Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நரகாசுரனுக்கு அஞ்சலிகள்

Featured Replies

விடயத்திற்கு மீண்டும் வருகிறேன்.

இப்படி நீதிக் கதைகள் கூட வாழ்ந்த மனிதர்களையே குறிக்கின்றன.

இப்படி கதைகள் அனைத்துமே நடந்த சம்பவங்களையும், வாழ்ந்த மனிதர்களையுமே அடிப்படையாக கொண்டு இருப்பதற்கு காரணம் என்ன?

அதற்கு முன்பு இன்னும் ஒன்றையும் பார்ப்போம். எம்மிடையே இல்லாத கற்பனைப் பாத்திரங்களாக கதைகளில் வருகின்ற ஒன்று உண்டு என்றால் அது "வேற்றுக் கிரக வாசிகள்"

ஆனால் அங்கும் ஒரு சுூட்சுமம் உண்டு

  • Replies 245
  • Views 27.4k
  • Created
  • Last Reply
  • கருத்துக்கள உறவுகள்

இவ்வளவு கட்டுரைகள் எழுதும் உங்களுக்கு பல ஆராய்ச்சிக் கட்டுரைகளைப் படித்த அனுபவம் இருக்கும்.

அவை எப்படி எழுதப்பட்டுள்ளன. எப்படிச் சான்றுகள் அவற்றிற்கான மூலங்கள் தரப்பட்டுள்ளன. என்றும் அறிந்திருப்பீர்கள்.

அந்த வகையிலேயே உங்களைக் கோருகின்றோம். பலர் வார்த்தை ஜாலங்களால் தான் இன்று முற்போக்கு வாதம் பேசுகிறார்கள். அவை நடைமுறைக்குச் சாத்தியமற்று சமூக நோக்கற்று வெறும் விளம்பரம் புகழ்தேடும் நோக்கோடு நடக்கிறது. அவை எல்லாம் எமக்கு அவசியமில்லை.

எமக்குத் தேவை அறிவியலினூடாக வரலாற்றுச் சான்றுகளினூடாக உண்மைகளை வரலாற்று நிகழ்வுகளை உறுதிப்படுத்துவதே ஆகும். அதற்கு நிச்சயம் சான்றுகள் ஆதாரங்கள் மூலங்கள் அவசியம்.

யாரும் எழுதலாம் ஒரு கிமு 450 என்று போட்டு கிரேக்கம் எகிப்து நாகரிகம் தந்தது தமிழர் நாகரிகம் என்று. பார்க்க அது அழகாகவும் கவர்ச்சியாகவும் வலுவானது போலவும் இருக்கும். ஆனால் நிரூபிக்க முடியாதது. அதற்காகத்தான் ஆதாரம் நிறுவல்களுக்கான அடிப்படைகளைத் தேடித் தரச் சொல்கின்றோம். மக்களை நோக்கி வலுவான கருத்தை ஆதாரத்தோடு நிறுவல்களோடு கொண்டு செல்ல வேண்டும். அப்போதுதான் மாற்றங்களுக்கு வலியுறுத்தலாம்.

நீங்கள் வேற்றுக் கிரகவாசிகள் குறித்த திரைப்படங்களை பார்த்திருப்பீர்கள். அல்லது வேற்றுக்கிரகவாசிகள் என்று வரையப்பட்டிருக்கும் ஓவியங்களை பார்த்திருப்பீர்கள்.

இதுவரை புூமியில் உள்ள மனிதர்களால் வரையப்பட்ட அனைத்துவிதமான வேற்றுக் கிரகவாசிகளும் மனிதர்களின் சாயலிலேயே இருக்கிறார்கள். புூமியில் உள்ள மனிதர்களின் உருவத்தை கோணல் படுத்தியே வேற்றுக்கிரக வாசிகளை உருவாக்குகிறார்கள். மூன்று கண்கள், இரண்டு விரல்கள் என்று ஒரு வட்டத்திற்கு உள்ளேயே சுற்றி வருகிறார்கள். மிஞ்சி மிஞ்சிப் போனால் புூமியில் உள்ள மிருகங்களின் சாயலில் வரைவார்கள்.

உருவம் மட்டுமல்ல. வேற்றுக் கிரகவாசிகளின் குணவியல்புகளும் புூமியில் உள்ள மனிதர்களின் குணவியல்புகளை ஒத்ததாகவே உருவாக்குவார்கள்.

