Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

இராணுவத்தினரின் எஞ்சிய உணவுக்கு கையேந்தும் சிறார்கள்

Featured Replies

வகுப்பறைகளில் மயங்கி விழுதல்... இராணுவத்தினரின் எஞ்சிய உணவுக்கு கையேந்துதல்: பெரும் அவலத்தில் யாழ். சிறார்கள்

[ஞாயிற்றுக்கிழமை, 15 ஒக்ரொபர் 2006, 19:07 ஈழம்] [கொழும்பு நிருபர்]

யாழ்ப்பாணத்தில் சிறுவர்கள் பாரிய பட்டினிச்சாவு அவலத்தை எதிர்கொண்டிருப்பதாக "வீரகேசரி" நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.

"வீரகேசரி" நாளேட்டில் வெளியான செய்தி விவரம்:

வடமராட்சி, தீவகம், தென்மராட்சி மற்றும் வலிகாமம் பகுதிகளில் உலக உணவுத்திட்டத்தால் முன்னெடுக்கப்பட்ட மதிய உணவுத் திட்டம் தற்போது தடைபட்டுள்ளது.

பின்தங்கிய பிரதேச மாணவர்களுக்கான போசாக்கு உணவு எனும் திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட சமைத்த உணவும் வழங்கப்படுவதில்லை.

சிறுவர் பாதுகாப்பு நிதியம் மற்றும் யுனிசெஃப் போன்ற சிறார் நல அமைப்புக்களுக்கும் இதுவரை சிறார்கள் எதிர்கொள்ளும் பட்டினிச் சாவு பற்றியோ அல்லது போசாக்கின்மை பற்றியோ கூற தயாராகவில்லை.

கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக மூடப்பட்டிருந்த பாடசாலைகள் கடந்த புதன்கிழமை முதல் மீள இயங்கத் தொடங்கினாலும் உணவின்மையால் மாணவர்கள் சோர்வடைந்துள்ளனர்.

மாணவர்கள் வகுப்பறைகளில் மயங்கி விழுவதும் கற்றல் செயற்படுகளில் ஆர்வமின்றியும் உள்ளனர்.

கடந்த 10 ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது ஒரு மோசமான நிலை என்கின்றனர் யாழ். பாடசாலைகள் நிர்வாகத்தினர்.

அல்லைப்பிட்டி மற்றும் மண்டைதீவு பகுதிகளிலிருந்து இடம்பெயர்ந்து யாழ். மரியாள் தேவாலயத்தில் தங்கியுள்ள குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்கள் ஒருவேளை உணவுதான் உண்கின்றனர்.

மதிய உணவுக்காக தேவாலயத்தின் முன்னாள் உள்ள இராணுவ முகாமின் முன்பாக நூற்றுக்கணக்கான சிறுவர்கள் கோப்பைகளுடன் எஞ்சிய உணவையேனும் படையினர் தமக்குத் தருவார்கள் என்ற நம்பிக்கையில் நாள் தோறும் காத்திருக்கின்றனர்.

ஆனால் சிறிலங்கா இராணுவத்தினரோ சிறுவர்களை அடித்து விரட்டுகின்றனர் என்று "வீரகேசரி" செய்தி வெளியிட்டுள்ளது.

http://www.eelampage.com/?cn=29323

இப்படி ஒரு நிலமையைத்தான் சம்பூரிலும் திட்டமிட்டு ஏற்படுத்தியது அரச படைகள் ஆதலால்த்தான் இராணுவ முன்ணேற்றம் கூட சாத்தியமானது...

புலிகளின் பலவீனம் மக்கள்தான் என்பதை அறிந்து துல்லியமாக நடவடிக்கை எடுக்கிறது அரசாங்கம்.... அதனால்த்தான் முகமாலை பாதுகாப்பான பிரதேசம் இல்லை ஆனையிறவுதான் பாடுகாப்பு எண்று அரசாங்கம் அரற்றுவது அவர்களின் இலக்கு எது என்பதும், புலிகளின் விட்டுக்கொடுப்பு எப்படி இருக்க வேண்டும் என்பதையும் காட்டுகிறது...!

இது விடயத்தில் புலிகளுக்கு உதவக்கூடியவர்கள் யாழ் மக்கள் மட்டுமே....!

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

புலிகளின் பலவீனம் மக்கள்தான்

இந்நிலைமை மாறினால்

பலமும் அவர்களே

புலிகளின் பலவீனம் மக்கள்தான்

இந்நிலைமை மாறினால்

பலமும் அவர்களே

பலத்தில்தானே பலவீனமுன் இருக்கும்.!

