Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

ரானேயும் போய்விட்டார்  இந்தியா 78/4/17.5 :o

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

107/5 in 23.0

நல்ல நித்திரை .எழும்பி பார்த்தால் ஸ்கோர் இப்படி இருக்கு . :icon_mrgreen:

  • கருத்துக்கள உறவுகள்

134/6 in 29.3

  • கருத்துக்கள உறவுகள்

india win

  • தொடங்கியவர்

திரில் சேஸிங்.. செம டென்ஷனுடன் போராடி மேற்கிந்திய தீவுகளை வென்றது இந்தியா!

Read more at: http://tamil.oneindia.com/

  • தொடங்கியவர்

"பேடே" இல்லாமல் "கீப்பிங்" செய்த கேப்டன் டோணி.. "சில்லி" காரணத்திற்காக!!

 

 

பெர்த்: ரொம்ப வினோதமாக இருந்தது அந்தக் காட்சி. கேப்டன் டோணி, இன்று பேட் கட்டிக் கொள்ளாமல் சில பந்துகளுக்கு கீப்பிங் செய்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார். எல்லாம் சில்லித்தனமான காரணத்திற்காகத்தான்.. பயந்துடாதீங்க.. சில்லி பாயிண்ட்டில் பீல்டிங் செய்த அஜிங்கியா ரஹானேவுக்காக தனது பேடைக் கழற்றிக் கொடுத்து விட்டு தான் வெறும் காலுடன் கீப்பிங் செய்தார் டோணி. அஸ்வின் பந்து வீசியபோதுதான் இப்படி பேடைக் கழற்றி ரஹானேவிடம் கொடுத்தார் டோணி.

 

இதுபோல கீப்பர்கள் பேடே இல்லாமல் கீப்பிங் செய்வது என்பது அரிதிலும் அரிதான விஷயம் என்பதால் இது கவனம் ஈர்ப்பதாக அமைந்தது. அஸ்வின் வீசிய, 14வது ஓவரின் நடுவில்தான் இந்த காமெடி நடந்தது. அஸ்வின் வீசிய பந்து பவுன்ஸ் ஆவதைப் பார்த்த டோணி, சில்லியில் மிக நெருக்கத்தில் பீல்டரை வைத்து பேட்ஸ்மேனுக்கு நெருக்கடி கொடுக்கத் தீர்மானித்தார். ஆனால் ரஹானேவை பேட் இல்லாமல் நிற்பது ரிஸ்க்கானது என்பதால் புதிய பேடை வரவழைக்க நடுவரிடம் அனுமதி கேட்டார் டோணி.

 

ஆனால் நடுவர் அனுமதி தரவில்லை. இதையடுத்து தனது தற்காப்பு பேடைக் கழற்றி அவரை அணிந்து கொள்ளச் செய்தார். அதன் பின்னர் அஸ்வின் தொடர்ந்து பந்து வீசினார். இருப்பினும் அஸ்வின் வீசிய ஒரு பந்து டோணியைத் தாண்டி ஓடியது. இதையடுத்து தனக்கு வலது பக்கமாக 15 மீட்டர் தொலைவில் ரெய்னாவை நிறுத்தி அதற்கும் வழி செய்தார் டோணி. அந்த ஓவர் முடிந்ததும் சப்ஸ்டிடியூட் வீரர் வந்து புதிய பேடை கொடுக்க நடுவர் அனுமதித்தார். இதையடுத்து ரஹானே புதிய பேடைக் கட்டிக் கொள்ள டோணி தனது பேடை வாங்கிக் கொண்டார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/wc-2015-ms-dhoni-keeps-without-pads-against-west-indies-222264.html

  • தொடங்கியவர்

"மரண பயத்தை" காட்டிட்டாங்களே பரமா... கடுமையாக போராடி வெஸ்ட் இண்டீஸை வென்ற இந்தியா!

 

பெர்த்: நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக இந்தியா கடுமையாகப் போராடி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தியுள்ளது. முதலில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி 44.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 182 ரன்கள் எடுத்தது. பின்னர் ஆடிய இந்திய அணி பெரும் போராட்டம் நடத்தி 39.1 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 185 ரன்களை எட்டியது. இன்றையப் போட்டியில் இந்திய அணி வென்றதன் மூலம் காலிறுதிக்குத் தகுதி பெற்றுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி பி பிரிவில் இடம் பெற்றுள்ளது.

 

இதே பிரிவில் தென் ஆப்பிரிக்கா, பாகிஸ்தான், மேற்கிந்திய தீவுகள், அயர்லாந்து, ஜிம்பாப்வே, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகிய அணிகளும் உள்ளன. டோணி தலைமையிலான இந்திய அணி விளையாடிய 3 ஆட்டங்களிலும் வெற்றி பெற்று 6 புள்ளிகளை கைப்பற்றி உள்ளது. பாகிஸ்தானை 76 ரன் வித்தியாசத்திலும், தென்ஆப்பிரிக்காவை 130 ரன் வித்தியாசத்திலும், ஐக்கிய அரபு எமிரேட்சை 9 விக்கெட் வித்தியாசத்திலும் இந்தியா தோற்கடித்தது. இந்திய அணி இன்றைய 4-வது ஆட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை எதிர்கொண்டது. டாஸ் வென்ற மேற்கிந்திய தீவுகள் அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. அந்த அணியின் தொடக்க வீரர்களாக ஸ்மித்தும் கிறிஸ் கெய்லும் களமிறங்கினர். தொடக்கம் முதலே இந்திய அணியின் பந்துவீச்சும் பீல்டுங்கும் படுநேர்த்தியாக அபாரமாக இருந்தது.

