Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

4 வருடங்களில் இல்லாத அளவுக்கு சரிந்தது கச்சா எண்ணெய் விலை

Featured Replies

petrol_2198425f.jpg

அதிக உற்பத்தி, டாலர் பலமடைந்து வருவது ஆகிய காரணங்களால் கடந்த நான்கு வருடங்களில் இல்லாத அளவுக்கு பிரென்ட் கச்சா எண்ணெய் விலை நேற்று சரிந்தது. ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் வர்த்தகத்தின் இடையே 81.83 டாலருக்கு சரிந்தது. கடந்த 2010-ம் ஆண்டு அக்டோபருக்கு பிறகு இவ்வளவு அதிகமாக சரிவது இப்போதுதான்.
 
ஆனால் ஐரோப்பிய சந்தைகள் செயல்பட ஆரம்பித்தவுடன் கச்சா எண்ணெய் சிறிதளவு உயர்ந்தது. எண்ணெய் உற்பத்தியை குறைக்க முடியாது என்று குவைத் நாட்டின் எண்ணெய் அமைச்சர் அலி அல் ஓமியார் கடந்த மாதம் வியன்னாவில் தெரிவித்தார். கடந்த ஜூன் மாதத்திலிருந்து இதுவரை 30 சதவீத அளவுக்கு கச்சா எண்ணெய் சரிந்தது.
 
எண்ணெய் உற்பத்தி நாடுகள் உற்பத்தியை குறைத்தால் மட்டுமே சரிந்து வரும் விலையினை கட்டுப்படுத்த முடியும் என்று சந்தை வல்லுநர்கள் தெரிவிக்கிறார்கள். எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளின் இருக்கும் 12 அமைச்சர்கள் வரும் நவம்பர் 27-ம் தேதி வியான்னாவில் கூடி எண்ணெய் நிலவரத்தை பற்றி விவாதிக்க இருக்கிறார்கள். இதில் உற்பத்தியை குறைக்கலாமா அடுத்த வருடத்தின் உற்பத்தி இலக்கு ஆகியவற்றை பற்றியும் விவாதிக்க இருக்கிறார்கள்.
 
இதற்கிடையே வட்டி விகிதத்தை அமெரிக்க மத்திய வங்கி உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதினால் மற்ற நாட்டு நாணயங்களுக்கு எதிராக டாலர் மதிப்பும் பலமடைந்து வருகிறது. ஆறு நாட்டு நாணயங்களுக்கு எதிராக இருக்கும் டாலர் இண்டெக்ஸ் நான்கு வருட உச்சத்தை நெருங்கி வருகிறது. மேலும் ஜேபி மார்கன் சேஸ் நிறுவனம் 2015-ம் ஆண்டுக்கான கச்சா எண்ணெயின் இலக்கு விலையை ஒரு பேரல் 115 டாலரிருந்து 82 டாலருக்கு குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
 
நவம்பர் மாத இறுதிக்குள் எண்ணெய் உற்பத்தி நாடுகளுள் சரியான ஒரு முடிவை எடுக்காவிட்டால், டிசம்பர் மாதத்தில் ஒரு பேரல் 70 டாலர் வரை கூட சரிய வாய்ப்பு இருப்பதாக சில வல்லுநர்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள். ஓ.பி.இ.சி. யில் 12 நாடுகள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள். உலகத்தின் தேவையில் 40 சதவீதத்தை இந்த நாடுகள் உற்பத்தி செய்கின்றன.
 
  • கருத்துக்கள உறவுகள்

எண்ணை விலை குறைந்தால் பாவனை அதிகரிக்கும். பாவனை அதிகரித்தால் உலகம் மாசுபடுவது விரைவுபடும். :(  

எண்ணை அகழ்வை முற்றாக நிறுத்துவதும். அதற்கு மாற்றீடாக அறியப்பட்டவற்றை முழுமையாகப் பாவனைக்குக் கொண்டுவருதலும் வரவேற்கக்கூடியது. :icon_idea:  

  • கருத்துக்கள உறவுகள்

எண்ணை விலை குறைந்தால் கனடாவுக்கு நல்லதில்லை.. பிறகு இங்குள்ள கழிவோயிலை விற்கமுடியாது.. :icon_idea:

கச்சா எண்ணை விலை குறைவதற்க்கு ஐ எஸ் ஐ எஸ் ஒரு காரணமாக சொல்கிறார்களே. ஈராக்கில் கைப்பற்றிய பகுதிகளில் கணிசமான எண்ணை வளமிருப்பதால் தங்கள் கோரிக்கைகளுக்குட்பட்டால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணையை பத்து டாலருக்கும் குறைவாக தர உள்ளதாக சொல்லியுள்ளதால் எண்ணை உற்பத்தியில் உள்ள புள்ளிகள் அதிர்ச்சியடைந்து தற்போது விலை சரிவை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் குறையவும் வாய்ப்புள்ளது.

