Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யூரோ கோப்பை 2016 கால்பந்து தகுதிச்சுற்று முடிவுகள்

Featured Replies

 நெதர்லாந்து அணி தோல்வி
அக்டோபர் 14, 2014.
 

 

ரேய்க்ஜாவிக்: யூரோ கோப்பை கால்பந்து தொடரின் தகுதிச்சுற்றில் நெதர்லாந்து அணி 0–2 என ஐஸ்லாந்து அணியிடம் தோல்வியடைந்தது.

‘யூரோ’ கோப்பை தொடர் பிரான்சில் வரும் 2016, ஜூன் 10 முதல் ஜூலை 10 வரை நடக்கவுள்ளது. போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் பிரான்ஸ் மட்டும் தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள அணிகளுக்கு தகுதிச் சுற்று போட்டிகள் நடக்கின்றன

 

ரேய்க்ஜாவிக்கில் நடந்த இதன் ‘ஏ’ பிரிவு லீக் போட்டியில் நெதர்லாந்து, ஐஸ்லாந்து அணிகள் மோதின. போட்டியின் 10வது நிமிடத்தில் கில்பி சிகுர்ட்சன் ஒரு கோல் அடித்தார். இதற்கு பதிலடி தர எதிரணியால் முடியவில்லை. தொடர்ந்து அசத்திய கில்பி (42வது நிமிடம்) மீண்டும் ஒரு கோல் அடித்து ஐஸ்லாந்து அணியை வலுப்படுத்தினார். அர்ஜென் ராபென் போன்ற நட்சத்திர வீரர்கள் கடைசி வரை போராடியும் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை. முடிவில், நெதர்லாந்து அணி 0–2 என்ற கோல் கணக்கில் தோல்வியடைந்தது.

 

http://sports.dinamalar.com/2014/10/1413271654/robbensoccer.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

உலக சாம்பியன் ஜெர்மனி தோல்வி
அக்டோபர் 12, 2014.

 

வார்சா: ‘யூரோ’ கோப்பை கால்பந்து தகுதிச் சுற்றில் ‘உலக சாம்பியன்’ ஜெர்மனி அணி, போலந்திடம் 2–0 என தோல்வி அடைந்தது.

‘யூரோ’ கோப்பை தொடர் பிரான்சில் வரும் 2016, ஜூன் 10 முதல் ஜூலை 10 வரை நடக்கவுள்ளது. வார்சாவில் நடந்த இதற்கான ‘டி’ பிரிவு தகுதிச் சுற்று லீக் போட்டியில் ‘உலக சாம்பியன்’ ஜெர்மனி அணி, போலந்தை சந்தித்தது. முதல் பாதியில் இரு அணிளும் கோல் அடிக்கவில்லை. இரண்டாவது பாதியில் எழுச்சி கண்ட போலந்து அணிக்கு ஆர்காடியுஸ் (51வது நிமிடம்), செபாஸ்டியன் மிலா (88) தலா ஒரு கோல் அடித்தனர். முடிவில், ஜெர்மனி அணி 0–2 என அதிர்ச்சி தோல்வியடைந்தது.       

           

வரலாற்று வெற்றி: ஜெர்மனி அணிக்கு எதிராக இதற்கு முன் விளைாடிய 18 போட்டிகளில் ஒரு முறை கூட போலந்து வென்றது கிடையாது. தற்போது வெற்றி பெற்றதன் மூலம் வரலாற்று சாதனை புரிந்துள்ளது.      

இதன் மூலம் தகுதிச்சுற்றில் கடந்த 7 ஆண்டுகளாக தோல்வியே அடையாத, ஜெர்மனி அணி முதல் முறையாக வீழ்ந்தது. இதற்கு முன், கடந்த அக்.,2007ல் நடந்த யூரோ கோப்பை தொடரின் தகுதிச்சுற்றில் செக் குடியரசு அணியிடம் 0–3 என தோல்வியடைந்தது.