ஏன் எவராலும் மனித உருவத்தோடும் குணவியல்புகளோடும் சம்பந்தப்படாத மிக வேறுபட்ட ஒரு வேற்றுக்கிரகவாசியை உருவாக்க முடியவில்லை?

இதற்கான காரணம் தெரியுமா?

தெரியாது... சொல்லுங்கோ சபேசன்.... :lol:

நெடுக்காலபோவான்!

இந்த இடத்தில் இப்படி ஒரு கல்வெட்டு இருக்கிறது என்று நான் சொன்னால் நீங்கள் என்ன செய்வீர்கள்? அதற்கு என்ன ஆதாரம் என்ன என்பீர்கள். குறிப்பிட்ட ஒரு புத்தகத்தில் அது பற்றி இருக்கிறது என்றால், அந்த புத்தகம் சொல்வது உண்மை என்பதற்கு என்ன ஆதாரம் என்று கேட்பீர்கள். கடைசியில் நான் உங்களை கல்வெட்டு இருக்கும் இடத்திற்கு கூட்டிக்கொண்டு போக வேண்டி வரும்.

நீங்கள் தொட்டதெற்கெல்லாம் ஆதாரம் கேட்பதன் நோக்கம் என்னை திசை திருப்புவதற்கே. ஆதாரங்களை எங்கே பெறலாம் என்று மட்டுமே என்னால் சொல்ல முடியும்

சிவன் கிருஷ்ணா விஷ்ணு எல்லாவற்றையும் புனைகதைகளின் புராணங்களின் கதாப்பாத்திரங்களாக நம்புகின்றோம். ஒரு சினிமாப் படத்தை பார்க்க வேண்டின் அந்தக் கதாப்பாத்திரத்தை நம்பித்தான் ஆக வேண்டும். இன்றேல் படத்தை ரசிக்க முடியாது.படம் பார்த்து முடிந்ததும் அந்த நம்பிக்கை என்பது அவசியமில்லை.

அதேபோன்றதுதான் புராணங்கள் இதிகாசங்கள் தருபவையும். வெறும் கதாப்பாத்திரங்கள் கொண்டு சிலாகிக்கப்பட்ட கற்பனைகள். அவற்றின் சாராம்சம் என்பதில் உள்ள மனுநீதி மட்டுமே கருத்தில் எடுக்கப்பட வேண்டுமே அன்றி அதற்குள் இனவாதம் மனித வேறுபாடுகளை திணித்து சமூகப் பிரிவினைகளைத் தூண்டக் கூடாது.

...

....

தீபாவளி இன்று அரசியலாகி நிற்கிறது. இன்னும் சிலர் தீபாவளியால் சமூகப்பாகுபாடுகள் பிறந்ததாகச் சொல்கின்றனர். தலித்தியம் பார்பர்ணியம் எல்லாம் மீண்டும் தீபாவளிக்குள்ளால் விதைப்படுகின்றன என்றுதான் எண்ணத் தோன்றுகிறது.

...

....

உலகமே தீபாவளியை ஜதீகங்கள் கடந்து மன மகிழ்வு வேண்டிக் கொண்டாடிக் கொண்டிருக்கும் போது இங்கே சிலர் தீபாவளிக்குள் பகுத்தறிவு தேடப் போய்.....

இராமரும் கிருஷ்ணரும் சிவகாசியாகவும் கஜனியாகவும் கதை சொல்லும் வெறும் சினிமா கதாபாத்திரங்கள் போல் பாக்கப்பட்டால் ஏன் இந்து மதத்தின் தாக்கம் இவ்வளவு ஆளமாக இருக்கிறது சமுதாயத்தில்? என் மகாகவி பாரதியார் பிற்காலங்களில் ஒதுக்கி வைக்கப்பட்டார்? புராணங்களிலும் இதிகாசங்களிலும் வருபவர்கள் வெறும் கதை சொல்லும் கதாபாத்திரங்கள் என்றால் பாபரி மசூதி ஏன் இடிக்கப்பட்டது? ஏன் இத்தனை மதக்கலவரங்கள் படுகொலைகள்? "பிற்படுத்தப்பட்டோர் தாழ்த்தப்பட்டோர்" என்று விசேட சலுகைகள் மூலம் அவர்களை சமூகத்தினுள் உள் வாங்க முயற்சிக்க வேண்டி அளவிற்கு சமூகத்தில் ஒரு பகுதியினர் மோசமாக சந்ததி சந்ததியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள

இப்படி வேற்றுக்கிரக வாசியாக இருக்கட்டும், அல்லது சீனாவின் டிராகனாக இருக்கட்டும் அனைத்துமே புூமியில் உள்ள உயிரினங்களை ஒத்ததாக இருப்பதற்கு காரணம் மனிதனுடைய முளை அமைப்புத்தான்.

