Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • கருத்துக்கள உறவுகள்

கிரிக்கெட் ஆய்வு செய்த ரகுவை காணவில்லை என்று பார்த்தால் அவர் இப்ப வேறு திரிகளில் விபரீதமான ஆய்வுகளில்....

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

வெஸ்ட் இண்டீசை விரட்டியடித்தது நியூசிலாந்து... அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்!

 

வெலிங்டன்: உலக கோப்பையின் 4வது காலிறுதி போட்டியில், வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை துவம்சம் செய்த நியூசிலாந்து 393 ரன்களை குவித்தது. இரண்டாவது பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 250 ரன்களில் ஆல் அவுட் ஆனதால், 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற நியூசிலாந்து அரையிறுதிக்கு தகுதி பெற்றது. அரையிறுதியில், 24ம்தேதி, செவ்வாய்க்கிழமை, நியூசிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. உலக கோப்பை 4வது காலிறுதியில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக டாசில் வென்று முதலில் பேட் செய்ய ஆரம்பித்த நியூசிலாந்து 393 ரன்களை குவித்தது.

 

இமாலய இலக்கை சேஸ் செய்ய கிளம்பிய வெஸ்ட் இண்டீஸ் பேட்ஸ்மேன்கள், வழக்கமான கரீபியன் ஸ்டைலில் அதிரடி காண்பித்தனர். ஆனால் கெய்ல் தவிர பிற பேட்ஸ்மேன்கள் நிலைக்க முடியவில்லை. வெஸ்ட் இண்டீசை விரட்டியடித்தது நியூசிலாந்து... அரையிறுதியில் தென் ஆப்பிரிக்காவுடன் மோதல்! டிரென்ட் பவுல்ட் பந்து வீச்சில் முதல் 4 விக்கெட்டுகளும் சாய்ந்தன. ஆனால் கெய்ல் எதைப் பற்றியும் கவலைப்படாமல் அடித்து நொறுக்கினார். அவரது பேட்டில் பட்ட பந்துகளில் பெரும்பாலும் சிக்சர்களாகவே பறந்தன. அனுபவ வீரர் வெட்டோரி வீசிய ஒரே ஓவரில் ஹாட்ரிக் சிக்சர் எடுத்து அதகளம் செய்தார் கெய்ல். ஆனால் ஆடம் மில்னே வீசிய இன்ஸ்விங்கிங் பந்தில் கிளீன் பௌல்ட் ஆகி 61 ரன்களில் வெளியேறினார் கெய்ல். அப்போதுதான் நியூசிலாந்து அணியினருக்கு பெருமூச்சு வெளியே வந்தது.

 

33 பந்துகளை எதிர்கொண்ட கெய்ல், 8 சிக்சர், 2 பவுண்டரியுடன் 61 ரன்களை குவித்தார். கெய்ல் அவுட் ஆனபோது அணியின் ஸ்கோர் 16.1 ஓவர்களில் 120 ரன்களுக்கு 5 விக்கெட் என்ற நிலையில் இருந்தது. இதன்பிறகு ஜொனாதன் கார்டர் 32 ரன்கள், டேரன் சம்மி 27 ரன்கள், ஆன்ட்ரே ரசல் 20 ரன்கள் என கணிசமாக ரன் அடித்தனர். இருப்பினும் எந்த ஒரு வீரரும் நிலைத்து நின்று ஆடமுடியவில்லை. எனவே சீரான இடைவெளியில் விக்கெட்டுகள் விழுந்தபடி இருந்தது. இருப்பினும் கேப்டன் ஜேசன் ஹோல்டர் ஒருபக்கம் தீரத்துடன் போராட்டம் நடத்தினார். ஆயினும் 26 பந்துகளில் 42 ரன்களை அவர் எடுத்திருந்த நிலையில், வெட்டோரி பந்தில் பவுண்டரி எல்லையில் நின்ற கோரி ஆன்டர்சனிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 30.3வது ஓவர்களில் 250 ரன்களுக்கு வெஸ்ட் இண்டீஸ் ஆல் அவுட் ஆனது.

 

எனவே, நியூசிலாந்து 143 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 24ம்தேதி நடைபெறும் அரையிறுதியில், நியூசிலாந்து அணி, தென் ஆப்பிரிக்காவை சந்திக்க உள்ளது. நியூசிலாந்து 7வது முறையாக உலக கோப்பை அரையிறுதிக்குள் நுழைகிறது. இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் அந்த சாதனையை நியூசிலாந்தும் பகிர்ந்து கொண்டுள்ளது. உலக கோப்பை நாக்-அவுட் சுற்றுகளில் ஒரு அணி பெற்றி பெரிய வெற்றியாகவும் இது பார்க்கப்படுகிறது. முன்னதாக, முதலில் பேட் செய்த நியூசிலாந்தில், கேப்டன் மெக்கெல்லம் 12 ரன்களிலும் வில்லியம்சன் 33 ரன்களிலும் அவுட் ஆகினர். அரைசதத்தை எட்டுவார் என எதிர்பார்க்கப்பட்ட டெய்லர் 42 ரன்களில் அவுட் ஆனார்.

 

அதிரடியாக ரன் குவிப்பில் ஈடுபட்ட, அந்த அணியின் தொடக்க வீரர், மார்டின் கப்தில் 152வது பந்தில் ஒரு பவுண்டரியுடன் 203 ரன்கள் எடுத்தார். இதன் மூலம், ஒருநாள் போட்டிகளில் இரட்டை சதம் விளாசிய நியூசிலாந்தின் முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் முடிவில், நியூசிலாந்து 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 393 ரன்கள் எடுத்தது. கப்தில் 163 பந்துகளில், 237 ரன்கள் குவித்து நாட்-அவுட்டாக கடைசி வரை களத்தில் நின்றார். டேனியல் வெட்டோரியும் 2 பந்துகளில் 8 ரன்கள் விளாசி நாட்-அவுட்டாக நின்றார்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/new-zealand-scores-396-runs-against-west-indies-223063.html

  • தொடங்கியவர்

அங்க என்னப்பா சத்தம்... மைதானத்தில் சண்டை போட்ட பாக்., ஆஸி. வீரர்களுக்கு ஐசிசி அபராதம்!

 

அடிலெய்டு: விளையாட்டில் மோதுங்கள் என்றால், கெட்ட வார்த்தை பேசி மோதிக் கொண்டனர் பாகிஸ்தானின் வகாப் ரியாசும், ஆஸ்திரேலியாவின் ஷேன் வாட்சனும். இதற்காக அவ்விருவருக்கும் ஐசிசி அபராதம் விதித்துள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற உலக கோப்பை 3வது காலிறுதி போட்டியில், ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதின. பாகிஸ்தான் முதலில் பேட் செய்தது. அந்த அணியின் வேகப் பந்து வீச்சாளர் வகாப் ரியாஸ் பேட் செய்தபோது, ஆஸி. பவுலர் ஸ்டார்க் அவரை சீண்டினார். இதற்கு பதிலடியாக, ஆஸ்திரேலிய அணியின் வாட்சன் பேட் செய்தபோது அவரை சீண்டினார்,

 

வகாப் ரியாஸ். வாட்சனின் அருகே சென்று கைதட்டுவது , சிரிப்பது, கமான்.. கமான் என்று கத்துவதாக இருந்தார் வகாப் ரியாஸ். அவர் வீசிய பவுன்சர் பந்துகளில் வாட்சன் திணறியதால், ஆட்டம் மேலும் சூடேறியது. இதனிடையே, நடுவரின் அறிவுறுத்தலையும் மீறி, 33வது ஓவரில் வாட்சன், வகாப்பிடம் திருப்பி சண்டை போட்டார்.

 

இந்த மோசமான சம்பவம், சமூக வலைத்தளங்களில் கடும் விமர்சனங்களை சந்தித்து வருகிறது. இதனிடையே வகாப் ரியாசுக்கு, போட்டி ஊதியத்தில் 50 விழுக்காடும், வாட்சனுக்கு 15 விழுக்காடும் பிடித்தம் செய்யப்படுவதாக ஐசிசி அறிவித்துள்ளது. இருவரும் தவறுகளை ஒப்புக் கொண்டுள்ளதால், விசாரணை தேவையில்லை என்றும் ஐசிசி தனது செய்திக்குறிப்பில் கூறியுள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/wahab-watson-fined-angry-world-cup-clash-223072.html

  • தொடங்கியவர்

250 ரன்களுக்கு சுருண்டது மே.இ.தீவுகள்: நியூஸி. அரையிறுதிக்கு தகுதி

 

நியூஸிலாந்து - மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையேயான உலகக் கோப்பை காலிறுதியில் நியூஸிலாந்து 143 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று, அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது. அரையிறுதியில் தென் ஆப்பிரிக்க அணியை நியூஸி. சந்திக்கிறது.

