Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக கிண்ண கிரிக்கெட் போட்டி - 2015 செய்திகளும் கருத்துக்களும்

Featured Replies

  • தொடங்கியவர்

நியூசீலாந்து
v
தென்ஆப்ரிக்கா
(14:00 local | 01:00 GMT | 02:00 CET)

  • Replies 827
  • Views 43.8k
  • Created
  • Last Reply
  • தொடங்கியவர்

சுழற்பந்து வீச்சு இந்திய அணிக்கு பெரிய அனுகூலம்: இயன் சாப்பல்
 

 

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை அரையிறுதியில் இந்திய சுழற்பந்து வீச்சு இந்திய அணிக்கு பெரிய அனுகூலமாக திகழும் என்று ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் இயன் சாப்பல் கூறியுள்ளார்.

 

தனியார் தொலைக்காட்சி சானல் ஒன்றில் இயன் சாப்பல் தெரிவிக்கும் போது, “சிட்னி பிட்சில் எப்போதும் பந்துகள் திரும்பும். இலங்கை-தென் ஆப்பிரிக்கா போட்டியின் போது பந்துகள் அவ்வளவாகத் திரும்பாதது பற்றி அனைவரும் பேசினர். ஆனால் தென் ஆப்பிரிக்காவில் வீசியது மெதுவாக வீசும் பவுலர்களேயன்றி ஸ்பின்னர்கள் அல்லர்.

ஆனால், அஸ்வின் பந்தில் விஷயத்தை வைத்திருப்பவர். நிச்சயம் அவர் சிட்னி ஆட்டக்களத்திலிருந்து சுழற்பந்துக்கான அனுகூலங்களை பெறுவார்.

 

மேலும் இந்திய அணியில் ஒரு உயர் தர இடது கை சுழற்பந்து வீச்சாளர் இருந்தால் ஆஸ்திரேலியா நிச்சயம் பிரச்சினைகளைச் சந்திக்கும். ஆஸ்திரேலிய பேட்ஸ்மென்கள் எப்போதும் உயர்தர இடது கை சுழற்பந்துகளில் கடும் பிரச்சினைகளைச் சந்தித்துள்ளனர்.

சுழற்பந்துவீச்சு இந்திய அணியின் மிகப்பெரிய பலம். வேகப்பந்து ஆட்டக்களமாக இருந்தால் ஆஸ்திரேலியாவுக்கு அனுகூலம். இம்முறை இரு அணிகளுக்குமான வெற்றி வாய்ப்பை சமபகுதியாகவே நான் பிரிக்கிறேன்” என்றார்.

 

இதே நிகழ்ச்சியில் பிரையன் லாரா, இந்திய-ஆஸ்திரேலிய மோதல் பற்றி கூறும் போது, “வேகப்பந்து ஆட்டக்களங்களில் ஆஸ்திரேலியாவுக்கு அனுகூலங்கள் அதிகம் என்பதை ஒப்புக் கொள்கிறேன், ஆனால் இந்திய வேகப்பந்து வீச்சையும் குறைத்து மதிப்பிட முடியாது. ஷமி, யாதவ், மோஹித் சர்மா ஆகியோருடன் இந்திய அணி ஒவ்வொரு அணியையும் முழுதும் ஆட்டமிழக்கச் செய்துள்ளது.

 

இயன் சாப்பல் கூறுவது போல் ஆட்டம் இருதரப்புக்கும் சரிசம வாய்ப்பையே கொண்டுள்ளது.

ஆனால், முதல் முறையாக இந்தத் தொடரில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பை உறுதியாகக் கூற முடியாத சூழல் உள்ளது.

 

பிட்ச் ஒரு முக்கியமான விஷயம். நான் கேப்டனாக இருந்தால் மைதானத்தில் இறங்கும் வரை முன் கூட்டியே தீர்மானம் எடுக்க மாட்டேன். அனைத்து பிரிவுகளிலும் இரு அணிகளும் நன்றாகத் திகழகின்றன. ஸ்பின்னைப் பொறுத்தவரை இந்தியாவுக்கு கூடுதல் அனுகூலம். ஆஸ்திரேலியாவோ வேகப்பந்துவீச்சின் மீது நம்பிக்கை வைத்துள்ள அணி.” இவ்வாறு கூறினார் பிரையன் லாரா.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%9A%E0%AF%81%E0%AE%B4%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%9A%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81-%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%AA%E0%AF%86%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A9%E0%AF%81%E0%AE%95%E0%AF%82%E0%AE%B2%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%87%E0%AE%AF%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%9A%E0%AE%BE%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B2%E0%AF%8D/article7024712.ece

 

  • தொடங்கியவர்

21/1 3.3 overs

  • கருத்துக்கள உறவுகள்

31/2 in 7.5 overs

  • தொடங்கியவர்

87/2 after 21.4 overs

  • கருத்துக்கள உறவுகள்

South Africa 281/5 in 43 Overs

 

NZ 72/1 in 7 overs (43 over target is 298). Macallum gone for 59 runs in 26 balls.

  • தொடங்கியவர்

காலிறுதிப் போட்டிகள் - காணாமல்போன விறுவிறுப்பு
 

பதிநான்கு அணிகள் ஒரு மாத காலம் போராடிய பிறகு 8 அணிகள் அடுத்த சுற்றுக்கு வந்தன. கடுமையான போட்டிகளும் புதுப்புது சாதனைகளும் எதிர்பாராத திருப்பங்களும் கணிக்கக்கூடிய போட்டிகளுமாகக் கலவையாக நடந்துவந்த 2015 உலகக் கோப்பைப் போட்டி விறுவிறுப்பான கட்டத்தை எட்டிவிட்டது என்று ரசிகர்கள் நினைத்தார்கள்.

ஆனால் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட காலிறுதி ஆட்டங்கள் சப்பென்று ஆகி ரசிகர்களை ஏமாற்றிவிட்டன. நான்கு போட்டிகளும் முடிவதற்கு முன்பே முடிவு தெரிந்த உப்புச் சப்பற்ற ஆட்டங்களாகிவிட்டன. இத்தனைக்கும் காலிறுதிப் போட்டிகளில் இந்திய வங்கதேசம் போட்டியைத் தவிர வேறு எந்தப் போட்டியும் புள்ளிவிவர அடிப்படையில் பார்த்தால் சமமற்ற மோதல் அல்ல. ஆனால் வென்ற அணிகள் செலுத்திய ஆதிக்கம் எதிரணிகளை ஒன்றுமில்லாமல் ஆக்கிவிட்டது.

 

தென்னாப்பிரிக்காவுக்கும் இலங் கைக்கும் இடையே நடந்த போட்டியை எடுத்துக்கொள்ளுங்கள். முதல் சுற்றில் அற்புதமாக ஆடிய இலங்கை அணி தென்னாப்பிரிக்காவுக்குப் பெரும் சவாலாக விளங்கும் எனக் கருதப்பட்டது. குமார் சங்ககாராவின் அசாத்தியமான ஆட்டமும் திலகரத்னே தில்ஷான், லஹிரு திரிமானி போன்றவர்களின் துணை யும் சேர்ந்து இலங்கையை அரையிறு திக்கு வரக்கூடிய அணியாக முன்னிறுத் தின.

 

தென்னாப்பிரிக்க அணி உலகக் கோப்பையில் இதுவரை நாக் அவுட் சுற்றை ஒருமுறைகூடத் தாண்டிய தில்லை. அபாரமான திறமைகள் கொண்ட அந்த அணியின் ஆட்டம் உலகமே வியக்கும் அளவுக்கு இருக்கும். ஆனால் முக்கியமான போட்டிகளில் நெருக்கடி யைத் தாக்குப்பிடிக்க முடியாமல் திணறி, தோற்றுப் பரிதாபமாக வெளியேறும்.

இதனாலேயே ‘திணறல் திலகம்’ எனப் பெயர் பெற்ற அணி அது. மாறாக, இலங்கையோ பெரிய போட்டிகளில் எப்போதுமே சிறப்பாக ஆடியிருக்கிறது. எனவே இலங்கையே அரை இறுதிக்குப் போகும் என்று பலரும் கணித்தார்கள்.