மனிதனுடைய மூளையால் தான் கேட்காத, காணத எதையும் சிந்திக்க முடியாது. பல இடங்களில் பார்த்தவற்றை ஒன்றாக பொருத்தி ஒரு உருவத்தை வரைய முடியும். பல இடங்களில் காணப்படும் குணவியல்புகளை ஒன்றாக்க முடியும். மிகைப் படுத்த முடியும். ஆனால் புதிதாக ஒன்றை உருவாக்க முடியாது.

நீங்கள் உதாரணத்திற்கு ஒரு பெட்டி போன்ற வடிவத்தை வரைந்து செவ்வாய்கிரகத்தில் மனிதர்கள் இப்படித்தான் இருப்பார்கள் என்று கூறிப் பாருங்கள். பார்ப்பவர்கள் உடனடியாக இதற்கு கண் எங்கே, கால் எங்கே என்று மனித உடல் உறுப்புக்களேயே தேடுவார்கள். அந்து உருவத்தை அவர்களுடைய மனித மனம் ஏற்றுக் கொள்ளவும் போவதில்லை.

மனிதனுடைய மூளையால் தான் அறிந்தவைகளையே கற்பனை ஆக்க முடியும். என்றுமே நடைபெற்று இராத ஒன்றை கற்பனை செய்ய முடியாது.

இது அறிவியல்ரீதியாக உறுதிப்படுத்தப்பட்ட உண்மை.

தயவு செய்து இதற்கு என்னிடம் ஆதாரம் கேட்காமல், உங்கள் அருகில் உள்ள ஒரு "மூளை" சம்பந்தப்பட்ட நிபுணரிடம் கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

:cry: :cry: :cry: :cry:

நீதிக் கதைகளை எடுத்துக் கொண்டீர்கள் என்றால் அதில் வரும் கதாபாத்திரங்கள் மனிதர்களைக் குறிக்கின்றன.

அறிவியல் வளர்;ச்சியின் மூலம் உருவான வேற்றுக்கிரகவாசிகள் மனிதர்களை ஒத்ததாக காண்பிக்கப்படுகிறார்கள். வேற்றுக்கிரகவாசிகளைக் கொண்டு உருவாக்கப்படும் கதைகளும் புூமியில் நடக்கின்ற சம்பவங்களை அடிப்படையாக கொண்டவையாக இருக்கின்றன.

இப்படி மனித மூளை என்பது தன்னுடைய வட்டத்திற்குள் உட்பட்டே கதைகளை உருவாக்குகிறது. உருவாக்கப்படுகின்ற கதைகள் நடக்கின்ற சம்பவங்களையும், சில காரணங்களையும் கொண்டவைகளாக இருக்கின்றன.

இது அறிவியல்ரீதியான உண்மை.

சரி, இப்பொழுது விடயத்திற்கு வருவோம்.

புராணக் கதைகள் எதை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டன? அதில் வருகின்ற பாத்திரங்கள் யாரை குறிப்பிடுகின்றன? புராணக் கதைகள் உருவாக்கப்பட்டதன் நோக்கம் எதுவாக இருக்கும்?

தெரியாது... சொல்லுங்கோ சபேசன்.... :roll:

  • கருத்துக்கள உறவுகள்

புரானக்கதைகள் கிருஷ்ணரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டது

புராணக் கதைகள் எழுதப்பட்டதற்கு காரணங்கள் இருக்க வேண்டும். அதில் குறிப்பிடப்படுகின்ற பாத்திரங்கள் அந்தக் கதைகள் எழுதப்பட்ட காலத்திலோ, அல்லது அதற்கு முன்போ வாழ்ந்த மனிதர்களை பிரதிபலிக்க வேண்டும். அதில் வருகின்ற சம்பவங்கள் அப்பொழுதோ, அல்லது அதற்கு முன்போ நடந்த சம்பவங்களை ஒத்ததாக இருக்க வேண்டும்.