394 ரன்கள் என்ற கடின இலக்கை விரட்டிய மே.இ.தீவுகள் அணி 30.3 ஓவர்கள் வரை மட்டுமே தாக்குப் பிடித்தாலும் 250 ரன்களைக் குவித்தது. அந்த அணியின் வீரர்கள் அனைவருமே இன்று அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆனாலும் அந்த அதிரடியை தொடர முடியாமல் போக சீரான இடைவெளியில் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

மே.இ.தீவுகள் ஆட ஆரம்பித்ததும், இரண்டாவது ஓவரில் துவக்க வீரர் சார்ல்ஸ் வீழ்ந்தார். 6-வது ஓவரில் சிம்மன்ஸ் வெளியேறினார். சிக்ஸர் அடித்த அடுத்த பந்தில் சிம்மன்ஸ் ஆட்டமிழந்தார். கிறிஸ் கெயிலும் தனது வழக்கமான அதிரடியோடு ஆடினார்.

 

கெயிலுக்கு துணை நின்ற சாமுவேல்ஸும் தனது அதிரடியில் 14 பந்துகளில் 3 பவுண்டரி 1 சிக்ஸரோடு 27 ரன்கள் சேர்த்தார். ஆனால் 10-வது ஓவரின் முதல் பந்தை, சாமுவேல்ஸ், டீப் பாய்ண்ட் பகுதியில் சிக்ஸருக்கு விரட்ட, அங்கே நின்றுகொண்டிருந்த டேனியல் வெட்டோரி, பவுண்டரி கோட்டுக்கு அருகே நின்று, ஒற்றைக் கையில் பந்தை அற்புதமாக எகிறிப் பிடித்து சாமுவேல்ஸை ஆட்டமிழக்கச்செய்தார். அதே ஓவரில் ராம்தின் ரன் ஏதும் எடுக்காமல் வீழ்ந்தார்.

ஒரு வேளை கிறிஸ் கெயிலுடன் சாமுவேல்ஸ் 10 ஓவர்கள் தாக்குப் பிடித்திருந்தால் கண்டிப்பாக மே.இ.தீவுகள் வெற்றியை நெருங்கியிருக்கக் கூடும் என்ற நிலையிலேயே அவர்களது ஆட்டம் இருந்தது. நியூஸி. பந்துவீச்சாளர்களில், போல்ட் நீங்கலாக, அனைவருமே ரன்களை வாரி வழங்கினர். குறிப்பாக சவுத்தி மற்றும் மில்னே இருவரும் ஒவ்வொரு ஓவருக்கும் தலா 10 ரன்களுக்கும் அதிகமாக விட்டுக் கொடுத்தனர்.

 

துவக்க வீரர் கிறிஸ் கெயில் அதிகபட்சமாக 61 ரன்களும், அணித் தலைவர் ஹோல்டர் 42 ரன்களும் எடுத்தனர். நியூஸி. தரப்பில் போல்ட் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

முன்னதாக, இப்போட்டியில் டாஸ் வென்ற நியூஸி. அணி பேடிங்கை தேர்ந்தெடுத்தது. துவக்க வீரர்களாக மெக்கல்லம், கப்டில் களமிறங்கினர். அதிரடி வீரர் மெக்கல்லம் 12 ரன்களுக்கு ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார். தொடர்ந்து வந்த வில்லியம்சன் 15-வது ஓவர் வரை கப்டிலுடன் இணைந்து பார்டனர்ஷிப்பில் ரன்கள் சேர்த்தாலும் 33 ரன்களுக்கு ஆட்டமிழந்தார்.

 

அடுத்து ஆட வந்த டெய்லர் களத்திலிருந்த கப்டிலுடன் இணைந்தார். இருவரும் சேர்ந்து பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். கப்டில் 64 பந்துகளில் அரை சதம் எட்டினார். இருவரும் பார்டனர்ஷிப்பில் இணைந்து 143 ரன்களை சேர்த்தனர். கப்டில் 111 பந்துகளில் சதத்தை எட்டினார். சதத்தைக் கடந்தவுடன் கப்டில் அதிரடியாக ஆடத் துவங்கினார்.

39-வது ஓவரில் டெய்லர் 42 ரன்களுக்கு ரன் அவுட் ஆனார். 40 ஓவர்கள் இறுதியில் நியூஸிலாந்து 240 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்திருந்தது. இதன் பிறகு நியூஸி. வீரர்களின் ஆட்டம் ஏறக்குறைய பவுண்டரிகளைச் சார்ந்தே இருந்தது. குறிப்பாக கப்டில் அசாதாரணமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

 

கப்டில் இரட்டை சதம்

ஆண்டர்சன் 15 ரன்கள், எல்லியட் 27 ரன்கள், ரோஞ்சி 9 ரன்கள் என ஆட்டமிழந்தாலும், மறுமுனையில் கப்டில் தன் ஆட்டத்தை மாற்றாமல் விளாசிக்கொண்டிருந்தார். 152 பந்துகளில் கப்டில் இரட்டை சதத்தைக் கடந்தார். இதில் 21 பவுண்டரிகளும், 8 சிக்ஸர்களும் அடக்கம். அந்த ஓவரிலேயே, இதே உலகக் கோப்பையில் மே.இ.தீவுகள் வீரர் கிறிஸ் கெய்ல் அடித்த அதிகபட்ச ஸ்கோரான 215 ரன்களையும் கப்டில் கடந்தார். மே.இ.தீவுகளின் பந்துவீச்சு எங்குமே சோபிக்காமல் போனது. வீசிய அத்தனை வீரர்களுமே கப்டிலின் அதிரடிக்கு முன் வலுவிழந்தனர்.

 

50 ஓவர்கள் முடிவில் கப்டில் 163 பந்துகளைச் சந்தித்து 237 ரன்களைக் குவித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மொத்தம் 24 பவுண்டரிகள் மற்றும் 11 சிக்ஸர்கள். நியூஸி. அணி 393 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

 

பேட்டிங் விருந்தாக மாறிய காலிறுதிப் போட்டி

இன்றைய போட்டியில் முதலில் ஆடிய நியூஸி. அணி 50 ஓவர்களில் 393 ரன்களும், மே.இ.தீவுகள் அணி 30.3 ஓவர்களில் 250 ரன்களும் குவித்தன. மொத்தம் 643 ரன்கள். 80.3 ஓவர்கள். ஒரு ஓவருக்கு சராசரியாக 8 ரன்கள் வீதம் சேர்க்கப்பட்டுள்ளன.

நியூஸி. தரப்பில் கப்டில் இரட்டை சதம் அடித்தாலும் வேறு எந்த வீரரும் அரை சதம் கூடத் தொடவில்லை. அதே போல மே.இ.தீவுகள் தரப்பில் கிறிஸ் கெயில் மட்டுமே அதிகபட்சமாக அரை சதம் கடந்து 61 ரன்களை எடுத்தார்.

நியூஸி. தரப்பில் 39 பவுண்டரிகளும், 15 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டுள்ளன. மே.இ.தீவுகள் அணி 23 பவுண்டரிகளும், 16 சிக்ஸர்களும் அடிக்கப்பட்டுள்ளன. மொத்தம் இந்த ஆட்டத்தில் 62 பவுண்டரிகள் மற்றும் 31 சிக்ஸர்கள். நியூஸி.யை விட மே.இ.தீவுகள் அதிக சிக்ஸர்கள் அடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

 

முதல் ஓவரிலேயே கேட்ச் தந்த கப்டில்

இன்றைய ஆட்டத்தின் முதல் பந்தை கப்டில் பவுண்டரிக்கு விரட்டினார். இன்றைய அதிரடிக்கு அது ஒரு முன்னோட்டமாக அமைந்திருந்தாலும், முதல் ஓவரின் 3-வது பந்தை கப்டில் ஸ்கொயர் லெக் பகுதிக்கு அடிக்க அங்கு நின்று கொண்டிருந்த சாமுவேல்ஸ் அந்த கேட்சை கோட்டை விட்டார். ஒருவேளை அப்போதே கப்டில் ஆட்டமிழந்திருந்தால் இந்த போட்டியின் போக்கு மொத்தமாக மாறியிருக்கக் கூடும்.
 

http://tamil.thehindu.com/sports/250-%E0%AE%B0%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%87%E0%AE%A4%E0%AF%80%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/article7018441.ece?homepage=true

 

  • தொடங்கியவர்

அலைந்த அணிதானே இந்தியா.. மேக்ஸ்வெல் கர்வ பேட்டி

 

சிட்னி: உலக கோப்பை தொடங்கும் முன்பாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் சிங்கிள் வெற்றிக்கும் வழியில்லாமல் இருந்த அணிதான் இந்தியா.. அதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன், என்று ஆணவத்தோடு பேட்டியளித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் கிளன் மேக்ஸ்வெல். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வரும் 26ம்தேதி, சிட்னியில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் மோத உள்ளன. இந்திய அணி நடப்பு உலக கோப்பையில் எந்த ஒரு போட்டியிலும் தோற்காமல், அரையிறுதி வரை முன்னேறியுள்ளது.

 

தோற்ற ஆஸ்திரேலியா ஆனால் ஆஸ்திரேலியாவோ, நியூசிலாந்திடம் தோற்றது. பெரிய அணிகளுக்கு ஷாக் கொடுப்பதில் கில்லாடிகளான வங்கதேசத்துடனான ஆஸ்திரேலிய போட்டி மழையால் கைவிடப்பட்டது. எனவே, ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கடும் சவாலை தரும் என்பது கிரிக்கெட் வல்லுநர்கள் கருத்தாக உள்ளது.