இதுதான் சமயமென்று இந்திய அரசு பெட்ரோல் டீசல் மிதான உற்பத்தி வரியை அதிகரித்துள்ளது.. எப்புடிடிடி !

  • கருத்துக்கள உறவுகள்

FUEL COSTS FROM JUST 2P A MILE*

http://www.nissan.co.uk/GB/en/vehicle/electric-vehicles/leaf.html
THE ELECTRIC SIDE OF DRIVING

With the new Nissan LEAF, 100% electric driving has reached a whole new level of excitement and convenience.

கறன்டுக்காசு 2p தாணம் 1மைலுக்கு

Edited by பெருமாள்

  • கருத்துக்கள உறவுகள்

கச்சா எண்ணை விலை குறைவதற்க்கு ஐ எஸ் ஐ எஸ் ஒரு காரணமாக சொல்கிறார்களே. ஈராக்கில் கைப்பற்றிய பகுதிகளில் கணிசமான எண்ணை வளமிருப்பதால் தங்கள் கோரிக்கைகளுக்குட்பட்டால் ஒரு பீப்பாய் கச்சா எண்ணையை பத்து டாலருக்கும் குறைவாக தர உள்ளதாக சொல்லியுள்ளதால் எண்ணை உற்பத்தியில் உள்ள புள்ளிகள் அதிர்ச்சியடைந்து தற்போது விலை சரிவை ஏற்படுத்தியுள்ளனர் என்றும் சொல்லப்படுகிறது. மேலும் குறையவும் வாய்ப்புள்ளது.

இதுதான் சமயமென்று இந்திய அரசு பெட்ரோல் டீசல் மிதான உற்பத்தி வரியை அதிகரித்துள்ளது.. எப்புடிடிடி !

எங்கட 'உள்ளூர்' விலை அசையுதில்லையே... தம்பி! :o

எங்கட 'உள்ளூர்' விலை அசையுதில்லையே... தம்பி! :o

உங்கள் ஊரில் விலையை நிர்ணயம் செய்வது மத்திய அரசாங்கமாக இருக்கலாம் அப்படியானால். தனியாராக இருந்தால் கண்டிப்பாக விலையை குறைத்து கொண்டிருக்க வேண்டும். இங்கு மூன்று மாதத்தில் ரூபாய் 79லிருந்து ரூபாய் 69ஆக குறைக்கப்பட்டுள்ளது.

இல்லையென்றால் அன்னியசெலவானி சந்தையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ஆவுஸ் டாலரின் மதிப்பு நன்றாக சரிவடைந்திருக்கலாம். தற்போது டாலர் மதிப்பு உயர்ந்து வருகிறது. அதன்படி பார்த்தால் அதற்கு எதிரான correlation உள்ள CAD AUD CHF EUR வீழ்ச்சிகாணும். கச்சா எண்ணை விலை குறைந்தாலும் அமெரிக்க டாலரில் வாங்கும் போது அதிக தொகை செலுத்ததான் வேண்டும். இங்கு இந்திய சந்தைகள் புதிய உச்சத்தில் வர்த்தகம் நடைபெறுவதால் அதன் தாக்கமில்லை. அமெரிக்க பெடரல் வங்கி வட்டி விகிதத்தை உயர்த்தினால் டாலர் ஏறுமுகம் கச்சா எண்ணை தங்கம் இறங்குமுகம். எங்களுக்கு.நல்ல கொண்டாட்டம் உங்களுக்கு திண்டாட்டம் :D

விஷ்வா. அவுஸ்திரேலியாவில் 'கச்சா' எண்ணெய் அதிக அளவில் உண்டு!

அத்துடன் அவுஸி டொலர், கிட்டத்தட்ட அமெரிக்கன் டொலருடன் சரிக்குச் சரியாக மல்லுக் கட்டுகின்றது!

