்த தேடலில், சீனர்களின் சிங்கப்பூரோ, இஸ்லாமிய மலேசியாவோ. யுத்த பயம் உள்ள கொரியாவோ, அல்லது அரசியல் உறுதிப் பாடு இல்லா தாய்லாந்தோ அல்ல..
 
இஸ்ரேலைப் போல, தமிழ் அகதிகள் பலரை தமது குடி மக்களாய் கொண்டதால், இலங்கை அல்லது அதன் வடக்கு கிழக்கு மட்டுமே.... நீண்டகால நம்பிக்கைக்கு உரியது -  (சிலர் முட்டாள்த்தனமாக திருகோணமலை ராணுவ தளம் என்பர். பாரிய விமானம் தாங்கும் கப்பலகள் வந்த பின் அது எல்லாம் இப்ப முக்கியம் இல்லை.)
 
இந்த பொருளாதார நோக்கில் தான் புலிகள் அழிக்க உதவிகள் கொடுக்கப் பட்டது. இதே வகையில் தான், சீன ஆதரவு ராஜபக்சே அகற்றப் பட்டு மேற்கு ஆதரவு ரணில் வருவார். 
 
பாருங்கள், ரணிலுக்கு கட்சிக்குள் வரும் சஜித் போன்றோரின் எதிர்ப்பு எவ்வாறு இல்லாமல் பண்ணப் படுகின்றது என்று. ரணில் தான் அடுத்த ஜனாதிபதி. அதே வேளை அவர் பாராளுமன்ற ஜனநாயகத்தினை கொண்டுவருவார்.
 
எவ்வாறு என்று கேட்பீர்கள். பௌத்தர்களின் வாக்குகள் இரண்டாக பிரியுமாறு சரத் அல்லது சந்திரிகா நிறுத்தப் பட, தெற்கு கிறிஸ்தவர்கள், முழு சிறுபான்மை வாக்கு ரணிலுக்கு...
 
என்னைப் பொறுத்த வரை ரணில் ஒரு கறை படியா கைக்கு உரியவர், ஆனால் பாவம்  ஆளுமை இல்லாதவர்.
பார்ப்போம்.
 
புலிகளை அவர் தான் உடைத்தார் என்ற கதைகள் எல்லாம் பழையது. 
 
புலிகளையும், தமிழரையும் அழித்த போர்த் தளபதி சரத்துக்கே  வாக்களித்தவர்கள் நம்மவர்கள் 

 

Edited by Nathamuni

  • கருத்துக்கள உறவுகள்

------

சீனாவிடம் இருந்து அந்த நேரம் விலைக்கு வாங்காமல், குத்தகைக்கு எடுத்ததுக்கு பின்னர் வருத்தப் பட்டது பிரிட்டன். 50 வருடங்களுக்கு கம்முனிசம் வராது என்ற உறுதியுடன் தான் சீனா, பொறுப்பெடுத்தது.  
 
எனினும் தங்க முட்டை இடும் கொங்கொங் வாத்தினை  கொல்ல சீனர்கள் முட்டாள்கள் அல்ல என உறுதியாக சொல்ல முடியும்.
------

 

நாதமுனி....

உங்களது  கணிப்பு ரசிக்கக் கூடியதாக இருந்தாலும்,

கொங்கொங் - சீன பிரச்சினை, வருடங்கள் அதிகரிக்க பெரிய பிரச்சினையை கொண்டு வரும்.

உதாரணத்துக்கு... தமிழீழம் - ஸ்ரீலங்கா.

1948´ல் இருந்து, 1956´ம் ஆண்டு மட்டும் நல்லாய் போய்க் கொண்டிருந்தது.

பிறகு, பண்டார நாயக்கா வந்த பிறகு, சனி பிடிக்கத் தொடங்கியது.

இப்பிடி... இந்தியா - பாகிஸ்தான் என்று பல உதாரணங்களை காண முடியும்.