 

இதனால் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களால் ரன்களை எடுக்க முடியாமல் பரிதவித்து வந்தனர். 4.5வது ஓவரில் அந்த அணி 8 ரன்கள் எடுத்த நிலையில் முகமது ஷமி வீசிய பந்தில் டோணியிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார் ஸ்மித். அவர் 20 பந்துகளை எதிர்கொண்டு 6 ரன்களைத்தான் எடுக்க முடிந்தது. இதில் ஒரு பவுண்டரி அடக்கம். பின்னர் கெய்லுடன் சாமுவேல்ஸ் கை கோர்த்தார். இந்த இருவரும்தான் ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் அதிரடியாக ஆடி சாதனை படைத்தவர்கள். ஆனால் இந்த ஜோடியை நிலைக்கவிடவில்லை இந்திய வீரர்கள். 7.2வது ஓவரில் சாமுவேல்ஸ் 2 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ரன் அவுட் ஆகி வெளியேறினார்.

 

அப்போது அந்த அணி 15 ரன்களைத்தான் எடுத்தது. அடுத்ததாக மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட கெய்ல் 21 ரன்கள் எடுத்த நிலையில் ஷமி பந்தில் மொகித் சர்மாவிடம் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். அப்போது 8.6ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்து 35 ரன்கள் என்ற பரிதாப நிலையில் இருந்தது மேற்கிந்திய தீவுகள். அந்த அணியை பாடாய் படுத்தும் வகையில் முதல் பந்திலேயே டக் அவுட் ஆகி நடையைக் கட்டினார் ரம்டின். 10 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை பறிகொடுத்து 35 ரன்கள் என மிக மோசமான நிலையில் இருந்தது அந்த அணி. பின்னர் ஆடிய சிமன்ஸ் 9 ரன்கள், சமி 26 ரன்கள் ரசல் 8 ரன்கள் என சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழ்ந்தனர்.

 

ஒரு கட்டத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி 100 ரன்களைத் தாண்டுமா? 150 ரன்களைத் தாண்டுமா? என்ற பட்டிமன்றமே நடக்கும் அளவுக்கும் போனது. மேற்கிந்திய தீவுகள் அணியிலேயே ஹோல்டர் ஒருவர்தான் மிக அதிகபட்சமாக 64 பந்துகளை எதிர்கொண்டு 57 ரன்களை எடுத்திருந்தார். அவரால்தான் 182 ரன்கள் என்ற கவுரமான ஸ்கோரை அந்த அணி எடுக்கவும் முடிந்தது. 44.2வது ஓவரில் ஜடேஜா பந்தில் கோஹ்லியிடம் கேட்ச் கொடுத்து கடைசி விக்கெட்டாக ஹோல்டர் வெளியேறினார். 44.2 ஓவர்களில் மேற்கிந்திய தீவுகள் அணி 182 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய அணியைப் பொறுத்தவரையில் தொடக்கத்தில் பந்து வீசிய முகமது ஷமி மற்றும் உமேஷ் யாதவ் ரன்கள் எடுக்க முடியாதபடி பந்துவீசிய கையோடு விக்கெட்டுகளையும் எடுப்பதில் கவனமாக இருந்தனர்.

 

8 ஓவர்களை வீசிய ஷமி 35 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை அள்ளினார். இதில் 2 மெய்டன் ஓவர்கள் அடங்கும். இதேபோல் உமேஷ் யாதவ் 10 ஓவர்கள் வீசி 42 ரன்களை விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ஜடேஜாவும் 8.2 ஓவர்கள் வீசி 27 ரன்களே கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார். அஸ்வின், மொகித் ஷர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டுகளைக் கைப்பற்றினர். இந்திய அணி வெல்ல 183 ரன்கள் என்ற இலக்கை நிர்ணயித்தது மேற்கிந்திய தீவுகள் அணி. தடுமாற்றம்.. போராட்டம்.. டென்ஷன் சேஸிங்.. பின்னர் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோஹித் சர்மாவும் தவானும் களமிறங்கினர். இந்தியாவுக்கு183 ரன்கள் எளிதான இலக்குதான்.. ஆனால் மேற்கிந்திய தீவுகள் அணியும் விடாக் கண்டன் கொடாக் கண்டனாக பந்து வீசத் தொடங்கியது. இதனால் இந்திய அணி தொடக்கம் முதலே தடுமாறியது.

 

4.1வது ஓவரிலேயே 11 ரன்கள் எடுத்த நிலையில் தவான் விக்கெட்டை பறிகொடுத்தது இந்தியா. அதேபோல் 20 ரன்கள் எடுத்த நிலையில் ரோஹித் சர்மாவும் அவுட் ஆகி பெவிலியன் திரும்பினார். இந்தியா ஒவ்வொரு ரன்னுக்குமே போராட வேண்டிய நிலையில் இருந்தது. விறுவிறுவென விளையாடிக் கொண்டிருந்த கோஹ்லி அரைசதத்தை தொட்டுவிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 14.6 ஓவர்களில் 33 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 63 ரன்களையே எடுத்திருந்தது. களத்தில் ரகானேவும் ரெய்னாவும் இருந்தனர். ஆனால் ரகானே இந்திய அணியின் ஸ்கோர் 78 ஆக இருந்த போது அவுட் ஆனார். ரெய்னாவுடன் டோணி கை கோர்க்க இந்திய அணி ஒவ்வொரு ரன்னாக சேர்த்துக் கொண்டு 100 ரன்களைத் தாண்டியது. 22.5வது ஓவரில் 107 ரன்களை இந்திய அணி எட்டிய நிலையில் 5வது விக்கெட்டாக ரெய்னா அவுட் ஆனார். அவர் 25 பந்துகளில் 22 ரன்களை எடுத்திருந்தார்.

