Skip to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வரலாறு காணாத தோல்வியடையப் போகிறார் மைத்திரிபால: அதாவுல்லா

Featured Replies

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மைத்திரிபால சிறிசேன வரலாறு காணாத தோல்வியடையப்போகிறார் என தேசிய காங்கிரஸின் தலைவரும் உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைகள் அமைச்சருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தின் பொருளாதார அபிவிருத்தி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டுள்ள திவி நெகும பயனாளிகளுக்கு வீடு திருத்துவதற்கான 2,500 ரூபாய் முதற்கட்ட கொடுப்பனவு வழங்கும் வைபவம் அக்கரைப்பற்று அதாவுல்லா அரங்கில் சனிக்கிழமை (22) நடைபெற்றது.

இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு அமைச்சர் தொடர்ந்து உரையாற்றுகையில்,

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆசியாவின் ஆச்சிரியம் மிக்க நாயகனாக திகழ்கின்றார். அவருடன் எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும் அதிகூடிய வாக்குகளை பெற்று மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக வருவதற்கு மக்கள் ஆணை வழங்கிவிட்டார்கள்.

அவரது ஆட்சிக் காலத்தில் இலங்கை வரலாறு காணாத அபிவிருத்திகளைக் கண்டுள்ளதோடு, எங்களை நிம்மதியாகவும் ஒற்றுமையாகவும் வாழ வைத்துள்ளார். அவரை நாம் மறக்கக்கூடாது.

மஹிந்த சிந்தனைத் திட்டத்தில் எங்களது வாழ்க்கைத் தரம் உயர்வடைந்துள்ளது. ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை யார் எதிர்த்து நின்றாலும் நாம் அவருடனே இருப்போம். கடந்த காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு தேசிய காங்கிரஸ் முன்னின்று உழைத்தது.

கொடூர யுத்தத்தை ஒழித்தது மட்டுமல்லாமல் வருமானம் குறைந்த மக்களின் வாழ்கைத் தரத்தை உயர்த்துவதற்காகவும் பல அபிவிருத்தி திட்டங்களை ஏறற்படுத்தியுள்ளார். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சியினரும் வெளிநாட்டு சக்திகளும் கபட நாடகம் ஆடுகின்றன.

இதை ஒரு போதும் மக்கள் அங்கிகரிக்கமாட்டார்கள். இன்று மக்கள் எல்லோரும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பக்கமே உள்ளார்கள.; இதனை நாம் எல்லோரும் ஒற்றுமையாக செயற்பட்டு எதிர்வரும் ஜனவரி மாதம் மஹிந்த ராஜபக்ஷவை ஜனாதிபதியாக்குவதற்கு முன்வரவேண்டும் என்றார்.

அக்கரைப்பற்று பிரதேச செயலாளர் ஏ.எல்.எம். சலீம் தலைமையில் நடைபெற்ற இவ் வைபவத்தில், கிழக்கு மாகாண வீதி அபிவிருத்தி, நீர்ப்பாசன அமைச்சர் எம்.எஸ். உதுமாலெப்பை, அக்கரைப்பற்று மாநகர முதல்வர் ஏ.அஹமட் சகி, அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளர் எம்.ஏ. ராசிக் உட்பட உயர் அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.

http://tamil.dailymirror.lk/2010-07-14-09-13-23/2010-08-12-10-11-54/2010-08-12-10-15-09/134456-2014-11-23-07-33-55.html

சாதாரணமாக வெற்றி அல்லது தோல்வியை ஒவ்வொருவரும் தனி மனிதனும் சந்திப்பது இயற்கையானது. ஆனால் வெற்றி பெற்ற தரப்புடன் குருவிச்சை போல் ஒட்டி அவர்களிடம் இருந்து பயன் பெறும் கூட்டங்கள் வரலாற்று வெற்றி தோல்வியை பற்றி பேசுகின்றனர்.

Edited by tulpen

  • கருத்துக்கள உறவுகள்

உண்மைதான், இவர்களுடன் கொள்கைகளே இல்லாத இன்னும் சிலர் இருக்கிறார்கள் பல்லாக்கு தூக்க ....

நியானி: மேற்கோள் நீக்கப்பட்டுள்ளது.

Edited by நியானி

ஆழும் கட்சி எதிர் கட்சி தவிர்த்து  மூன்றாவது நாலாவது இடத்தில் இருக்கும் கட்சிகளின் நிலை உலகு எங்கும் இப்படித்தான் .

தமிழ்நாட்டில் வை கோ ,ராமதாஸ்,விஜயகாந்த் தொடங்கி கனடாவில் என் டி பி யும் இதைதான் செய்கின்றார்கள் .

முஸ்லிம் காங்கிரஸ் தனித்து ஆட்சியை பிடிக்கலாம் என்றால் ஏன் இப்படி அரசியல் செய்கின்றார்கள் .

 

உங்களுக்கு முஸ்லிம்களை பிடிக்காது என்பதற்காக எதையும் எழுதலாம் என்றில்லை .

வீரம் காட்டி வேண்டி கட்டியவர்களும் சொந்த நாட்டை விட்டு ஓடி வந்து அகதியாவதை விட இன்று அவர்கள் செய்த அரசியலால் கிழக்கில் ஒரு தனியிடத்தை அடைந்துவிட்டார்கள்.

விட்டால் வெறும் மீசை முறுக்க எம்மவரை கேட்டுத்தான் .

 

மைத்திரிபால தோற்பார் என்பதுதான் எனது ஊகமும்.

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.