இன்னும்...போகப் போக, பிரிட்டன் காயை நகர்த்தி, அவர்களுக்கு...அலுப்பு  கொடுக்கும் என்றே நினைக்கின்றேன்.

 

  • கருத்துக்கள உறவுகள்

நாதமுனி....

உங்களது  கணிப்பு ரசிக்கக் கூடியதாக இருந்தாலும்,

கொங்கொங் - சீன பிரச்சினை, வருடங்கள் அதிகரிக்க பெரிய பிரச்சினையை கொண்டு வரும்.

உதாரணத்துக்கு... தமிழீழம் - ஸ்ரீலங்கா.

1948´ல் இருந்து, 1956´ம் ஆண்டு மட்டும் நல்லாய் போய்க் கொண்டிருந்தது.

பிறகு, பண்டார நாயக்கா வந்த பிறகு, சனி பிடிக்கத் தொடங்கியது.

இப்பிடி... இந்தியா - பாகிஸ்தான் என்று பல உதாரணங்களை காண முடியும்.

இன்னும்...போகப் போக, பிரிட்டன் காயை நகர்த்தி, அவர்களுக்கு...அலுப்பு  கொடுக்கும் என்றே நினைக்கின்றேன்.

 

 

சீனா மிகவும் பலம் மிக்கது. அதன் காரணமாக தான் பிரிட்டன் கையை விட்டது. பிரிட்டன் அலுப்புக் கொடுக்க முடியாது. 
 
நீங்கள் சொல்லும் பிரச்சனை வராது . ஏனெனில் சீனா  மெதுவாக, சொல்லாமல் கொள்ளாமல் முதலாளித்துவத்தினை கடைப் பிடிக்கத் தொடங்கி உள்ளது.
 
alibaba.com என்ற சீன நிறுவனம் நியூயார்க் பங்குச் சந்தையில் வணிகம் செய்யும் அளவுக்கு நிலை மாறி உள்ளது.
 
ஹாங்காங் இன் பிரச்சனை நியாயமானது. எமக்கு யாரயிருந்தாலும் ஜனநாயக ரீதியிலான தலைமை வேண்டும். 
 
பீகிங்கீனால் திணிக்கப் படும் தலைமை வேண்டாம். பெரும் பாலும் சீனா இறங்கி வரும். இல்லாவிடில், ஸ்காட்லாந்து போல சுஜ நிர்ணய உரிமை என்று தடாலடியாகப் போய் விடுவார்கள் என்ற பயம் உள்ளது. இதற்கான ஒப்பந்த சரத்தினை பிரிட்டன் போட்டு உள்ளது.  
 
எமது பண்டா பரதேசிகளை  இங்கே ஒப்பிட முடியாது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து பௌத்தர் என்று தம்மை அடையாள படுத்திய மேல்த்தட்டு கிறிஸ்தவர்களால் தானே பிரச்னை. (DS Senanayaka, Dudly Senanayaka, John Kothalawala, SWRD Banda, Mrs Banda, Miss Banda (Chandrika), JR Jeyawardena, Mahinda Percy Rajapakse),
  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

 

 

எமது பண்டா பரதேசிகளை  இங்கே ஒப்பிட முடியாது. இலங்கை சுதந்திரம் அடைந்த காலத்தில் இருந்து பௌத்தர் என்று தம்மை அடையாள படுத்திய மேல்த்தட்டு கிறிஸ்தவர்களால் தானே பிரச்னை. (DS Senanayaka, Dudly Senanayaka, John Kothalawala, SWRD Banda, Mrs Banda, Miss Banda (Chandrika), JR Jeyawardena, Mahinda Percy Rajapakse),

:)

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

சில சமயம் சரித்திர நிகழ்வுகள் நடக்கும்போது அந்த மாற்றங்கள் அல்லது சூழ்நிலைகள் எதிர்காலத்தில் எப்படி இருக்கும் என்றோ அல்லது வேறு என்ன மாதிரி மாற்றங்கள் நேரக்கூடும் என்றெல்லாம் நாம் யோசித்து இருக்கலாம். நல்லது நேரும்போது, இந்த நல்ல காலம் தொடருமா, அல்லது இடர்பாடுகள் வருமா என்ற கவலையும் சஞ்சலமும் இருக்கும்.