 

இது என்ன கேள்வி.. இந்நிலையில் நிருபர்களுக்கு பேட்டியளித்த ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் மேக்ஸ்வெல், இந்தியா குறித்து சர்ச்சைக்குறிய கருத்துக்களை கூறியுள்ளார். அவர் கூறியதாவது: எதிலுமே தோற்காத இந்திய அணியை, எப்படி எதிர்கொள்ள போகிறீர்கள் என்பது ஆஸ்திரேலிய அணியின் மீதான கேள்வியாக இருக்கிறது.

 

இந்திய அணி மறந்திருக்காது.. இந்தியாவை, ஆஸ்திரேலியா எப்படி எதிர்கொண்டது என்பது அனைவருக்குமே தெரியும். நடந்து முடிந்த முத்தரப்பு தொடரில், இந்தியா ஒரு வெற்றியை கூட பெறவில்லை. இந்திய அணியின் நினைவில் இருந்தும் அந்த தோல்விகள் மறைந்திருக்காது என்று நினைக்கிறேன்

 

இவங்களுக்கெல்லாம் பிளான் கேடா இந்தியாவை அரையிறுதியில் எதிர்கொள்ள, தனியாகவெல்லாம், எந்த பிளானும் போடவேண்டியதில்லை. இதற்கு முன்பு இந்தியாவை எப்படி தோற்கடித்தமோ, அதே பாணியில்தான் இப்போதும், இந்தியாவை சந்திக்க உள்ளோம். ஒரு சில புதிய முயற்சிகள் வேண்டுமானால் செய்யப்படும்.

 

இதெல்லாம் ஒரு போட்டியா.. இந்தியா-ஆஸ்திரேலியா மோதலை, மிகப்பெரிய போட்டிபோல கிரிக்கெட் நிபுணர்களும், ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்களும் வர்ணிக்கிறார்கள். ஆனால், என்னைப் பொறுத்தளவில், ஆஷஷ் தொடர்தான் (ஆஸி.-இங்கிலாந்து நடுவேயானது) மிகப்பெரிய போட்டியாக இன்னும் நீடிக்கிறது.

 

ஐபிஎல் ச்சும்மா.. ஐபிஎல் போட்டிகளில் ஆடிய அனுபவம், உலக கோப்பையில் எனக்கு கை கொடுப்பதாக கருதவில்லை. உலக கோப்பை கட்டமைப்பு வேறு, ஐபிஎல் கட்டமைப்பு வேறு. இரண்டுக்கும் சம்மந்தம் இல்லை. இவ்வாறு மேக்ஸ்வெல் கூறியுள்ளார். ஆஸ்திரேலியான்னா பீட்டர் விடுறதும், ஆடுன்னா புளுக்கை போடுறதும் சகஜம்தான் என்கிறீர்களா... அதுவும் சரிதான்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/ahead-wc-semis-glenn-maxwell-taunts-india-with-winless-rema-223087.html

Edited by நவீனன்

  • தொடங்கியவர்

ஆஸி.யை செமி பைனலில் வீழ்த்தனுமா.. நான் சொல்றத கேளுங்க.. இந்தியாவுக்கு பாக். கேப்டன் டிப்ஸ்!

 

அடிலெய்டு: அரையிறுதியில் ஆஸ்திரேலிய அணியை எளிதில் வீழ்த்த, இந்திய அணிக்கு ஒரு ஆலோசனையை கூறியுள்ளார், பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக். அடிலெய்டில் நேற்று நடந்த, உலக கோப்பை காலிறுதி போட்டியில், 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் பாகிஸ்தானை ஆஸ்திரேலியா வீழ்த்தியது. இந்த போட்டியோடு, பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக், சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.

 

ஸ்பின்னர்களின் சொர்க்கபுரி இந்நிலையில், மிஸ்பா அளித்த பேட்டி: இந்தியா-ஆஸ்திரேலியா மோத உள்ள அரையிறுதி போட்டி சிட்னி மைதானத்தில் நடைபெற உள்ளது. இந்த மைதானம் சுழற்பந்துக்கு சாதகமான மைதானமாகும்.

 

இலங்கையே தடுமாறியது இலங்கைக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவின் இம்ரான் தாகிர் 4 விக்கெட்டுகளையும், டுமினி 3 விக்கெட்டுகளையும் வீழ்த்தியது இதே மைதானத்தில்தான்.

 

ஆஸ்திரேலியாவுக்கு வழக்கம் ஆஸ்திரேலியா, எப்போதுமே சுழற்பந்து வீச்சில் திணறும் ஒரு அணியாகும். எனவே, ஸ்பின் ஆயுதத்தால், ஆஸ்திரேலியாவை, இந்தியா கட்டுப்படுத்த முடியும்.

சபாஷ், சரியான போட்டி இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளுமே, சிறப்பாக விளையாடி வருவதால், அரையிறுதி மிகவும் கடுமையானதாக இருக்கும். இவ்வாறு மிஸ்பா கூறினார்.

 

அசந்தால் ஆபத்து சிட்னி மைதானம், ஸ்பின்னுக்கு கை கொடுப்பதை போலவே, பேட்ஸ்மேன்களுக்கும் சொர்க்கபுரியாக விளங்குகிறது. இலங்கைக்கு எதிராக ஆஸ்திரேலியா 376 ரன்களை குவித்ததும், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக தென் ஆப்பிரிக்கா 406 ரன்களை அடித்ததும், இதே மைதானத்தில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/misbah-tips-india-prevail-against-australia-223079.html

  • கருத்துக்கள உறவுகள்

ஆஸி.யை செமி பைனலில் வீழ்த்தனுமா.. நான் சொல்றத கேளுங்க.. இந்தியாவுக்கு பாக். கேப்டன் டிப்ஸ்!
உவரும் விளையாட்டை விளையாட்டாக பார்க்காமல் அரசியலாக பார்க்கின்றார் போல..... இந்தியாவை எப்படி தோற்க்கடிப்பது என்று அவுஸ்ரேலியாவுக்கு அறிவுரை சொல்லாமல் ஏன் இந்தியாவுக்கு அறிவுரை சொல்கின்றார்?ஓஓஓ...இருவரும் உப கண்டத்தினர் என்ற உணர்வு போல கிடக்கு .........உபகண்டத்தில் நடக்கும் படுகொலைகளுக்கு அறிவுரை சொல்லமாட்டினம் இந்த செலபரடிஸ்(celebrities) இதுக்கு மட்டும் உபகண்டம் எதிர் அவுஸ் கண்டம் என்று வந்திடிவினம்
  • தொடங்கியவர்

இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டிக்கு அம்பயர்கள் பெயர் அறிவிப்பு! 'நோ-பால்' அலீம்தார் மிஸ்சிங்!!

 

சிட்னி: இந்தியா- வங்கதேச போட்டியின்போது வெடித்த நோ-பால் சர்ச்சையை தொடர்ந்து, உலக கோப்பை அரையிறுதி போட்டிகளுக்கான ஆட்டத்தில் பாகிஸ்தானை சேர்ந்த சர்வதேச நடுவர் அலீம்தார் இடம்பெறவில்லை. இந்தியா-வங்கதேசம் நடுவேயான காலிறுதி போட்டியின்போது, இந்திய தொடக்க வீரர் ரோகித் ஷர்மா 90 ரன்கள் எடுத்திருந்த நிலையில், வங்கதேச பவுலர் ருபேல் பந்தில், பவுண்டரி எல்லையில் கேட்ச் கொடுத்தார். ஆனால், லெக் அம்பயராக நின்று கொண்டிருந்த அலீம்தார், அந்த பந்து இடுப்புக்கு மேலே வீசப்பட்டதால், நோ-பால் என்று அறிவிக்குமாறு, அம்பயர் இயான் கவுல்ட்டுக்கு சைகை செய்தார்.

 

இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டிக்கு அம்பயர்கள் பெயர் அறிவிப்பு! 'நோ-பால்' அலீம்தார் மிஸ்சிங்!! அதையேற்று கவுல்டும் நோ-பால் வழங்கினார். ஆனால், டிவி ரிப்ளேயில், அது முட்டி உயரத்துக்கு வந்த பந்துதான் என்பது தெரியவந்தது. இதையடுத்து வங்கதேசத்தில், ஐசிசிக்கு எதிராக போராட்டங்கள் நடக்கின்றன. வங்கதேசத்தை சேர்ந்த அமைச்சரும், ஐசிசி தலைவருமான, முஸ்தபாவும், இந்தியாவின் நெருக்கடியால் ஐசிசி நடுவர்கள் அந்த நாட்டுக்கு ஆதரவு கரம் நீட்டுவதாக குற்றம்சாட்டினார். இந்த சர்ச்சைகளுக்கு நடுவே, அரையிறுதி போட்டிகளுக்கான நடுவர் பட்டியலை ஐசிசி இன்று வெளியிட்டது.

