Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

உலகக்கிண்ணத்தில் சுப்பர் ஓவர் நீக்கம் : பரிசுத் தொகை ரூபா 60 கோடி
 

 

2015 ஆம்ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியின் நொக் அவுட் சுற்றில் சுப்பர் ஓவர் நீக்கப்பட்டுள்ளதுடன் பரிசுத் தொகையாக ரூபா 60 கோடி வழங்கப்படவுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டி (50 ஓவர்) எதிர்வரும் 2015 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 14ஆம் திகதி முதல் மார்ச் மாதம் 29ஆம் திகதி வரை அவுஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் இடம்பெறவுள்ளது.

இந்தப் போட்டி குறித்து சர்வதேச கிரிக்கெட் சபை (ஐ.சி.சி) நேற்று ஆலோசனை செய்தது.
இதன்படி உலகக் கிண்ண நொக்அவுட் சுற்றில் சுப்பர் ஓவரை நீக்குவது என்று முடிவு செய்யப்பட்டது.

 

காலிறுதியிலோ அல்லது அரை இறுதியிலோ ஆட்டம் சமநிலையில் முடிந்தால் சுப்பர் ஓவர் முறை பின்பற்றப்பட மாட்டாது. குழு ஆட்டத்தில் அதிக புள்ளிகள் பெற்றதன் அடிப்படையில் முடிவு செய்யப்படும்.

அதேவேளை, இறுதி ஆட்டம் சமநிலையில் முடிந்தாலோ அல்லது மழையால் பாதிக்கப்பட்டு நடைபெற முடியாமல் போனாலோ இரு அணிகளுக்கும் இணைந்து கூட்டாக கிண்ணம் வழங்கப்படும்.

 

உலகக் கிண்ண போட்டிகள் நடைபெறும் 49 ஆட்டமும் நடுவரின் முடிவை மறுபரிசீலனை செய்யும் டி.ஆர்.எஸ். முறை பின்பற்றப்படும். இந்தப்போட்டியின் மொத்த பரிசுத் தொகை ரூ.60 கோடியாகும்.

2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியை விட இது 20 சதவீதம் கூடுதலாகும். இந்தியா, இலங்கை, பங்களாதேஷ் ஆகிய 3 நாடுகள் இணைந்து நடத்திய 2011ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் மொத்தம் ரூ.48 கோடி பரிசுத் தொகை தான் வழங்கப்பட்டது.

 

2015ஆம் ஆண்டு உலகக் கிண்ண போட்டியில் சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு ரூ.23.85 கோடி பரிசாக வழங்கப்படும்.

அதேநேரத்தில் தோல்வி எதையும் சந்திக்காமல் கிண்ணத்தை கைப்பற்றினால் ரூ.24 கோடி வழங்கப்படும். 2ஆவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.10 கோடியும், அரை இறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா 3.6 கோடியும், காலிறுதியில் தோற்கும் 4 அணிகளுக்கு தலா ரூ.1.8 கோடியும் வழங்கப்படும்.

 

 

http://www.virakesari.lk/articles/2014/11/11/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%93%E0%AE%B5%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AF%80%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B0%E0%AF%82%E0%AE%AA%E0%AE%BE-60-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%9F%E0%AE%BF

Edited by நவீனன்

  • Replies 827
  • Views 43.7k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாட்டாம தீர்ப்ப மாத்த சொல்லி கேட்கலாம்! 

 

துபாய்: உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் டிஆர்எஸ் எனப்படும் நடுவரின் முடிவை மறு பரிசீலனை செய்யும் நடைமுறை அமல்படுத்தப்படும் என்று சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் அறிவித்துள்ளது. அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள கிரிக்கெட் உலக கோப்பை போட்டிக்கான பரிசு தொகை, உள்ளிட்ட பல அம்சங்கள் குறித்து ஐசிசி அதிகாரிகள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதுகுறித்து ஐசிசி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் நாட்டாம தீர்ப்ப மாத்த சொல்லி கேட்கலாம்! உலக கோப்பையில் மொத்தம் 49 போட்டிகள் நடக்கும்.

 

அனைத்திலும் டிஆர்எஸ் நடைமுறை அமலில் இருக்கும். நாக்-அவுட் சுற்றில் மட்டுமே, ஒருநாள் ஓய்வு இருக்கும். நாக்-அவுட் சுற்றுகள் ஆரம்பித்த பிறகு போட்டி டையில் முடிந்தால் சூப்பர் ஓவர் மூலம் வெற்றி-தோல்வி கணிக்கப்படாது. அதற்கு பதிலாக, லீக் ஆட்டங்களில் எந்த அணி அதிக புள்ளிகள் பெற்றதோ அதுவே வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படும். உலக கோப்பையின் இறுதி போட்டி டையில் முடிந்தால், இரு அணிகளுமே வெற்றி பெற்றதாகத்தான் அறிவிக்கப்படும். இவ்வாறு அந்த செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது. டிஆர்எஸ் எனப்படும் நடைமுறை, 2009ம் ஆண்டு நியூசிலாந்து-பாகிஸ்தான் டெஸ்ட் போட்டியில் முதன் முதலில் அமலுக்கு வந்தது.

 

2011ல் நடந்த கடந்த, உலக கோப்பை கிரிக்கெட் போட்டியிலும் டிஆர்எஸ் நடைமுறையில் இருந்தது. இருப்பினும் இந்திய கிரிக்கெட் வாரியம் எதிர்ப்பு தெரிவித்ததால் இந்திய அணி ஆடும் இருதரப்பு போட்டிகளில் டிஆர்எஸ் நடைமுறை அமலாகாது என்று ஐசிசி சலுகை அளித்திருந்தது. ஆனால் உலக கோப்பையில் பல அணிகளும் மோதும் என்பதால் டிஆர்எஸ் நடைமுறை அமலுக்கு வந்துள்ளது. இதன்மூலம் அம்பையர் எடுக்கும் முடிவே எதிர்த்து, அந்த முடிவால் பாதிக்கப்படும் அணி கேப்டன் மறு ஆய்வு செய்ய கோர முடியும்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/drs-be-used-cricket-world-cup-2015-214643.html

  • தொடங்கியவர்

உலகக்கோப்பை: இந்திய-பாக். போட்டிக்கான டிக்கெட்டுகள் 12 நிமிடங்களில் முற்றிலும் விற்பனை

பிப்ரவரி 15, 2015 அன்று அடிலெய்டில் நடைபெறும் இந்தியா-பாகிஸ்தான் உலகக்கோப்பை போட்டிக்கான டிக்கெட்டுகள் 12 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

50,000 பேர் அமர்ந்து பார்க்ககூடிய கொள்திறன் கொண்ட அடிலெய்ட் மைதானத்தில் பொதுப்பார்வையாளர்களுக்கான டிக்கெட்டுகள் 12 நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தன.

