Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

ENG 103/2  after 22 overs

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

ENG 133/5 after 30 overs

  • தொடங்கியவர்

156/5 AFTER 34:2 OVERS

  • கருத்துக்கள உறவுகள்

169/6 after 37 overs

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்து.. :D

roland%20blowing%20the%20conch%200029.jp

:lol:

  • தொடங்கியவர்

இங்கிலாந்தின் உலகக் கோப்பைக் கனவு மீிண்டும் நாசமானது

 

'வங்கப் புலிகளின்' பந்து வீச்சுக்கு இரையாகி வெளியேய பரிதாபம்!

 


உலகக் கோப்பை போட்டியிலிருந்து துரத்தப்பட்டது இங்கிலாந்து

 


உலகக் கோப்பை கிரிக்கெட் காலிறுதிக்கு நேரடியாக தகுதி பெற்றது வங்கதேசம்

Read more at: http://tamil.oneindia.com/


15 ரன்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது வங்கதேசம்

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

வெள்ளைப் புலிகளை வேட்டையாடிய வங்க வேங்கைகள்-

 

இங்கிலாந்தை 15 ரன்னில் வீழ்த்தி காலிறுதியில் வங்கதேசம்

 

அடியெல்ட்: உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் இன்றைய பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது வங்கதேசம். இன்றைய போட்டியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதலில் விளையாடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ரன்களைக் குவித்தது.

 

 

பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியோ 48.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது. வெள்ளைப் புலிகளை வேட்டையாடிய வங்க வேங்கைகள்- இங்கிலாந்தை 15 ரன்னில் வீழ்த்தி காலிறுதியில் வங்கதேசம் உலக கோப்பை போட்டியின் 33வது லீக் ஆட்டத்தில் இன்று இங்கிலாந்தும், வங்கதேசமும் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது. வங்கதேசத்தின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பாலும் காயெஸும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே வங்கதேசத்தை அதிர்ச்சியடைய வைத்தது இங்கிலாந்து. முதல் ஓவரின் 4வது பந்தில் காயெஸ் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். 2 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார். இதேபோல் தமீம் இக்பால் 2.1வது ஓவரில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார்.

 

 

2.1 ஓவரில் 8 ரன்களே எடுக்கப்பட்ட நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேசம். இருப்பினும் பின்னர் வந்த சவும்ய சர்க்கார், மக்மதுல்லா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சவும்ய சர்க்கார் 52 பந்துகளில் 40 ரன்களை எடுத்து அவுட் ஆனார். ஷகிப் அல் ஹசன் 6 பந்துகளில் 2 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து மக்மதுல்லா- முஷ்பிகுர் ரஹிம் ஜோடி இணைந்து நிதானமான நின்று ரன்களைக் குவித்தனர். 131 பந்துகளில் சதத்தை எட்டினார் மக்மதுல்லா. இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த முதல் சதம். அத்துடன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்த முதலாவது வங்கதேச வீரர் என்ற சாதனையையும் படைத்தார்.

 

மொத்தம் 138 பந்துகளில் 103 ரன்களை எடுத்த நிலையில் மக்மதுல்லா அவுட் ஆனார். முஷ்பிகுர் ரஹிம் சதத்தை நோக்கி சென்ற நிலையில் 89 ரன்களில் அவுட் ஆனார். அவர் 77 ரன்களில் 89 ரன்களைக் குவித்தார். இவர்களுக்குப் பின்னர் சபீர் ரகுமான் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 12 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார். 50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்களைக் குவித்தது. இங்கிலாந்து அணி 276 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அதன் தொடக்க வீரர்களாக மொயின் அலி, பெல் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்கினர்.

 

7.2 ஓவரில் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 43 ஆக இருந்த போது மொயின் அலி ரன் அவுட் ஆனார். அவர் 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் பெல்லுடன் ஹேல்ஸ் கை கோர்த்தார். ஹேல்ஸ் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 34 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த கையோடு நடையைக் கட்டினார். அப்போது 19.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 97 ரன்களைக் குவித்திருந்தது. களத்தில் இருந்த பெல் 82 பந்துகளில் 63 ரன்களை குவித்து அவுட் ஆனார்.. ரூட் 47 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். 35.4 ஓவர்களில் இங்கிலாந்து 163 ரன்களை சேர்த்திருந்தது. பட்லர்-வோக்ஸ் ஜோடி நிலைத்து ஆடி ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தது.

 

பட்லர் அரை சதத்தைக் கடந்து 65 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே வந்த வேகத்தில் ஜோர்டான் அவுட் ஆனார். களத்தில் நின்றிருந்த வோக்ஸுடன் கை கோர்க்க கடைசி வரிசை வீரர்கள் தவறியதால் இங்கிலாந்து அணி பெரும் போராட்டத்துக்குள் தள்ளப்பட்டது. 45.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் என்ற நிலையில் இருந்தது இங்கிலாந்து. கடைசி வரிசை வீரர்களான ப்ராட், ஆண்டர்சன் ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டியதால் 48.3 ஓவரில் இங்கிலாந்து அணியால் 260 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு நுழைந்தது. இன்றைய போட்டியில் தோல்வி அடைந்ததால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தே இங்கிலாந்து வெளியேறும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/england-wins-toss-bowls-against-bangladesh-world-cup-222374.html

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலிய மண்ணில் அசத்தி வரும் "சிங்கம் புலிகள்"!

 

சென்னை: ஆஸ்திரேலிய பிட்சுகள் குறித் பில்டப்புகளை தாக்கித் தகர்த்து உலகக் கோப்பை தொடரில் நான்கு ஆசிய அணிகளும் அசத்தியிருப்பது அனைவரையும் அதிசயிக்க வைத்துள்ளது. அதிலும் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகியவை காலிறுதிக்குள் நுழைந்து விட்டன. பாகிஸ்தானும் நுழைவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. அந்த வகையில் நான்கு ஆசிய அணிகளும் கிரிக்கெட் நிபுணர்களை மிரள வைத்து விட்டன என்றே சொல்ல வேண்டும்.