 

ஆனால் மார்ச் 17 அன்று புதிய வரலாறு படைக்கப்பட்டது. இலங்கை திக்கித் திணறி 133 ரன் எடுத்து ஆட்ட மிழந்தது. தென்னாப்பிரிக்கா அந்த ரன்களைச் சர்வ சாதாரணமாக எடுத்து அரையிறுதிக்குச் சென்றது.

 

இந்தியா-வங்கதேச ஆட்டம்

இந்திய வங்கதேசப் போட்டியைப் பொறுத்தவரை தொடக்கத்திலிருந்தே பரபரப்பு எதுவும் இல்லை. இந்தியா அரை யிறுதியில் பாகிஸ்தானைச் சந்திக்குமா ஆஸ்திரேலியாவோடு மோதுமா என தாயக்கட்டை உருட்டத் தொடங்கி விட்டார்கள் ரசிகர்கள்.

இந்தியாவுக்கு அரையிறுதி வாய்ப்பு என்பது கிட்டத்தட்ட உறுதி என்றே ரசிகர்களும் வல்லுனர் களும் உணர்ந்தார்கள் போட்டிக்கு முந்தைய அலசல்கள், முன்னோட் டங்கள், வாட்ஸ் அப் போன்ற ஊடகங் கள் மூலம் பகிர்ந்து கொள்ளப் பட்ட தகவல்கள் ஆகி யவை இதை உறுதிசெய்தன.

 

போட்டியும் அதற் கேற்பவே அமைந்தது. அஜிங்க்ய ரஹானே, விராட் கோலி ஆகியோர் எதிர் பார்த்த அளவு ஆடவில்லை என்றாலும் ரோஹித் சர்மா, சுரேஷ் ரெய்னா, ரவீந்திர ஜடேஜா ஆகியோர் இந்தியாவைப் பாது காப்பான இடத்துக்குக் கொண்டு சேர்த்தார்கள். 303 என்னும் இலக்கை நோக்கி ஆடிய வங்கதேச அணியை 193 ரன்னுக்குள் இந்தியப் பந்து வீச்சாளர்கள் சுருட்டினார்கள். தொடர்ந்து ஏழாவது முறையாக எதிரணியை ஆல் அவுட் ஆக்கும் சாதனையைப் புரிந்தார்கள்.

பெரிய சவால் எதுவும் இல்லாத இந்தப் போட்டியில் வங்கதேசப் பந்து வீச்சாளர் ரூபெல் ஹுசைன் கோலியைப் பார்த்துக் கத்தி உணர்ச்சிவசப்பட்டதும் நடுவரின் முடிவுகளை வைத்துச் சர்ச்சை எழுப்பியதும் செய்திகளின் பரபரப்புக்கு மட்டுமே உதவின.

30 ஓவர்வரை அதிக விக்கெட்களை இழக்காமல் இருப்பது என்னும் வியூ கத்தை இந்தியா பெருமளவில் வெற்றிகர மாகக் கடைப்பிடித்துவருகிறது. மட்டை யாளர்களில் ஓரிருவர் சறுக்கினாலும் மற்றவர்கள் காப்பாற்றும் வழக்கம் தொடர் கிறது. இவை இரண்டும் நம்பிக்கை அளிக்கின்றன.

 

ஆஸி. - பாக். ஆட்டம்

ஒப்பீட்டளவில் ஆஸ்தி ரேலியா வலுவான அணியாக இருந்தாலும் பாகிஸ்தான் கணிக்க முடியாத அணி என் பதால் போட்டிக்கு முன்பு சற்றுப் பரபரப்பு நிலவியது. தென்னாப்பிரிக்காவை வென்ற விதத்தை வைத்துப் பார்க்கும் போது இந்த அணியின்மீது நம்பிக்கை யும் பிறந்தது. ஆனால் அந்த நம்பிக்கை யைச் சிதறடிக்கும் விதத்தில் பாகிஸ் தானின் ஆட்டம் அமைந்தது.

 

213 ரன் என்பது எந்த அணிக்கு எதிராகவும் நல்ல இலக்கு அல்ல. ஆஸ்திரேலியாவைப் பொறுத்தவரை சொல்லவே வேண்டாம். வஹாப் ரியாஸின் அனல் பறக்கும் பந்து வீச்சுக்கு விழுந்த விக்கெட்கள்தான் பாகிஸ்தானுக்கு மிஞ்சிய ஒரே ஆறுதல்.

 

கம்பீரமான பிரவேசம்

நியூஸிலாந்து அணியும் ஆட்டத்தை முற்றிலுமாக ஆதிக்கம் செலுத்திக் கம்பீரமாக அரையிறுதிக்குள் நுழைந் தது. ஒரு நாள் அபார ஆட்டம், அடுத்த நாள் தடுமாற்றம் என்று ஊசலாடிக் கொண்டிருந்த மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு முதலில் மட்டை பிடிக்கும் வாய்ப்பு கிடைக்கவில்லை. பந்து வீச்சில் கூர்மையும் கட்டுக்கோப்பும் இல்லை.

மார்ட்டின் கப்டிலின் வேகமும் விவேக மும் கூடிய பொறுப்பான ஆட்டத்தால் அந்த அணி 393 ரன்களைக் குவித்து வசதியான இடத்தில் அமர்ந்து கொண்டது. அசாத்தியமான இந்த இலக்கைத் துரத்திய மேற்கிந்திய தீவுகள் ஆவேசமாக ஆடினாலும் விக்கெட்டு களைப் பறிகொடுத்துத் தோல்வியைத் தழுவியது. முதுகு வலியோடு அவதிப் பட்டுக்கொண்டு ஆடிய கிறிஸ் கெயில் 33 பந்துகளில் 61 ரன் அடித்தார்.

 

15 பந்துகளில் 27 ரன்கள் எடுத்த சாமுவேல்ஸ் டேனியல் வெட்டோரியின் அதி அற்புதமான கேட்சுக்குப் பலியானார். சாமுவேல்ஸும் கெயிலும் கொஞ்ச நேரம் நியூஸிலாந்தை மிரட்டிவிட்டார்கள் என்றுதான் சொல்ல வேண்டும். இவர்கள் ஆட்டமிழந்தாலும் சமி, ரஸ்ஸல், ஹோல்டர் ஆகியோர் ஆவேசமாக ஆட, மே.இ. அணி 30 ஓவர்களுக்குள் 250 ரன்னை எட்டியது. ஓவருக்கு 8.19 ரன். தேவைப்பட்ட ரன் விகிதம் 7.86. ரன் வேகத்துக்கு இணையாக விக்கெட்டும் விழுந்திருக்காவிட்டால் மே.இ. தீவு வரலாறு படைத்திருக்கலாம்.

 

மே.இ. தீவுகள் அணியின் பிரச் சினையே அதன் சீரற்ற தன்மைதான். இதே பிரச்சினைதான் பாகிஸ்தானையும் பீடித்தது. பெருமளவில் சீராக ஆடிக் கொண்டிருந்த இலங்கை நெருக்கடியில் சொதப்பியது.

 

காலிறுதியில் தோற்ற அணிகள் மேலும் சிறப்பாக ஆடியிருக்க முடியும். அப்படி ஆடாததால் நான்கு ஆட்டங் களும் முடிவதற்கு முன்பே முடிவு தெரிந்த ஆட்டங்களாக அமைந்து விட்டன. சிறிய அணிகள் எனச் சொல்லப் படும் அயர்லாந்து போன்ற சில அணிகள் முதல் சுற்றுப் போட்டிகளில் போராடிய அளவுக்குக்கூட பெரிய அணிகள் காலிறுதிச் சுற்றில் போராடவில்லை.

 

இந்நிலையில் 2015 உலகக் கோப்பையின் காலிறுதிச் சுற்றை மந்தமான அத்தியாயம் என்றுதான் சொல்ல வேண்டும். அரை இறுதியிலாவது இந்த நிலை மாறுமா என்பது இன்னமும் களத்தில் நிற்கும் அந்த நான்கு அணிகளின் கைகளில்தான் இருக்கிறது.
 

 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AA%E0%AF%8D-%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%BE%E0%AE%A3%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8B%E0%AE%A9-%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81/article7027232.ece

  • தொடங்கியவர்

ஆக்லாந்தை அல்லோகல்லப்படுத்திய மெக்கல்லம் அவுட்.... அடக்கி வாசிக்கும் நியூசிலாந்து...!