அப்படி ஒரு கலவையான சூழ்நிலையில்தான் ஹாங்காங் 1997 ஜூலை முதல் தேதியன்று இங்கிலாந்திடமிருந்து சீனாவிற்கு கை மாறிற்று. வரலாற்றுப்படி, 19ம் நூற்றாண்டில் முதலாம் அபின் போருக்குப் பின், சீனா பல பிரதேசங்களை இங்கிலாந்திடம் இழந்தது. 1898 ம் ஆண்டு ஹாங்காங் தீவுகள் இங்கிலாந்திடம் 100 வருட குத்தகையில் அளிக்கப்பட்டு, ஹாங்காங் இங்கிலாந்தின் காலனிகளில் ஒன்றாகத் திகழ்ந்து வந்தது.1984ல் சீனாவும் இங்கிலாந்தும் செய்து கொண்ட ஒப்பந்தப்படி அந்தக் குத்தகை முடியும் தருவாயில், 1997 ம் ஆண்டு ஜூலை முதல் தேதி இங்கிலாந்து ஹாங்காங்கை திருப்பித் தந்தது.

கைமாறும் உடன்படிக்கையில், 50 ஆண்டுகள் வரையில் ஹாங்காங்கின் ஜனநாயக உரிமைகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது என்றும், சீனாவின் கொள்கைகள் எந்த விதத்திலும் ஹாங்காங்கை பாதிக்காது என்றும் சீனா உறுதியளித்து இருந்தது. பிரதான தேசமான சீனாவின் மற்ற மாநிலங்களைப் போல் அல்லாமல், ஹாங்காங்கிற்கு சிறப்பு விலக்குகள் அளித்து, அதை “ஹாங்காங் சிறப்பு நிர்வாகப் பகுதி” என்று அறிவித்தது. ஒருபடி மேலே போய், ஒரு சீன அதிகாரி, புனித நூல்களிலிருந்து “தர்மம்” பற்றி மேற்கோள்கள் காட்டி, சீனா எப்படி வணிக தர்மத்தை நிலை நாட்டும் என்று ஆணித்திரமாகக் கூறியதாக செய்திகள் வெளி வந்தன – பின்குறிப்புடன்: வணிகர்கள் பேசாமல் – அரசியலில் மூக்கை நுழைக்காமல் – தங்கள் வணிகத்தை மேம்படுத்துவதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் வரையில் ஒரு பிரச்சனையும் இருக்காது என்றும் அந்த அதிகாரி குறிப்பிட்டதாக அந்தச் செய்திகள் கூறின. சந்தைப் பொருளாதாரம், மற்றும் சுயேச்சையான பொருளாதார சூழ் நிலையம் கைமாறுதலுக்குப் பிறகும் தொடரும் என்றும் புதிய தலைவர் துங் சீவா உறுதியளித்திருந்தார்.

குறிப்பாக இந்திய வணிகர்களுக்கு எந்த விதப் பாதிப்பும் இருக்காது என்று குறிப்பிடப்பட்டது. ஹாங்காங்கின் மக்கள தொகையில் அரை சதவிகிதம் மட்டுமே இருக்கும் இந்தியர்கள் ஹாங்காங்கின் மொத்த வியாபாரத்தின் 10 சதவிகித அளவை நிர்வகிக்கின்றனர் என்று புள்ளிவிவரம் சொல்கிறது. இப்படிப் பொருளாதார நிலையில் வலுவான ஒரு இனத்தினரை சீனா விட்டுக்கொடுக்காது என்றும் கூறப்பட்டது.