 

டோணியுடன் இணைந்த ஜடேஜாவும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 23 பந்துகளில் 13 ரன்கள் எடுத்த நிலையில் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அப்போது இந்திய அணி 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 134 ரன்கள் எடுத்திருந்தது. டோணியுடன் அஸ்வின் கை கோர்த்து தொடர்ந்து நிதானமாகவே ரன்களை சேர்த்து ஒருவழியாக 39.1 வது ஓவரில் 185 ரன்களை எட்ட இந்தியா 4 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. இன்றைய ஆட்டத்தில் இந்திய அணியில் டோணி ஒரு சிக்சர் அடித்தார். கோஹ்லி அதிகபட்சமாக 5 பவுண்டரிகள், டோணி 3 பவுண்டரிகள் எடுத்தனர்.

 

அந்த அளவுக்கு மேற்கிந்திய தீவுகளுடன் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டு சிங்கிள், டபுள் என போராடி போராடி ரன்களை எடுக்க வேண்டியதாயிற்று இந்தியாவுக்கு. நடப்பு உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இந்த ஆட்டத்தில்தான் இந்திய அணி 183 ரன்களை எட்டுவதற்கு இவ்வளவு பகீரத பிரயத்தனப் போராட்டத்தை நடத்த வேண்டியிருந்தது. மேற்கிந்திய தீவுகள் அணியின் டெய்லர், ரசல் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இன்றைய போட்டியில் வென்றதன் மூலம் இந்திய அணி உலகக் கோப்பை கிரிக்கெட்டில் கால் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/world-cup-2015-india-hope-continue-winning-run-against-west-222219.html

  • தொடங்கியவர்

அணியைக் காக்க "ஓட" வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட கேப்டன்கள் டோணி - ஹோல்டர்!!

 

பெர்த்: இன்றைய இந்தியா - மேற்கு இந்தியத் தீவுகள் மோதலில் ஒரு சுவாரஸ்யமான ஒற்றுமையைப் பார்க்க முடிந்தது இரு அணிகளிலுமே கேப்டன்கள்தான் கடைசி வரை ரன்னுக்காக போராட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். மேற்கு இந்தியத் தீவுகள் அணியில் முன்னணி வீரர்கள் எல்லாம் மட மடவென சரிந்த நிலையில் கேப்டன் ஜேசன் ஹோல்டர் தலையில் ரன் குவிக்கும் பொறுப்பு வந்து விழுந்தது.

 

அணியைக் காக்க அவரும் தனது வயதுக்கும், அனுபவத்துக்கும் மீறிய வகையில், மிகச் சிறப்பாக, பொறுப்பாக நிதானமாக ஆடி அணியின் ஸ்கோரை கெளவரமான இடத்திற்குக் கொண்டு சென்றார். கடைசி வரை போராடிய அவர் 57 ரன்களை எடுத்து கெளரவமான இலக்கை அணி எட்ட உதவினார். அதே போல இந்தியாவின் சேஸிங்கின்போதும் அணியின் வெற்றி கேப்டன் டோணி தலையில் வந்து விழுந்தது.

 

முன்னணி வீரர்கள் எதிர்பாராத வகையில் அவுட்டாகிச் செல்லவே கேப்டன் டோணிக்கு நெருக்கடி முற்றியது. வழக்கம் போல கூலாக ஆடிய டோணி, கிடைத்த எந்த வாய்ப்பையும் விடாமல் ரன்னாக்கினார். ஓடினார் ஓடினார் ஒவ்வொரு ரன்னுக்காகவும் விடாமல் ஓடினார். அவருக்கு அஸ்வினும் நல்ல ஒத்துழைப்புக் கொடுக்கவே கடைசி வரை விடாமல் போராடி அணியை வெற்றிக்கு இட்டுச் சென்றார் கேப்டன் டோணி.

 

இரு அணிகளுக்கும் இன்று கேப்டன்கள்தான் ஏதோ ஒரு வகையில் வாழ்வளித்தனர் என்பது ஆச்சரியமான ஒரு ஒற்றுமை. ஆனால் கடைசியில் வென்றவர் நம்ம கேப்டன்தான் என்பதில் நமக்கு ஒரு பெருமை. பட், இந்த போட்டியிலிருந்து இ்ந்தியா பல பாடங்களைக் கற்றுக் கொள்ள வேண்டியுள்ளது. கற்றுக் கொள்வார்கள் என நம்புவோம்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/what-a-match-222265.html

  • தொடங்கியவர்

பாகிஸ்தான்
v
தென் ஆப்ரிக்கா
(14:00 local | 01:00 GMT | 02:00 CET)

அயர்லாந்து
v
சிம்பாப்வே
(14:30 local | 03:30 GMT | 04:30 CET)

இந்திய அணிக்கு இன்னும் நெருக்கடியை கொடுத்திருக்க முடியும். ஆனால் மே. இ.தீவுகள் அணியின் அனுபவமற்ற இளம் தலைவர் இறுதிக்கட்டத்தில் எடுத்த முட்டாள் தனமான முடிவுகள் போட்டியின் போக்கை மாற்றி விட்டது. இறுதி நேரத்தில் அணியின் முக்கிய பந்து வீச்சாளர்களை பயன்படுத்தாது பகுதி நேர பந்துவீச்சாளர்களை பயன்படுத்தியது அனைத்து வர்ணனையாளர்களாலும் பேசப்பட்டது. 