 

http://sports.dinamalar.com/2014/10/1413131990/GermanyPolandEUROSoccer.html

  • தொடங்கியவர்

ஸ்பெயின் அதிர்ச்சித் தோல்வி
அக்டோபர் 10, 2014.

பாரிஸ்: ‘யூரோ’ கோப்பை கால்பந்து தொடருக்கான தகுதிச் சுற்றில், ஸ்பெயின் அணி சுலோவாகியாவிடம் அதிர்ச்சித் தோல்வியடைந்தது.

உலக கோப்பை கால்பந்துக்கு அடுத்து மிகப்பெரிய தொடர் ‘யூரோ’ கோப்பை கால்பந்து. ஐரோப்பிய நாடுகள் மட்டும் பங்கேற்கும் இப்போட்டியின் 15வது தொடர் பிரான்சில் வரும் 2016, ஜூன் 10 முதல் ஜூலை 10 வரை நடக்கவுள்ளது.

 

மொத்தம் 24 அணிகள் பங்கேற்கும் இத்தொடருக்கு, போட்டியை நடத்தும் நாடு என்ற அடிப்படையில் பிரான்ஸ் மட்டும் தகுதி பெற்றுள்ளது. மீதமுள்ள அணிகளுக்கு தகுதிச் சுற்று போட்டிகள் நடக்கின்றன. பாரிசில் நடந்த ‘சி’ பிரிவு லீக் போட்டியில் ‘நடப்பு சாம்பியன்’ ஸ்பெயின் அணி, சுலோவாகியாவை சந்தித்தது. இதில், 2–1 என, ஸ்பெயின் அணி அதிர்ச்சித் தோல்வியடைந்தது. கடந்த 2006க்குப் பின், ‘யூரோ’ கோப்பை கால்பந்து தொடர் தகுதிச் சுற்றில் ஸ்பெயின் தோற்றது இது தான் முதன் முறை.           

இதையடுத்து, இத்தொடரில் ஸ்பெயின் அணி தொடர்ச்சியாக 36 போட்டிகளில் பெற்று வந்த வெற்றி நடை முடிவுக்கு வந்தது.

 

http://sports.dinamalar.com/2014/10/1412953857/EUROCupSoccerQualificationSpainSlovakia.html

இன்று  ஜெர்மனி அயர்லாந்துடன் டிரா ,

 

எக்ஸ்ட்ரா நிமிடங்களில் அயர்லாந்து கோலை அடித்து ஆட்டத்தை சமப்படுத்தியது .

  • தொடங்கியவர்

ஜேர்மனி புதிய வீர்ர்களுடன் தள்ளாடுகிறது அர்யுன்,உலக கோப்பை போட்டிகளில் விளையாடிய 3 வீர்ர்கள் ஓய்வு பெற்று விட்டார்கள்.அதை விட 6 வீர்ர்கள் காயம் காரணமாக விளையாட முடியவில்லை.நேற்றைய போட்டியில் 9 புதியவர்கள்.

அடுத்த போட்டிகளில் மீண்டு வருவார்கள் என்ற நம்பிக்கை இருக்கு.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

ஜேர்மனி எப்பவும் தடக்குப்பட்டு விழுந்து விழுந்துதான் மேலை வாறது.... :D

  • கருத்துக்கள உறவுகள்

ஜேர்மனி எப்பவும் தடக்குப்பட்டு விழுந்து விழுந்துதான் மேலை வாறது.... :D

 

ஜேர்மனி அணி இல்லாமல் ஐரோப்பாக்கிண்ணப்போட்டி நடக்காது.

விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்று தவழ்ந்தாவது வந்து விடுவார்கள் :D

 

  • தொடங்கியவர்

உலக சாம்பியன் ஜெர்மனிக்கு அதிர்ச்சி அளித்த அயர்லாந்து
 

 

யூரோ கால்பந்துக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டத்தில் உலக சாம்பியன் ஜெர்மனி அணிக்கு அதிர்ச்சி அளித்தது அயர்லாந்து குடியரசு அணி.