 

ஆஸ்திரேலிய மண்ணில் அசத்தி வரும் ஆஸ்திரேலியாவில் பிட்ச்சுகள் பயங்கரமாக இருக்கும், பவுன்ஸ் அதிகமாக இருக்கும், பேட் செய்வது கஷ்டம், வெறும் சுழற்பந்தை வைத்து ஒன்றும் செய்ய முடியாது. தரமான வேகப் பந்து வீச்சாளர்கள் இல்லாத ஆசிய அணிகள் சிரமப்படும் என்றெல்லாம் கூறப்பட்டது. ஆனால் இன்று அத்தனையையும் தகர்த்து கம்பீரமாக நிற்கின்றன இந்த நான்கு அணிகளும். அதிலும் இந்திய அணி ஆரம்பத்திலிருந்தே பிரமிக்க வைத்து வருகிறது. பேட்டிங்கிலும் சரி, பவுலிங்கிலும் சரி இந்திய வீரர்கள் கலக்கி விட்டனர்.

 

அதேபோலத்தான் இலங்கையும். அந்த அணியின் ஸ்டார் வீரர் சங்கக்கரா தலைமையில் அவர்களது பேட்டிங் எதிரணிகளை மிரட்டி வருகிறது. குட்டி அணியாக கூறப்படும் வங்கதேசமும் பின்னிப் பெடலெடுத்து வருகிறது. கிடைத்த வாய்ப்புகளை சரியாக பயன்படுத்தி மிரட்டல் வெற்றிகளைப் பெற்று வந்த அந்த அணி இன்று இங்கிலாந்தை ஓட ஓட விரட்டி உலகக் கோப்பைத் தொடரிலிருந்தே துரத்தியடித்து அனைவரையும் அதிர வைத்துள்ளது. தற்போதைய நிலையில் இந்தியா, இலங்கை, வங்கதேசம் ஆகியவை காலிறுதிக்குள் நுழைந்து விட்டன. பாகி்ஸ்தானும் நுழைவதற்கு வாய்ப்புகள் பிரகாசமாக உள்ளன.

 

இதே ஆஸ்திரேலியாவில்தான் இந்தியா உலகக் கோப்பைத் தொடருக்கு முன்புதான் டெஸ்ட் தொடர் மற்றும் முத்தரப்புத் தொடரில் இந்தியா ஆடி படு தோல்வியைச் சந்தித்திருந்தது. அதேபோல நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் செய்த இலங்கை தோல்வியைச் சந்தித்திருந்தது. ஆனால் இந்த இரு அணிகளும் தற்போது உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் ஆடி வரும் விதம் அவர்களின் திறன் குறித்துப் பேசியவர்களின் வாயை அடைப்பது போல உள்ளது.

 

இதை விட முக்கியமானது வங்கதேசத்தின் எழுச்சிதான். சின்ன அணியோ, பெரிய அணியோ பயப்படாமல் தைரியமாக எதிர்கொண்டு துவம்சம் செய்த அதன் ஆட்டத்திறன் பிரமிக்கவைத்துள்து. மொத்தத்தில் ஆஸ்திரேலிய மைதானங்களில் இந்த ஆசிய சிங்கங்களும், புலிகளும் களத்தில் கலக்கி வருவதை ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற பெரிய அணிகள் பெரும் கவலையுடன் பார்த்துக் கொண்டுள்ளன என்றுதான் சொல்ல வேண்டும்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/asian-giants-rock-icc-world-cup-222437.html

  • தொடங்கியவர்

பலாத்கார வழக்கில் ஜாமீனில் வந்து, வங்கதேசத்தை காலிறுதிக்கு அழைத்துச் சென்ற கிரிக்கெட் வீரர்!

103s7bl.jpg

அடிலெய்டு: பலாத்கார குற்றத்திற்காக சிறையில் அடைக்கப்பட்டு, ஜாமீனில் வெளியே வந்த வங்கதேச பவுலர் ருபேல் ஹொசைன், இங்கிலாந்தின் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தி, அசத்தினார். உலக கோப்பை ஏ பிரிவின், முக்கியமான இன்றைய லீக் ஆட்டத்தில் இங்கிலாந்தை விரட்டியடித்து, காலிறுதிக்கு தகுதி பெற்றது வங்கதேசம். பட்லரின் அதிரடியால், ஒரு கட்டத்தில், இங்கிலாந்து வெற்றி பெறும் சூழல் உருவானது. பலாத்கார வழக்கில் ஜாமீனில் வந்து, வங்கதேசத்தை காலிறுதிக்கு அழைத்துச் சென்ற கிரிக்கெட் வீரர்! ஆனால் அந்த விக்கெட் வீழ்ந்த பிறகும், வோக்ஸ், வங்கதேசத்துக்கு அச்சுறுத்தலாக விளங்கினார்.

 

அவருக்கு ஸ்டூவர்ட் பிராட் கம்பெனி கொடுத்து, வெற்றியின் அருகே இங்கிலாந்தை அழைத்துச் சென்றார். அந்த நேரத்தில்தான், 49வது ஓவரை வீச வந்தார், ருபேல் ஹொசைன். அந்த ஓவரின் முதல் பந்திலேயே ஸ்டூவர்ட் பிராடை கிளீன் பௌல்ட் ஆக்கி வெளியேற்றினார் ருபல். கடைசி விக்கெட்டாக களமிறங்கினார் ஆன்டர்சன். ஓவரின் 2வது பந்தில் ரன் ஏதும் எடுக்கப்படவில்லை. அரங்கமெங்கும் டென்ஷன். ஓவரின் 3வது பந்தில் ஆன்டர்சனை கிளீன் பௌல்ட் ஆக்கினார் ருபேல். அவ்வளவுதான், இங்கிலாந்தின் ஆட்டம் குளோஸ். கடைசி இரு விக்கெட்டுகளும், ஏனோ..தானோ பந்து வீச்சில் விழவில்லை.