Number of centuries in each World Cup
1975 - 6
1979 - 2
1983 - 8
1987 - 11
1992 - 8
1996 - 16
1999 - 11
2003 - 21
2007 - 20
2011 - 24
2015 - 21*

  • தொடங்கியவர்

SA 74/4

  • தொடங்கியவர்

33.3 ஓவர்களில் 202 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது தென் ஆப்பிரிக்கா

Read more at: http://tamil.oneindia.com/

  • தொடங்கியவர்

தென் ஆப்பிரிக்காவை 29 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய பாகிஸ்தான்! டி வில்லியர்ஸ் அதிரடி வீண்!!

 

ஆக்லாந்து: உலக கோப்பையில், தென் ஆப்பிரிக்கா-பாகிஸ்தான் அணிகள் இடையே நடைபெற்ற பரபரப்பான ஆட்டத்தில் 29 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றது. குரூப் பி பிரிவில் இடம்பிடித்துள்ள பாகிஸ்தான்-தென் ஆப்பிரிக்கா அணிகள், ஆக்லாந்து, ஈடன் பார்க் மைதானத்தில் இன்று மோதின. டாசில் வென்ற தென் ஆப்பிரிக்கா முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது.

 

மிடில் ஆர்டர் தடுமாற்றம்

பாகிஸ்தானின் தொடக்க வீரர் சர்ப்ராஸ் அகமது 49, அகமது செஷாத் 18 ரன்கள், யூனிஸ்கான் 37 ரன்கள் எடுத்த நிலையில், சோயிப் மசூத் 8 ரன்களிலும், உமர் அக்மல் 13 ரன்களிலும் நடையை கட்டினர். பாகிஸ்தான் 40.1 ஓவர்களில் 197 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்திருந்த நிலையில், 40.1வது ஓவரில், மழை காரணமாக ஆட்டம் தடைபட்டது. அப்போது கேப்டன், மிஸ்பா 51 ரன்களுடனும், அப்ரிடி 11 ரன்களுடனும் களத்தில் நின்றனர். மழையால் ஓவர்கள் சுருங்கியது ஆரம்பத்தில் சிறப்பான ரன் ரேட்டை வைத்திருந்த பாகிஸ்தான், நடுவரிசை வீரர்கள் காலை வாரியதால், சறுக்கியது.

 

கடைசி பத்து ஓவர்களில் மிஸ்பா, அப்ரிடி ஜோடி அடித்து ஆடி ரன்களை குவிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மழை காரணமாக ஓவர்கள் 47 ஆக குறைக்கப்பட்டு ஆட்டம் மீண்டும், தொடங்கப்பட்டது. எனவே, ஆட்டம் தொடங்கிய பிறகு எஞ்சியிருந்த 7 ஓவர்களிலும் அடித்து ஆட வேண்டிய கட்டாயம் பாகிஸ்தானுக்கு ஏற்பட்டது. 232 இலக்கு அடித்து ஆட வேண்டிய கட்டாயத்தில், மோசமான ஷாட்டுகளை அடித்த, அப்ரிடி 22 ரன்களிலும், மிஸ்பா உல் ஹக் 56 ரன்களிலும் நடையை கட்டினர். 46.2 ஓவர்களில் பாகிஸ்தான் 222 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

 

எனவே, டக்ஒர்த் லீவிஸ் முறையில், 47 ஓவர்களில் 232 என்ற இலக்கை எட்டிப்பிடிக்க வேண்டிய கட்டாயத்தில் தென் ஆப்பிரிக்கா பேட்டிங்கை தொடங்கியது. தென் ஆப்பிரிக்க பேட்டிங் சறுக்கல் அந்த அணியின் தொடக்க வீரர் டி காக் வழக்கம்போல ஏமாற்றி, இம்முறை டக் அவுட் ஆனார். ஹசிம் ஆம்லா மற்றும் டு பிளெசிஸ் ஜோடி சிறப்பான பல ஷாட்டுகளை ஆடி, தென் ஆப்பிரிக்காவுக்கு நம்பிக்கை தந்தது. ஆனால் ஆம்லா, 38 ரன்களிலும், டுபிளெசிஸ் 27 ரன்களிலும் அவுட் ஆனதும், தென் ஆப்பிரிக்காவின் சறுக்கல் ஆரம்பித்தது. அதிரடி வீரர்கள் ஏமாற்றம் அதிரடி வீரர்களான ரிலீ ரோச்சவ் 6 ரன்களிலும், டேவிட் மில்லர் ரன் ஏதும் எடுக்காமலும், டுமினி 12 ரன்களிலும் நடையை கட்ட, பேட்டிங் வரிசை மொத்தமாக சீட்டு கட்டுபோல சரிந்தது.

