Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

தாழ்ந்த தமிழர் + புத்தம் + வெள்ளயர் = சிங்களவர்கள்

Featured Replies

விடயம்: தாழ்ந்த தமிழர் + புத்தம் + வெள்ளயர் = சிங்களவர்கள்

http://news.bbc.co.uk/1/hi/world/south_asi...sia/6050408.stm

ஒப்பீட்டளவில் பவுத்த மற்றும் கிறிஸ்தவ சமயங்கள் சாதி வேறுபாடுகள் குறைந்த மதங்கள். 'தலித்துக்கள்' தமது எதிர்ப்பை காட்டும் விதமாகவே இம்மதமாற்றங்களை செய்கிறார்கள் என்பதை புரிந்து கொண்டு எமது தவறுகளை இனம் காணும் ஒரு சந்தர்ப்பமாக இதை கொள்ள வேண்டும். அதை விடுத்து இதென்ன வெக்கங்கெட்ட சமன்பாடு?

இவ்வளவு கடந்து வந்த பின்னும் இந்த பனங்கொட்டை விவாதம் திருப்ப ஆரம்பிக்கப் பட வேண்டுமா?

ஈழத்தை பொறுத்தவரைக்கும் சாதிய ஒடுக்கு முறையால்தான் மதம் மாறுகிறார்கள் என்றால் அது பொய். பணத்திற்காகவும் வேலைவாய்புக்காகவும் முன்னர் மதம் மாறினார்கள். இப்போது மதம் மாறுபவர்கள் தமது அறியாமையால்தான் மதம் மாறுகிறார்கள். தமிழ் நாட்டை பொறுத்த வரை இதில் உண்மை இருக்கிறது. இதை ஈழத்துடன் பொருத்திப்பார்ப்பது தேவையற்ற விடயமே. ஒவ்வொருவருக்கும் தமது மதத்தை தேர்தெடுக்கும் உரிமை உண்டு.

அந்த அறியாமை என்னெண்டு விளக்கமா சொல்லுங்கோவன்.

ஒருவன் வாழுவதற்கு மதம் அவசியமா?

மதத்தினால் உலகம் பெற்ற நன்மைகள் அதிகமா? தீமைகள் அதிகமா?

மதம் = அறியாமை ?

அந்த அறியாமை என்னெண்டு விளக்கமா சொல்லுங்கோவன்.

இது இயக்கர், நாகர் காலத்தில் தமது விருப்பத்தின் பேரில் நாகத்தையும், இயற்கையையும் இறைவனாக வழிபட்டனர். புத்தரின் வருகையுடன், அப்போது அரசாண்ட மன்னனின் மதமாற்றத்துடன் இது ஆரம்பிக்கிறது, அப்போது மதம் மாறியவர்கள் அரசனின் கட்டாயத்தின் பேரில்தான் மதம் மாறி இருப்பார்கள், அதில் இருந்து புத்தமதம் பரவியது, அதன் பின்னர் மொகாலையரின் வருகையுடன், வியாபாரத்துக்காகவும் அப்போது அரசாண்ட அரசர்களது கட்டாயத்தின் பேரிலும் முஸ்லீம் மதம் பரவியது. அதன்பின்னர் போர்த்துக்கீச, ஆங்கிலேயரின் வருகையுடன், பயமுறுத்தலினாலும், அரச உத்தியோகங்களுக்காகவும், மெசனரி கல்விகூடங்களில் கல்வியை கற்பதற்காகவும் மதம் மாற்றப்பட்டது, அதனுடன் கிறித்துவ மதம் பரவியது. ஆனால் இப்போதும் மக்கள் மதம் மாறுவது ஏன்? ஈழத்தில் பெரிதாக இப்போது சாதிய ஒடுக்குமுறையால் மதம் மாறுவதில்லை. ஓரளவு பணம் கொடுக்கிறார்கள், வேலை வாய்ப்பும் பெரிதாக கொடுக்கப்படுவதில்லை, ஈழத்தை விடவும் புலம்பெயர் நாடுகளில் இந்த மதமாற்றம் அதிகமாக இருக்கிறது, புலத்தில் பணம் இல்லையா? வேலை வாய்பு இல்லையா? அல்லது மத ஒடுக்கு முறைதான் இருக்கிறதா?அப்படி இருந்தும் ஏன் இவர்கள் மதம் மாறுகிறார்கள். புலம்பெயர் மக்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினை இருக்கிறது. நான் அறிந்து கொண்ட பிரச்சினைகள், முதலாவது அவர்களது மன உளச்சல்கள், இரண்டாவது பெரும் பணம்செலவழித்து வரும் இவர்களுக்கு தொடர்ந்து இங்கு இருக்க அனுமதிமறுக்கப்படுவதால். ஏற்படும் அவரது மன உளச்சலையும், அவரது பிரச்சினையும் இவர்கள் பயன் படுத்திக்கொள்கிறார்கள், அங்கு வந்தால் உங்கள் பிரச்சினை தீர்ந்து விடும் என்கிறார்கள், பிரச்சினையில் இருப்பவர்களுக்கு இது ஆறுதலாக இருக்கிறது, ஒரு தடவை செல்கிறார்கள், அவர்களை அவர் வளமாக பிடித்துக்கொள்கிறார்கள். அங்கு செல்வதால் விசா கிடைத்துவிடுமா?? பிரச்சினைகள்தான் தீர்ந்து விடுமா?