அயர்லாந்து அணியின் ஜான் ஓ’ஷியா 90-வது நிமிடத்தில் அடித்த கோலினால் ஆட்டம் 1-1 என்று டிரா ஆனது. இதனால் உலக சாம்பியன் ஜெர்மனி அதிர்ச்சி அடைந்தது.

ஜெர்மனி அணியே இடைவேளைக்குப் பிறகான ஆட்டத்தில், 71-வது நிமிடத்தில்தான் குரூஸ் மூலம் முதல் கோலை அடித்தது. இந்த வெற்றி மூலம் 9 ஆட்டங்களில் 7 புள்ளிகள் பெற்று அயர்லாந்து பிரிவு டி-யில் நல்ல நிலையில் உள்ளது.

 

தொடக்க நேர ஆட்டங்களில் அயர்லாந்து பாதுகாப்பு அமைப்பில் கவனம் செலுத்த ஜெர்மனி பெரும்பகுதி ஆதிக்கம் செலுத்தினாலும் இடைவேளைக்கு முன்பாக கோல் எதையும் அடிக்க முடியவில்லை.

மேலும் உலகக் கோப்பை இறுதியில் அர்ஜெண்டீனாவை வீழ்த்திய ஜெர்மனி அணியில் 5 வீரர்கள் மட்டுமே களத்தில் இருந்தனர்.

ஆட்டம் தொடங்கிய 5-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் எரிக் டர்ம் 31 மீட்டர்கள் தொலைவிலிருந்து அடித்த ஷாட் கோலாக மாறவில்லை. இடைவேளைக்கு முன்பு குறிப்பிடத்தகுந்த வாய்ப்பு இதுவே.

 

இடைவேளைக்குப் பிறகு லுகாஸ் பொடோல்ஸ்கி, கரிம் பெல்லராபி, டோனி குரூஸ், தாமஸ் முல்லர் ஆகியோர் அயர்லாந்துக்கு நெருக்கடி அளித்தனர். கடைசியில் 71வது நிமிடத்தில் குரூஸ் கோல் அடித்தார். ஜெர்மனியின் 17வது கோல் முயற்சியாகும் இது.

ஆனால் கடைசி நிமிடத்தில் அயர்லாந்து வீரர் ஜெஃப் ஹெண்ட்ரிக் அடித்த பாஸை ஓ’ஷியா கோலாக மாற்ற ஜெர்மனி அதிர்ச்சியடைந்தது.

“நாங்கள் இந்தக் கடைசி நிமிட கோலால் மிகவும் ஏமாற்றமடைந்துள்ளோம். கடைசி நிமிடங்களில் நாங்கள் சரியாக விளையாடவில்லை. இன்னொரு கோல் அடித்து முன்னிலையை நீட்டியிருக்க வேண்டும், ஆனால் செய்யவில்லை, இந்த டிரா மிகவும் ஏமாற்றமளிக்கிறது” என்று ஜெர்மனி பயிற்சியாளர் ஜோக்கிம் லூ தெரிவித்தார்.

பிரிவு டி-யில் 4 புள்ளிகளுடன் ஜெர்மனி 4ஆம் இடத்தில் உள்ளது. அயர்லாந்து 7 புள்ளிகளுடன் 2ஆம் இடம் வகிக்கிறது.

 

4-ஆம் சுற்று தகுதிச் சுற்று ஆட்டங்களில் கிப்ரால்டர் அணியை ஜேர்மனியும், ஸ்காட்லாந்து அணியை அயர்லாந்தும் சந்திக்கின்றன.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%86%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%85%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%85%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81/article6503213.ece

  • தொடங்கியவர்

சேர்பிய - அல்பேனிய கால்பந்தாட்டத்தின்போது பாரிய வன்முறை: ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தின் விசாரணை ஆரம்பம்
2014-10-17 10:39:40

யூரோ கிண்ண தகுதிகாண் கால்பந்தாட்டப் போட்டியின் போது இடம்பெற்ற அசாதாரண சம்பவங்கள் தொடர்பாக சேர்பிய கால்பந்தாட்டச் சங்கத்திற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுப்பதற்கான பணிகளை ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கம் (UEFA) ஆரம்பித்துள்ளது.