 

டுமினி அவுட் ஆனபோது, தென் ஆப்பிரிக்கா 19 ஓவர்களில் 102 ரன்களுக்கு ஆறாவது விக்கெட்டை இழந்திருந்தது. டி வில்லியர்ஸ் மீண்டும் அபாரம் ஆனால் மறுமுனையில், கேப்டன் டி வில்லியர்ஸ் நங்கூரம் போட்டு நின்று கொண்டிருந்தார். அவர் பாகிஸ்தானின் வேகப்பந்து வீச்சாளர்களின் பந்துகளை சிக்சரும், பவுண்டரியுமாக விளாசிக் கொண்டிருந்தார். 32வது ஓவரில் தென் ஆப்பிரிக்கா 200 ரன்களை எட்டியது. மேற்கொண்டு 32 ரன்கள் மட்டுமே எடுக்க வேண்டிய நிலையில், டி வில்லியர்ஸ் 77 ரன்களுடன் நின்றதால், தென் ஆப்பிரிக்க ரசிகர்கள் நம்பிக்கையுடன் காத்திருந்தனர்.

 

அந்த ஷாட் தேவையா?

ஆனால் சொகைல் கானின் பந்து வீச்சை பிட்சை விட்டு இறங்கி வந்து டி வில்லியர்ஸ் அடிக்க முற்பட, பேட்டில் பந்து உரசியபடி விக்கெட் கீப்பர் சர்பாஸ் அகமது கைகளில் தஞ்சம் புகுந்தது. 200வது ரன்னுக்கு 9வது விக்கெட்டை இழந்தது தென் ஆப்பிரிக்கா. மேற்கொண்டு 2 ரன்கள் மட்டுமே சேர்த்த நிலையில், இம்ரான் தாகிர் அவுட் ஆக, பாகிஸ்தான் 29 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றியை சுவைத்தது. தனிநபராக நின்று போராடிய டி வில்லியர்ஸ் முயற்சிக்கு பலன் கிடைக்கவில்லை. நெருக்கடியான நேரங்களில் கோட்டைவிடும் அணி தென் ஆப்பிரிக்கா என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமானது. 49 ரன்களை எடுத்ததுடன், 6 கேட்ச்சுகளையும் பிடித்த சர்பாஸ் அகமதுவுக்கு, மேன் ஆப் தி மேட்ச் தரப்பட்டது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/south-africa-won-the-toss-elected-filed-222273.html

  • கருத்துக்கள உறவுகள்

தென்னாபிரிக்காவின் குயின்டன் டிகாக் அடுத்த ஆட்டத்தில் நீக்கப்பட்டால் நல்லது.

  • கருத்துக்கள உறவுகள்

ஆகா.. அயர்லாந்து போராடி வெற்றி..! :D

  • தொடங்கியவர்

Ireland won by 5 runs

  • தொடங்கியவர்

என்னால் மட்டுமே தென் ஆப்பிரிக்காவுக்கு உலக கோப்பையை பெற்று தர முடியாது: டி வில்லியர்ஸ் விரக்தி

 

ஆக்லாந்து: தனி ஒரு நபராக என்னால் மட்டும் உலக கோப்பையை வென்று அளிக்க முடியாது என்று விரக்தி வெளிப்படுத்தினார் தென் ஆப்பிரிக்க கேப்டன் டி வில்லியர்ஸ். பாகிஸ்தானுக்கு எதிராக இன்று ஆக்லாந்தில் நடந்த போட்டியில், 47 ஓவர்களில் 232 ரன்கள் என்ற வெற்றி இலக்கை எட்ட முடியாமல் 29 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது தென் ஆப்பிரிக்கா. என்னால் மட்டுமே தென் ஆப்பிரிக்காவுக்கு உலக கோப்பையை பெற்று தர முடியாது:

 

டி வில்லியர்ஸ் விரக்தி தென் ஆப்பிரிக்க அணி பேட்ஸ்மேன்கள், ஒருவர் பின் ஒருவராக நடையை கட்டினர். ஆம்லா, டு பிளெசிஸ் மட்டுமே ஓரளவுக்கு ரன் எடுத்தனர். கேப்டன் டி வில்லியர்ஸ் கடுமையாக போராடி 77 ரன்கள் எடுத்து எதிர்பாராதவிதமாக அவுட் ஆனார். டி வில்லியர்ஸ் ஆடியதை பார்த்தால் ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் தோல்வி உறுதி என்பதைப்போலவே இருந்தது. ஆனால், அவரது அவுட் போட்டியை புரட்டிப் போட்டது.