இருந்தாலும் பரவலாக மக்களிடம் இதுவரையில் இங்கிலாந்து பிரஜைகளாக ஜனநாயக முறையில் வாழ்ந்திருந்த தங்கள் வாழ்க்கை இனி எப்படி இருக்கும்; சீனாவின் கம்யூனிசக் கொள்கைகளும், ஆதிக்க முறைகளும் தங்கள் வாழ்வைப் பாதிக்குமா, என்றெல்லாம் பலவிதக் குழப்பங்கள் நிலவின.

அப்போது, சிங்கப்பூரிலிருந்து அந்த நிகழ்வைப் பற்றி பத்திரிகைகளுக்கு செய்திகள் அனுப்பிக்கொண்டிருந்த நானும் என்னைப் போன்ற செய்தியாளர்கள் பலரும் தங்கள் செய்திகளில் மக்களின் அந்தக் கவலையையும் சஞ்சலங்களையும் பிரதிபலித்தனர்.

இன்று 17 ஆண்டுகள் கழித்து ஹாங்காங்கிலிருந்து வரும் ஜனநாயகப் போராட்டச் செய்திகளைப் பார்த்தால் அந்தக் கவலைகளுக்கு அர்த்தமுள்ளதோ என்று தோன்றுகிறது.

1997 ம் வருடம் நான் அனுப்பிய அந்தச் செய்திகளில் ஹாங்காங் இந்தியர்களின் கலக்கங்கள் குறிப்பாக அதிகம் பதிவாகியிருந்தன.

இனி, என் தடம் சொல்லும் கதைகளில் பின்னோக்கி அடுத்த பயணம்.

செய்தி நாள்: 11.2.1997. இடம் – சிங்கப்பூர்.

“ஹாங்காங் இந்தியர்களிடையே மகிழ்ச்சி நிலவியது. காரணம்? பிரிட்டிஷ் பிரஜைகளாக பல தலைமுறைகளாக ஹாங்காங்கில் வாழ்ந்த தாங்கள் ஜூலை முதல் தேதி நாடு சீனாவிடம் கைமாறும்போது தாம் நாடற்றவர்களாக ஆகிவிடுவோமோ என்ற அச்சத்தில் இருந்தவர்களுக்கு, சீனர் அல்லாத சிறுபான்மை இனத்தவருக்கு பிரிட்டிஷ் குடியுரிமை அளிக்கப்படும் என்று இங்கிலாந்து அறிவித்து விட்டது.

ஹாங்காங்கில் சீனர்கள் 97 சதவிகிதம். மற்றவர்கள் 3 சதவிகிதம். இந்த 3 சதவிகிதத்தில், இந்தியர், பிலிப்பைன்ஸ் நாட்டினர், மற்றும் ஐரோப்பியர்களும் அடக்கம். இவர்களில் இந்தியர் ஏழில் ஒரு பங்கு.

ஹாங்காங்கில் இருக்கும் சீனர்கள் ஜூலை முதல் தேதிக்குப் பின்னர் இயல்பாக சீனப் பிரஜைகளாகிவிடுவர். ஆனால் இந்தியர்கள், மற்ற சிறுபான்மை இனத்தினர் நிலை அப்படி அல்ல. அவர்கள் சீன அரசியல் சட்டமைப்பின் படி அந்நிய இனத்தினர் என்பதால் சீனக் குடியுரிமை பெற முடியாது. இரட்டைக் குடியுரிமை முறையும் அங்கே வழக்கமில்லை.