மேலும், இந்தியாவிலிருந்து 20,000 ரசிகர்கள் இந்தப் போட்டியை காண ஆஸ்திரேலியா வருகை தருவதாக அடிலெய்ட் மைதான நிர்வாகி தெரிவித்தார்.

பிப்ரவரி 15-ஆம் தேதியன்று இந்தியா-பாகிஸ்தான் போட்டி முழு ரசிகர்களுடன் மைதானத்தில் களைகட்டவுள்ளதாக அவர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

உலகக்கோப்பை போட்டித் தொடரின் 2-வது நாள் இந்தப் போட்டி நடைபெறுகிறது.

உலகக்கோப்பை கிரிக்கெட் வரலாற்றில் இந்தியாவை பாகிஸ்தான் வீழ்த்தியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடிலெய்ட் மைதானத்தில் மட்டும் 4 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறுகிறது.

http://tamil.thehindu.com/sports/உலகக்கோப்பை-இந்தியபாக்-போட்டிக்கான-டிக்கெட்டுகள்-12-நிமிடங்களில்-முற்றிலும்-விற்பனை/article6590980.ece?homepage=true

  • தொடங்கியவர்

அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் 14 திகதியில் இருந்து மார்ச் மாதம் 29 திகதி வரை உலக கிண்ண கிரிக்கெட் போட்டிகள் ஆஸ்திரேலியா, நியூசீலாந்து நாடுகளில் நடைபெறவுள்ளது.  

 

                                2015_Cricket_World_Cup_logo_zpsccbd2138.                                                                                                                                                                                        

                                            இந்த போட்டிகளில் பங்கு பற்றும் நாடுகள் இரு பிரிவுகளாக பிரிக்கபட்டுள்ளது

 

                              cricketworldcup_zps6c58da85.jpg

                                  

                            போட்டி நடைபெறும் நாட்களும் இடங்களும்

                                                                                                                                                                                                                                                                                         

               sch_zpscfb831d8.png           

 

           இந்த முறை இந்த யாருக்கு கிண்ணம் என்று   பொறுத்து இருந்து பார்ப்பம்.

                                                                  Cricket-World-Cup-2015_zps41e21f15.jpg                                                                                                                                                                                                                                                                                      

இதுவரை நடைப்பெற்ற உலக கிண்ண போட்டிகளில் உலக கிண்ணத்தை வென்ற நாடுகள்

 

                 icccricketworldcuppastwinners_zps1801612

                                                                                                                         

Edited by நவீனன்

12 நாடுகள் மட்டும்  உலக கோப்பையை விளையாட ஒன்றரை மாதம் எடுக்கிறது.

  • தொடங்கியவர்

உலக கிண்ண கிரிக்கெட் இறுதி ஆட்டம் சமநிலையில் முடிந்தால் இணை சம்பியன்கள் பிரகடனப்படுத்தப்படுவர்
 

 

உலக கிண்ண கிரிக்கெட் தொடரில், மெல்பர்ன் கிரிக்கெட் விளை­யாட்­ட­ரங் கில் 2015 மார்ச் 15ஆம் திகதி நடை­பெ­ற­வுள்ள இறுதி ஆட்டம் சம­நி­லையில் முடி­வ­டைந்தால் அல்­லது மழை­யினால் கைவி­டப்­பட்டால் இணைச் சம்­பி­யன்கள் அறி­விக்­கப்­பட்டு உலகக் கிண்ணம் பகி­ரப்­படும்.


அவுஸ்­தி­ரே­லி­யா­விலும் நியூ­ஸி­லாந்தி லும் நடை­பெ­ற­வுள்ள உலகக் கிண்ண கிரிக் கெட் போட்­டி­களின் இறுதிச் சுற்றில் (நொக் அவுட்) போட்­டிகள் சம­நி­லையில் முடி­வ­டைந்தால் சுப்பர் ஓவரைப் பயன்­ப­டுத்­து­வ­தில்லை என சர்­வ­தேச கிரிக்கெட் பேரவை (ஐ.சி.சி) தீர்­மா­னித்­துள்­ளது.

2011இல் நடை­பெற்ற உலகக் கிண்ணப் போட்­டி­களின் இறுதிச் சுற்று ஆட்­டங்கள் சம­நி­லையில் முடி­வ­டைந்தால் சுப்பர் ஓவர் பயன்­ப­டுத்­து­வ­தென தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தது.


ஆனால், இம்­முறை கால் இறுதி அல்­லது அரை இறுதி ஆட்டம் சம­நி­லையில் முடி­வ­டைந்தால் அந்­தந்த அணி­களின் குழு­நிலை முடி­வுகள் கருத்தில் கொள்­ளப்­பட்டு முன்­னி­லையில் உள்ள அணி அடுத்த கட்­டத்­திற்கு முன்­னேறும்.

 

அதா­வது அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கும் தென் ஆபி­ரிக்­கா­வுக்கும் இடையில் எஜ்­பஸ்­டனில் 1999இல் நடை­பெற்ற அரை இறுதி ஆட்டம் சம­நி­லையில் முடி­வ­டைந்­ததை அடுத்து 'சுப்பர் ஆறு' சுற்றில் அவுஸ்­தி­ரே­லியா முன்­னி­லையில் இருந்­ததால் இறுதி ஆட்­டத்­திற்கு முன்­னே­றி­யது. இதே­போன்ற நிலைப்­பாடு இம்­முறை உலகக் கிண்ண இறுதிச் சுற்றில் பின்­பற்­றப்­படும்.

எனினும் இறுதி ஆட்டம் சம­நி­லையில் முடி­வ­டைந்தால் இணைச் சம்­பி­யன்கள் பிர­க­ட­னப்­ப­டுத்­தப்­பட்டு உலகக் கிண்ணம் பகி­ரப்­படும்.  அத்­துடன் சீரற்ற கால நிலை நிலவும் பட்­சத்தில் கால் இறுதிச் சுற்­றி­லி­ருந்து போட்­டி­க­ளுக்கு ஒரு நாள் மேல­தி­க­மாக ஒதுக்­கப்­படும்.