 

ஆக்லாந்து: உலக கோப்பை கிரிக்கெட்டின் முதல் அரை இறுதி ஆட்டத்தில் நியூசிலாந்து வெற்றிக்கு 43 ஓவர்களில் 298 ரன்கள் குவிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மழை காரணமாக மாற்றப்பட்ட விதிமுறைப்படி இந்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதனிடையே அதிரடியாக ஆட்டத்தை தொடங்கிய நியூசிலாந்து, அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் சரிந்ததால் சற்று நிதான பாதைக்கு திரும்பியுள்ளது. ஆக்லாந்தை அல்லோகல்லப்படுத்திய மெக்கல்லம் அவுட்.... அடக்கி வாசிக்கும் நியூசிலாந்து...! உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இன்றைய முதலாவது அரை இறுதியில் தென்னாப்பிரிக்கா அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

 

அந்த அணியின் அம்லா, டீ காக் இருவரும் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர். நியூசிலாந்து அணியின் சவுதி, பவுல்ட் ஆகியோர் தொடக்கம் முதலே நேர்த்தியான பந்து வீச்சை மேற்கொண்டனர். 3.4வது ஓவரில் தென்னாப்பிரிக்கா 21 ரன்கள் எடுத்த நிலையில் ஆம்லா விக்கெட்டை பறிகொடுத்தது. அவர் 14 பந்துகளில் 10 ரன்களை எடுத்திருந்தார். களத்தில் இருந்த டீ காக்குடன் டூபிளிஸ்சிஸ் இணைந்து கொண்டார். ஆனால் டீ காக்கும் நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 7.5வது ஓவரில் தென்னாப்பிரிக்கா 31 ரன்களை எடுத்த நிலையில் டீ காக் அவுட் ஆனார். அவர் 17 பந்துகளில் 14 ரன்களை எடுத்திருந்தார்.

 

ஆக்லாந்தை அல்லோகல்லப்படுத்திய மெக்கல்லம் அவுட்.... அடக்கி வாசிக்கும் நியூசிலாந்து...! பின்னர் டுபிளிஸ்சிஸூடன் ரோசவ் இணைந்தார். இருவரும் நிலைத்து நின்று நிதானமாக ரன்களை சேர்க்கத் தொடங்கினர். 25 ஓவர்கள் முடிவில் ஒருவழியாக 2 விக்கெட்டுகள் இழப்புக்கு 108 ரன்களை எடுத்தது தென்னாப்பிரிக்கா. இருப்பினும் 26.1வது ஓவரில் ரோசவ் 39 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார். அப்போது தென்னாப்பிரிக்கா 114 ரன்களை எடுத்தது. ஆனால் அதன்பிறகுதான் ஆட்டத்தின் போக்கே மாறியது. கேப்டன் டி வில்லியர்ஸ் களமிறங்கி, பவுண்டரியும், சிக்சருமாக வெளுக்க ஆரம்பித்தார்.

 

பொறுத்தது போதும் என்ற முடிவுக்கு வந்த டுப்ளசிசும் பொங்கி எழுந்து அடித்தார். ஆக்லாந்தை அல்லோகல்லப்படுத்திய மெக்கல்லம் அவுட்.... அடக்கி வாசிக்கும் நியூசிலாந்து...! இதனால் 38 ஓவர்களிலேயே தென் ஆப்பிரிக்க அணி, 3 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 216 ரன்களை எடுத்தது. ஆனால், தென் ஆப்பிரிக்காவின் ராசியோ என்னவோ தெரியவில்லை, திடீரென வானம் பொத்துக்கொண்டு மழை ஊற்ற ஆரம்பித்துவிட்டது. எனவே ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

 

. டுபிளசிஸ் 82 ரன்களுடனும், டி வில்லியர்ஸ் 38 பந்துகளில் எடுத்த 60 ரன்களுடனும் களத்தில் நின்றனர். சுமார் ஒரு மணி நேரத்திற்கு பிறகு போட்டி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால் டக்வொர்த் லீவிஸ் விதிமுறைப்படி, ஓவர்கள் குறைக்கப்பட்டுள்ளன. இரு அணிகளுக்குமே, 43 ஓவர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிர்ணயிக்கப்பட்ட 43 ஓவர்களில் தென் ஆப்பிரிக்கா, 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் எடுத்தது. இருப்பினும் டக்வொர்த் லீவிஸ் முறைப்படி, நியூசிலாந்து வெற்றிக்கு 43 ஓவர்களில் 298 ரன்கள் எடுக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. மாற்றப்பட்ட விதிமுறைப்படி 3 பவுலர்கள் அதிகபட்சமாக 9 ஓவர்களும், 2 பவுலர்கள் அதிகபட்சமாக 8 ஓவர்களும் வீச முடியும். நியூசிலாந்துக்கு கட்டாய பேட்டிங் பவர் பிளே 9 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. விருப்ப பேட்டிங் பவர்பிளே 4 ஓவர்களாக குறைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேட் செய்ய வந்த நியூசிலாந்தின் தொடக்க வீரர் பிரெண்டன் மெக்கல்லம், தனது வழக்கமான பாணியில் அதிரடியாக ஆடினார்.

 

ஸ்டெயின், மோர்க்கல் போன்ற உலகத் தரம் வாய்ந்த பவுலர்களும் அவரது அதிரடி தாக்குதலில் தப்பவில்லை. அப்பாட்டை நீக்கிவிட்டு பிளாண்டரை அணியில் சேர்த்துக் கொண்ட தென் ஆப்பிரிக்க அணி நிர்வாகம், ஏன்டா, சேர்த்தோம் என்று தலையில் கை வைக்கும் அளவுக்கு பிளாண்டரை பின்னி எடுத்தார் மெக்கல்லம். ஆக்லாந்தை அல்லோகல்லப்படுத்திய மெக்கல்லம் அவுட்.... அடக்கி வாசிக்கும் நியூசிலாந்து...! அந்த ஓவர்: இதையடுத்து 6வது ஓவரை வீச சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகீரை அழைத்தார் கேப்டன் டி வில்லியர்ஸ். அதுதான், போட்டியின் திருப்பமாகவும் அமைந்தது. அதுவரை அதிரடியாக மட்டை வீசிய நியூசிலாந்து, அந்த ஓவரை மெய்டனாக விட்டுக் கொடுத்தது. கடந்த போட்டியில் இரட்டை சதம் அடித்த கப்தில்தான், அந்த ஆறு பந்துகளையும் சந்தித்தார்.

 

7வது ஓவரை வீச வந்தார், மோர்க்கல். முதல் பந்திலேயே அடித்து ஆட முயன்ற பிரெண்டன் மெக்கல்லம், ஸ்டெயினிடம் கேட்ச் கொடுத்து அவுட் ஆனார். 6.1வது ஓவரில் 71 ரன்கள் குவித்த நியூசிலாந்து தனது முதல் விக்கெட்டை அப்போது பறிகொடுத்தது. இதையடுத்து தென் ஆப்பிரிக்க பவுலர்கள் ஆதிக்கம் ஆரம்பித்தது. 8.5வது ஓவரில் மோர்கல் பந்தில் கேன் வில்லியம்சன் கிளீன் பௌல்ட் ஆகி வெளியேறினார். எனவே கப்திலும், டைலரும் பொறுமையாக ஆட தொடங்கியுள்ளனர். ரன் ரேட் கணிசமாக குறையத் தொடங்கியுள்ளது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/world-cup-2015-south-africa-win-toss-elect-bat-against-newzealand-223220.html

  • தொடங்கியவர்

ஆளில்லா விமானம்.. 4கே தொழில்நுட்பம்.. அசத்துகிறது உலக கோப்பை லைவ் ஒளிபரப்பு!

 

ஆக்லாந்து: அரையிறுதி கிரிக்கெட் போட்டிகள் ட்ரோன் கேமரா மூலம், உயரமான இடத்தில் இருந்து படம் பிடிக்கப்படுவதால் புதிய அனுபவத்தை உணர்கிறார்கள் ரசிகர்கள். உலக கோப்பை கிரிக்கெட் போட்டிகள் தற்போது உச்சகட்டத்தை எட்டியுள்ளன. முதலாவது அரையிறுதி போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதின. அந்த போட்டியை ட்ரோன் எனப்படும் ஆளில்லா குட்டி விமானம் மூலம் படம்பிடித்து ஒளிபரப்பியது ஸ்டார் ஸ்போர்ட்ஸ்.