 

24ம் தேதி ஆக்லாந்தில், தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகளுக்கிடையே நடக்க உள்ள போட்டிகளுக்கான அம்பயர்கள் விவரம் இதுதான்: டேவிட் பூன் (போட்டி ரெப்ரி), இயான் கவுல்ட் மற்றும் ராட் டக்கர் (கள நடுவர்கள்), நிகேல் லியாங் (மூன்றாம் நடுவர்), புரூஸ் ஆக்சன்போர்ட் (நாலாம் நடுவர்). 26ம்தேதி நடைபெறும், இந்தியா-ஆஸ்திரேலியா அரையிறுதி போட்டிக்கான நடுவர்கள் விவரம் இதுதான்: ரஞ்சன் மதுகலே (போட்டி ரெப்ரி), குமார் தர்மசேனா மற்றும் ரிச்சர்ட் கேட்லிபோரா (கள நடுவர்கள்) மாராய்ஸ் எராஸ்மஸ் (மூன்றாம் நடுவர்) ரிச்சர்ட் இல்லிங்வொர்த் (நாலாம் நடுவர்) .

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/world-cup-umpires-named-semi-finals-no-place-aleem-dar-aft-223092.html

  • தொடங்கியவர்

அலைந்த அணிதானே இந்தியா.. மேக்ஸ்வெல் கர்வ பேட்டி

 

சிட்னி: உலக கோப்பை தொடங்கும் முன்பாக, ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற போட்டிகளில் சிங்கிள் வெற்றிக்கும் வழியில்லாமல் இருந்த அணிதான் இந்தியா.. அதை அவர்கள் மறந்திருக்க மாட்டார்கள் என்று நம்புகிறேன், என்று ஆணவத்தோடு பேட்டியளித்துள்ளார் ஆஸ்திரேலியாவின் அதிரடி ஆட்டக்காரர் கிளன் மேக்ஸ்வெல். இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் வரும் 26ம்தேதி, சிட்னியில் நடைபெறும் 2வது அரையிறுதி போட்டியில் மோத உள்ளன. இந்திய அணி நடப்பு உலக கோப்பையில் எந்த ஒரு போட்டியிலும் தோற்காமல், அரையிறுதி வரை முன்னேறியுள்ளது.

 

ஐபிஎல் ச்சும்மா.. ஐபிஎல் போட்டிகளில் ஆடிய அனுபவம், உலக கோப்பையில் எனக்கு கை கொடுப்பதாக கருதவில்லை. உலக கோப்பை கட்டமைப்பு வேறு, ஐபிஎல் கட்டமைப்பு வேறு. இரண்டுக்கும் சம்மந்தம் இல்லை. இவ்வாறு மேக்ஸ்வெல் கூறியுள்ளார். ஆஸ்திரேலியான்னா பீட்டர் விடுறதும், ஆடுன்னா புளுக்கை போடுறதும் சகஜம்தான் என்கிறீர்களா... அதுவும் சரிதான்.

 

அடுத்த மாதம் இந்தியா வந்தவுடன் IPL போட்டிகளுக்கு இவரது வாய்சவாடல் வேறு மாதிரி  இருக்கும் :icon_mrgreen::lol:  அவுஸ் வீரர்களின் வாய் வீரம் தெரிந்ததுதானே :D:lol:

 

  • கருத்துக்கள உறவுகள்

11073573_450237825125361_895421665110424

  • தொடங்கியவர்

கெய்ல் என்னைப் பாராட்டியது வேடிக்கையாக இருந்தது: மார்டின் கப்தில்

 

"கிறிஸ் கெய்ல் என்னிடம் வந்து 'வாழ்த்துக்கள் 200 ரன் லீகிற்கு வரவேற்கிறேன்' என்று கூறியது வேடிக்கையாக இருந்தது”

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக உலகக்கோப்பை காலிறுதியில் 237 ரன்களை அடித்து கிறிஸ் கெய்லின் உலகக்கோப்பை இரட்டைச் சத (215) சாதனையை முறியடித்தார் நியூசிலாந்து தொடக்க வீரர் மார்டின் கப்தில்.

mct5lc.jpg

“கிறிஸ் கெய்ல் என்னிடம் வந்து: "வாழ்த்துக்கள், 200 ரன்கள் லீகிற்கு வரவேற்கிறேன்" என்றார். அது வேடிக்கையாக இருந்தது. அவருக்குப் பின்னால் அனைவருமே வாழ்த்துக்கள் தெரிவிக்கும் உணர்வில் இருந்தனர்.

 

தொடக்கத்திலிருந்தே பந்து வரும் போது என்ன ஆடவேண்டுமோ அதனை ஆடினேன். கடைசி 10 ஓவர்கள் வந்த பிறகு சில பவுண்டரிகளை அடித்து கேளிக்கை ஆட்டம் ஆட விரும்பினேன்.

 

மார்ட்டின் குரோவ் கொடுத்த ஆலோசனைகளின் உதவியுடன் கால்களை நன்றாக நகர்த்தினேன், இன்னிங்ஸ் தொடக்கத்திலேயே பக்கவாட்டில் ஷாட்கள் ஆடுவதைத் தவிர்த்து நேராக ஆடத் தொடங்கினேன். இதுதான் வெற்றிக்கு வித்திட்டது. இப்போதைக்கு இது நன்றாகக் கைகொடுக்கிறது.

உலகக்கோப்பை இறுதிக்குள் நுழையும் வாய்ப்பு பற்றி அணியின் வீரர்கள் உற்சாகமாக உள்ளனர். தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான போட்டிக்கு முன்பு பயிற்சி அமர்வுகள் உள்ளன.” என்றார் மார்டின் கப்தில்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AF%86%E0%AE%AF%E0%AF%8D%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%88%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%87%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%87%E0%AE%B0%E0%AF%81%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%AE%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D/article7018949.ece

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

மேற்கிந்திய தீவுகள் தோற்றாலும், ஏனைய மூன்று கால் இறுதி போட்டிகளையும் விட நியூசிலாந்து மேற்கிந்திய தீவுகள் காலிறுதி போட்டியே இறுதிவரை விறுவிறுப்பாக காணப்பட்டது. நான் நியூசிலாந்தின் துடுப்பாட்டத்தை விட மேற்கிந்திய தீவுகளின் துடுப்பாட்டத்தையே அதிகம் ரசித்தேன். கடைசிவரை விறுவிறுப்பாய் போனது. எத்தனை சிக்ஸ்ஸர்கள். அப்பப்பா.. காண ஆயிரம் கண்கள் வேண்டும். சிறிது அதிஸ்டம் கைகொடுத்து இருந்தால் நியூசிலாந்து அணிக்கு பாடை கட்டி இருப்பார்கள். 

 

ஹோல்டர் தலைமையில் அடுத்த உலககோப்பையில் மேற்கிந்திய தீவுகள் அணி சாதனைகள் படைக்கவேண்டும்.

Edited by கிழவி

  • தொடங்கியவர்

இரட்டை விரலுடன், இரட்டை சதம் விளாசினார் மார்டின் கப்தில்..வெளிவராத புதிய தகவல்கள்!

 

வெலிங்டன்: நியூசிலாந்து அணியின் மார்டின் கப்தில், வெஸ்ட் இண்டீசுக்கு எதிராக இன்றைய போட்டியில் சதம் விளாசியுள்ளார். ஆனால், அவரது ஒரு காலில் இரு விரல்கள்தான் உள்ளன என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகும்.

 

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இன்றைய காலிறுதி ஆட்டத்தில், நியூசிலாந்தின் மார்டின் கப்தில் 237 ரன்கள் விளாசி நாட் அவுட் பேட்ஸ்மேனாக கடைசி வரை களத்தில் நின்றார்.

 

அவர் படைத்த சாதனைகள்:

 

உலக கோப்பையில் அதிகபட்ச தனி நபர் ஸ்கோர்

 

உலக கோப்பை நாக்-அவுட் சுற்றில் அடிக்கப்பட்ட முதல் இரட்டை சதம்

 

முதல் முறையாக இரட்டை சதம் அடித்த நியூசிலாந்து வீரர்

 

சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் 2வது மிகப்பெரிய தனி நபர் ஸ்கோர்.

 

இவையெல்லாம் கப்தில் படைத்த இன்றைய சாதனைகள்.

 

ஆனால், இரட்டை சதம் விளாசிய அவரின் இடது கால்களில் மொத்தமே இரு விரல்கள்தான் இருக்கின்றன. கப்தில் அவரது 13வது வயதில் ஒரு சாலை விபத்தில் சிக்கினார். அப்போது இடது காலில் பெருவிரல் மற்றும் அதற்கு அடுத்த விரலை தவிர்த்து பிற மூன்று விரல்களையும் இழந்தார்.

 

எனவே, இரட்டை விரல் கப்தில் என்றுதான் நியூசிலாந்து வீரர்களால் அவர் செல்லமாக அழைக்கப்படுகிறார். இதனிடையே, இரட்டை சதம் விளாசியதும், ரசிகர்களை பார்த்து இரு விரல்களை காண்பித்தார் கப்தில். தனது இரு விரல் பற்றிதான் அப்படி கப்தில் கூறியதாக ஒரு தகவல் பரவியது. ஆனால், அவர் அடித்த சிக்சர் அடித்தபோது, அது மைதானத்தின் மேற்கூரையில் சென்று விழுந்தது. வெலிங்டன் மைதானத்தில், கப்திலோடு சேர்த்து, இதுவரை 2 பேட்ஸ்மேன்கள்தான் அதுபோன்ற ஷாட்டை அடித்துள்ளனர்.