அனால் இதில் பலர் அதி தீவிரமாக இருக்கிறார்கள்.

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்த களப்பிரிவு "செய்திகள் தமிழீழம்" என்ற தலைப்புக் கொண்டது. ஏன் இங்கே உங்கள் இந்தக் கருத்தை தொடங்கி இருக்கிறீர்கள்.

Panangkai எழுதப்பட்டது: சனி ஐப்பசி 14, 2006 9:51 pm Post subject: தாழ்ந்த தமிழர் + புத்தம் + வெள்ளயர் = சிங்களவர்கள்

தமிழீழத்து செய்திகள் எழுதப்படும் இடத்தை செய்திகள்,தமிழீழம் என பனங்காய் தவறாக புரிந்து இதை இங்கு செய்தியாக இணைத்து விட்டார் என நினைக்கிறேன், கவலை வேண்டாம் இனி மட்டுறுத்துனர் வந்துதான் மாற்றமுடியும், அவர் வந்ததும் உரிய இடத்திற்கு மாறும். 8)

துன்பமப்பா........................துன்பம் :x :x :x :x :x :oops: :oops: :oops: :oops: :arrow:

  • கருத்துக்கள உறவுகள்

இது இயக்கர், நாகர் காலத்தில் தமது விருப்பத்தின் பேரில் நாகத்தையும், இயற்கையையும் இறைவனாக வழிபட்டனர். புத்தரின் வருகையுடன், அப்போது அரசாண்ட மன்னனின் மதமாற்றத்துடன் இது ஆரம்பிக்கிறது, அப்போது மதம் மாறியவர்கள் அரசனின் கட்டாயத்தின் பேரில்தான் மதம் மாறி இருப்பார்கள், அதில் இருந்து புத்தமதம் பரவியது, அதன் பின்னர் மொகாலையரின் வருகையுடன், வியாபாரத்துக்காகவும் அப்போது அரசாண்ட அரசர்களது கட்டாயத்தின் பேரிலும் முஸ்லீம் மதம் பரவியது. அதன்பின்னர் போர்த்துக்கீச, ஆங்கிலேயரின் வருகையுடன், பயமுறுத்தலினாலும், அரச உத்தியோகங்களுக்காகவும், மெசனரி கல்விகூடங்களில் கல்வியை கற்பதற்காகவும் மதம் மாற்றப்பட்டது, அதனுடன் கிறித்துவ மதம் பரவியது. ஆனால் இப்போதும் மக்கள் மதம் மாறுவது ஏன்? ஈழத்தில் பெரிதாக இப்போது சாதிய ஒடுக்குமுறையால் மதம் மாறுவதில்லை. ஓரளவு பணம் கொடுக்கிறார்கள், வேலை வாய்ப்பும் பெரிதாக கொடுக்கப்படுவதில்லை, ஈழத்தை விடவும் புலம்பெயர் நாடுகளில் இந்த மதமாற்றம் அதிகமாக இருக்கிறது, புலத்தில் பணம் இல்லையா? வேலை வாய்பு இல்லையா? அல்லது மத ஒடுக்கு முறைதான் இருக்கிறதா?அப்படி இருந்தும் ஏன் இவர்கள் மதம் மாறுகிறார்கள். புலம்பெயர் மக்களுக்கு ஏகப்பட்ட பிரச்சினை இருக்கிறது. நான் அறிந்து கொண்ட பிரச்சினைகள், முதலாவது அவர்களது மன உளச்சல்கள், இரண்டாவது பெரும் பணம்செலவழித்து வரும் இவர்களுக்கு தொடர்ந்து இங்கு இருக்க அனுமதிமறுக்கப்படுவதால். ஏற்படும் அவரது மன உளச்சலையும், அவரது பிரச்சினையும் இவர்கள் பயன் படுத்திக்கொள்கிறார்கள், அங்கு வந்தால் உங்கள் பிரச்சினை தீர்ந்து விடும் என்கிறார்கள், பிரச்சினையில் இருப்பவர்களுக்கு இது ஆறுதலாக இருக்கிறது, ஒரு தடவை செல்கிறார்கள், அவர்களை அவர் வளமாக பிடித்துக்கொள்கிறார்கள். அங்கு செல்வதால் விசா கிடைத்துவிடுமா?? பிரச்சினைகள்தான் தீர்ந்து விடுமா?