 

மிகவும் லாவகமாக ஸ்விங் செய்யப்பட்ட பந்துகள் அவை. இத்தனைக்கும், அதற்கு முந்தைய ஓவரில்தான் ஸ்டூவர் பிராட் சிக்சர் பறக்கவிட்டிருந்தார். இந்நிலையில்தான், டென்ஷன் ஆகாமல், விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் ருபேல் ஹொசைன். முன்னதாக, பெல் மற்றும், இங்கிலாந்து கேப்டன் மோர்கன் ஆகிய முக்கிய வீரர்களின் விக்கெட்டையும் ருபேல் வீழ்த்தி, 4 விக்கெட்டுகளை தனது சட்டைப் பைக்குள் போட்டுக் கொண்டார். ஆனால் ருபேல் ஹொசைன், பாலியல் பலாத்கார வழக்கில் ஜாமீன் பெற்று வந்து இவ்வளவு கூலாக விளையாடினார் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. 19 வயதான, வங்கதேச சினிமா நடிகையான நஸ்னின் அக்தர் ஹேப்பிக்கும், ருபேல் ஹொசைனுக்கும் இடையே காதல் இருந்துவந்ததாக கூறப்படுகிறது.

 

இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், நஸ்னின், புகார் ஒன்றை காவல் நிலையத்தில் அளித்தார். அந்த புகாரில், ருபேல் தன்னை காதலித்து வந்ததாகவும், திருமணம் செய்வதாக வாக்குறுதி அளித்ததால், இருவரும் கணவன்-மனைவி போல வாழ்ந்ததாகவும், ஆனால் திடீரென ருபேல் திருமணம் செய்ய மறுப்பு தெரிவிப்பதாகவும் கூறப்பட்டிருந்தது. உலக கோப்பைக்கான ஆயத்த பயிற்சிகளில் ருபேல் ஈடுபட்டிருந்தார்.

 

இந்நிலையில், அவரை கைது செய்ய கடந்த ஜனவரி 8ம்தேதி டாக்கா நகர குற்றவியல் நீதிமன்றம் உத்தரவிட்டது. அடுத்த விசாரணை வரும்வரை அவர் சிறையில்தான் இருக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டது கோர்ட். இதையடுத்து ருபேல் போலீசில் சரணடைந்தார். சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில் ஜனவரி 11ம்தேதி கோர்ட் அவரை ஜாமீனில் வெளியே விட்டது. ஜாமீனில் வெளியே வந்த ருபேல் ஆஸ்திரேலியாவுக்கும் பயணப்பட்டு வந்தார். வங்கதேசத்துக்காக உலக கோப்பை போட்டிகளில் களமிறங்கி ஆடியும் வருகிறார்.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/bangladesh-cricketer-rubel-hossain-become-star-222436.html

  • தொடங்கியவர்

நாளை இந்திய விக்கெட்டுகளை லட்டு லட்டா எடுப்போம்ல: அயர்லாந்து கேப்டன்

 

ஹாமில்டன்: நாளைய போட்டியில் இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்துவதில் தான் அதிக கவனம் செலுத்தப் போவதாக அயர்லாந்து அணி கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு தெரிவித்துள்ளார். உலகக் கோப்பை போட்டிகளில் இந்தியா, அயர்லாந்து அணிகள் மோதும் ஆட்டம் நியூசிலாந்தின் ஹாமில்டன் நகரில் நாளை நடைபெற உள்ளது. உலகக் கோப்பை போட்டிகளில் ஆடிய 4 ஆட்டங்களில் 3ல் வெற்றி பெற்றுள்ளது அயர்லாந்து. அதே சமயம் இந்தியா தான் ஆடிய 4 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இந்நிலையில் நாளைய போட்டி பற்றி அயர்லாந்து அணியின் கேப்டன் வில்லியம் போர்டர்பீல்டு கூறுகையில்,

 

போட்டி நாளைய போட்டி பிற போட்டிகளை போன்றது தான். நாளைய போட்டி ஒன்றும் வித்தியாசமானது கிடையாது.

பயிற்சி ஒவ்வொரு போட்டியையும் சிறப்பான முறையில் அணுகி வருகிறோம். தற்போது நாங்கள் நல்ல நிலைமையில் உள்ளோம்.

 

வெற்றி நாளைய போட்டியில் வெற்றி பெற முயற்சி செய்வோம். உலகக் கோப்பை தொடரில் நாளையுடன் 5ல் 4 போட்டிகளில் வெற்ற பெற நினைக்கிறோம்.

விக்கெட் விக்கெட் எடுப்பதன் மூலம் தான் எதிர் அணியை கட்டுப்படுத்த முடியும். அதனால் விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்ற நினைப்புடன் தான் 50 ஓவர்களிலும் விளையாட உள்ளோம்.

முதல் 10 பேட்டிங்கோ, பவுலிங்கோ முதல் 10 ஓவர்கள் தான் மிகவும் முக்கியம். அதனால் ஆட்டத்தை சிறப்பாக துவங்க உள்ளோம் என்றார் போர்டர்பீல்டு.

 

 Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ireland-unfazed-india-s-presence-222429.html

  • தொடங்கியவர்

1992 உலக கோப்பைக்கு பிறகு இதுவரை எழுந்திருக்காத இங்கிலாந்து கிரிக்கெட் அணி!

 

அடிலெய்டு: கிரிக்கெட்டை கண்டு பிடித்த நாடு,.. 3 முறை இறுதி போட்டிக்கு தகுதி பெற்ற நாடு என்ற பெருமைகள் கொண்ட இங்கிலாந்து இதுவரை உலக கோப்பையை ஒருமுறை கூட முத்தமிட்டது கிடையாது. குறிப்பாக, 1992 உலக கோப்பைக்கு பிறகு அந்த அணி கீழ் நோக்கி பயணித்து, இப்போது காலி பெருங்காய டப்பாவாக காட்சியளிக்கிறது. 1975ம் ஆண்டு முதல் முறையாக உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடத்தப்பட்டன. அப்போட்டியில், அரையிறுதி வரை முன்னேறிய இங்கிலாந்து, 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில், ஆஸ்திரேலியாவிடம் தோற்றது.