 


பட்டாசுகளைக் கொளுத்தியமை, ஆபத்தான பொருட்களை மைதானத்திற்குள் வீசியமை, கூட்டங்களினால் குழப்பம் விளைவித்தமை, போதிய ஏற்பாடுகளின்மை, கதிர்வீச்சுகளைப் பயன்படுத்தியமை ஆகிய குற்றச்சாட்டுகளின்பேரில் சேர்பிய கால்பந்தாட்ட சங்கத்திற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளது.

 


சேர்பியாவுக்கும் அல்பேனியாவுக்கும் இடையில் பெல்கிரேட் விளையாட்டரங்கில் செவ்வாயன்ற நடைபெற்ற போட்டியின்போது ஏற்பட்ட பிரச்சினைகள் காரணமாக போட்டி 41ஆவது நிமிடத்துடன் இரத்துச் செய்யப்பட்டது.

 


மேலும் இப் போட்டியில் தொடர்ந்து விளையாடுவதற்கு அல்பேனியா மறுத்தமை தொடர்பாக அந்நாட்டு கால்பந்தாட்ட சங்கத்திற்கு எதிராகவும் நடவடிக்கை எடுப்பது குறித்து ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கம் ஆலோசித்து வருகின்றது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையில் செவ்வாயன்று நடைபெற்ற போட்டியின்போது அல்பேனியா சார்பு வாசகங்கள் தாங்கிய பதாகை ஒன்று ஆளில்லா வான்கலம் ஒன்றின் மூலம் அரங்கில் தொங்கவிடப்பட்டதன் எதிரொலியாக அரங்கிலும் அரங்கிற்கு வெளியேயும் வன்முறைகள் வெடித்தன.

விளையாட்டரங்கில் மத்தியில் பெரும்பாக அல்பேனியா (கிரேட்டர் அல்பேனியா) என்ற வாசகத்துடன் கொடி ஒன்று பறக்கவிடப்பட்டு அது கீழ் நோக்கி வந்தவண்ணம் இருந்தது. அதனை சேர்பிய வீரர் ஒருவர் கீழ் நோக்கி இழுத்து வீழ்த்தினார். இதனை அடுத்து 41 நிமிடங்களுடன் போட்டி கைவிடப்பட்டது.

 

 


இதனை அடுத்து இரண்டு அணியினருக்கும் இடையில் மோதலைத் தோற்வித்ததுடன் அரங்கில் குழுமியிருந்த 20000 சேர்பிய இரசிகர்களில் விரல்விட்டு எண்ணக்கூடிய சிலர் அரங்கினுள் புகுந்து அல்பேனிய வீரர்களைத் தாக்க முற்பட்டனர்.

 

இந்தக் கொடியை அல்பேனியா பிரதமரின் சகோதரர், பிரமுகர்களுக்கான ஆசனத்திலிருந்து தானியக்கி மூலம் கீழ் நோக்கி இறக்கிய குற்றச்சாட்டின்பேரில் அவர் கைதானதாக சேர்பிய உள்துறை அமைச்சு தெரிவித்தது.


எனினும் அதன் பின்னர் தனது அணி வீரர்களுடன் நாடு திரும்பிய பிரதமரின் சகோதரர் ஒல்ஸி ராமா ஹீரோவாக புகழப்பட்டு அவருக்குப் பெரும் வரவேற்பளிக்கப்பட்டது.

அதேவேளை தனக்கும் கொடி பறக்கவிடப்பட்டதற்கும் தொடர்பு இல்லை என ஒல்ஸி ராமா குறிப்பிட்டிருந்தார்.


"நான் கைதுசெய்யப்படவுமில்லை, தடுத்துவைக்கப்படவுமில்லை. சம்பவம் இடம்பெற்றபோது குழப்பம் ஏற்பட்டது. பொலிஸார் அனைவரையும் சோதனையிட்டவண்ணம் இருந்தனர்" என ராமா குறிப்பிட்டார்.