2mwuwck.jpg

ஆளில்லா விமானம்.. 4கே தொழில்நுட்பம்.. அசத்துகிறது உலக கோப்பை லைவ் ஒளிபரப்பு! மேலேயிருந்து எடுக்கப்படும் வீடியோக்களில் மைதானத்தின் முழு பரப்பையும் அருமையாக பார்க்க முடியும். டாப் கோணங்களில் வந்த வீடியோக்களை பார்க்கும்போது, புது அனுபவமாக இருப்பதாக ரசிகர்கள் கூறுகின்றனர். மேலும், அரையிறுதி போட்டிக்கு பிறகு 4கே தொழில்நுட்பத்தையும் நேரடி ஒளிபரப்பு சேனல் கொண்டுவந்துள்ளது. இதற்காக நவீன கேமராக்கள் மூலம் படம் பிடிக்கப்பட்டு அது நேரடியாக ஒளிபரப்பப்பட்டுவருகிறது.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/new-broadcast-features-set-make-icc-cricket-world-cup-cricket-223253.html

  • கருத்துக்கள உறவுகள்

நியூசிலாந்து வெற்றி..!

  • கருத்துக்கள உறவுகள்

இதுதான் விளையாட்டு. வாழ்வா சாவா போராட்டத்தில் நியூசிலாந்து வெற்றி
தென்னாபிரிக்கா அபாரம் ஆனாலும் தோல்வி

  • கருத்துக்கள உறவுகள்

நியுசிலாந்து 4 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்று இறுதிப் போட்டிக்கு தெரிவாகிறது !!!!!

போன தடவை இந்த தடவை இரு முறையும் தென்னாபிரிக்காவை நம்பி ஏமாந்துவிட்டேன் . :(

  • கருத்துக்கள உறவுகள்

Dale Steyn இன் வாழ்க்கை stain ஆகிவிட்டது..! :lol:

  • தொடங்கியவர்

வீழ்ந்தது தென் ஆப்பிரிக்கா: சிலிர்ப்பூட்டும் வெற்றியுடன் நியூஸிலாந்து இறுதிக்கு தகுதி
 

 

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், எல்லியட்டின் அபார பேட்டிங்கின் துணையுடன், தென் ஆப்பிரிக்காவை வீழ்த்திய நியூஸிலாந்து இறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது.

இப்போட்டியில், தென் ஆப்பிரிக்க அணியை நியூஸிலாந்து டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

நடப்பு உலகக் கோப்பை ஆட்டங்களிலேயே ரசிகர்களை சிலிர்க்க வைத்த மிக முக்கிய போட்டியாக இது திகழ்ந்தது.

வரலாறு படைத்தது நியூஸி.

ஏழாவது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறிய நியூஸிலாந்து அணி, முதல் முறையாக உலகக் கோப்பை இறுதிப் போட்டிக்கு முன்னேறி புதிய வரலாறு படைத்தது.

 

அதேவேளையில், 4-வது முறையாக உலகக் கோப்பை அரையிறுதிக்கு முன்னேறியுள்ள தென் ஆப்பிரிக்கா இம்முறை ஒரு மெல்லிய கோட்டில் இறுதி வாய்ப்பை இழந்தது.

நியூஸிலாந்து தரப்பில் விவரிக்க முடியாத குதூகலமும், தென் ஆப்பிரிக்கா தரப்பில் சொல்லணா துயரமும் இந்த அரையிறுதிப் போட்டி மூலம் தொற்றிக் கொண்டுள்ளது.

 

ஆட்ட நாயகன் எல்லியட்

இப்போட்டியில் 43 ஓவர்களில் 298 ரன்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய நியூஸிலாந்து 42.5 ஓவரில் 6 விக்கெட்டுகளை இழந்து 299 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

இக்கட்டான நிலையில் களமிறங்கிய எல்லியட் கடைசி வரை ஆட்டமிழக்காமல் 73 பந்துகளில் 84 ரன்கள் சேர்த்து, அணியின் வெற்றிக்கு வித்திட்டார். அவரே ஆட்டநாயகனாக அறிவிக்கப்பட்டார். மறுமுனையில் விட்டோரி 7 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆட்டத்தின் துவக்கத்தில் மெக்கல்லமின் அதிரடி ஆட்டம், நியூஸிலாந்துக்கு வலு சேர்த்தது. மத்தியில் ஆண்டர்சன் மற்றும் டெய்லரின் நிதானம் கைகொடுத்தது.

 

பரபரப்பான கடைசி ஓவர்:

கடைசி ஓவரில் 12 ரன்கள் தேவை என்ற நிலையில், சிலிர்க்க வைக்கும் ஆட்டமாக உருபெற்றது இந்தப் போட்டி. அந்தக் கடைசி ஓவரை ஸ்டெயின் வீசினார். முதல் பந்தில் ஒரு ரன், இரண்டாவது பந்தில் ரன் ஏதும் இல்லை. மூன்றாவது பந்து வீசுவதற்கு முன்பு ஸ்டெயினுக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது.

அதன்பின், மூன்றாவது பந்து பவுண்டரி ஆனது. நான்காவது பந்தில் ஒரு ரன். ஐந்தாவது பந்தில் எல்லியட் சிக்ஸ் விளாசினார். வெற்றி!

இந்தப் போட்டி 'டை' ஆகிவிட்டால், நியூஸிலாந்து இறுதிக்கு முன்னேறும் நிலை. ஏனெனில், லீக் போட்டிகளின் பட்டியலில் அந்த அணி டாப்பில் இருந்ததே காரணம்.

மிக மோசமான ஃபீல்டிங்குக்கு முத்தாய்ப்பாக, 42-வது ஓவரின் கடைசி பந்தில் எல்லியட்டின் கேட்ச்சை தவறவிட்டது தென் ஆப்பிரிக்க அணி.

 

தவறவிட்ட மற்றுமொரு ரன் அவுட்

40.3-வது ஓவரில் எலியட் 2 ரன்கள் எடுத்தார். அப்போது, விக்கெட் கீப்பர் டி காக் அவரை ரன் செய்யும் வாய்ப்பைத் தவறவிட்டார். ரூசோவின் த்ரோவை தவறவிட்டு, வெறும் கையால் ஸ்டம்பை தட்டினார். நல்ல வாய்ப்பு தவறியது.

40.1-வது ஓவரில் ஸ்டெயின் பந்துவீச்சில் ரூஸோவிடம் கேட்ச் கொடுத்து ராஞ்சி ஆட்டமிழந்தார். அவர் 7 பந்துகளில் 8 ரன்கள் எடுத்திருந்தார்.

 

'உயர்ந்த' கேட்ச்

37.5-வது ஓவரில் மோர்கல் பந்துவீச்சில் ஆண்டர்சன் விளாசினார். அந்தப் பந்து மிக உயரத்தில் எழுந்தது. அந்தப் பந்தை டூபிளெஸ்ஸி அற்புதமாக கேட்ச் பிடித்தார். பந்து மிக உயரத்தில் எழும்பியதால், முடிவு மூன்றாவது நடுவருக்குச் சென்றது. காரணம், ஸ்பைடர் கேமராவின் ஒயர்களில் பந்து பட்டிருந்தால், அது 'டெட் பால்' ஆகியிருக்கும். ஆனால், அப்படி நிகழவில்லை என்பதால், அது அவுட். ஆண்டர்சன் 57 பந்துகளில் 58 ரன்கள் எடுத்திருந்தார்.

 

தடுமாறிய டிவில்லியர்ஸ்... தப்பிய ஆண்டர்சன்

31.3-வது ஓவரில் ஒரு ரன் எடுக்க முயன்றார் எல்லியட். எதிர்முனையில் இருந்த ஆண்டர்சன் தான் அவரை அழைத்தார். பின்னர், சட்டென முயற்சியைக் கைவிட்ட இலியட், ஆண்டர்சனை திருப்பி அனுப்பினார். அதற்குள் தன் கையில் சிக்கிய பந்தை ஸ்டம்பில் அடிக்க முயன்றார் டிவில்லியர்ஸ். ஆனால், அந்தப் பந்து கையை விட்டு நழுவியது. அவரது கை பட்டதால் ஸ்டம்பின் பைல்ஸ் இரண்டும் கீழே விழுந்தன. அதன்பின், பந்தை மீண்டும் எடுத்து ஸ்டம்பில் தட்டினார். அப்போது, ஆண்டர்சன் கிரீஸை எட்டியிருக்கவில்லை. ஆனால், ஏற்கெனவே பைல்ஸ் விழுந்துவிட்டதால் அது ரன் அவுட் இல்லை என்று அறிவிக்கப்பட்டது.