சுமார் 8000 சிறுபான்மை இனத்தினர் இவ்வாறு நாடற்ற நிலையில் விடப்படுவார்கள் என்று கருதப்பட்டது. இந்த சூழ்நிலையில் குறிப்பிடத் தகுந்த அம்சம் என்னவென்றால் நாடற்ற நிலையில் இருக்க நேரிடும் சிறுபான்மையினரில் பாதிக்கு மேற்பட்டவர்கள் ஆசிய நாடுகளிலிருந்து, குறிப்பாகப் பழைய பிரிட்டிஷ் இந்தியாவிலிருந்து – அதாவது பங்களாதேஷ், பாகிஸ்தான், இலங்கை போன்ற பகுதிகளிலிருந்து குடியேறியவர்கள். எனவே இன்றைய இந்தியப் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று இனம் கண்டுபிடிப்பதோ, அதைக் கொண்டு இந்தியக் குடியுரிமை வழங்குவதோ இயலாத காரியம். அதனாலேயே இந்தியா மௌனம் காத்தது என்று சில ஹாங்காங் இந்தியர் நினைத்தார்கள். தற்போது பெரும்பாலும் இவர்களிடம் இருப்பது “பிரிட்டிஷ் சார்ந்த பிரதேச சான்றிதழ்”(British Dependent Territory Certificate). ஆனால் இவர்கள் வைத்து இருக்கும் பாஸ்போர்ட்டில் வெளி நாடு வாழ் பிரிட்டிஷ் பிரஜைகள்- British National(Overseas) என்ற சான்றிதழ்கள் இருந்தன. பிரச்சனை என்னவென்றால், இவை வெறும் பயணச் சான்றிதழ் மட்டுமே. இதை வைத்துக் குடியுரிமையைப் பெற முடியாது; அடுத்த தலைமுறைக்குக் கொடுக்கவும் முடியாது.

இந்த நிலைமையில் இந்தியர்கள் இந்தியா திரும்பலாம் என்றால் இந்திய அரசியல் சட்டமைப்பின் படி, இந்தியக் குடியுரிமையைப் பெறுவதற்கு அவர்கள் இந்தியாவில் தொடர்ந்து குறிப்பிட்ட வருடங்கள் இருந்திருக்க வேண்டும். தவிர, இத்தனை காலமும் பிரிட்டிஷ் பிரஜைகளாக ஹாங்காங்கில் வாழ்ந்து பழகியவர்களுக்குத் திடீரென்று இந்தியா திரும்புவதென்பது கடினமான ஒன்று. பெரும்பாலானவர்களுக்கு அங்கே உற்றார், உறவினர் என்று யாரும் கிடையாது. இந்திய அரசியல் சட்டமும் இரட்டைக் குடியுரிமையைக் கொடுக்காது.

இதற்கு இடையில் ஹாங்காங் இந்தியத் தலைவர்கள் சிலர் இப்படி நாடற்ற நிலையில் உள்ள இந்த ஹாங்காங் சிறுபான்மை இனத்தவர்களை இங்கிலாந்து தன நாட்டுகே குடிமக்களாக அறிவிக்க வேண்டும் என்று முயற்சி செய்தனர்.

“இங்கிலாந்து அரசிடம் பேச்சு வார்த்தைகள் நடத்தப் பலவிதக் குழுக்களை பலமுறை இங்கிலாந்து அழைத்துச் சென்றுள்ளேன். ஆனால், சிறுபான்மையினர் துன்பப்படும் நிலை ஏற்பட்டால் இங்கிலாந்து அரசு அவர்களை ஏற்றுக்கொள்ளும் என்ற உத்திரவாதம் மட்டுமே இதுவரை இங்கிலாந்து அரசிடமிருந்து கிடைத்து இருக்கிறது” என்று இரண்டு வாரம் முன்புதான் ஹாங்காங்கின் முக்கிய இந்திய தொழிலதிபர் திரு ஹரி என் ஹரிலேலா கூறியிருந்தார்.

“ஆனாலும் ஹாங்காங் வாழ் இந்தியர் தங்களது எதிர்காலத்தைப் பற்றி உற்சாகமாகவே இருக்கின்றனர். ஏனெனில் ஹாங்காங்கின் வளர்ச்சிக்கு இந்தியர்களின் பங்கு இன்றியமையாதது என்பதை பெய்ஜிங் நன்கு புரிந்து கொண்டுள்ளது. அவர்கள் இந்த நாடு மேலும் வலுப்பெற உதவ வேண்டும் என்றும் அது விரும்புகிறது.” என்றும் அவர் கூறிஇருந்தார். ஹாங்காங் இந்தியக் கழகங்களின் கவுன்சிலின் தலைவராகவும் சீன ஹாங்காங்கின் முதல் தலைவரான துங் சீவா என்பவரைத் தேர்ந்தெடுத்த குழுவில் ஒருவராகவும் அவர் பொறுப்பேற்றிருந்தார்.