பணப்­ப­ரிசு அதி­க­ரிப்பு

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்­டி­க­ளுக்­கான மொத்தப் பணப்­ப­ரிசு (2011ஐ விட 25 வீதம் அதி­க­ரிப்பு) 10 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்­க­ளாகும்.
சம்­பி­ய­னாகும் அணிக்கு 3,750,000 அமெ­ரிக்க டொலர்­களும் இரண்டாம் இடத் தைப் பெறும் அணிக்கு 1,750,000 அமெ­ரிக்க டொலர்­களும் காத்­தி­ருக்­கின்­றது.

முதல் சுற்றில் விளையாடும் சகல அணி களுக்கும் 35,000 அமெரிக்க டொலர்கள் கிடைப்பது உறுதி. முதல் சுற்றில் ஒரு வெற்றிக்கு 45,000 அமெரிக்க டொலர்கள் மேலதிகமாகக் கிடைக்கும்.
- See more at: http://www.metronews.lk/article.php?category=sports&news=7691#sthash.sS9AqZfz.dpuf

  • தொடங்கியவர்

cricketworldcup_zps6c58da85.jpg

 

                                 POOL A  இல்                                POOL B  இல்

                                  SCOTLAND                                    IRELAND

                                  AFGHANISTAN                               UAE     

 

 

                              பங்குபற்றும் மேலதிக நாடுகள்

  • 3 weeks later...
  • தொடங்கியவர்

உலக கோப்பை பயிற்சியில் இந்தியா-ஆஸி., மோதல்
டிசம்பர் 01, 2014.

 

துபாய்: உலக கோப்பை பயிற்சி போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலியா மற்றும் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது.      

உலக கோப்பை கிரிக்கெட் தொடர் (50 ஓவர்), வரும் 2015, பிப்., 14 முதல், மார்ச் 29 வரை, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் நடக்கவுள்ளது. மொத்தம் பங்கேற்கும் 14 அணிகள் இரு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன.      

‘பி’ பிரிவில் இடம் பெற்றுள்ள இந்திய அணியுடன், தென் ஆப்ரிக்கா, பாகிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ், ஜிம்பாப்வே, அயர்லாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிகள் உள்ளன.      

இதற்காக 2015, பிப்., 8 முதல் 13 வரை, மொத்தம் 14 பயிற்சி போட்டிகள் நடத்தப்படுகின்றன. ‘நடப்பு சாம்பியன்’ இந்திய அணி, தனது முதல் பயிற்சி போட்டியில் (பிப்.,8) ஆஸ்திரேலியாவை சந்திக்கிறது.      

 

அடுத்து பிப்., 10ல் ஆப்கானிஸ்தானுடன் மோதுகிறது. பகலிரவு போட்டிகளாக நடத்தப்படும் இதில், இரு தரப்பில் இருந்தும் தலா 15 வீரர்கள் பங்கேற்கலாம். அதேநேரம், 11 பேர்கள் மட்டும் தான் களத்தில் இருக்க வேண்டும்.      

போட்டியை காண ரசிகர்களுக்கு டிக்கெட், இலவசமாக வழங்கப்படவுள்ளது

 

http://sports.dinamalar.com/2014/12/1417454384/worldcupcricketindiaaustraliawarmupmatch.html

  • தொடங்கியவர்

உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு ஒரே ஒரு இந்திய அம்பையர் தேர்வு!

 

மும்பை: உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான நடுவர்களில் இந்தியாவை சேர்ந்த ஒருவர் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலியா-நியூசிலாந்தில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற உள்ள உலக கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடரில் பணியாற்ற உள்ள நடுவர்களின் பெயர் பட்டியலை ஐசிசி வெளியிட்டுல்ளது.

 

உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு ஒரே ஒரு இந்திய அம்பையர் தேர்வு! அலீம்டார்-பாகிஸ்தான், பில்லி பவுடன்-நியூசிலாந்து, புருஸ் ஒக்ஸ்போர்ட்-ஆஸ்திரேலியா, இயன் குல்ட்-இங்கிலாந்து, குமார் தர்மசேனா-இலங்கை, மராய்ஸ் எராமுஸ்-தென் ஆப்பிரிக்கா, நிகல் லியாங்க்-இங்கிலாந்து, பவுல் ரெய்பெல்-ஆஸ்திரேலியா, ரிச்சர்ட் இலிங்வொர்த்-இங்கிலாந்து, ரிச்சர்ட் கெட்லபோரா-இங்கிலாந்து, ராட் டக்கர் மற்றும் ஸ்டீவ் டேவிஸ்-ஆஸ்திரேலியா. இவர்களே அம்பையர் குழுவில் உள்ளவர்களாகும். இதில் இந்தியாவை சேர்ந்த எஸ்.ரவி மட்டும் அம்பையராக வாய்ப்பு கிடைத்துள்ளது. இவர் சர்வதேச பேனல் அம்பையர் பொறுப்பில் இருப்பார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/world-cup-2015-match-officials-named-only-1-indian-216189.html

  • தொடங்கியவர்

உலகக்கோப்பை அரையிறுதியில் இந்தியா, தெ.ஆ., ஆஸ்திரேலியா, நியூசிலாந்து: சேவாக் கணிப்பு
 

 

2015-ஆம் ஆண்டு உலகக்கோப்பை போட்டிகள் அரையிறுதிக்கு இந்தியா, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகள் தகுதி பெற வாய்ப்பு என்று அதிரடி வீரர் சேவாக் கணித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது:

பாகிஸ்தானுக்கு எதிராக நியூசிலாந்து டெஸ்ட் போட்டியில் சிறப்பாக விளையாடியது. உலகக்கோப்பை கிரிக்கெட்டில் அவர்கள் தங்கள் சொந்த மண்ணில் விளையாடுகின்றனர். தென் ஆப்பிரிக்காவும் சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அங்கு விளையாடியது. அனைத்துப் போட்டிகளுமே நெருக்கமான ஆட்டங்கள். அரையிறுதிக்கு முன்னேறும் அணிகளை கணிப்பது கடினம் என்றாலும், இந்தியா, ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு முன்னேற வாய்ப்பிருக்கிறது என்று நான் கருதுகிறேன்.