 

டி வில்லியர்சுக்கு கம்பெனி கொடுக்காமல், வீணாக அடித்து ஆடி அடுத்தடுத்து பேட்ஸ்மேன்கள் அவுட் ஆனார்கள். போட்டிக்கு பிறகு நிருபர்களிடம் டி வில்லியர்ஸ் கூறியதாவது: தென் ஆப்பிரிக்காவில் ஆம்லா போன்ற உலக தரம்மிக்க பேட்ஸ்மேன்கள் நிறைய பேர் உள்ளனர். அவர்கள் எல்லோரும் சிறப்பாக ஆடினால்தான், கோப்பையை வெல்ல முடியும். நான் மட்டுமே சிறப்பாக விளையாடி கோப்பையை வெல்ல முடியும் என்று யாராவது கூறினால் அதை நானே நம்ப மாட்டேன். ஒரு குழுவாக இணைந்து செயல்படுவதுதான் தென் ஆப்பிரிக்க அணிக்கு தற்போதுள்ள தேவையாகும். இவ்வாறு டி வில்லியர்ஸ் தெரிவித்தார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/i-can-t-win-this-world-cup-south-africa-on-my-own-admits-ab-de-villiers-222312.html

  • தொடங்கியவர்

கடைசி ஓவர் வரை பரபரப்பு... அயர்லாந்திடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே தோல்வி

 

ஹோபர்ட்: ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 331 ரன்களை குவித்தது. 2வது பேட்டிங் செய்த ஜிம்பாப்வேயும் அசத்தலாக விரட்டி வந்தபோதிலும், 326 ரன்களில் ஆல்-அவுட் ஆனது. இந்தியா இடம்பெற்றுள்ள குரூப் பி பிரிவில் உள்ள அணிகளான ஜிம்பாப்வே மற்றும் அயர்லாந்து ஆகியவை ஆஸ்திரேலியாவின், ஹோபர்ட் மைதானத்தில் இன்று பலப் பரிட்சை நடத்தின.

 

கடைசி ஓவர் வரை பரபரப்பு... அயர்லாந்திடம் 5 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே தோல்வி டாசில் வென்ற ஜிம்பாப்வே முதலில் ஃபீல்டிங்கை தேர்ந்தெடுத்தது. இதைபயன்படுத்தி அயர்லாந்து 8 விக்கெட் இழப்புக்கு 331 ரன்களை குவித்து அசத்தியது. அந்த அணியின் எட் ஜாய்ஸ் அதிகபட்சமாக 112 ரன்கள் குவித்தார். ஆன்ட்ரி பால்பிர்னி 97 ரன்கள் எடுத்தார். இமாலய இலக்கை துரத்திய ஜிம்பாப்வே 74 ரன்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளை இழந்தது. ஆனாலும், அந்த அணி அசரவில்லை. அடித்து நொறுக்க ஆரம்பித்தது. அணியின் கேப்டன் பிரென்டன் டெய்லர் 121 ரன்களும், சீன் வில்லியம்ஸ் 96 ரன்களும் குவித்து அயர்லாந்து பந்து வீச்சாளர்களை திணறடித்தனர்.

 

அணியின் ஸ்கோர் 223 ரன்களாக உயர்ந்தபோது இந்த ஜோடி பிரிந்தது. இதன்பிறகு வந்த பேட்ஸ்மேன்களும் கணிசமாக ரன் அடிக்க, கடைசி ஓவரில் ஜிம்பாப்வே வெற்றிக்கு, 7 ரன்கள் தேவைப்பட்டது, அயர்லாந்து வெற்றிக்கு 2 விக்கெட் தேவைப்பட்டது. எனவே ஆட்டத்தில் உச்சகட்ட பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் கடைசி ஓவரின் முதல் பந்தில் சகப்வாவும், 3வது பந்தில் முபரிவாவும் அவுட் ஆக, 326க்கு ஜிம்பாப்வே ஆல் அவுட் ஆனது. இதனால், 5 ரன்கள் வித்தியாசத்தில் அயர்லாந்து வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம், 4 போட்டிகளில், 3ல் வெற்றி பெற்று குட்டியணியான அயர்லாந்து அசத்தியுள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ireland-scores-331-runs-against-zimbabwe-222293.html

  • தொடங்கியவர்

சான் வில்லியம்சுக்கு பிடித்த சர்ச்சைக் கேட்ச்: ஜிம்பாப்வே ஏமாற்றம்
 

 

உலகக்கோப்பை போட்டியில் இன்று அயர்லாந்து வெற்றி பெற்றதற்குக் காரணம் மூனி, சான் வில்லியம்சுக்கு பிடித்த சர்ச்சைக்குரிய கேட்ச்தான் என்ற பேச்சு எழுந்துள்ளது.

ஜிம்பாப்வேயின் சான் வில்லியம்ஸ் உலகக்கோப்பை போட்டிகளில் மிகவும் சீராக ஆடி வருகிறார். அயர்லாந்துக்கு எதிரான இன்றைய போட்டியில் அவர் 83 பந்துகளில் 7 பவுண்டரிகள் 2 சிக்சர்களுடன் 96 ரன்களில் இருந்த போது சர்ச்சைக்குரிய முறையில் ஆட்டமிழந்தார்.

 

வில்லியம்ஸ் 96 ரன்களில் இருந்த போது ஜிம்பாப்வே வெற்றிக்குத் தேவை 20 பந்துகளில் 32 ரன்கள். 6 விக்கெட்டுகள் கையில் உள்ளது. அப்போது அயர்லாந்து ஆல்ரவுண்டர் கெவின் ஓ பிரையன் ஒரு ஷாட் பிட்சை வீச அதனை சான் வில்லியம்ஸ் தூக்கி மிடிவிக்கெட் மீது அடித்தார். பந்து சிக்சருக்கு சென்று கொண்டிருந்தது.