ஒரு பெரிய கட்டிடத்தை சரிக்க மிண்டு கொடுக்கிற தூண்களையோ, அல்லது அத்திவாரத்தையோ சேதப்படுத்தினால் போதாதா....??? அது போலத்தான் இதுவும்.... இது விடயத்தில் யாழ் மக்கள்தான் தெளிவடைய வேணும்....!

  • தொடங்கியவர்

சுனாமி நடந்தவுடன் பதறி அடித்து புலம்பெயர்ந்த நாடுகளில் உள்ள உறவுகள் எல்லோரும் காரியத்தில் இறங்கினார்கள்.

விமானம் ஒன்றை வாடகைக்கு அமர்த்தி உதவி அனுப்பும் அளவிற்கு எழுச்சி கொண்டார்கள். அது திடீர் என்று நடந்த அகோரம் என்பதால் மற்றும் தற்போது போன்ற யுத்தநிலை இல்லை என்பதால்.

இன்று இறப்புகளும் அவலங்களும் படி படியாக அரங்கேறுகிறது. அதுதான் காரியத்தில் இறங்கும் அளவிற்கு தூண்டவில்லையா? அதாவது தமிழினம் ஆயிரம் சிறு வெட்டுக்களா மெதுவாக இறக்கிறது. எனவே செயலை எதையும் தூண்டாது இருக்கிறது.

தமிழ் மக்களை பட்டிணி போடும்படியும், ஆட்கடத்தல்கள் அச்சுறத்தல்கள் கொலைகள் உட்பட மக்களுக்கு எதிரான தாக்கதல்களை தொடுக்கும் படியும்

சிறீலங்கா அரசுக்கு இணைத் தலைமை நாடுகள் தான் ஆலோசனை வழங்கியதாக இன்று ஒரு தகவல்வெளிவந்திருக்கிறது.

தமிழ் மக்கள் மீது தாக்குதல் நடத்தினால் தமிழ் மக்களை பட்டிணி போட்டால் அவர்களுககு விடுதலைப்புலிகள் மீது வெறுப்புவரும் என்றும் மக்களின் ஆதரவை இழக்கும் விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியாகவும் பலவீனப்படுத்திவிட்டால் அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து வந்த தாங்கள் விரும்பிய ஒரு திர்வை திணிக்கலாம் என்று சிறீலங்கா அரசுக்கு ஐடியா கொடுத்ததே சமாதானத் தூதுவர் தானாம்.

ஏற்கணவே சூடானிலும் பலஸ்தினத்திலும் இந்த முறையை கையாண்டு வெற்றிகண்டதாகவும் சொல்லப்பட்டதாம்.

பாவம் இந்த ஐடியா திலகங்கள் நம்முடைய தேசியத் தலைவரிடம் பாடம்படிக்கப் போகிறார்கள்…

பொருளாதார தடை மூலம் தமிழனை அடிபணிய வைக்கும் முயற்சி நீண்ட கலமாகவே இலங்கை அரசின் நிகழ்ச்சி நிரலில் இருந்து வந்துள்ளது. ஆனால் சர்வதேச நெருக்குதல்களுக்கப்பால் தமிழ் நாட்டில் இது ஒரு பெரிய எதிர்ப்பு அலையை உருவாக்கி விடும் என்று பயந்தே இதை ஆறப் போட்டு வந்தது. இப்போது அவர்களுக்கு அதற்கு சாதகமான சமிக்கைகள் சர்வதேச நாட்டாமைகளிடமிருந்து வந்துள்ளது என்றே எண்ணத் தோன்றுகிறது.

  • கருத்துக்கள உறவுகள்

பொருளாதாரத் தடைகளும் பொருண்மியப் போராட்டமும்... ஒரு ஆய்வு.

http://www.pathivu.com/?ucat=nilavaram

பேச்சுவார்த்தைகள் தாமதமாவதால் பாரிய மனிதாபிமான பிரச்சினைகள் உருவாகின்றன.

ஸ்ரீ லங்கா அரசும்இ தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும் எங்கே எப்பொழுது பேச்சுவார்த்தைகள் என இழுபறிபடும் நிலையில் யாழ். குடாநாட்டில் ஒரு பாரிய மனிதாபிமானப் பிரச்சினை உருவாகி வருகிறது. அங்கு நான்காவது நாளாக குண்டுவீச்சுக்கள் தொடரும் நிலையில்இ அரை மில்லியன் பொதுமக்கள் உணவுஇ எரிபொருள் பற்றாக்குறையினால் அல்லலுறுகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 11 ஆம் திகதி அரச படைகளுக்கும்இ விடுதலைப் புலிகளுக்கும் இடையில் யுத்தம் ஆரம்பித்த நாள் தொடக்கம் ஏனைய பகுதிகளுடன் குடாநாட்டை இணைக்கும் ஏ 9 பாதை மூடப்பட்டுள்ளது. ஆகாயஇ கடல் மார்க்கத் தொடர்புகள் அற்ற நிலையில்இ செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புக்கள் பாதுகாப்புக் காரணங்களைக் காட்டி கடல் வழிப் பயணங்களுக்கு பாதுகாப்பு வழங்க மறுத்துள்ளன.