அறிவியலின் படி, இயற்கைவிதியின் படி அப்படித்தான் இருக்க வேண்டும். அப்படி இல்லாமல் இருப்பதுதான் அறிவியலுக்கு முரணனானது.

இப்பொழுது புராணக் கதைகள் என்ன சொல்கின்றன என்று பார்ப்போம்.

புராணக் கதைகள் "தேவர்கள்", "அசுரர்கள்" என்ற இரு பிரிவினருக்கு நடந்த போர்களை கூறுகின்றன. தேவர்கள் விந்தியமலைக்கு வடக்கில் வாழ்வதாகவும், அசுரர்கள் தெற்கில் வாழ்வதாகவும் கூறுகின்றன. தேவர்கள் வெள்ளையாகவும், அசுரர்கள் கருப்பாக இருப்பதாகவும் கூறுகின்றன. அசுரர்கள் சிவனை வழிபடுவதாக கூறுகின்றன. அசுரர்கள் தேவர்களின் பண்பாட்டுக்கு விரோதமானவர்கள் என்று கூறுகின்றன.

அப்பொழுது இருந்த நிலைமை என்ன?

ஆரியர்களுக்கும், திராவிடர்களுக்கும் போர் நடந்தன. ஆரியர்கள் வடக்கில் இருந்தார்கள். திராவிடர்கள் தெற்கில் இருந்தார்கள்.ஆரியர்கள் வெள்ளை நிறத்தவர்கள். திராவிடர்கள் கருத்த நிறத்தவர்கள். திராவிடர்கள் மத்தியில் முதலில் புகுத்தப்பட்ட ஆரியக் கடவுளாக சிவன் இருந்தது. அந்த வகையில் ஆரியர்கள் விஸ்ணுவை வழிபட, திராவிடர்கள் சிவனை வழிபட்டார்கள். ஆரியர்களின் "வர்ணாச்சிரம தர்மம், யாகம்" போன்றவைகளுக்கு மாறான பண்பாட்டை திராவிடர்கள் கொண்டிருந்தார்கள்.

ஆகவே நண்பர்களே! நீதிக்கதைகளில் வரும் மிருகங்கள் மனிதர்களைக் குறிப்பது போன்று புராணக் கதைகளில் வரும் "தேவர்களும் அசுரர்களும்" ஆரிய, திராவிடர்களை குறிக்கிறது என்று புரிந்து கொள்வது கடினமாக இருக்கிறதா?

இதற்கு ஒரு ஆதாரம் வேண்டுமா?

மீண்டும் சபேசனுக்கு வணக்கம்...

ஜயா தாங்கள் சொல்ல வந்த தீபாவளி சம்பந்தமான ஆய்தலை

ஆரம்ப முதல் தரும்படி கேட்டிருந்தேன் இன்னும் அது சம்பந்தமான

தரவுகள் இங்கு வரவில் இல்லை...

ஏன்....???

பின்வரும் கேள்விகளுக்கு பதில் அளியுங்கள்...

தாங்கள் செய்த இந்த ஆய்வின் முழு பகுதியையும்

தருவீர்களா....??

இது என்ன சம்பவம் எந்த கதை....???

எந்த ஆண்டு...???

அல்லது காலப் பகுதி...???

இதை எவ்வாறு தாங்கள் தவறு என்று அறுதியாக கூறுகிறீர்கள்...???

எனக்கு இது சம்பந்தமாக எதுவும் தெரியாது எனவே

தாங்கள் நடாத்திய ஆய்வுகளின் முழுபகுதியையும் இங்N;க தரவும்...

அத்தோடு திசை திரும்பாத படியும் இதை கொண்டு செல்லவும்

ஆனால் இங்க கேட்கப் படும் கேள்விகற்கு சரியான தெளிவான முறையில் பதி;ல் தரவும்.

வாதம் சூடடையும் போது சில பிரச்சனைகள் உருவாகலாம்

எனவே அதை கருத்தில் கொண்டு.

தாங்கள் செய்த ஆய்வை முதல் வைத்து

பின்னர் மற்றவர்களுடய கருத்தை வழிமொழியுங்கள்...

எனக்கு இதில் எந்த உள்நோக்கமும் இல்லை

கிளி பிள்ளை போல என்னால் தலை ஆட்ட முடியாது மாறாக வரலாற்றை

தெளிவாக அறியவேண்டும் என்ற ஆவல் அவா இதுவே எனது பிடிவாதம்..