 

இந்திய அணி ஆஸ்திரேலியாவில் உலகக்கோப்பைக்கு முன்னதாக டெஸ்ட் மற்றும் முத்தரப்பு ஒருநாள் போட்டிகளில் விளையாடுகிறது. எனவே வீரர்களுக்கு தங்களை அந்தப் பிட்ச்களுக்கு ஏற்ப மாற்றிக்கொள்வது ஒன்றும் பெரிய கடினமல்ல.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் பிட்ச்கள் ஒரே மாதிரிதான் இருக்கும், அங்கு சிறப்பாக பேட்டிங், பவுலிங் இரண்டையுமே செய்ய பிட்ச்கள் அமைக்கப்படும். கிரிக்கெட் ஆட ஆஸ்திரேலியா சிறந்த இடம். நல்ல வேகமான ஆட்டக்களங்களில் பந்துகள் எழும்பும், பேட்டிற்கு பந்துகள் அருமையாக வரும். அங்கு பேட்டிங், பவுலிங் இரண்டையுமே மகிழ்ச்சியாக நிறைவேற்ற முடியும்.

 

டெஸ்ட் போட்டிகளிலும் இங்கிலாந்தில் போல் அல்லாமல் ஆஸ்திரேலியாவில் இந்திய அணி சிறப்பாகவே விளையாடும் என்று கருதுகிறேன்.

2015 உலகக்கோப்பையில் தனது வாய்ப்பு பற்றி...

30 வீரர்கள் கொண்ட உத்தேச அணியில் என் பெயர் இடம்பெறும் என்று நான் நினைக்கிறேன். கிரிக்கெட் விளையாடும் எந்த ஒரு வீரரும் தன் நாட்டிற்காக உலகக்கோப்பை கிரிக்கெட்டில் ஆட விருப்பம் கொள்வார்கள். இந்த உலகக் கோப்பையில் நான் விளையாடுவேன் என்றே கருதுகிறேன்.

நான் தொடக்க வீரராக களமிறங்கினாலும், சமீபமாக ஒன்றாம், இரண்டாம், மூன்றாம், ஏன் 4ஆம் நிலையில் கூட களமிறங்கி ஆடி வருகிறேன். எந்த நிலையில் ஆடினால் என்ன? என்னால் ரன்கள் எடுக்க முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது. பந்தை கடைசி வரை பார்க்கவேண்டும், என் பகுதிக்கு வாகாக இருந்தால் அடிக்க வேண்டும். டெல்லி அணிக்காக வரும் காலத்தில் 3 அல்லது 4ஆம் நிலையில் களமிறங்குவேன்.

 

உலகக் கோப்பையில் இந்திய அணியின் வாய்ப்பு பற்றி...

2011-ஆம் ஆண்டு உலக சாம்பியன்கள் ஆனோம். கோப்பையை தக்க வைக்க வாய்ப்பு பிரகாசமாகவே உள்ளது. நல்ல அணி நம்மிடம் உள்ளது. ஒருநாள் கிரிக்கெட்டில் நாம் நன்றாகவே விளையாடி வருகிறோம்.

 

2011 உலகக்கோப்பை வெற்றி பற்றி...

நாக் அவுட் சுற்றில், அதாவது காலிறுதி, அரையிறுதி, இறுதிப் போட்டி வெற்றிகளை இரவு முழுதும் கொண்டாடினோம். ஆஸ்திரேலியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற கடினமான அணிகளுக்கு எதிராக ஆடினோம். அந்த உலகக் கோப்பை முழுதுமே மகிழ்ச்சியாக ஆடினோம், ஒவ்வொருவரும் பங்களிப்பு செய்தனர்.

இறுதிப் போட்டி பற்றி அதிகம் கவலைப்படவில்லை, காரணம் அதற்கு முன்பு 2 ஆண்டுகாலமாக இலங்கைக்கு எதிராக வெற்றிகளைக் குவித்துள்ளோம் என்பது எங்களுக்கு பெரிய பக்கபலமாக இருந்தது. ஆனால் பாகிஸ்தான் போட்டியே சற்று கவலை அளித்தது. 260 ரன்களையே அடித்திருந்தோம், பிட்சும் பேட்டிங்கிற்கு வாகாக இருந்தது. அந்தப் பிட்சில் 260 ரன்கள் போதாது. ஆனால் பவுலர்கள் அருமையாக, ஆக்ரோஷமாக வீசினர். ஆஷிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் சிங், ஜாகீர் கான், யுவ்ராஜ் சிங் ஆகியோர் போட்டியை வெற்றிபெற்று தந்தனர்.

இவ்வாறு கூறினார் சேவாக்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%86-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%87%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6655610.ece

  • தொடங்கியவர்

உலகக்கோப்பை: 30 வீரர்கள் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி அறிவிப்பு
 

 

2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான 30 வீரர்கள் கொண்ட உத்தேச தென் ஆப்பிரிக்க அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இறுதி 15 வீரர்கள் கொண்ட அணி ஜனவரி மாதம் அறிவிக்கப்படவுள்ளது.

 

வீரர்கள் விவரம் வருமாறு:

ஏ.பி.டிவிலியர்ஸ் (கேப்டன்), ஹஷிம் ஆம்லா (துணை கேப்டன்), கைலி அபாட், பர்ஹான் பிஹார்டீன், குவிண்டன் டி காக், மர்செண்ட் டீ லாங்கே, டுமினி, டு பிளேசிஸ், டீன் எல்கர், பியுரன் ஹெண்ட்ரிக்ஸ், ரீசா ஹெண்ட்ரிக்ஸ், இம்ரான் தாஹிர், ரோரி கிளீன்வெல்ட், ரியான் மெக்லாரன், டேவிட் மில்லர், மோர்னி மோர்கெல், கிறிஸ் மோரிஸ், ஜஸ்டின் ஆண்டாங், வெய்ன் பார்னெல், ராபின் பீட்டர்சன், ஆரோம் பாங்கிசோ, வெர்னன் பிலாண்டர், ஆண்ட்ரூ புட்டிக், காஜிசோ ரபடா, ரைலி ரூசோ, மிதகோசி ஷேஸி, டேல் ஸ்டெய்ன், லொன்வாபோ சொட்சோபி, மோர்னி வான் விக், டேவிட் வீஸ்.
http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-30-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6658578.ece

 

  • தொடங்கியவர்

உலகக்கோப்பை: 30 வீரர்கள் கொண்ட உத்தேச இந்திய அணி வியாழக்கிழமை தேர்வு
 

 

2015 உலகக்கோப்பை போட்டிகளுக்கான 30 வீரர்கள் கொண்ட உத்தேச அணியைத் தேர்வு செய்ய வியாழக்கிழமை அணித் தேர்வுக்குழுவினர் மும்பையில் கூடுகின்றனர்.