 

அதைத்தான் இரட்டை விரலால் சுட்டி காண்பித்தாராம் கப்தில். இதுவரை ஐபிஎல் போட்டிகளுக்காக எந்த அணியும், கப்திலை ஏலத்தில் எடுத்ததில்லை என்பது கூடுதல் தகவல்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/martin-guptill-is-nicknamed-marty-two-toes-223094.html

  • தொடங்கியவர்

ஹய்யய்யோ .... ஆஸ்திரேலியாவுக்கு பயம் வந்துருச்சுடோய்....!

 

சிட்னி: "சிங்கிள் டீக்கு" அலைந்தவர்கள்தானே என்ற ரேஞ்சுக்கு இந்தியாவைக் கேலி செய்தாலும் கூட மறுபக்கம், இந்தியாவை நினைத்து உள்ளூர பயங்கரமாக கில் கொண்டுள்ளது ஆஸ்திரேலியா என்ற செய்திகள் இந்தியர்களின் காதுகளில் தேன் போல பாயத் தொடங்கியுள்ளது. காரணம், இந்தியா, ஆஸ்திரேலியா இடையிலான அரை இறுதிப் போட்டி நடைபெறப் போகும் சிட்னி மைதானம். சிட்னி மைதானம் ஸ்பின்னர்களுக்கு செமையாக கை கொடுக்கும். வேகப் பந்து வீச்சுக்கு சுத்தமாக உதவாது. இதனால் ஆஸ்திரேலியாவின் வேகப் புயல்கள் கடும் அதிருப்தியுடன் உள்ளனராம்.

 

ஹய்யய்யோ .... ஆஸ்திரேலியாவுக்கு பயம் வந்துருச்சுடோய்....! பிட்ச்சை வேகத்திற்கு சற்று சாதகமாக மாற்றுமாறு சிட்னி மைதான கியூரேட்டர் டாம் பார்க்கரிடம் கேட்டுப் பார்த்தும் அவர் முடியாது என்று கூறி விட்டாராம். இதனால் ஆஸ்திரேலிய அணியினர் செம அப்செட் என்கிறார்கள். பொதுவாக ஆஸ்திரேலிய பிட்ச்சுக்கள் வேகப் பந்து வீச்சுக்கு ஏற்றவையாகும். நன்றாக பவுன்ஸ் ஆகும் வகையில் பிட்ச் வடிவமைக்கப்படும். ஆனால் சிட்னி மைதான பிட்ச், சுழற்பந்து வீச்சுக்கு சாதகமானது. இதுதான் இந்திய ரசிகர்களை மிகவும் மகிழ்ச்சி அடைய வைத்துள்ளது. காரணம், ஆஸ்திரேலியர்கள் ஸ்பின் பவுலிங் என்றாலே தொடை நடுங்குவார்கள் என்பதால். அடிலைட் பிட்ச்சை எடுத்துக் கொண்டால் அங்கு எந்த அணியாக இருந்தாலும் சரி, நல்ல வேகப் பந்து வீச்சாளரை வைத்திருந்தால் பிரமாதப்படுத்தலாம்.

 

ஆஸ்திரேலியா, பாகிஸ்தான் போட்டியே அதற்கு சரியான உதாரணம். காலையில் மிட்சல் ஸ்டார்க் வெளுத்தார் என்றால் மறுபதியில் பாகிஸ்தானின் வஹாப் ரியாஸ் புயலைக் கிளப்பிரனார். ஆனால் சிட்னியில் நிலைமையே வேறு. இந்தியாவைப் போல ஆஸ்திரேலியாவிடம் பிரமாதமான ஸ்பின்னர்கள் இல்லை. வேகப் பந்து வீச்சை மட்டுமே அவர்கள் நம்பிக் களம் கண்டு வருகின்றனர். ஆனால் அதை வைத்து சிட்னியில் காலம் தள்ளுவது மிக மிக கடினம். இதைத்தான் பாகிஸ்தான் கேப்டன் மிஸ்பா உல் ஹக்கும் கூட சிட்னியில் ஸ்பின்னர்களை வைத்து இந்தியா சாதிக்க முடியும் என்று கூறியிருந்தார். இந்தியாவிடம் தற்போது அஸ்வின், ரவீந்திர ஜடேஜா என இரு அருமையான ஸ்பின்னர்கள் உள்ளனர். இருவரும் நல்ல பார்மிலும் உள்ளனர். அதேசமயம், ஆஸ்திரேலியாவிடம் ஸ்பின் அந்த அளவுக்கு சவுகரியமாக இல்லை. சிட்னி மைதானத்தில் ஹர்பஜன் சிங் பல வெற்றிகளைப் பெற்றுள்ளார். கிட்டத்தட்ட இந்தியாவுக்கு ஏற்ற பிட்ச் இது என்பதால், நன்கு அடித்து ஆடவும் முடியும்.

 

எனவே இந்தியா முதலில் பேட் செய்தால் பெரிய ஸ்கோரை குவிக்க வாய்ப்புள்ளது. அதேபோல பந்து வீச்சிலும் ஸ்பின்னர்களை வைத்து ஆஸ்திரேலியாவை முடக்க நிறைய வாய்ப்புள்ளது. சிட்னி மைதானம் இப்படி திகழ டாம் பார்க்கரே காரணம். இவர்தான் கடந்த 18 வருடமாக இங்கு கியூரேட்டராக இருக்கிறார். சிட்னி பிட்ச்சை தனது செல்லக் குழந்தை என்று கூறுபவர் பார்க்கர். அதை யாரும் வந்து பாழ்படுத்தவோ, மாற்றவோ அனுமதிக்க மாட்டேன் என்றும் கண்டிப்பாக கூறி வருபவர் பார்க்கர். இதுகுறித்து ஆஸ்திரேலிய வேகப் பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேஸல்வுட் கூறுகையில், அவர் (பார்க்கர்) எங்களுக்கு எந்த உதவியையும் இதுவரை செய்ததில்லை.

 

இப்போதாவது செய்தால் நன்றாக இருக்கும். கொஞ்சம் புல் இருந்தால் கூட போதும். நாங்கள் விக்கெட் எடுக்க உதவும். டெஸ்ட் போட்டியிலும் எங்களுக்கு அவர் உதவவில்லை. இப்போது இந்தியாவிடம் நல்ல ஸ்பின்னர்கள் உள்ள நிலையில், இது எங்களுக்குப் பாதகமாகவே அமையும் என்றார் அவர். பிட்ச் சரியில்லை என்று இப்போதே ஆஸ்திரேலியர்கள் சொல்ல ஆரம்பித்திருப்பதைப் பார்த்தால் லேசாக பயம் வந்து விட்டது உண்மைதான் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/aus-not-happy-with-scg-223117.html

  • தொடங்கியவர்

இப்போதைக்கு ஓய்வு பெறப் போவதில்லை - க்றிஸ் கெயில்
 

 

தாம் தற்போதைக்கு எந்த வகையான கிரிக்கட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெறப் போவதில்லை என்ற மேற்கிந்திய கிரிக்கட் அணியின் துடுப்பாட்ட வீரர் கிறிஸ்கெயில் தெரிவித்துள்ளார்.

எனினும் இங்கிலாந்துடன் மேற்கிந்திய தீவுகளில் நடைபெறவுள்ள டெஸ்ட் தொடரில் காயம் காரணமாக பங்கேற்கப் போவதில்லை என்று  கூறியுள்ள  க்றிஸ் கெயில் காயத்தில் இருந்து குணமடைய வேண்டிய கட்டாயம் இருக்கிறது  எனவும்  அடுத்த 20க்கு20 உலக கிண்ண கிரிக்கட் போட்டியிலும் விளையாடும் எதிர்ப்பார்ப்பு இருக்கிறது என்றும் சர்வதேச கிரிக்கட் ஊடகம் ஒன்றுக்கு கருத்து வழங்கிபோது இவாறு தெரிவித்தார்.

 

http://onlineuthayan.com/News_More.php?id=583393933922487009

  • கருத்துக்கள உறுப்பினர்கள்

இது எப்பூடி?  :lol:  :D  :icon_mrgreen:  :icon_idea:

 

http://www.espncricinfo.com/icc-cricket-world-cup-2015/content/story/853965.html

 

Andy Zaltzman: Kusal Perera's masterclass
Sri Lanka v South Africa, Sydney, March 18

Sri Lanka are no strangers to taking weird selectorial punts at big World Cup matches, as the team sheet from the 2011 final can testify. This time they chose to break up the flourishing Dilshan-Thirimanne opening partnership by bringing in flamboyant strokeplayer Kusal Perera to face the vaunted South African pace attack, on the back of one fifty and an average of 17 in his previous 18 ODIs (and four ducks in his previous nine).

