Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

பிரான்ஸ் பொலிசாருடன் சண்டையிட்ட இலங்கை தமிழர் நாடுகடத்தப்பட்டார்.

Featured Replies

[saturday 2014-10-18 18:00]

பாரிஸ் 4ம் நம்பர் தொடருந்தில் கைது செய்யப்பட்ட தமிழர் இலங்கை அனுப்பி வைக்கப்பட்டார். பாபு என்பவர் பாரிஸில் வசித்து வந்தார். இவர் 2008 ஆண்டு பிரான்ஸில் அகதி தஞ்சம் வதிவிட விசா நிராகரிக்கப்பட்டு இருந்தார். இவர் மீண்டும் அகதி தஞ்ச விசாவிற்கான எந்த நடவடிக்கையும் செய்யவில்லை பின்னர் இவர் பிரான்ஸ் நிரந்தர விசா உரிமையை பெற்ற பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்டார். இவரை உறுதிப்படுத்த கூடியவாறு எந்த திருமணப் பத்திரத்தையும் வைத்திருக்கவில்லை காரணம் இவர்கள் எந்த பதிவும் செய்யவில்லை. இவர் 15.10.2014 அன்று போர்த்துகிளிஞ்சான் கோட்டில் தொடருந்து நிலையத்தில் ரிக்கற் எடுக்காமல் சென்றுள்ளார் (இது தான் முதலில் தப்பு) இவரை பார்த்த தொடருந்து காவல்துறையினர் மறித்து தொடருந்து அனுமதி ரிக்கற்ரை கேட்டனர் இவர் இல்லை என்றும் மன்னிப்பு கோராமல் சண்டை பிடித்துள்ளார்.

பின்னர் தொடருந்து காவல் துறையினர் தேசிய காவல் துறையினருக்கு தகவல் கொடுக்க விரைந்து வந்த காவல் துறையினர் இவரை முதலில் விசாரணைக்கு உட்படுத்தினர். இவருக்கு எந்த விசாவும் இல்லை என்பதனை உறுதிப்படுத்திய காவல்துறையினர் இவரை கைது செய்து 2 நாட்கள் தடுத்து வைக்கப்பட்டு பின்னர் இலங்கைக்கு அனுப்பிவைக்ப்பட்டார்.

இவருடைய மனைவி வழக்கறிஞரை தொடர்பு படுத்தி காவல் துறையினரை கேட்ட போது இவர் சட்டத்திற்கு புறம்பாக பிரான்ஸ்ஸில் வசித்து வந்தார். இவர் சட்டபூர்வமாக எந்த விசாவையும் வைத்திருக்கவில்லை. திருமண சான்றிதழ்களையும் வைத்திருக்கவில்லை. மனைவி ஆகிய நீங்கள் இலங்கைக்கு சென்று சட்டபூர்வமாக அவரை திருமணம் செய்து பிரான்ஸிற்கு அழைத்து வாருங்கள் என்று கூறியுள்ளனர்.

இவர் போன்ற எத்தனையோ தமிழர்கள் பிரான்ஸில் விசா உரிமை பெறாமல் வசித்து வருகின்றனர் தயவு செய்து விசா பெறுவதற்கான சகல நடவடிக்கைகளையும் அவசரமாக செய்து கொள்ளுங்கள். இது தான் பிரான்ஸின் தேசிய பாதுகாப்பிற்கு உதவி புரிதலாக இருக்கும். இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுவோரை பிரான்ஸ் நிறுவனம் ஒன்று (பெயர் தெரியவில்லை) பொறுப்பெடுத்து இரண்டு நாட்களின் பின் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

http://seithy.com/breifNews.php?newsID=118941&category=TamilNews&language=tamil

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

பாபு கொஞ்சம் கிட்னியை பாவித்திருக்கலாம்.

பாபு கொஞ்சம் கிட்னியை பாவித்திருக்கலாம்.

அதை விட டிக்கெட் எடுத்திருக்கலாம் இசை.

  • தொடங்கியவர்

பிரான்சில் ரிக்கற் எடுக்காமல் சென்றாலும் அபராத பணம் கட்ட சொல்லி கேட்கும் போது உடனேயே அதை கட்டிவிட்டால் அவ்விடத்திலேயே விட்டு விடுவார்கள். கையில் பணம் இல்லை என்றால் பதிவிட்டு குறிப்பிட்ட நாட்களுக்குள் பணம் கட்ட வேண்டும் என கூறி பதிந்த துண்டை தருவார்கள். பணம் கட்டுவதற்கான முகவரி, தொலைபேசி இலக்கம் போன்றன அவர்கள் தரும் துண்டில் இருக்கும்.

