Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

உங்கா பார்டா.. உது நன்னால்ல.. வீ ஹாட் றோயல் தோமியன் எக்ஸ்பீரியன்ஸ்.. !!

ஆர்!!! ஓ!!! வை!! ஏ!!!! எல்!!!!!! <<<<<<<< றோயல் >>>>>>>>> :o:lol:

சும்மா பகிடிக்கு கேட்டேன்.

Edited by நவீனன்

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply

தமிழ் டிவி ஏதாவது நேரடி ஒளிபரப்புச் செய்கின்றதா நவீனன்

விஜே டி வி புதிதாக ஒரு சனல் திறந்து கிரிக்கெட் மாட்ச் மட்டும் ஒளிபரப்புகின்றார்கள் .முன்னாள் இந்திய அணி வீரர் ரமேஸ் சடகோபன் வர்ணனையார்களில் ஒருவர் .

என்னிடம் உள்ள போக்ஸ்சில் அனைத்தும் தெரியும் . SKY SPORTS ,STAR SPORTS,ESPN .

ரொறோண்டோவில் இப்போ பலர் அந்த போக்சை வைத்திருக்கின்றார்கள் .

  • தொடங்கியவர்

சிறீலங்கா நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்தாட முடிவு செய்துள்ளது

  • தொடங்கியவர்

சிறிலங்கா 120/0 after 24 overs

AFG 154/8 after 41 overs

  • தொடங்கியவர்

ஆப்கானிஸ்தான் திரிலான வெற்றி

  • தொடங்கியவர்

சிறிலங்கா 332/1 50 ஓவர்கள் முடிவில்.

டில்சான் 161

சங்ககாரா 105

  • தொடங்கியவர்

ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு திரில் வெற்றி! 

 

வெலிங்டன்: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஸ்காட்லாந்து, 210 ரன்களை எடுத்திருந்த நிலையில், 2வது பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான் கடைசி ஓவரில் 1 விக்கெட் வித்தியாசத்தில் திரில் வெற்றியை ருசித்தது. குரூப் ஏ பிரிவில் இடம்பெற்றுள்ள ஸ்காட்லாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் டுனெடின் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 3.30 மணிக்கு தொடங்கிய போட்டியில் மோதின. டாசில் வென்ற ஆப்கன், முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.

 

நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் அந்த அணி 210 ரன்களை எடுத்தது. இதுதான் ஸ்காட்லாந்து உலக கோப்பை தொடரில் எடுத்த அதிகபட்ச ரன்னாகும். ஸ்காட்லாந்துக்கு எதிரான ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானுக்கு திரில் வெற்றி! அந்த அணியின் மேட் மாச்சன் அதிகபட்சமாக 31 ரன்கள் எடுத்தார். ஆப்கன் தரப்பில் சபூர் ஜட்ரான் அதிகபட்சமாக 4 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். 38 ரன்களை விட்டுக்கொடுத்தார்.

 

தவ்லத் ஜட்ரான், 29 ரன்களை விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். [ஸ்கோர்போர்டு] இதையடுத்து பேட்டிங் செய்த ஆப்கானிஸ்தான், 23.4 ஓவர்களில் முடிவில் 6 விக்கெட் இழப்புக்கு 96 ரன்கள் எடுத்து தோல்வியின் விளிப்புக்கே சென்றது. தொடக்க ஆட்டக்காரர் ஜாவீத் அகமதி 51 பந்துகளில் 51 ரன்கள் எடுத்து நல்ல தொடக்கத்தை கொடுத்து அவுட் ஆன நிலையிலும், ஆப்கானிஸ்தான் மிடில் ஆர்டர் மொத்தமாக சொதப்பியதால் இந்த தடுமாற்றத்தை அந்த அணி சந்தித்தது. ஆனால் ஒருமுனையில் சமியுல்லா சென்வாரி நங்கூரம் போட்டு ஆடி வந்ததால், ஆப்கானிஸ்தான் தப்பி பிழைத்து வந்தது.

 

இருப்பினும் 46.5 ஓவர்களில் சமியுல்லா சென்வாரி ஒன்பதாவது விக்கெட்டாக, 96 ரன்களில் அவுட் ஆனபோது, அணி சற்று ஆடித்தான்போனது. எஞ்சிய ஒரு விக்கெட்டை வீழ்த்தினால் வெற்றி பெறலாம் என்ற வேகத்தில் ஸ்காட்லாந்து பந்து வீச்சாளர்கள் மிரட்ட தொடங்கினர். ஆனால் கடைசி விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த ஹமீத் ஹசன் 15 ரன்களும், சாபூர் ஜட்ரான் 12 ரன்களும் எடுத்து வெற்றியை உறுதி செய்தனர். கடைசி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் பந்தை ஹசன் சிங்கிள் தட்டினார். 49.3 வது ஓவரில் வெற்றிக்கான பவுண்டரியை ஜட்ரான் அடிக்க ஆப்கானிஸ்தான் திரில் வெற்றியை சுவைத்தது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/icc-world-cup-2015-scotland-vs-afghanistan-221711.html

  • தொடங்கியவர்

தில்ஷன், சங்ககாரா அதிரடி சதம்.. வங்கதேச வெற்றிக்கு 333 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை!

 

மெல்போர்ன்: வங்கதேசத்துக்கு எதிராக டாசில் வெற்றி பெற்று முதலில் பேட்டிங் செய்த இலங்கை ஒரு விக்கெட் இழப்புக்கு 332 ரன்களை குவித்துள்ளது. வங்கதேசம் தனது முதல் போட்டியில் ஆப்கனை வீழ்த்தியிருந்த நிலையில், ஆஸ்திரேலியாவுடனான போட்டி மழையால் கைவிடப்பட்டது.

 

அதேபோல இலங்கை தனது முதல் போட்டியில் நியூசிலாந்திடம் தோற்ற நிலையில், ஆப்கனை 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. இதனிடையே வங்கதேசம் மற்றும் இலங்கையிடையே மெல்போர்ன் மைதானத்தில் இந்திய நேரப்படி இன்று காலை 9 மணிக்கு ஆட்டம் தொடங்கியது. டாசில் வென்ற இலங்கை பேட்டிங்கை தேர்ந்தெடுத்தது.

 

தில்ஷன், சங்ககாரா அதிரடி சதம்.. வங்கதேச வெற்றிக்கு 333 ரன்கள் இலக்கு நிர்ணயித்த இலங்கை! திரிமன்னே மற்றும் தில்ஷன் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கியுள்ளனர். வங்கதேசத்தின் வேகப்பந்து வீச்சில் திரிமன்னே மிகவும் திணறினார்.