அப்போது எல்லைக்கோட்டுக்கு மிக அருகில் நின்று கொண்டிருந்த அயர்லாந்து பீல்டர் மூனி எம்பிப் பிடித்தார் கேட்சை, ஆனால் அவரது கால் எல்லைக்கோட்டை மிதித்தது போலவே தெரிந்தது. ஏனெனில் எல்லைக்கோடு அட்டையில் சிறு அசைவு தெரிந்தது. அது சிக்ஸ் என்று ஜிம்பாப்வே பயிற்சியாளர் டேவ் வாட்மோர் உள்ளிட்டோர் பெவிலியனிலிருந்து கதறினர்.

 

ரீப்ளே திரும்ப திரும்பப் பார்க்கப்பட்டது. அது அவுட்தானா என்று ஆராயப்பட்டது. ஆனால் எந்த ஒரு நிச்சயத்தன்மையும் இல்லாத நிலையில் வில்லியம்ஸ் அவுட் என்று தீர்ப்பளிக்கப்பட்டது. சான் வில்லியம்ஸ் மிகுந்த ஏமாற்றத்துடன் பெவிலியன் திரும்பினார்.

 

கண்டிப்பாக ஜிம்பாப்வே பயிற்சியாளர் டேவ் வாட்மோர் கடும் ஏமாற்றமடைந்திருப்பார், ஏனெனில் அவர் அங்கிருந்து சிக்ஸ் என்று கையை தூக்கினார். ஆனால், இந்த விவகாரத்தில் பீல்டரின் வார்த்தைக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது.

ஜிம்பாப்வே 5 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி தழுவியது. அந்த சிக்ஸ் கொடுக்கப்பட்டிருந்தால் வில்லியம்ஸ் சதம் அடித்திருப்பார், ஜிம்பாப்வே ஒரு வெற்றியைச் சாதித்திருந்தாலும் சாதித்திருக்கும்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4-%E0%AE%9A%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%87%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BF%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87-%E0%AE%8F%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%AE%E0%AF%8D/article6969566.ece

  • தொடங்கியவர்

ரெய்னாவின் ஷார்ட் பிட்ச் பந்து பிரச்சினையை ஊதிப்பெருக்க வேண்டாம்: தோனி
 

 

சுரேஷ் ரெய்னா ஷார்ட் பிட்ச் பந்துகளில் திணறுகிறார் என்ற விஷயம் ஊடகங்களால் ஊதிப்பெருக்கப்படுகிறது என்று கூறியுள்ளார் தோனி.

மே.இ.தீவுகளுக்கு எதிராக 22 ரன்களில் டிவைன் ஸ்மித் வீசிய சாதாரண ஷார்ட் பிட்ச் பந்தில் ரெய்னா கேட்ச் கொடுத்து வெளியேறிய விவகாரத்தை செய்தியாளர்கள் கேப்டன் தோனியிடம் எழுப்ப, அவர் கூறும்போது:

 

“ஊடகங்கள்தான் இதனை ஒரு பெரிய விஷயமாக ஊதிப் பெருக்குகின்றனர். மற்ற நாட்டு வீரர்கள் சிலரும் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு ஆட்டமிழக்கின்றனர். ஆனால் திரும்பத் திரும்ப இது எங்கள் தலையில் வந்து விடிகிறது- அதாவது ரெய்னாவுக்கு ஷார்ட் பிட்ச் பந்துகள் பலவீனம் அவருக்கு ஷார்ட் பிட்ச் வீசுங்கள் என்று தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. நான் நினைக்கிறேன் ரெய்னா நன்றாகவே பேட்டிங் செய்து வருகிறார் என்று...

 

இந்திய கிரிக்கெட் வரலாற்றை எடுத்துப் பாருங்கள் 5ஆம் நிலை வீரர்கள் எவ்வளவு பேர் சிறப்பாக ஆடியுள்ளார்கள் என்பதை சரிபாருங்கள். யுவராஜ் சிங் மட்டும்தான் சீராக நமக்கு அந்த நிலையில் ஆடிக் கொடுத்துள்ளார், பிறகு அவர் 4ஆம் நிலையில் களமிறக்கப்பட்டார். இல்லையெனில் அந்த நிலையில் மாற்றி மாற்றி வீரர்களைக் களமிறக்கிக் கொண்டிருந்தோம். அந்த நிலையில் விளையாடிய வீரர்களிடம் நீங்கள் கேட்டுப்பாருங்கள், விராட் ஆடியுள்ளார், ரோஹித் ஆடியுள்ளார், ஆனால் ஒருவரும் அந்த நிலையில் திருப்திகரமாக ஆடவில்லை.

 

ஆகவே, ரெய்னாதான் அந்த நிலையில் களமிறங்க சரியான தேர்வு, நாம் அவரை ஆதரிக்க வேண்டும். நாம் ரெய்னாவை ஆதரிக்கவில்லையெனில் அவருக்குப் பதிலாக புதிய வீரர் வருகிறார் என்று வைத்துக்கொள்வோம், அவர் தனக்காக ஆடத் தொடங்க முடிவெடுத்தால், வளர்த்தெடுக்க அது நல்ல பழக்கம் கிடையாது. இது நம் அணியில் நடக்கக் கூடாது என்பதில் நாங்கள் கவனமாக இருக்கிறோம்.

 

உதாரணமாக ஒருவர் 40-வது ஓவரில் பேட் செய்கிறார் என்றால், எவ்வளவு ரன்கள் அவர் எடுக்க முடியும்? 20 அல்லது 25 ரன்களில் அவுட் ஆக முடியும். உடனே 3-வது போட்டியின் முடிவில் நாம் என்ன கூறுவோம், ‘அவர் ரன்கள் எடுப்பதில்லை, அவர் ஃபார்மில் இல்லை, 20 ரன்களையே எடுக்கிறார்.’ என்று கூறுவோம்.