இதைவிட வேறொன்றும் இல்லை...

நன்றி

வன்னி மைந்தன்

புராணக் கதைகளை ஊன்றிப் படிக்கின்ற பொழுது "அசுரர்கள்" என்பது யாரை குறிக்கிறது என்று புரிந்து கொள்ள முடியும்.

அத்துடன் நான் முன்பே குறிப்பிட்டது போன்று "அசுரர்" என்பதன் அர்த்தம் சுர பானம் அருந்தாதவர்கள். ஆய்வுகளின் படி திராவிடர்கள் ஆரியர்கள் அருந்திய சுரபானம் அருந்தாதவர்களாக இருந்தார்கள் என்று தெரிய வருகிறது.

வன்னி மைந்தன்!

நீங்கள் எதையுமே முற்றுமுழுதாக வாசிப்பவர் அல்ல என்பதை மீண்டும் நிரூபிக்கிறீர்கள். இப் பகுதியில் இப்பொழுது "புராணக் கதைகள் எதைக் குறிக்கின்றன" என்கின்ற ஆய்வை செய்து கொண்டுதான் இருக்கிறேன். முழுதாக படிக்கவும்

இப்படி நாமும் எமக்கு முன்னால் பல சான்றோரும் புராணக் கதைகளை ஆய்வு செய்ததன்படி "அசுரர்கள், அரக்கர்கள்" எனப்படுவது திராவிடர்களையே என்று தெளிவு பெற்றோம்.

ஆகவே திராவிடர்களை இழிவு படுத்திகின்ற கதைகளை அடிப்படையாகக் கொண்ட விழாக்களை தமிழர்களை கொண்டாட வேண்டாம் என்கிறோம்

எனது கருத்தின்படி கிருஸ்ணன், என்பதும் இல்லை. நரகாசுரன் என்பதும் இல்லை. ஆனால் இக் கற்பனைக் கதைகள் திராவிடர்களை இழிவுபடுத்துவது போன்று எழுதப்பட்டுள்ளது.

ஆகவே நரகாசுரனுக்கு வீரவணக்கம் செலுத்துவது என்பது, நான் நரகாசுரனை நம்புவதன் காரணத்தால் அல்ல.

அது "கிருஸ்ணன்" போன்ற பொய்களையும், திராவிடர்களை கேவலப்படுத்துகின்ற புராணக்கதைகளையும் எதிர்ப்பதன் ஒரு வடிவம்.

அத்துடன் தீபாவளி கொண்டாடுவது தமிழ் மரபுக்கு எதிரானது என்பதையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

தமிழினம் எப்பொழுதும் "பிறப்பைக்" கொண்டாடுவதுதான் வழக்கம். இறப்பை அல்ல. ஒன்று உருவாவதைத்தான் கொண்டாடுவார்கள். அழிந்து போவதை அல்ல.

தை பிறப்பு, நெல் விளையும் நாள், கவேரியாறு பாய்ந்து வரும் நாள், மாரிகால வரவு என்று பிறப்புக்களை கொண்டாடுவார்கள். எவருடைய இறப்பையும் தமிழன் விழா எடுத்து கொண்டாடியதாக வரலாறு இல்லை.

இதையும் கவனத்தில் எடுக்க வேண்டுகிறேன்

இங்கே என்னிடம் இரண்டு கேள்விகள் கேட்கப்பட்டன

நரகாசுரனை எதன் அடிப்படையில் நான் ஒரு திராவிடன் என்று கூறுகிறேன் என்ற கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு என்னால் கூறப்பட்ட பதிலே இவ்வளவும்.

தீபாவளி பற்றியை ஆய்வை செய்யும்படி வன்னிமைந்தன் கேட்டிருந்தார். ஆனால் புராணங்களில் அசுரர்கள் என்று திராவிடர்களை குறிப்பிட்டார்கள் என்பதை புரிந்து கொண்டால் தீபாவளி குறித்த மேலதிக ஆய்வுகள் தேவையில்லை.

தீபாவளி வட இந்தியாவில் ராமன் ராவணன் என்ற அசுரனை வென்று திரும்பிய நாள் என்றும் தென்னிந்தியாவில் கிருஸ்ணன் நரகாசுரனை கொன்ற நாள் என்றும் கொண்டாடுகிறார்கள்.