பிரச்சனை என்னவென்றால்..இங்கு ' சந்தை' முழுவதுமாகத் திறக்கப்படவில்லை! 

கச்சா எண்ணெயின் விலையானது..சிங்கப்பூர் சந்தை விலையுடன் தொடர்பு படுத்தப்பட்டு 'விலை' நிர்ணயம் செய்யப்படுகின்றது!

இந்த 'சூத்திரம்' உங்களுக்கும், எனக்கும் விளங்காதமாதிரி அமைக்கப்பட்டுள்ளது! :o

அத்துடன் பெற்றோல் விலையதிகரிப்பால்... அரசாங்கத்தின் ' கஜானுவுக்கு; நிறையவே பணம் வருவதால்... விலை குறிப்பைப் பற்றி அரசாங்கங்கள் பொதுவாகக் கவலைப்படுவதில்லை!

இன்றைய சந்தை நிலவரம்,, (உங்கட வானொலியில சொல்லிற மாதிரி..) :lol:

ஒரு அவுஸ்திரேலிய டாலர்.....அமரிக்க டாலரில் 96 சதங்கள்! :icon_idea:

உள்நாட்டு உற்பத்தியில் எதுக்கு ஆசிய சந்தையை சார்ந்து விலை நிர்ணயம் செய்கிறார்கள்? சந்தை விலையை விட குறைவாக கொடுக்க இயலுமே !

இருந்தாலும் பாருங்கோ இங்கு 70 ரூபாய்க்கு மதிய சாப்பாடே நின்மதியாய் முடித்துவிடலாம். ஒரு டாலர் தானே இன்னும் கூட ஏத்தலாம் :)

  • தொடங்கியவர்

கச்சா எண்ணெய் விலை மேலும் குறைய வாய்ப்பு: சர்வதேச எரிபொருள் முகமை அறிவிப்பு

crude_oil_2206942f.jpg

கச்சா எண்ணெய் விலை சரிவு 2015-ம் ஆண்டின் முதல் அரையாண்டு வரை தொடரும் என்று சர்வதேச எரிபொருள் முகமை (ஐஇஏ) தெரிவித்துள்ளது.
 
2015-ம் ஆண்டு முதல் பாதி வரை தேவை குறைவா கவும், அதன் பிறகே தேவை அதிகரிக்கும் என்றும் தெரிவிக் கப்பட்டுள்ளது.
 
கச்சா எண்ணெய் உற்பத்தி செய்யும் நாடுகளில் ஒன்றான லிபியாவில் உற்பத்தி பாதிப் படையாத பட்சத்தில் விலை அதிகரிக்க வாய்ப்பு இல்லை என்றும் ஐஇஏ தெரிவித்துள்ளது.
 
பிரென்ட் கச்சா எண்ணெய்யின் விலை கடந்த ஜூன் மாதத் திலிருந்து 30 சதவீதம் வரை குறைந்திருக்கிறது.
 
2015-ம் ஆண்டுக்கான தேவை ஒரு நாளுக்கு 9.36 கோடி பேரலாக இருக்கும் என்றும் ஐஇஏ கணித்திருக்கிறது.
 
இது தற்போதைய தேவையை விட 1.2 சதவீதம் மட்டுமே அதிகம். மேலும் எண்ணெய் விலை உயர்ந்ததற்கு உற்பத்தியும் ஒரு காரணமாகும். அக்டோபரில் ஒரு நாளைக்கு 35,000 பேரல் கச்சா எண்ணெய் அதிகமாக உற்பத்தி செய்யப்பட்டது.
 
தற்போதைய நிலவரப்படி ஒரு பேரல் பிரெண்ட் கச்சா எண்ணெய் 77.74 டாலராக இருக்கிறது.
 
  • கருத்துக்கள உறவுகள்

சாதாரண தர எரிபொருள் விலை CAD 1.13 அளவுக்குப் போகிறது. இது கன காலத்துக்குப் பிறகு நல்ல மலிந்த விலை. ஆனால் கனடா இதுவரையில் தனது கழிவோயிலை வித்து காசு பார்த்துவிட்டது. :D அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் 1.9பில்லியன் டாலர்கள் உபரித்தொகையாக இருக்கும் என அரசு அறிவித்துள்ளது. ஏதாவது வரிக்கழிவு தந்தால் மகிழ்ச்சிதான். :unsure:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.