"நான் எனது ஐக்கிய அமெரிக்கா கடவுச் சீட்டையும் படப்பிடிப்பு கருவியையும் காட்டினேன். இவை சில நிமிடங்கள் மாத்திமே நீடித்தன" என்றார் அவர்.


சேர்பிய பிரதமர் எடி ராமா, அல்பேனியாவுக்கு விஜயம் செய்ய சில தினங்கள் உள்ள நிலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. கடந்த 68 வருடங்களில் அல்பேனிய பிரதமர் ஒருவர் சேர்பியா செல்லவிருப்பது இதுவே முதல் தடவையாகும்.

"இந்த சம்பவத்தினால் நான் குழம்பிப்போனேன். எனினும் போட்டியை நாங்கள் தொடர்வதற்கு தயாராக இருந்தோம். ஆனால் அல்பேனிய வீரர்கள் போட்டியைத் தொடர்வதற்கான மனோநிலையில் தாங்கள் இல்லை" எனக் கூறினர்'' என்று செல்சி வீரரும் சேர்பிய அணித் தலைவருமான ப்ரனிஸ்லவ் இவானோவிக் தெரிவித்தார்.
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7324#sthash.0D1m9SbU.dpuf

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

அல்பேனியர்கள் ஆக மோசம்....எரிச்சல் பொறமை பிடித்தவர்கள்...அதைவிட சேர்பியன் சொல்லி வேலையில்லை..எல்லாம் அரசியல் விளையாட்டு....அதிலை ஒருத்தர் தான் அமெரிக்கனாம்....இப்ப விளங்குதோ என்ன பிரச்சனையெண்டு.. :D

  • 5 weeks later...
  • தொடங்கியவர்

கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை
நவம்பர் 15, 2014.

 

சா ஜோயா: யூரோ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப்பில் அதிக கோல் அடித்து கிறிஸ்டியானோ ரொனால்டோ சாதனை படைத்தார்.     

பிரான்சில் வரும் 2016ல் (ஜூன் 10–ஜூலை 10) ‘யூரோ’ கோப்பை கால்பந்து சாம்பியன்ஷிப் நடக்கவுள்ளது. தொடரை நடத்தும் நாடு என்ற அடிப்பபையில் பிரான்ஸ் அணி பிரதான சுற்றுக்கு நேரடியாக முன்னேறியது. மற்ற அணிகள் தகுதிப்போட்டியில் விளையாடுகிறது. போர்ச்சுகலில் உள்ள சா ஜோயாவில் நடந்த போட்டியில் அர்மேனியா, போர்ச்சுகல் அணிகள் மோதின. இதன் முதல் பாதியில் இரு அணி வீரர்களும் கோல் எதுவும் அடிக்கவில்லை.

 

இரண்டாவது பாதியில் கோல் அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இரு அணி வீரர்களும் களமிறங்கின. போட்டியின் 72வது நிமிடத்தில் போர்ச்சுகல் அணியின் நட்சத்திர வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ ஒரு கோல் அடித்தார். இதற்கு எதிரணி வீரர்களால் எவ்வித பதிலடியும் தர முடியவில்லை. முடிவில், போர்ச்சுகல் அணி 1–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.      

இதன் மூலம் ‘யூரோ’ கோப்பை சாம்பியன்ஷிப்பில் தகுதிப்போட்டியுடன் சேர்த்து அதிக கோல் அடித்த வீரர்கள் பட்டியலில் ரொனால்டோ முதலிடம் பிடித்தார். இதுவரை இவர் 23 கோல்கள் அடித்துள்ளார். இதற்கு முன் டென்மார்க்கின் ஜான் தாகி, துருக்கியின் ஹாகென் தலா 22 கோல்கள் அடித்திருந்தனர்.

 

http://sports.dinamalar.com/2014/11/1416068714/ChristianoRonaldoPortugalEUROSoccerQualificatiionArmeniaMostGoalRecords.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.