மொத்தத்தில் இது ஆரியர்கள் திராவிடர்கள் வென்ற ஒரு நாளைக் கொண்டாடுகிறார்கள். இதில் எதற்கு திராவிடர்கள் பங்கு கொள்ள வேண்டும் என்ற கேட்கிறேன்.

வன்னிமைந்தன்!

நீங்கள் "கிருஸ்ணனை" நம்புகிறீர்களா?

நெடுக்காலபோவான் பதில் சொல்லிவிட்டார். உங்களுடைய பதிலை எதிர்பார்க்கிறேன்.

ஜயா சபசேனே...

நான் யாரை நம்புறது நம்பாதது என்பது இல்லை தற்போதயை

பிரச்சினை....

தயவு செய்து மீண்டும் மீண்டும்

கேட்கிறேன் நீங்கள் ஆராய்ந்த அந்த

ஆய்வை அப்படியே இங்கு தாருங்கள்...

அதுவே போதும்.....

நன்றி

வன்னி மைந்தன்

இராமனை எங்கள் மக்கள் கதாநாயகனாய்

எண்ணுவது ஏன்....???

சீதையை ஒழுக்கத்துக்கு

ஒப்பிடுவது ஏன்...???

என்ற பல் வகையான கேள்விகள்

எழவே செய்கிறது....

தாங்கள் சரியான தெளிவான ஆய்வுகளை

தந்தால் நமக்கு உதவியாய் இருக்கும்....

முதல் திபாவளி பண்டிகை பற்றிய முழுமையான

தரவுகளை தரவும் இல்லை எனின் இத்தோடு நிறுத்தவும்...

இலக்கியன் நேபாளத்தில் அவர் இருந்ததாக சொன்னார்

எனவே அவரிடம் உள்ள வரலாற்று சான்றுகளை

இந்த அவையில் பகிரும்படி கேட்டு கொள்கிறேன்...

மேலும் தாங்கள் சொல்லும் கருத்திற்கும் ''தமிழ் கவி ''

'சொன்ன கருத்திற்கும் வேறு பாடுகள் உள்ளன

விரும்பினால் தாயக பறைவைகள் இணையத்தில் உமா

அவர்கள் அதை பிரசுரித்துள்ளார்கள் பார்வையிடுங்கள்

நன்றி

வன்னி மைந்தன்

தமிழ்கவி ரிரிஎன் நிகழ்வில் கூறிய விடயங்களை நான் தீபாவளிக்கு ஒரு நாளுக்கு முன்னர் ஐரோப்பி தமிழ் வானொலியில் செய்த நிகழ்ச்சியில் கூறி இருந்தேன்.

"விளக்கீடு" என்று எமது தமிழர்கள் கொண்டாடியி நாளிலேயே ஆரியர்கள் தமது தீபாவளியை மெதுமெதுவாக திணித்தார்கள் என்பது ஏற்கனவே பல ஆய்வாளர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இது ஒரு புதிய விடயம் அல்ல.

ஆனால் தீபாவளி குறித்து தெளிவு வருவதற்கு, புராணக் கதைகள் அசுரர்கள் என்று யாரைக் குறிப்பிடுகின்றன என்பதில் தெளிவு வர வேண்டும். அதுவே என்னுடைய நோக்கமாக இருந்தது.

ராமனை எங்கள் மக்கள் கதாநாயகனாக எண்ணுவது ஏன் என்று கேட்டு இருந்தீர்கள்?

நல்ல கேள்வி

எமது மக்கள் அழகு மொழி தமிழை விட்டு வட மொழியில் வழிபாடு செய்வது ஏன்?

தமிழ் பிள்ளைகளுக்கு வேற்று மொழியில் பெயர் சுூட்டுவது ஏன்?

ஆயிரம் சாதிகளை கொண்டிருப்பது ஏன்?

சாத்திரம் பார்ப்பது ஏன்?

இப்படிப்பட்ட கேள்விகளோடு உங்கள் கேள்விகளையும் இணையுங்கள்.

  • கருத்துக்கள உறவுகள்

பகுத்தறிவைக் கொண்டிருந்தால் பிச்சைதான் எடுக்கமுடியும். பேசாமல் ஆத்திகத்தில் சேர்ந்து சாமிகளை நம்புவர்களிடம் கொள்ளையடித்து சந்தோஷமாக வாழ வழியைப் பாருங்கள்.. :idea:

Archived

This topic is now archived and is closed to further replies.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.