அனால் இதில் பலர் அதி தீவிரமாக இருக்கிறார்கள்.

உம். இதை விட ஜாதிப் பிரச்சனைக்காக மதம் மாற்றம் என்கின்றார்கள். ஆனால் அப்பட்டமாக கத்தோலிக்க மணங்களில் கூட, ஜாதி நோக்கப்படுகின்றது. பல திருமண விளம்பரங்களில் அதை அவதானிக்க முடிகின்றது. ஆக, ஒவ்வொரு மாற்றத்துக்கும், ஒவ்வொரு காரணங்களைத் தேடி, மதம் மாற்றம் செய்வது கடவுளையே விலைக்கு பேசும் முறை போலாகிவிட்டது.

மதமாற்றத் தடைச் சட்டம் திரு:மகேஸ்வரன் எம்பியால் கொண்டுவர முயற்சிக்கப்பட்ட போது, வத்தளைப் பக்கம், ஒரு இந்து ஆலயம் ஒன்றில், இயேசு இஜிவிக்கின்றார் சபையினர் புகந்து தாக்குதல், நடத்தியதாகக் கூட செய்தி வந்திருந்தன.

எனவே, மதமாற்றங்கள், தானாக நடைபெறவில்லை. பின்னணியில் உள்ள சக்திகள் தெரியும். நேற்று முன்தினம் இந்தியாவில் நடந்த மதமாற்றங்கள் என்பது ஒரே நேரத்தில் வௌ;வேறு நகரங்களில் நடந்தாகச் செய்தி வந்திருந்தன.

ஒரே நேரத்தில், அடிமட்ட மக்களுக்குள், எவ்வாறு ஒரு தொடர்பாடல் மூலம் ஒரே நேர மதமாற்றம் என்பது நடக்கச் சந்தர்ப்பம் உண்டு? ஆக, பின்னணியில் தொடர்புபடுத்த சில சக்திகள் இருந்தன என்பது புலனாகும்.

ஏற்கனவே, இந்தியாவில் உள்ள தடைச் சட்டம் குறித்து பாப்பரசரின் கண்டணச் செய்தியையும், மக்கள் தாங்களாகவே மாறுகின்றார்கள் என்பதைக் காட்ட வேண்டிய தேவையையும் அவர்கள் கொண்டிருந்தார்கள் என்பது இச் சந்தர்ப்பத்தின் மூலம் அவர்கள் நிருபிக்க முயலலாம்.

இருந்தாலும், இந்து மதப் பெரியார்கள் என்று சொல்லிக் கொள்கின்றவர்களின் அசட்டையும், பணத்தை மட்டுமே, குறியாகக் பொண்டுள்ள சிந்தனையும் தான் இச் நிகழ்ச்சிகளுக்கு காரணம் என்பதை மறுக்க முடியாது. இத்தனை சண்டை, மக்கள் பசி பட்டினியால் கஸ்டப்படும் போது, இவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள்??

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

உந்த தலைப்பில உள்ள தாழ்ந்த தமிழர் எண்டதன் மூலம் பனங்காய் எதை சொல்ல முற்படுறார். ஆக.. தமிழரில அப்பிடியொரு பிரிவு இருக்காமோ..? ஆயிரம் விடுதலைப் போர் வந்தாலும் சிலதுகள்.. அப்பிடியேதான்..

  • தொடங்கியவர்

காவடிக்கு ஏன் கோவம் வருது?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

முதலில பதிலை சொல்லும். இது நீர் தானே தீட்டிய தலையங்கம். தாழ்ந்த தமிழர் எண்டு நீர் எழுதிய அந்தக் கணம் எதை மனதில நிறுத்தி எழுதினீர். யாரை நினைத்து எழுதினீர்.?