நாளை, தேர்வுக்குழுத் தலைவர் சந்தீப் பாட்டீல் தலைமையிலான 5 நபர் தேர்வுக்குழு உறுப்பினர்கள் மதியம் 1 மணியளவில் உத்தேச அணி தேர்வுக்காக மும்பையில் கூடுகின்றனர் என்று பிசிசிஐ செயலர் சஞ்சய் படேல் செய்தி நிறுவனம் ஒன்றிற்கு தெரிவித்த்ள்ளார்.

 

ஜாகீர் கான், இர்பான் பத்தான் ஆகியோர் காயத்திலிருந்து மீண்டதாகத் தெரியவில்லை எனவே இவர்கள் பெயர் பட்டியலில் இடம்பெறாது என்று தெரிகிறது.

ஆனால் ஆஷிஷ் நெஹ்ரா பெயர் இடம்பெறலாம் என்று தெரிகிறது. யுவராஜ் சிங், கம்பீர், சேவாக், ஹர்பஜன், நெஹ்ரா ஆகியோர் 2011 உலகக் கோப்பையில் ஆடியவர்கள் ஆனால் தற்போது பெரிய அளவுக்கு பார்மில் இல்லை

 

32 வயதாகும் யுவ்ராஜ் சிங், 2011 உலகக்கோப்பை போட்டிகளின் தொடர் நாயகன், ஆனால் விஜய் ஹசாரே கோப்பையில் ஒரேயொரு அரைசதத்திற்கு பிறகு ஒன்றும் சோபிக்கவில்லை. தியோதர் கோப்பையில் இவர் ஆடிய ஒரு இன்னிங்ஸில் பெரிதாக ரன் எடுக்கவில்லை.

மேலும் ஆல்ரவுண்டர் அக்சர் படேல், ரவீந்திர ஜடேஜா இருக்கையில் யுவராஜ் கதை உலகக்கோப்பையைப் பொறுத்தவரை முடிந்தது என்றே கூறலாம். இவர் இனி டெஸ்ட் போட்டிகளில் விளையாட தன்னை முழுதும் தயார் படுத்திக் கொள்வது நலம்.

 

சேவாக், ஆஸ்திரேலிய பிட்ச்களில் பயன்படுவார் என்று கருத இடமுண்டு, மேலும், ரவி சாஸ்திரி, சேவாகின் மிகப்பெரிய விசிறி. 10 போட்டிகளில் 3 ஆட்டங்களில் மட்டுமே சேவாக் சிறப்பாக ஆடுகிறார் என்றால் கூட நான் அவரை அனைத்து போட்டிகளிலும் ஆடவைப்பேன் என்று ஒருமுறை ரவிசாஸ்திரி கூறியது நினைவுகூரத்தக்கது.

அதேபோல் ஹர்பஜன் சிங் அனுபவமா அல்லது பர்வேஸ் ரசூலின் இளம் திறமையா, இதில் எந்த முடிவுக்கு தேர்வுக்குழுவினர் வருவார்கள் என்பது அறுதியிட முடியாத ஒரு விஷயம்.

 

இலங்கைக்கு எதிராக விளையாடிய 14 வீரர்கள் மற்றும் தோனியுடன் 15 வீரர்கள் பெயர்கள் இடம்பெறுவது உறுதி, மீதி 15 வீரர்களில் மனோஜ் திவாரி, மணீஷ் பாண்டே, ராபின் உத்தப்பா, பாபா அபராஜித், மயங்க் அகர்வால், சூரியகுமார் யாதவ், விக்கெட் கீப்பர் நமன் ஓஜா, சஞ்சு சாம்சன் பவுலர்களில் பங்கஜ் சிங் ஆகியோர் தேர்வு செய்யப்பட வாய்ப்பிருக்கிறது

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-30-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B4%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B4%E0%AE%AE%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81/article6658453.ece

  • தொடங்கியவர்

உலகக் கோப்பை உத்தேச இந்திய அணியில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு: சேவாக், யுவராஜ், கம்பீருக்கு இடமில்லை
 

 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணி வியாழக்கிழமை அறிவிக்கப்பட்டது. அதில், மூத்த வீரர்களான யுவராஜ், சேவாக், கம்பீர், ஜாகீர் கான், ஹர்பஜன் உள்ளிட்டோர் இடம்பெறவில்லை.

கடந்த உலகக் கோப்பையைக் கைப்பற்றிய இந்திய அணியில் இருந்த 4 மூத்த வீரர்கள் மட்டுமே உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளனர்.

இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்து, பிசிசிஐ தேர்வுக் குழு தேர்ந்தெடுத்துள்ள 30 பேர் கொண்ட உத்தேச அணி விவரம்:

தோனி (கேப்டன்)

 

ஷிகர் தவண்

ரோஹித் சர்மா

ரஹானே

உத்தப்பா

விராட் கோலி

ரெய்னா

ராயுடு

கேதர் ஜாதவ்

மனோஜ் திவாரி

மணீஷ் பாண்டே

சாஹா

சஞ்சு சாம்சன்

அஸ்வின்

பர்வேஸ் ரசூல்

கார்ன் சர்மா

அமித் மிஸ்ரா

ரவீந்திர ஜடேஜா

அஷார் படேல்

இஷாந்த் சர்மா

புவனேஷ்வர் குமார்

முகமது சமி

உமேஷ் யாதவ்

வருண் ஆரோன்

ஆஷோக் திண்டா

ஸ்டுவர்டு பின்னி

மோஹித் சர்மா

குல்தீப் யாதவ்

முரளி விஜய்

தாவல் குல்கர்னி

கடந்த உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியிலிருந்து தோனி, கோலி, அஸ்வின் ரெய்னா ஆகிய நான்கு பேர் மட்டுமே தற்போதுள்ள உத்தேச அணியில் இடம்பெற்றுள்ளனர் என்பது கவனிக்கத்தக்கது.

கடந்த உலகக் கோப்பையில் பேட்டிங், பவுலிங் என இரண்டிலும் கலக்கி தொடர்நாயகன் விருதை வென்ற யுவராஜ் சிங், பார்மில் இல்லாததால் இந்திய அணியில் இடம்பிடிக்க முடியவில்லை. இதேபோல் சேவாக், கடந்த உலகக் கோப்பையில் அசத்தியிருந்தாலும் இப்போது அணியில் இல்லை. மூத்த பந்துவீச்சாளர்களான ஜாகீர் கான், ஹர்பஜன் உள்ளிட்டோருக்கும் வாய்ப்பு வழங்கப்படவில்லை.