 

மோர்டசா வீசிய முதல் ஓவரின் நான்காவது பந்தில் ஸ்லிப்பில் திரிமன்னே கொடுத்த கேட்ச் மிஸ் செய்யப்பட்டதால் அவர் தப்பினார். இருப்பினும் மறுமுனையில் தில்ஷன் அதிரடியாக ஆடிவந்தார். 78 பந்துகளில் 52 ரன்கள் எடுத்த நிலையில், ருபல் ஹொசைன் பந்து வீச்சில், தெஸ்கின் அகமதுவிடம் கேட்ச் கொடுத்து திரிமன்னே அவுட் ஆனார்.

 

இதன்பிறகு களமிறங்கிய சங்ககாராவும் அதிரடி காண்பித்தார். தில்ஷனும், சங்ககாராவும் வங்கதேச பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்து ரன் குவித்தனர். இந்த ஜோடியை பிரிக்க வங்கதேச பவுலர்கள் செய்த முயற்சிகள் பலன் அளிக்கவில்லை.

 

நிர்ணயிக்கப்பட்ட ஐம்பது ஓவர்கள் முடிவில் இலங்கை ஒரு விக்கெட் இழப்புக்கு 332 ரன்களை குவித்தது. தில்ஷன் 22 பவுண்டரிகள் உதவியுடன் 146 பந்துகளில் 161 ரன்களும், சங்ககாரா, 1 சிக்சர், 13 பவுண்டரிகள் உதவியுடன் 76 பந்துகளில் 105 ரன்களுடனும் அவுட் ஆகாமல் இருந்தனர். தனது 400வது ஒருநாள் போட்டியில் சங்ககாரா, இந்த சதத்தை பதிவு செய்து அசத்தியுள்ளார். சர்வதேச கிரிக்கெட்டில் இது சங்ககாராவின் 22வது சதமாகும்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/sri-lanka-win-toss-opt-bat-first-against-bangladesh-221718.html

  • தொடங்கியவர்

400வது ஒருநாள் போட்டியில் மங்களகரமாக கால் எடுத்து வைத்தார் குமார் சங்ககாரா!

 

மெல்போர்ன்: இலங்கை கிரிக்கெட் வீரர் குமார் சங்ககாரா இன்று தனது 400வது ஒருநாள் போட்டியில் விளையாடி சாதனை படைத்துள்ளார். உலக கோப்பையில் இன்று வங்கதேசத்துடன் மோதும் போட்டி இலங்கை விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சங்ககாராவுக்கு 400வது போட்டியாகும். 37 வயதான சங்ககாரா இந்த சாதனையை நிகழ்த்தும் 4வது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

 

பாகிஸ்தானுக்கு எதிராக களம் கண்டவர் 2000வது ஆண்டில், பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் முதல்முறையாக களம் கண்ட சங்ககாரா, இதுவரை 13 ஆயிரத்து 739 ரன்களை குவித்துள்ளார். டெஸ்ட் போட்டிகளிலும் அபாரமாக விளையாடிவரும் சங்ககாரா 130 போட்டிகளில் 12 ஆயிரத்து 203 ரன்களை குவித்துள்ளார்.

 

21 செஞ்சுரி ஒருநாள் போட்டிகளில் 21 சதங்களும், டெஸ்ட் போட்டிகளில் 38 சதங்களும் விளாசியுள்ளார் சங்ககாரா.

 

நம்மாளுதாங்க நம்பர் 1 463 போட்டிகளில் விளையாடியதன் மூலம், ஒருநாள் போட்டி வரலாற்றில் அதிக போட்டிகளில் ஆடிய வீரர்கள் பட்டியலில் இந்தியாவின் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்திலுள்ளார்.

 

ஜெயசூர்யா 445 போட்டிகளுடன் இலங்கையின் சனத் ஜெயசூர்யா 2வது இடத்தில் உள்ளார்.

இலங்கை வீரர்களே.. 444 போட்டிகளுடன் மகிலா ஜெயவர்த்தனே 3வது இடத்திலும், 400 போட்டிகளுடன் சங்ககாரா 4வது இடத்திலும் உள்ளனர். இதில் கடைசி இருவரும் இன்னமும் விளையாடிக் கொண்டிருக்கும் வீரர்களாகும்

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/world-cup-400-odis-milestone-kumar-sangakkara-221734.html

  • கருத்துக்கள உறவுகள்

BD 93/4 20 overs.

  • தொடங்கியவர்

சிறிலங்கா வெற்றி

  • கருத்துக்கள உறவுகள்

நெடு நாட்களுக்குப் பின்னர் இன்றுதான் சிறிலங்கா தமது ஆட்டத்தை வழமை போல் காட்டியிருக்கிறார்கள் என்று நினைக்கிறேன். திரிமாண முதலாவது ஓவரின் நாலாவது பந்திலேயே ஸ்லிப்ஸில் பிடி கொடுத்தார். ஆனால் பங்களாதேஷ் பீல்டர் கோட்டை விட்டார். அதன் பின்னரும் ஒருமுறை பிடி கொடுத்தார், அதையும் விட்டு விட்டார்கள். பின்னர் ஒருவாறு 50 அடித்தவுடன் வெளியேறினார்.

 

டில்சான் பிடிகொடுக்காமல் விளையாடிக் கொண்டிருந்தார். சங்கக்காரவுடன் சேர்ந்து பிரிக்கப்படாத இணைப்பாட்டத்தினால் இலங்கை 332 என்கிற ஓட்ட எண்ணிக்கையை அடைந்தது.

 

வங்கதேசம் ஆரம்பத்தில் ஓவர் ஒன்றிற்கு 7.5 ஓட்டங்கள் என்று தொடங்கினாலும் கூட அடுத்தடுத்து விழுந்த ஓட்டங்களால் 240 ஓட்டங்களுடன் சுருண்டு கொண்டது.

 

மலிங்கவின் பந்துவீச்சில் சற்று முன்னேற்றம் தெரிகிறது. 

 

ஆனாலும் இன்னும் அவுஸ்த்திரேலியா, இங்கிலாந்து போன்ற பெரிய அணிகளுடன் போட்டிகளிருக்கின்றன. அது சிறிலங்கா அணிக்கு மிகவும் சவாலாகவும் கடிணமாகவும் இருக்கும்.

 

 

 

 

  • தொடங்கியவர்

சொதப்பியது வங்கதேசம்: 92 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை வெற்றி

 

மெல்போர்னில் நடைபெற்ற உலகக்கோப்பை ஏ-பிரிவு ஆட்டத்தில் இன்று வங்கதேச அணியை இலங்கை 92 ரன்கள் வித்தியாசத்தில் அபாரமாக வெற்றி பெற்றது.

