Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

துபாய் மாநகரில் புதுசு - ட்ராம் சேவை

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

துபாய் மாநகரில் புதுசு - ட்ராம் சேவை

மிக வேகமாக வளர்ந்து வரும் துபாய் நகரின் நவீன நகர் பகுதியான துபாய் மெரீனா - ஜுமைரா பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 10.6 கிமீ தூரத்திற்கு துபாய் ட்ராம் சேவையை இன்று மாலை துபாய் அமீரகத்தின் அரசர் 'ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தும்' கொடியசைத்து திறந்து வைக்கிறார்.

நாளை புதன் கிழமை(12-11-2014) காலை 6.30 மணி முதல் பொது மக்களுக்கான ட்ராம் சேவை ஆரம்பமாகிறது.

மக்கள் நெருக்கம் மிகுந்த பகுதியான அல் சுஃபா முதல் ஜுமைரா பீச் ரெசிடென்ஸ் வரைக்குமான 10.6 கி.மீ தூர பாதையில் 11 நிலையங்களை கொண்டுள்ளது. ஒரு பயணத்தில் 405 பயணிகளை ஏற்றிச் செல்ல ஏழு பெட்டிகளைக் கொண்டது இந்த ட்ராம். இதில் சிறப்பம்சம் என்னவெனில் இந்த ட்ராம் சேவைக்கான பின் கம்பிகள் தரையிலேயே அமிழ்ந்து நிறுவப்பட்டுள்ளது. அனைத்து நிலைய்ங்களும் குளிர்சாதன வசதியும், முற்றிலும் தானியங்கி கருவிகளால் கட்டிமுடிக்கப்பட்டுள்ளது.

2014_dubaitram_4_innerbig.jpg   

3344312595.jpg

Route Map:

2719293160.jpg

கல்ஃப் நியூஸ்

  • கருத்துக்கள உறவுகள்

துபாய் மாநகரில் புதுசு - ட்ராம் சேவை

மிக வேகமாக வளர்ந்து வரும் துபாய் நகரின் நவீன நகர் பகுதியான துபாய் மெரீனா - ஜுமைரா பகுதிகளை இணைக்கும் வகையில் சுமார் 10.6 கிமீ தூரத்திற்கு துபாய் ட்ராம் சேவையை இன்று மாலை துபாய் அமீரகத்தின் அரசர் 'ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தும்' கொடியசைத்து திறந்து வைக்கிறார்.

மிக வேகமாக வளர்ந்து வரும் துபாய் நகரகத்துக்கு, இது மிக அவசியாமானது. நிச்சயம் பலர் இதனால், பலன் பெறுவார்கள்.

புது வீதியை, புதிய கட்டிடத்தை திறந்து வைக்க....

ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளில்தான்... அரசியல் வாதிகளும், மன்னர்களும் வரவேண்டும் போலுள்ளது. :D 

இங்கு இப்படியான விடயத்தை.... கேள்விப் படவேயில்லை.

குறிப்பிட்ட... கால  எல்லைக்குள், கட்டி முடிக்கப் பட்டவுடன், மக்கள் தாமாகவே அதில் பயணிப்பார்கள்.

  • தொடங்கியவர்
  • கருத்துக்கள உறவுகள்

துபாய் 'ட்ராம்' சேவை தொடக்க விழா

New-Picture-304.png

2687298120.JPG

3677296448.JPG

1624984670.JPG

Source:Gulf news.

மிக வேகமாக வளர்ந்து வரும் துபாய் நகரகத்துக்கு, இது மிக அவசியாமானது. நிச்சயம் பலர் இதனால், பலன் பெறுவார்கள்.

புது வீதியை, புதிய கட்டிடத்தை திறந்து வைக்க....

ஆசிய, மத்திய கிழக்கு நாடுகளில்தான்... அரசியல் வாதிகளும், மன்னர்களும் வரவேண்டும் போலுள்ளது. :D

இங்கு இப்படியான விடயத்தை.... கேள்விப் படவேயில்லை.

குறிப்பிட்ட... கால எல்லைக்குள், கட்டி முடிக்கப் பட்டவுடன், மக்கள் தாமாகவே அதில் பயணிப்பார்கள்.

உண்மை தமிழ்சிறி. இங்கு எத்தனையோ பிரமாண்டமான கட்டங்கள் பெருவீதிகள் திறந்து வைக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் அரசியல் தலைவர்களின் பிரசன்னத்தைக்கூட நான் காணவில்லை.

இங்கு சுவிட்சர்லாந்தில் வரலாற்று பெருமை மிக்க பல கிலோமீற்றர் நீளமான மாபெரும் ரயில் சுரங்கப்பாதை வேலைகள் பூர்த்தி விழாவில் சுவிஸ் போக்குவரத்து அமைச்சர் கலந்து கொண்டிருந்தார். அவர் அந்நிகழ்வில் பேச எழுந்ததும் கூறிய வார்த்தைகள் "இந்த பாதை பூர்த்தியாவது எனது பதவிக்காலத்தில் நடப்பது மட்டும் தான் எனக்கு பெருமை. அதன் உருவாக்கல் திட்டமிடல் மற்றும் அதற்கான முழுப்பெருமையும் முன்னாள் போக்குவரத்து அமைச்சரையே சேரும். எனக்கு இதுபற்றி மேலதிகமாக எதுவும் தெரியாது" என்று வேறு கட்சியை சேர்ந்த அந்த முன்னாள் அமைச்சரை சுட்டிக்காட்டி விட்டு அமர்ந்து விட்டார். ஆசிய அரசியல்வாதிகள் என்ன செய்திருப்பார்கள் என்பதை உங்கள் ஊகத்திற்கே விட்டு விடுகிறேன்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இந்தியாவில்  என்றால் வழக்கு போட்டாவது அந்த திட்டத்தை நிற்பாட்டியிருப்பார்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பார்க்க வடிவாய் இருக்கு.

  • கருத்துக்கள உறவுகள்

உண்மையில் எந்தவொரு நாட்டின் பிரமாண்டங்களுக்கும் ஒருவகை அடிமைவாழ்க்கை வாழ்ப்பவர்களால் தான் பூர்த்தி ஆக்கப்படுகின்றது. கனடாவின் பல ஆரம்பகாலக் கட்டுமானங்கள் சீனர்கள், அமெரிக்காவில் கறுப்பர்கள், துபாயில் இந்தியார்கள், சிங்கப்பூரில் இந்தியர்கள்.

இதனை Alstom என்ற பிரெஞ்சு நிறுவனம் Besix என்ற பெல்ஜிய நிறுவனத்தின் உதவியுடன் உருவாக்கியுள்ளது.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.