And he produced a masterclass: how not to open an innings in a World Cup quarter-final. First over, Dale Steyn the bowler. Perera dutifully played himself in. For two balls - a leave, and a drive to cover. Then, he cut loose. Ball three: a flamboyant swish; bat and ball emerge unscathed. Ball four: see ball three, but resulting in an edge over the slips for two. Ball five: a slightly more controlled drive, no contact. Ball six: see ball five, but resulting in an edge through the slips, and a single. Second over, Kyle Abbott the bowler. Ball seven: Perera unveils a new shot from his repertoire - the forward defensive. Perera accessorises the block with a scamper a few yards down the wicket for an obviously non-existent single, and a scamper back to safety. Ball eight: see ball three. Ball nine: see ball eight. He could have been out six times in seven balls. Seven, if you include the run out that would have transpired had he carried through with the scamper. Ball ten: forward defensive, edge, out. Entire SCG reportedly "unsurprised".

 

 

  • தொடங்கியவர்

லீக், சூப்பர் சிக்ஸ், குவார்ட்டர், பைனல்... ஆனால் அரை இறுதியில் ஆஸி.யை சந்திப்பது இதுதான் முதல் முறை

 

சென்னை: இந்தியா இதற்கு முன்பு ஆஸ்திரேலியாவை உலகக் கோப்பைப் போட்டிகளில் லீக் சுற்று, சூப்பர் சிக்ஸ், காலிறுதி, இறுதிப் போட்டிகளில் சந்தித்துள்ளது. ஆனால் அரை இறுதிப் போட்டியில் சந்திப்பது இதுவே முதல் முறையாகும். அரை இறுதிப் போட்டிகளில் இதுவரை ஆஸ்திரேலியா தோல்வியைத் தழுவியதே இல்லை. அதேசமயம், உலகக் கோப்பைத் தொடரில் டோணி தலைமையிலான இந்திய அணி ஆஸ்திரேலியாவுக்கு எதிராக தோல்வியைச் சந்தித்ததில்லை. இப்படி ஏகப்பட்ட சுவாரஸ்யங்கள் இரு அணிகளுக்கு இடையே எக்கச்சக்கமாக உள்ளன.

 

லீக், சூப்பர் சிக்ஸ், குவார்ட்டர், பைனல்... ஆனால் அரை இறுதியில் ஆஸி.யை சந்திப்பது இதுதான் முதல் முறை இரு அணிகளும் உலகக் கோப்பைப் போட்டித் தொடரில் லீக் சுற்று, சூப்பர் சிக்ஸ், காலிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில் ஆடியுள்ளன. ஆனால் முதல் முறையாக அரை இறுதிப் போட்டியில் மோதவுள்ளன. இரு அணிகளும் உலகக் கோப்பையில் 10 முறை மோதியுள்ளன. இதில் 7 முறை ஆஸ்திரேலியா வென்றுள்ளது. 3 முறை இந்தியா வென்றுள்ளது. ஆஸ்திரேலியா அரை இறுதிப் போட்டியில் இதுவரை தோற்றதே இல்லை. 1999ம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவுடன் நடந்த போட்டி டை ஆனது. 5 போட்டிகளில் (1975, 87, 96, 2003, 2007) வென்று இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டோணி தலைமையில் இந்திய அணி ஒரு போட்டியில் அதாவது கடந்த உலகக் கோப்பை காலிறுதிப் போட்டியில் மோதியுள்ளது. அதில் இந்தியாவே வெற்றி பெற்றது. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இந்தியா ஒரு தோல்வியையும் சந்திக்கவில்லை.

 

மோதிய 7 போட்டிகளிலும் அது வென்றுள்ளது. மாறாக ஆஸ்திரேலியா, நியூசிலாந்திடம் தோல்வியைத் தழுவியுள்ளது. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் போட்ட ஒரே இந்தியர் அஜய் ஜடேஜா மட்டுமே. அதேசமயம், ஆஸ்திரேலியத் தரப்பில் ரிக்கி பான்டிங் 2 சதம் போட்டுள்ளார். கடந்த 2011 தொடரில் இடம் பெற்றிருந்த வீரர்களில் இவர்கள் மட்டும் இந்த உலகக் கோப்பைத் தொடரில் விளையாடுகின்றனர் - மைக்கேல் கிளார்க், ஷான் வாட்சன், பிராட் ஹாடின், மிட்சல் ஜான்சன், டோணி, விராத் கோஹ்லி, ஆர்.அஸ்வின், சுரேஷ் ரெய்னா. நடப்பு உலகக் கோப்பைத் தொடரில் இப்போதுதான் முதல் முறையாக சிட்னியில் விளையாடவுள்ளது இந்தியா.

 

ஆஸ்திரேலியாவுக்கு இது 2வது போட்டியாகும். இந்தியா அரை இறுதியில் வென்றால், இந்திய அணிக்கு அது புதிய சாதனையாகும். அதாவது தொடர்ந்து 2வது முறையாக இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்ற சாதனையை அது படைக்கும். இதற்கு முன்பு 1983 (வெற்றி), 2003, 2011 (வெற்றி) ஆகிய ஆண்டுகளில் இந்தியா இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றிருந்தது. ஆஸ்திரேலியா இதுவரை 6 முறை இறுதிப் போட்டியில் ஆடியுள்ளது. ஆஸ்திரேலியாவுடனான அரை இறுதிப் போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டால் இந்தியா, இறுதிப் போட்டிக்கு முன்னேறி விடும். காரணம், லீக் பிரிவில் ஆஸ்திரேலியாவை விட இந்தியா அதிக புள்ளிகளைப் பெற்றுள்ள காரணத்தால்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/10-facts-about-india-australia-world-cup-semi-final-sydney-223138.html

  • தொடங்கியவர்

ஆஸ்திரேலியாவிடம் பெற்ற தோல்விகள் இந்திய அணியை அச்சுறுத்தும்: ஸ்டீவ் வாஹ்
 

 

உலகக்கோப்பை அரையிறுதியில் ஆஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் இந்திய அணி, ஆஸி.யிடம் சமீபத்தில் பெற்ற தோல்விகளின் அச்சுறுத்தலை நினைவில் கொண்டிருக்கும் என்று ஸ்டீவ் வாஹ் தெரிவித்துள்ளார்.

 

தற்போது ஆஸ்திரேலிய அணியின் பல ஆலோசகர்களில் ஒருவராக இணைந்துள்ள ஸ்டீவ் வாஹ் இது குறித்து சிட்னி மார்னிங் ஹெரால்ட் பத்திரிகையில் கூறியதாவது:

"ஆஸ்திரேலியாவை எதிர்த்து விளையாடுவது இந்திய அணிக்கு மனரீதியாக கடுமையாக இருக்கும். கடந்த 2 மாதங்களாக இந்திய அணியை ஆஸ்திரேலியா சீரான முறையில் வெற்றி பெற்றுள்ளது. இந்தத் தோல்விகளை இந்திய அணி மறந்திருக்க மாட்டார்கள்.

 

இதனைக் கூறும் போதே இன்னொன்றையும் கூறிவிடுகிறேன், இந்திய அணி நல்ல ஃபார்மில் இருக்கிறது. நன்றாக விளையாடி வருகின்றனர். அந்த அணியின் பேட்டிங் எந்த இலக்கையும் துரத்தும் திறன் கொண்டது. உலகக்கோப்பையில் சிறப்பாக ஆடிவருகின்றனர், நல்ல தொடர் வெற்றியில் அந்த அணி இருந்து வருகிறது.

 

இரு அணிகளுக்குமே அச்சுறுத்தலான ஆட்டம் இது. இரு அணிகளுக்குமே நம்பிக்கை இருக்கும். ஆனால், சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தாமல் வெற்றி பெற முடியாது.

பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி நல்ல வெற்றிதான், ஆனாலும் இன்னும் கொஞ்சம் வேலை இருக்கிறது. இன்னும் ஆஸ்திரேலியாவின் சிறப்பான திறமை வெளிவரவில்லை. இது ஒருவிதத்தில் நல்லது, அதாவது இன்னும் முன்னேற்றம் தேவை என்ற நிலையில் இது நல்ல விஷயம்.

 

பயிற்சியில் அணியினருடன் இருக்கிறேன், உண்மையான ஆட்டச்சூழலை பிரதிபலிக்கும் பயிற்சி முறைகளை மேற்கொண்டு வருகிறோம். பெரிய வாய்ப்புக்கு அணி தயாராகவே உள்ளது" இவ்வாறு கூறினார் ஸ்டீவ் வாஹ்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%88-%E0%AE%85%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%80%E0%AE%B5%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B9%E0%AF%8D/article7018856.ece

209207.jpg

  • தொடங்கியவர்

உளவியல் தாக்குதலைத் தொடங்கிய ஆஸ்திரேலியா
 

போட்டியில் வெல்வதற்காக சகலவிதமான உத்திகளை யும் பயன்படுத்தத் தயங்கா தவர்கள் ஆஸ்திரேலியர்கள். களத் திலும், களத்துக்கு வெளியேயும் எதிரணியைச் சீண்டுவதிலும் மனோரீதியாக நெருக்கடி கொடுப் பதிலும் கைதேர்ந்தவர்கள்.