டிவில்லியர்ஸ்சின் தடுமாற்றத்தால் ஆண்டர்சன் தப்பினார். இது, மிக முக்கிய விக்கெட்டாக கருதப்படுகிறது. தென் ஆப்பிரிக்க கேப்டனின் இந்த ஃபீல்டிங் தவறு, ஆட்டத்தின் போக்கையை மாற்றிவிடக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

ஆட்டமிழந்தார் டெய்லர்

21.4 ஓவரில் டுமினி பந்துவீச்சில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார் ராஸ் டெய்லர். அவர் 39 பந்துகளில் 30 ரன்கள் சேர்த்திருந்தார்.

கப்தில் ரன் அவுட்

இம்ரான் தாஹிர் வீசிய 17.1-வது ஓவரில் ஒரு ரன் எடுக்க முயன்றார் டெய்லர். எதிர்முனையில் இருந்த கப்தில் கிரீஸைத் தொடுவதற்கு சற்று முன்பு சிறப்பாக ரன் அவுட் செய்யப்பட்டார். ஆம்லாவின் அற்புதமான த்ரோ தென் ஆப்பிரிக்காவுக்கு கை கொடுத்தது. கப்தில் 38 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினார்.

 

அதிரடி மெக்கல்லம் அவுட்

நியூஸிலாந்து அணியின் கேப்டன் மெக்கல்லம் அட்டகாசத் துவக்கத்தைத் தந்தார். முதல் ஓவரில் 4-வது பந்தில் சிக்ஸர் அடித்ததன் மூலம் அதிரடியை ஆரம்பித்த அவர், தொடர்ந்து தென் ஆப்பிரிக்காவின் ஒவ்வொரு பந்துவீச்சாளரையும் சொல்லி அடித்தார்.

ஸ்டெயின், ஃபிலாண்டர், மோர்கல் என எவரது யுக்தியும் எடுபடாமல் போனது. குறிப்பாக ஸ்டெயின் வீசிய ஆட்டத்தின் 5-வது ஓவரில் 2 சிக்ஸர், 3 பவுண்டரிகளோடு 24 ரன்களை மெக்கல்லம் சேர்த்தார். இதோடு 22 பந்துகளில் அரை சதத்தையும் கடந்தார்.

 

6-வது ஓவரில் இம்ரான் தாஹிரின் சுழலை சந்தித்த மார்டின் கப்டில், ஆடத் திணறினார். 5 ஓவரில் 71 ரன்கள் குவித்திருந்த நியூஸிலாந்துக்கு 6-வது ஓவரில் ரன் ஏதும் வராமல் போனது. இது சற்று அழுத்தத்தை கொடுத்தது. 7-வது ஓவரின் முதல் பந்தில் மெக்கல்லம் ஆட்டமிழந்தார்.

மோர்கல் வீசிய அந்தப் பந்தை மிட் ஆன் திசையில் இருந்த ஃபீல்டரின் தலைக்கு மேலே அடிக்க மெக்கல்லம் முயற்சித்தார். ஆனால் பந்து அங்கு நின்றிருந்த ஸ்டெய்ன் கைகளில் உட்கார்ந்தது. அவர் 26 பந்துகளில் 59 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

 

அவரைத் தொடர்ந்து, 8.5-வது ஓவரில் மோர்கல் பந்துவீச்சில் வில்லியம்சன் 11 பந்துகளில் 6 ரன்கள் எடுத்த நிலையில் பவுல்ட் ஆனார்.

 

தென் ஆப்பிரிக்கா இன்னிங்ஸ்:
மில்லர் அதிரடி: நியூஸி.க்கு 43 ஓவர்களில் 298 ரன்கள் இலக்கு

மில்லரின் கடைசி நேர அதிரடியின் துணையுடன் உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில், டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, நியூஸிலாந்து அணிக்கு 43 ஓவர்களில் 298 ரன்களை இலக்காக நிர்ணயித்தது தென் ஆப்பிரிக்க அணி.

 

மழையின் குறுக்கீடு காரணமாக 7 ஓவர்கள் குறைக்கப்பட்ட இந்தப் போட்டியில், தென் ஆப்பிரிக்க அணி 43 ஓவர்களில் 5 விக்கெட் இழப்புக்கு 281 ரன்கள் குவித்தது.

டிவில்லியர்ஸ் 45 பந்துகளில் 65 ரன்களும், டுமினி 4 பந்துகளில் 8 ரன்களும் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்கவில்லை.

டூபிளெஸ்ஸி, டிவில்லியர்ஸ் மற்றும் மில்லர் ஆகியோரின் உறுதுணையுடன் தென் ஆப்பிரிக்காவின் ரன் எண்ணிக்கை வெகுவாக உயர்ந்தது.

 

மில்லர் மிரட்டல் அடி:

மில்லர் 42.2 ஓவரில் ஆண்டர்சன் பந்துவீச்சில் ராஞ்சியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 18 பந்துகளில் 49 ரன்களை விளாசினார். மில்லரின் மிரட்டல் அடியின் காரணமாக, நியூஸிலாந்துக்கு ஓரளவு வலுவான இலக்கை நிர்ணயிக்க முடிந்தது.

 

டூபிளெஸ்ஸி அவுட்:

ஆட்டம் 43 ஓவர்களாக குறைக்கப்பட்ட பின், 39-வது ஓவரை வீசிய கோரே ஆண்டர்சன், இரண்டாவது பந்திலேயே சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த டூ ப்ளெஸ்ஸியை பெவிலியனுக்கு அனுப்பினார். ரோஞ்சியிடம் கேட்ச் கொடுத்த டூபிளெஸ்ஸி 107 பந்துகளில் 82 ரன்கள் சேர்த்திருந்தார்.

 

முந்தைய பதிவுகள்:

 

மழையின் குறுக்கீடு காரணமாக, போட்டியின் ஓவர்கள் 43 ஆக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, இன்னும் 5 ஓவர்கள் மட்டுமே உள்ளது. தென் ஆப்பிரிக்க இன்னிங்ஸில் இனி பவர் ப்ளேவும் கிடையாது. நியூஸிலாந்து தரப்பில் பவுலர்களுக்கு தலா ஒரு ஓவர் குறைகிறது. | டக்வொர்த் லூயிஸ் முறைப்படி, நியூஸிலாந்துக்கு இலக்கும் மாற்றியமைக்கப்படும்.

தென் ஆப்பிரிக்காவுக்கும் நியூஸிலாந்துக்கும் இடையிலான உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி, மழையின் குறுக்கீடு காரணமாக தொடர்வதில் தாமதம் ஆனது.

மழையின் வருகைக்கு முன்பு வரை, தென் ஆப்பிரிக்கா 38 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் என்ற சற்றே உறுதியான நிலையில் இருந்தது. டூபிளெஸ்ஸி 82 ரன்களுடனும், டிவில்லியர்ஸ் 60 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். மழை காரணமாக ஒரு மணி நேரமாக ஆட்டம் தடைபட்டுள்ளது.

முன்னதாக, ஆம்லா 10 ரன்கள் எடுத்திருந்தபோது, போல்ட் பந்துவீச்சில் பவுல்ட் ஆனார். அவரைத் தொடர்ந்து மற்றொரு துவக்க ஆட்டக்காரரான டி காக் 14 ரன்களில் ஆட்டமிழந்தார். போல்ட் பந்துவீச்சில் சவுத்தியிடம் கேட்ச் கொடுத்து அவர் பெவிலியன் திரும்பினார்.

 

துவக்க ஆட்டக்காரர்களை இழந்த நிலையில், டூபிளெஸ்ஸி - ரூசோ இணை பொறுப்புடன் நிதானமாக பேட் செய்து அணியை சரிவில் இருந்து மீட்டது. சற்றே அதிரடியாக ஆடத் தொடங்கியபோது, ரூசோ ஆண்டர்சனின் பந்துவீச்சில் கப்திலிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அவர் 39 ரன்களைச் சேர்த்திருந்தார்.