 

http://tamil.thehindu.com/sports/உலகக்-கோப்பை-உத்தேச-இந்திய-அணியில்-இளம்-வீரர்களுக்கு-வாய்ப்பு-சேவாக்-யுவராஜ்-கம்பீருக்கு-இடமில்லை/article666168

  • தொடங்கியவர்

அனுபவத்தை விட ஃபார்ம் முக்கியம்: 5 மூத்த வீரர்கள் புறக்கணிப்பு குறித்து சுனில் கவாஸ்கர்
 

 

2015 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கான 30 வீரர்கள் கொண்ட பட்டியலில் சேவாக், கம்பீர், யுவராஜ், ஹர்பஜன், ஜாகீர் கான் இடம்பெறாதது பெரும் சர்ச்சைகளைக் கிளப்பியுள்ளது.

இந்நிலையில் சுனில் கவாஸ்கர் இவர்கள் இடம்பெறாதது ஒன்றும் ஆச்சரியமல்ல, அனுபவத்தை விட நடப்பு ஃபார்ம் முக்கியம் என்று தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

“இது ஒன்றும் ஆச்சரியமானதல்ல. கடந்த ஒன்றரை ஆண்டுகளாக இவர்கள் ஆடும் 11 வீரர்களில் இடம்பெறவில்லை. உள்நாட்டு கிரிக்கெட்டில் விக்கெட்டுகளை எடுத்து, ரன்களை அடித்திருந்தால் நிச்சயம் இடம்பெற்றிருப்பார்கள்.

ஆனால், கிரிக்கெட் இப்போது வேகம், விரைவு நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது இந்த நிலையில் அணிகள் பாசஞ்சரை நம்பமுடியாதல்லவா?

வெற்றி பெற்றேயாக வேண்டும் என்ற போட்டியில் அனுபவம் நிச்சயம் கைகொடுக்கும், அங்கு அனுபவம் பெருமதிப்புடையதாக இருக்கும். ஆனால், உண்மை என்னவெனில் (5 வீரர்கள்) ஃபார்மில் இல்லை என்பதை நாம் ஒப்புக் கொள்ள வேண்டும். 30 வீரர்கள் பட்டியலில் இடம்பெறவில்லை என்பது அவர்கள் இப்போதுள்ள ஃபார்மின்மையை சுட்டுவதாகும்.

இது பழக்கமில்லாததுதான், ஆனால் இதுதான் கிரிக்கெட் ஆட்டத்தின் இயல்பு. இப்படித்தான் கிரிக்கெட் ஆட்டம் வளர்ச்சி கண்டுள்ளது.

அதற்காக அவர்கள் கிரிக்கெட் வாழ்க்கை அஸ்தமனமாகி விட்டது என்று கூறுவதற்கில்லை. ஏனெனில் கிரிக்கெட் ஒரு வேடிக்கையான விளையாட்டு, முடிந்து விட்டது என்று நினைப்போம் ஆனால் அவர்கள் டன் கணக்கில் ரன்களை அடித்து மீண்டும் தங்களைத் தேர்வு செய்ய வலியுறுத்தலாம், யார் கணிக்க முடியும்?” என்கிறார் சுனில் கவாஸ்கர்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%AA%E0%AE%B5%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-5-%E0%AE%AE%E0%AF%82%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%B1%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D/article6667997.ece

  • தொடங்கியவர்

ஷோயப் மாலிக், கம்ரன் அக்மல், அஜ்மல் தேர்வு: உலகக்கோப்பை பாக். உத்தேச அணி அறிவிப்பு
 

 

2015 உலகக்கோப்பை போட்டிகளுக்கான 30 வீரர்கள் கொண்ட பாகிஸ்தான் அணியில் மூத்த வீரர்களான ஷோயப் மாலிக், கம்ரன் அக்மல், சயீத் அஜ்மல் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

சயீத் அஜ்மல் எதிர்காலம் கேள்வுக்குறியாகியுள்ள போதும் பாகிஸ்தான் அவரைத் தேர்வு செய்துள்ளது. ஏனெனில் ஜனவரி 7ஆம் தேதி இறுதி 15 வீரர்களை அறிவித்தால் போதும் என்பதால் அஜ்மல் அதற்குள் பந்து வீச்சை சரி செய்துகொள்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அணி விவரம்:

மொகமது ஹபீஸ், அகமது ஷேஜாத், நசீர் ஜாம்ஷெட், ஷர்ஜீல் கான், சமி அஸ்லம், மிஸ்பா உல் ஹக், யூனிஸ் கான், ஆசாத் ஷபிக், அசார் அலி, ஷோயப் மக்சூத், பவாத் ஆலம், ஹாரிஸ் சொஹைல், ஷோயப் மாலிக், உமர் அக்மல், மொகமது இர்பான், வஹாப் ரியாஸ், ஜுனைத் கான், உமர் குல், ஈஷான் அடில், மொகமது தால்ஹா, சயீத் அஜ்மல், சுல்பிகர் பாபர், ராசா ஹசன், யாசிர் ஷா, ஷாகித் அப்ரீடி, அன்வர் அலி, பிலாவல் பட்டி, சொஹைல் தன்வீர், சர்பராஸ் அகமட், கம்ரன் அக்மல்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B7%E0%AF%8B%E0%AE%AF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%95%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%81-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6668134.ece

  • தொடங்கியவர்

உலகக் கிண்ணம்: 30 பேர் கொண்ட இலங்கை அணி அறிவிப்பு

34ya4vl.jpg

2015 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டிக்கான 30 பேர் கொண்ட உத்தேச இலங்கை  அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த உத்தேச அணியில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசுவதற்கு தடைசெய்யப்பட்டுள்ள இலங்கை கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சாளர் சச்சித்ர சேனாநாயக்க மற்றும் அறிமுக வீரராக இடது கை பந்து வீச்சாளர் லகஷன் சந்தகன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

அறிவிக்கப்பட்டுள்ள உத்தேச அணி வீரர்கள் விவரம் வருமாறு:

ஏஞ்சலோ மெத்தியூஸ்(அணித் தலைவர்), திலகரட்ன டில்சான், லஹிரு திரிமன, குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன, குசேல் ஜனித் பெரேரா, உப்புல் தரங்க, திமுது கருணாரத்ன, தினேஸ் சந்திமால், டில்ருவன் பெரேரா, சீக்குககே பிரசன்ன, அஜந்த மெண்டிஸ், சச்சித்திர சேனாநாயக்க, தரிந்து கௌசல், ஜீவன் மெண்டிஸ்,  ரமித் ரம்புக்வெல, சுரங்க லக்மால், நுவான் குலசேகர, லசித் மாலிங்க, தம்மிக்க பிரசாட், சமிந்த ஹேரங்க, திசர பெரேரா, பர்விஸ் மஹ்ரூப், நுவான் பிரதீப், லஹிரு கமகே, லகஷன் சந்தகன், மேலதிக வீரர்களாக டில்கார பெர்ணன்டோ, சாமர கப்புகெதர ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

 

http://www.virakesari.lk/articles/2014/12/07/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-30-%E0%AE%AA%E0%AF%87%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81

  • கருத்துக்கள உறவுகள்

ரமித் ரம்புகெல கிரிக்கெட் என்டால் என்னென்டு இவருக்குத் தெரியுமோ:lol:

  • தொடங்கியவர்

ரமித் ரம்புகெல கிரிக்கெட் என்டால் என்னென்டு இவருக்குத் தெரியுமோ :lol:

 

அவரது அப்பா கெகலிய ரம்புகெலவிக்கு தெரியுமாம் அதுதான் :icon_mrgreen::lol:

  • 2 weeks later...
  • தொடங்கியவர்

2015 உலகக் கோப்பை கிரிக்கெட் தூதராக சச்சின் டெண்டுல்கர் நியமனம்
 

 

ஆஸ்திரேலியா, நியூசிலாந்தில் நடைபெறும் ஐசிசி 2015 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டித் தொடருக்கான தூதராக இந்திய நட்சத்திரம் சச்சின் டெண்டுல்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.

2011 உலகக்கோப்பை போட்டிகளுக்கான தூதராகவும் சச்சின் டெண்டுல்கர் பொறுப்பு வகித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 பிப்.14-ஆம் தேதி முதல் மார்ச் 20-ஆம் தேதி வரை நடைபெறும் இந்த உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கு விளம்பரத் தூதராகவும், ஐசிசி-யின் பல்வேறு முயற்சிகளையும் சச்சின் டெண்டுல்க்ர் விளம்பரப்படுத்துவார்.

 

சச்சின் டெண்டுல்கர் 463 ஒருநாள் போட்டிகளிலும் 200 டெஸ்ட் போட்டிகளிலும் விளையாடியுள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 45 போட்டிகளில் 2,278 ரன்களை 56.95 என்ற சராசரியில் எடுத்து அதிக ரன்களுக்கான சாதனையை தன்வசம் வைத்துள்ளார் சச்சின்.

2003 உலகக் கோப்பை போட்டித் தொடரில் 673 ரன்கள் எடுத்து தொடர் நாயகன் விருதைப் பெற்றார் சச்சின்.

 

“தொடர்ந்து 2-வது முறையாக ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் தொடர் தூதராக நியமிக்கப்பட்டதை எனது மிகப்பெரிய கவுரவமாக கருதுகிறேன்.

கடந்த 6 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய பிறகு இந்த உலகக் கோப்பை எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருக்கும், ஏனெனில் நான் போட்டிகளை பார்வையிடுபவனாக இருப்பேன். 1987-ஆம் ஆண்டு உலகக் கோப்பை போட்டிகளின் போது பந்துகள் எடுத்துப் போடும் சிறுவனாக இருந்தேன், அதன் பிறகு இப்போது விளையாடாமல் போட்டிகளில் வேறு விதமாக பங்கேற்கிறேன்.

 

ஒரு சாம்பியன அணி உலகக் கோப்பையை வென்று கோப்பையைத் தூக்கும் போது அது பல இளம் தலைமுறையினருக்கு உத்வேகத்தை அளிக்கும். இலக்கை நோக்கி பயணிக்கும் கனவை அவர்களிடத்தில் வித்திடும். நானும் 22 ஆண்டுகளாக இத்தகைய கனவை துரத்தி கடைசியில் 2011-ல் பூர்த்தி அடைந்தேன்” என்றார் சச்சின் டெண்டுல்கர்.

 

http://tamil.thehindu.com/sports/2015-%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8B%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%88-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%86%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%82%E0%AE%A4%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%9A%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AF%86%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AE%A9%E0%AE%AE%E0%AF%8D/article6715749.ece

  • கருத்துக்கள உறவுகள்

உலகக் கோப்பை கிரிக்கெட்: காதலியை அழைத்து செல்ல வீரர்களுக்கு தடை!
 

koli-anushka.jpgபுதுடெல்லி: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்காக சுற்றுப்பயணம் மேற்கொள்ளும்போது, தங்களது காதலியை உடன் அழைத்து செல்ல இந்திய வீரர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தற்போது, ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து, 4 டெஸ்ட் மற்றும் 3 நாடுகள் போட்டியில் கலந்து கொண்டுள்ள இந்திய வீரர்களுக்கு, தங்கள் மனைவியை உடன் அழைத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டது. ஆனால், தங்களது காதலியை அழைத்து செல்ல தடை விதிக்கப்பட்டது.

இந்நிலையில், 11வது உலகக் கோப்பை கிரிக்கெட் (50 ஓவர்) போட்டி நியூசிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கி மார்ச் 29ஆம் தேதி வரை நடக்கிறது. இதனால், தொடர்ந்து வெளிநாட்டு சுற்றுப்பயணத்தில் இருப்பதால், இந்திய கிரிக்கெட் வீரர்கள் 4 மாதங்களுக்கு மேலாக தங்களது குடும்பத்தினரை பிரிந்து இருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த சுற்றுப்பயணத்தின்போதும் இந்திய கிரிக்கெட் வீரர்கள் தங்களுடன் மனைவியை அழைத்து செல்லலாம் எனவும், தங்களது காதலியை அழைத்து செல்லக்கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால், இந்திய துணை கேப்டன் விராட் கோலியின் காதலியும், இந்தி நடிகையுமான அனுஷ்கா சர்மா, கோலியுடன் இணைந்து இருக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது விராட்கோலி, தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் ஜோடியாக சுற்றி திரிந்தார். இதனால் அவரது பேட்டிங் பாதிக்கப்பட்டதாக கடும் விமர்சனத்துக்கு உள்ளானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

http://news.vikatan.com/article.php?module=news&aid=36486

 