முதலில் பேட் செய்த இலங்கை 1 விக்கெட்டை மட்டுமே இழந்து 332 ரன்கள் குவிக்க, தொடர்ந்து ஆடிய வங்கதேச அணி 47 ஓவர்களில் 240 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. லசித் மலிங்கா 9 ஓவர்களில் 35 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளைக் கைப்பற்ற லக்மல், தில்ஷன் தலா 2 விக்கெட்டுகளையும், மேத்யூஸ், பெரேரா தலா 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

 

332 ரன்களை முதலில் சொதப்பலான பீல்டிங், மற்றும் பவுலிங்கில் விட்டுக் கொடுத்த வங்கதேச அணிக்கு இலக்கைத் துரத்தும் போது முதல் மலிங்கா ஓவரில் அதிர்ச்சி காத்திருந்தது.

 

2 ஸ்லிப்புடன் தமிம் இக்பாலுக்கு ஓவரைத் தொடக்கிய மலிங்கா முதல் பந்தை தள்ளி வீச ஆடாமல் விட்டார் தமிம். அடுத்த பந்து மலிங்காவின் வழக்கமான, அவரது ஆக்சனுக்கு இயல்பாக விழும் பந்து. அதாவது இடது கை வீரருக்கான இன்ஸ்விங்கர். அதனை காலை நகர்த்தி ஆட முயன்றார் தமிம் ஆனால் காலுக்கும் மட்டைக்கும் இடையில் புகுந்து பந்து ஸ்டம்பைத் தாக்கியது. பெரிய விக்கெட்டை இழந்தது வங்கதேசம். அதே ஓவரில் சவுமியா சர்க்கார் புல்டாஸை பவுண்டரி அடிக்க அடுத்த பந்து யார்க்கரில் ஒரு பலமான எல்.பி.முறையீடு எழுந்தது. தப்பித்தார் சர்க்கார்.

 

அடுத்த ஓவரில் அனாமுல் ஹக், சுரங்க லக்மல் பந்தை மேலேறி வந்து ஒரு ஷாட்டை ஆட முயல பந்து மிட் ஆப், கவருக்கு இடையே காற்றில் எழும்பியது சுலபமான கேட்ச் ஆனால் ஒருவரும் வரவில்லை, கடைசியாக தில்ஷன் வந்தார்... விட்டார் கேட்சை. அனாமுல் ஹக் மிகப்பெரிய ஹூக் ஷாட் வீரர். அடுத்ததாக மலிங்காவின் பவுன்சரை அவர் அற்புதமாக ஹூக் செய்து பவுண்டரி விளாசினார். சவுமியா சர்க்கார், லக்மல் ஓவரில் 2 அபார பவுண்டரிகளை அடித்தார்.

 

ஆட்டத்தின் 6-வது ஓவரை வீச கேப்டன் மேத்யூஸ் வந்தார். 2-வது பந்து மீண்டும் ஒரு ஷாட் பிட்ச், மீண்டும் அனாமுல் புல் ஆட ஸ்கொயர்லெக்கில் சிக்ஸ். அடுத்து சிங்கிள் எடுத்து சர்க்காரிடம் ஸ்ட்ரைக் கொடுக்க அவரோ, மேத்யூஸ் பந்தில் அதே ஓவரில் வெளியே சென்ற பந்தை எட்ஜ் செய்து சங்கக்காராவிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். வங்கதேசம் 6 ஓவர்கள் முடிவில் 41/2. சர்க்கார் 15 பந்துகளில் 5 பவுண்டரிகளுடன் 25 ரன்கள் எடுத்து காலியானார்.

 

அடுத்த லக்மல் ஓவரில் மொமினுல் ஹக் 1 ரன்னில் ஸ்லிப்பில் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மஹ்முதுல்லா, அனாமுல் ஹக்குடன் இணைந்தார். 44/3 இலிருந்து ஸ்கோர் 84 ரன்களுக்குச் சென்றது அப்போது 29 ரன்கள் எடுத்த அனாமுல் ரன் அவுட் ஆனார். மஹ்முதுல்லா பந்தை மிட்விக்கெட்டில் தட்டி விட அனாமுல் பாதி தூரம் சிங்கிளுக்கு ஓடி வந்தார். மஹ்முதுல்லா நகரவேயில்லை. த்ரோ நேராக ஸ்டம்பில் பட்டதாக ரிபிளே காண்பிக்க நன்றாக ஆடிவந்த அனாமுல் அவுட் ஆனார்.

 

16-வது ஓவரில் 84/4 என்று ஆன வங்கதேசம், 21-வது ஓவரில் மஹ்முதுல்லா (28) விக்கெட்டை பெரேராவிடம் இழந்தது. அதன் பிறகு ஷகிப் உல் ஹசன், முஷ்பிகுர் ரஹிம் சேர்ந்து 100/5-லிருந்து 32-வது ஓவரில் 164 ரன்களுக்கு உயர்த்தினர். அப்போது ஷகிப் உல் ஹசன் 59 பந்துகளில் 4 பவுண்டரி ஒரு சிக்சருடன் 46 ரன்களில் தில்ஷன் பந்தை மேலேறி வந்து ஆடி லாங் ஆனில் மலிங்காவிடம் கேட்ச் கொடுத்தார். ஆனால் அதற்கு முன்னதாக அவர் 29-வது ஓவரை வீசிய ரங்கன்னா ஹெராத்தை நன்றாகக் கவனித்தார். நேராக ஒரு சிக்ஸ், பிறகு அதே திசையில் தரையோடு ஒரு பவுண்டரி, பிறகு கட் ஷாட்டில் ஒரு பவுண்டரி என்று அந்த ஓவரில் விளாசினார். அதன் பிறகும் மேத்யூஸை 2 பவுண்டரிகள் விளாசினார். 31-வது ஓவரில் 156/5 என்று இருந்தது. இன்னும் 19 ஓவர்களில் மேலும் 176 ரன்களை அடிக்க வேண்டும். ஷாகிப் தன்னால் முடிந்ததைச் செய்தார் அவ்வளவே.

 

முஷ்பிகுர், சபீர் ரஹ்மான் இணைந்து 44 ரன்களை சுமார் 9 ஓவர்களில் சேர்த்தனர். 39 பந்துகளில் 3 பவுண்டரி ஒரு சிக்சர் அடித்து 36 ரன்கள் சேர்த்த முஷ்பிகுர், லக்மல் பந்தில் கிளீன் பவுல்டு ஆனார். அது ஸ்லோ பால் அதனை ஒதுங்கிக் கொண்டு ஆட முயன்று பவுல்டு ஆனார்.