வரும் 26-ம் தேதி அரையிறுதியில் இந்தியாவை எதிர்கொள்ள இருக்கிறது ஆஸ்திரேலியா. இப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

இத்தொடரில் இதுவரை தோல் வியே அடையாமல் அரையிறுதி யை எட்டியுள்ளது இந்தியா. ஆஸ்திரேலியா லீக் சுற்றில் நியூஸிலாந்திடம் மட்டும் தோல்வி யடைந்துள்ளது.

உலகக் கோப்பை தொடருக்கு முன் ஆஸ்திரேலிய சுற்றுப் பயணம் இந்தியாவுக்கு அவ்வளவு மகிழ்ச்சி யானதாக இல்லை. எனவே, இப் போட்டியில் இந்தியா ஆக்ரோஷமான பதிலடியைக் கொடுக்கக் கூடும்.

 

இத்தொடரில் நியூஸிலாந்தைத் தவிர மற்ற அணிகளின் அனைத்து விக்கெட்டுகளையும் ஆஸ்திரேலியா கைப்பற்றியிருக்கிறது.

இந்தியா அனைத்துப் போட்டி களிலும் எதிரணியின் மொத்த விக்கெட்டுகளையும் வீழ்த்தியிருக் கிறது. ஆக, இரு அணிகளுமே ஏறக் குறைய சமநிலையில்தான் உள்ளன. சொந்த மண்ணில் விளை யாடுவது வேண்டுமானால் ஆஸ்திரே லியாவுக்கு கூடுதல் பலமாக இருக் கலாம். ஆனால், அதுவே நெருக் கடியும் கூட.

 

சுழலுக்கு சாதகம்

போட்டி நடக்கவிருக்கும் சிட்னி ஆடுகளம் சுழலுக்கு சாதக மானது. மற்ற ஆஸ்திரேலிய ஆடுகளங்கள் வேகப்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கும். ஆனால், சிட்னி சுழலுக்கு ஒத்துழைக்கும். இந்த ஆடுகளத்தின் பராமரிப்பாளர் டாம் பார்க்கர், மைதானத்தை வேகப்பந்து வீச்சுக்கு ஒத்துழைக்கும்படி மாற்ற வேண்டும் என ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர் ஹேஸில் வுட் வெளிப்படையாகவே கோரி யிருக்கிறார்.

“டெஸ்ட் போட்டிகளின்போது பார்க்கர் எங்களுக்கு சாதகமாக பிட்ச் அமைக்கவில்லை. அரையிறுதிப் போட்டியிலாவது வேகப்பந்து வீச்சுக்கு ஏற்ற பிட்ச் அமைக்க வேண்டும்” எனக் கூறியிருக்கிறார்.

மைக்கேல் கிளார்க்கும் வேகப் பந்து வீச்சுக்கு சாதகமான பிட்ச் அமைக்கும் கோரிக்கையை வைக்க, டாம் பார்க்கர் மறுத்துவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்திய சுழற் பந்து வீச்சை எதிர்கொள்வது உள்ளூர அவர்களைக் கவலை கொள்ளச் செய்தி ருக்கிறது. அதற்காகவே மைதா னத்தின் தன்மையை மாற்றும்படி கேப்டன் உட்பட பலரும் வேண்டுகோள் விடுக்கின்றனர். ஆனால், அதற்கு வாய்ப்பில்லை என்பதால் மன ரீதியான தாக்கு தலைத் தொடங்கியிருக்கிறது ஆஸ்திரேலியா.

 

தோல்வி நினைவிலிருக்கும்

ஆஸ்திரேலிய வீரர் கிளென் மேக்ஸ்வெல், “எங்களுக்கு எதிராகப் பெற்ற தொடர் தோல்விகள் இந்தி யாவுக்கு நினைவில் இருக்கும். ஒரு போட்டியில் கூட எங்களை வெல்லவில்லை. எனவே, அந்தத் தோல்விகளை அவர்கள் மறந்திருக்கமாட்டார்கள். அதே நிலையைத் தொடர நாங்கள் விரும்புகிறோம்.

இந்தியாவை வீழ்த்த புதிய திட்டமெல்லாம் தேவையில்லை. டெஸ்ட் தொடரிலும், முத்தரப்பு தொடரிலும் இந்தியாவை வென் றதைப் போலவே வெல்வோம். அஸ்வின், ஜடஜோ பந்துகளை சாதாரணமாகவே எதிர்கொள் வோம். இந்தியா-ஆஸ்திரேலியா போட்டியை பெரிய போட்டியாக பலரும் சொல்கிறார்கள். அப்படி யெல்லாம் இல்லை” எனக் கூறி யுள்ளார்.

வரும் வியாழக்கிழமை போட்டி நடைபெறவுள்ளது. அதற்குள் இன்னும் என்னென்ன தந்திரங்களை கையாளுமோ ஆஸ்திரேலியா.

 

ஸ்டீவ் வா கருத்து

ஆஸ்திரேலியாவின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் வா, இதேபோன்ற கருத்தைக் கூறியிருக்கிறார்.

ஆஸ்திரேலியாவுடனான போட்டி என்பது இந்தியாவுக்கு மனரீதியாக சவாலாக இருக்கும். அண்மையில் இந்தியாவை ஆஸ்திரேலியா தொடர்ந்து தோற்கடித்திருக்கிறது. அரையிறுதிப் போட்டிக்காகத் தயாராகிக் கொண்டிருக்கும் இந்திய வீரர்களை அந்தத் தொடர் தோல்விகள் மன ரீதியாக அச்சுறுத்தும். இரு அணிகளும் நம்பிக்கையாக உணர்ந்தாலும், போட்டியில் அதைக் காட்டாவிட்டால் சறுக்கிவிடும் எனத் தெரிவித்துள்ளார் ஸ்டீவ் வா.

ஜோ டேவ்ஸ், இந்திய முன்னாள் பந்து வீச்சு பயிற்சியாளர்:

 

சுற்றுப்பயண தோல்வியிலிருந்து மீண்டு, ஆஸ்திரேலியா மீது ஆதிக்கம் செலுத்த பாகிஸ்தானின் வகாப் ரியாஸ் போல பந்து வீசி தாக்குதல் தொடுக்க இந்தியா முயற்சி செய்யும். ஆனால், அதில் அவர்களுக்கு சற்று சிரமம் ஏற்படும்.

 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%89%E0%AE%B3%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AF%8A%E0%AE%9F%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/article7022902.ece

  • தொடங்கியவர்

e8kejc.png


9znlv8.jpg


5loz5y.jpg

  • தொடங்கியவர்

உலகக் கிண்ணம் எமக்குத் தான் : டிவில்லியர்ஸ்
 

 

இம்முறை உலகக் கிண்ணம் எங்களுக்குதான் என்பதில் சந்தேகமேயில்லை, எங்களை யாராலும் தடுக்க முடியாது, என தென்னாபிரிக்க அணித் தலைவர்  ஏபிடி வில்லியர்ஸ் தெரிவித்துள்ளார்.

 

ஆக்லாந்தில்  நாளை நடைபெறவுள்ள உலகக் கிண்ண முதலாவது அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து-தென்னாபிரிக்க அணிகள் பலப் பரீட்சை நடத்த உள்ளன.

இதற்காக இரு நாட்டு வீரர்களும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இதன் போது பத்திரிகையாளர்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே தென்னாபிரிக்க அணித் தலைவர் டி வில்லியர்ஸ் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

 

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

தென்னாபிரிக்க அணி தற்போது மிகுந்த தன்னம்பிக்கையுடன் உள்ளது. காலிறுதிச் சுற்றுகளில் வெற்றி பெற்றதில்லை என்ற அவப்பெயரை இந்த உலகக் கிண்ண போட்டியில் நீக்கியுள்ளோம்.

 

தென்னாபிரிக்க அணி தனது முழுப் பலத்தோடு விளையாடினால், அதை எந்த அணியாலும் தடுக்க முடியாது.

உலகக் கிண்ணத் தொடர்களில் மட்டும் தென்னாபிரிக்க அணி சிறப்பாக ஆடுவதில்லை என்ற அவப்பெயர் இருந்தது. அத்தனை உணர்ச்சிவசங்களுக்கு மத்தியிலும்  மோதி, போராடி வெற்றி பெற்றுள்ளோம்.

 

பழைய கதைகள் மீது எங்களுக்கு நம்பிக்கையில்லை. அன்றைய போட்டியில் எப்படி விளையாடுகிறோமோ அதைப் பொறுத்துதான் வெற்றி, தோல்வி அமையும் என்பதில் மட்டுமே எனக்கு நம்பிக்கையுள்ளது.

 

உலகக் கிண்ண  தொடர்களில் தென்னாபிரிக்கா இதற்கு முன்பு பல சோதனைகளை சந்தித்துள்ளது. ஆனால் இம்முறை நாம் புத்துணர்ச்சியுடன் உள்ளோம். நியூசிலாந்துக்கு எதிராக நாளை இடம்பெறவுள்ள போட்டியை ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளோம்.