 

பைலனுக்குள் இங்கிலாந்து 1979ம் ஆண்டு 2வது உலக கோப்பையில் இங்கிலாந்து-நியூசிலாந்து அணிகள் அரையிறுதியில் மோதின. இங்கிலாந்து 9 ரன்னில் வெற்றி பெற்று முதல்முறையாக பைனலுக்குள் சென்றது. இறுதி போட்டியில் வெஸ்ட்இண்டீஸ் 92 ரன் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வென்று மீண்டும் சாம்பியன் பட்டம் பெற்றது.

இந்தியாவிடம் தோல்வி 1983ம் ஆண்டு அரை இறுதியில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தியது. வெஸ்ட் இண்டீஸ் அணி பாகிஸ்தானை தோற்கடித்தது. இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் பைனலில் மோதின. அதில் இந்தியா வெற்றி பெற்று கோப்பையை முத்தமிட்டது.

 

2வது முறை பைனல் 1987ல், 4வது உலக கோப்பை போட்டி முதல் முறையாக இங்கிலாந்துக்கு வெளியே நடந்தது. இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, பாகிஸ்தான் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன. அரை இறுதியில் இந்தியா 35 ரன்னில் இங்கிலாந்திடம் தோற்றது. எனவே, இங்கிலாந்து 2வது முறையாக, பைனலுக்குள் சென்றது. பைனலில்ஸ ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் மோதின. முதலில் ஆடிய ஆஸ்திரேலியா 5 விக்கெட் இழப்புக்கு 253 ரன் எடுத்தது. இங்கிலாந்து அணி 8 விக்கெட் இழப்புக்கு 246 ரன்தான் எடுத்தது. இதனால் ஆலன் பார்டர் தலைமையிலான ஆஸ்திரேலியா 7 ரன்னில் வென்று முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது.

 

3வது முறையாக பைனல் 1992ல் இங்கிலாந்து-பாகிஸ்தான் அணிகள் இறுதிப்போட்டியில் மோதின. முதலில் ஆடிய பாகிஸ்தான் 249 ரன் எடுத்தது. இங்கிலாந்து 227 ரன்னில் ‘ஆல் அவுட்' ஆனது. இதனால் இம்ரான்கான் தலைமையிலான பாகிஸ்தான் 22 ரன்னில் வென்று முதல் முறையாக உலக கோப்பையை கைப்பற்றியது. 3 முறை பைனலுக்கு சென்றும், கோப்பையை வெல்ல முடியாத அணி என்ற மோசமான சாதனை இங்கிலாந்துக்கு கிடைத்தது.

 

சொதப்பல் ஆரம்பம் ஆனால் 1992க்கு பிறகு இங்கிலாந்து பிற அணிகளுக்கு பெரும் சவாலாக இருக்கவில்லை என்பது புள்ளி விவரத்தை பார்த்தால் தெரியும். 1996 உலக கோப்பையின் லீக் சுற்றில், பாகிஸ்தான், தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து ஆகிய பெரிய அணிகளிடம் இங்கிலாந்து தோற்றது. இருப்பினும், காலிறுதியில், இலங்கையிடம் தோற்று வெளியேறியது.

 

சொந்த மண்ணிலும் சொதப்பல் 1999ல் இங்கிலாந்தில் மீண்டும் கிரிக்கெட் போட்டி நடந்தது. ஆனால் சொந்த மண்ணில்கூட 2வது ரவுண்டுக்கு தகுதி பெற முடியவில்லை இங்கிலாந்தால்.

குட்டி அணிகளிடம் கெத்து 2003ல், முதல் ரவுண்டுக்கு பிறகு வெளியேற்றப்பட்டது இங்கிலாந்து. பாகிஸ்தானுடன் மட்டுமே அப்போது நல்லபடியாக வெற்றி பெற்றது இங்கிலாந்து. மற்ற வெற்றிகள் குட்டி அணிகளுடன் மட்டுமே.

 

அரையிறுதி இல்லை 2007ல், வெஸ்ட் இண்டீசில் நடந்த உலக கோப்பையில், கென்யா, கனடா, அயர்லாந்து போன்ற குட்டி அணிகளையும், இலங்கையையும் வீழ்த்தியது இங்கிலாந்து. ஆனாலும், அரையிறுதிக்குள் நுழைய முடியவில்லை.

காலிறுதியில் கடும் அடி 2011ல் தென் ஆப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீசுடன் சிறிய வித்தியாசத்தில் இங்கிலாந்து வெற்றி பெற்றது. இந்தியாவுடனான போட்டி டிராவில் முடிவடைந்தது. ஆனால் காலிறுதியில், 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இலங்கையால் துவம்சம் செய்து வெளியேற்றப்பட்டது.

 

இது மகா மோசம் இதோ, இப்போது 2015 உலக கோப்பையில், காலிறுதிக்கு போககூட தகுதி பெற முடியாமல் குட்டி அணியான வங்கதேசத்துடன் உதைபட்டு வெளியேறியுள்ளது, ஜென்டில்மேன் கேமை கண்டுபிடித்த இங்கிலாந்து.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/wc-2015-since-1992-final-england-have-only-gone-downhill-wc-cricket-222438.html

  • கருத்துக்கள உறவுகள்

போர்டர் பீல்  என்னை பீல் பண்ண வைத்திடுவாரோ...! ஏற்கனவே பொயின்ட்ஸ் எல்லாம் நாறிப் போய்க்  கிடக்கு , இதில இவர் வேற...! :)

  • தொடங்கியவர்

கோஹ்லியெல்லாம் ச்சும்மா.. சங்கக்கராதான் அதுக்கும் மேல... உசுப்பேற்றும் முரளிதரன்!

 

சிட்னி: விராட் கோஹ்லியைவிட, இலங்கையின் சங்ககாராவை பார்த்துதான் எதிரணிகள் பயப்படுவதாக, அந்த நாட்டின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான், முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார். டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல்லைவிடவும், சங்ககாராதான் ஆபத்தான பேட்ஸ்மேன் என்றும் அவர் வர்ணித்துள்ளார். உலக கோப்பையில், இலங்கை விக்கெட் கீப்பர்-பேட்ஸ்மேன் சங்ககாரா, அடுத்தடுத்து 3 போட்டிகளில் சதம் அடித்துள்ளார்.