 

41-வது ஓவரில் வங்கதேசம் 208/7 என்று ஆனது. சபீர் ரஹ்மான் 53 ரன்கள் எடுத்து அதிகபட்ச ஸ்கோரை எட்டினார். அவர் மலிங்கவிடம் விழ, மஷ்ரபே மோர்டசா, தில்ஷன் பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். கடைசி விக்கெட்டாக தக்சின் அகமட், மலிங்காவிடம் எல்.பி. ஆகி வெளியேற ஆட்டம் முடிந்தது. வங்கதேசம் தோல்வி.

ஆட்டநாயகனாக 161 நாட் அவுட் மற்றும் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றிய திலகரத்ன தில்ஷன் தேர்வு செய்யப்பட்டார். பிரிவு ஏ-யில் இலங்கை 2 வெற்றிகளுடன் 4 புள்ளிகள் பெற்று நிகர ரன் விகிதம் +0.047 என்று 2ஆம் இடத்தில் உள்ளது. 3-வது இடம் ஆஸ்திரேலியா, 4-வது இடம் வங்கதேசம். 5-வது இடம் ஆப்கன்.

 

 

வங்கதேச பந்துவீச்சை பிய்த்து உதறிய தில்ஷன், சங்கக்காரா

முன்னதாக முதலில் பேட் செய்த இலங்கை வங்கதேசப் பந்துவீச்சை சிதறடித்தது. தில்ஷன், சங்கக்காரா ஆகியோர் பிய்த்து உதறினர்.

டாஸ் வென்ற இலங்கை முதலில் பேட் செய்ய முடிவெடுத்தது. திரிமானி, தில்ஷன் களமிறங்கினர். மோர்டசா வீசிய முதல் ஓவரிலேயே திரிமானிக்கு ஸ்லிப்பில் வங்கதேசம் கேட்ச் விட்டது. அதன் பிறகு திரிமானி 52 ரன்கள் எடுத்து ஸ்கோர் 122 ரன்களாக இருந்த போது, 25-வது ஓவரில் ஆட்டமிழந்தார்.

 

அதன் பிறகு விக்கெட் விழவில்லை. சங்கக்காரா தனது அதிவேக ஒருநாள் சதத்தை எடுத்தார். அவரது 400-வது ஒருநாள் போட்டியான இதில் 73 பந்துகளில் 12 பவுண்டரி 1 சிக்சருடன் அவர் சதத்தை எட்டினார். கடைசி வரை ஆட்டமிழக்காமல் 105 ரன்களையும் தில்ஷன் 146 பந்துகளில் 22 பவுண்டரிகளுடன் 161 ரன்கள் எடுத்து நாட் அவுட்டாகத் திகழ்ந்தார். 161 ரன்களில் சிக்சர் இல்லாதது ஒரு புதிய சாதனை. 332 ரன்களில் மொத்தமே ஒரு சிக்சர் என்பது சாதனை அல்ல ஏனெனில் தென்னாப்பிரிக்கா ஒருமுறை 354 ரன்கள் எடுத்த போது ஒரேயொரு சிக்சரை மட்டுமே அடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

 

கையில் வந்த 2 கேட்ச்கள் கோட்டைவிடப்பட்டன. ஒரு அருமையான ஸ்டம்பிங் வாய்ப்பும் கோட்டை விடப்பட்டது. மேலும், ஒட்டுமொத்தமாகவே பீல்டிங் படு மோசமாக அமைந்தது.

 

தில்ஷன், சங்கக்காராவை அவர்களால் கட்டுப்படுத்த முடியவில்லை. அடுத்த விக்கெட் விழவில்லை. 37.2 ஓவர்களில் 200 ரன்கள் இருந்த இலங்கை 47.2 ஓவர்களில், சரியாக 10 ஓவர்களில் 100 ரன்கள் விளாசி 47.2வது ஓவரில் 300 ரன்களை எட்டியது.

தில்ஷன், சங்கக்காரா இணைந்து 2-வது விக்கெட்டுக்காக ஆட்டமிழக்காமல் 210 ரன்கள் சேர்த்தனர்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A4%E0%AF%87%E0%AE%9A%E0%AE%AE%E0%AF%8D-92-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%B2%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF/article6936649.ece

  • தொடங்கியவர்

வட போச்சே... ஹாட்ரிக் விக்கெட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருக்கும் மலிங்கா!

 

மெல்போர்ன்: ஹாட்ரிக் விக்கெட்டுக்காக அடுத்த போட்டி வரை காத்திருக்கிறார் இலங்கையின் வேகப்பந்து வீச்சாளர் லத்திஷ் மலிங்கா. இலங்கைக்கு எதிரான இன்றைய போட்டியில், 333 ரன்கள் என்ற வெற்றி இலக்கை துரத்திச் சென்ற வங்கதேசம், 240 ரன்களுக்கு 8 விக்கெட்டுகளை இழந்து தவித்தது. அப்போது 47வது ஓவரை வீச வேகப்பந்து வீச்சாளர் மலிங்கா வரவழைக்கப்பட்டார்.

 

வட போச்சே... ஹாட்ரிக் விக்கெட்டுக்காக ஞாயிற்றுக்கிழமை வரை காத்திருக்கும் மலிங்கா! அந்த ஓவரின் 5வது பந்தில் ரகுமானுக்கு அவர் பவுன்சர் வீச, அது விக்கெட் கீப்பர் சங்ககாரா கைகளில் கேட்ச்சாக தஞ்சம் புகுந்தது. இதையடுத்து கடைசி விக்கெட்டாக தஸ்கின் அகமது களமிறங்கினார்.

 

அவருக்கு அடுத்த பந்தை வீசினார் மலிங்கா. அதுவும் தனது ஃபேவரைட் யார்க்கரை வீசினார். அந்த பந்து காலில் பழம்போல பட, எல்பிடபிள்யூ முறையில் அவுட் ஆனார் தஸ்கின். எனவே அடுத்தடுத்த பந்துகளில் விக்கெட்டுகளை வீழ்த்திய மலிங்கா, ஹாட்ரிக் வாய்ப்பை இப்போட்டியில் தவறவிட்டார். ஆனால் வரும் ஞாயிற்றுக்கிழமை, இங்கிலாந்துக்கு எதிராக இலங்கை மோத உள்ள போட்டியில், மலிங்கா தனது ஓவரின் முதல் பந்தில் விக்கெட்டை வீழ்த்தினால் அது ஹாட்ரிக்காகவே கருதப்படும். எனவே ஹாட்ரிக்கிற்காக இன்னும் 3 நாட்கள் காத்திருக்க வேண்டும் மலிங்கா.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/malinga-strikes-will-be-on-hat-trick-his-next-game-221767.html

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவை வீழ்த்துவோம்: ஆப்கன் வீரர் ஷென்வாரி சவால்
 

 

உலகக்கோப்பையில் முதல் வெற்றி பெற்று ஆப்கானிஸ்தான் வரலாறு படைக்கக் காரணமாயிருந்த சமியுல்லா ஷென்வாரி அடுத்ததாக ஆஸி. அணியை வெற்றி பெறுவோம் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

ஸ்காட்லாந்து அணியை இன்று வீழ்த்திய ஆப்கன் அணியில் ஷென்வாரி 96 ரன்களை விளாசினார். அவர் அடுத்தடுத்து வெற்றி பெறவே அணியினரிடத்தில் ஆவல் மிகுந்துள்ளது என்று கூறுகிறார்.