இங்கே இந்தியர்கள் எண்ணிக்கை சுமார் 25,000. இவர்களில் அநேகம் பேர் வணிகர்கள். நாட்டின் பொருளாதாரம் நன்றாக இருக்கும் வரையில் அவர்களுக்குப் பிரச்சனையில்லை. இந்தியாவிற்கும், சீனாவிற்கும் தற்போது நிலவும் நல்லுறவும் இவர்கள் நம்பிக்கைக்கு ஒரு காரணம்.

தவிர, இந்தியர்களில் அநேகம் பேர் பல வெளி நாடுகளில் குடியுரிமை அல்லது நிரந்தரமாக வாழும் சான்றிதழ்களை வைத்திருந்தனர். “இதனால் தேவைப்பட்டால் வேறு நாட்டில் சென்று குடியேற இவர்களுக்கு வாய்ப்பு உண்டு.” என்கிறார் சமீபத்தில் சிங்க்கப்பூரில் தன வியாபாரக் கிளையைத் தொடங்கி இருக்கும் ஹாங்காங் இந்தியர் ஒருவர்.

இப்படிப் பல தொழிலதிபர்களும், வணிகர்களும் பல வருடங்கள் முன்பே – நாடு கைமாறும் ஒப்பந்தம் கை யெழுத்தானதுமே – தங்கள் எதிர்காலத்தைத் திட்டமிடத் தொடங்கி விட்டனர்.

ஆனால் கடை நிலை ஊழியர்கள், குறைந்த வருவாய் உள்ளவர்கள் இப்படி மாற்றுக் குடியுரிமை ஏதும் இல்லாத நிலையில் செய்வதறியாது திகைத்து நின்றவர்கள்.

சில இந்தியரிடையே மற்றொரு கேள்வியும் எழுகிறது. “நாடு முழுவதையும், அதன் வளங்களையும் சேர்த்து சீனா எடுத்துக்கொள்ளும்போது, ஏன் இந்த நாட்டு மக்களையும் ஒரு சேர எடுத்துக்கொள்ளக் கூடாது?” என்று இவர்கள் வினவுகின்றனர். ஆனால் இதுவரையில் பிரிட்டிஷ் அரசின் கீழ் இருந்தபோதும் இவர்கள் முழுமையாக இங்கிலாந்து குடிமக்களாக இருந்திருக்கவில்லை. அதே நிலையில் இவர்கள் தொடர்ந்து இருக்கலாமே என்று சீனா கருதுவதாக சீனாவின் நிலையை சிலர் விளக்குகின்றனர்.

இதற்கிடையில் ஜூலை முதல் தேதியையும் ஹாங்காங் சிறுபான்மையினரின் நிலைமையையும் உலகமே கரிசனத்துடன் கவனித்து வருகிறது. இங்கேயுள்ள இந்திய / பிரிட்டிஷ் கூர்க்காக்களை மலேசியா ஏற்றுக்கொள்வதாகக் கூறியிருக்கிறது. ஆனால் மலேசியக் குடியுரிமையைக் கொடுத்தா என்று தெளிவாகவில்லை. அதேபோல் சிங்கப்பூரும் தன் குடியேற்ற விதிகளில் ஹாங்காங்கிலிருந்து வருபவர்களை வரவேற்க ஏதுவாக நிறைய விதிகளை மாற்றியுள்ளது.

இந்தப் பின்னணியில்தான் இங்கிலாந்து ஹாங்காங் சிறுபான்மையினரைத் தம் குடிமக்களாக ஏற்றுக்கொள்ளும் அறிவித்த்து பல ஹாங்காங் இந்தியர்களிடையே நிம்மதியைக் கொடுத்தது.