உரிய காலப்பகுதிக்குள் பணம் செலுத்தாவிட்டால் அபராத தொகை அதிகரிக்கப்படும்.

விசாவும் இல்லாதவர் என்பதால் வாக்குவாதப்படுவதை தவிர்த்திருக்கலாம்.

Edited by துளசி

  • கருத்துக்கள உறவுகள்

 

 

போர்த்துகிளிஞ்சான் கோட்டில்

இது என்ன கோட் ....?

பெயரை வாசித்து நன்றாக சிரித்துவிட்டேன்  :lol:  :lol:  :lol:  :D

  • தொடங்கியவர்

இது என்ன கோட் ....?

பெயரை வாசித்து நன்றாக சிரித்துவிட்டேன் :lol::lol::lol::D

எம்மவர்களின் உச்சரிப்பு அவ்வாறு உள்ளது. பிரெஞ்சில் porte de clignancourt என எழுதப்படும். உச்சரிப்பு எவ்வாறு என்று தெரிந்து கொள்ள google translate இன் உதவியை நாடலாம்.

இதுக்கே இப்பிடி என்றால் பிரெஞ்சு பழகும் எங்கள் நிலையையும் கொஞ்சம் யோசிச்சு பாருங்கோ. :lol:

இதாவது பரவாயில்லை. இங்கு கதிரை மேசையெல்லாம் ஆண் பாலா பெண்பாலா என்று படிக்கிறது வேறை பெரிய தொல்லை. :lol:

  • கருத்துக்கள உறவுகள்

அறிந்திருக்கிறேன் சகோதரி 
பிரெஞ்சும் தமிழை போல் கற்பதற்கு மிகவும் கடினமான மொழி என்று 
ஆனால் நாம் தமிழையே கசடற கற்றவர்கள் நமக்கு பிரெஞ்சு எம்மாத்திரம் ..?

  • தொடங்கியவர்

அறிந்திருக்கிறேன் சகோதரி

பிரெஞ்சும் தமிழை போல் கற்பதற்கு மிகவும் கடினமான மொழி என்று

ஆனால் நாம் தமிழையே கசடற கற்றவர்கள் நமக்கு பிரெஞ்சு எம்மாத்திரம் ..?

போக போக பிரெஞ்சு grammar கொஞ்சம் கொஞ்சமாக பிடிபடும். ஆனால் தமிழில் உச்சரிப்பு பிரச்சினை இல்லை. பிரெஞ்சில் அதுவே பெரிய பிரச்சினை.

இங்கு பிறந்து வளரும் தமிழர்கள் மிக நன்றாக பிரெஞ்சை உச்சரித்து கதைப்பார்கள். ஆனால் இலங்கையில் பிறந்து இங்கு வந்தவர்கள் சரியான பிரெஞ்சு உச்சரிப்பை எடுக்க கடினப்படுவார்கள். :)

டிக்கெட் எடுக்காதவனை அனுப்புங்கோ வெட்டு படுறவன் அடிபடுறவன் எல்லோரையும் வடிவா சாப்பாடு போட்டு கவனித்து அனுப்புங்கோ என்ன பொலிஸ் . :rolleyes:

  • கருத்துக்கள உறவுகள்

-----

இவருடைய மனைவி வழக்கறிஞரை தொடர்பு படுத்தி காவல் துறையினரை கேட்ட போது இவர் சட்டத்திற்கு புறம்பாக பிரான்ஸ்ஸில் வசித்து வந்தார். இவர் சட்டபூர்வமாக எந்த விசாவையும் வைத்திருக்கவில்லை. திருமண சான்றிதழ்களையும் வைத்திருக்கவில்லை. மனைவி ஆகிய நீங்கள் இலங்கைக்கு சென்று சட்டபூர்வமாக அவரை திருமணம் செய்து பிரான்ஸிற்கு அழைத்து வாருங்கள் என்று கூறியுள்ளனர்.

--------

 

பஸ்சில்... ரிக்கற் எடுக்காமல் போனதுக்கு,

இரண்டு, விமான ரிக்கற் எடுக்க வைச்சிட்டாங்களே... :D  :lol:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.