 

அகதிகள் முகாமில் இருந்த போது கிரிக்கெட் கற்றுக் கொண்ட ஷென்வாரி கூறியதாவது: “முன்பு ஒன்றுமேயில்லாமல் இருந்தது. ஆப்கானிஸ்தானில் 8 அல்லது 10 ஆண்டுகளுக்கு முன்பு பார்த்தோமானால் ஒன்றுமேயில்லை.

 

ஆனால் தற்போது தெருக்களில், பள்ளிகளில், எங்கு சென்றாலும் ஆப்கனில் கிரிக்கெட்.. கிரிக்கெட் என்று கொடிகட்டிப் பறக்கிறது.

வரும் ஆட்டங்களில் வெற்றி பெற வேண்டும் என்ற ஆசையும், வெறியும் எங்கள் அணியிடத்தில் இந்த வெற்றி ஏற்படுத்தியிருக்கிறது.

 

அடுத்த வாரம் ஆஸ்திரேலியாவை பெர்த்தில் சந்திக்கிறோம். ஆஸ்திரேலியாவுக்கு கடினமான நேரத்தை அளிப்போம், அவ்வளவு எளிதாக விட்டுவிட மாட்டோம் என்று நம்புகிறேன். அந்தப் போட்டியை ஆவலுடன் அனைவரும் எதிர்பார்க்கிறோம், வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்.” என்றார் ஷென்வாரி.

இன்னும் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, நியூசிலாந்து ஆகிய பெரிய அணிகளுடன் ஆப்கன் அணி மோதவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%88-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B5%E0%AF%8B%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%95%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%B7%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B2%E0%AF%8D/article6936975.ece

  • தொடங்கியவர்

funfps.png


4tqayq.jpg

  • தொடங்கியவர்

19th Match, Pool B: South Africa v West Indies at Sydney

Feb 27, 2015 (14:30 local | 03:30 GMT | 04:30 CET)

  • தொடங்கியவர்

டிவில்லியர்ஸ் 162* விளாசி சாதனை: தெ.ஆ. 408 ரன்கள் குவிப்பு
 

 

டிவில்லியர்ஸ் ஆட்டமிழக்காமல் 162 ரன்கள் விளாசி புதிய சாதனைகள் படைத்ததுடன், உலகக் கோப்பையில் தனது தென் ஆப்பிரிக்க அணியின் அதிகபட்ச ஸ்கோர் என்ற வரலாற்றுப் பதிவுக்கும் வித்திட்டார்.

 

மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான லீக் ஆட்டத்தில், தென் ஆப்பிரிக்கா தனது இன்னிங்ஸ்சில் 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 408 ரன்கள் குவித்தது.

இதன் மூலம், மேற்கிந்திய தீவுகள் அணிக்கு 409 ரன்கள் என்ற கடினமான வெற்றி இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

 

இபோட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியில் துவக்க ஆட்டக்காரர் டிகாக் 12 ரன்களில் ஆட்டமிழந்தார்.

அதன்பின், ஆம்லாவுடன் டூபிளெஸ்ஸி ஜோடி சேர்ந்ததும் ரன் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஆம்லா 65 ரன்களும், டூபிளெஸ்ஸி 62 ரன்களும் சேர்த்தனர்.

பின்னர் களமிறங்கிய ரூசோ - டிவில்லியர்ஸ் இணை மிகச் சிறப்பாக விளையாடியது. ரூசோ 61 ரன்களில் ஆட்டமிழக்க, டிவில்லியர்ஸ் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 66 பந்துகளில் 162 ரன்கள் விளாசினார்.

 

மில்லர் 20 ரன்களில் ஆட்டமிழந்தார். பெஹார்தீன் ஆட்டமிழக்காமல் 10 ரன்கள் சேர்த்தார். கடைசியில், தென் ஆப்பிரிக்கா தனது இன்னிங்ஸ்சில், 50 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 408 ரன்கள் குவித்தது.

மேற்கிந்திய தீவுகள் தரப்பில், ரசல், கெயில் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும், ஹோல்டர் ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர்.

 

டிவில்லியர்ஸ் சாதனைத் துளிகள்:

இப்போட்டியில் 52 பந்துகளில் சதத்தை எட்டியதன் மூலம், உலகக் கோப்பையில் இரண்டாவது அதிவேக சதம் அடித்தவர் என்ற சாதனையை டிவில்லியர்ஸ் வசப்படுத்தினார். 50 பந்துகளில் சதத்தை எட்டிய கெவின் ஓ பிரையனிடம் முதல் அதிவேக சதம் என்ற சாதனை உள்ளது.

 

அதேவேளையில், சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் அதிவேக ஒன்றரை சதம் (150 ரன்கள்) என்ற சாதனையை டிவில்லியர்ஸ் படைத்துள்ளார்.

டிவில்லியர்ஸ்சின் விளாசல் துணையுடன், தென் ஆப்பிரிக்க அணி உலகக் கோப்பையில் அதிகபட்ச ஸ்கோர் என்ற புதிய சரித்திரத்தை இன்று தொட்டுள்ளது.

குறிப்பாக, உலகக் கோப்பையில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை எட்டிய அணி என்ற பெருமையையும், ஆஸ்திரேலிய மண்ணில் அதிகபட்ச ஸ்கோர் அடித்த அணி என்ற பெருமையையும் பெற்றது.

 

2007-ல் பெர்முடா அணிக்கு எதிராக இந்திய அணி 413 குவித்ததே இதுவரை உலகக் கோப்பை கிரிக்கெட்டில் ஓர் அணியின் அதிகபட்ச ஸ்கோராக உள்ளது நினைவுகூரத்தக்கது.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-162-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%86-408-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article6940887.ece

  • கருத்துக்கள உறவுகள்

WI 151 ஓட்டங்களுடன் சுருண்டது

  • தொடங்கியவர்

டிவில்லியர்ஸ் 162 நாட் அவுட்; மே.இ.தீவுகள் 151 ஆல் அவுட்!
 

 

சிட்னியில் இன்று நடைபெற்ற உலகக்கோப்பை பி-பிரிவு ஆட்டத்தில் தென்னாப்பிரிக்கா அணி, மே.இ.தீவுகள் அணியை சின்னாபின்னமாக்கி மாபெரும் வெற்றி பெற்றது.