சர்வதேச உதவி வழங்கும் நாடுகளின் அழுத்தம் காரணமாக அரசாங்கம் ஒக்டோபர் 28 30 ஆம் திகதிகளில் விடுதலைப்புலிகளுடன் பேச்சுவார்த்தையை ஆரம்பிக்க தனது இணக்கத்தைத் தெரிவித்தது. எனினும் ஐரோப்பாவில் எங்கு பேச்சுவார்த்தை நடத்துவது என்பது பற்றி இனிமேல்தான் முடிவு எடுக்கப்பட வேண்டியுள்ளது.

போராளிகள் ஒஸ்லோவை விரும்பும் அதேவேளையில் அரசாங்கம் சுவிற்சர்லாந்தின் ஒரு இடத்தை விரும்புவதாகத் தெரிகிறது. அரசாங்கம் யாழ்.குடாநாட்டில் விடுதலைப்புலிகளது பிரதேசத்தின் மீது குண்டுகளை வீசியும்இ எறிகணைத் தாக்குதல்களை நடத்தியும் அழுத்தங்களை உண்டாக்கியும் வருகிறது. நோர்வேயினால் உருவாக்கப்பட்ட 2002 பெப்ரவரிக்கான யுத்த நிறுத்தம் பாரிய மோதல்களினால் முடிவுக்கு வந்துள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள கிழக்குப் புறப்பட்டினமான மாங்கேணியிலிருந்து வெள்ளியன்று பாரிய யுத்தம் வெடித்துள்ளதாக அறிவிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கை அப்பகுதியிலுள்ள தற்காலிக கூடாரங்களில் தங்கியுள்ள 34இ000 அகதிகளுக்கான பொருட்கள் சென்றடைவதை அச்சுறுத்துகிறது.

இம்மக்கள் போராளிகளுக்கும்இ படையினருக்கும் இடையே திருகோணமலைத் துறைமுகத்திற்கு அண்மையிலுள்ள மூதூர் பட்டினத்தைக் கைப்பற்றுவதற்காக நடைபெற்ற சமரின் போது தமது இருப்பிடங்களை இழந்தவர்களாவர். .

மூன்று தசாப்தங்களாகப் பெரும்பான்மை சிங்கள மக்களுக்கும்இ சிறுபான்மையினமான தமிழ் மக்களுக்குமிடையே நடைபெற்ற மோதல்களை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு ஏற்படுத்தப்பட்ட இப்போர் நிறுத்தம் 2003 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பேச்சுவார்த்தைகள் முறிவடைந்ததும்இ அவல நிலைக்குள்ளானது. வடக்குஇ கிழக்கு மக்களுக்காக ஒரு தனிநாட்டை உருவாக்குவதற்காக நடைபெற்ற இனப்பூசல்களில் 65இ000 பேர் மரணத்தைத் தழுவியுள்ளதாக நம்பப்படுகிறது.

அரச நிறுவனங்கள் மிகக் குறைந்த அளவான உதவிகளை குடாநாடுக்குச் செய்து வந்தாலும்இ உதவி வழங்கும் நிறுவனங்கள் இரண்டு சாராரும் ஒரு சமரசமான முடிவை எட்டாதுவிட்டால்இ தமிழ் மக்கள் பெருமளவில் வாழும் இப்பகுதியின் நிலை மிகுந்த அவலத்துக்குள்ளாகும் என எச்சரித்துள்ளனர். நோர்டிக் கண்காணிப்புக் குழுவின் தலைவர் லார்ஸ் சொல்வ்பேக் இவ்வார முற்பகுதியில் கூறியதாவதுஇ நிச்சயமற்ற ஒன்றில் தங்கியிருக்குமாறு இலங்கையிலுள்ள எந்தப் பிரஜையையும் வற்புறுத்த முடியாது. அடுத்துவரும் வாரங்களில் கப்பலொன்று வரும் அல்லது வராது என்ற வாய்ச் சொல்லே அந்த நிச்சயமற்ற நிலையாகும். வடக்கு கிழக்கிலுள்ள தமிழ்ப் பிரதேசங்களுக்கு சென்று திரும்பிய சொல்வ்பேக் அங்குள்ள நிலையை பூரணமாக ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்று என வர்ணித்துள்ளார். அரசாங்கம் குடாநாட்டில் போதிய உணவுப் பொருட்கள் உண்டு எனக் கூறுகிறது. அத்தியாவசிய சேவைகளின் ஆணையாளர் நாயகம் எஸ்.டி.திவாரட்ன "இந்த வார இறுதியில் யாழ்ப்பாணத்தின் மாதாந்த தேவையான 10இ000 மெற்றிக்தொன் உணவுப் பொருட்கள் வழங்கப்பட்டுள்ளன. நாங்கள் கப்பல்களை.