 

சங்ககாரா சாதனை இதன் மூலம், உலக கோப்பை வரலாற்றில் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை சங்ககாரா பெற்றுள்ளார்.

ஆஸி.க்கு எதிராக சதம் நேற்று இலங்கைக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா, 376 ரன்களை குவித்தது. இருப்பினும், அசராது பின்தொடர்ந்த இலங்கை 312 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இருப்பினும் சங்ககாரா 104 ரன்கள் எடுத்து அசத்தினார். அவர் களத்தில் நிற்கும்வரை இலங்கைக்கு வெற்றி கிடைக்க வாய்ப்பு இருப்பதாகவே தோன்றியது.

 

அந்த அப்ரோச் பிடிச்சிருக்கு இதுகுறித்து முத்தையா முரளிதரன், கூறியதாவது: ஆஸ்திரேலியாவுடன், இலங்கை தோற்றிருந்தாலும், அதன் பாசிட்டிவ் எண்ணம் கவர்வதாக உள்ளது. பவுலர்கள் அதிக ரன்கள் வாரிக் கொடுத்திருந்தாலும், இலங்கை பேட்ஸ்மேன்கள் தக்க பதிலடி கொடுத்தனர். 40வது ஓவர்கள் வரை, ஆஸ்திரேலியாவை அச்சுறுத்தியபடிதான் இருந்தது இலங்கை.

 

இலங்கை அபார ஆட்டம் 64 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி என்று வெறுமனே கூறினால், இலங்கை பேட்டிங்கின் முக்கியத்துவம் அடிபடுகிறது. ஆனால் போட்டியை பார்த்தவர்களுக்குதான், இலங்கையின் சிறப்பான ஆட்டம் பற்றி தெரியும்.

கோஹ்லியைவிட சங்ககாரா பெஸ்ட் குமார் சங்ககாராதான் தற்போது, உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன். நீங்கள், விராட் கோஹ்லி, டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் பற்றி என்னதான் பெருமையாக பேசினாலும், தற்போதைய டாப் பேட்ஸ்மேன் சங்ககாராதான். மற்ற வீரர்கள் சிறப்பாக விளையாடியிருந்தாலும், ஒரு வீரரை பார்த்து பிற அணிகள் அச்சப்படுகின்றன என்றால், அது சங்ககாராவை பார்த்துதான்.

 

முச்சதம் உலக கோப்பையில் தொடர்ந்து மூன்று சதங்களை அடிப்பது சாதாரண விஷயம் கிடையாது. அதிலும், பந்துக்கு ஏற்ப ரன் சேர்ப்பது மிகவும் சிரமம். அதை சங்ககாரா சாதித்து காண்பித்துள்ளார்.

அனைத்துவகை ஷாட்டுகளிலும் கில்லாடி சங்ககாரா இந்த உலக கோப்பை போட்டியுடன், ஓய்வு பெறும் முடிவில் இருப்பதால், தனது முழுத் திறனையும் வெளிக் காண்பித்து விளையாடி வருகிறார். ஃபிரண்ட் புட், பேக் புட் என அனைத்து வகை ஷாட்டுகளிலும் அவர் கலக்குகிறார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/rivals-fear-sangakkara-more-than-kohli-de-villiers-at-wc-muralitharan-222408.html

  • தொடங்கியவர்

கோலியைவிட சங்கக்காரவிற்கே எதிரணியினர் பயம் : முரளி
 

 

இந்திய அணியின் விராட் கோலியைவிட இலங்கையின் குமார் சங்ககாரவை பார்த்துதான் எதிரணிகள் பயப்படுவதாக இலங்கை அணியின் முன்னாள் சுழற்பந்து ஜாம்பவான் முத்தையா முரளிதரன் தெரிவித்துள்ளார்.


இது தொடர்பில் முத்தையா முரளிதரன் மேலும் தெரிவிக்கையில்,

தென்னாபிரிக்காவின் டி வில்லியர்ஸ், அவுஸ்திரேலியாவின் மேக்ஸ்வெல்லைவிடவும் குமார் சங்கக்காரதான் ஆபத்தான துடுப்பாட்ட வீரர்.

அவுஸ்திரேலிய அணியுடன்  இலங்கை தோல்வியடைந்திருந்தாலும் அதன்  ஆட்டத்திறன் சிறப்பாக இருந்தது.
இலங்கை அணியின் பந்து வீச்சாளர்கள் அதிக ஓட்டங்களை வாரிக் கொடுத்திருந்தாலும், துடுப்பாட்ட வீரர்கள் தக்க பதிலடி கொடுத்தனர்.
40 ஆவது ஓவர்கள் வரை, அவுஸ்திரேலிய அணியை அச்சுறுத்தியபடியே இலங்கை அணி இருந்தது.

குமார் சங்ககாராதான் தற்போது, உலகின் நம்பர் 1 பேட்ஸ்மேன். விராட் கோலி, டி வில்லியர்ஸ், மேக்ஸ்வெல் பற்றி என்னதான் பெருமையாக பேசினாலும், தற்போதைய டொப் பேட்ஸ்மேன் சங்ககாராதான்.
ஏனைய வீரர்கள் சிறப்பாக விளையாடியிருந்தாலும், ஒரு வீரரை பார்த்து பிற அணிகள் அச்சப்படுகின்றன என்றால், அது சங்ககாராவை பார்த்துதான் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உலகக் கிண்ண போட்டியில் சங்கக்கார அடுத்தடுத்து 3 போட்டிகளில் சதம் அடித்துள்ளார். இதன் மூலம், உலகக் கிண்ண வரலாற்றில் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை சங்ககாரா பெற்றுள்ளார்.

உலகக் கிண்ண போட்டியில் தொடர்ந்து மூன்று சதங்களை அடிப்பது சாதாரண விடயம் கிடையாது. அதிலும், பந்துக்கு ஏற்ப ஓட்டங்களை சேர்ப்பது மிகவும் சிரமம். அதை சங்ககாரா சாதித்து காண்பித்துள்ளார்.