டாஸ் வென்று பெட் செய்த தென்னாப்பிரிக்கா 50 ஓவர்களில் டிவில்லியர்ஸின் காட்டடியில் 408 ரன்கள் குவிக்க, தொடர்ந்து ஆடிய மே.இ.தீவுகள் இம்ரான் தாஹிர் (5 விக். ) பந்துவீச்சில் 33.1 ஓவர்களில் 151 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 257 ரன்கள் வித்தியாசத்தில் உலகக்கோப்பை வரலாற்றில் 2-வது மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

 

டிவில்லியர்ஸ் 66 பந்துகளில் 17 பவுண்டரி 8 சிக்சர்களுடன் 162 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் மே.இ.தீவுகள் அவர் எடுத்த ரன்களையே எடுக்க முடியாமல் 151 ரன்களுக்குச் சுருண்டது. டிவில்லியர்ஸ் தற்போது ஒருநாள் கிரிக்கெட்டில் அதிவேக அரைசதம், சதம் மற்றும் 150 ரன்கள் என்ற சாதனையைத் தன் வசம் வைத்துள்ளார். இவை அனைத்தும் மே.இ.தீவுகளுக்கு எதிராக என்பதும் குறிப்பிடத்தக்கது. டிவில்லியர்ஸ் 162* விளாசி சாதனை: தெ.ஆ. 408 ரன்கள் குவிப்பு

 

 

முதல் 35 ஓவர்களில் 186 ரன்கள் என்று இருந்த தென்னாப்பிரிக்க கடைசி 15 ஓவர்களில் 222 ரன்கள் விளாசித் தள்ளியது. கடைசி 20 ஓவர்கள் என்று பார்த்தால் 261 ரன்கள். படுமோசமான பந்துவீச்சு, மிகவும் கீழ்த்தரமான பீல்டிங்கினால் கோட்டைவிடப்பட்ட கேட்ச்கள் என்று மே.இ.தீவுகள் இன்று அசோசியேட் அணிகள் என்று கூறப்படும் அணிகளின் தரத்துக்கு அருகில் கூட இல்லை.

 

1 ரன்னில் உலகக்கோப்பை சாதனை வெற்றியை நழுவவிட்ட தென்னாப்பிரிக்கா:

63/7 என்று இருந்த மே.இ.தீவுகளை 117 ரன்களில் சுருட்டியிருந்தால் ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி என்ற சாதனையை தென்னாப்பிரிக்கா நிகழ்த்தியிருக்கும். அது நடக்கவில்லை. சரி.150 ரன்களில் சுருட்டியிருந்தால் கூட உலகக்கோப்பை வரலாற்றில் மிகப்பெரிய வெற்றி என்ற சாதனையையாவது தென்னாப்பிரிக்கா நிகழ்த்தியிருக்கும். ஆனால் 1 ரன் கூடுதலாக மே.இ.தீவுகள் எடுத்துவிட்டது.

 

தனது மோசமான கடைசி 5 ஓவர் பந்துவீச்சில் 95 ரன்களை வாரி வழங்கிய கேப்டன் ஜேசன் ஹோல்டர், பேட்டிங்கில் 48 பந்துகளில் 56 ரன்கள் எடுத்ததே அந்த அணி வீரர் ஒருவர் எடுத்த அதிகபட்ச ஸ்கோராகும். அவர் பந்து வீச்சில் 104 ரன்கள் கொடுத்தது கொடுத்ததுதான், அதற்காக தான் அடித்த 56 ரன்களை பந்துவீச்சில் கொடுத்த ரன்களிலிருந்து கழித்து விடுமாறு ஜேசன் ஹோல்டர் கேட்காமல் இருந்தால் சரி.

 

409 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்த்துக் களமிறங்கிய மே.இ.தீவுகள், தொடக்க ஓவரில் டேல் ஸ்டெய்னை எதிர்கொண்டது. டிவைன் ஸ்மித் முதல் ஓவரை எதிர்கொண்டார். 3-வது பந்தில் கெய்ல் மிட் ஆனில் 3 ரன்கள் எடுத்தார். 5-வது பந்தில் அருமையான அவுட் ஸ்விங்கரில் டிவைன் ஸ்மித் தப்பித்தார். பந்து மட்டையைக் கடந்து சென்றது. ஆனால் 6-வது பந்தை கோபத்துடன் ஒரு விளாசு விளாசினார் ஸ்மித் பந்து மிட்விக்கெட்டில் சிக்ஸ். முதல் ஓவரில் 10 ரன்கள்.

 

அடுத்த ஓவர் கைல் அபாட் பந்துவீச வந்தார். 3-வது பந்தை ஒதுங்கிக் கொண்டு விளாச முயன்றார் கெய்ல், பந்து சிக்கவில்லை மிடில் ஸ்டம்ப் காலியானது.

சாமுயெல்ஸ் களமிறங்கி 9 பந்துகளில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. கைல் அபாட் வீசிய பந்தை தொட்டார்.. கெட்டார். டி காக் கேட்ச் பிடித்தார். கடைசி போட்டியில் ஜிம்பாப்வேயை விளாசிய இரண்டு முக்கிய வீரர்களில் ஒருவர் ஒற்றை இலக்கம் மற்றொருவர் ரன் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர்.

 

ஸ்மித்திற்கு தன்னிடமே வந்த கேட்சை ஸ்டெய்ன் கோட்டை விட, அடுத்த கைல் அபாட் ஓவரில் ஸ்மித் 2 பவுண்டரிகளை விளாசினார். மீண்டும் 8-வது ஓவரில் கைல் அபாட் வீச, இம்ரான் தாஹிர், ஸ்மித் கொடுத்த கேட்சை மிட் ஆனில் கோட்டை விட்டார்.

 

11-வது ஓவரில் ஸ்கோர் 50 ரன்களை எட்டியது. அப்போது கார்ட்டர், மோர்கெல் பந்தை புல்ஷாட் ஆடினார் சரியாக ஆடவில்லை மிட் ஆனில் டிவில்லியர்ஸ் அபாரமாக கேட்ச் பிடிக்க இவரும் அவுட். 12-வது ஓவரில் இம்ரான் தாஹிர் 31 ரன்கள் எடுத்த ஸ்மித்தை வெளியேற்றினார். லாங் ஆனில் மில்லர் ஓடிச் சென்று மிக அபாரமாக கேட்ச் பிடித்தார். அதே ஓவரில் சிம்மன்ஸ் 0-வில் எல்.பி.ஆகி வெளியேறினார். மே.இ.தீவுகள் 5 விக்கெட்டுகளை இழந்தது.