அதைத் தொடர்ந்து, ஜோடி சேர்ந்த டூபிளெஸ்ஸி - டிவில்லியர்ஸ் இணை மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி, அணிக்கு வலு சேர்க்கும் வகையில் ரன் குவிக்கத் தொடங்கியது. டூபிளெஸ்ஸி அரைசதத்துக்குப் பின் அதிரடியில் ஈடுபட்டார். டிவில்லியர்ஸோ களம் இறங்கியது முதல் அதிரடி ரன் வேட்டையில் ஈடுபட்டார் என்பது கவனிக்கத்தக்கது.

 

ஆக்லாந்தில் நடைபெற்று வரும் இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி முதலில் பேட் செய்ய தீர்மானத்து களமிறங்கியது.

 

போல்ட் சாதனை

தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக 2-வது விக்கெட்டை எடுத்தபோது, ஓர் உலகக் கோப்பையில் அதிக விக்கெட் (21) வீழ்த்திய நியூஸிலாந்து வீரர் என்ற பெருமையைப் பெற்றார் டிரென்ட் போல்ட். 1999 உலகக் கோப்பையில் ஜெஃப் அலாட் 20 விக்கெட் வீழ்த்தியதே நியூஸிலாந்து பவுலர் ஒருவரின் முந்தைய சாதனையாக இருந்தது.
 

http://tamil.thehindu.com/sports/%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%86%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%86%E0%AE%B1%E0%AF%8D%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A8%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%82%E0%AE%B8%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BE%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%87%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AF%81-%E0%AE%A4%E0%AE%95%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF/article7027323.ece

  • தொடங்கியவர்

இதயத்தை நொறுக்கிய நியூசிலாந்து... தேம்பித் தேம்பி அழுத மார்க்கல், டிவில்லியர்ஸ், டுப்ளசிஸ்!

2l8b4v8.jpg

ஆக்லாந்து: உலக கோப்பையில் மீண்டும் ஒருமுறை பெற்ற ஏமாற்றத்தால் தென் ஆப்பிரிக்க வீரர்கள் கண் கலங்கியபடி விடைபெற்றனர். இதை பார்த்த கோடிக்கணக்கான ரசிகர்களின் இதயங்களும் ஒரு நிமிடம் நொறுக்கித்தான் போனது. மழை காரணமாக மாற்றப்பட்ட விதிப்படி ஆட்டத்தை தொடர்ந்த தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து போட்டி, கடைசி ஓவர் வரை விறுவிறுப்பாக இருந்தது. கடைசி ஓவருக்கு 12 ரன்கள் தேவைப்பட்ட நிலையில், 5வது பந்தில் ஒரு சிக்சருடன் எலியட் அந்த ரன்களை பெற்றுக் கொடுத்தார்.

 

 

இதயத்தை நொறுக்கிய நியூசிலாந்து... தேம்பித் தேம்பி அழுத மார்க்கல், டிவில்லியர்ஸ், டுப்ளசிஸ்! இந்த தோல்வியை தென் ஆப்பிரிக்க வீரர்களால் ஜீரணிக்கவே முடியவில்லை. குறிப்பாக, சுமார் 7 அடி உயரம் கொண்ட மோர்னே மோர்க்கல் மைதானத்தில் அமர்ந்து தேம்பி தேம்பி அழ ஆரம்பித்துவிட்டார். டுப்ளசிஸ், டிவில்லியர்ஸ் கண்களில் இருந்தும் கண்ணீர் பெருக்கெடுத்தது. ஏனெனில், ஆம்லா, டிவில்லியர்ஸ், ஸ்டெயின், மோர்க்கல் போன்ற வீரர்கள் கொண்ட இந்த அணியால் உலக கோப்பையை வெல்ல முடியாவிட்டால் வேறு எந்த அணி வெல்லும் என்ற ஆதங்கம் அவர்களுக்கு.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/de-villiers-morkel-tears-after-world-cup-exit-223285.html

  • தொடங்கியவர்

வாய்ப்பு தர மறுத்து விரட்டிய தென் ஆப்பிரிக்காவை, உலக கோப்பையை விட்டே துரத்திய எலியட்!

 

 

ஆக்லாந்து: இட ஒதுக்கீடு நடைமுறையால் தென் ஆப்பிரிக்காவுக்காக ஆட வாய்ப்பு கிடைக்காமல் விரட்டிவிடப்பட்ட கிரான்ட் எலியட் இன்று, நியூசிலாந்து அணியின் ஹீரோவாக மாறியுள்ளார். தென் ஆப்பிரிக்காவின் உலக கோப்பை கனவை தனது பேட்டால் விரட்டியடித்துள்ளார். கிரான்ட் எலியட்... இந்த பெயர் நியூசிலாந்து கிரிக்கெட் ரசிகர்களின் மனதில் இருந்து இனிமேல் மறையப்போவதில்லை. அரையிறுதி போட்டியில், நியூசிலாந்து தடுமாறிய நேரத்தில் களம் கண்டு 73 பந்துகளில் 84 ரன்களை குவித்து, கடைசி ஓவரின் 5வது பந்தில், சிக்சர் அடித்து, வெற்றிக்கான ரன்னையும் பெற்றுக் கொடுத்து முதல் முறையாக நியூசிலாந்தை இறுதி போட்டிக்குள் அழைத்து சென்றவரை தலைமுறைகளும் வாழ்த்தப்போகின்றன.

 

வாய்ப்பு தர மறுத்து விரட்டிய தென் ஆப்பிரிக்காவை, உலக கோப்பையை விட்டே துரத்திய எலியட்! ஆனால், இத்தனைக்கும் எலியட் ஒன்றும், நியூசிலாந்தின் மண்ணின் மைந்தன் கிடையாது. எந்த தென் ஆப்பிரிக்காவை அழ, அழ விரட்டினாரோ, அதே தென் ஆப்பிரிக்காவில் பிறந்து தவழ்ந்தவர்தான் இந்த எலியட். ஆம்.. 36 வயதான எலியட், தென் ஆப்பிரிக்காவிலிருந்து விடைபெற்று நியூசிலாந்தில் தஞ்சம் புகுந்தது 2001ம் ஆண்டில்தான்.

 

அதன்பிறகு நியூசிலாந்து அணியில் இடம் பிடித்து இன்று நாயகன் ஆகியுள்ளார். வாய்ப்பு தர மறுத்து விரட்டிய தென் ஆப்பிரிக்காவை, உலக கோப்பையை விட்டே துரத்திய எலியட்! இவர் தென் ஆப்பிரிக்காவை விட்டு வெளியேற காரணம், திறமையிருந்தும், அந்த நாட்டு கிரிக்கெட் அணியில் இடம் கிடைக்காததுதான். ஏனெனில், தென் ஆப்பிரிக்காவில் 1998 முதல் கிரிக்கெட் அணி தேர்விலும் இட ஒதுக்கீடு முறை கொண்டுவரப்பட்டது. இனங்களின் அடிப்படையில் அங்கு கிரிக்கெட் வீரர்கள் தேர்வு நடைபெறுகிறது. இட ஒதுக்கீடு நடைமுறையால் நன்மைகள் விளைந்ததை போல, இப்படி தீமைகளும் ஏற்படுகின்றன போலும்.

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/johannesburg-born-grant-elliott-does-dhoni-knock-south-africa-out-of-world-cup-223281.html

வாய்ப்பு தர மறுத்து விரட்டிய தென் ஆப்பிரிக்காவை, உலக கோப்பையை விட்டே துரத்திய எலியட்! ஆனால், இத்தனைக்கும் எலியட் ஒன்றும், நியூசிலாந்தின் மண்ணின் மைந்தன் கிடையாது. எந்த தென் ஆப்பிரிக்காவை அழ, அழ விரட்டினாரோ, அதே தென் ஆப்பிரிக்காவில் பிறந்து தவழ்ந்தவர்தான் இந்த எலியட். ஆம்.. 36 வயதான எலியட், தென் ஆப்பிரிக்காவிலிருந்து விடைபெற்று நியூசிலாந்தில் தஞ்சம் புகுந்தது 2001ம் ஆண்டில்தான்.