 

http://www.virakesari.lk/articles/2015/03/09/%E0%AE%95%E0%AF%8B%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F-%E0%AE%9A%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%95%E0%AF%87-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%B0%E0%AE%B3%E0%AE%BF

  • தொடங்கியவர்

இந்தியா
v
அயர்லாந்து
(14:00 local | 01:00 GMT | 02:00 CET)


15ao0n.jpg

  • தொடங்கியவர்

இந்திய அணியின் சொத்து மொகமது ஷமி: ஆகிப் ஜாவேத் புகழாரம்
 

 

இந்திய அணியின் சொத்து மொகமது ஷமி என்று பாக். முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் ஜாவேத் புகழாரம் சூட்டியுள்ளார்.

பாகிஸ்தான் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் ஜாவேத், இந்த உலகக்கோப்பையில் சிறப்பாக வீசி வரும் வேகப்பந்து வீச்சாளர்களில் மொகமது ஷமி அபாரம் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

 

ஆகிப் ஜாவேத் தற்போது யு.ஏ.இ. அணியின் பயிற்சியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

உலகக்கோப்பை போட்டிகளில் இதுவரை 9 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளார் மொகமது ஷமி. 2011-இல் ஜாகீர் கான் செய்த பங்களிப்பு எப்படி முக்கியத்துவம் வாய்ந்ததோ அதே போல் இந்த உலகக்கோப்பையில் ஷமி.

 

இது குறித்து ஆகிப் ஜாவேத் கூறும்போது, “இந்திய பவுலர்களில் என்னைப் பொறுத்தவரை மொகமது ஷமி சிறப்பாக வீசி வருகிறார். ஒரு வேகப்பந்து வீச்சாளருக்கான உட்பொருள் அனைத்தும் அவரிடம் உள்ளது. இந்திய அணியின் சொத்து மொகமது ஷமி.

மோஹித் சர்மாவின் பந்துவீச்சும் என்னைப் பெரிதும் கவர்ந்தது, எதிர்காலத்தில் இவரும் இந்திய அணியின் பந்துவீச்சு ஆயுதமாகத் திகழ்வார்.

ஆனால், மொகமது ஷமி ஏன் சிறந்தவர் எனில் அவர் நல்ல வேகத்துடன் வீசுகிறார். மேலும் அவர் சீராக வீசும் லெந்த். இரண்டும் அபாரம். பாகிஸ்தானுக்கு எதிராக ஷமியின் பந்துவீச்சு அபாரம்.

 

ஆஸ்திரேலியா பிட்ச்களில்தான் வேகப்பந்து வீச்சாளர் முதுகை வளைத்து பந்தின் தையலை நன்றாக தரையில் அடிக்க வேண்டிய தேவை உள்ளது. ஷமி இதனை சரியாகச் செய்கிறார். ஷமி இப்படியே வீசினால் நாக் அவுட் சுற்றுகளில் இந்தியாவை வெற்றி கொள்வது மிகக் கடினம்.

மோஹித் சர்மா, சிறந்த பேட்ஸ்மென்களை அதிர்ச்சியடையச் செய்யும் ஒரு விதமான பந்துவீச்சை தன் கைவசம் வைத்துள்ளார்.

 

தொலைவிலிருந்து பார்க்கும் போது அவர் அவ்வளவு வேகம் வீசுவது போல் தெரியவில்லை. ஆனால் கவனமாக இவரது பந்துவீச்சை ஆராய்ந்து பார்த்தால் திடீரென அவர் 5 கிமீ வேகம் கூட்டிவிடுகிறார். அதாவது 132-135 கிமீ வேகம் வீசிக் கொண்டிருப்பவர், திடீரென ஒரு பந்தை 140-இல் வீசுவது போல் அவர் வேகம் கூட்டுகிறார். இது சிறந்த பேட்ஸ்மென்களையும் சில சமயங்களில் நிலைகுலையச் செய்யும்.” இவ்வாறு கூறினார் ஆகிப் ஜாவேத்.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AF%8A%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%8A%E0%AE%95%E0%AE%AE%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B7%E0%AE%AE%E0%AE%BF-%E0%AE%86%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%9C%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%81%E0%AE%95%E0%AE%B4%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%AE%E0%AF%8D/article6974746.ece

 

  • தொடங்கியவர்

டினேஷ் சந்திமால் சிலவேளை 3 கிழமைக்கு விளையாட முடியாது

 

http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/content/story/846257.html

  • கருத்துக்கள உறவுகள்

IRE 259 all out 49 overs

  • கருத்துக்கள உறவுகள்

இங்கிலாந்தை வீழ்த்தி காலிறுதிக்குள் நுழைந்தது வங்கதேசம்
 
 
WC-Bangladesh%20captain%28C%29.jpg?itok=

அடியெல்ட் - உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் நேற்றைய பரபரப்பான ஆட்டத்தில் இங்கிலாந்து அணியை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி கால் இறுதிக்குள் நுழைந்தது வங்கதேசம். நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததைத் தொடர்ந்து உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இருந்து இங்கிலாந்து அணி வெளியேறவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. முதலில் விளையாடிய வங்கதேச அணி 50 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 275 ரன்களைக் குவித்தது. பின்னர் ஆடிய இங்கிலாந்து அணியோ 48.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 260 ரன்களை மட்டுமே எடுத்து தோல்வியைத் தழுவியது.

உலக கோப்பை போட்டியின் 33வது லீக் ஆட்டத்தில் நேற்று இங்கிலாந்தும், வங்கதேசமும் மோதின. இதில் டாஸ் வென்ற இங்கிலாந்து பீல்டிங்கை தேர்வு செய்தது.வங்கதேசத்தின் தொடக்க வீரர்களாக தமீம் இக்பாலும் காயெஸும் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே வங்கதேசத்தை அதிர்ச்சியடைய வைத்தது இங்கிலாந்து.முதல் ஓவரின் 4வது பந்தில் காயெஸ் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். 2 பந்துகளில் 2 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார். இதேபோல் தமீம் இக்பால் 2.1வது ஓவரில் கேட்ச் கொடுத்து நடையைக் கட்டினார். 2.1 ஓவரில் 8 ரன்களே எடுக்கப்பட்ட நிலையில் 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது வங்கதேசம்.