 

டேரன் சாமி ஏதாவது ஒரு காட்டுக் காட்டுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவர் 5 ரன்களில் இம்ரான் பந்தில் ஸ்டம்ப்டு ஆனார். அதே ஓவரில் ஆந்த்ரே ரசல் ரன் எடுக்கும் முன்பே கைல் அபாட்டின் ஷார்ட் தேர்ட்மேன் அபார கேட்சிற்கு அவுட் ஆகி வெளியேறினார். இம்ரான் தாஹிர் 4 ஓவர் 1 மைடன் 5 ரன்கள் 4 விக்கெட்.

63/7 என்ற நிலையிலிருந்து ஜேசன் ஹோல்டர், தினேஷ் ராம்தின் ஸ்கோரை 108 ரன்களுக்கு உயர்த்தினர். ராம்தின் 22 ரன்கள் எடுத்து இம்ரான் தாஹிரின் 5-வது விக்கெட்டாக வீழ்ந்தார்.

 

ஜேசன் ஹோல்டர் தன் பந்துவீச்சை டிவில்லியர்ஸ் கிழித்து எடுத்த கோபத்தில் இருந்தார் போலும், சில அதிர்ச்சிகரமான ஷாட்களில் டேல் ஸ்டெய்ன் உட்பட அனைவரையும் விளாசி 4 சிக்சர்கள் 3 பவுண்டரி என்று 48 பந்துகளில் 56 ரன்களை விளாசி ஸ்டெய்ன் பந்தில் அவுட் ஆனார். கடைசியில் 34-வது ஓவரில் 151 ரன்களுக்கு சுருண்டது

 

5 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றியிருந்த இம்ரான் தாஹிர் கடைசியில் ஜேசன் ஹோல்டரிடம் சிக்கியதால் 10 ஓவர்களில் 45 ரன்களுக்கு 5 விக்கெட்டுகள் என்று நிறைவு பெற்றார். மோர்கெல், அபாட் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்ற ஸ்டெய்ன் 1 விக்கெட்டைக் கைப்பற்றினார்
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-162-%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-151-%E0%AE%86%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B5%E0%AF%81%E0%AE%9F%E0%AF%8D/article6941423.ece

 

  • தொடங்கியவர்

உலகக் கோப்பை: ஏன்ய்யா, எங்களை இப்படி அலைக்கழிக்கிறீங்க: கடுப்பில் இலங்கை

 

மெல்போர்ன்: உலகக் கோப்பை போட்டிகளில் தாங்கள் அலைக்கழிக்கப்படுவதாக இலங்கை அணி தெரிவித்துள்ளது. உலகக் கோப்பை போட்டிகள் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்தில் நடந்து வருகிறது. இலங்கை அணி முதல் இரண்டு போட்டிகளில் விளையாட நியூசிலாந்து சென்றது. அதன் பிறகு வியாழக்கிழமை வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் விளையாட ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்போர்ன் நகருக்கு வந்தது. விளையாடி முடிந்த சிறிது நேரத்தில் மீண்டும் நியூசிலாந்து கிளம்பிச் சென்றது. வரும் ஞாயிற்றுக்கிழமை வெல்லிங்டனில் நடக்கும் போட்டியில் இலங்கை இங்கிலாந்து அணியுடன் மோதுகிறது.

 

ஆஸ்திரேலியா வெல்லிங்டன் போட்டி முடிந்த பிறகு இலங்கை அடுத்த இரண்டு போட்டிகளில் விளையாட மீண்டும் ஆஸ்திரேலியா வர உள்ளது.

அசௌகரியம் ஆஸ்திரேலியாவுக்கு வருவதற்கு முன்பு நியூசிலாந்தில் போட்டிகளை முடிந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். மாறி மாறி பயணம் செய்வது அசௌகரியமாக உள்ளது. மேலும் வீரர்கள் பயணத்திலேயே களைப்பாகிவிடுகின்றனர் என்று இலங்கை அணியின் மேனேஜர் மைக்கேல் டி ஜோய்ஸா தெரிவித்துள்ளார்.

 

ஓய்வு வெள்ளிக்கிழமை அணி வீரர்கள் ஆஸ்திரேலியாவில் இருந்து நியூசிலாந்துக்கு பயணம் செய்ததில் நேரம் போனது. சனிக்கிழமை அவர்கள் ஓய்வு எடுப்பார்கள். அப்படி என்றால் ஞாயிற்றுக்கிழமை போட்டிக்கு பயிற்சி செய்ய நேரம் இருக்காது என்றால் மைக்கேல்.

இந்தியா டோணி தலைமையிலான இந்திய அணி ஆடும் போட்டிகள் ஆஸ்திரேலியாவில் நடந்து வருகிறது. முதல் போட்டி அடிலெய்ட் நகரிலும், 2வது போட்டி மெல்போர்னிலும் நடைபெற்றது. நாளை நடக்கும் மூன்றாவது போட்டி ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெறுகிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/exhausted-sri-lanka-unhappy-with-world-cup-travel-itinerary-221838.html

  • கருத்துக்கள உறவுகள்

நேர அட்டவணையை பார்த்தபோதே விளங்கவில்லையா இலங்கைக்கு??! :D

  • தொடங்கியவர்

சம பலம் கொண்ட ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாளை மோதல்! ஆட்டத்தில் அனல் பறக்க வாய்ப்பு

 

ஆக்லாந்து: உலக கோப்பையை இணைந்து நடத்தும் ஆஸ்திரேலியா-நியூசிலாந்து அணிகள் நாளை பலப்பரிட்சை நடத்த உள்ளன. உலக கோப்பையை வெல்ல வாய்ப்புள்ள நாடுகள் என்ற எதிர்பார்ப்பு கொண்டவை இவ்விரு அணிகளும்தான் என்பபதால் ஏகத்துக்கும் எதிர்பார்ப்பு எகிறியுள்ளது இந்த போட்டியின் மீது. நடப்பு உலக கோப்பை கிரிக்கெட் போட்டி தொடரை ஆஸ்திரேலியாவும், நியூசிலாந்தும் இணைந்து நடத்திவருகின்றன. இவ்விரு அணிகளுமே ஏ பிரிவில் இடம் பெற்றுள்ளன.

 

சம பலம் கொண்ட ஆஸ்திரேலியா-நியூசிலாந்து நாளை மோதல்! ஆட்டத்தில் அனல் பறக்க வாய்ப்பு இதில், நியூசிலாந்து ஏற்கனவே இலங்கை, ஸ்காட்லாந்து, இங்கிலாந்து ஆகிய நாடுகளை அபாரமாக வீழ்த்தி புள்ளிப் பட்டியலில் முதலிடத்திலுள்ளது. ஆஸ்திரேலியாவை பொறுத்தளவில், இங்கிலாந்தை 111 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய நிலையில், வங்கதேசத்துடனான போட்டி மழையால் கைவிடப்பட்டது.