 

 

நன்றி நவீனன். எனக்கு இது ஒரு புதிய தகவல்.

  • தொடங்கியவர்

நன்றி நவீனன். எனக்கு இது ஒரு புதிய தகவல்.

 

  இன்று வர்ணனையாளர்கள் உரையாடினார்கள் போட்டி நடந்து கொண்டு இருந்தபோது அப்பதான் எனக்கும் தெரியும்

 

  • தொடங்கியவர்

தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட தென் ஆப்பிரிக்கா...

 

ஆக்லாந்து: பீல்டிங்குக்குப் பெயர் போனது தென் ஆப்பிரிக்கா. ஆனால் இன்று நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் படு பரபரப்பாக செயல்பட்ட அவர்கள் பீல்டிங்கில் பெரிய அளவில் சொதப்பி, தங்களது தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டனர். தன் தலையில் தானே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்ட தென் ஆப்பிரிக்கா...! நியூசிலாந்து வீரர்கள் சிறப்பாக ஆடியது ஒரு பக்கம் இருந்தாலும் கூட, தங்களது மோசமான பீல்டிங்கால், நியூசிலாந்தை சிறப்பாக ஆட தென் ஆப்பிரிக்கர்கள் அனுமதித்து விட்டனர் என்று சொல்வதே சரியாக இருக்கும்

 

. பல கேட்ச்களை தென் ஆப்பிரிக்கா இன்று மிஸ் செய்தது. அருமையான ரன் அவுட்கள் மிஸ் ஆகின.

 

ஸ்டெயின் வீசிய 3வது ஓவரில் ஒரு ரன் அவுட் மிஸ் ஆனது.

 

இந்த ஓவரின் 2-வது பந்தை கப்தில் கவர் திசையில் அடித்து ஒரு ரன் எடுக்க முயன்றார். ஆனால் எதிர்முனையில் இருந்த மெக்கல்லம் ஓடிவரவில்லை. பாதி மைதானத்தில் நின்ற கப்திலை டுமினி ரன் அவுட் செய்ய தவறினார்.

 

ஸ்டெயின் வீசிய 32-வது ஓவரின் 3-வது பந்தை எல்லியாட் பாயிண்ட் திசையில் அடித்தார். அப்போது எதிர்முனையில் இருந்த கோரி ஆண்டர்சன் ரன் எடுப்பதற்காக ஓடினார். ஆனால் எல்லியாட் வர வேண்டாம் என்றார். இதையடுத்து ஆண்டர்சன் திரும்பி ஓடி வந்தார். அதற்குள் பந்து டி வில்லியர்ஸ் கைக்கு வந்தது. பந்தை பிடிப்பதற்கு முன் கையால் ஸ்டம்பை தட்டினார் டி வில்லியர்ஸ். அப்போது பெய்ல்ஸ் கீழே விழுந்தது. வெறும் கையால் ஸ்டம்பைக் கலைத்ததால் இந்த ரன் அவுட் வாய்ப்பும் செல்லாமல் போனது.

 

41-வது ஓவரை ஸ்டெயின் வீசினார். இந்த ஓவரின் 3-வது பந்தை எல்லியாட் அடித்து விட்டு 2 ரன்னுக்கு ஓடினார். அப்போது ரூஸோவிடம் இருந்து வந்த பந்தை விக்கெட் கீப்பர் குவின்டான் டி காக் பிடித்து ஸ்டம்பை தாக்க தவறினார். இதனால் எல்லியாட் 64 ரன்னில் அவுட்டாகும் கண்டத்தில் இருந்து தப்பினார்.

 

இதேபோல் 42-வது ஓவரை மார்னி மோர்கல் வீசினார். இந்த ஓவரின் 2-வது பந்தை எல்லியாட் தூக்கி அடித்தார். 3 பீல்டர்கள் ஓடினார்கள். ஆனால் பந்து அவர்களுக்கு மத்தியில் விழுந்தது.

 

இதே ஓவரின் கடைசி பந்தையும் எல்லியாட் தூக்கி அடித்தார். பந்து மிட்விக்கெட் திசையில் உயரமாக சென்றது. பந்து பஹார்தியான் கையில் விழும் வேளையில் டுமினி குறுக்கே வந்து கெடுத்து விட்டார்.

 

கடைசி ஒவரை ஸ்டெயின் வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தை வெட்டோரி சந்தித்தார். பந்தை வெட்டோரியால் எதிர்கொள்ள முடியவில்லை. இதனால், பந்து விக்கெட் கீப்பரான டி காக் கைக்கு சென்றது. அந்த வேளையில் எல்லியாட் எதிர்திசையில் இருந்து ஓடி வந்தார். அப்போது, டி காக் நேராக வீசி எல்லியாட்டை ரன் அவுட் செய்ய தவறினார்.

 

இதனால் அடுத்த பந்தை சிக்சருக்கு விரட்டிய எல்லியாட், நியூசிலாந்து அணியை வெற்றி பெற வைத்தார். என்ன கொடுமை என்றால் ஸ்டெயின் பந்து வீச்சின்போதுதான் பல சொதப்பல்கள் அரங்கேறின என்பது.

 

 

Read more at: http://tamil.oneindia.com/news/sports/cricket/sa-failed-fielding-223288.html

  • தொடங்கியவர்

சிலிர்ப்பூட்டும் அரையிறுதி : துரதிர்ஷ்டவச தோல்வியுடன் வீழ்ந்தது ஆபிரிக்கா: 23 ஆண்டுகளுக்கு பின்னர் முதற் தடவையாக இறுதிக்குள் நுழைந்தது நியூசிலாந்து
 

2pyvvb4.jpg

உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவியது. தென்னாபிரிக்காவில் பிறந்த எலியட்டின் அதிரடியால் நியூசிலாந்து வெற்றி பெற்று முதல் முறையாக இறுதி போட்டிக்கு முன்னேறியது.

 

உலகக் கிண்ணத் தொடரின் இன்று முதலாவது அரை இறுதி ஆட்டம் நடைபெற்றது. நியூசிலாந்து-தென்னாபிரிக்கா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற தென்னாபிரிக்கா துமலில் துடுப்பெடுத்தாடியது.

 

தென்னாபிரிக்கா முதலில் தடுமாற்றத்தை எதிர்நோக்கியது. தென்னாபிரிக்கா  30.3-வது ஓவரில் 3 விக்கெட் இழப்பிற்கு 132 ஓட்டங்களை மாத்திரம் எடுத்திருந்தது.

டி வில்லியர்ஸ் 9 ஓட்டங்களுடனும், டுபிளிஸ்சிஸ் 50 ஓட்டங்களுடனும் விளையாடினர். டிவில்லியர்ஸ் இறங்கியதும், விளையாட்டு விறுவிறுப்பை எட்டியது. பந்துவீச்சில் அச்சுறுத்திய நியூசிலாந்தை டிவில்லியர்ஸ் அதட்டினார்.

 

ஆனால் தென்னாபிரிக்காவின் எழுச்சியில் மழை குறுக்கிட்டது. தென்னாபிரிக்கா 38 ஓவர் விளையாடி இருந்த நிலையில் மழைபெய்தது. மழை காரணமாக ஆட்டம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

 

தென்னாபிரிக்கா  38 ஓவர்களுக்கு 3 விக்கெட்களை இழந்து 216 ஓட்டங்களை எடுத்து இருந்தது. மழை நியூசிலாந்து அணிக்கு சாதகமான சூழ்நிலையை ஏற்படுத்தி கொடுத்தது.
மழை நின்ற பின்னர் ஓவர்கள் 43 குறைக்கப்பட்டது. தென்னாபிரிக்கா வீரர் மில்லர் அதிரடி காட்டினார். டிவில்லியர்ஸ் மற்றும் மில்லர் இறுதி கட்டத்தில் அபாரம் காட்டியதால் தென்னாபிரிக்கா 5 விக்கெட் இழப்பிற்கு 281 ஓட்டங்களகளை எட்டியது.

 

இதனையடுத்து நியூசிலாந்து அணி 43 ஓவர்களுக்கு 298 ஓட்டங்களை பெற வேண்டும் என இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டது.