இது ஒருபக்கம் இருக்க, ஹாங்காங் சீனர்களிடையேயும் ஒருவித குழப்பமும், சஞ்சலமும் இருந்தது. பிரதான தேசமான சீனாவுடன் இணையும்போது எல்லாம் முன்பு இருந்ததுபோல் சுமுகமாக இருக்கும் என்று சொல்ல முடியாது. முன்பு போல் சுதந்திரமும், வெளிப்படையான வாழ்க்கை முறையும் இருக்காது என்று அநேகர் நினைத்தனர். சீனா தன் ஆதிக்கத்தைக் காட்டாமல் விடாது என்பது இவர்களது பயம். இதற்கு பயந்தே பலர் ஏற்கனவே உலகின் பல மூலைகளுக்குச் சென்று விட்டனர்.

இந்த வேதனையிலும் புன்முறுவலை வரவழைக்கும் ஒரு விஷயம் இருந்தது. ஹாங்காங்கை விட்டு வெளியேறும் சில சீனர்கள் தங்கள் முன்னோர்களின் நினைவிடங்களிலிருந்து அஸ்திகளையும் எடுத்துப் போவதாக செய்தி வர ஆரம்பித்தது. வருடம் ஒரு முறை அவர்கள் முன்னோர்களை கல்லறைக்குச் சென்று வழிபடும் பழக்கம் இருப்பதால், திரும்ப ஹாங்காங் வரமுடியாதே என்று அஸ்திக் கலசங்களையும் தாங்கள் போகும் ஊர்களுக்கு எடுத்துச் செல்கின்றனராம்! சான்பிரான்சிஸ்கோவில் கல்லறை நிர்வகிக்கும் ஒருவர் திடீரென்று அஸ்திக் கலசங்களை இடம் மாற்றும் பிசினஸ் அதிகரித்து இருப்பதாக குறிப்பிட்டாராம்!

ருடம் 2014.

சரித்திரம் நடந்து 17 வருடங்கள் ஓடிவிட்டது. ஹாங்காங் கைமாறிய சில வருடங்களிலேயே அவ்வப்போது சீனா ஏதோ ஒரு விதத்தில் தன ஆதிக்கத்தை நிலை நாட்ட முயற்சித்து வந்தது. நாளடைவில் வாக்கு அளித்தபடி ஹாங்காங் சிறப்பு பகுதி அரசாங்கம் சுதந்திரமாக செயல்பட முடியாமல் போனது. தற்போது 2017 ல் பொதுத் தேர்தல் நடத்த வேண்டும் என்ற ஹாங்காங் மக்களின் கோரிக்கையையும் அது நிறைவேற்றுமா என்று கவலை கொள்ளும் மக்கள் ஒரு ஜனநாயகப போராட்டத்தில் இறங்கிவிட்டனர்.

கடந்த ஜூலை முதல் தேதியன்று மாபெரும் எழுச்சி. ஜனநாயம் வேண்டும் என்று சுமார் 800,000 மக்கள் ஒரு வாக்களிப்பில் தெரிவித்து இருப்பதாக செய்தி. இதன் நடுவில் இங்கிலாந்து தலையிட வேண்டுமென்று பலர் எதிர்பார்க்கின்றனர். 1997ல் கைமாறியபோது, ஜனநாயக நெறிகளுக்கு எந்த பாதிப்பும் இருக்காது; அப்படி ஏதும் அத்து மீறி நடந்தால் இங்கிலாந்து தலையிட்டு ஹாங்காங் மக்கள் பாதிக்கப்படாமல் காப்பாற்றப்படுவார்கள் என்ற இங்கிலாந்தின் வாக்குறுதியை பலர் நினைவூட்டுகின்றனர்.

ஹாங்காங் சரித்திரத்தில் இனி என்ன மாறுதல்கள் வருமோ! மக்களுக்கு வெற்றி கிடைக்கட்டும்…

- See more at: http://solvanam.com/?p=34680#sthash.TLkqZAmP.dpuf

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.