உபயோகித்து உணவுப் பொருட்கள் வழங்குவதால் அங்கு பற்றாக்குறையேயில்லை. எவரும் பற்றாக்குறை உண்டு என்று முறைப்பாடு செய்யவில்லை' எனக் கூறினார். எனினும் யூ.என்.மற்றும் ஏனைய ஏஜென்சிகள் ஆகஸ்ட்இ செப்டம்பர் மாதங்களுக்கிடையில் 6000 மெற்றிக் தொன் உணவுப் பொருட்களே குடாநாட்டுக்கு வந்துள்ளன என்றும்இ அதனால் மோதலுக்குள் அகப்பட்ட மக்கள் மிகுந்த அவலத்துக்குள்ளாகியுள்ளனர் என்றும் கூறுகின்றன.

ஆகஸ்ட் இறுதிப் பாகத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையொன்றில் இன்ரர் ஏஜென்சி ஸ்ரான்டிங் கொம்மிற்றி கன்றி ரீம் கூறுவதாவது. ஆகஸ்ட் 11 ஆம் திகதிக்குப் பின்னர் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட உணவுப் பொருட்களின் தொகையான 6இ014 மெற்றிக் தொன்கள் உலக உணவுத் திட்டத்தினால் வழங்கப்படும் ஆகக் குறைந்த அளவிலும் அரைவாசியாகும். .

அரசாங்கமும்இ புலிகளும் மக்களது அவலங்கள் பற்றி அக்கறை காட்டவில்லை என சர்வதேச ஆர்வலர்கள் உரக்கக் குரலெழுப்பியுள்ளனர். செஞ்சிலுவைச் சங்கத்தைச் சேர்ந்த பீற்றர் கிறாங்கோலினிக் கூறுவதாவதுஇ யுத்தத்திலீடுபட்ட இரண்டு சாராரும்இ சர்வதேச மனிதாபிமான சட்டத்தின் பிரகாரம் மக்கள்தொகைஇ அவர்களது அடிப்படைத் தேவைகளான உணவுஇ நீர்இ உடைஇ உறைவிடம்இ மருந்து வகை ஆகியவற்றைப் போர்க் காலத்திலும் பெற்றுக் கொள்ளக்கூடிய நிலையை உறுதிப்படுத்த வேண்டும்

http://www.pathivu.com/index.php?subaction...t_from=&ucat=2&

யாழ்நிலையை மாற்ற

அரசாங்கத்தின் முழுகட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு உணவு வழங்க முடியாதென்றால் அருகில் உள்ள தமிழீழ அரசிடம் உதவி கேட்கலாமே

  • கருத்துக்கள உறவுகள்

ஒரு பிரச்சனையைச் சிறிதாக்க வேண்டுமானால், இன்னுமொரு பிரச்சனையைக் கிளப்புதல் என்று சிங்கள அரசு தொடர்ந்து நடந்து கொண்டிருக்கின்றன. திருமலையில் பள்ளி மாணவர்களய் கொல்லப்பட்ட போது இருந்த கோபம், இப்போது அதைத் தாண்டி, பல கொலைகள் நடந்ததால், அவ்விடயம் அமிழ்ந்து விட்டது.

இன்றைக்கு தமிழன் தன் விடிவை நோக்கிப் போவதைத் தடுக்க, வயிற்றுப் பிரச்சனையைக் கிளப்பினால், அது அமிழ்ந்து விடும் என சிங்கள அரசு நினைக்கின்றது. ஆனால், அந்தக் கோபங்கள், சிங்கள அரசு மீது மக்களின் வெறியாகப் பாயும் என்பதை அது புரிந்து கொள்ளவில்லை.

ஆனால், அதைத் தாண்டி புலம்பெயர் வாழ்மக்கள் இன்னும் அமைதியாக இருப்பது ஏன்? எம் உறவுகள் பட்டினியால் சாவதைப் பார்த்துக் கொண்டிருக்கப் போகின்றீர்களா?

இப்படி ஒரு சம்பவத்தை அனுமதித்துக் கொண்டிருந்தோமானால், தமிழனத்துக்கு துரோகம் செய்த முதல் குற்றவாளியாக நாம் தான் இருப்போம்!

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.