  • தொடங்கியவர்

தாழ்த்தபட்ட தமிழ் மக்களைதான்...... தமிழ்நாட்டாணின் birth certificateயை எடுத்து பாருங்கோ தெரியும்

ஈழத்தில் என்று சாதி ஒழிக்கப்பட்டது தெரியுமா?

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

Clean-up your own sh*t

:arrow: கீழே படத்தில் அழுத்தவும்

zm_zoomin.1.4.jpg

மதம் மாறுவது என்பது அறியாமைதான்.

மதத்தை விட்டு வெளியேறுவதுதான் அறிவுடமை

நன்றி றாஜன்!

பொருத்தமான ஒளிப் பதிவினை இணைத்துள்ளீர்கள். இந்து சமயம் சொல்லும் வருணாச்சிரம தர்மத்தையும் பிராமண மற்றும் சூத்திர பிரிவுகள் பற்றி ஒரு பார்ப்பனர் சொல்லும் விளக்கத்தையும் தெரியாதவர்கள் அறிந்து கொள்ளட்டும்.

ஈழத்தில் என்று சாதி ஒழிக்கப்பட்டது தெரியுமா?

தெரியேல்லையே. உங்களுக்கு தெரியுமா??

தற்போது இது எமது நாட்டிற்கு அப்பால்பட்ட விடயம் ஆகையால் விட்டுவிடுவோம். இடம் பெயர்ந்து அனைவரும் ஒருமரத்தின் கீழ்;தான் உள்ளோம்.....................மறந்து விடக் கூடாது :lol::lol:
  • தொடங்கியவர்

Alternative எழுதியது: தெரியேல்லையே. உங்களுக்கு தெரியுமா??

இல்லைங்க தெரியாது... தெரிஞ்சா ஏன்னுங்கோ கேக்கிறேன்..

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

தற்போது இது எமது நாட்டிற்கு அப்பால்பட்ட விடயம் ஆகையால் விட்டுவிடுவோம்

---------------------------------------------

வன்னிமைந்தன்,

"விட்டுவிடுவோம்" என்று எழுதியிருக்கின்றீர்கள், என்னத்தை விட்டுவிடசொல்லுகிறீர்கள்? கொஞ்சம் விரிவாக- விளக்கமாக சொல்வீர்களா?

நன்றி றாஜன்!

பொருத்தமான ஒளிப் பதிவினை இணைத்துள்ளீர்கள். இந்து சமயம் சொல்லும் வருணாச்சிரம தர்மத்தையும் பிராமண மற்றும் சூத்திர பிரிவுகள் பற்றி ஒரு பார்ப்பனர் சொல்லும் விளக்கத்தையும் தெரியாதவர்கள் அறிந்து கொள்ளட்டும்.

என்ன கொடுமையையா இப்படி கொடுமை தமிழீழத்தில் நடக்காது ஆனால் என் ஊரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடந்த கொடுமைகளை என் கண்ணால் கண்டிருக்கிறேன்

சிரட்டையில் தேனீர்,கோயிலுக்குள் செல்லவிடாது தடுத்தல்,கோயில் அன்னதானத்தில் பிறம்பான பந்தி ஆனால் கல்வியை பொருத்தவரையில் நான் அறிந்தவரை யாழ்பானத்தில் இந்தியாவில் நடந்த கொடுமைகளை போல நடந்தது இல்லை.சாதி வேற்றுமையை தமிழீழத்தில் அடியோடு அறுக்கவேண்டும் அது நடக்கும்

என்ன கொடுமையையா இப்படி கொடுமை தமிழீழத்தில் நடக்காது ஆனால் என் ஊரில் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு நடந்த கொடுமைகளை என் கண்ணால் கண்டிருக்கிறேன் சிரட்டையில் தேனீர்,கோயிலுக்குள் செல்லவிடாது தடுத்தல்,கோயில் அன்னதானத்தில் பிறம்பான பந்தி ஆனால் கல்வியை பொருத்தவரையில் நான் அறிந்தவரை யாழ்பானத்தில் இந்தியாவில் நடந்த கொடுமைகளை போல நடந்தது இல்லை.சாதி வேற்றுமையை தமிழீழத்தில் அடியோடு அறுக்கவேண்டும் அது நடக்கும்

இந்தியாவுடன் ஒப்பிடும் போது இலங்கையில் சாதியத்தின் கொடூரம் மிகவும் குறைவானது தான். ஆனால் சிலர் எமது இனத்திற்கும் இதற்கும் சம்பந்தமேயில்லை என்பது போல் காட்ட முயற்சிக்கிறார்கள்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.