இருப்பினும் பின்னர் வந்த சவும்ய சர்க்கார், மக்மதுல்லா ஆகியோர் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். சவும்ய சர்க்கார் 52 பந்துகளில் 40 ரன்களை எடுத்து அவுட் ஆனார். ஷகிப் அல் ஹசன் 6 பந்துகளில் 2 ரன்களை எடுத்து அவுட் ஆனார். இதனைத் தொடர்ந்து மக்மதுல்லா- முஷ்பிகுர் ரஹிம் ஜோடி இணைந்து நிதானமான நின்று ரன்களைக் குவித்தனர். 131 பந்துகளில் சதத்தை எட்டினார் மக்மதுல்லா. இது ஒருநாள் போட்டிகளில் அவர் அடித்த முதல் சதம். அத்துடன் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியில் சதமடித்த முதலாவது வங்கதேச வீரர் என்ற சாதனையையும் படைத்தார். மொத்தம் 138 பந்துகளில் 103 ரன்களை எடுத்த நிலையில் மக்மதுல்லா அவுட் ஆனார்.  

 

முஷ்பிகுர் ரஹிம் சதத்தை நோக்கி சென்ற நிலையில் 89 ரன்களில் அவுட் ஆனார். அவர் 77 பந்துகளில் 89 ரன்களைக் குவித்தார். இவர்களுக்குப் பின்னர் சபீர் ரகுமான் வேகமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 12 பந்துகளில் 14 ரன்கள் எடுத்த நிலையில் அவர் அவுட் ஆனார். 50 ஓவர்கள் முடிவில் வங்கதேசம் அணி 7 விக்கெட்டுகளை இழந்து 275 ரன்களைக் குவித்தது.

இங்கிலாந்து அணி 276 ரன்களை எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கியது. அதன் தொடக்க வீரர்களாக மொயின் அலி, பெல் ஆகியோர் களமிறங்கினர். இருவரும் தொடக்கத்தில் அதிரடியாக ரன்களை குவிக்கத் தொடங்கினர்.7.2 ஓவரில் இங்கிலாந்து அணியின் ஸ்கோர் 43 ஆக இருந்த போது மொயின் அலி ரன் அவுட் ஆனார். அவர் 21 பந்துகளில் 19 ரன்கள் எடுத்திருந்தார். அதன் பின்னர் பெல்லுடன் ஹேல்ஸ் கை கோர்த்தார். ஹேல்ஸ் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 34 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த கையோடு நடையைக் கட்டினார்.

 

அப்போது 19.5 ஓவர்களில் இங்கிலாந்து அணி 97 ரன்களைக் குவித்திருந்தது.களத்தில் இருந்த பெல் 82 பந்துகளில் 63 ரன்களை குவித்து அவுட் ஆனார்.. ரூட் 47 பந்துகளில் 29 ரன்கள் எடுத்திருந்தார். 35.4 ஓவர்களில் இங்கிலாந்து 163 ரன்களை சேர்த்திருந்தது. பட்லர்-வோக்ஸ் ஜோடி நிலைத்து ஆடி ரன்களைக் குவித்துக் கொண்டிருந்தது. பட்லர் அரை சதத்தைக் கடந்து 65 ரன்கள் எடுத்து அவுட் ஆனார். அடுத்த பந்திலேயே வந்த வேகத்தில் ஜோர்டான் அவுட் ஆனார். 

களத்தில் நின்றிருந்த வோக்ஸுடன் கை கோர்க்க கடைசி வரிசை வீரர்கள் தவறியதால் இங்கிலாந்து அணி பெரும் போராட்டத்துக்குள் தள்ளப்பட்டது.

45.5 ஓவரில் 8 விக்கெட் இழப்புக்கு 238 ரன்கள் என்ற நிலையில் இருந்தது இங்கிலாந்து. கடைசி வரிசை வீரர்களான ப்ராட், ஆண்டர்சன் ஆகியோர் வந்த வேகத்தில் நடையைக் கட்டியதால் 48.3 ஓவரில் இங்கிலாந்து அணியால் 260 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது. இதனால் 15 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசம் அபார வெற்றி பெற்று காலிறுதிப் போட்டிக்கு நுழைந்தது. நேற்றைய போட்டியில் தோல்வி அடைந்ததால் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இருந்தே இங்கிலாந்து வெளியேறும் பரிதாப நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது .

http://www.thinaboomi.com/2015/03/09/43276.html

 

  • கருத்துக்கள உறவுகள்
Cricket World Cup 2015: Mohammed Shami's Performances Earn Praise From Sir Richard Hadlee
Sir Richard Hadlee said that Mohammed Shami was a good example of how the Indian attack has become an effective unit in the World  Cup.
 
 
md.jpg
 
Shami bagged three wickets to skittle out Windies for 182. © AFP
 

Hamilton: India's pace spearhead Mohammed Shami on Monday received the biggest compliment in his two-year international career. One of the greatest fast bowlers of all time, Sir Richard Hadlee termed the young seamer's efforts in the ICC Cricket World Cup as "particularly impressive".(Holding Hails Indian Bowlers for Great Control)

New Zealand's greatest cricketing icon said that the Indian bowling unit's turnaround after their disastrous Test and tri-series show has been very impressive.(Jonty Rhodes Surprised by Indian Bowlers)

"I am more impressed with the Indian pace attack now than a couple of months ago. In Australia (referring to Test series), I thought the attack really struggled with their line and length. They were too inconsistent. They've sorted that out now. Shami, in particular, has been impressive."(Shami Credits Akhtar for Helping him Get Back Rhythm)

"The bowling has been the weaker suit, but they've sorted that out. That is going to make them very competitive in this tournament," Hadlee said during a media interaction for a World Cup promotional event at the Hobiton Movie Set here.(Shami Best Indian Pacer: Aaqib)

Like a true-blue Black Caps supporter, Hadlee's vote for the best fast bowling unit went to his countrymen Tim Southee, Trent Boult and Daniel Vettori.(Nobody Expects My Bouncer to Come so Fast: Mohit)

"The four best attacks are New Zealand, Australia, South Africa and India. Our attack has proved they are the best in the world at the moment. Southee and Boult have taken 13 wickets each while Vettori has 12. We've bowled sides out which proves we are doing well."