 

எனவே ஒரு புள்ளிதான் கிடைத்தது. இவ்விரு அணிகளும் இந்திய நேரப்படி நாளை காலை 6.30 மணிக்கு நியூசிலாந்தின் ஆக்லாந்து நகரில் தொடங்க உள்ள போட்டியில் மோத உள்ளன. உள்ளூர் சப்போர்ட் நியூசிலாந்துக்கு பலமாகும். ஆனால் அந்த அணியின் பிரெண்டன் மெக்கல்லம் உள்ளிட்ட ஒரு சில பேட்ஸ்மேன்களை தவிர்த்து பிற வீரர்கள் நெருக்கடி நேரத்தில் அடுத்தடுத்து அவுட் ஆகுவது தொடர் கதையாகிவருகிறது.

 

பவுலிங்கில் சவுத்தி கலக்குகிறார். இங்கிலாந்துக்கு எதிராக 7 விக்கெட்டுகளை சாய்த்தார். அதே நேரம் 4 முறை உலக சாம்பியன் ஆஸ்திரேலியாவோ, அனைத்து பிரிவுகளிலும் மிகவும், பலமாக உள்ளது. இரு நாட்டு மீடியாக்களுமே இவ்விரு அணிகள் மோதும் போட்டியை உலக கோப்பை இறுதி போட்டியைப் போன்று வர்ணித்து ஹைப் ஏற்றி வருகின்றன. பலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் போட்டியில் அனல் பறக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/australia-new-zealand-clash-battle-world-cup-co-hosts-221839.html

  • கருத்துக்கள உறவுகள்

ICC யை கட்டுப்படுத்துவது இந்தியாவும், ஆஸியும் தான் போல இருக்கிறது

  • தொடங்கியவர்

உலக கோப்பையில் நாளை, நடப்பு சாம்பியன் இந்தியா- 'குட்டி இந்தியா' மோதல்!

 

பெர்த்: உலக கோப்பையில் தனது மூன்றாவது போட்டியில், நடப்பு சாம்பியன் இந்தியா நாளை ஐக்கிய அரபு அமீரகம் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டியில் வெற்றி பெற்றால் இந்தியா ஹாட்ரிக் வெற்றியுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ள முடியும். குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள, இந்தியா தனது முதல் ஆட்டத்தில் 76 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தானையும், அடுத்த போட்டியில் 130 ரன்கள் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி அசத்தியது.

 

நாளை பகலில் போட்டி இந்நிலையில் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணிக்கு எதிராக நாளை பெர்த் மைதானத்தில் 3வது போட்டியை சந்திக்க உள்ளது இந்தியா. இந்திய நேரப்படி பகல் 12 மணிக்கு இப்போட்டி தொடங்குகிறது. அரபு நாட்டு ரசிகர்களுக்கும், தொலைக்காட்சியில் போட்டியை பார்க்க இது வசதியான நேரமாகும்.

 

பேட்டிங் சூப்பர் இந்தியாவில் பேட்டிங் வரிசை வலுவாக உள்ளது. ஷிகர் தவான், விராட் கோஹ்லி ஆகியோர் ஃபார்முக்கு திரும்பியுள்ளது இந்தியாவின் பலமாகும். ரெய்னா, ரஹானே ஆகியோரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளனர். தொடக்க வீரர் ரோஹித் ஷர்மா அடிக்க ஆரம்பித்தால் தடுப்பது எளிதான காரியமில்லை.

 

இன்ப அதிர்ச்சி பவுலிங்கிலும் எதிர்பார்த்ததைவிட சிறப்பான பங்களிப்பை செய்து வருகின்றனர் இந்திய பவுலர்கள். நாளைய போட்டியில் ஷமி ஆடப்போவதில்லை என்றாலும், மோகித் ஷர்மா, உமேஷ் யாதவ், ஜோடியும், புவனேஸ்வர் குமாரும் வேகப்பந்து துறையை கவனித்துக்கொள்வார்கள், அஸ்வின், ஜடேஜா, ரெய்னா ஆகியோர் ஸ்பின் பிரிவை கவனித்துக் கொள்வார்கள். எப்படிப் பார்த்தாலும், இந்திய அணி பல மடங்கு வலிமையாகவே தெரிகிறது.

 

அடுத்தடுத்து தோல்வி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியை பொறுத்தளவில் ஜிம்பாப்வே, அயர்லாந்து ஆகிய நாடுகளிடம் தோல்வியைடந்துள்ளது. அந்த நாட்டு வீரர்களின் மொத்த அனுபவமே 30 போட்டிகள் என்ற அளவில்தான் உள்ளது. எனவே நாளைய போட்டியில் இந்தியாவின் வெற்றி நிர்ணயிக்கப்பட்டதாகவே தெரிகிறது. இருப்பினும் கிரிக்கெட்டில் எதையும் சொல்ல முடியாது என்பதால் போட்டி பரபரப்பை ஏற்படுத்திதான் வைத்துள்ளது.

 

முதலிடத்தை பிடிக்க மும்முரம் இந்த போட்டியில் இந்தியா வெற்றி பெற்றால் ஹாட்ரிக் வெற்றியுடன், புள்ளி பட்டியலில் முதலிடத்தை பிடிக்க முடியும். மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து நாடுகளுக்கு எதிரான, அடுத்தடுத்த போட்டிகளில், ஒருவேளை, தடுமாறினாலும், அமீரகத்துடனான போட்டியில் அதிக புள்ளிகள் பெற்றால் அது உதவிகரமாக இருக்கும் என்பது இந்திய அணியின் எண்ணம்.

 

மாஸ்டர் பிளான் மேலும், குரூப் பி பிரிவில் முதலிடத்தை தக்க வைத்தால், காலிறுதியில், ஏ பிரிவின் கடைசி இடத்தை சேர்ந்த அணியுடன் மோதும் வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைக்கும். எனவே முதலிடத்தை தக்க வைப்பதில் இந்தியா முனைப்பு காண்பிக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் கிருஷ்ண சந்திரன் என்ற ஆல் ரவுண்டரும், ஸ்வப்னில் பாட்டில் என்ற விக்கெட் கீப்பரும் இந்தியர்களாகும். இருவருமே நாளைய போட்டியை ஆவலோடு எதிர்பார்த்துள்ளனர். 11 பேர் கொண்ட அணியில் 2 பேர் இந்தியர்கள்தான் என்பதால், அமீரக அணியை குட்டி இந்தியா என்று கூறலாம்தானே..

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/india-aim-make-it-3-in-a-row-vs-uae-221835.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.