 

இங்குதான் எத்தனை பந்துகளில் ஒருவர் இந்த ரன்களை எடுக்கிறார் என்ற விஷயம் வருகிறது. நீங்கள் கூறும் விவகாரத்தை வலியுறுத்தினால், பேட்ஸ்மென் தன்னலத்துக்காக ஆடத் தொடங்குவார். நாம் எவ்வளவு ரன்கள் எடுக்க முடியுமோ அவ்வளவு ரன்களை குவிக்க வேண்டும், ஏனெனில் நவீன கிரிக்கெட் ஆட்டத்தில் எந்த ஒரு ஸ்கோரும் பாதுகாப்பான ஸ்கோர் கிடையாது.

எனவே 300 வரும் என்றால் அதை 305-ஆக உயர்த்தப் பாடுபடவேண்டும். இப்படியாக விஷயங்கள் உள்ளன...” என்றார் தோனி.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article6969682.ece

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B0%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B7%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%8A%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BE%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%A9%E0%AE%BF/article6969682.ece
 

  • தொடங்கியவர்

விஸ்வரூப இலங்கையை வீழ்த்துமா ஆவேச ஆஸ்திரேலியா..? சிட்னியில் நாளை பலப் பரிட்சை!

 

சிட்னி: மிகவும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஆஸ்திரேலியா-இலங்கை நடுவேயான போட்டி நாளை சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. குரூப் ஏ பிரிவில் 4 வெற்றிகளுடன் நியூசிலாந்து காலிறுதிக்கு முதலிலேயே தகுதி பெற்று, சீட்டில் துண்டு போட்டு வைத்துவிட்டது. மூன்று வெற்றிகளுடன் இலங்கை, கம்பீரமாக விஸ்வரூபம் எடுத்து எழுந்து நிற்கிறது. ஆஸ்திரேலியாவோ 2 வெற்றிகளுடன், அடுத்த வெற்றிக்காக குறிபார்த்து நிற்கிறது.எனவே இவ்விரு அணிகளும் மோதும் போட்டி மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தியுள்ளது

 

இலங்கை விஸ்வரூபம் இலங்கை தனது முதல் போட்டியில் நியூசிலாந்துடன் தோற்ற நிலையை பார்த்தால், அந்த அணி அவ்வளவுதான் என்றுதான் நினைத்திருப்பார்கள். ஆனால் இலங்கை தான் ஒரு முன்னாள் சாம்பியன் என்பதை நிரூபித்து, அடுத்தடுத்த 3 போட்டிகளிலும் வென்று அசத்தியுள்ளது.

 

அனாயாச வெற்றி இங்கிலாந்துக்கு எதிராக ஆடிய கடைசி போட்டி இலங்கையின் தன்னம்பிக்கைக்கு, பூஸ்ட், காம்ப்ளான், ஹார்லிக்ஸ் என அனைத்தையும் கொடுத்திருக்கும். ஏனெனில், 310 ரன்களை துரத்திச் சென்ற இலங்கை ஒரு விக்கெட்டை மட்டுமே இழந்து 47.2 ஓவர்களிலேயே வெற்றி பெற்று அசத்தியது.

 

பேட்ஸ்மேன்கள் இலங்கையின் தொடக்க வீரர் திரிமன்னே, குமார் சங்ககாரா ஆகியோர் சதம் அடித்து தங்களது ஃபார்மை நிரூபித்தனர். நடப்பு உலக கோப்பையின் ரன் குவிப்பில், டாப் 10 பேட்ஸ்மேன்களில், இவர்கள் இருவருமே உள்ளனர்.

 

தடுமாறிய ஆஸி. அதே நேரம், ஆஸ்திரேலியாவோ, நான்கில் இரு போட்டிகளில்தான் வென்றுள்ளது. நியூசிலாந்திடம் 1 விக்கெட் வித்தியாசத்தில் தோற்ற நிலையில், வங்கதேசத்துடனான ஆட்டம் மழையால் கைவிடப்பட்டது. ஆனால் ஆப்கனுக்கு எதிராக கடந்த போட்டியில் ஆஸி. பெற்ற 275 ரன்கள் வித்தியாச வெற்றி, நாங்கள் இன்னமும், புலிபோல சீறிக் கொண்டுதான் உள்ளோம் என்பதை புடம் போட்டு காட்டிவிட்டது.

 

சம பலம் எனவே சம பலம் வாய்ந்த இவ்விரு அணிகளும் மோதும் நாளைய போட்டி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நேரப்படி நாளை காலை 9 மணிக்கு சிட்னி கிரிக்கெட் கிரவுண்டில் தொடங்குகிறது. இந்த மைதானம், முழுக்க பேட்டிங்கிற்கு சாதகமானது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/preview-world-cup-match-32-australia-vs-sri-lanka-sydney-222290.html

  • தொடங்கியவர்

நியூசீலாந்து
v
ஆப்கானிஸ்தான்
(begins in 2h 13m)

ஆஸ்திரேலியா
v
ஸ்ரீலங்கா
(14:30 local | 03:30 GMT | 04:30 CET)

  • தொடங்கியவர்

30aqn14.png

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.