"There are some other good bowling attacks. Australia, for one, with Mitchell Starc and Mitchell Johnson is a good attack. Steyn is getting better for South Africa with a good back up in Morkel. But South Africa will struggle in absence of a quality fifth bowler during knock-out stages."

For someone who could bowl both inswing and outswing with same action, it was only natural that Hadlee would point out about the subtle changes in trend that has happened in fast bowling over the years. Hadlee wants to see the old-fashioned inswinging yorkers come back in the picture.

"We're not seeing many yorkers bowled by the strike bowlers. What they do is have a lot of change-ups. In my time, I had two slower balls. Today fast bowlers have four varieties of slower balls. Sometimes they're bowling wide and keeping it full, so the batsmen can score only in one direction. So their attacking plan is very different from when I played."

"But I still believe that if you get the good old fashioned toe-crusher (yorker) in, on middle and leg, even if the batsman is backing away, he can only hit straight. With bigger bats and shorter boundaries, you're getting more runs, and 120-150 in the last 10 overs is far too many. It's the difference between WINNINGarrow-10x10.png and losing," said the 63-year-old Hadlee who has 431 Tests and 158 ODI wickets.

http://sports.ndtv.com/icc-cricket-world-cup-2015/news/238771-cricket-world-cup-2015-mohammed-shami-s-performances-earn-praise-from-sir-richard-hadlee

 

  • தொடங்கியவர்

இந்தியா 79/0

  • கருத்துக்கள உறவுகள்
  • கருத்துக்கள உறவுகள்

India 174/1 After 23.2 overs

  • தொடங்கியவர்

6gee6o.jpg

  • தொடங்கியவர்

அதிரடி காட்டிய அயர்லாந்தை கடைசி நேரத்தில் கட்டிப்போட்ட இந்திய பவுலர்கள்! 259 ரன்களில் ஆல் அவுட்

 

ஹாமில்டன்: இந்தியாவுக்கு எதிராக முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 259 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இந்தியா தனது 5வது லீக் போட்டியில் இன்று அயர்லாந்தை சந்தித்தது. நியூசிலாந்தின் ஹாமில்டன் மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில், டாசில் வென்ற அயர்லாந்து முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. அதிரடி காட்டிய அயர்லாந்தை கடைசி நேரத்தில் கட்டிப்போட்ட இந்திய பவுலர்கள்! 259 ரன்களில் ஆல் அவுட் ஏற்கனவே முதல் நான்கு போட்டிகளையும் வென்ற, இந்தியா, காலிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது. இருப்பினும், அனைத்து போட்டிகளிலும் வென்று, பி பிரிவில் முதலிடத்தை தக்க வைத்துக்கொள்ள இந்தியா முனைப்பு காண்பித்தது.

 

 

எனவே, வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக கடந்த போட்டியில் களமிறங்கிய வீரர்களை அப்படியே களமிறக்கியது இந்தியா. தொடக்க வீரர்களாக, கேப்டன், வில்லியம் போர்டர்ஃபீல்டும், பவுல் ஸ்டிர்லிங்கும் களமிறங்கினர். கடந்த 4 போட்டிகளிலும், தொடக்க விக்கெட்டுகளை உடனடியாக வீழ்த்திவந்த இந்திய பவுலர்கள், அயர்லாந்து தொடக்க வீரர்களை வீழ்த்த முடியாமல் திணறினார்கள். எனவே, முதல் விக்கெட்டுக்கு இந்த ஜோடி 15 ஓவர்களில் 89 ரன்களை குவித்தது. அப்போதுதான், இந்தியாவுக்கு முதல் சக்சஸ், அஸ்வின் வாயிலாக கிடைத்தது. பவுல் ஸ்டிர்லிங்க், 42 ரன்கள் எடுத்திருந்தபோது, அஸ்வின் பந்தில், ஜடேஜாவிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். அணியின் ஸ்கோர் 92 ரன்களாக இருந்தபோது, சுரேஷ் ரெய்னா பந்து வீச்சில், கிளீன் பௌல்ட் ஆகி, 2 ரன்களில் எட் ஜாய்ஸ் நடையை கட்டினார்.

 

இருப்பினும் வில்லியம் போர்டர்ஃபீல்டும், நியால் ஓ பிரைனும் இணைந்து, அணியை சரிவில் இருந்து தடுத்தனர். அணியின் ஸ்கோர் 145 ரன்களாக இருந்தபோது, இந்த ஜோடியை மோகித் ஷர்மா பிரித்தார். வில்லியம் போர்டர்ஃபீல்டு 67 ரன்களில் அவுட் ஆனார். ஒருபுறம் அன்டி பல்பிர்னி 24 ரன்களிலும், கெவின் ஓ பிரைன் 1 ரன்னிலும், கேரி வில்சன் 6 ரன்களிலும் நடையை கட்டினாலும், நியால் ஓ பிரைன் விளாசிய 75 ரன்களால் அந்த அணி கவுரவமான ஸ்கோரை எட்டியது. 49வது ஓவரில் அயர்லாந்து அணி, 259 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. 39 ஓவர்களில் 206 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்திருந்த அயர்லாந்து அணி, கடைசி நேரத்தில் மளமளவென விக்கெட்டுகளை இழந்தது. முகமது ஷமி அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அஸ்வின் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

 

நடப்பு உலக கோப்பை தொடரில் இந்தியாவுக்கு எதிராக எந்த அணியும், 250 ரன்களை கடந்தது இல்லை, ஆனால் அயர்லாந்து அதை சாதித்துள்ளது. ஹாமில்டனின் சிறிய மைதானமும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். இந்த போட்டியில் வென்று கடந்த உலக கோப்பை தொடங்கி இப்போதுவரை, தொடர்ந்து 9 போட்டிகளில் வென்ற சாதனையை தனதாக்கி கொள்ள இந்தியா முனைப்பில் உள்ளது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/indian-bowlers-combine-dismiss-ireland-259-222450.html

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.