நியூசிலாந்து அணிக்கு மெக்கல்லம் அபாரமான தொடக்கத்தை ஏற்படுத்தி கொடுத்தார். மெக்கல்லம் 26 பந்துகளில், 59 ஓட்டங்களை(8 பவுண்டரிகள், 4 சிக்சர்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அவருடன் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர் குப்திலும் அபாரம் காட்டினார். 34 ஓட்டங்களுடன் குப்தில் ஆட்டிழந்தார்.

இதனையடுத்து தென்னாபிரிக்கா கை வெகுவாக ஓங்கியது. நியூசிலாந்தின் ஆதிக்கத்தை தடுக்கும் விதமாக 4 விக்கெட்களை கைப்பற்றியது. ஆனால் எலியட்டின் விக்கெட்டை மட்டும் எடுக்க தென்னாபிரிக்கா தவறிவிட்டது.

26pes.jpg

நழுவவிட்ட வாய்ப்புக்கள்
நல்ல வாய்ப்புகளையும் தென்னாபிரிக்கா நழுவவிட்டது. எலியட் கடைசி வரையில் அதிரடியாக ஆடி 84 ஓட்டங்களை குவித்தார். இறுதியில் நியூசிலாந்து 42.5 ஓவர்களிலே 299 ஓட்டங்களை எடுத்து, தென்னாபிரிக்காவின் இலக்கை தகர்த்தது.

நியூசிலாந்து 4 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

 

தென்னாபிரிக்காவில் பிறந்த எலியட்
இரு அணிகளும் சமபலத்துடன் இருந்ததால் ஆட்டத்தில் விறுவிறுப்பு களைகட்டியது. கடைசியில் 2 ஓவர்களுக்கு 5 ஓட்டங்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில், தென்னாபிரிக்காவிற்கு இருந்த நம்பிக்கையை, தென்னாபிரிக்காவில் பிறந்து நியூசிலாந்து அணிக்காக விளையாடிய எலியட் தகர்த்தார். கடைசி பந்தில் சிக்சர் அடித்து நியூசிலாந்து ரசிகர்களை மகிழ்ச்சி வெள்ளத்தில் மிதக்க செய்தார்.

 

இரண்டு ஒற்றுமை
தென்னாபிரிக்கா , நியூசிலாந்து அணிகள் இடையே இரண்டு ஒற்றுமை இருந்து வருகிறது. இரு அணிகளுமே கிண்ணத்தை வென்றது கிடையாது. அத்துடன் இரு அணிகளுக்கும் இதுவரை இறுதிப்போட்டி எட்டாக் கனியாகவே இருந்துவந்தது. தற்போது நியூசிலாந்து இறுதி போட்டிக்கு முன்னேறிவிட்டது. ஆனால் தென்னாபிரிக்காவிற்கு தான் சோகம் தொடருகிறது. இந்த முறையும் தோல்வி அடைந்து வெளியேறியது.

 

7-வது முறையாக அரை இறுதி
நியூசிலாந்து அணி 7-வது முறையாக அரை இறுதிக்குள் அடியெடுத்து வைத்துள்ளது. 1975, 1979, 1992, 1999, 2007, 2011 ஆகிய ஆண்டுகளில் அரை இறுதியுடன் நியூசிலாந்து அணியின் கிண்ண கனவு கலைந்து இருக்கிறது.

 

23 ஆண்டுகளுக்கு பிறகு
23 ஆண்டுகளுக்கு பிறகு சொந்தமண்ணில் நடைபெறும் அரை இறுதியில் வெற்றி பெற்று முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியுள்ளது. தென்னாபிரிக்கா  அணி 4-வது முறையாக அரை இறுதிக்குள் நுழைந்தது.

 

4வது முறையாக தோல்வி
1992, 1999, 2007 ஆகிய ஆண்டுகளில் அரை இறுதியில் தென்னாபிரிக்கா அணி துரதிர்ஷ்டவசமாக தோல்வியை தழுவியது.

14j6s9i.jpg

கண்ணீரில்..
இந்த முறையும் தோல்வியையே தழுவியது. பெரும் போராட்டத்திற்கு பின்னர் தோல்வியடைந்த தென்னாபிரிக்கா வீரர்கள் அழுந்துவிட்டனர். நியூசிலாந்து வீரர்கள் மகிழ்ச்சியிலும், தென்னாபிரிக்கா வீரர்கள், ரசிகர்கள் மீண்டும் சோகத்துடனும் அழுதுவிட்டனர்.

தென்னாபிரிக்க அணியின் தலைவர்கள் டி வில்லியர்ஸ், கண்ணீர் விட்டு அழுததை மைதானத்தில் காண முடிந்தது. டி வில்லியர்ஸ் மட்டுமல்ல மோர்கல், டுபிளிஸ்சிஸ், ஸ்டெயின் ஆகியோரும் கண்ணீர் விட்டு கதறினர்.

 

வீரர்கள் அழுவதை பார்த்த மைதானத்தில் இருந்த தென்னாபிரிக்க ரசிகர்களும் அழுதனர். டி வில்லியர்சின் நாடு கடந்த ரசிகர்களையும் அவரது அழுகை சோகத்திற்குள்ளாக்கியது.

http://www.virakesari.lk/articles/2015/03/24/%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%82%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D-%E0%AE%85%E0%AE%B0%E0%AF%88%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B1%E0%AF%81%E0%AE%A4%E0%AE%BF-%E0%AE%A4%E0%AF%81%E0%AE%B0%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%B7%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%B5%E0%AE%9A-%E0%AE%A4%E0%AF%8B%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF%E0%AF%81%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%B5%E0%AF%80%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A4%E0%AF%81-%E0%AE%86%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%BE-23

உண்மையில் நானும் அழுது விட்டேன் .
 
இரு அணிகளில் ஒன்று தான் கோப்பை வெல்ல வேண்டும் என்பது எனது அவா. ஆனால் இரண்டும் அரையிறுதியில் சந்திக்க வேண்டி வந்தமை துரதிஸ்டமே.எ பி டிவில்லியர்ஸ் மோர்கல் மற்றும் மில்லரின் \ஆகியோரின் ரசிகன் நான். ஆனால் அவர்கள் திறமையாக செயல்பட்டும் அணி வீழ்ந்தமை கவலைக்குரியது.
 
 
 
 
 
  • கருத்துக்கள உறவுகள்

2mwuwck.jpg

 

இந்தப் போட்டித் தொடரில்... தென்.ஆ - நியூஸி போட்டியை தான் மிணக்கட்டு ஸ்கையில் பாரத்தது. ரோனில் இருந்து பெறப்பட்ட வீடியோக்கள் வர்ணனைக்கு அழகும்.. அர்த்தமும் சேர்த்தன.  :)

 


 

உண்மையில் நானும் அழுது விட்டேன் .
 
இரு அணிகளில் ஒன்று தான் கோப்பை வெல்ல வேண்டும் என்பது எனது அவா. ஆனால் இரண்டும் அரையிறுதியில் சந்திக்க வேண்டி வந்தமை துரதிஸ்டமே.எ பி டிவில்லியர்ஸ் மோர்கல் மற்றும் மில்லரின் \ஆகியோரின் ரசிகன் நான். ஆனால் அவர்கள் திறமையாக செயல்பட்டும் அணி வீழ்ந்தமை கவலைக்குரியது.

 

 

நான் அழவில்லை. ஓவருக்கு ஒவ்வொரு நாலாகக் கொடுத்துக் கொண்டிருந்த போதே விளங்கிட்டு.. கோட்டை விடப்போகிறார்கள் என்று. ஆனாலும் இறுதி வரை போராடினார்கள்... புலிகள் போல.  :icon_idea:

  • கருத்துக்கள உறவுகள்

இம்ரான் தாகீர் ஏழு ஓவர் நன்றாக வீசியிருந்தார்.. மழை வந்தபடியால் அவர் இடைநிறுத்தப்பட்டாரா??

  • தொடங்கியவர்

இம்ரான் தாகீர் ஏழு ஓவர் நன்றாக வீசியிருந்தார்.. மழை வந்தபடியால் அவர் இடைநிறுத்தப்பட்டாரா??

போட்டி மழை காரணமாக 43 ஓவர்களாக குறைக்கப்பட்டதால் பந்து வீசுபவர்களது ஓவர்களும் மட்டுப்படுத்தபடும்

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.