காதலிக்கு சொந்த பணத்தில் பயண சீட்டுகளை எடுத்து அண்மையில் உள்ள ஹோட்டேல் ஒன்றில் தங்க வைத்து free time ல் அவருடன் சுற்றலாமே. அப்படி செய்பவனே உண்மையான காதலன். அதை தடுக்கமுடியாதே.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

காதலியில் பயிற்சி செய்ய ஆரம்பித்துவிடுவார்கள் என்கிற பயம்தான் காரணம்..! :D

  • தொடங்கியவர்

உலகக்கிண்ணத்தில் விளையாடுவேன்: கிளார்க்

சத்திர சிகிச்சை செய்துள்ள மைக்கல் கிளார்க், தான் உலகக்கிண்ண தொடரில் விளையாட உடற் தகுதி பெற்றுவிடுவேன் என நம்பிக்கை வெளியிட்டுள்ளார். அவுஸ்திரேலியா பத்திரிகையில் அவர் எழுதிவரும் பத்தியில் இதனை தெரிவித்துள்ளார்.

இந்தியா அணியுடனான முதற் டெஸ்ட் போட்டியில் தசைப் பிடிப்பு ஏற்பட்டத்தை அடுத்து, தொடரில் இருந்து விலகி சத்திர சிகிச்சை மேற்கொண்டார். அப்போது தன்னால் இனி கிரிக்கெட் விளையாட முடியும் என்று தான் நம்பவில்லை எனவும், அந்த போட்டியே தன் கடைசிப் போட்டியாக அமைய வாய்ப்புக்கள் உள்ளதாகவும் மைக்கல் கிளார்க் தெரிவித்து இருந்தார். இருப்பினும், தனது காயம் சிறப்பாக குணமடைந்து வருவதாகவும், தான் நடக்கும் போது எந்த வலிகளையும் உணரவில்லை எனவும், எனவே மிக விரைவில் தன் காயம் சுகமடைந்து விடும் எனவும், தன்னால் உலகக்கிண்ண தொடரில் விளையாட முடியும் எனவும் கிளார்க் கூறியுள்ளார்.

 

இந்த நிலையில் நாளை ஆரம்பிக்கவுள்ள இந்தியா - அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான மூன்றாவது டெஸ்ட் போட்டியில் நேர்முக வர்ணனையாளராக மைக்கல் கிளார்க் செயற்படவுள்ளார். இது ஒரு வித்தியாசமான அனுபவமாக தனுக்கு அமையவுள்ளது என கூறியுள்ள கிளார்க், வீரர்களுடன் இருந்து போட்டியை பார்பதை விட, வர்ணனை அறையில் இருந்து பார்ப்பது வித்தியாசமாக இருக்கும் எனவும் கூறியுள்ளார்.

 

- See more at: http://www.tamilmirror.lk/136407#sthash.PM8EqOGy.dpuf

  • தொடங்கியவர்

‘அஜ்மல் விலகலால் பாகிஸ்தானுக்கு பாதிப்பு’
 

 

உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியிலிருந்து சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் விலகியிருப்பது பாகிஸ்தான் அணிக்குப் பாதிப்பை ஏற்படுத்தும் என்று முன்னாள் வீரர்சோயிப் அக்தர் கூறியுள்ளார். பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் சயீத் அஜ்மல் பிப்ரவரியில் தொடங்கும் உலகக்கோப்பையிலிருந்து விலகியுள்ளார்.

 

இதுபற்றி சோயிப் அக்தர் கூறும்போது, “முழங்கையில் உள்ள குறைபாடு காரணமாக அஜ்மலால் விதிமுறைக்கு உட்பட்டு பந்துவீச முடியவில்லை. அஜ்மல் உலகக்கோப்பையில் கலந்துகொள்ள முடியாத காரணத்தால் பாகிஸ்தான் அணிக்கு நிச்சயம் பாதிப்பு ஏற்படும்” என்றார்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%9C%E0%AF%8D%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%95%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6734907.ece

  • தொடங்கியவர்

உலக கோப்பை: ஜடேஜாவுக்குப் பதில் யுவராஜ்?
ஜனவரி 03, 2015.

 

புதுடில்லி: உலக கோப்பை தொடருக்கான இந்திய அணியில் ‘ஆல் ரவுண்டர்’ ஜடேஜா தேர்வு செய்யப்படுவாரா என, சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இவருக்குப் பதில் ஜடேஜா தேர்வு செய்யப்பட வாய்ப்புள்ளதாக தெரிகிறது.

ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மண்ணில் 11வது உலக கோப்பை தொடர் வரும் பிப்., 14 முதல் மார்ச் 29 வரை நடக்கவுள்ளது. இதன் 30 பேர் கொண்ட உத்தேச இந்திய அணியில் இடம் பெற்றிருந்தவர் ‘ஆல் ரவுண்டர்’ ஜடேஜா, 26. தற்போதைய ஆஸ்திரேலிய தொடரில் இடம் பெற்றிருந்த இவர், தோள்பட்டை காயத்தால் ஒரு போட்டியில் கூட பங்கேற்காமல் பாதியில் திரும்பினார்.      

 

இவர், சென்னையின் போரூரில் உள்ள தனியார் மையத்தில் மறுவாழ்வு பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். இதனிடையே, உலக கோப்பை, ஆஸ்திரேலியாவில் நடக்கவுள்ள முத்தரப்பு ஒருநாள் தொடருக்கான இந்திய அணித் தேர்வு வரும் 6ம் தேதி நடக்கிறது. இதற்கு முன் ஜடேஜா குணமடைவது சந்தேகமாக உள்ளது.     

 

இதனால், இவருக்குப் பதில், சமீபத்திய இலங்கைத் தொடரில் சிறப்பாக செயல்பட்ட மற்றொரு ‘ஆல் ரவுண்டர்’ அக்சர் படேல், 20, தேர்வு செய்யப்படலாம் எனத் தெரிகிறது. அல்லது உத்தேச அணியில் இடம் பெறாத மற்றொரு அனுபவ ‘ஆல் ரவுண்டர்’ யுவராஜ் சிங் சேர்க்கப்பட்டாலும் ஆச்சரியம் இல்லை. ஏனெனில், தற்போது நடக்கும் ரஞ்சி கோப்பை தொடரில் ‘ஹாட்ரிக்’ சதம் அடித்து அசத்தல் ‘பார்மில்’ உள்ளார்.

 

http://sports.dinamalar.com/2015/01/1420299999/WorldCupCricketJadejaYuvrajIndia.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.