நியூசிலாந்து பந்து வீச்சாளர் அடம் மில்னே காயத்தால் விலகியிருப்பது அவர்களுக்கு பெரும் இழப்புதான். ஆனால், என்னைப் பொறுத்தவரை, பிற அணிகளின் நிறை, குறைகளை அதிகமாக அலசி ஆராய்ந்து கொண்டிருப்பதில் விருப்பமில்லை.

 

எங்கள் அணி எப்படி விளையாடுகிறது என்பது மட்டுமே எனக்கு முக்கியம். தென்னாபிரிக்க அணி சிறப்பாக ஆடினால், கண்டிப்பாக வெற்றி எங்களுக்குதான் கிடைக்கும்.
இதேவேளை, காலிறுதியில் அப்படி ஒரு அபார வெற்றி பெற்ற பிறகு, அணியை மாற்றம் செய்வது கஷ்டமான காரியம்தான். ஆனாலும், சில மாற்றங்கள் அணியில் செய்யப்படலாம் என டிவில்லியர்ஸ்  மேலும் தெரிவித்தார்.

 

http://www.virakesari.lk/articles/2015/03/23/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%8E%E0%AE%AE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BE%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D

  • தொடங்கியவர்

இந்தியாவுக்கு எதிராக முன்னணி சுழற்பந்து வீச்சாளராகத் திகழ்வேன்: கிளென் மேக்ஸ்வெல்
 

 

சிட்னி ஆட்டக்களம் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்புக்கு இணங்க இந்தியாவுக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதியில் தனது பங்கு முக்கியத்துவம் வாய்ந்தது என்று ஆஸ்திரேலிய அதிரடி ஆல்ரவுண்டர் கிளென் மேக்ஸ்வெல் தெரிவித்துள்ளார்.

தென் ஆப்பிரிக்கா-இலங்கை அணிகள் சிட்னியில் மோதிய காலிறுதியில் இம்ரான் தாஹிர் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்ற டுமினி ஹேட்ரிக் சாதனை நிகழ்த்தினார்.

இதனையடுத்து கிளென் மேக்ஸ்வெல் கூறும்போது, “நான் இந்தத் தொடரில் 2 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளேன். கேப்டன் மைக்கேல் கிளார்க் என்னிடமிருந்து என்ன எதிர்பார்க்கிறாரோ அதற்கேற்ப நான் செயல்பட்டு வருகிறேன்.

 

ஜான் டேவிசன் இடம் (ஆஸி. சுழற்பந்து பயிற்சியாளர்) நான் பேசினேன். அவர் எனது பந்துவீச்சு குறித்து நம்பிக்கை தெரிவித்தார். ரன் கட்டுப்படுத்தும் எனது பணியிலிருந்து சற்றே மேம்பட்டு ஒரு முன்னணி சுழற்பந்து வீச்சாளராக இந்தியாவுக்கு எதிராக செயலாற்ற விரும்புகிறேன். நான் இந்த விவகாரத்தில் கடுமையாக உழைத்து வருகிறேன். இன்னும் கொஞ்சம் ஆற்றலுடன் வீச முயற்சி செய்து வருகிறேன்.

 

வேகப்பந்து பின்னணியிலிருந்து வந்தவன் நான். ஒரு ஆஃப் ஸ்பின்னராக நான் கொஞ்சம் அதிக தூரம் வந்து பந்துவீசி வருகிறேன். அதனால் இம்முறை ரன் அப் கொஞ்சம் குறையும் என்று நினைக்கிறேன்.

 

எனது பந்துவீச்சு முன்னேற்றத்துக்காக அனைவரிடமும் நான் பேசி வருகிறேன். மாற்றங்கள் கைகொடுக்கும் என்று நம்புகிறென்” என்றார் கிளென் மேக்ஸ்வெல்.

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%8E%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95-%E0%AE%AE%E0%AF%81%E0%AE%A9%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%A3%E0%AE%BF-%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%B3%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%95%E0%AE%A4%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%87%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BF%E0%AE%B3%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%AE%E0%AF%87%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B2%E0%AF%8D/article7024267.ece
 

  • கருத்துக்கள உறவுகள்

அரங்கில் இருந்து பார்ப்பது எப்படி இருக்கும்? :D

  • தொடங்கியவர்

அரையிறுதியில் வார்த்தை மோதல்கள் உண்டு: ஆஸ்திரேலிய வீரர் ஜேம்ஸ் பாக்னர்
 

 

இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் உலகக்கோப்பை அரையிறுதியில் ஆடும்போது நிச்சயம் இரு அணியினரிடையேயும் வார்த்தை மோதல்கள் ஏற்படும் என்கிறார் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஃபாக்னர்.

சிட்னி மைதானம் இந்திய-ஆஸ்திரேலியா வீரர்களிடையே நிகழும் வார்த்தைப் போர்களுக்கு புகழ்பெற்றது. 2008ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய வீரர் சைமண்ட்ஸ் மற்றும் ஹர்பஜன் சிங் இடையே நடைபெற்ற வார்த்தைப் போர் பிரசித்தி பெற்றது. ஹர்பஜன் சிங் மீது 3 போட்டிகள் தடை விழுந்தது. ஆனால் இந்திய அணியினர் தொடரை ரத்து செய்வோம் என்ற விதத்தில் மிரட்டியதையடுத்து தடை நீக்கபப்ட்டது.

 

அப்போது முதலே இந்திய-ஆஸ்திரேலிய அணியினரிடையே ரத்தக் கொதிப்பு அதிகரித்து வருவதை நாம் பல போட்டிகளில் பார்த்து வருகிறோம்.

இந்த முறை நடைபெற்ற டெஸ்ட் தொடரிலும் விராட் கோலி, மிட்செல் ஜான்சன், மிட்செல் ஸ்டார்க், இசாந்த் சர்மா, வருண் ஆரோன், ஷிகர் தவன், என்று அனைவரும் வார்த்தைப் போர்களில் ஈடுபட்டனர்.

 

இந்நிலையில் இந்திய அணிக்கு ரசிகர்களின் ஆதரவு அதிகமிருக்கும் சிட்னி மைதானத்தில் உலகக்கோப்பை அரையிறுதி நடைபெறுகிறது.

ஜேம்ஸ் பாக்னர் இந்தப் போட்டியில் வீரர்களின் உணர்வு நிலை பற்றி கூறும் போது, “நிச்சயம் வார்த்தைப் போர் நிகழும். இந்த ஆட்டம் உண்மையில் கடினமான போட்டியாகவே இருக்கும்.

 

எப்போதும் ‘ஸ்லெட்ஜிங்’ இருக்கவே செய்யும். அது இல்லையென்றால்தான் பிரச்சினை இருக்கிறது என்று நான் நினைக்கிறேன். ஆட்டத்தின் இயல்பு அது. அரையிறுதிப் போட்டி என்றால் சும்மாவா? எந்த அணியும் பின் தங்கிவிடாது.” என்றார்.

வார்னர் டெஸ்ட் தொடரின் போது ரோஹித் சர்மாவை நோக்கி, ‘ஆங்கிலத்தில் பேசு’ என்றார். இப்போது 'அவர் ஒன்றும் பேசமாட்டார். இப்போதெல்லாம் வார்னர் அதிகம் பேசுவதில்லை.” என்றார்.

 

ஸ்பின் ஒரு தீர்மானிக்கும் காரணியாக இருக்காது: பாக்னர்

ஜேம்ஸ் பாக்னர் மேலும் கூறுகையில், “அஸ்வின், ஜடேஜா உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்கள். நீண்ட காலமாக இவர்கள் இந்திய அணிக்கு ஆடி வருகின்றனர். தென் ஆப்பிரிக்கா-இலங்கை போட்டியைப் பார்த்த போது அவ்வளவாக பந்துகள் ஸ்பின் ஆகவில்லை என்று தெரிந்தது. (இவர் போட்டியை பார்க்கவில்லை என்று தெரிகிறது ஏனெனில் இம்ரான் தாஹிர், டுமினியிடம் இலங்கை சுருண்டது)

 

சிட்னியில் இந்திய அணிக்கு ரசிகர்களின் ஆதரவு பயங்கரமாக இருக்கும் என்பது பற்றி நாங்கள் நேற்று இரவு உணவின் போது பேசினோம். கடைசியாக முத்தரப்பு ஒருநாள் தொடரில் விளையாடும் போது இந்திய ரசிகர்களின் ஆதரவு அந்த அணிக்கு நன்றாக இருந்ததை உணர்ந்தோம். இந்திய அணி மீது அதன் ரசிகர்கள் காட்டும் உணர்வு மிகவும் அபாரமானது. நிச்சயம் அரையிறுதியிலும் இந்திய ரசிகர்களின் ஆதிக்கம் இருக்கும்.

இரண்டு டாப் அணிகள் அரையிறுதியில் மோதுகின்றன. ஆட்டம் நிச்சயம் பரபரப்பாக இருக்கும். தீவிரம் அதிகம் இருக்கும்.” என்றார் பாக்னர்.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B5%E0%AE%BE%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A4%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%89%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81-%E0%AE%86%E0%AE%B8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%87%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B0%E0%AE%B0%E0%AF%8D-%E0%AE%9C%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D-%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AE%B0%E0%AF%8D/article7024405.ece

 

 

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.